Sunday, September 7, 2014

நரசிம்மர் வழிபாடும் சிறப்பும்!

விஷ்ணு அவதார சன்னதிகள்: அவதாரங்கள் எண்ணற்கரியன. பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய முக்கிய மும்மூர்த்திகளும் பல உருவில் பன்முறை அவதரித்திருந்தாலும், பொதுவாக, அவதாரம் என்றவுடன் நாம் விஷ்ணுவையே நினைக்கிறோம். அவரின் முக்கியப்பத்து அவதாரங்களிலும் சில மட்டுமே புராணங்களிலும், இதிகாசங்களிலும் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, ராமனையும், கிருஷ்ணனையும் போற்றுகின்ற அளவுக்கு பிற அவதாரங்கள் பாடப்படவில்லை. மேலும் வராக அவதாரம், மத்ஸ்ய அவதாரம், கூர்ம அவதாரம், வாமனஅவதாரம் போன்றவற்றின் அவதாரப் பணி சீக்கிரமே நிறைவேறி விடுவதால். அந்த அவதார மூர்த்திகட்கு, தனிக்கோயில், தனிச்சன்னதி அதிகமில்லை. பெரிய அளவிலான பெருமாள் ஆலயங்களில் கூட, எல்லோருக்குமாக சேர்ந்தே தசாவதார சன்னதி உள்ளது. சில கோயில்களில் மட்டுமே, மூலவர் சன்னதியோடு, பிற அவதார மூர்த்திகளுக்கு தனிச் சன்னதிகள் உள்ளன. அவற்றிலும் ராமர், கிருஷ்ணருக்கே அதிகமாக உள்ளன. மே<லும், சுதர்சனர் (சக்கரத்தாழ்வார்) சன்னதியுள்ள ஆலயங்களில், சக்கரத்தாழ்வாரின் பின்புறம் நரசிம்மரின் உருவம் அமைக்கப்படுவதால், திருச்சுற்றில், நரசிம்மருக்கு தனிச்சன்னதி இருப்பது குறைவே. தனிச்சன்னதி ஏற்படுத்தும் போது, வடமேற்கு (வாயு) மூலையில் அமைப்பது வழக்கமாக உள்ளது.
நரசிம்மர் அவதார வரலாறு: மகாவிஷ்ணு இரண்யகசிபுவின் கொடுமையில் இருந்து பிரகலாதனைக் காப்பாற்றவும், இரண்யகசிபுவின் அறியாமையைப் போக்கவும் எடுத்த அவதாரமே நரசிம்ம அவதாரமாகும். பக்தனோ, பகைவனோ யாராயினும் சரி எவர் காட்டிய இடத்திலும் தான் இருப்பதை மெய்ப்பிப்பதற்காகவே நரசிம்ம மூர்த்தி தூணிலிருந்து தோன்றுகிறார்.
நரசிம்ம அவதார தத்துவம்: கோள்களும் நக்ஷத்திர மண்டலங்களும் எண்ணற்கரியவை. கணக்கிட இயலாத அளவுக்கு, அவை கோடிக் கோடிக் கோடி வருடங்கள் பழமையும் ஆனவை. அவற்றில் எல்லாம் நம்மால் நம்பமுடியாத அளவுக்கு, பூதாகாரமான மிகமிகப் பெரிய உயிரினங்கள் பல வினோத வடிவங்களில் இருக்கின்றன. இவ்வுண்மையை, பல நாட்டவரும், கலாச்சாரத்தவரும், அண்மைக் காலத்தில் தான், அகழ்வு ஆராய்ச்சிகள் மூலமாக, அறியத் துவங்கியுள்ளனர். அது வரை, பாரத மண்ணினர், வேதங்களிலும் புராணங்களிலும், இதிகாசங்களிலும் விவரித்த, ஒட்டு (ஹைப்ரிட்)த்தாவரங்கள் போன்ற, வினோதமான உருவங்களை மிருக உறுப்பும், மனித உறுப்பும் இணைந்த நரசிம்மர் போன்ற வடிவங்களை பொய் என்றே சாதிக்க முயன்றனர். இருந்திருக்காலம் என்று கூட ஏற்றுக் கொள்ளவில்லை. கிராமத்திலேயே வாழ்பவர்களுக்கு, நகரங்களில் உள்ள சுகபோகப் பொருட்கள் தெரிவதில்லை; உயிரைப் பறிக்கும் பல ஆபத்துக்களிருப்பதும் தெரிவதில்லை. அதே போல, பண்டைக் காலத்தில் வாழ்ந்தவனுக்கு எதிர்கால உலகின் போகங்களும் தெரிந்திருக்காது; மனிதனை மாய்க்கக்கூடிய பொருள்களும் , நிலைகளும் பெருகிவிடுவதும் தெரிந்திருக்காது. இந்த நிலையினால் தான், பல அசுரர்களும், தேவர்களும், தம் பேராசைகள் நிறைவேறுவதற்காகத் தவம் செய்து , பின்னர், பெருநஷ்டம் அடைந்ததைக் காண்கிறோம். கற்பனை செய்யவும், அனுமானிக்கவும் முடியாத அண்ட சராசரங்களில் அவர்கள் ஆசைப்பட்டதின் பரிமாணமும், சாவு ஏற்படுத்தக் கூடியதாக நினைத்த சூழல்களும் மிகமிகக் குறைவே. பிறந்தவை மறைந்தே ஆக வேண்டும்; எதுவுமே, என்றுமே ஒரே உருவில் இருக்க முடியாது என்பதும் இயற்கை நியதி. இதை உணராது, பின்னால் தேவையாயிருக்கும் என்று எண்ணி, நாம் தற்போதைய செலவைக் குறைத்துக் கொண்டு, நீண்டகால சேமிப்புத் திட்டங்களில் பணம் கட்டுகிறோம். இன்னின்ன வகைச் செலவினமோ, ஆபத்தோ வந்தால் அவற்றைச் சமாளிப்பதற்காக, அலுவலகங்களிலும், வங்கிகளிலும், ஆயுள் காப்பீட்டுக் கழகங்களிலும், இன்னும் பல சேமிப்புத் திட்டங்களிலும் சேருகிறோம். இது போன்ற செயல்பாடே, முன்பு, பல்லோரும் தவத்தினால் போகங்கள் பெற்றதும், இறப்பை ஒத்திப்போட முயன்றதும் ஆகும். காப்பீட்டுத் திட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடியே நாம் இறக்கப் போவதில்லை. அவ்வகையிலேயே இறந்தாலும் கூட சேமித்த பணத்தை, நாம் அனுபவிக்கப் போவதில்லை. மேலும், பின் சந்ததியினரை நாம் நினைத்தபடியே, நம் சேமிப்பை பயன்படுத்திடச் செய்யவும் நம்மால் முடியாது. பிறப்பும், மறையும் நிரந்தர தோற்ற - அழிவு அல்ல, இதை உணராது, சாமர்த்தியராக நினைத்துக்கொண்டு, நமக்குத் தெரிந்த அனைத்து வகைகளாலும் இறப்பு வரக் கூடாது என வரம் வேண்டுவது அசட்டுத்தனமே.
உதாரணமாக, அருகிலுள்ள சிறு பள்ளத்தில் விழுந்தாலும் சாவு ஏற்படலாம் என்பதை உணராது, நாம் மலையிலிருந்து உருண்டாலும் சாகக் கூடாது என்று வரம் கேட்கிறோம்; தன் காதுக்குள் அல்லது தும்பிக்கையுள் நுழைந்த மிகச் சிறு எறும்போ, சிலந்தியோ கூடத் தன் உயிரைப் போக்கலாம் என்பதை அறியாத யானை, பெரிய உயிரினங்களால் ஆபத்து வரக்கூடாது என்று கேட்கிறது. இது போலவே தான் இராவணன், மனிதன் தன்னை என்ன செய்திட முடியும் என்ற இறுமாப்பில், அவனை மட்டும் குறிப்பிடாது, பிற எல்லாவற்றிலிருந்தும் சாகாவரம் பெற்று, வரங்களின் பயன்கள் விரயமானவுடன், மனித வடிவில் வந்த இராமனால் அழிந்துபடுகிறான்.
பல்-இன இணை-உருவங்கள் இருக்க முடியும் என்றும், அவற்றாலும் இறப்பு ஏற்படலாம் என்றும் அறியாததால் தான் இரண்யகசிபுவும், இணை உருவாக அவதரித்த நரசிம்ம மூர்த்தியால் அழிகிறான். தொன்று தொட்டு, சிலர், தானே தெய்வமெனவும், தனக்கு மேலான சக்தியில்லை; யாவரும் தன்னை மட்டுமே வழிபட வேண்டும் என்றும் கூறி, பல்லோரை, பல்வகையிலும் பயமுறுத்தி, பலாத்காரப்படுத்தி வந்துள்ளனர். அவர்களில் இரண்யகசிபுவும் ஒருவன். அத்தகையவரின் போக்கைக் கண்டிப்பதற்காகவும், களைவதற்காகவும் பரம்பொருள் எடுத்த அவதாரங்களில் நரசிம்ம அவதாரமும் ஒன்று. நமக்கு ஆசைப்படவும் தெரியவில்லை; அழியக் கூடிய நிலைகளும் தெரியவில்லை. நம் சிற்றறிவுக்கு எட்டியதே முழுமை - உண்மை என்று நினைத்து, செயல்பட்டு, சீரழிவதை விட நம்மை உருவாக்கிய சக்தி, நமக்கு நன்மையானதையே நவிலும் என்பதை உணர்த்திட நிகழ்ந்தவையே, அனைத்து அவதாரங்களும் ஆகும்.
நரசிம்மர் வழிபாடு: நரசிம்மர் பாரதம் முழுதும் வணங்கப்பட்டாலும், தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடக மாநிலங்களில் தான், அவருக்குத் தனிக்கோவிலும், சிறப்பு வழிபாடும் அதிகம்.
வைகாசி மாதம் வளர்பிறை சதுர்தசியன்று சூரியன் மறையும் நொடியில் (பகலுமின்றி, இரவுமின்றி) மாலை சந்திப்பொழுதில் நரசிம்மரை வழிபடுவதே நரசிம்ம ஜயந்தியாகும். சோமப்பிரதோஷமும், சனிப்பிரதோஷமும் சிறப்பு போல நரசிம்ம ஜெயந்தி திங்கட்கிழமையிலும், நரசிம்மர் அவதரித்த நட்சத்திரமான சுவாதியிலும் வழிபடுதல் சிறப்பு. இவ்விரதத்தை அனுஷ்டித்ததாலேயே, கயவனாக இருந்த சுவேதன், மறுபிறவியில், பிரகலாதனாகப் பிறந்து, பெருமாள் அருள் பெற்றதாக, விஷ்ணுவே கூறியிருப்பதால், அவர் நரசிம்மராக உருவெடுத்தது பிரகலாதனுக்காக மட்டுமல்ல, ஒரு முறை தான் அல்ல என்பதும் தெரிகிறது. இறைவனை வழிபட எந்நேரமும் உகந்ததே என்றாலும், நம் வசதி கருதி, சில நல்-நிகழ்வுகளோடு தொடர்புடைய நாட்களில் அல்லது நேரத்திலாவது வழிபட வேண்டும் என்பதற்காகவே சதுர்த்தியில்/ சஷ்டியில்; செவ்வாய்/வெள்ளியில்; காலை அல்லது மாலையில் என்று வெவ்வேறு சமயத்தில் வெவ்வெறு தெய்வங்களை வழிபடுவது மரபாக உள்ளது. அன்றாட நரசிம்மர் வழிபாட்டில், பிரதோஷ வேளை (சூரியன்மறைவுக்கு முன் 1.30 மணியும், பின் 1.30 மணியும்) ஆக மொத்தம் (மாலை 4.30 முதல் 7 .30 வரை 3 மணி) நேரம் சிறப்பு. அதுவும், சதுர்தசி நாளில் சிறப்பு. சித்திரை மாத வளர்பிறை அக்ஷய திருதியை வழிபாடும் சிறப்பு.
