Sunday, October 5, 2014

சபரிமலை பதினெட்டுப் படிகள் தத்துவம்

சபரிமலை தர்ம சாஸ்தாவின் பதினெட்டுப் படிகள் உணர்த்தும் தத்துவம்.
1. காமம்: 
பற்று உண்டானால் பாசம், மோகம் ஏற்பட்டு புத்தி நாசமடைந்து அழிவு ஏற்படுகிறது.
2. குரோதம்:
கோபம் குடியைக் கெடுத்து, கொண்டவனையும் அவன் சுற்றத்தையும் சேர்த்து அழித்து விடும்.
3. லோபம்:
பேராசைக்கு இடம் கொடுத்தால் இருப்பதும் போய்விடும். ஆண்டவனை அடைய முடியாது.
4. மதம்:
யானைக்கு மதம் பிடித்தால் ஊரையே அழித்து விடும். அந்த யானையை அப்போது யாராவது விரும்புவார்களா? அதுபோல் வெறி பிடித்தவனை ஆண்டவன் வெறுத்துவிடுவான்.
5. மாத்ஸர்யம்:
மனதில் பொறாமையை நிலைநிறுத்தி வாழ்பவனுக்கு, வேறு பகையே வேண்டாம். அதுவே அவனை அழித்துவிடும்.
6. டம்பம் (வீண் பெருமை):
அசுர குணமானது நமக்குள் இருக்கக்கூடாது.
7. அகந்தை:
தான் என்ற அகந்தை கொண்டவன் ஒரு போதும் வாழ்வில் முன்னேற முடியாது. அகந்தை என்பது முடிவில்லா ஒரு சோகச்சுமை.
8. சாத்வீகம்:
விருப்பு, வெறுப்பு இன்றி கர்மம் செய்தல் வேண்டும்.
9. ராஜஸம்:
அகங்காரத்தோடு கருமம் செய்தல் கூடாது.
10. தாமஸம்:
அற்ப புத்தியை பற்றி நிற்பது. மதி மயக்கத்தால் வினை செய்வது.
11. ஞானம்:
எல்லாம் ஆண்டவன் செயல் என்று அறியும் பேரறிவு.
12. மனம்:
நம்மனம் கெடாது, பிறர் மனம் வருந்தாது வாழவேண்டும். எப்போதும் ஐயன் நினைவே மனதில் இருக்க வேண்டும்.
13. அஞ்ஞானம்:
உண்மைப் பொருளை அறிய மாட்டாது மூடி நிற்கும் இருள்.
14. கண்:
ஆண்டவனைப் பார்க்கவும், ஆனந்தக் கண்ணீர் உகுக்கவுமே ஏற்பட்டது.
15. காது:
ஆண்டவனின் மேலான குணங்களைக் கேட்டு, அந்த ஆனந்தக் கடலில் மூழ்க வேண்டும்.
16. மூக்கு:
ஆண்டவனின் சன்னதியிலிருந்து வரும் நறுமணத்தை முகர வேண்டும்.
17. நாக்கு:
கடுஞ் சொற்கள் பேசக்கூடாது.
18. மெய்:
இரு கரங்களால் இறைவனை கைகூப்பித் தொழ வேண்டும். கால்களால் ஆண்டவன் சன்னதிக்கு நடந்து செல்ல வேண்டும். உடல் பூமியில் படும்படி விழுந்து ஆண்டவனை நமஸ்கரிக்க வேண்டும்.
இந்தப் பதினெட்டு வித குணங்களில் நல்லவற்றைப் பின்பற்றியும், தீயவற்றைக் களைந்தும் வாழ்க்கைப்படியில் ஏறிச் சென்றால்தான் இறைவன் அருள் நமக்குக் கிடைக்கும்.
இவையே சபரிமலை தர்ம சாஸ்தாவின் பதினெட்டுப் படிகள் உணர்த்தும் தத்துவம்
... Courtesy: Sasithara Sharma

காரிய சித்தி மாலை

நினைத்த காரியங்கள் நிறைந்த வெற்றி பெற, காஸ்யப முனிவர் அருளி, கச்சியப்பர் மொழி பெயர்த்த, காரிய சித்தி மாலையைப் பாராயணம் செய்தால், விநாயகப் பெருமான் அருளால், எண்ணிய யாவையும் திண்ணமாக நடக்கக் காணலாம்.
மூன்று தினங்கள், மூன்று சந்தி வேளைகளிலும், (காலை 6 மணி, மதியம் 12 மணி, மாலை 6 மணி) பக்தியுடன் பாராயணம் செய்ய, நினைத்த காரியங்கள் நடப்பது உறுதி என நூற்பயன் கூறுகிறது.
பந்தம் அகற்றும் அநந்தகுணப்
பரப்பும் எவன்பால் உதிக்குமோ
எந்த உலகும் எவனிடத்தில்
ஈண்டி இருந்து கரக்குமோ
சந்தமறை ஆகமங் கலைகள்
அனைத்தும் எவன்பால் தகவருமோ
அந்த இறையாம் கணபதியை
அன்பு கூரத் தொழுகின்றோம்.
உலக முழுவதும் நீக்கமற
ஒன்றாய்நிற்கும் பொருள் எவன்அவ்
உலகிற்பிறக்கும் விகாரங்கள்
உறாதமேலாம் ஒளியாவன்
உலகம் புரியும் வினைப் பயனை
ஊட்டும் களைகண் எவன் அந்த
உலக முதலைக் கணபதியை
உவந்து சரணம் அடைகின்றோம்.
இடர்கள் முழுதும் எவனருளால்
எரிவீழும் பஞ்சென மாயும்
தொடரும் உயிர்கள் எவனருளால்
சுரர்வாழ் பதியும் உறச்செய்யும்
கடவுள் முதலோர்க்கு ஊறின்றி
கருமம் எவனால் முடிவுறும் அத்
தடவுமருப்புக் கணபதி பொன்
சரணம் சரணம் அடைகின்றோம்.
மூர்த்தியாகித் தலமாகி
முந்நீர் கங்கை முதலான
தீர்த்தமாகி அறிந்தறியாத்
திறத்தினாலும் உயிர்க்கு நலம்
ஆர்த்தி நாளும் அறியாமை
அகற்றி அறிவிப்பான் எவன்அப்
போர்த்த கருணைக் கணபதியைப்
புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.
செய்யும் வினையின் முதல்யாவன்
செய்யப்படும் அப்பொருள் யாவன்
ஐயமின்றி உளதாகும்
அந்தக் கருமப் பயன் யாவன்
உய்யும் வினையின் பயன் விளைவில்
ஊட்டி விடுப்பான் எவன் அந்தப்
பொய்யில் இறையைக் கணபதியைப்
புரிந்து சரணம் அடைகின்றோம்.
வேதம் அளந்தும் அறிவரிய
விகிர்தன் யாவன் விழுத்தகைய
வேத முடிவில் நடம் நவிலும்
விமலன் யாவன் விளங்குபர
நாதமுடிவில் வீற்றிருக்கும்
நாதன்எவன் எண்குணன் எவன்அப்
போதமுதலைக் கணபதியைப்
புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.
மண்ணின் ஓர் ஐங்குணமாகி
வதிவான் எவன் நீரிடை நான்காய்
நண்ணி அமர்வான் எவன்தீயின்
மூன்றாய் நவின்வான் எவன் வளியின்
எண்ணும் இரண்டு குணமாகி
இயைவான் எவன் வானிடை ஒன்றாம்
அண்ணல் எவன் அக்கணபதியை
அன்பிற் சரணம் அடைகின்றோம்.
பாச அறிவில் பசுஅறிவில்
பற்றற்கரிய பரன் யாவன்
பாச அறிவும் பசுஅறிவும்
பயிலப் பணிக்கும் அவன்யாவன்
பாச அறிவும் பசுஅறிவும்
பாற்றி மேலாம் அறிவான
தேசன் எவன் அக்கணபதியைத்
திகழச் சரணம் அடைகின்றோம்.
-----------------------------------------------------
நூற்பயன்
இந்த நமது தோத்திரத்தை
யாவன் மூன்று தினமும் உம்மைச்
சந்தி களில்தோத் திரஞ்செயினும்
சகல கரும சித்திபெறும்
சிந்தை மகிழச் சுகம்பெறும்எண்
தினம்உச் சரிக்கின் சதுர்த்தியிடைப்
பந்தம் அகல ஓர்எண்கால்
படிக்கில் அட்ட சித்தியுறும்.
திங்கள் இரண்டு தினந்தோறும்
திகழ ஒருபான் முறையோதில்
தங்கும் அரச வசியமாம்
தயங்க இருபத் தொருமுறைமை
பொங்கும் உழுவ லால்கிளப்பின்
பொருவின் மைந்தர் விழுக்கல்வி
துங்க வெறுக்கை முதற்பலவும்
தோன்றும் எனச் செப்பி மறைந்தார்.

