Sunday, October 5, 2014

வேல்மாறல் மஹாமந்திரம்

இது வள்ளிமலைத் திருப்புகழ் சச்சிதானந்த சுவாமிகள் அருளியது. பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதன் மகிமை அளவில்லாதது. ஒரே செய்யுளே மாறி மாறி வருவது போல் அமைந்திருக்கும் இத்துதியைக் கவனமாகச் சொல்ல, எதிர்பாராமல் வரும் ப்ரச்னைகள் நீங்கும்.
சம்ஸ்கிருதம் போல், தமிழிலும் உச்சரிப்புக் கவனத்துடன் சொல்ல வேண்டிய துதிகள் கணக்கில்லாமல் உள்ளன. அவற்றுள் ஒன்று இது.
வேலும் மயிலும் சேவலும் துணை
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
1 பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை கறுத்தகுழல்
சிவத்தஇதழ் மறச்சிறுமி விழிக்குநிகர் ஆகும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
2 திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
3 சொலற்(கு)அரிய திருப்புகழைஉரைத்தவரை அடுத்தபகை
அறுத்(து)எறிய உறுக்கிஎழும் மறத்தைநிலை கானும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
4 தருக்கிநமன் முருக்கவாpன் எருக்குமதி தாpத்தமுடி
படைத்தவிறல் படைத்தஇறை கழக்;குநிகர் ஆகும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
5 பனைக்கைமுக படக்கரட மதத்தவள கஷக்கடவுள்
பதத்(து)இடு(ம்)நி களத்துமுளை தெறிக்கவரம் ஆகும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
6 சினத்(து)அவுணர் எதிர்;த்தரண களத்தில்வெகு குறைத்தலைகள்
சிhpத்(து)எயிறு கடித்துவிழித்(து)அலற மோதும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
7 துதிக்கும்அடியவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர் நினைக்கின்அவர்
குலத்தைமுதல் அறக்களையும் எனக்(கு)ஓர்துணை ஆகும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
8. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின் உண வழைப்ப(து)என
மலர்ககமல கரத்தின்முனை விதிர்க்கவளை(வு) ஆகும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
9 பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும் ஒரு கவிப்புலவன்
இசைக்(கு)உருகி வரைக்குiஉறயை இடித்துவழி கானும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
10 திசைக்கிhpயை முதற்குலிசன் அறுத்தசிறை முளைத்த(து)என
முகட்டின்இடை பறக்கஅற விசைத்(து)அதிர ஓடும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
11 சுடர்ப்பாpதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி ஒளிப்ப அவை
அடக்குதழல் ஒளிப்பஒளிர் ஒளிப்பிரபை வீசும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
12 தனித்துவழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு வலத்தும்இரு
புறத்தும்அரு(கு) அடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
13 பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல் ஒழித்(து)அவுணர்
உரத்(து)உதிர நிணத்தசைகள் புஷிக்கஅருள் நேரும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
14 திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது குடித்(து)உடையும்
உடைப்(ப)அடைய அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
15 ஸக்ஷரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி தனக்கும்உறhp
தனக்கும்நரர் தமக்கும்உறும் இடுக்கண்வினை சாடும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
16 சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர் பெருத்தகுடர்
சிவத்த தொடை எனச்சிகையில் விருப்பமொடு சுடும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
17 ஸக்ஷரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி தனக்கும்உறhp
தனக்கும்நரர் தமக்கும்உறும் இடுக்கண்வினை சாடும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
18 சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர் பெருத்தகுடர்
சிவத்த தொடை எனச்சிகையில் விருப்பமொடு சு{டும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
19 பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல் ஒழித்(து)அவுணர்
உரத்(து)உதிர நிணத்தசைகள் புஷிக்கஅருள் நேரும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
20 திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது குடித்(து)உடையும்
உடைப்(ப)அடைய அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
21 சுடர்ப்பாpதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி ஒளிப்ப்அவை
அடக்குதழல் ஒளிப்பஒளிர் ஒளிப்பிரபை வீசும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
22 தனித்துவழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு வலத்தும்இரு
புறத்தும்அரு(கு) அடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
23 பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும் ஒரு கவிப்புலவன்
இசைக்(கு)உருகிp வரைக்குiஉறயை இடித்துவழி கானும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
24 திசைக்கியை முதற்குலிசன் அறுத்தசிறை முளைத்த(து)என
முகட்டின்இடை பறக்கஅற விசைத்(து)அதிர ஓடும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
25 துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர் நினைக்கின்அவர்
குலத்தைமுதல் அறக்களையும் எனக்(கு)ஓர்துணை ஆகும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
26 தளத்தில்உள கணத்தொகுதி களிப்பின் உணவழைப்ப(து)என
மலர்ககமல கரத்தின்முனை விதிர்க்கவளை(வு) ஆகும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
27 பனைக்கைமுக படக்கரட மதத்தவள கஷக்கடவுள்
பதத்(து)இடு(ம்)நி களத்துமுளை தெறிக்கவரம் ஆகும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
28 சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு குறைத்தலைகள்
சிhpத்(து)எயிறு கடித்துவிழித்(து)அலற மோதும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
29 சொலற்(கு)அhpய திருப்புகழைஉரைத்தவரை அடுத்தபகை
அறுத்(து)எறிய உறுக்கிஎழும் மறத்தைநிலை கானும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
30 தருக்கிநமன் முருக்கவாpன் எருக்குமதி தாpத்தமுடி
படைத்தவிறல் படைத்தஇறை கழக்;குநிகர் ஆகும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
31 பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை கறுத்தகுழல்