நரசிம்மர் விஷ்ணுவே என்பதால், பொதுவாக, விஷ்ணு வழிபாட்டில் பயன்படுத்தும், மலர்கள், வஸ்திரம், நைவேத்யம் ஆகியவற்றை உபயோகிக்கலாம். எனினும் செவ்வரளி போன்ற சிகப்பு வண்ண மலர்களும், சர்க்கரைப் பொங்கல், பானகம் போன்ற இனிப்புகளும் சிறப்பு. ஹோமத்திற்கு தேன் கலந்த மல்லிகை மலர்கள் உகந்தது. குளுமைப் பொருளான சந்தனத்திலும் செஞ்சந்தனமும், சந்தனாதி தைலக்காப்பும் சிறப்பு. அவரவருக்கு ஏற்றபடி 1,3,6,8,10,19,32,62 அக்ஷர நரசிம்ம மந்திரத்தை ஜபிக்கலாம்; துதிகளைக் கூறிடலாம்.
தமிழகத்துள்ள நரசிம்மர் ஆலயங்கள்
விஷ்ணு மூலவராக உள்ள ஆலயங்கள் தமிழகத்தில் சுமார் 5,200 உள்ளன. அவற்றில் பெருமாளுக்கு வழங்கும் சுமார் 6000 நாமங்களில், பரவலாக உள்ளதில் நரசிம்மரும் ஒன்று அப்பெயரோடு சுமார் 100 கோயில்கள் உள்ளன. அங்கெல்லாம், பெருமாள் வெறுமனே நரசிம்மர் என்று மட்டும் அழைக்கப் படுவதில்லை. உருவ அமைப்பு ஏந்தியுள்ள ஆயுதங்கள், பார்வை நிலை, அணிந்துள்ள ஆபரணங்கள், இருக்கும் பாங்கு, அருட்தன்மை போன்றவற்றின் அடிப்படையில் வெவ்வேறு அடைமொழியோடு 30 திருப்பெயர்கள் உள்ளன. அவை
1. அகோபில நரசிம்மர் 2. அழகிய சிங்கர்
3. அனந்த வீரவிக்ரம நரசிம்மர் 4. உக்கிர நரசிம்மர்
5. கதலி நரசிங்கர் 6. கதலி லக்ஷ்மி நரசிம்மர்
7. கதிர் நரசிம்மர் 8. கருடாத்ரிலக்ஷ்மிநரசிம்மர்
9. கல்யாணநரசிம்மர் 10. குகாந்தர நரசிம்மர்
11. குஞ்சால நரசிம்மர் 12. கும்பி நரசிம்மர்
13. சாந்த நரசிம்மர் 14. சிங்கப் பெருமாள்
15. தெள்ளிய சிங்கர் 16. நரசிங்கர்
17. பானக நரசிம்மர் 18. பாடலாத்ரி நரசிம்மர்
19. பார்க்கவ நரசிம்மர் 20. பாவன நரசிம்மர்
21. பிரஹ்லாத நரசிம்மர் 22. பிரஹ்லாத வரதநரசிம்மர்
23. பூவராக நரசிம்மர் 24. மாலோல நரசிம்மர்
25. யோக நரசிம்மர் 26. லட்சுமி நரசிம்மர்
27. வரதயோக நரசிம்மர் 28. வராக நரசிம்மர்
29. வியாக்ர நரசிம்மர் 30. ஜ்வாலா நரசிம்மர்
முக்கிய நரசிம்மத் தலங்கள்
மிகப்பிரபலமான நரசிம்மர் தலங்களும் அவற்றைப் பற்றி சில முக்கிய குறிப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன.
அ) ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த தலங்கள்
ஜோதிஷ்மட்: உ.பி. மாநிலம். ஆதிசங்கரர் எழுப்பிய ஆலயத்தில் உக்ர நரசிம்மர். 246449.
அகோபிலம் (சிங்கவேள் குன்றம்) : ஆந்திரா மாநிலம் கடப்பா மாவட்டம் நந்தியாலின் தென்கீழ் 48 கி.மீ. நவநரசிம்ம ÷க்ஷத்ரம். மலையில் 9 கி.மீ. ல் அகோபில நரசிம்மர் கோயில். குடவரை நரசிம்மர் வெளியான தூண் 2கி.மீ ல் உள்ளது. அடிவாரத்து பிரகலாத வரதன் கோயிலே அகோபில மடத்தின் தலைமையகம். இம்மடத்தின் அழகிய சிங்க ஜீயர், ஸ்ரீரங்கத்தில் செய்த அபூர்வ கோபுரத் திருப்பணியை எவரும் மறக்க முடியாது. ஆதிசங்கரரை, காபாலிகர்களிடமிருந்து, நரசிம்மர் காப்பாற்றிய தலம். (மங்க-திருமங்) (பாசு - 10) 518454.
சோளிங்கபுரம் (திருக்கடிகை): தமிழ்நாடு, வேலு<õரின் வடகீழ் 40கி.மீ. மலையில் 500 அடி உயரத்தில் யோகநரசிம்மர் ஆலயம். அடிவராத்தில் உத்ஸவமூர்த்தி மட்டுமே <உள்ளார். சிறிது நேரம் தங்கினாலே முக்தியளிப்பது (மங்க-பேயா, திருமங்) (பாசு-4) 631102.
வேளுக்கை: காஞ்சிபுரத்தில் திருத்தண்கா சமீபம். ஸ்ரீ அழகியசிங்கர் கோயில். மேற்கு திசையில் அசுரர்களை தடுத்தபின், பெருமாள், யோக நரசிம்மராக, தானே விரும்பித் தங்கிவிட்ட இடம். (மங்க-பே) (பாசு - 4) 631501
திருவாழித் திருநகரி: சீர்காழியின் தென்கீழ் 6 கி,மீ ல் திருவாழி. அங்கிருந்து வடகீழ் 4 கி.மீ திருநகரி. தேவாரத்தில் வலஞ்சுழியும், கொட்டையூரும் போல திருவாலி லக்ஷ்மி நரசிம்மரும், திருநகரி தேவராஜனும் சேர்ந்தே போற்றப்பட்டுள்ளனர். நாங்கூர் 11 திருப்பதிகளுள் ஒன்று.
சிவத்தலம். சத்திமுத்தத்தில் சிவனும், அம்பிகையும் போல பிராட்டியும் பெருமாளும் ஆலிங்கனக் கோலம். திருமங்கையாழ்வாரைத் தடுத்து ஆட்கொண்டு அஷ்டாக்ஷரம் உபதேசித்த பதி. (மங்க -குல , திருமங்) (பாசு -42) 609106.
நாகை (நாகப்பட்டினம்) : நீலமேகப்பெருமாள் கோயில் தஞ்சையின் கிழக்கே 90 கீ.மீ அபூர்வமான அஷ்டபுஜநரசிம்மர் திருமேனி உள்ளது. துருவனும் ஆதி சேடனும் பணிந்தது. (மங்க - திருமங்) (பாசு - 10) 611001.
தஞ்சைமாமணிக்கோயில் (வெண்ணாற்றங்கரை): தஞ்சைக்கு வடக்கே திருவையாறு வழியில் 6 கி.மீ. அருகருகே 3 பெரிய விஷ்ணு கோயில்கள். ஒன்றாகவே பாடப்பட்டவை. நீலமேகப் பெருமாள், மணிகுன்றப் பெருமாள் மற்றும் நரசிம்மன் கோயில்கள்.
தஞ்சகன், தண்டகன், கஜமுகன் ஆகியோரின் கெடுமையிலிருந்து மக்களைத் திருமால் காத்த பதி. திவ்யப்ரபந்தம் கூறி வணங்கிடலாகாத தினங்களில் தேசிகப்ரபந்தம் பாராயணம் செய்யுமாறு நயினாச்சாரியார் நியமித்த பதி. (மங்க-நம், பூத, திருமங்) (பாசு - 5) 613003.
திருக்கோஷ்டியூர் : (தென்) திருப்பத்தூரிலிருந்து சிவகங்கை வழி 7 கி.மீ. உரகமெல்லணையான் கோயில்.
மகாவிஷ்ணு நின்று, இருந்து, கிடந்த, நடந்து, கூத்தாடும் 5 நிலையில் தரிசனமளிக்கும் பதி. 1000 ஆண்டுகட்கு முன்பே, கீழோர் எனப்பட்டவரை, திருக்குலத்தோர் என்று கூறி, தான் நரகம் சென்றாலும், அனைவரும் உய்வதற்காக ,யாவரும் அறியுமாறு ராமானுஜர் நாராயண மந்திரத்தை உரக்கக் கூவிய தலம்.
மகாமகக்கிணறு சிறப்பு. வைணவ மறுமலர்ச்சியில் முக்கிய ஸ்தலம். சிவனும் சேர்ந்து அருளும் பதி. மயனும், விஸ்வகர்மாவும் இணைந்து எழுப்பியது. தென்புற நரசிம்மர் தெற்காழ்வார் இரண்யனைப் பிடித்த கோலம். வடபக்க நரசிம்மர் வடக்காழ்வார் இரண்யவதம் செய்த கோலம். இரண்டுமே மிகப்பெரிய திருவுருவங்கள். (மங்க - பெரி, திருமங், பூத, பேயா, திருமழிசை) (பாசு - 39) 623210.
ஆ) பிற நரசிம்மத் தலங்கள்
ஆந்திரம் மாநிலம்
1. எர்ரகுண்டா - கடப்பாவிலிருந்து 40 கி.மீ. லக்ஷ்மி நரசிம்மர், யோக நரசிம்மர் ஆலயங்கள். 523327.
2. யாதகிரி - ஐதராபாத்திலிருந்து 70 கி.மீ மலையில் லக்ஷ்மி நரசிம்மர் ஆலயம். 375 படிகள்.
3. தர்மபுரி - கோதாவரி நதி மேற்குக் கரை (கரிம் நகரிலிருந்து 16 கி.மீ) இரு நரசிம்மர் ஆலயங்கள். 505425.
4. பாபட்லா - தெனாலியிருந்து 43 கி.மீ. ஜ்வாலா நரசிம்மர் கோயில். 422101
5. அகிரபள்ளி - விஜயவாடாவிலிருந்து செல்லலாம். வியாக்ர நரசிம்மர் ஆலயம்.
6. மங்களகிரி - பெசவாடாவிலிருந்து 13 கி.மீ. மலையில் 400 படிகள். நரசிம்மருக்கு வாயில் பானகம் விடுகிறார்கள். 522503.
7. சிம்மாசலம் - வால்டேரிலிருந்து 8 கி.மீ. மலைமேல் 1000 படிகள். வராஹ நரசிம்மர். உக்ர மூர்த்தி என்பதால் எப்போதும் சந்தனக்காப்பு. சித்திரை மாத வளர்பிறை அக்ஷய திருதியையில் மட்டும் புது சந்தனக்காப்பு - 530004.
8. பூமினிபட்டினம் : விஜய நகரத்திலிருந்து 20 கி.மீ. லக்ஷ்மி நரசிம்மர்.
9. கொருகொண்டா: ராஜமுந்திரியிலிருந்து 20 கி.மீ. மலையில் 600 படிகள். சாத்வீக நரசிம்மர். 533289.
10. லக்ஷ்மி புரம்: கரிம் நகர் மாவட்டம் மலையில் நவநரசிம்மர். இரண்டாவது அகோபிலம் என்பர். 521131.
11. திராக்ஷõராமம் : காகினநாடா சமீபம் புகழ் பெற்ற பீமேஸ்வரர் கோயிலில் ஷேத்ராபாலராயுள்ள நரசிம்மர். 533262.
12. திருப்பதி: <உலகப்புகழ் வேங்கடாசலபதி கோயிலில் உள் பிரகாரத்தில் தனி நரசிம்மர் சன்னதி. 517504.
13. கம்மம் : ஸ்தம்பம் (தூண்) என்பது கம்மம் ஆகிவிட்டது. ஸ்தம்ப நரசிம்மர் கோயில். 507001.
கர்நாடக மாநிலம்
1. நரசிப்பூர் திருமுக்கூடல் - மைசூரின் தென்கீழ் 30 கீ.மீ. காவிரி, கபில, ஸ்படிக நதிகளின் சங்கமத்தலம். குஞ்சால நரசிம்மர். ஒரு கையில் குண்டுமணியும், மறு கையில் தராசும் ஏந்திய அபூர்வத் திருமேனி. 502313.
2. அகர: மைசூர் மாவட்டம் ஏலந்தூர் தாலுக்கா. ஒரே திருமேனியில் யோக, லக்ஷ்மி, உக்கிர, ஜ்வால, பிரகலாத வரத முகங்களுடைய பஞ்சமுக நரசிம்மர். 571485.
3. பாண்டவபுரம் :ஸ்ரீ ரங்கப் பட்டிணத்திலிருந்து 32 கி.மீ. 400 படிகள். மலையில் யோக நரசிம்மர் ஆலயம். 571484.
4. சாளக்கிராம் : மைசூர் மாவட்டம் கிருஷ்ணராஜ நகரின் வடமேற்கு 15 கி.மீ. 571604.