ப்ரேத ஸம்ஸ்காரம்

ப்ரேத ஸம்ஸ்காரம் : சரீரத்தின் சிறப்பு ..... ஸ்ரீ மஹா பெரியவா
இறந்த உடலுக்கு ஏன் காரியம் செய்ய வேண்டும்? இப்படி ஒரு கேள்வி தோன்றும், உடம்பை விட்டுப் போன ஜீவனின் த்ருப்திக்காக ச்ராத்தம் முதலானவை செய்வது பரோபகாரம் என்றால் ஸரிதான். ஆனால் ஜீவன் (உயிர்) போன இந்த வெறும் உடம்புக்கு எதற்கு ஸம்ஸ்காரம் என்று தோன்றலாம்.
”உயிரோடு இருக்கிறவர்களுக்கே உபகாரம் பண்ண முடியாமலிருக்கிறது. செத்துப்போனபின் பிணத்துக்கு என்ன ஸேவை வேண்டிக் கிடக்கிறது? ஏதோ ஸம்பிரதாயம் என்று வந்தவிட்டதால், அதை விடுவதற்கு பயமாயிருப்பதால் அவாளவாள் வீட்டில் மரணம் நடந்தால் ப்ரேதஸம்ஸ்காரம் பண்ணத்தான் வேண்டியிருக்கிறது. இது போதாதென்று, யாரோ அநாதை போய்விட்டானென்றால், அவன் உடம்பை முனிஸிபாலிடிக்காரர்கள் அடக்கம் செய்யப் போகும்போது, நாமெதற்கு வலுவிலே தடுத்து, ‘ஸம்ஸ்காரம்’ பண்ணுகிறேன் என்று இழுத்துவிட்டுக் கொள்ள வேண்டும்? பிரேதமென்றாலே ஒரு பயம், கூச்சம் இருக்கிறது. இதில் ஸம்பந்தமில்லாததை எதற்காக நாமாக எடுத்துப்ோட்டுக் கொள்ளவேண்டும்? உயிர்போன வெறும் கட்டையான உடம்புக்கு என்ன பரோபகாரம் வேண்டியிருக்கிறது?” என்று ேட்கலாம்.
சாஸ்திரங்களைக் கூர்ந்து பார்த்தால் ஒரு ஜீவன் சரீரத்தை விட்டுப் போய்விட்டாலும், அதன் அங்கங்களில் கண்ணில் ஸூர்யன், வாயில் அக்னி, கையில் இந்திரன் என்றெல்லாம்மிருக்கும் தேவாம்சங்கள் உடனே அதனதன் மூலஸ்தானத்துக்குப் போய்விடவில்லை என்று தெரிகிறது பிரேத ஸம்ஸ்காரத்தின் மூலம்தான் அவற்றை அதனதன் ஸ்தானத்துக்கு அனுப்பி வைக்கிறோம். அபர மந்த்ரங்களைப் பார்த்தால் தெரியும்.
ஜீவாத்மா என்கிற புருஷன் பதினாறு கலை உள்ளவன் என்பார்கள். இதில் பதினைந்து கலைகள் மட்டுமே உயிராக இருப்பது என்றும், உடம்பும் ஒரு கலை என்றும், எனவே உயிர் போன பின்னும் ஒரு கலை உள்ள அந்த உடலை ஈஸ்வரார்ப்பணமாக்கவே பிரேத ஸம்ஸ்காரம் தேவைப்படுகிறது என்றும் ஒரு அபிப்ராயம் உண்டு.
சாஸ்த்ரங்களில் தஹனம் பண்ணுவதை ‘அந்த்யேஷ்டி’- அந்திய இஷ்டி – அதாவது ‘இறுதியான வேள்வி’ என்றே ரொம்பவும் உயர்த்திச் சொல்லியிருக்கிறது. கர்ப்பம் தரிப்பிலிருந்து ஒரு ஜீவனை ஒவ்வொரு பருவத்திலும் எப்படி சுத்தி பண்ண வேண்டும் என்பதற்காக சாஸ்த்ரங்களில் நாற்பது ஸம்ஸ்காரங்களைச் சொல்லியிருக்கிறது.
‘ஸம்ஸ்காரம்’என்றால் ‘நன்றாக ஆக்குவது’ என்று அர்த்தம். (‘நன்றாக ஆக்கப்பட்ட’பாஷைதான் ‘ஸம்ஸ்க்ருதம்’.) உபநயனம், விவாஹம் ஆகிய எல்லாமே ஜீவனை அந்தந்த நிலையில் பக்குவப்படுத்துவதற்காக ஏற்பட்ட ஸம்ஸ்காரங்கள்தான். வாழ்நாள் கர்மா முழுவதையும் ேள்வியாக ஈஸ்வரனிடம் ஆஹ§தி செய்துகொண்டே இருக்கிற ரீதியில் இந்த நாற்பது ஸம்ஸ்காரங்கள் வகுக்கப்பட்டிருக்கின்றன.
இப்படி வாழ்க்கையையே யாகமாகச் செய்த ஒருத்தனுக்கு, வாழ்க்கை முடிந்தபிறகு கடைசியில் மற்றவர்கள் செய்கிற யாகம்தான் – அதாவது அந்திய இஷ்டியே ப்ரேத ஸம்ஸ்காரமாகும். எந்த உடம்பை வைத்துக்கொண்டு பாக்கி யஜ்ஞங்களை ஒருத்தன் பண்ணினானோ, அந்த உடம்பையே சிதாக்னி (சிதை) யில் ஹோமம் பண்ணிவிடுவதுதான் இது. ப்ரேத ஸம்ஸ்கார மந்த்ரங்களில் அப்படித்தான் சொல்லியிருக்கிறது. ஹோமத்துக்குரிய மற்ற வஸ்துக்களை நெய்யினால் சுத்தி செய்து அக்னியில் போடுகிற மாதிரித்தான் ப்ரேதத்தையும் சுத்தம் பண்ணி, தஹனம் செய்யச் சொல்லியிருக்கிறது. உடம்பு ஈஸ்வரனுக்கு அர்ப்பணம் செய்யப்படுகிறது. மண்ணில் அடக்கம் பண்ணுவதானாலும் ஈஸ்வரார்ப்பணமே ஆகிறது.
இதைப்பற்றி இன்னும் கொஞ்சம் சொல்கிறேன்.
‘தேஹம் ரொம்ப இழிவானது. இதிலிருந்து விடுபடவேண்டும்’ என்று பெரியவர்கள் பாடி வைத்திருப்பதெல்லாம் உண்மைதான். ஆனால் இன்னொரு நிலையில் பார்த்தால் இந்த தேஹம் என்பது ஒரு மஹா அத்புதமான மெஷினாக இருக்கிறது. ஒரே மெஷினில் ஒவ்வொரு பாகம் ஒவ்வொரு தினுஸான கார்யத்தைச் செய்கிறது. கண் என்று ஒன்று வெளிச்சத்தையும், வர்ணங்களையும் பார்க்கிறது. காது என்று ஒன்று சப்தங்களைக் கேட்கிறது. இருக்கிறதெல்லாம் ஒரே ஆத்மா - இத்தனை அவயவங்களுக்குள்ளேயும் ஒரே ஜீவன்தான் இருக்கிறது என்றாலும், கண்ணும், காதும் கிட்டக்கிட்ட இருந்துங்கூட கண்ணால் கேட்க முடிவதில்லை; காதால் பார்க்க முடிவதில்லை! பக்கத்திலேயே வாய் என்று ஒன்று அதற்குத்தான் ருசி தெரிகிறது. பேசுகிற சக்தியும் அதற்கே இருக்கிறது. தொண்டையில் பல தினுஸாகக் காற்றைப் புரட்டி அழகாக கானம்செய்ய முடிகிறது.