சிவத்தஇதழ் மறச்சிறுமி விழிக்குநிகர் ஆகும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
32 திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
33 தருக்கிநமன் முருக்கவாpன் எருக்குமதி தாpத்தமுடி
படைத்தவிறல் படைத்தஇறை கழக்;குநிகர் ஆகும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
34 சொலற்(கு)அhpய திருப்புகழைஉரைத்தவரை அடுத்தபகை
அறுத்(து)எறிய உறுக்கிஎழும் மறத்தைநிலை கானும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
35 திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
36 பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை கறுத்தகுழல்
சிவத்தஇதழ் மறச்சிறுமி விழிக்குநிகர் ஆகும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
37 தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின் உண வழைப்ப(து)என
மலர்ககமல கரத்தின்முனை விதிர்க்கவளை(வு) ஆகும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
38 துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர் நினைக்கின்அவர்
குலத்தைமுதல் அறக்களையும் எனக்(கு)ஓர்துணை ஆகும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
39 சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு குறைத்தலைகள்
சிhpத்(து)எயிறு கடித்துவிழித்(து)அலற மோதும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
40 பனைக்கைமுக படக்கரட மதத்தவள கஷக்கடவுள்
பதத்(து)இடு(ம்)நி களத்துமுளை தெறிக்கவரம் ஆகும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
41 தனித்துவழி நடக்கும்;;என(து) இடத்தும்ஒரு வலத்தும்இரு
புறத்தும்அரு(கு) அடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
42 சுடர்ப்பாpதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி ஒளிப்பஅவை
அடக்குதழல் ஒளிப்பஒளிர் ஒளிப்பிரபை வீசும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
43 திசைக்கிhpயை முதற்குலிசன் அறுத்தசிறை முளைத்த(து)என
முகட்டின்இடை பறக்கஅற விசைத்(து)அதிர ஓடும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
44 பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு கவிப்புலவன்
இசைக்(கு)உருகிp வரைக்குiஉறயை இடித்துவழி கானும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
45 சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர் பெருத்தகுடர்
சிவத்த தொடை எனச்சிகையில் விருப்பமொடு சுடும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
46 ஸக்ஷரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி தனக்கும்உறhp
தனக்கும்நரர் தமக்கும்உறும் இடுக்கண்வினை சாடும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
47 திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது குடித்(து)உடையும்
உடைப்(ப)அடைய அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
48 பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல் ஒழித்(து)அவுணர்
உரத்(து)உதிர நிணத்தசைகள் புஷிக்கஅருள் நேரும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
49 திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது குடித்(து)உடையும்
உடைப்(ப)அடைய அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
50 பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல் ஒழித்(து)அவுணர்
உரத்(து)உதிர நிணத்தசைகள் புஷிக்கஅருள் நேரும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
51 சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர் பெருத்தகுடர்
சிவத்த தொடை எனச்சிகையில் விருப்பமொடு சுடும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
52 ஸக்ஷரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி தனக்கும்உறhp
தனக்கும்நரர் தமக்கும்உறும் இடுக்கண்வினை சாடும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
53 திசைக்கிhpயை முதற்குலிசன் அறுத்தசிறை முளைத்த(து)என
முகட்டின்இடை பறக்கஅற விசைத்(து)அதிர ஓடும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
54 பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும் ஒரு கவிப்புலவன்
இசைக்(கு)உருகிp வரைக்குஉறயை இடித்துவழி கானும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
55 தனித்துவழி நடக்கும் என(து) இடத்தும்ஒரு வலத்தும்இரு
புறத்தும்அரு(கு) அடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
56 சுடர்ப்பாpதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி ஒளிப்பஅலை
அடக்குதழல் ஒளிப்பஒளிர் ஒளிப்பிரபை வீசும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
57 சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு குறைத்தலைகள்
சிhpத்(து)எயிறு கடித்துவிழித்(து)அலற மோதும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
58 பனைக்கைமுக படக்கரட மதத்தவள கஜக்கடவுள்
பதத்(து)இடு(ம்)நி களத்துமுளை தெறிக்கவரம் ஆகும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
59 தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின் உண வழைப்ப(து)என
மலர்ககமல கரத்தின்முனை விதிர்க்கவளை(வு) ஆகும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
60 துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர் நினைக்கின்அவர்
குலத்தைமுதல் அறக்களையும் எனக்(கு)ஓர்துணை ஆகும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
61 திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
62 பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை கறுத்தகுழல்
சிவத்தஇதழ் மறச்சிறுமி விழிக்குநிகர் ஆகும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
63 தருக்கிநமன் முருக்கவாpன் எருக்குமதி தாpத்தமுடி
படைத்தவிறல் படைத்தஇறை கழக்குநிகர் ஆகும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
64 சொலற்(கு)அhpய திருப்புகழைஉரைத்தவரை அடுத்தபகை
அறுத்(து)எறிய உறுக்கிஎழும் மறத்தைநிலை கானும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
வேலும் மயிலும் சேவலும் துணை
வேலும் மயிலும் சேவலும் துணை
வேலும் மயிலும் சேவலும் துணை
வேலும் மயிலும் சேவலும் துணை
வேலும் மயிலும் சேவலும் துணை
வேலும் மயிலும் சேவலும் துணை
... வலைப்பதிவர் பார்வதி இராமச்சந்திரன், பெங்களூரு

ஸ்ரீராம நாமத்தின் பெருமை ...