5. ஹோலே நரசிப்பூர் : ஹாஸனிலிருந்து தென்கீழ் மைசூர் வழி 32 கி.மீ. பிரஸன்ன நரசிம்மர். 573211.
6. சிபி: தும்கூர் மாவட்டம், சிரா தாலுக்காவில் சாளக்கிராம வடிவில் நரசிம்மர்.
7. ஹம்பி : பெல்லாரி மாவட்டம் ஹாஸ்பேட் தாலுக்கா 22 அடி <உயர நரசிம்மர். 583289.
8. கனககிரி : ராய்சூர் மாவட்டம், கங்காவதி தாலுக்கா வடமே. 20 கி.மீ. லிங்க வடிவில் லக்ஷ்மி நரசிம்மர். 584119.
9. கர்பரா: பிஜப்பூர் மாவட்டம் தாலுக்காவில் அரசமரமே நரசிம்மராக வழிபாடு.
10. ஹலசி : பெல்காம் மாவட்டத்தில் தெற்கே காநாபுர தாலுக்கா. பூவராக அனந்தவீர விக்கரம நரசிம்மர். 591142.
11. முடுதகாண ஹுப்ளி : பெல்காம் சமீபம் சம்பகாவ் வட்டம். அஸ்வத்த நரசிம்மர். 591118.
மஹாராஷ்டிரா மாநிலம்
மஹாராஷ்டிரா மாநிலத்தில் ராகேர் மற்றும் சார்தானா ஆகியவை நரசிம்மத் தலங்கள்.
ஒரிசா மாநிலம்
ஒரிசா மாநிலம் ந்ருசிங்கநாத் ஒரு நரசிம்மர் தலம்.
தமிழ்நாடு மாநிலம்
1. குறையலூர் : சீர்காழியிலிருந்து 8 கி.மீ. நரசிம்மர் கோயில். நாங்கூர்ப் பகுதி பஞ்ச நரசிம்மத்தலத்தில் ஒன்று.
பிற ஊர்கள்: மங்கைமடம் ; திருநகரி; திருவாலி. 609106.
2. நாமக்கல் : ஊரின் நடுவே உள்ள மலைமுகட்டில், மேற்புறம் நரசிம்மர் சன்னதி. 637001.
3. சிங்கப்பெருமாள் கோயில் : சென்னையிலிருந்து (தாம்பரம் வழி) 48 கி.மீ. உக்ர நரசிம்மர் கோயில். 603204.
4. திருவதிகை : பண்ருட்டி அருகே 1 கி.மீ. சரநாராயணர் கோயிலில் பள்ளி கொண்ட நரசிம்மர் சிறப்பு. 607106.
5. காஞ்சிபுரம் : சங்கராச்சாரியார் மடத்தில் நரசிங்க சாளக்கிராமம் பூஜிக்கப்படுகிறது. 631501.
6. ஸ்ரீரங்கம் : பார்புகழ் ரெங்கநாதர் கோயிலில் கம்பனின் இராமாயணத்தை அங்கீரிப்பதற்கு விமான சிற்பத்திலிருந்து வெளிவந்த நரசிம்மரை மேட்டழகிய சிங்கர் என்பர். 620006.
7. அவனியாள்புரம்: அண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகில் விஷ்ணு ஆலயத்தில் 5 நரசிம்மர்கள் வழிபாடு. 604504
பாண்டிச்சேரி மாநிலம்
பாண்டிச்சேரி மாநிலம் : சிங்கரி கோயில் என்ற ஊரில் 18 கை நரசிம்மர். 605007.
கேரள மாநிலம்
1. கடுங்கலுர் : ஆலவாயிலிருந்து 2 கி,மீ. நரசிம்மர் கோயில். 683103.
2. துறவூர் : ஆலப்புழையிலிருந்து 35 கி.மீ. இரண்டு நரசிம்மர் கோயில்கள். 688532.
3. குருவாயூர் : கிருஷ்ணன் கோயிலில் நாராயண பட்டத்ரி தன் குருவிடம் வாங்கிக் கொண்ட நோய் நீங்கிட நாராயணீயம் இயற்றும் போது விஷ்ணு நரசிம்மக்காட்சி அளித்த தலம். 680101.
மதுரை ஆனைமலை நரசிங்கம் யோக நரசிங்கப் பெருமாள் ஆலயம்
மதுரைக்கு வடகிழக்கே, மேலூர் வழியில், 4 கி.மீ. தொலைவிலுள்ள ஒத்தக்கடைக்கு அருகே, யானை படுத்திருப்பது போல், தென்மேற்கு - வடகிழக்குப் போக்கில் சுமார் 250 அடி உயரமும், 5 கி.மீ. நீளமும் உள்ள மலையே ஆனைமலை என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆனைமலையின் வடபுறம் உள்ள நரசிங்கம் கிராமப்பகுதியில் பழமையான முருகன் குடவரைக் கோயிலுக்கு அருகில், யோக நரசிங்கப் பெருமாளுக்கும் ஒரு குடவரை ஆலயம் உள்ளது. ஆலய வாச<லுக்கே செல்லும் வகையில் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து அடிக்கடி மினிபஸ் வசதியுள்ளது. இரண்யகசிபுவை அடக்கிட நரசிம்மராக வந்தவர்க்குக் கோயில் உள்ள ஊரை நரசிங்கம் என்பது பொருத்தமாக இருப்பது போல, இதன் பண்டைப் பெயர்களான நரசிங்க மங்கலமும் இரணியமுட்டமும் பொருத்தமாகவே உள்ளன. கி.பி. 8,9ம் நூற்றாண்டுகளில் மிக வளப்பமாக இருந்த இப்பகுதியில், மதுரையை ஆண்ட சடையவர்மன் பராந்தக பாண்டியனின் அமைச்சர் மாறன் காரி யோக நரசிம்மருக்குக் கோயில் எழுப்பியதாகத் தெரிகிறது. சுமார் 6 அடி அகல, நீள, உயரக் கருவறையும், யோக நரசிம்மப் பெருமாள் திருவுருவும், கருவறைக்கு முன் உடையவரும் நம்மாழ்வாரும் உள்ள அர்த்த மண்டபமும் குடைவு அமைப்புகள். பிற மண்டபங்கள் கட்டுமானமே. கருடாழ்வார் மண்டபமும், ஆலய வளாகத்தின் வடகீழ் பகுதியில் உள்ள நரசிங்கவல்லித் தாயாரின் தனிக்கோயிலும் பிற்கால அமைப்புகளாகத் தெரிகின்றன. ஆலயத்தை ஒட்டி கிழக்கு, வடகிழக்காக, மலையின் அடிவாரத்திலேயே சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் சதுரவடிவ நன்னீர்ப் பொய்கை உள்ளது. காலவசத்தால், சம்பு, தர்ப்பை மற்றும் காட்டுச் செடிகள் வளர்ந்து, நீர்ப்பரப்பே தெரியாத அளவுக்கு மறைந்திருந்த பொய்கையின் நிலை தற்போது மாறிவிட்டது. பக்தர்கள் மனதில் பெருமாள் ஏற்படுத்திய உந்துதலால், பொய்கை பழைய பொலிவை மீளப் பெற்றுள்ளது. குடவரைக் கோயிலை திருச்சுற்றிட வாய்ப்பில்லாததால் பண்டைய மரபுப்படி, திருக்குளத்தைச் சுற்றி வந்த பின் ஆலய தரிசனம் செய்தல் சிறப்பு. கங்கை நீரும், காவிரி நீரும் போற்றப்படுவது போல, மிகச் சுவையாக உள்ள இந்தப் பொய்கையின் தீர்த்தமும் பல உடல், மன அல்லல்களைப் போக்கும் தனித்தன்மையும், சிறப்பும் பெற்றிருப்பதை, முந்தைப் புராணங்களும், இன்றையோரின் விவரிப்புக்களும் தெரிவிக்கின்றன.
இத்திருக்குளத் தீர்த்தத்தைப் பெருமாள் வழிபாட்டிற்கு எடுத்து வருவதற்காக, ஆலயத்தின் கிழக்குத் திருமதிலில் உள்ள வாயில், எப்பொழுது, எதற்காக அடைபட்டது என்பதை அறிய இயலவில்லை. வசிக்கும் இல்லமாயினும், வழிபட்டுப் பயனடையும் இறைக் கோயிலாயினும் கிழக்கு அல்லது வடகிழக்கில் இருந்த வாயில்கள் அடைப்படுவது உகந்தது அல்ல. பல்லோரும் நாடி வருகின்ற நிலை குறைவதோடு, அருகி<லுள்ளோர் வருவதும் கூடக் குறைந்து விடுவதும், அனுபவ உண்மை; வாஸ்து சாஸ்திர செய்தியுமாகும். ஆலயநிர்மாண வல்லுனர்களும், ஆலய நிர்வாகிகளும் ஆருடம் சொல்லும் அருளாளர்களும் கூடி அடைக்கப்பட்ட வாயிலை திறந்துவிட்டால், யோக நரசிம்மரின் அருளைப் பெறுவோரின் எண்ணிக்கை கூடிடும். மாசிப் பவுர்ணமியில், பெருமாள் ஆலயத் திருக்குளங்களில் நடைபெறும் கஜேந்திர மோக்ஷ திருவிளையாடல் இத்திருக்குளத்தில் இன்றும் நடைபெறுகிறது. இந்த ஆலயத்தில் கொடி மரம் இல்லாததால், நின்ற கோலத்திலுள்ள நரசிம்ம உற்சவர் திருமேனி கோயிலுக்கு வெளியே வருவதில்லை. இங்கிருந்து 4 கி.மீ.ல் உள்ள, ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த திருமோகூர் காளமேகப் பெருமான் உற்சவ மூர்த்தியே இத்திருவிழாவிற்காக நரசிங்கத்திற்கு எழுந்தருளுகிறார். ஆலயங்களில் நிறுவப்படும் கொடிமரத்தின் உயரம் கருவறைக்கு மேல் எழுப்புகின்ற விமானத்தின் நீள, அகல, உயர பரிமாணத்தின் படி அமைப்பதே பொது மரபு. யோக நரசிம்மரின் குடவரைக் கருவறைக்கு மேல் ஆனைமலை வானளாவி இருப்பதும், இங்கு கொடிமரம் வைக்கப்படாமைக்கு ஒரு காரணமாக இருக்கலாம். பத்துப்பாடல் ஆசிரியர் பெருங்கௌசிகனார் பிறந்த ஊர் யோக நரசிம்மர் அருளும் இந்த நரசிங்கம் கிராமமே.
ஆனைமலை கிரிவல வழிபாடு
திருவண்ணாமலை போல, தமிழகத்தில், நெடுங் காலமாக, கிரிவலம் செய்யப்படும் தலங்களுள் மதுரை மாவட்ட ஆனைமலையும் ஒன்று. இதை ஒட்டி உள்ள கொடிக்குளம், வெளவால் தோட்டம், ஒத்தக்கடை, நரசிங்கம், அரும்பனூர் புதூர் ஆகிய ஊர்களிலிருந்து பக்தர்கள் பவுர்ணமி தோறும் ஆனைமலையை கிரிவலம் வருகின்றனர். எல்லோரும் ஒரே இடத்திலிருந்து திருச்சுற்றை தொடங்கி முடிப்பதில்லை. தத்தம் ஊரிலிருந்தே புறப்பட்டு திரும்புகின்றனர். சுமார் 12 கி.மீ. திருச்சுற்றை, அதிகாலை 3 மணிக்குத் துவங்கி ஆரோக்கியமும், அமைதியும் அருளும் பெற்று விடியும் போது வீடு திரும்பி, அன்றாடப் பணியில் ஈடுபடுகின்றனர். விநாயகர், முருகன், சிவபெருமான், அம்மன், பெருமாள், கிராம தேவதைகள் உட்பட பரம்பொருளின் பல்வித அவதார ரூபங்களையும் தரிசித்த பயனை ஒருசேர அளிக்கின
ஆனைமலை கிரிவல வழிபாட்டை யாவரும் செய்திட இறையருள் கூடட்டும்.
ஆதி சங்கரரும், நரசிம்மரும்
இல்லற வாழ்வு பற்றியும் வாதிடும் நிலையைப் பெறுதற்காக ஆதிசங்கரர், தன் உடலை ஒரு காட்டு மரத்தில் மறைத்து விட்டு, இறந்துவிட்ட அமரசன் என்பவனின் உடலில் புகுந்து, சிலகாலம் க