பல வஸ்துக்களைப் பிடிப்பதற்கு ஏற்றமாதிரி கையும் விரல்களும் அமைந்திருக்கின்றன. இந்த அமைப்பு கொஞ்சம் வேறுவிதமாக இருந்தாலும் இப்போது நாம் பண்ணுகிற கார்யங்களைப் பண்ண முடியாது. அடி எடுத்து வைத்து மேலே போவதற்கு வசதியாகக் காலின்அமைப்பு இருக்கிறது. நடக்கிறபோது கூடியமட்டும் ஜீவராசிகள் நசுங்காதபடி, பூரான் மாதிரியானவற்றின் மேலேயே நாம் பாதத்தை வைத்தால்கூட அவை நெளிந்துகொண்டு ஓட வசதியாக உள்ளங்கால்களில் குழித்தாற்போன்ற ஏற்பாடு, சப்பணம் கூட்டி உட்கார வசதியாக முழங்காலில் எலும்பு நரம்புகளின் அமைப்பு – என்று இப்படி ஒவ்வொன்றைப் பார்த்தாலும் பராசக்தி எத்தனை ஸூ¨க்ஷ்மமான கல்பனையோடு ஒரு சரீரத்தைப் பண்ணியிருக்கிறாள் என்று ஆச்சரியமாக இருக்கிறது!
ஆஹாரத்தை ஜெரிக்க ஒரு அங்கம், ஜெரித்ததை ரத்தமாக்க ஒரு அங்கம். மூச்சுவிட ஒன்று, ரத்தத்தை ‘பம்ப்’ பண்ண ஒன்று - எல்லாவற்றுக்கும்மேலே ஸகல கார்யங்களையும் டைரக்ட் பண்ணி கன்ட்ரோல் பண்ணும் மூளை – என்றெல்லாம் விசித்ர விசித்ரமாக பகவான் சரீரத்தைக்கல்பித்திருக்கிறான். சதை, ரத்தம், மஸில்ஸ், நரம்பு, எலும்பு என்ற ஒவ்வொன்றுக்கும் ஒரு ‘பர்பஸ்’ இருக்கிறது. எலும்புக்குள்ளேகூட மஜ்ஜை என்ற ஜீவஸத்து ஓடுவது ஒரு அதிசயம். மனித சரீரத்தில் இருக்கும் கோடிக்கணக்கான ஸெல்களில் ஒவ்வொன்றும் ஒரு அத்புத லோகம்.
இப்படித் தனித்தனியாக ஒவ்வொரு பாகமும் ஒரு அத்புதமான மெஷினாக இருப்பதோடு மட்டுமல்லாமல், எல்லாமாக ஒன்றுக்கொன்று இசைவாக ஸஹாயம் செய்து போஷித்துக் கொள்வதும் மஹா அதிசயமாக இருக்கிறது. ஆனபடியால், எவனோ லக்ஷத்தில் ஒருவன் தேஹம் பொய், மனஸ் பொய் என்று புரிந்துகொள்ளும் ஞானியாக ஆனாலும், பாக்கி எல்லாரும் பகவான் தந்திருக்கிற இந்த அத்புதமான மெஷினை வைத்துக்கொண்டு தர்மமாக வாழத்தான் முயற்சி பண்ண வேண்டியவர்களாக இருக்கிறோம். இந்த தர்ம வாழ்க்கையிலிருந்துதான் அப்புறம் ஞானத்துக்குப்போக வேண்டியவர்களாயிருக்கிறோம்.
யோசித்துப்பார்த்தால், சரீரத்தை ஏன் மட்டம் என்று திட்டவேண்டும்? அது என்ன பண்ணுகிறது? அது மனஸின் கருவி மட்டும்தானே?கையையும் காலையும் கண்ணையும் வாயையும் மனஸ் நல்லபடி ஏவினால் சரீரம் நல்லதே செய்யும். கை பரோபகாரம் பண்ணும்; அல்லது அர்ச்சனை பண்ணும். கால் கோயிலுக்குப் போகும். கண் ஸ்வாமி தர்சனம் பண்ணும், வாய் ஸ்தோத்ரம் சொல்லும், அல்லது எல்லோருக்கும் ப்ரிய வசனம் சொல்லும். ஆனதால் ‘நிஷித்தம்’ என்று சரீரத்தைக் திட்டுவதுகூட தப்புத்தான்.
”தர்மத்தைச் செய்ய சரீரம்தானே ஸாதனமாயிருக்கிறது?”- சரீரம் ஆத்யம் கலு தர்ம ஸாதனம் – என்று வசனமே இருக்கிறது. ” தேஹோ தேவாலய : ப்ரோக்தா ” – உள்ளேஇருக்கிற பரமாத்மாவுக்கு இந்த உடம்பே ஆலயம் என்கிறோம். ‘ காயமே கோயிலாக ‘ என்று அப்பரும் சொன்னார். திருமூலரும் இப்படியே, ”முன்னே உடம்பு ரொம்ப நிஷித்தம் என்று மட்டமாக நினைத்தேன். அப்புறம் அதற்குள்தான் ஈஸ்வரன் குடிகொண்டிருக்கிறான் என்றுதெரிந்துகொண்டதும், உடம்பை ஓம்பலானேன்” என்று திருமந்திரத்தில் சொல்கிறார்.
ஆனாதல், இப்படிப்பட்ட அத்பதமான, பகவான் கொடுத்த மெஷினை விட்டு உயிர் போனதும் அதைக் கன்னாபின்னா என்று ‘டிஸ்போஸ்’ பண்ணக்கூடாதுதான். மஹா ச்மாசான வாஸியான பரமேஸ்வரனுக்குத்தான் அதை ஆஹூதி பண்ண வேண்டும். எவன் இந்த உடம்பைக்கொடுத்தானோ அவனுக்கே அதைத் திருப்பிக் கொடுக்க வேண்டும்.
உலகத்தில் எந்த தேசத்திலுமுள்ள காட்டுக்குடிகள் உள்பட எல்லோரும் ஏதோ ஒரு தினுஸில் இதைத்தெரிந்து கொண்டிருப்பதால்தான் எங்கே பார்த்தாலும் ப்ரேத ஸம்ஸ்காரம் என்பது ஒரு பெரிய ஸமயச் சடங்காக இருக்கிறது.
செத்துப்போனபின் ஒரு உடம்புக்குள் தேவதாம்சங்கள் ஒட்டிக்கொண்டிருப்பதாக நம்பாவிட்டாலுங்கூட ஒன்றை நினைத்துப் பார்க்க வேண்டும். இத்தனை நாள் அதற்குள் இருந்த ஜீவன் ஈஸ்வர சைதன்யத்தின் ஒரு திவலையல்லவா? எப்போதோ ஸ்வாமி விக்ரஹம் வைத்த புறை என்றால்கூட, இப்போதும் அதில் கண்ட கண்டதுகளை வைக்காமல் ஒரு அகலை ஏற்றிவைக்க வேண்டும் என்று தானே தோன்றுகிறது? அப்படியிருக்க ஈஸ்வர சைதன்யத்தின் அம்சம் இருந்த body -ஐ மரியாதை தந்து மந்த்ரபூர்வமாகதானே dispose செய்ய வேண்டும்?
ஒருத்தன் தன்னுடைய சரீரத்தால் அநேக நன்மைகளைச் செய்தானென்றால், உயிர்போன பின்னும் அந்த சரீரத்துக்கு மரியாதை பண்ணத்தான்வேண்டும். நாஸ்திகர்கள்கூடத் தங்கள் தலைவர்களின் ம்ருத சரீரத்துக்கு மலர்வளையம் வைக்கிறார்களே! ஒருவன் சரீரத்தைக் கெட்டத்திற்கே பயன்படுத்தினான் என்றாலும்கூட, அவனுக்கு அந்த சரீரத்தை இயக்கியது ஈஸ்வர சக்தி என்று தெரியாவிட்டாலும் நமக்குத் தெரிவதால் அதற்குரிய ஸம்ஸ்கார மரியாதையைப் பண்ணத்தான் வேண்டும்.
”அவனாக இந்த சரீரத்தைக் கொண்டு ஈஸ்வரார்ப்பணமாக எந்த நல்லதும் செய்யாமல் போய்விட்டாலும், அதற்கும் ஈடாக, ப்ராயச்சித்தமாக இப்போது நாமாவது இதையே ஈஸ்வரனுக்கு அர்ப்பணம் செய்வோம்."
Courtesy: Krishnamurthy Balasubramanian