எங்கெல்லாம் ராம நாமம் ஒலிக்கிறதோ, அங்கெல்லாம் பக்திப் பரவசத்துடன் கண்களில் நீர் மல்க எவன் காணப்படுகிறானோ, அவனே மாருதி எனும் வாயுபுத்திரன் என்ற வாசகங்களால் ஆஞ்சநேயன் எனும் ஹனுமனுக்கு அடையாளம் காட்டப்படுகிறது. ராம ஸேவை ஒன்றையே தன் லட்சியமாகக் கொண்டு, ராம நாமத்தையே யுகம் யுகமாக ஜபித்துக்கொண்டு இருப்பவன் சிரஞ்ஜீவியான அனுமன்.
அப்பேர்ப்பட்ட ஹனுமனுக்கும் ஸ்ரீராமருக்கும் யுத்தம் நடந்தது என்று சொன்னால், நம்புவீர்களா?
அப்படியொரு சம்பவம் நம் புராணங்களில் சித்திரிக்கப்பட்டிருக்கிறது. அது, காலத்தால் அழியாத உண்மை ஒன்றை உலகுக்கு எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
பட்டாபிஷேகத்துக்குப் பிறகு நீதி தவறாது ராமராஜ்ஜியம் நடத்தி வந்த ஸ்ரீராமர், மக்களின் நலன் கருதி, நாட்டின் வளமைக்காக, வசிஷ்டர், விஸ்வாமித்திரர், அத்ரி முதலான மகரிஷிகளைக் கொண்டு யாகம் ஒன்றை நடத்தினார், அவர் அயோத்தியை அடுத்த அழகிய வனத்தில், பெரிய யாக குண்டங்கள் அமைத்து, முனிவர்கள் யாகத்தை நடத்திக்கொண்டு இருந்தனர். சக்கரவர்த்தி ஸ்ரீராமரின் ராஜ்ஜியத்துக்கு உட்பட்ட ஒரு சிறிய நாட்டின் மன்னன் சகுந்தன். அவன் ஒருநாள், வேட்டையாடிவிட்டு வரும்போது, யாகசாலைக்கு அருகில் வந்தான். தான் வேட்டையாடிவிட்டுத் திரும்பியிருந்தபடியால், யாகசாலைக்குள் நுழைவது சரியல்ல என்று கருதி, வெளியில் நின்றபடியே நமஸ்கரித்து, வசிஷ்டாதி முனிவர்களுக்கு என் வணக்கங்கள் என்று கூறிப் புறப்படத் தயாரானான். சகுந்தன் கூறிய வார்த்தைகள், நாரத முனிவரின் காதில் விழுந்தது. விறுவிறுப்பான நாடகம் ஒன்றைத் தொடங்க நினைத்தார்.
அற்புதமான கதைக்கு, கரு ஒன்று கிடைக்க... விடுவாரா நாரதர்? நேராக, விஸ்வாமித்திரரிடம் சென்றார். பார்த்தீர்களா மகரிஷி. இந்தச் சகுந்தன் சாதாரண சிற்றரசன். இவனுக்கு எத்தனைத் திமிர்? இங்கே, யாகசாலைக்கு முன்னே நின்றுகொண்டு, வசிஷ்டாதி முனிவர்களுக்கு வணக்கம் என்று கூறிச் செல்கிறான். அப்படியென்ன வசிஷ்டர் உயர்ந்துவிட்டார்? தாங்களும்தான் ஸ்ரீராமரின் குரு. தாங்களும்தான் இந்த யாகத்தை முன்னின்று நடத்துகிறீர்கள். தங்கள் பெயரையும் சொல்லி, ஒரு நமஸ்காரம் செய்திருக்கலாம் ? தங்களை வேண்டும் என்றே அவமானப்படுத்த, இவன் வசிஷ்டரை முதன்மைப்படுத்தி, மற்றவர்களைச் சிறுமைப்படுத்தி, அவருக்கு மட்டும் வணக்கம் செலுத்தியிருக்கிறான் என்றார் நாரதர்.
உடனே விஸ்வாமித்திரரின் முகம் கோபத்தால் சிவந்தது. கண்களில் தீப்பொறி பறக்க.. அவர் சாபமிடத் தொடங்குமுன், நாரதர் தடுத்து நிறுத்தினார். அந்த அற்பனுக்குச் சாபமிட்டு, தங்கள் தவ பலத்தை ஏன் குறைத்துக் கொள்ள வேண்டும்? தங்கள் சீடர் ஸ்ரீராமர். சகுந்தனோ அந்த ஸ்ரீராமரின் கீழே இருக்கிற சிற்றரசன். இவன் செய்த பிழையை ஸ்ரீராமரிடம் கூறி, இவனுக்கு உரிய தண்டனையை அவரையே தரச் சொல்லுங்கள் என்றார் நாரதர்.
விஸ்வாமித்திரருக்கும் அது சரியெனப்பட்டது. சில நாழிகைகள் கழித்து யாக சாலைக்கு வந்த ஸ்ரீராமரிடம், உன் குருவை ஒருவன் அவமதித்தால், அவனுக்கு நீ என்ன தண்டனை தருவாய்? என்று கோபத்துடன் கேட்டார். அவரை யாரோ அவமரியாதை செய்திருக்கிறார்கள் என்பதை ஊகித்துக் கொண்டார் ஸ்ரீராமர். குருதேவா! தங்களை அவமதித்தவர்கள் யாராயிருந்தாலும் சரி, அவர்களுக்குத் தக்க தண்டனையை தாங்களே கூறுங்கள். நிறைவேற்றி வைப்பது என் கடமை என்றார். சகுந்தன் என்னை அவமதித்து விட்டான். அவன் சிரசை இன்று சூர்ய அஸ்தமனத்துக்குள் என் காலடியில் சேர்க்கவேண்டும் என்று விஸ்வாமித்திரர் சொல்லி முடிக்கக் கூட இல்லை... தங்கள் ஆணைப்படியே செய்கிறேன். இது சத்தியம்! என்று வாக்களித்துவிட்டார் ஸ்ரீராமர்.