Saturday, September 6, 2014

சொர்ண பைரவரின் வழிபாட்டு முறை(வீட்டில் செய்யும் சுலப முறை)

தேவையானவை: ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் படம்,கொஞ்சம் சந்தனம்,சந்தன ஊதுபத்தி ஒரு பாக்கெட்,இரண்டு கிண்ணங்கள்,தாமரை தண்டுத்திரி, அகல்விளக்கு எனப்படும் மண் விளக்கு,கலப்படமில்லாத,பாக்கெட்டில் அடைக்கப்படாத நெய்(இவற்றை ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவருக்கு மட்டுமே பயன்படுத்திட வேண்டும்)
*அசைவ உணவு சாப்பிடுவதை நிறுத்தும் மனவலிமை
தினமும் காலையில் குளித்துமுடித்துவிட்டு,அகல்விளக்கில் நெய்யை நிரப்பி தாமரைநூல் திரியை வைத்து தீபம் ஏற்றிட வேண்டும்.அப்படி ஏற்றிவிட்டு,ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரின் படத்தின் முன்பாக வைக்க வேண்டும்.இந்த தீபம் தினமும் சுமார் 30 நிமிடம் மட்டும் எரிந்தால் போதுமானது.
தீபம் ஏற்றியப்பின்னர்,வீட்டில் சமைத்த உணவில் முதல் கரண்டியை எடுத்து,ஒரு கிண்ணத்தில் இவரது படத்தின்முன்பாக வைக்கவேண்டும்.சோறு எனில் ஒரு கரண்டி எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து அந்த உணவின்மீது தாளித்த தயிர் அல்லது வெல்லம் தூவ வேண்டும்.பிறகு,சந்தனத்தை நீரில் கரைத்து,சொர்ண ஆகர்ஷண பைரவரின் நெற்றியிலும்,பைரவியின் நெற்றியிலும் வலது மோதிர விரலால் வைக்க வேண்டும்.அப்படி வைக்கும்போது,சந்தனம் பைரவர்,பைரவியின் கண்களை மறைக்கக் கூடாது;பிறகு,சொர்ண ஆகர்ஷண பைரவரின் பாதத்தில் இதேபோல்,சந்தனத்தை வைக்க வேண்டும்.
பிறகு,சந்தன பத்தியால் மூன்றுமுறை ஆராதிக்க வேண்டும்.அப்படி ஆராதித்தப்பின்னர்,கீழ்க்காணும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரின் மூலமந்திரத்தை தினமும் 33 முறை வாசிக்க வேண்டும்.தேய்பிறை அஷ்டமி வரும் நாட்களில் அமையும் இராகு காலத்தில் 330 முறை ஜபிக்க வேண்டும்.
மூலமந்திரம்:
ஓம் ஏம் ஐம் க்லாம் க்லீம் க்லூம்
ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம்
சகவம்ஸ ஆபதுத்தோறணாய
அஜாமிள பந்தநாய லோகேஸ்வராய
ஸ்வர்ணாகர்ஷணபைரவாய
மமதாரித்திரிய வித்வேஷணாய
ஓம்ஸ்ரீம் மஹா பைரவாய நமஹ
இத்துடன்,ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரின் வழிபாடு நிறைவடைந்தது.இரவு 7 மணிக்கு மேல் 10 மணிக்குள் காலையில் நிவேதனமாக வைத்தோமே? அந்த காலை உணவை எடுத்து,நமதுவீட்டின் வெளிப்புறம்,சற்று உயரமான இடத்தில்(கல்லில்!) ஒரு வாழை இலையில் அல்லது கிண்ணத்தில் அந்த உணவை வைக்க வேண்டும்.இப்படி தினமும் செய்துவரவேண்டும்.
இந்த தினசரி வழிபாட்டினால்,ஓரிரு நாள் அல்லது ஓரிரு வாரங்களில் நாம் இரவு வீட்டுக்கு வெளியே உணவை வைக்கும் போது,ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் ,பைரவர் வடிவத்தில் சாப்பிட வருவார்.
(இந்த நிவேதனத்தை நமதுவீட்டு வளர்ப்பு பைரவருக்குப் படைக்கக் கூடாது)
இந்த ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாட்டினை 180 நாட்களுக்கு தொடர்ந்து செய்துவருவதால்,நமது கர்மவினைகள் தீரும்;அப்படி தீரும்போதே நமது பண வருமானம் நான்கு மடங்காக அதிகரிக்கும்;வேலை பார்ப்பவர்களுக்கு முறையான பதவி உயர்வு கிடைக்கும்;விரும்பும் இடமாற்றம் கிடைக்கும்;தொழில்பார்ப்பவர்களுக்கு விற்பனை இரு மடங்காகும்;அரசியலில் இருப்பவர்கள் படிப்படியான வளர்ச்சியைப் பெறுவார்கள்;உயிரைத்தவிர,அனைத்தையும் இழந்தவர்களுக்கு இழந்த அனைத்தும் கிடைக்கும்.
இந்த வழிபாடு செய்ய ஒரே ஒரு கட்டுப்பாடுதான் உண்டு.அது இந்த வழிபாடு செய்பவர்கள் அசைவம் சாப்பிடுவதை அடியோடு நிறுத்த வேண்டும்.180 நாட்களுக்கு!!!இந்த வழிபாட்டை மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தினமும் செய்துவந்தால்,நமது அனைத்து கர்மவினைகளும் தீர்ந்து,சொர்ணம் நம்மிடம் குவியத்துவங்கும்;(சொர்ணம் = தங்கம்)
இந்த வழிபாடு செய்பவர்களின் வீட்டில் இருப்போர்கள்,அசைவம் சாப்பிடலாம்;அசைவத்தை அவர்களும் கைவிட்டால்,அந்த குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட்ட பலன்கள் வந்து சேரும்.ஆமாம்!
ஒரு குடும்பத்தில் ஒருவர் சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்தால்,அந்த குடும்பத்தினர் அசைவத்தை வீட்டிலும்,வெளியேயும்,விழாக்களிலும் சாப்பிடாமல் இருந்தாலே அவர்களின் நியாயமான ஆசைகள் நிறைவேறும்;பண வரவு அதிகரிக்கும்.
சிவனுடைய முதல் அவதாரம் பைரவர்! வீட்டில் வைத்து வழிபடத்தக்கவர் சொர்ண ஆகர்ஷண பைரவர் மட்டுமே!!!
தமிழ்நாட்டில் பெரும்பாலான குடும்பங்களில் வீடு என்று ஒரே ஒரு அறைதான் உண்டு.அந்த அறையில் சொர்ண ஆகர்ஷண பைரவரை வைத்து தாராளமாக வழிபாடு செய்யலாம்.அதே அறையில் குடும்ப தாம்பத்திய உறவில் ஈடுபடலாம்.தப்பில்லை;வழிபாடு செய்யும்போது உடல் சுத்தமாக இருக்க வேண்டும்;
இந்த பதிவிலிருக்கும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் புகைப்படத்தை பதிவிறக்கம் செய்து கொண்டு,இந்த பூஜைமுறையைப் பின்பற்றலாம்.
நன்றி :-http://www.aanmigakkadal.com

தினமும் ஒரே ஒரு முறை இந்த மந்திரத்தை பாராயினம்

விஸ்வேஸ்வராய நரகாரண்ணவ தாரணாய
கர்ண்ணாம்ருதாய சசிசேகர தாரணாய
கர்ப்பூரகாந்திதவளாய ஜடாதராய

தாரித்ரிய துக்கதகனாய நம:சிவாய

கௌரிப்ரியாய ரஜனீச கலாதராய
காலாந்தகாய பூஜகாதிப கங்கணாய
கங்காதராய கஜராஜவிமர்த்தனாய
தாரித்ரிய துக்கதகனாய நம:சிவாய

பக்தப்ரியாய பவரோகபயாபஹாய
உக்ராய துர்க பவசாகர தாரணாய
ஜ்யோதிர்மயாய குணநாம ஸு சமுத்திதாய
தாரித்ரிய துக்கதகனாய நம:சிவாய

ச(cha)ர்ம்மாம்பராய சவபஸ்மவிலேபனாய
ஃபாலேக்ஷணாய மணிகுண்டலமணடிதாய
மஜ்ஜீரபாதயுகளாய ஜடாதராய
தாரித்ரிய துக்கதகனாய நம:சிவாய

பஞ்சானனாய ஃபணிராஜவிபூஷணாய
ஹேமாம்சுகாய புவநத்ரமண்டிதாய
ஆனந்த பூமிவரதாய ஜடாதராய
தாரித்ரிய துக்கதகனாய நாம:சிவாய

பானுப்ரியாய பவசாகரதாரணாய
காலாந்தகாய கமலாசன பூஜிதாய
நேத்ராய சுபலக்ஷணலக்ஷிதாய
தாரித்ரிய துக்கதகனாய நம:சிவாய

ராமப்ரியாய ரகுநாதவரப்ரதாய
நாகப்ரியாய நரகார்ண்ணவதாரணாய
புண்யேஷூ புண்யபரிதாய சுரார்ச்சிதாய
தாரித்ரிய துக்கதகனாய நம:சிவாய

முக்தேஸ்வராய ஃபலதாய கணேஷ்வராய
கீதப்ரியாய வ்ருஷபேஸ்வரவாகனாய
மாதங்கசர்ம்மவாசனாய நம:சிவாய
தாரித்ரிய துக்கதகனாய நம:சிவாய