கட்டு மந்திரம் ...

“ ஓம் பைரவா, உத்தண்ட பைரவா,
ஏந்திய கபாலமும், ரத்தின மாலையும், நாக பாஷமும், போக வேஷ்டியும், ஸ்வாநத் வாகனமும்,
அடித்த தண்டும், பிடித்த பார்வையும், நேரிட்ட மேனியும், 
இதோ என் காளீக்களீள் எனக்கு அருள் செய்ய புறப்பட்டார்.
என்னுடைய பைரவனார் தன்மையைப் போல் யாம் இருப்போமென்று,
புத பிரேத பிசாசு கணங்களைக் கட்டு,
பிற்பில்லி சூன்யம் வஞ்சனை நோயைக் கட்டு,
இரும்பு வலையை உருக்கியே எட்டுத் திக்கும் பதினாறு கோணமும் கட்டு,
ஆகாசம் பூமி அதிரவே கட்டு,
எமனைக் கட்டு , எமதுதரைக் கட்டு ,
நாட்டைக் கட்டு , நகரத்தைக் கட்டு ,
சந்தனப் பாடு தனித்தனியே கட்டு ,
சொப்பனப் பேய்களை சுட சுட கட்டு ,
அகார உகார ஈஸ்வர புத்திராய, வடுக நாதாய,
கிணி கிணி சற்வேத்நாய, ரண்டி ரண்டி அகோர வீர பத்திராய,
ஓம் குருவே நமசிவய சுவாஹா “
திக்கு கட்டு
1. திருநீறை கையில் எடுத்துக் கொள்ள வேண்டும்
2. புவியை தொட்டு வணங்கி யங் என்று திருநீறை சிரசை தொட்டு முன்புறம் போடவும்
3. வங் என்று சிரசை தொட்டு பின்புறம் போடவும்
4. சிங் என்று சிரசை தொட்டு வலப்புறம் போடவும்
5. மங் என்று சிரசை தொட்டு இடப்புறம் போடவும்
குங்குமம் மலரையும் கூட இதற்கு பயன்படுத்தலாம்
பிறகு கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்ல வேண்டும்
அரி ஓம் தெற்கே நோக்கினேனே தெற்கே சண்முகமூர்த்தியாக கொண்டேனே
அரி ஓம் வடக்கே நோக்கினேனே வடக்கே பிரம்மாவாக கொண்டேனே
அரி ஓம் கிழக்கே நோக்கினேனே கிழக்கே தேவேந்திரனாக கொண்டேனே
அரி ஓம் மேற்கே நோக்கினேனே மேற்கே நரசிங்கமூர்த்தியாக கொண்டேனே
அரி ஓம் ஆகாசத்தை நோக்கினேனே ஆகாசம் திருநீலகண்டனாக கொண்டேனே
அரி ஓம் பாதாளத்தை நோக்கினேனே பாதாளம் காலபைரவனாக கொண்டேனே
அரி ஓம் பு+மியை நோக்கினேனே பு+மி பு+டமாக கொண்டேனே
பொருப்பு இருப்பாக கொண்டேனே
சிவன் சிவமாக கொண்டேன்
சிவன் இருந்தவாறே.
உடல்கட்டு
ஓம் பகவதியீஸ்வரி யென்றே தேகத்தின் பஞ்சாட்சர மூர்த்தி காவல்
கைகளில் அம்பிகா மயேஸ்வரி சாமுண்டிஸ்வரி காவல்
சிரசு முதல் பாதம் வரையில் அ‘;டதேவர்களும் ஓம் என்ற அட்சரமும் காவல்
காதில் வீரபத்திரதேவரும் நவதுவாரத்தில் நவக்கிரகமும் காவல்
என்னைச் சுற்றி காலபைரவனும் காத்து நிற்க சுவாகா
(திருநீறு குங்குமம் இதில் ஏதாவது ஒன்றை போடவும்)
கட்டு மந்திரத்தை தொடர்ந்து செய்து வர கீழ்க்கண்டவை நடக்கும்
1 நம்மைச் சுற்றிலும் ஒரு கவசம் உருவாகும்
2 ஒரு முறை நம்மைச் சுற்றிலும் கவசம் உருவாகி விட்டால் எப்பொழுதும் நம்மைச் சுற்றியே கவசம் இருக்கும்
3 ஆன்மா விரிவு அடைய அடைய அதற்கு ஏற்றாற்போல் இந்தக் கவசமும் விரிவடைந்து செல்லும்
4 நம் மந்திரத்தின் எண்ணிக்கை கூட கூட கவசத்தின் அதிர்வுகளை நாம் உணர முடியும்
5 கட்டு மந்திரம் சித்தியடைந்தால் அந்த கவசம் நம் கண்களுக்கு தெரியும்
தவம் செய்பவர்களும் இந்த கட்டு மந்திரத்தை பயன்படுத்தி பயன் பெறலாம். ஏனென்றால் மந்திரங்கள் உச்சாடணம் செய்யும் பொழுதும் தவங்கள் செய்யும் பொழுதும் ஆன்மா விரிவடைந்து பிரபஞ்சத்துடன் தொடர்பு கொண்டு உடலுக்குள் வருகிறது.
கட்டு மந்திரத்தின் சிறப்புகளை உணர்ந்து விருப்பப்பட்டவர்கள் பயன்படுத்தி பயன் பெறலாம்.