நாரதர் தொடங்கிய நாடகத்தின் முதல் காட்சி முடிந்தது.
ஸ்ரீராமர் செய்தியனுப்பினால் போதும், சகுந்தனே தன் தலையை வெட்டி ஒரு தட்டில் வைத்து அனுப்பிவிடுவான். இருந்தாலும், அது ஸ்ரீராமர் கடைப்பிடிக்கும் க்ஷத்திரிய தர்மத்துக்கு அழகாகுமா? எனவே, ஸ்ரீராமர் போர்க்கோலம் பூண்டு, சகுந்தனின் நாட்டை நோக்கிப் புறப்படத் தயாரானார்.
நாடகத்தின் இரண்டாவது காட்சியைத் தொடங்கினார் நாரதர். நேரே சகுந்தனிடம் சென்றார். என்ன காரியம் செய்து விட்டாயப்பா? வசிஷ்டரின் பெயரைச் சொன்னவன், விஸ்வாமித்திரர் பெயரையும் சொல்லியிருக்கக் கூடாதா? இப்போது பேராபத்தைக் தேடிக் கொண்டாயே! படையெடுத்து வருபவர் ஸ்ரீராமர் ஆயிற்றே! என்ன செய்யப் போகிறாய்? என்று ஆதங்கமாகக் கேட்டுவிட்டு, மற்ற விவரங்களையும் சொன்னார்.
நான் என்ன செய்ய முடியும் சுவாமி? இலங்கேஸ்வரன் ராவணனாலேயே எதிர்க்க முடியாத ஸ்ரீராமரை நான் எப்படி எதிர்க்க முடியும்? முடியாது. என் தலைதானே ஸ்ரீராமருக்கு வேண்டும்? அதைத் தாங்களே வெட்டியெடுத்துச் சென்று, அவரிடம் தந்துவிடுங்கள் என்று உருக்கமாகக் கூறி, சகுந்தன் தன் வாளை உருவ, நாரதர் அவனைத் தடுத்துச் சிரித்தார். சகுந்தா! உண்மையில் நீ விஸ்வாமித்திரரை அவமதிக்கவில்லையே... அப்படி இருக்கும்போது, ஏன் கலங்குகிறாய்? என்ற நாரதர், சகுந்தா.. உன் நாட்டை அடுத்த வனத்தில், ஆஞ்சநேயனின் தாய் அஞ்சனாதேவி ஆட்சி புரியும் கானகம் இருக்கிறது. அங்கே சென்று தவம் செய். அவள் கருணை மிக்கவள். அவளால் உனக்கு உயிர்ப்பிச்சை தரமுடியும். பிறகு, ராம பாணம்கூட உன்னை ஒன்றும் செய்யமுடியாது என்று உறுதி கூறினார் நாரதர்.
சகுந்தன் மனதில் நம்பிக்கை பிறந்தது. அஞ்சனாதேவி ஆட்சி புரியும் கானகம் சென்றான். அங்கே அக்னியை வளர்த்தான். அஞ்சனாதேவி சரணம் என்று பக்தியுடன் அக்னியைச் சுற்றிப் பலமுறை வலம் வந்து பிராணத் தியாகம் செய்யத் தயாரானான். தாயல்லவா அவள்! தன்னைச் சரணடைந்த குழந்தையை சாக விடுவாளா? அவன் முன் தோன்றி, குழந்தாய், கவலைப்படாதே! என்னைச் சரணடைந்த உயிருக்கு எந்த ஆபத்தும் நேராது. தீர்க்காயுஷ்மான் பவது என்று ஆசி கூறி, அவன் நீண்ட ஆயுள் வாழ வரம் தந்தாள். சகுந்தன் அவளது திருவடியில் விழுந்து வணங்கினான். நான் மரண கண்டத்தில் சிக்கியுள்ளேன், தாயே! ஸ்ரீராமர், என் சிரஸைத் தன் குருவின் காலடியில் சூர்ய அஸ்தமனத்துக்குள் சேர்க்கும் சபதம் பூண்டு, என் மீது போர் தொடுத்து வருகிறார். இப்போது நான் உயிர் பிழைக்க என்ன செய்ய வேண்டும் என அருளுங்கள் என்றான்.
அதைக் கேட்டுப் பதறிப் போனாள் அஞ்சனாதேவி. ஸ்ரீராமரின் பாணத்திலிருந்து சகுந்தனைக் காப்பாற்றுவது என்பது இயலாத காரியமாயிற்றே எனக் கலங்கினாள். இருந்தாலும், தான் உயிர்ப்பிச்சை அளித்தவனைக் காக்க வேண்டியது தன் கடமை என்பதில் உறுதியாக இருந்தாள். தன் வாக்கைக் காக்கும் பொறுப்பை, தன் மைந்தன் ஹனுமனிடம் ஒப்படைக்க முடிவு செய்தாள். தன் மகனை, தன் முன்னே தோன்றும்படி சங்கல்பித்தாள். அந்த நிமிடமே, எதிரே வந்து நின்று வணங்கினான் ஹனுமன்.