Friday, September 5, 2014

ஓம்காரத்தை ஒலித்து வர எல்லோருக்கும் கிட்டாத ஒரு பேரின்பம் நமக்குக் கிடைக்கும்

முருகப்பெருமான் ப்ரணவத்தின் பொருளை பிரம்மாவிடம் கேட்டபோது, அறியாமல் விழித்தவரை சிறைக்கு அனுப்பி, “என்ன பொருள் என்று உனக்குத் தெரியுமா?” என்று கேட்ட சிவபெருமானுக்கு குருவாய் அமர்ந்து உபதேசித்தார் என்பது நமக்கெல்லாம் தெரியும்.
இந்த மந்திரமானது ஆன்மாவுக்கு உபதேசிக்கப்படும் மந்திரம். ஆகையால், புற உடலுக்கும் உலகிற்கும் கேட்காதவாறு செவிவழிக் காற்று வழியாக ஆன்மாவிற்கு ஒரு குருவால் உபதேசிக்கப்பட வேண்டும்.
ஒலிகளுக்கு அதிர்வு உண்டு என்று ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த ஓம்காரம் உச்சரிக்கப்படும் பொழுதும் ஒரு அதிர்வலை உண்டாகிறது. இது மூலமந்திரம். ஆகையால் இந்த அதிர்வலையின் ஆற்றலானது அளப்பரிய ஒரு சக்தியை உச்சரிப்பவர்களுக்கு உண்டாக்குகிறது. இருவர் எதிரெதிரே அமர்ந்து இந்த ஓம்காரத்தை மனது ஒருமித்து பலமுறை ஒரே மாதிரி உச்சரிக்கும் பொழுது, இருவரின் அதிர்வலைகளும் ஒரு நடுப்புள்ளியில் ஒரு அதிர்வுப்புலத்தை உண்டாக்குகிறது. நடுப்புள்ளியில் சந்தித்த அந்த அதிர்வலைகள் திரும்ப உச்சரிப்பவரிடமே வந்து சேரும்பொழுது அவரிடம் ஒரு வித ஆற்றல் வந்து சேருகிறது. அந்த ஆற்றலானது நம்முள்ளிருக்கும் உடலுக்கு மூலாதாரமாக இருக்கக்கூடிய அந்த இயங்கு சக்தியைத்(சூஷ்ம சக்தி) தூண்டிவிடுகிறது. இதுவரை உடலின் சக்தியாக மட்டுமே இயங்கி வந்த அந்த சூஷ்ம சக்தியானது இந்த அதிர்வால் ஆத்மாவுக்கும் உடலுக்கும் ஒரு அளப்பரிய சக்தியை அளிப்பதாக மாறுகிறது. உலகத்தில் உள்ள எல்லா உயிர்களையும் ஒரே நிலையில் பார்க்கக் கூடிய ஒரு பக்குவத்தையும் அவற்றின்பால் எல்லையற்ற அன்பு செலுத்தும் ஒரு மனதையும் இந்த மந்திரமானது நமக்கு அளிக்கும்.
இந்த உலகமே யாராலும் உணர்ந்து கொள்ளவும் முடியாத , காணவும் இயலாத ஒரு சூஷ்மமான அலைவரிசையில்தான் இயங்கி வருகிறது. இந்த ஓம்காரத்தின் மூலம் பிறக்கும் அதிர்வானது உலகத்தின் அதிர்வோடு ஒரு சூஷ்மமான பிணைப்பினை உருவாக்குகிறது. அதாவது நம்முள் உள்ள ஆத்மாவை உலகம் இயங்குவதற்கு ஆதாரமாக உள்ள சூஷ்மமான இயங்கு சக்தியோடு இணைப்பதற்கு இந்த ஓம்காரம் உதவுகிறது. இது ஒருமுறை இணைக்கப்பட்டுவிட்டால் அந்த பிணைப்பானது பல ஜென்மங்களுக்கும் அந்த ஆத்மாவோடு இணைந்து வரும்.
இதனால் நமக்கு எதன் மூலமாகவும் துன்பம் என்பது நேராது. அல்லது துன்பமானது துன்பமாக நமக்குத் தெரியாது. மிகப் பெரும் துன்பமான மரணம் என்பதையும் நம்மால் வேறு விதமாக எடுத்துக் கொள்ள முடியும். அதாவது மரணம் என்பது உடலுக்கே தவிர ஆத்மாவுக்கல்ல என்பது நமக்குத் தெரிய வரும்.
இந்த ஓம்கார மந்திரத்தை ஒரு குழுவாக பல பேர் ஓரிடத்தில் எதிரெதிரே அமர்ந்தும் இதைச் செய்யலாம். அங்கு ஏற்படும் அதிர்வலைகளானது அவ்விடத்தில் அமர்ந்து உச்சரிக்கும் அனைவருக்கும் திரும்பக் கிடைக்கும். இது ஒரே நாளில் கிடைத்து விடாது. தொடர்ந்து பல நாட்கள் இவ்வாறு செய்து வர, அந்த அதிர்வலைகள் அந்த இடம் முழுதும் நிரம்பியிருப்பதை நம்மால் உணர முடியும்.
இங்ஙனம் அதிர்வலைகள் கிடைக்கப் பெற்ற ஒருவர் அந்தக் குழுவிலிருந்து தனியே வேறு ஒரு இடத்திற்குச் சென்றுவிட்டாலும் (உலகத்தின் எந்த மூலைக்குச் சென்றாலும்!) குழுவிலுள்ள மற்றவர்கள் அதை உச்சரிக்கும்பொழுது அந்த அதிர்வலையை அவரால் அங்கு உணர முடியும். நம்முள் உருவான அலைவரிசையானது வேறு ஒரு நபரிடத்திலும் இருந்தால் (அவர் எந்த நாட்டவரானாலும், எந்த மதத்தவரானாலும்!) அவரிடம் ஒருவிதமான ஈடுபாடு உருவாகி விடுகிறது. அதனால் நாம் வெளியில் செல்லும்போது முன்பின் அறியாத யாரோ ஒருவரைக் (ஒரே அலைவரிசை உடையவராக இருந்தால்) காணும் போது அவரை எங்கோ பார்த்தது போலவும் நெடுநாட்கள் நட்பு உள்ளது போலவும் தோன்றும்.
இதை ஒரு குழுவாக அமர்ந்து மனம் ஒருமித்து செய்யும்பொழுது அதுவே பிரார்த்தனை ஆகிறது. இந்தக் கூட்டுப் பிரார்த்தனை சொல்பவர்களுக்கு மட்டுமல்லாமல் அங்கிருக்கும் மற்றவர்களுக்கும், சொல்லப்பட்ட இடத்தின் அருகாமையில் இருப்பவர்களுக்கும் பலன் பல தரும் ஆற்றல் உடையது. வள்ளலார் கூறிய ஆன்மநேய ஒருமைப்பாடு வழிக்கும் இதுதான் மூலம்.
கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் இத்தனையும் எதற்காக கட்டப்பட்டிருக்கின்றன? பல பேர் கூடி மனம் ஒருமித்து ஒரு ஒலியை சத்தமாக ஒரே மாதிரி உச்சரிக்கும் பொழுது அந்த இடத்தில் ஒரு அதிர்வு உண்டாகிறது. இவ்வாறு பல காலமாக உச்சரித்து உச்சரித்து அந்த இடம் முழுவதும் நல்ல அதிர்வு நிறைந்திருக்கும். பாரத்தோடு அந்த இடங்களுக்கு வருபவர்களுக்கு அது ஒரு இனம்புரியாத ஆறுதலை அளிக்கக்கூடிய இடமாக மாறி விடுகிறது.
கடவுள் பஞ்ச பூதங்களிலும் இருக்கிறார். பஞ்ச பூதங்களால் உருவாக்கப்பட்ட நம்மிலும் இருக்கிறார். கோயிலுக்குச் சென்றால் சாமி சன்னிதியில் முட்டி மோதாமல் கோவிலின் உள்ளேயே ஓரிடத்தில் தனியே அமர்ந்து இந்த ஓம்காரத்தை ஒலித்து வர எல்லோருக்கும் கிட்டாத ஒரு பேரின்பம் நமக்குக் கிடைக்கும் என்பது உறுதி
ஓம்” என்னும் ப்ரணவ மந்திரம் அனைத்து ஒலிகளின் மூலாதாரம். இது சமஸ்கிருத மொழியின் எழுத்துக்களான அ, உ, ம் என்ற மூன்று எழுத்துக்களை உள்ளடக்கியது. இம்மூன்று எழுத்துக்களும் இந்த அகிலத்தைக் குறிப்பவை, மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியவர்களைக் குறிப்பவை, மூன்று வேதங்களைக் குறிப்பவை என்று வேதங்கள் மூலம் அறியப்படுகிறது. ‘அ’ மற்றும் ‘உ’ எழுத்துக்கள் சேர்ந்து ‘ஓ’ என்று ஒலிக்கப்படுகிறது.

Wednesday, September 3, 2014

அஷ்டகர்ம மூலிகைகள் அறுபத்தி நான்கு

பண்டைய காலத்தில் வாழ்ந்து பல அற்புதங்களை செய்த நம் தமிழக சித்தர்கள் மூலிகைகளை கொண்டே மந்திர உருவேற்றி பல காரியங்களில் வெற்றியடைந்தனர். அதன்படி அவர்கள் பயன்படுத்திய மூலிகைகள் அஷ்டகர்மங்கள் ( எட்டு சித்திகள் ) செய்ய ஒரு சித்திக்கு 8 மூலிகை என அஷ்ட சித்திக்கு 64 மூலிகைகள் ஆகும். அஷ்டகர்ம்ம் என்பது 1. ஆகர்ஷனம், 2. உச்சாடனம், 3. தம்பனம், 4. பேதனம், 5. மாரணம், 6. மோகனம், 7. வசியம, 8. வித்வேஷனம் ஆகும். இந்த அஷ்ட கர்ம செயல்களை பற்றி விரிவாக காணலாம்.
1. ஆகர்ஷனம் : நமக்கு தேவையானதை இருக்கும் இடத்திலிருந்து நாம் இருக்கும் இடத்திற்கே வரவழைக்கும் வித்தையாகும். இதற்கு உதவும் மூலிகைகள் 1. வேளை, 2. உள்ளொட்டி, 3. புறவொட்டி, 4.சிறு முன்னை, 5. குப்பைமேனி, 6. அழுகண்ணி, 7. சிறியாநங்கை, 8. எருக்கு என எட்டு மூலிகைகளாகும். இதில்
மிருகங்களை அழைப்பதற்கு - வேளை, குப்பைமேனி.
பெண்களை அழப்பதற்கு - உள்ளொட்டி, அழுகண்ணி.
அரசர், பிரபுக்ளை அழைப்பதற்கு - சிறுமுன்னை.
துர்தேவதைகளை அழைப்பதற்கு - புறவொட்டி.
தேவதைகளை அழைப்பதற்கு - எருக்கு.
அனைத்து அழைப்பிற்கும் - சிறியாநங்கை.
2. உச்சாடனம் : பேய், பிசாசு, கெட்ட ஆவிகள், நோய்கள் தீமைகளை விரட்டியடித்தல். இதற்கு பயன்படும் மூலிகைகள் 1. பேய் மிரட்டி, 2. மான் செவிகள்ளி, 3. தேள்கொடுக்கி, 4. கொட்டைகரந்தை, 5. வெள்ளை கண்டங்கத்திரி, 6. மருதோன்றி, 7. பிரமதண்டு, 8. புல்லுருவி ஆகும். இதில்
மிருகங்களை விரட்ட - பேய்மிரட்டி.
எதிரிகளை விரட்ட - மான்செவிகள்ளி.
உடலில் ஏறிய விஷங்களை விரட்ட - தேள்கொடுக்கி.
நீர்வாழ் உயிரனங்களை விரட்ட - கொட்டைகரந்தை.
கால்நடைகளை விரட்ட - வெள்ளை கண்டங்கத்தரி.
பூத பைசாசங்களை விரட்ட - மருதோன்றி, புல்லுருவி
பிறர் நமக்கு செய்யும் தீமகளை விரட்ட - பிரமதண்டு.
3. பேதனம் : ஒன்றை மற்றொன்றாக மாற்றுதல், அதாவது ஒரு விஷயத்தை நினைத்து நம்மிடம் வருபவரை அந்த நினைப்பை வேறுபட்டு போகும்படி செய்தல். இதற்கு பயன்படும் மூலிகைகள் 1. வட்டதுத்தி, 2. செம்பசளை, 3. மாவிலங்கு, 4. பாதிரி, 5. கோழியாவரை, 6. சீந்தில்கொடி, 7. புடலங்கொடி, 8. ஆகாயதாமரை ஆகும்.
நெருப்பின் உக்கிரத்தை பேதிக்க - வட்டதுத்தி,
மனிதனின் எண்ணத்தை பேதிக்க - செம்பசளை,
பூத, பிசாசுகளை பேதிக்க - மாவிலங்கு, பாதிரி,
துர்தேவதைகளை பேதிக்க - கோழியாவரை,
எதிரிகளை பேதிக்க - சீந்தில்கொடி,
பெண்களை பேதிக்க - புடலங்கொடி,
வியாதிகளை பேதிக்க - ஆகாயதாமரை.
4. மாரணம் : கொல்வது அல்லது மாற்றுவது. உலோகங்களை அதன் தன்மையில் இருந்து மாற்றுவது. எதிரிகளுக்கு நோயை உண்டாக்கி கொல்வது. இதற்கு பயன்படும் மூலிகைகள் 1. நச்சுப்புல், 2. நிர்விஷம், 3. சித்திரமூலம், 4. அம்மன் பச்சரிசி, 5. கார்த்திகை கிழங்கு, 6. மருதோன்றி, 7. கருஞ்சூரி, 8. நாவி ஆகும்.
மனிதர்களை மாரணம் செய்ய - நச்சுப்புல், நிர்விஷம்,
வியாதிகளை மாரணம் செய்ய - சித்திரமூலம், கருஞ்சூரை,
கண்ணாடிகளை மாற்ற - அம்மன் பச்சரிசி,
மிருகங்களை மாரணம் செய்ய - மருதோன்றி, கார்திகை கிழங்கு.
5. மோகனம் : பிறரை நம்மிடம் மயங்கி இருக்க செய்வது. இதற்கு பயன்படும் மூலிகைகள் 1. பொன்னூமத்தை, 2. கஞ்சா வேர், 3. வெண்ணூமத்தை, 4. கோரைக்கிழங்கு, 5. மருளூமத்தை, 6. ஆலமர விழுது, 7. நன்னாரி, 8. கிராம்பு ஆகும்.
பெண்களை மோகிக்க - பொன்னூமத்தை,
பொதுமக்களை மோகிக்க - கஞ்சா வேர்,
உலகத்தை மோகிக்க - வெண்ணூமத்தை,
விலங்குகளை மோகிக்க - கோரைக்கிழங்கு,
தேவதைகளை மோகிக்க - மருளூமத்தை,
அரசர்களை மோகிக்க - ஆலம்விழுது,
மனிதர்களை மோகிக்க - கிராம்பு,
எல்லாவற்றையும் மோகிக்க - நன்னாரி.
6. வசியம் : எல்லாவற்றையும் நம்மிடம் விருப்பமாகவும் இஷ்டமாயும் இருக்க வைத்தல். இதற்கு பயன்படு்ம் மூலிகைகள் 1. சீதேவிச் செங்கழுநீர், 2. நிலவூமத்தை, 3. வெள்ளை விஷ்ணுகிரந்தி, 4. கருஞ்செம்பை, 5. வெள்ளை குன்றி மணி, 6. பொன்ணாங்கன்னி, 7. செந்நாயுருவி, 8. வெள்ளெருக்கு ஆகும்.
இராஜ வசியத்திற்கு - சீதேவி செங்கழுநீர்,
பெண் வசியத்திற்கு - நிலவூமத்தை,
லோக வசியத்திற்கு - வெள்ளெருக்கு,
ஜன வசியத்திற்கு - கருஞ்செம்பை, விஷ்ணுகிராந்தி,
விலங்கு வசியத்திற்கு - வெள்ளை குன்றி மணி,
தேவ வசியத்திற்கு - பொனணாங்கன்னி,
சாபம், வழக்குகள் வசியத்திற்கு - செந்நாயுருவி.
7. வித்துவேஷனம் : பகையை உண்டாக்குதல். இதற்கு பயன்படும் மூலிகைகள். 1. கருங்காக்கனம், 2. வெள்ளை காக்கனம், 3. திருகு கள்ளி, 4. ஆடுதின்னாபாளை, 5. பூனைக்காலி, 6. கீழாநெல்லி, 7. ஏறண்டம், 8. சிற்றாமணக்கு ஆகும்.
அரசர்களுக்குள் பகை உண்டாக்க - கருங்காக்கணம்,
தேவர்களுக்கு - வெள்ளைக்காக்கணம், திருகுகள்ளி,
பூத, பைசாசங்களுக்கு - ஆடுதின்னாபாளை,
பெண்களுக்கு நோய் உண்டாக்க - பூனைக்காலி,
எதிரிகளால் உண்டாகும் ஆபத்தை தடுக்க - கீழாநெல்லி,
உணவை உண்ணாமல் செய்ய - சிற்றாமணக்கு.
8. தம்பனம் : தடுத்து நிறுத்துத்தல், விலங்குகளின் வாயை கட்டுதல். இதற்க்கு பயன்படும் மூலிகைகள் 1. கட்டுக்கொடி, 2. பால்புரண்டி, 3. பரட்டை, 4. நீர்முள்ளி, 5. நத்தைச்சூரி, 6. சத்தி சாரணை, 7. பூமிச்சர்கரை, 8. குதிரைவாலி ஆகும்.
விந்துவை கட்ட - கட்டுக்கொடி, பால்புரண்டி, நீர்முள்ளி,
தண்ணீரைக்கட்டி அதன் மேல் அமர - கட்டுக்கொடி,
பெண்களின் முலைபாலை கட்ட - பால்புரண்டி,
வயிற்றுப் போக்கை நிறுத்த - பரட்டை,
கற்களை கறைக்க - நத்தைச்சூரி,
செயல்களை செயல்படாமல் கட்ட - சத்திசாரணை,
திரவத்தை கட்டி திடமாக்க - பூமிச்சர்கரை கிழங்கு,
கருப்பையில் உள்ள கருவை கட்ட - குதிரைவாலி.
மேற்படி மூலிகைகளை உரிய நாளில் காப்பு கட்டி, சாபநிவர்த்தி மந்திரம் சொல்லி பிடுங்கி வந்து உரிய மந்திர உருவேற்றி மேற்பட்ட அஷ்டகர்ம செயல்களை செய்ய அனைத்தும் ஜெயமாகும்.
நன்றி :-http://tamiloccultscience.blogspot.in