கணபதி மூர்த்திகளின் உருவங்களும், எண்களும்

கணபதி மூர்த்திகளின் உருவங்களும், எண்களும்
சித்தர்கள் விளக்கிய முறை
இவ்வுலகில் நாம் காணும் அனைத்தும் பிரணவத்திலிருந்துதான் தோன்றியுள்ளது. இவ்வாறு பிரணவ ஒலியிலிருந்து தோன்றிய உலகைக் காண்பதற்கு மனித உடலிலுள்ள மூலாதாரக் கனலே வழி வகுக்கிறது.
இதனால்தான் 'மூலாதாரத்தில் மூண்டெழும் கனலை' எழுப்பும் கலையை ஔவை மூதாட்டியும் விளக்கி உள்ளார்.
மூலாதாரத்தில் எழும் ஒலியும், ஒளியும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான தன்மையை உடையதாக இருந்தாலும் ஒருவர் பிறந்த தேதிக்கும் அவருடைய மூலாதாரத்தில் எழும் ஆதாரக் கனலுக்கும் தொடர்பு இருப்பதால் தங்கள் பிறந்த தேதிக்கு உரித்தான கணபதி மூர்த்தியை உபாசித்து வருவதால் எளிதில் இந்த மூலாதாரக் கனலின் தன்மையைப் புரிந்து ஆன்மீகப் பாதையில் விரைவாக முன்னேற முடியும்.
கணபதி மூர்த்திகளின் உருவங்களுக்கும் எண்களுக்கும் உள்ள தொடர்பை சித்தர்கள் விளக்கிய முறையில் வழிபடுவோர் எளிதில் எண் சக்திகளைப் பெற்றுப் பயனடைய முடியும். ஒரு எண்ணிற்கும் அதற்குரித்தான கணபதி மூர்த்திக்கும் உள்ள இணைப்பை இங்கு அளிக்கிறோம்.
ஒன்றாம் எண் கணபதி
கணபதி மூர்த்தியின் வாகனமான மூஷிகம் என்னும் மூஞ்சூறு கணபதியின் திருவடிகளைத் தரிசித்த வண்ணம் அதன் தலை குனிந்து பணிந்து நிற்கும். இத்தகைய கணபதி மூர்த்தி எண் ஒன்றுக்கு உரித்தானவர். இவரின் திருஉருவத்தை கோயில்களில் அல்லது ஓவியங்களில், வண்ணப் படங்களில் தரிசித்து குறைந்தது 10 நீர்க் கொழுக்கட்டைகளை தானமாக அளித்து வந்தால் எண் ஒன்றின் சக்திகளை விரைவாகப் பெறலாம்.
பணிவுடன் வணங்கி நிற்கும் இந்த வாகன மூர்த்தியின் வரலாறு அறிவதற்கு மிகவும் அற்புதமானது. நவகிரக மூர்த்திகளில் ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வர பகவானைப் போல தெய்வ அவதார மூர்த்திகளின் வாகனங்களில் ஈஸ்வர பட்டம் பெற்ற மூர்த்திகளும் உண்டு. அவர்களுள் தலையாயவர் மூஷிகேஸ்வரர் என்னும் நாமத்துடன் பிள்ளையாரின் வாகனமாக அருள்புரியும் மூர்த்தியாவார். அவர் தன்னுடைய தவத்தின் நிறைவில் ஸ்ரீஅருணாசல மூர்த்தியிடமிருந்து ஈஸ்வர பட்டம் பெற்றவுடன் தன்னுடைய சற்குருவான பிள்ளையார் அப்பனுக்கு நன்றி தெரிவிக்கும் வண்ணம் எழுந்தருளிய கோலமே அதாவது பிள்ளையாரின் திருப்பாதக் கமலங்களை வணங்கி நின்ற தோற்றத்தையே பிள்ளையார் மூர்த்தி எண்களில் முதலிடம் ஒன்றுக்கு உரிய கோலமாக ஏற்றுக் கொண்டார். பணிந்தவனே பக்தன் என்று பக்திக்கு ஆதாரமாக பணிவு இருக்க வேண்டும் என்ற காரணத்தால் முதல் எண்ணிற்குரிய கோலமாக இதைக் கணபதி மூர்த்தி ஏற்றுக் கொண்டார் எனலாம்.
கணபதி மூர்த்தியின் இந்தத் திருவிளையாடலின் பின்னணியில் உள்ள ரகசியம் என்ன? எல்லா ரகசியங்களுக்கும் மூலமாக இருப்பதே திருஅண்ணாமலை புனித பூமியாகும். தான் சுமக்கும் ஈசனான பிள்ளையாருக்குத் தகுதியான வாகனமாக அமையும் பொருட்டு ஈஸ்வர பட்டம் பெறுவதற்காக எம்பெருமானை வணங்கி அதற்குரித்தான உபாயத்தையும் மூஷிகம் கேட்டார். அதைக் கேட்டு மனம் மகிழ்ந்த பிள்ளையார் மூர்த்தி திருஅண்ணாமலையைத் தொடர்ந்து வலம் வந்தாலே எல்லா அனுகிரகமும் கிடைத்து விடும் என்று பதிலுரைத்து அதற்கான ஒரு பூஜை முறையையும் தெரியப்படுத்தினார்.
திருஅண்ணாமலையை வலம் வரும்போது கிரிவலப் பாதையில் உடன் வரும் மற்ற ஜீவன்களின் திருப்பாதங்களை மட்டுமே நோக்கி வலம் வர வேண்டும். எக்காரணம் முன்னிட்டும் எந்த ஜீவனுடைய முழங்காலிற்கு மேல் மூஷிக வாகனத்தின் பார்வை பட்டு விடக் கூடாது என்பதே கணபதி மூர்த்தி மூஷிகருக்கு அளித்த பூஜை முறையாகும். கேட்பதற்கு மிகவும் எளிமையாக இருந்தாலும் சற்று யோசித்துப் பார்த்தால்தான் இந்த பூஜையை நிறைவேற்றுவது எவ்வளவு கடினம் என்பது புரிய வரும். திருஅண்ணாமலையை ஈ, எறும்பு, பறவைகள், விலங்குகள், பாம்புகள் என கோடி கோடி ஜீவ ராசிகள் வலம் வருகின்றன. எறும்பு, புழு, பூச்சி போன்ற ஜீவன்களை விட எலி வடிவில் இருக்கும் மூஷிக வாகனம் உருவத்தில் பெரிதாக இருப்பதால் இத்தகைய நுண்ணிய ஜீவ ராசிகளின் பாதங்களை மட்டும் பார்ப்பது என்பது எப்படி சாத்தியமாகும்?
அதற்காக ஓர் விந்தையான பூஜை முறையை தனக்குத்தானே ஏற்படுத்திக் கொண்டார் மூஷிகர். தரைக்கு மேல் கிரிவலம் மேற்கொண்டால்தானே மற்ற ஜீவ ராசிகளைப் பார்க்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். கிரிவலப் பாதையில் பூமிக்கு கீழ் மூன்று சாண் ஆழத்தில் துளையிட்டுக் கொண்டே அத்துளை வழியாகத் தன்னுடைய கிரிவலத்தை மேற்கொண்டார். தொடர்ந்து பல வருடங்கள் துளையிட்டுக் கொண்டே சென்றதால் மூஷிகருடைய பற்கள் நாளடைவில் பலம் இழக்கத் தொடங்கின. சிறிது காலம் சென்றவுடன் பற்கள் எல்லாம் கொட்டிப் போய் தன்னுடைய மூக்கு, கால்களால் மட்டுமே மண்ணைத் தோண்டித் தோண்டி கிரிவலத்தைத் தொடர்ந்து நிறைவேற்றி வந்தார். யுகங்கள் கடந்தன. கொஞ்சம், கொஞ்சமாக கால்களும் தேய்ந்து போனதால் மேற்கொண்டு மண்ணைத் தோண்ட முடியாமல் எங்கெல்லாம் சிறிய பொந்துகள் தென்படுகின்றனவோ அதன் வழியாக உருண்டு உருண்டு கிரிவலத்தைத் தொடர்ந்து நிறைவேற்றி வந்தார் மூஷிகர்.