ஸ்ரீராமரின் பித்ரு பக்திக்கு ஹனுமனின் மாத்ரு பக்தி எந்த விதத்திலும் சற்றும் குறைந்ததல்ல. மகனே! இவன் சகுந்தராஜன். பிராணத்தியாகம் செய்யத் துணிந்தபோது, இவனைக் காப்பாற்றி, உயிர்ப்பிச்சை தருவதாக வாக்குறுதி தந்துவிட்டேன். என் வாக்கைக் காப்பாற்றும் பொறுப்பை இப்போது உன்னிடம் ஒப்படைக்கிறேன். இவனை எப்படியேனும் காப்பாற்று! என்று கட்டளையிட்டாள். அப்படியே ஆகட்டும் தாயே! என உறுதியளித்தான் ஹனுமன். பின்பு, தனது உயிரைப் பறிப்பதற்கு ஸ்ரீராமர்தான் தேடுகிறார் என்பதைச் சகுந்தன் சொல்ல.. சலனமே இல்லாமல் நின்றான் ஹனுமன்.
எதிர்ப்பது ஸ்ரீராமராக இருந்தால் என்ன? மும்மூர்த்திகளே ஆனாலும், என்ன? தாயிடம் அடைக்கலம் கேட்டு வந்தவனைக் காப்பது தன் கடமை எனும் உறுதியுடன் நின்றான். எந்த ஆபத்தையும் எதிர்க்கும் வல்லமையின் ரகசியம் ஒன்றை அவன் அறிந்து வைத்திருந்தான். தன் வாலை நீளமாக வளர்த்து, அதனை ஒரு கோட்டைபோல அமைத்தான். அதற்குள் சகுந்தனைப் பாதுகாப்பாக அமர்த்திவிட்டு, சிறு குரங்கின் உருவெடுத்து, வால் கோட்டையின் மேல் அமர்ந்துகொண்டு, தாய்க்குச் செய்யும் கடமைக்காகத் தாயினும் மேலான தலைவனையே எதிர்க்கத் தயாரானான்!
இதனிடையில் ராம - லட்சுமணர்களின் சைன்யம் சகுந்தராஜனின் தலைநகரில் புகுந்தது. உயிருக்குப் பயந்து, சகுந்தன் அஞ்சனா வனத்தில் மறைந்து இருப்பதை அறிந்து, ஸ்ரீராமர் அங்கே சென்று, போரைத் தொடங்கினார். சகுந்தராஜன் மறைந்திருக்கும் மலை போன்ற வால் கோட்டையை நோக்கி ஸ்ரீராமரின் அஸ்திரங்கள் சரமாரியாக வானில் பறந்தன. ஆனால், அவர் எய்த அஸ்திரங்கள் யாவும் அடுத்த சில விநாடிகளில் அவரின் திருவடிகளிலேயே திரும்பி வந்து விழுந்தன. அதிசயித்துப் போனார் ஸ்ரீராமர். யுத்தம் தொடர்ந்தது. ஸ்ரீராமர் கற்ற அஸ்திர வித்தைகள் அனைத்துமே தோற்று நின்றன.
இதற்கான காரணம் தெரியாமல் ஸ்ரீராமர் திகைத்து நிற்க, நாரத முனிவர் தான் போட்ட முடிச்சை அவிழ்க்க, அங்கே வந்து நின்றார். ராமா! உன் அஸ்திரங்களின் சிம்ம நாதமும், உனது யுத்த பேரிகையின் சப்தமும் ஒரு கணம் நிற்கட்டும். அப்போது இதன் காரணத்தை நீ அறியலாம் என்றார் சூசகமாக. ஒரு கணம் யுத்த பூமியில் அமைதி தோன்றியது.
அப்போது எங்கிருந்தோ, காற்றில் மிதந்து வந்த ராம்.. ராம் என்னும் ராம நாம சப்தம் கேட்டு, அனைவரும் மெய்சிலிர்த்தனர். அது ஹனுமனின் குரல்தான். அவன் ஒருவனால்தான் ராம நாமத்தை அத்தனை பக்தியோடும் சக்தியோடும் ஜபிக்க முடியும் என்பது ஸ்ரீராமருக்குத் தெரியும்.
நாடகத்தின் இறுதிக் காட்சிக்கு வந்தார் நாரதர்.
ராமா! உன் திருநாமத்தின் சக்திக்கு முன்னால், உன்னாலேயே எதுவும் செய்ய முடியாது. உன் நாமம் அத்தனை புனிதமானது. சக்தி வாய்ந்தது. உலகின் எந்த சக்தியாலும் உன் நாமத்தை எதிர்த்து நிற்க முடியாது. காலத்தால் அழியாத பெருமை வாய்ந்தது உன் நாமம். அதிலும், அதனை ஆஞ்சநேயன் ஜபிக்கிறான் என்றால், அதை வெல்ல எவராலும் முடியாது? என்று கூறி, நடந்ததையெல்லாம் விளக்கினார்.
ஹனுமன் ராம நாமம் ஜபிப்பதை நிறுத்தினால்தான், உன் அஸ்திரங்கள் இந்த எல்லையைக் கடக்கும். ஹனுமனை அழித்தால்தான் அந்த நாமம் ஒலிப்பது ஓயும். அவன் இதயத்திலோ, ஸ்ரீராமனையோ பிரதிஷ்டை செய்து வைத்திருக்கிறான். அவனை அழிப்பது சுலபமல்ல. ஆனால், ஹனுமனை வென்றால்தான் சகுந்தனை வெல்ல முடியும். அப்படியெனில், ஸ்ரீராமன் தன்னையே அழித்துக்கொண்டால்தான் இது சாத்தியமாகும் என்று சிக்கலை மேலும் சிக்கலாக்கி, நாரதர் விளக்கியபோது, வேண்டாம் ராமா, வேண்டாம்! இந்த விபரீதத்துக்கு என் அகந்தையே காரணம். போரை நிறுத்திவிடு. சகுந்தன் நிரபராதி என்று கூறியபடியே, ஓடி வந்தார் விஸ்வாமித்திரர்.