சித்தர் ஸ்ரீ காகபுஜண்டர் வரலாறு !!!!!

அண்டசராசரங்களையும் ஆண்டுகொண்டிருக்கும் 'உமாமகேஸ்வரன்' தன் சொருபமாக தன்னால் படைக்கப்பட்ட மும்மூர்த்திகளாக விளங்கக் கூடிய பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் முதலாக முப்பத்து முக்கோடி தேவர்கள் எண்பத்தி எண்ணாயிரம் முனிவர்கள், நவகோடி சித்தர்கள், கின்னர்கள், கிம்புருடர்கள், காந்தர்வர், சித்தவித்யாதரர், எட்சர், அட்டதிக்கு பாலகர்கள், எண்ணாயிரம் வகைகளைக் கொண்ட உயிரினங்கள் போன்றவர்களுக்கெல்லாம் முக்கால வழிகாட்டுதல்களைஸ் செய்வதற்காக சிரஞ்சிவிஸ் சித்தராக ஸ்ரீ காகபுஜண்டரை இவ்வுலகில் படைத்தார்.
அண்டத்தின் இயக்ககங்களை நிர்ணயித்து, மும்மூர்த்திகள் முதலான அனைத்து தேவர்களின் எதிர்காலங்களையும் அறிந்து உரிய நேரத்தில் உரியவர்களுக்கு உரைத்து வழிகாட்டும் பொறுப்பையும் 'உமாமகேஸ்வரன்' காகபுஜண்டரிடத்திலே ஒப்படைத்துள்ளார். உலகத்தின் தெய்வீக சூட்சுமங்கள் குறித்து தேவசபையில் எழும் சந்தேககங்களுக்கு நிர்ணயமான உண்மை விளக்கங்களைக் கொடுத்து இவ்வுலகோர்க்கு வழிகாட்டக் கூடிய ஆற்றல் வாய்ந்த கடமைகளையும் செய்யுமாறு 'பரமேஸ்வரன்' காகபுஜண்டரை பணித்தார்.
உலகம் தோன்றிய நாளிலிருந்து இவ்வுலகில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் பற்றிய அனைத்து தேவரகசியங்களையும் பாதுகாத்து வைக்கும் படியான பொறுப்பையும் காகபுஜண்டரிடத்திலே ஒப்படைத்தார். அறுபத்தி நான்கு தெய்வீகக் கலைகளின் முழுசூட்சுமங்களையும் தன் ஆத்மாவில் பதிந்து கொண்டு உரிய நேரத்தில் உரியவர்களுக்கு உபதேசிக்க வேண்டும் என்கிற அருளாணையும் இறைவனால் காகபுஜண்டருக்கு வழங்கப்பட்டது. பலகோடி ஆண்டுகளாய் இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் அருள்குரு காகபுஜண்டர் தன்வழி வந்த பலகோடி சித்தர்களுக்கு பலகோடி தேவரகசியங்களை உபதேசித்துள்ளார். அவற்றுள் கொல்லிமலை கோரக்கச் சித்தருக்கு உபதேசம் செய்த தேவரகசியத்தின் ஒரு பகுதியாக தன்னுடைய பூரண வரலாற்றையும் காகபுஜண்டர் தானாகவே சுருக்கமாகக் கூறியிருக்கின்றார்.
காகபுஜண்டரின் தெய்வீக வரலாறு - கோரக்கச்சீடரின் பெருமை
அறம்பாடியம்மையை தன் இடப்பாகத்தில் சுமந்து கொண்டு சித்தர்களுக்கெல்லாம் அருள் மணம் பரப்பிக் கொண்டிருக்கும் இறைவன் அறப்பள்ளியீஸ்வரன் ஆட்சி செய்யும் பெருமையும் அருள்சித்தர்கள் பலர் ஜீவ நிலையில் குருவருள் கொடுத்துக் கொண்டிருக்கும் மகாபெருமையும் பெற்றதொரு திருப்தியாம் கொல்லிமலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் எனதருமை சீடனாகிய கோரக்கனே! அருளன்புடன் கேட்பாயாக உலகத்தில் வாழும் அனைத்து உயிர்களும் மேலான குருவால் ஆட்கொள்ளப்பட்டு இம்மை மறுமை வினைகளை நீக்கி வீடுபேறு பெறவேண்டும் என்பதற்காக இவ்வுலகத்தின் ஆதிகுருவாக படைக்கப்பட்ட என்னுடைய திவ்விய சரிதத்தை மிக சுருக்கமாக சொல்லுகிறேன், அன்புடன் கேட்பாயாக' என்று அருள்குரு காகபுஜண்டர் தன்னுடைய சீடருக்கு தன் தெய்வீக வரலாற்றை சொல்ல ஆரம்பிக்கின்றார்.
மும்மூர்த்திகள் தோற்றம்:
ஆதியிலே உலகத்தின் ஆதிசக்தியாக விளங்கக்கூடிய ஆதிபராசக்தியானவள் தன் சக்தியை ஆள்வதற்காக பிரம்மா, விஷ்ணு, சிவன் என்னும் மும்மூர்த்திகளைப் படைத்தாள். மும்மூர்த்திகளையும் இயங்குவதற்காக தன் சக்தியின் ரூபமாக சரஸ்வதி, லட்சுமி, ஈஸ்வரி என்னும் மூன்று சக்திகளைப் படைத்தாள். பிரம்மாவிற்கு சரஸ்வதியையும், விஷ்ணுவிற்கு லட்சுமியையும், சிவனுக்கு ஈஸ்வரியையும் மணம் செய்வித்தாள். பிரம்மாவிற்கு படைக்கும் தொழிலையும் கொடுத்து, மும்மூர்த்திகளும் தத்தம்தேவிகளோடு சேர்ந்து இவ்வுலகை ஆளவேண்டுமாய் கட்டளையிட்டாள். மும்மூர்த்திகளுக்கும் தலைவனாய் முக்கண் படைத்த சிவபெருமானை தன்னுடைய ரூபமாகிய பார்வதியுடன் கூடி இவ்வுலகை ஆளப்பணித்தாள்.
சரஸ்வதியின் தவம்:
மும்மூர்த்திகளின் தொழிலுக்கெல்லாம் ஆதியான தொழிலாக விலங்கக்கூடிய படைக்கும் தொழிலை ஏற்றுக் கொண்ட பிரம்மன் தன் மனைவியான சரஸ்வதியுடன் கூடி தான் எப்படி இவ்வுலகையும் இவ்வுலகில் வாழ்வதற்குண்டான உயிர்களையும் அவர்களை ஆள்வதற்கான தேவர்களையும் படைக்கப் போகிறேன்? எனக்கு ஒன்றும் புரியவில்லையே! எனக்கு யாராவது வழிகாட்ட வேண்டும்! நான் எப்படி அந்த வழிகாட்டுதலைப் பெறுவேன்? என்று பல சந்தேகங்களைக் கிளப்பி தன் மனைவியான சரஸ்வதியிடம் முறையிட்டான். தன் கணவனின் எண்ணத்தை புரிந்து கொண்ட கலைவாணி முத்தொழில்களுக்கும் தலைவனாக விளங்கக்கூடிய உமாமகேஸ்வரனைத் துதித்து கடும் தவம் இயற்றினார். தவத்திற்கு மெச்சிய இறைவன் தன் மனைவி உமாமகேஸ்வரியோடு கலைவாணிக்கு காட்சிக் கொடுத்து, "அம்மையே! உம் தவத்திற்கு மெச்சினோம்! உன் கணவன் பிரம்மன் தன் தொழிலை நல்ல முறையில் செய்வதற்கு வழிகாட்டுதற்காக சிரஞ்சீவியாக உலகத்தின் ஆதிகுருவாக விளங்கக்கூடிய ஓர் ஞான குழந்தையை உமக்கு அளிக்கிறேன்! பெற்றுக் கொள்! என்று சொல்லி தன் நெற்றிக் கண்ணிலிருந்து ஒரு கதிர்வீச்சினை சரஸ்வதின் மடியின் மீது செலுத்தினார் உமாமகேஸ்வரன்.
காகபுஜண்டர் தோற்றம்:
பல ஆயிரம் சூரியர்களை ஒன்றடக்கிய அருளொளி கொண்டு; காதில் கவச குண்டலம் தரித்துக் கொண்டு; கழுத்தில் ருத்திராட்ச மாலை அணிந்து கொண்டு; தன் வலப்பாகத்தில் மேல் நோக்கியவாறு நான்கு கைகளும் கீழ் நோக்கியவாறு நான்கு கைகளும், அவ்வாறாகவே தன் இடப்பாகத்தில் மேல் நோக்கியவாறு நான்கு கைகளும், கீழ் நோக்கியவாறு நான்கு கைகளுமாக கொண்டு; தன்னுடைய பதினாறு திருக்கங்களிலும் சிரஞ்சீவி காப்புகள் அணிந்து கொண்டு, பொற்றாமரை மலர் மீதமர்ந்து கொண்டு, நெற்றிக் கண்ணுடன் கலைவாணியின் மடியின் மீது காகபுஜண்டராகிய நான் அவதரித்தேன்.
மும்மூர்த்திகளும் பொன்மலர் பொழிந்து ஆசிர்வதித்து, உலகத்த்தின் ஆதிகுருவாகிய காகபுஜண்டரென்னும் ஞானக்குழந்தையாகிய எம்மை வணங்கினார்கள். என்னுடைய உடலின் வலபாகத்தில் மேல்நோக்கியவாறு அமைந்த நான்கு கரங்களில் சூலாயுதம், எழுத்தாணி, ஞான ஒளி, அபயம் போன்றவைகள் அமைந்திருந்தது. என்னுடைய உடலின் வலபாகத்தில் கீழ்நோக்கியவாறு அமைந்த நான்கு கரங்களில் காமதேனு, வீணை, காகம், அஞ்சனம் போன்றவைகள் அமைந்திருந்தது. என்னுடைய உடலின் இடப்பாகத்தில் மேல்நோக்கியவாறு அமைந்த நான்கு கரங்களில் வேலாயுதம், தண்டாயுதம், வரதம், செந்நாகம் போன்றவைகள் அமைந்திருந்தது. என்னுடைய உடலின் இடபாகத்தில் கீழ்நோக்கியவாறு அமைந்த நான்கு கரங்களில் சுருதிநூல் (ஓலைச்சுவடி), புண்ணிய கலசம், அட்டசித்தி முத்திரை, யோகத்தண்டு போன்றவைகள் அமைந்திருந்தது.
பிரம்மனின் படைப்புத் தொழில் ஆரம்பம்:
நான், என் பிறப்பிற்குக் காரணமான என் தாய், தந்தையரான சரஸ்வதியையும் பிரம்மதேவனையும் வணங்கி அவர்களின் ஆசிபெற்றேன். எம்முடைய தோற்றத்தைக் கண்டு ஆனந்தம் கொண்டு என் பெற்றோர் பூரிப்படைந்தனர். நான், என் தந்தை பிரம்மதேவனுக்கு உலகின் படைப்பு ரகசியங்களை உபதேசம் செய்தேன். என் அன்பு உபதேசங்களை ஏற்றுக் கொண்டு என் தந்தை பிரம்மதேவன் தேவர்கள் முதலான அனைத்து உயிரனங்களையும் இவ்வுலகில் படைத்து பெருமகிழ்வெய்தினார்.
கற்பகவிருட்சத்தில் காகபுஜண்டர்:
நான் என் கரத்திலமர்ந்த காமதேனுவை நோக்கினேன், அவள் கற்பகவிருட்சமரத்தை உண்டு பண்ணி அதன் மீதமர்ந்து இவ்வுலகிற்கு வழிகாட்ட வேண்டுமாய் எம்மை வேண்டினாள். காமதேனுவின் விருப்பப்படி அந்தநாள் முதல் கற்பகத்தருவின் மீதமர்ந்து தேவர்கள், முனிவர்கள், சித்தர்கள், மனிதர்கள், விலங்குகள், பறவைகள் போன்ற ஈரேழு பதினான்கு லோகங்களிலும் உள்ள நைத்து உயிரனங்களுக்கும் நான் வழிகாட்டிக் கொண்டிருக்கிறேன். மும்மூர்த்திகளூக்கும் ஏற்படக்கூடிய சந்தகங்களைத் தெளிவித்துக் கொண்டு இவ்வுலகின் ஆதிகுருவாக இவ்வுலகை நான் அருளாட்ச்சி செய்து கொண்டிருக்கிறேன். முப்பத்து முக்கோடி தேவர்களும், எண்பத்தி எண்ணாயிரம் முனிவர்களும், கின்னர்களும், கிம்புருடர்களும், சித்தவித்யாதரர்களூம், அட்டவசுக்களும், அட்டதிக்கு பாலகர்களும், நவகிரகங்களும், காவல் தெய்வங்களும், பஞ்சபூதங்களும், மற்றும் பலகோடி சித்தர்களும் என்னிடம் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு உலகங்களில் பலமுறை உபதேசம் பெற்றிருக்கிறார்கள். பலகோடி யுகங்களாய், பல கற்ப காலங்களாய் இவ்வுலகிற்கு வழிகாட்டிக் கொண்டு நான் சிரஞ்சீவியாக வாழ்ந்து கொண்டு வருகிறேன்.
யுகாந்திர தர்மங்கள், வேதங்கள், மந்திரங்கள், சாஸ்திரங்கள், ஞானதத்துவங்கள், அறுபத்து நான்கு கலைகள், தேவபுராணங்கள் போன்ற அனைத்து கல்விகளும் சரஸ்வதியின் அன்புடன் இவ்வுலகிற்கு எம்மால் உணர்த்தப்பட்டவையே. அண்டசராசரங்களின் கடந்தகால, நிகழ்கால மற்றும் எதிர்கால இயக்கங்கள் அனைத்தையும் நானறிவேன்.
சம்புகமுனிவரின் தவம்:
ஒரு சதுர்யுகக் காலம் நான் இவ்வுலகில் வாழ்ந்து வழிகாட்டிய பிறகு அடுத்த சதுர்யுகம் ஆரம்பித்தது. இரண்டாவது சதுர்யுகத்தில் வீரத்தை இவ்வுலகில் நிலைநிறுத்தி தர்மத்தை அடிப்படையாகக் கொண்டு இவ்வுலகோர் வாழவும் அதர்மம் அழியவும் வேண்டி கயிலாயத்திலே உமாமகேஸ்வரன் தன்னுடைய தேவியோடு கமலாச்சிதேவியுடனாய சம்புகமுனிவருக்கு காட்சி கொடுத்து, "தவப்புத்திரரே! உமது தவத்திற்கு மெச்சினோம்! உமது எண்ணம் ஈடேறி இவ்வுலகில் தர்ம்மானது சிரஞ்சீவியாக நிலைத்து ஓங்கி வாழ்வதற்காக சிரஞ்சீவியாக ஒரு ஞானக் குழந்தையை உமக்கு அளிக்கிறேன். இக்குழந்தைக்கு பகுளாதேவி என்று பெயரிட்டு யாம் முன்னரே நியமித்தபடி சரஸ்வதியின் அன்பு புத்திரனாக சிரஞ்சீவியாக வாழக்கூடிய காகபுஜண்டருக்கு மணம் முடித்து உங்கள் இச்சையை தீர்த்துக் கொள்வீர்களாக! " என்று கட்டளையிட்டார். உமாமகேஸ்வரி தன் நெற்றிக் கண்ணிலிருந்து ஒரு கதிர்வீச்சினை கமலாச்சியின் மடியின் மீது செலுத்தினாள்.
பகுளாதேவி தோற்றம்:
பல ஆயிரம் சந்திரர்களை ஒன்றடக்கிய அருளொளி கொண்டு, காதில் கவச குண்டலம் தரித்துக் கொண்டு; கழுத்தில் நவரத்தின மணிகளை அணிந்து கொண்டு; தன் வலபாகத்தில் மேல் நோக்கியவாறு நான்கு கைகளும் கீழ்நோக்கியவாறு நான்கு கைகளும் அவ்வாறாகவே தன் இடப்பாகத்தில் மேல் நோக்கியவாறு நான்கு கைகளும்; கீழ்நோக்கியவாறு நான்கு கைகளுமாக பதினாறு திருக்கரங்களைக் கொண்டு; தன்னுடைய பதினாறு திருகரங்களிலும் சிரஞ்சீவிக் காப்புகள் அணிந்து கொண்டு; பொற்றாமரை மலர் மீதமர்ந்து கொண்டு நெற்றிக் கண்ணுடன் கமலாச்சி தேவியின் மடியின் மீது பகுளாதேவி திருஅவதாரம் செய்தாள்.
மும்மூர்த்திகளும் பொன்மலர் பொழிந்து பகுளாதேவியை ஆசீர்வதித்தார்கள். உலகத்தின் ஆதி குருபத்தினியாகவும் தர்மசொரூபினியாகவும் விளங்கக் கூடிய ஞானசக்தியாக பகுளாதேவியை முமூர்த்திகளும் வணங்கினார்கள். பகுளாதேவியின் உடலின் வலபாகத்தில் மேல் நோக்கியவாறு அமைந்த நான்கு கரங்களில் வேலாயுதம், தண்டாயுதம், வரதம், கருநாகம் போன்றவைகள் அமைந்திருந்தது. பகுளாதேவியின் உடலின் வலப்பாகத்தில் கீழ்நோக்கியவாறு அமைந்த நான்கு கரங்களில் சுருதிநூல்(ஓலைச்சுவடி), புண்ணிய கலசம், அட்டசித்தி முத்திரை யோகத்தண்டு போன்றவைகள் அமைந்த நான்கு கரங்களில் சூலாயுதம், எழுத்தாணி, ஞானவொளி, அபயம் போன்றவைகள் அமைந்திருந்தது. பகுளாதேவியின் உடலின் இடபாகத்தில் கீழ்நோக்கியவாறு அமைந்த நான்கு கரங்களில் காமதேனு, வீணை, அன்னம், அஞ்சனம் போன்றவைகள் அமைந்திருந்தது. பகுளாதேவி தன் தாய் தந்தையரான சம்புகமுனிவரையும் கமலாச்சி தேவியையும் வணங்கினாள். சம்புக முனிவர் தன் மனைவி கமலாச்சி தேவியோடு தன் ஞானமகளை ஆசீர்வதித்து மிகவும் மகிழ்ச்சியடைந்தார். பகுளாதேவி தன் தந்தையாருக்கு அதர்மத்தை அழிக்கும் உபாயங்களையும் வீரதத்துவத்தின் சூட்சுமங்களையும் உபதேசித்துக் கொண்டு நாளொடு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்து வரலானாள்.
காகபுஜண்டர் - பகுளாதேவி திருமணம்:
ஒருநாள் என் தாய் சரஸ்வதி தேவியானவள் எனக்குத் திருமணம் செய்ய ஆவல்கொண்டு அதற்கான மார்கங்களையும் எம்மிடமே கேட்டாள். நான் ஞானத்தின் வழியாக எமக்கென்று இறைவனால் சம்புகமுனிவருக்கு பகுளாதேவி மகளாகப் பிறந்திருப்பதையும் அவளை மணந்து கொள்ளும் காலத்தையும் என் தாயாருக்கு உணர்த்தினேன். என் தாய் சரஸ்வதி தேவியானவள் முமூர்த்திகளையும், மூன்று வேதியர்களையும் அழைத்துக் கொண்டு கயிலாயத்தில் ' சம்புகிரி ' என்னும் மலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் சம்புகமுனிவரின் ஆசிரமத்திற்குச் சென்றார்கள்.
தேவர்கள் புடைசூழ வந்த கலைமகளை கமலாச்சிதேவியும் சம்புகமுனிவரும் வணங்கி வரவேற்று உபசரித்தார்கள். முமூர்த்திகளுள் ஒருவராகிய மகாவிஷ்ணு தாங்கள் வந்ததின் நோக்கத்தை சம்புகமுனிவருக்கு தெளிவுபடுத்த சம்புகமுனிவரும் அதற்கு இயைந்து எனக்கும் பகுளாதேவிக்கும் திருமணம் நிச்சயித்தார்கள். மகரத் திங்கள் (தைத்திங்கள்) பூச நட்சத்திரம், மீனலக்கினம், சுக்கிர வாரம், பஞ்சமி திதி கூடிய சுபயோக சுபதினத்தில் மகேஸ்வரன் அரசாட்சி செய்யும் திருக்கயிலை தேவசபையில் எங்கள் திருமணம் நடந்தது. தேவர்களனைவரும் வருகை தந்து எங்களை ஆசீர்வதித்து எங்களையும் வணங்கி எங்களின் ஆசீர்வாதங்களையும் பெற்றுச் சென்றார்கள். என் தாய் கலைவாணியே வேதியராக அமர்ந்து யாகங்கள் முதலான அனைத்து சடங்குகளையும் செய்து எங்கள் திருமணத்தை நடத்தி வைத்தார்கள்.
ஆதிகுருவாக பகுளாதேவியுடன் காகபுஜண்டர்:
உமாமகேஸ்வரனும் உமாமகேஸ்வரியும் எங்கள் இருவரையும் அணைத்து இருவரின் நெற்றிக் கண்ணிலும் முத்தமிட்டு சிவசக்திகலைகளை ஆசீர்வதிதார்கள். அன்று முதல் என் தேவி பகுளாதேவி என் வலபாகத்தில் அமர்த்திக் கொண்டு கற்பகவிருட்சத்தின் மேலமர்ந்து இவ்வுலகில் அருளாட்சி செய்து கொண்டு வாழ்ந்து வருகின்றேன்.
இவ்வுலக உயிர்களுக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கிறோம். பலகோடி ஆண்டுகள் கடந்த என் வாழ் நாட்களில் பல தவங்களுக்குச் சென்று நான் என் தேவியோடு அருள்காட்சிகள் கொடுத்திருக்கின்றேன். ஒரே நேரத்தில் பல்லாயிரம் உயிர்களுக்கு வெவ்வெறு உலகங்களில் வெவ்வெறு இடங்களில் வெவ்வெறு ரூபங்களில் வழிகாட்டும் தெய்வீக சக்தியை படைத்தவன் நான். என்னை வழிபாடு செய்பவர்களுக்கு இவ்வுலகின் அனைத்து சூட்சுமங்களையும் உணர்த்தி பிறப்பின் எல்லா பயங்களையும் பெறும்படியாக ஆசீர்வதித்துக் கொண்டிருக்கிறேன். ஒரு உயிர் தானெடுக்கும் ஏதாவதொரு பிறவியில் எம்மை வணங்கி ஆசீர்வாதம் பெற்றுவிட்டால் அவ்வுயிருக்கு கற்பக விருட்சமாக ஞானங்களை வழங்கி அவ்வுயிரைக் கரையேற்றஸ் செய்யும் உலகத்தின் ஆதிகுரு நானேயாவேன். நான் அகாரபீடத்தில் அமர்ந்து கொண்டு இவ்வுலகை அருளாட்சி செய்து கொண்டிருக்கின்றேன். அகரத்தை அடிப்படையாகக் கொண்டு எழுத்துக்கள் வாழ்வதைப்போல் அகாரபீடத்தைக் கொண்ட என் குருவருளை அடிப்படையாகக் கொண்டு இவ்வுலக உயிர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. எனவே, உலகத்தின் ஆதிகுரு நானேயாவேன்.
காகபுஜண்டர் முமூர்த்திகளுக்கு உபதேசித்தல்:
மகாபிரளயங்கள் வரும் பொழுது முமூர்த்திகளுள் இருவர்களாகிய பிரம்மா, விஷ்ணு ஆகிய இருவர்களும் சிவனின் மகாபிரளய அவதாரமாக விளங்கக் கூடிய காயாரோகணீஸ்வரனிடத்தில் ஒடுங்குவார்கள். மகாபிரளயம் முடிந்தபிறகு கிருதயுகம் ஆரம்பித்தவுடன் ஒடுக்கத்திலிருந்து பிரம்மா, விஷ்ணு போன்ற இருமூர்த்திகளும் மகாசிவத்திலிருந்து பிறப்பார்கள். மீண்டும் மூன்று மூர்த்திகளும் மூன்று தேவியர்களும் தாங்கள் இவ்வுலகில் ஆற்றவேண்டிய கடமைகளை அறிந்து கொள்வதாற்காக கைலாயத்தில் தேவசபையைக் கூட்டி மகாசிவனின் உத்திரவுப்படி எம்மை அழைப்பார்கள். இவ்வுலகில் முமூர்த்திகளும் அவர்களது தேவியர்களும் ஆற்றவேண்டிய கடமைகளையும் அவர்களின் முற்பிறப்பு உண்மைகளையும் நான் என் மனைவியோடு சேர்ந்து மும்மூர்த்திகளுக்கு உபதேசிப்பேன்.
நான் உபதேசம் செய்கின்றபொழுது மும்மூர்த்திகளும் என்னை வணங்கி என்னை குருபீடத்தில் அமரச்செய்து அன்பின் மிகுதியால் எம்பீடத்திற்கு கீழான பீடத்திலமர்ந்து கொண்டு என் உபதேசதைக் கேட்பார்கள். எம்முடைய உபதேசத்தை பிரம்மாவானவர் பிரம்மபாலன் சொரூபத்திலும், விஷ்ணுவானவர் கோபாலன் சொரூபத்திலும், சிவனானவர் பைரவபாலன் சொரூபத்திலும் கேட்டு இன்புருவார்கள்.
மும்மூர்த்திகளுக்கும் நான் உபதேசம் செய்த பிறகு இவ்வுலகில் பிரம்மாவானவர் தேவர்கள் முதலான அனைத்து உயிர்களையும் படைப்பார். பிரம்மனின் படைப்பை பிரம்மாவோடு சேர்ந்து விஷ்ணுவும் சிவனும் ஆட்சி கொள்வார்கள்.
தேவர்களூக்கெல்லாம் பிரம்மாவானவர் தன் உபதேச சொரூபமாகிய வேதமூர்த்தி ரூபத்தில் இவ்வுலக ரகசியங்களையெல்லாம் உபதேசிக்கின்றபொழுது அவர்கீழமர்ந்து அனைத்து தேவர்களும் உபதேசம் பெற்று அதன்படி இவ்வுலக இயக்கங்களை செய்வார்கள். வைகுண்டத்தில் திருமால் ஆளுகையின் கீழமர்ந்த அனைத்து தேவர்களுக்கெல்லாம் விஷ்ணுவானவர் தன் உபதேச சொரூபமாகிய கிருஷ்ணமூர்த்தி ரூபத்தில் இவ்வுலக ரகசியங்களையெல்லாம் உபதேசிக்கின்ற பொழுது அவர்கீழமர்ந்து வைகுண்டவாசம் செய்யும் அனைத்து தேவர்களும் உபதேசம் பெற்று அதன்படி இவ்வுலக இயக்கங்களை செய்வார்கள். கைலாயத்தில் மகாசிவனின் ஆளுகையின் கீழ் அமைந்த தேவர்கள், முனிவர்கள், சித்தர்கள் போன்றவர்களுக்கெல்லாம் மகாசிவன் தன்னுடைய உபதேச சொரூபமாகிய தட்சணாமூர்த்தி ரூபத்தில் இவ்வுலக ரகசியங்களையெல்லாம் உபதேசம் செய்கின்றபொழுது அவர்கீழ் அமர்ந்து அனைத்து தேவர்கள், முனிவர்கள், சித்தர்கள் போன்றவர்களையெல்லாம் உபதேசம் பெற்று அதன்படி இவ்வுலக இயங்களைச் செய்வார்கள்.
இவ்வாறாக பிரம்மனருளால் தேவர்களால் படைக்கப்படும் அனைத்து சிறு தேவர்களும் அவர்களின் படைப்புக்குக் காரணமான தேவர்கள் மூலம் அதற்குத் தொடர்புடைய மூன்று உபதேச சொரூபங்களாக விளங்கக்கூடிய வேதமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி மற்றும் தட்சணாமூர்த்தி போன்ற ஏதாவதொரு குருசொரூபம் மூலம் குரு உபதேசம் கொடுக்கப்பட்டு இவ்வுலகம் ஆட்சி செய்யப்படுகிறது.
ஈ, எறும்பு முதலான எண்பத்தி எண்ணாயிரம் ஜீவராசிகளுக்கும் அவ்வாறாகவே அவ்வுயிர்களின் படைப்புக் காரணத் தொடர்புடைய குருசொரூபத்தால் குரு உபதேசம் செய்யப்படுகிறது. ஒரு சதுர்யுகத்தில் முதலாவதாக வரும் கிருதாயுகத்தில் ஊழ்வினை விலக்கு அளிக்கப்பட்டு எல்லா உயிர்களுக்கும் பூரண சுதந்திரம் அளிக்கப்படுகின்றது. தர்மத்தை வழுவாமல் தேவர்களும் மற்ற உயிர்களும் வாழ்வதற்கு அனைத்து வசதிகளும் இன்பங்களும் இறைவனால் அளிக்கப்பட்டு பதினான்கு லோகங்களையும் உள்ளடக்கிய இவ்வுலகம் ஆளப்படுகிறது. கிருதாயுகத்தில் கடைசியாகப் பெற்ற பிறவியில் செய்கின்ற பாவங்கள் மட்டும் அவ்வுயிர்களின் வினையேட்டில் பதிக்கப்படுகிறது.
கிருதாயுகம் முடிந்து திரேதாயுகம் ஆரம்பித்த பிறகு முற்பிறவியில் செய்த பாவ புண்ணியங்களின் அடிப்படையில் பிறவி தரப்படுகின்றது. வினையின் அடிப்படையில் அமைந்த அப்பிறவி முதல் கலியுகம் முடிகின்ற வரை அவ்வுயிர் செய்கின்ற நல்வினை மற்றும் தீவினைகளை அடிப்படையாகக் கொண்டே உயர்வும் தாழ்வும் இறைவனால் ஏற்படுத்தப்படுகின்றது. வினைகளை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு உயிரும் தனக்கென்று பிரத்யேக தேவர்களையும், முனிவர்களையும் சித்தர்களையும் வழிபாடு செய்கின்ற பொழுது அந்தந்த தேவர்களாலும், முனிவர்களாலும், சித்தர்களாலும் அந்தந்த உயிர்களுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ உபதேசம் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு உயிரின் வினையின் வீரியத்தை அடிப்படையாகக் கொண்டு உபதேசத்தின் நிலைகளும் மாற்றம் பெறுகின்றது. எந்த அளவிற்கு ஓர் உயிர் நல்வினையைக் கொண்டுள்ளதோ அந்த அளவிற்கு உயர்நிலை ஞானங்களையும் உபதேசங்களையும் அந்த உயிரால் பெறப்படுகிறது. இவ்வாறாகவே அனைத்து முனிவர்களும், தேவர்களும், சித்தர்களும், அவரவர்களை வணங்குபவர்களுக்கு உரிய உபதேசங்களைக் கொடுத்துக் கொண்டிருகிறார்கள். இவ்வாறாகவே எம்மை வழிபடுவோர்களுக்கும் உலகத்தின் மூலகுருவாகிய நானும் நேரடியாகவும், மறைமுகமாகவும் எம் வழிவந்த சீடர்களுக்கு உபதேசம் செய்து கொண்டு வருகிறேன்.
காகபுஜண்டர் சகல உயிர்களுக்கும் உபதேசித்தல்:
பலகோடி யுகங்களாய், பல கற்ப காலங்களாய் எம் வழிவந்த கோடான கோடி தேவபுருடர்கள், ஞானிகள், சித்தர்கள், முனிவர்கள், மிருகங்கள், பறவைகள், பாம்புகள் முதலான ஒன்று முதல் ஆறு அறிவு வரை படைத்த அனைத்து உயிர்களுக்கும் நான் இதுவரை உபதேசம் செய்துள்ளேன், தொடர்ந்து உபதேசங்களை செய்துகொண்டும் இருக்கின்றேன். பல கற்ப காலங்கள் கடந்த எம் வாழ்க்கையில் பல கோடி விசித்திரங்களை நான் இவ்வுலகின் பார்த்திருக்கிறேன். பூலோகம் மட்டுமன்றி பிற பதிமூன்று லோகங்களிலும் பலகோடி தேவ இன உயிர்களுக்கும் நான் உபதேசம் செய்திருக்கின்றேன். ஈரேழு பதினான்கு லோகங்களிலும் என் அரசாட்சி பல கோடியுகங்களாய் குறைவின்றி நடந்து வருகின்றது. கிருதா யுகத்தில் "தேவமதம்" என்னும் பொதுப் பெயரால் ஒரேயொரு மதம் மட்டும் வாழ்ந்து தர்மம் தழைத்தோங்கும் உயர்நிலைக் கொண்டு பதினான்கு உலகங்களும் வாழ்வதை பலமுறை பார்த்திருக்கின்றேன். துவாபரா யுகத்தில் ஒன்பதாயிரம் மத பேதங்களைக் கொண்டு இவ்வுலகம் வாழ்வதை பலமுறை பார்த்திருக்கிறேன். கலியுகத்தில் பதினெட்டாயிரம் மதபேதங்களை கொண்டு இவ்வுலகம் வாழ்வதை நான் பலமுறை பார்த்திருக்கின்றேன். வெவ்வேறு சதுர்யுகங்களிலும் வெவ்வேறு வேற்றுமைகளைக் கொண்ட ஒரே ஒற்றுமை மூலங்களைக் கொண்டு தேவர்களும், சித்தர்களும், முனிவர்களும், யோகிகளும், ஈ, எறும்பு முதலான எண்பத்தி எண்ணாயிரம் வகை ஜீவராசிகளும், இறை அவதாரங்களும், புராணங்களும், தத்துவங்களும், வேதங்களும், கலைகளும் இவ்வுலகில் தோன்றுவதும் இறுதியில் மறைவதும் மீண்டும் தோன்றுவதுமாகிய சுழற்சி விளையாட்டுக்கள் இவ்வுலகில் நிகழ்வதை நான் பலகோடி ஆண்டுகளாய் பார்த்துக் கொண்டிருக்கின்றேன். ஒவ்வொரு தேவபுருடர்களையும் அடுத்தடுத்த பிறவிகளில் கண்டு அவர்க்ளை ஆசீர்வதித்து அவர்களுக்கு இது எத்தனையாவது பிறவி என்ற விவரத்தை சொல்லி அவர்களை ஆச்சர்யப்பட வைத்திருக்கிறேன். எல்லா யுகங்களிலும், எல்லா லோகங்களிலும், எல்லா வடிவங்களிலும் நான் ஆதிகுருவாக அருளாட்சி செய்து கொண்டு வருகிறேன்.
காகபுஜண்டரின் பதினாறு திருப்பெயர்கள்:
உலகத்தின் ஆதிகுருவாகிய எனக்கு பதினாறு திருப்பெயர்கள் உண்டு. அவையாவன.
1. காகபுஜண்டன்
2. நாகபுஜண்டன்.
3. யோகபுஜண்டன்.
4. புஜங்கன்.
5. புஜண்டி
6. காக்கையன்.
7. நாகேந்திரமுனி.
8. மனுவாக்கியன்.
9. காலாமிர்தன்.
10. சஞ்சீவிமுனி.
11. அஞ்சனாமூர்த்தி.
12. கற