ஒரு யுகத்தில் ஆவணி மாத சுக்ல பட்ச சதுர்த்தி திதி அன்று ஏக முக தரிசனப் பகுதியில் அருணாசல ஈசன் மூஷிகருக்கு காட்சி அளித்து, மூஷிகேஸ்வரா என்று தன் திருவாக்கால் அழைத்தார். அத்தருணத்திலும் மூஷிகேசருக்கு ஒரு சோதனை காத்திருந்தது. தன்னை அழைத்த குரல் எல்லாம் வல்ல எம்பெருமானின் குரலோசை என்று உணர்ந்தவுடன் உள்ளம் எல்லையில்லா ஆனந்தப் பரவசத்தில் திளைத்து தன்னையும் அறியாமால் எம்பெருமானின் திருமுகத்தை நிமிர்ந்து பார்க்கலாம் என்று சற்றே நினைத்தார். அப்போது தன் குருநாதரான கணபதி மூர்த்தியின் அருளாணை ஞாபகத்திற்கு வரவே தன் தவறை உணர்ந்து தன்னிலை பெற்றார். ஈசனின் திருமுகத்தை நோக்காமலே அவருடைய திருப்பாதங்களை மட்டும் வணங்கி தன்னுடைய பூஜையை நிறைவேற்றினார். எந்தச் சூழ்நிலையிலும் கடமை மறவாத, குரு வாக்கை உயிரினும் மேலாகப் போற்றி மதித்த மூஷிகேசரின் தவத்தை மெச்சிய ஈசன் அதிஅற்புதமான தெய்வீக வரங்களை எல்லாம் அவருக்கு வழங்கி மறைந்தார். மூஷிகேசருக்கு அருணாசல ஈசன் அருளாசி வழங்கிய ஏகலிங்க முக தரிசனப் பகுதி தற்போது ரமணாஸ்ரமத்தை அடுத்துள்ளது.
இவ்வாறு ஒவ்வொரு எண்ணிற்கும் உரிய கணபதி கோலத்தின் பின்னால் பற்பல காரணங்கள் உண்டு. இந்த காரணங்கள் என்னவென்பதை நீங்கள் ஆத்ம விசாரம் செய்து பாருங்கள். உரிய காலத்தில் மற்ற எண்களின் கோலத்திற்குரிய மகத்துவம் அளிக்கப்படும்
இரண்டாம் எண் கணபதி
இரண்டு கைகளாலும் லட்டைப் பிடித்துக் கொண்டு இரண்டு கால்களால் நின்று கொண்டிருக்கும் மூஷிக வாகனத்தை உடைய கணபதி மூர்த்தி எண் இரண்டுக்கு உரியவர் ஆவார். இத்தகைய மூர்த்திகளை வழிபட்டு பூரண கொழுக்கட்டைகளை 11, 20 என்ற எண்ணிக்கையில் சுவாமிக்கு நைவேத்தியம் செய்து சந்தியா நேரங்களில் தானம் செய்து வந்தால் எண் இரண்டின் சக்திகள் வாழ்விற்கு பல நன்மைகளைச் செய்யும்.
மூன்றாம் எண் கணபதி
கணபதி மூர்த்தியின் வாகனமான மூஷிகம் வெண்மையாக இருக்க வேண்டும். வெண்ணிற வாகனம் பெற்ற கணபதி மூர்த்தி எண் மூன்றுக்கு உரிய மூர்த்தியாகத் திகழ்வதால் அவரவர் கை கொள்ளும் அளவிற்கு மூன்று கைப்பிடி வேகவைத்த நிலக்கடலையை சுவாமிக்கு நைவேத்யம் செய்து மாணவர்களுக்குத் தானமாக அளித்தலால் எண் மூன்றின் சுப சக்திகளை எளிதில் பெறலாம்.
நான்காம் எண் கணபதி
இரண்டு கைகளிலும் தாமரை மலர்களை ஏந்திய கோலத்தில் திகழும் கணபதி மூர்த்தி எண் நான்கிற்கு உரிய மூர்த்தியாவார். மண் கலயத்தில் கொள்ளை வேக வைத்து சர்க்கரை கலந்து சுவாமிக்கு நைவேத்யம் செய்து கழுதைகளுக்கு தானம் அளித்தலால் எந்த வேலையிலும் நிரந்தரமாகப் பணி செய்ய முடியாமல் அலை பாயும் மனதுடன் இருப்பவர்களின் மன வேதனை தணியும். கடுமையாக வேலை செய்தும் அதற்குரிய கூலியோ, சன்மானமோ பெற முடியாக நிலை மாறும்.
ஐந்தாம் எண் கணபதி
பாசம், அங்குசத்தை கைகளில் ஏந்தி அருள் புரியும் கணபதி மூர்த்தி எண் ஐந்திற்குரிய கணபதி மூர்த்தி ஆவார். இவரை வணங்கி உருண்டை வடிவில் இலவம் பஞ்சு வைத்துத் தைத்த திண்டு தலையணைகளை நீண்ட நாள் படுத்த படுக்கையாக கிடக்கும் நோயாளிகளுக்கு, வயதானவர்களுக்குத் தானமாக அளித்தலால் வயதான காலத்தில் மற்றவர்கள் உதவியை எதிர்பார்த்து வாழும் நிலை ஏற்படாமல் இறைவன் காத்தருள்வார்.
ஆறாம் எண் கணபதி
கணபதி மூர்த்தி தன்னுடைய வலது காலை மடக்கி இடது காலைத் தொங்க விட்ட நிலையில் அருள்புரியும் கோலம் எண் ஆறுக்கு உரியதாகும். சுவாமியின் துதிக்கை வலஞ்சுழியாக இருத்தல் வேண்டும். இம்மூர்த்திகளை வணங்கி தேங்காய் பர்பி நைவேத்யம் செய்து தானம் அளித்தலால் நேரம் காலம் பார்க்காது கொடுத்த கடன்கள் உரிய காலத்தில் வசூலாகும். இது ஒருமுறையே கிட்டும் பரிகாரம் என்பதை நினைவில் கொள்ளவும்.
ஏழாம் எண் கணபதி
கணபதி மூர்த்தியின் துதிக்கை இடஞ்சுழியாக அமைந்து, மூர்த்தியானவர் தன்னுடைய இடது காலை மடக்கி, வலது கால் தொங்கிய நிலையில் அருள் வழங்கும் கோலம் எண் ஏழிற்கு உரியதாகும். இம்மூர்த்தியின் தரிசனமும், ஏழை இசைக் கலைஞர்களுக்கு நரம்பு இசைக் கருவிகள் தானமும் சொந்த வீடுகள் வாங்க விரும்புவோர்க்கு நலம் பயக்கும். சம்பூர்ண ராகங்களில் அமைந்த தியாகராஜ கீர்த்தனைகளை இறைவன் முன் பாடி வருதலால் வாஸ்து தோஷங்கள் விலகும்.
எட்டாம் எண் கணபதி
துதிக்கை மேலே தூக்கியவாறு ஆசீர்வதிக்கும் நிலையில் உள்ள கணபதி மூர்த்தி எண் எட்டுக்குரியவர் ஆவார். இவரை வணங்கி எள் கலந்த முறுக்கு, சீடைகளைத் தானம் அளித்தலால் சனி பகவான் பீடிப்பால் வரும் துன்பங்கள் ஓரளவு குறையும். எல்லா தெய்வ மூர்த்திகளுமே சனி பகவான் பீடிப்பால் துன்பம் அடைந்து விதியின் வலிமையை மக்களுக்கு உணர்த்தியுள்ளார்கள் அல்லவா? இந்த விதிக்கு விலக்காக அமைந்தவர்கள் பிள்ளையார், ஆஞ்சநேயர் மூர்த்திகள் மட்டுமே. இவ்வாறு பிள்ளையாரைப் பீடிக்க முடியாமல் சனி பகவான் தன்னுடைய பணியில் ஏற்பட்ட குழப்பத்தை நினைத்து மனம் வருந்தி நின்றபோது விநாயகப் பெருமான் தன்னுடைய துதிக்கையை துக்கி அவரை ஆசீர்வதித்து ஆறுதல் கூறினார். அன்று முதல் பிள்ளையாரின் இந்த தரிசனம் சனி பகவானால் பூஜிக்கப்பட்டு மக்களின் துயர் நீக்க வந்த கணபதி பிரசாதமாக அளிக்கப்பட்டுள்ளது.
ஒன்பதாம் எண் கணபதி
பத்மாசன கோலத்தில் அமர்ந்து துதிக்கையில் கும்பம் ஏந்திய கணபதி மூர்த்தி எண் ஒன்பதிற்குரிய இறை மூர்த்தியாவார். மங்கள சக்திகள் பூரணமாய்ப் பொலியும் இந்த இறைக் கோலத்தை தரிசனம் செய்து ஒன்பது சுற்றுகள் உடைய கை முறுக்கு தானம் செய்து வருதலால் பெண்களின் திருமணத் தடங்கல்கள் நீங்கி விரைவில் மண வாழ்வு மலரும். அபாய நிலையில் உள்ள நோயாளிகள் நலம் பெறுவர்.
குசா கணபதி
குசா எண்ணுக்கு உரித்தான மூர்த்தி குசா வாகன மூர்த்தி. பறவை இனத்தில் மயில் குசா சக்திகளைப் பெற்றுள்ளதால் இரண்டு மயில்களை வாகனமாக உடைய ஸ்ரீவைபவ கணபதி மூர்த்தி குசா எண்ணுக்கு உரிய மூர்த்தியாக போற்றப்படுகிறார்.
நன்றி :-.(.. சக்தி ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அடிமை குருமங்கள கந்தர்வா சத்குரு ஓம் ஸ்ரீ சர்வ ஸ்ரீ சாக்தப் பரப்ரம்ஹ ஸ்ரீ தேவி பக்தாய ஸ்ரீலஸ்ரீ வேங்கடராம சித்த சுவாமிகள்)