சரி... ஆனால், சகுந்தனின் சிரசை சூரிய அஸ்மனத்துக்குள் விஸ்வாமித்திரரின் பாதத்தில் சேர்ப்பதாக வாக்களித்தாரே ஸ்ரீராமர்! அது என்ன ஆவது? ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் வாக்கு பொய்ப்பதா? அதற்கும் ஒரு வழி சொன்னார் நாரதர். சகுந்தராஜனை நாரதர் அழைக்க, அவன் வால் கோட்டையிலிருந்து வெளியே வந்து, விஸ்வாமித்திரர் பாதங்களில் தன் சிரம் படும்படி நமஸ்கரித்தான்.
சகுந்தன் சிரசைத் தன் காலடியில் சேர்க்க வேண்டும் என்று தானே அவர் கேட்டிருந்தார். ஆக, ஸ்ரீராமரின் வாக்கும் பொய்க்கவில்லை. சகுந்தனின் சிரம் விஸ்வாமித்திரரின் பாதங்களில் சேர்ந்தது. அஞ்சனாதேவியின் வாக்கும் பொய்க்கவில்லை. ஹனுமனும் எடுத்த கடமையில் இருந்து தவறவில்லை.
ஸ்ரீராம நாமத்தின் பெருமையை ஸ்ரீராமரே தெரிந்துகொள்ள நாரதர் நடத்திய நாடகம் இது!
(தொகுத்தளித்த வலைப்பதிவர் Karthikeyan தகவல்களுக்கு மிக்க நன்றி.)

51 விநாயகர் வடிவங்களும் பலன்களும்

51 விநாயகர் வடிவங்களும்
அந்த வடிவங்களை வணங்குவதால் நாம்அடையும் பலன்களும்
1. ஏகாக்ஷர கணபதி: பரிபூரண சித்தி.
2. மகா.கணபதி: கணபதி அருள் கிடைக்கும்
3. த்ரைலோக்ய. மோஹன கர கணபதி: ஸர்வ ரக்ஷாப்ரதம்.
4. லக்ஷ்மி கணபதி: தன அபிவிருத்தி
5. ருணஹரள கணபதி: கடன் நிவர்த்தி.
6. மகா வித்யா கணபதி: தேவ அனுக்ரகம்.
7. ஹரித்ரா கணபதி: உலக வசியம்.
8. வக்ரதுண்ட கணபதி: அதிர்ஷ்ட லாபம்.
9. நிதி கணபதி: நிதி ப்ராப்தி.
10. புஷ்ப கணபதி: தானிய விருத்தி.
11. பால கணபதி: மகிழ்ச்சி, மன நிறைவு.
12. சக்தி கணபதி: சர்வ காரியசித்தி.
13. சர்வ சக்தி கணபதி: சர்வ ரக்ஷாப்ரதம்.
14. க்ஷிப்ர ப்ரஸாத கணபதி: துரித பலன்.
15. குக்ஷி கணபதி: ரோக நிவர்த்தி.
16. ஸ்ரீ சந்தான லட்சுமி கணபதி: மக்கட்செல்வம்.
17. ஸ்ரீ ஸ்வர்ண கணபதி: ஸ்வர்ண பிராப்தி.
18. ஹேரம்ப கணபதி: மனச்சாந்தி.
19. விஜய கணபதி: வெற்றி.
20. அர்க கணபதி: தோஷ நிவர்த்தி.
21. ச்லேதார்க்க கணபதி: மாலா மந்திரம்.
22. உச்சிஷ்ட கணபதி: திரிகால தரிசனம்.
23. போக கணபதி: சகலலோக ப்ராப்தி.
24. விரிவிரி கணபதி: விசால புத்தி.
25. வீரகணபதி- தைரியம்.
26. சங்கடஹர கணபதி: சங்கட நிவர்த்தி.
27. கணேசாங்க நிவாரணி: லட்சுமி மந்திர சித்தி.
28. விக்னராஜ கணபதி: ராஜயோகம்.
29. குமார கணபதி: மாலா மந்திரம்.
30. ராஜ கணபதி: மாலா மந்திரம்.
31. ப்ரயோக கணபதி: மாலா மந்திரம்.
32. தருண கணபதி: தியானயோக ப்ராப்தி.
33. துர்கா கணபதி: துக்க நிவாரணம்.
34. யோக கணபதி: தியானம்.
35. நிருத்த கணபதி: கலா பிவிருத்தி.
36. ஆபத்சகாய கணபதி: ஆபத்துகள் நீங்குதல்.
37. புத்தி கணபதி: வித்யா ப்ராப்தி.
38. நவநீத கணபதி: மனோவசியம்.
39. மோதக கணபதி: சம்பூர்ண பலன்.
40. மேதா கணபதி: மேதா பிவிருத்தி.
41. மோஹன கணபதி: ரக்ஷாப்ரதம்.
42. குரு கணபதி: குருவருள்.
43. வாமன கணபதி: விஷ்ணு பக்தி.
44. சிவாவதார கணபதி: சிவபக்தி.
45. துர்வாக கணபதி: தாப நிவர்த்தி.
46. ரக்த கணபதி: வசிய விருத்தி.
47. அபிஷ்டவாத கணபதி: நினைத்ததை அடைதல்.
48. ப்ரம்மண கணபதி: ப்ரம்ம ஞானம்.
50. மகா கணபதி: ப்ரணவமூலம்.
51. வித்யா கணபதி: ஸ்ரீ வித்தை

ஹோம மந்திரங்களும், ஹோமத்தின் பலன்களும் ...

1. ஸ்ரீ சக்தி பஞ்சாக்ஷரீ – சகல யோகமும் சௌபாக்யமும் உண்டாக.
2. சுத்த பஞ்சாக்ஷரீ – மனோரத இஷ்ட காம்யார்த்த அபிலாக்ஷைகள் நிறைவேற.
3. சிவ அஷ்டாக்ஷரீ - ஸர்வ சத்ரு, மிருக, ரோக உபாதிகள் நீங்க.
4. சிவ பஞ்ச தசாக்ஷரீ – அஷ்ட ஐஸ்வர்யப் பிராப்தி அடைய.
5. சிதம்பர பஞ்சாக்ஷரீ – ஞான வைராக்யம், சிவ கடாக்ஷம் பெற.
6. குரு தாரக பஞ்சாக்ஷரீ – ஸகல ஜன வசீகரணம், ராஜாங்க வெற்றி, தேவதா ப்ரீதி உண்டாக.
7. ம்ருத்யுஞ்ஜய த்ரயக்ஷரீ – அகால, அபம்ருத்யு பயம் நீங்க, ஆயுள் விருத்தியடைய.
8. சிதம்பர சபாநடன மந்த்ரம் – அனைத்து பாப தோஷ பரிகாரம், ரக்ஷா பந்தனம்.
9. நீலகண்ட மந்த்ரம் – எதிர்பாராத கொடிய ஆபத்தினின்று மீளல், தவிர்த்துக் கொள்ள.
10. மஹா நீலகண்ட மந்த்ரம் – பூதப்பிரேத பிசாச உபத்ரவம், ஸர்வாரிஷ்டம் நிவாரணம்.
11. த்வனி மந்த்ரம் – மன சாந்தி, சந்தி, சந்துஷ்டி, சிவானந்த அநுபூதி பெற.
12. சிவ காயத்ரீ – நினைவுத்திறன், சமயோசித புத்தி, புதிய யுக்தி, வாக்சாதூர்யம் கூட.
13. மார்கதர்சீ சிவ மந்த்ரம் – பிரயாண சௌகர்யம், எவ்வித ஆபத்துகளும் விபத்துகளும் நேராதிருக்க.
14. ருணமோசன சிவ மந்த்ரம் – கடன் நீங்க, தேவ, பித்ரு ரிஷி கடன் அடைதல், பணவரவு, சேகரிப்பு அதிகரிக்க.
15. பசுபதி காயத்ரீ – ஸகல வித திருஷ்டி விலக, வழக்கில் வெற்றி, குடும்ப மகிழ்ச்சி ஏற்பட.
16. சிவ நவாக்ஷரீ - கார்யா தடைகள், தேக்கநிலை தீர்வு, நிர்வாகத் திறன் கூடுதல், புது முயற்சிகள் பலிதம்.
17. பாசுபதாஸ்த்ரம் – பூதப்பிரேத பிசாச உபத்ரவம், ஸர்வாரிஷ்டம் நிவாரணம், ஆபிசார தோஷம், செய்வினைகள் அகல.
18. ருத்ர காயத்ரீ – பாப தோஷ விமோசனம், நிரந்தர ஜயம்.
19. வித்யாப்ரத சிவமந்த்ரம் – புத்திகூர்மை, மேதா விலாஸம், சொல் வசீகரணம், ஸரஸ்வதி கடாக்ஷம் பெற.
20. உமாமஹேஸ்வர மந்த்ரம் – குடும்ப ஒற்றுமை அன்யோன்யம், மட்டற்ற மகிழ்ச்சி, குதூகலம் பெற.
21. ஆபத்துத்தாரக கௌரீவல்லப மந்த்ரம் – எல்லா ஆபத்துக்களும் தடைகளும் நீங்கி, நிரந்தர ஜயம் உண்டாக.
22. ஸர்வபாபஹர பவ மந்த்ரம் – அனைத்து பாப தோஷங்களும், அனாசார பாதிப்பும் விலகுதல்.
23. ரக்ஷாப்ரத கௌரீ சிவ மந்த்ரம் – சீரான உடல் நலம், முகப்பொலிவு, மறுமலர்ச்சி, ஆரோக்கியம் கூடுதல்.
24. ம்ருத் ஸஞ்சீவினி – அகால, அபம்ருத்யு பயம் நீங்கல், ஆயுள் விருத்தி.
25. பஞ்சதசீ சிவ மந்த்ரம் – ஸகல கார்ய சித்தி, செயற்கரிய செயல் செய்தல், வாழ்வில் ஏற்றம்.
26. சுதர்ஸன மந்த்ரம் – செய்வினை, சத்ருக்களின் தொல்லை, வியாபாரத் தடை நீங்குதல், மனச்சாந்தி அடைய.
27. லக்ஷ்மி ந்ருஸிம்ஹ மந்த்ரம் – பணவரவு, கடன் நிவாரணம், பணப்புழக்கம், குடும்ப மகிழ்ச்சி.
28. சுதர்ஸன நரஸிம்ஹ மந்த்ரம் – எதிரிகள் தொல்லை, வழக்கு வியாஜ்யம், குடும்ப-தொழில் குழப்பங்கள் நீங்க.