ஆதித்ய ஹ்ருதயம் ...

ஆதித்ய ஹ்ருதயம் - ஸ்லோகம்
இந்த ஸ்லோகத்தை எந்த நேரத்திலும் சொல்லலாம் என்று அகத்தியரே உத்தரவு கொடுத்துள்ளார். மனதில் உண்மையாக இருக்கவேண்டும்! அவ்வளவுதான்! ச்ரத்தையுடன் பதினோரு முறை தொடர்ந்து சொல்பவர்களுக்கு எல்லா பாதுகாப்பும் வெற்றியும், அவரின் அருளும் கிடைக்கும்!
ததோ யுத்த பரிச்ராந்தம் ஸமரே சிந்தயா ஸ்திதம்
ராவணம் சாக்ரதோ த்ருஷ்ட்வா யுத்தாய ஸமுபஸ்திதம்
தைவதைச்ச ஸமாகம்ய த்ரஷ்டுமப்யாகதோ ரணம்
உபாகம்யாப்ரவீத் ராமம் அகஸ்த்யோ பகவாந் ருஷி:
ராம ராம மஹாபாஹோ ச்ருணு குஹ்யம் ஸநாதனம்
யேந ஸர்வாநரீன் வத்ஸ ஸமரே விஜயஷ்யஸு
ஆதித்யஹ்ருதயம் புண்யம் ஸர்வ சத்ரு விநாசநம்
ஜயாவஹம் ஜபேந்த்யம் அக்ஷய்யம் பரமம் சிவம்
ஸர்வ மங்கள மாங்கல்யம் ஸர்வ பாப ப்ரணாசநம்
சிந்தாசோக ப்ரசமனம் ஆயுர்வர்த்தநம் உத்தமம்
ரச்மிமந்தம் சமுத்யந்தம் தேவாஸுர நமஸ்க்ருதம்
பூஜயஸ்வ விவஸ்வந்தம் பாஸ்கரம் புவநேச்வரம்
சர்வதேவாத்மகோ ஹ்யேஷ தேஜஸ்வி ரச்மிபாவந:
ஏஷ தேவாஸூரகணான் லோகான் பாதி கபஸ்திபி:
ஏஷ பிரஹ்மா ச விஷ்ணுச்ச சிவ: ஸ்கந்தக: ப்ரஜாபதி:
மஹேந்த்ரோ தநத: காலோ யமஸ்-ஸோமோஹ்யபாம்பதி:
பிதரோ வஸவஸ்ஸாத்யா: ஹ்யச்விநௌ மருதோ மநு :
வாயுர் வஹ்; ப்ரஜா ப்ராண க்ரதுகர்தா ப்ரபாகர :
ஆதித்ய: ஸவிதா ஸூர்ய: கக : பூஷா கபஸ்திமான்
ஸுவர்ணஸத்ருசோ பாநு: ஹிரண்யரேதா திவாகர:
ஹரிதச்வ: ஸஹஸ்ரார்ச்சி: ஸப்தஸப்திர் மரீசிமாந்
திமிரோந்மதந்: சம்பு: த்வஷ்டா மார்த்தாண்ட அம்சுமான்
ஹிரண்யகர்ப்ப: சிசிர: தபரோ பாஸ்கரோ ரவி:
அக்கர்ப்போ (அ)திதே: புத்ர: சங்க: சிசிர நாசந:
வ்யோமாநாதஸ் - தமோபேதீ ருக்யஜுஸ்ஸாமபாரக:
கநவ்ருஷ்டிரபாம் மித்ரோ: விந்த்யவீதீ ப்லவங்கம:
ஆதபீ மண்டலீ ம்ருத்யூ: பிங்கல: ஸர்வதாபந:
கவிர்விச்வோ மஹாதேஜா ரக்த: ஸர்வபவோத்பவ:
நக்ஷத்ர க்ரஹதாராணாம் அதிபோ விச்வபாவந:
தேஜஸாமபி தேஜஸ்வீ த்வாதசாத்மன் நமோ (அ)ஸ்து தே
நம: பூர்வாய கிரயே பஸ்ச்சிமே கிரயே நம:
ஜ்யோதிர்கணாநாம் பதயே திநாதிபதயே நம:
ஜயாய ஜயபத்ராய ஹர்யச்வாய நமோ நம:
நமோ நம: ஸஹஸ்ராம்சோ ஆதித்யாய நமோ நம:
நம உக்ராய வீராய ஸாரங்காய நமோ நம:
நம: பத்மப்ரபோதாய மார்த்தாண்டாய நமோ நம:
பரஹ்மேசாநாச்யுதேசாய ஸூர்யாயா யாயாதித்யவர்ச்சஸே
பாஸ்வதே ஸர்வபக்க்ஷிய ரௌத்ராய வபுஷே நம:
தமோக்நாய ஹுமக்நாய சத்ருக்நாயாமிதாத்மநே
க்ருதக்நக்நாய தேவாய ஜ்யோதிஷாம் பதயே நம:
தப்தசாமீகாரபாய வஹ்நயே விச்வகர்மணே
நமஸ்தமோபிக்நாய ருசயே லோகஸாக்ஷிணே
நாசயத்யேஷ வை பூதம் ததேவ ஸ்ருஜதி ப்ரபு :
பாயத்யேஷ தபத்யேஷ வர்ஷத்யேஷ கபஸ்திபி:
ஏஷ ஸூப்தேஷு ஜாகர்தி பூதேஷூ பரிஷ்டித:
ஏஷசைவாக் ஹோத்ரம் ச பலம் சைவாக்ஹோத்ரிணாம்
வேதச்ச க்ரதவச்சைவ க்ரது-நாம் பலமேவ ச
யா க்ருத்யா லோகேஷூ ஸர்வ ஏஷ ரவி: ப்ரபு:
ஏநமாபத்ஸூக்ரேஷூ காந்தாரேஷூ பயேஷூ ச
கீர்த்தயன் புருஷ: கச்சித் நாவாஸூததி ராகவ
பூஜயஸ்வைந மேகாக்ரோ: தேவதேவம் ஜகத்பதிம்
ஏதத் த்ரிகுதம் ஜபத்வா யுத்தேஷு விஜயஷ்யஸு
அஸ்மின் க்ஷணே மஹா பாஹோ ராவணம் த்வம் வதிஷ்யஸு
ஏவமுக்த்வா ததாகஸ்த்யோ ஜகாம ச யதாகதம்
ஏதத் உத்வா மஹாதேஜா நஷ்டசோகோ (அ)பவத் ததா
தாராயாமாஸ ஸ"ப்ரிதோ: ராகவ: ப்ரயதாத்மவான்
ஆதித்யம் ப்ரக்ஷ்ய ஜபத்வா தூ பரம் ஹர்ஷமவாப்தவான்
த்ரிராசம்ய சுசுர் பூத்வா தநுராதாய வீர்யவான்
ராவணம் ப்ரேக்ஷ்ய (அ)ஹ்ருஷ்டாத்மா யுத்தாய ஸமுபாகமத்
ஸர்வயத்நேந மஹதா வதே தஸ்ய த்ருதோபவத்
அத ரவிரவதந் ரீக்ஷ்ய ராமம் முதிதமநா: பரமம் ப்ரஹ்ருஷ்யமாண:
சிசரபதி ஸம்க்ஷயம் விதித்வா ஸூரகணமதயகதோ வசஸ்த்வரேதி
என்று கூறிய அகஸ்திய மாமுனி இறுதியாக "இரகு குலத்தில் உதித்தவனே! சூரிய பகவானை மேற்கண்ட துதிகளால் போற்றுபவனுக்கு சிக்கலான நேரங்களிலும், சோதனை காலங்களிலும் பயத்தை ஏற்படுத்தக்கூடிய காலங்களிலும்.எந்த துன்பமும் ஏற்படுவதில்லை.
தெய்வங்களினாலேயே போற்றப்படுகின்ற அந்த சூரிய பகவானை முனைப்புடன் கூடிய ஒருமித்த மனத்தோடு, மூன்று முறைகள், மேற்கண்ட துதிகளின் மூலமாக வழிபட்டு வருபவன், யுத்த களத்திலே வெற்றியே காண்பான் என்று அகஸ்திய முனிவரால் அருளப் பெற்ற இந்த அற்புத துதியை, மனதை அடக்கியவரும். பேராற்றல் பெற்றவரும் பெரும் தோள் வலிமை பெற்றவருமான ஸ்ரீ ராமர் சூரிய பகவானை பார்த்தவாறே மூன்று முறைகள் ஜபித்து ராவணனை வென்ற இந்த மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்ததும், நம் பாவங்களையெல்லாம் போக்க வல்ல சிறந்த பரிகார மந்திரமான இந்த ஆதித்ய ஹ்ருதயம் என்ற மஹா மந்திரத்தை நாமும் துதித்து நன்மை அடைவோமாக!
சூர்யம் ...
கடும் நோய்கள், விலகி துன்பங்கள் ஓடிட தினமும் காலையில் 24 முறை சூரிய பகவானை நினைத்து வணங்க வேண்டிய ஸ்லோகம்.
சூர்யம் சுந்தர லோக நாதம்
அம்ருதம் வேதாந்த சாரம் சிவம்
சுரேஷம், அமலம் லோகைக சிந்தஸ்வயம்
இந்திராதித்ய நரதீபம் சமகுரும்
த்ரைலோக்ய சூடாமணிம்
ப்ரம்ம விஷ்ணு சிவ ஸ்வருப
ஹ்ருதயம் வந்தே சதா பாஸ்கரம்.

சிவ லிங்கங்கள்

சிவ வழிபாட்டிற்குரிய லிங்கங்கள் மூன்று வகைப்படும்.
ஷணிக லிங்கம் ... இஷ்ட லிங்கம் ... ஆத்ம லிங்கம்
ஷணிக லிங்கம்:
நாள்தோறும் சிவ வழிபாடு நடத்தி பின்பு கைவிடப்படும் லிங்கம் ஷணிக லிங்கம் எனப்படும். இதை செய்வது மிகவும் எளிதானது. இது 16 வகைப்படும். இதனை நாமே செய்யலாம். குருவிடமிருந்து லிங்கத்தை பெற இயலாதவர்கள் இதை செய்து வழிபடலாம்.
1. புற்றுமண் லிங்கம் ..... மோட்சம் தரும்
2. ஆற்றுமண் லிங்கம் ..... பூமிலாபம் தரும்
3. பச்சரிசி லிங்கம் ..... பொன், பொருள் தரும்
4. அன்ன லிங்கம் ..... அன்ன விருத்தி தரும்
5. பசுவின் சாண லிங்கம் ..... நோய்கள் தீரும்
6.வெண்ணெய் லிங்கம் ..... மன மகிழ்ச்சி தரும்
7. ருத்ராட்ச லிங்கம் ..... அகண்ட அறிவைத் தரும்
8. விபூதி லிங்கம் ..... அனைத்து செல்வமும் தரும்
9. சந்தன லிங்கம் ..... அனைத்து இன்பமும் தரும்
10. மலர் லிங்கம் ..... ஆயுளை அதிகமாக்கும்
11. தர்ப்பைப்புல் லிங்கம் ..... பிறவியிலா நிலை தரும்
12. சர்க்கரை லிங்கம் ..... விரும்பிய இன்பம் தரும்
13. மாவு லிங்கம் ..... உடல் வன்மை தரும்
14. பழ லிங்கம் ..... சுகத்தைத் தரும்
15. தயிர் லிங்கம் ..... நல்ல குணத்தைத் தரும்
16. தண்ணீர் லிங்கம் ..... எல்லா மேன்மைகளும் தரும்

இஷ்ட லிங்கம்:
மரகதம், படிகம், கருங்கல் இவற்றினால் செய்யப்பட்ட லிங்கத்தை குருவிடமிருந்து முறையாக பெற்று தன் ஆயுள் உள்ள வரைக்கும் தன்னிடமே வைத்துக்கொண்டு தினமும் தாம் செல்லுமிடமெல்லாம் கூடவே எடுத்து சென்று வழிபடும் லிங்கம் இஷ்ட லிங்கம் எனப்படும்.
1. இந்திரன் ..... பத்மராக லிங்கம்
2. குபேரன் ..... ஸ்வர்ண லிங்கம்
3. யமன் ..... கோமேதக லிங்கம்
4. வருணன் ..... நீல லிங்கம்
5. விஷ்ணு ..... இந்திர நீல லிங்கம்
6. பிரம்மன் ..... ஸ்வர்ண லிங்கம்
7. அஷ்ட வசுக்கள், வசுதேவர்கள் ..... வெள்ளி லிங்கம்
8. வாயு ..... பித்தளை லிங்கம்
9. அசுவினி தேவர்கள் ..... மண் லிங்கம்
10. மகா லட்சுமி ..... ஸ்படிக லிங்கம்
11. சோம ராஜன் ..... முத்து லிங்கம்
12. சாதுர்யர்கள் ..... வஜ்ஜிர லிங்கம்
13. பிராம்மணர்கள் ..... மண் லிங்கம்
14. மயன் ..... சந்தன லிங்கம்
15. அனந்தன் முதலான நாகராஜர்கள் .... பவள லிங்கம்
16. தைத்தியர்கள், அரக்கர்கள் ..... பசுஞ்சாண லிங்கம்
17. பைசாசங்கள் ..... இரும்பு லிங்கம்
18. பார்வதி .... வெண்ணெய் லிங்கம்
19. நிருதி ..... தேவதாரு மர லிங்கம்
20. யோகிகள் ..... விபூதி லிங்கம்
21. சாயா தேவி ..... மாவு லிங்கம்
22. சரஸ்வதி ..... ரத்தின லிங்கம்
23. யட்சர்கள் ..... தயிர் லிங்கம்

ஆத்ம லிங்கம்:
தூய மனத்துடன் மனப்பூர்வமாக வழிபட சிவபெருமான் கொண்ட திருவுருவம் ஆத்மலிங்கம் ஆகும். இவ்வகை லிங்கத்திற்கு மனப்பூர்வமான வழிபாடே போதுமானது. வெளிபுற வழிபாடு தேவையில்லை. மனப்பூர்வமாக செய்யப்படும் சிவ லிங்க வழிபாடு ஆத்ம லிங்க வழிபாடு எனப்படும்.
1. மண் ..... காஞ்சிபுரம் ..... ஏகாம்பர லிங்கம்
2. நீர் ..... திருவானைக்கா ...... ஜம்பு லிங்கம்
3. நெருப்பு ..... திருவண்ணாமலை ..... அருணாசல லிங்கம்
4. வாயு ..... திருகாளத்தி ..... திருமூல லிங்கம்
5. ஆகாயம் ..... சிதம்பரம் ..... நடராச லிங்கம்
..... ஆன்மீகச்சுடரின் ஒளிக்கீற்றுக்கள் by SenthilKumar