29. வாஸுதேவ மந்த்ரம் – வறுமை, கிலேசம், சந்தேகம், தீவினைகள் அகன்று இம்மை மறுமை நலன்கள் கொழிக்க.
30. விஸ்வரூப மந்த்ரம் – சதுர்வித புருஷார்த்தங்கள், மனோபலம், ஜயம், அசைகள் பூர்த்தியாக.
31. கந்தர்வராஜ மந்த்ரம் – தடை நீங்கி திருமணம், குடும்ப சூழ்நிலைச் சிக்கல்கள் நிவர்த்தி, சுப கார்யங்கள் நடைபெற.
32. ஹயக்ரீவ மந்த்ரம் – புத்தியும் சக்தியும் தூண்டப்படுதல், கல்வியில் ஏற்றம், மஹாவித்வத்வம், இனிய சொல் மெய்யுணர்வு.
33. நாமத்ரயம் – அனைத்து பாப விமோசனம், சுமுக சூழ்நிலை ஏற்பட.
34. சுதர்ஸன அபரோ மந்த்ரம் – ரக்ஷா ப்ரதானம், அடிமன பயம் நீங்குதல், மனநிறைவு, நிம்மதி.
35. நரஸிம்ஹ மந்த்ரம் – பணவரவு, கடன் நிவாரணம், பணப்புழக்கம், குடும்ப மகிழ்ச்சி, நோய் வறுமை நீங்கி ஸகல சம்பத்துகள் அடைய.
36. கருட மந்த்ரம் – விஷம், ஸர்ப்ப தோஷம், துஷ்ட மிருக பயம் விலக.
37. மஹா கருட மந்த்ரம் - அதைர்யம், பாபம், விஷக்ரஹ தோஷங்கள், துஷ்டர் பயம் ஆகியன விலக.
38. தன்வந்த்ரீ மந்த்ரம் – முதுமை, நோய், பய உணர்ச்சி அகன்று யௌவனம், தைர்யம், தேகஒளி, தீர்க்காயுஸ், ரோகமின்மை ஏற்பட.
39. கருட காயத்ரீ மந்த்ரம் – தாமதம் நீங்கி எண்ணிய காரியம் முடிதல், சீக்ர கார்யசித்தி பெற.
40. சுதர்ஸன காயத்ரீ மந்த்ரம் – ஞானம், சக்தி, பலம், ஐஸ்வர்யம், வீர்யம், தேஜஸ் பெற்று சௌகர்யம் ஏற்பட.
41. தன்வந்த்ரீ காயத்ரீ மந்த்ரம் – முதுமை, நோய், பய உணர்ச்சி அகன்று யௌவனம், தைர்யம், தேகஒளி, தீர்க்காயுஸ், ரோகமின்மை, மன்மதஸ்வரூபம் ஏற்பட.
42. வித்யா கோபால மந்த்ரம் – வித்யா பிராப்தி, நினைவாற்றல், வாக்குவன்மை, மேதா விலாசம் கூடுதல்.
43. அன்ன கோபால மந்த்ரம் – அன்னபானாதி சம்விருத்தி, தன்னிறைவு பெற.
44. சௌபாக்யலக்ஷ்மீ மந்த்ரம் – லக்ஷ்மி கடாக்ஷம், தாபத்ரய நிவர்த்தி, அஞ்ஞான நிவர்த்தி.
45. க்ஷேத்ர ப்ராப்திகர மந்த்ரம் – பூமி லாபம், குபேர சம்பத்து ஸ்திர லாபம் பெற.
46. க்ஷேத்ர ப்ராப்திகர அபேரா மந்த்ரம் – இந்த்ர பதவி, பொன் விளையும் பூமிக்கு அதிபதி, லோக பிரசித்தி, ஸ்திரத்தன்மை அடைய.
47. த்ருஷ்டி துர்கா மந்த்ரம் – ஸர்வ திருஷ்டி தோஷ பரிகாரம், முன்னேற்றம்.
ஹரிஹர மந்த்ரம்
" ஓம் ஓம் நமசிவாய, ஓம் நமோ நாராயணாய, ஓம் நமோ நாரயணாய ஓம் ஓம் நமசிவாய "

தடை விளகும் வெட்டு மந்திரம்

தடை வெட்டு மந்திரம் இது வியாபாரம் முதல் திருமணம் வரை எதுவாக இருந்தாலும் சரி. மாந்திரீக வேலைகள் செய்யும் போது சில தடைகள் ஏற்பட்டாலும் சரி. எந்த காரியமாக இருந்தாலும் வெற்றியடைய முயற்சிக்கும் முறையாகும்
முதலில் வினாயகர் வெட்டு மந்திரம் பயன் படுத்தி தேங்காய் வெட்டி பின்னரே மற்றய வெட்டு மந்திரங்கள் உபயோகிக்க வேண்டும்.
வினாயகர் வெட்டு மந்திரம்.
ஓம் கங் கங் கணபதி கவுரி புத்திராயா விக்கன வினாயக மூர்த்தியே உன்னோடெதிர்த்த கஜமுகா சூரணை சங்ஙரித்தால் போலே என்னோடெதிர்த்த சத்திராதிகளையும் சர்வ தடங்கள்களையும் சங்ஙரி சங்ஙரி சக்தி புத்திராயா சர்வ தடைகளையும் அறு அறு சுவாகா.
மூல மந்திரம்
ஓம் றாங் றீங் வினையறு கங் கங் கணபதி கவுரி புத்திராயா நம.
தேங்காய் வெட்ட
தேங்காய் எடுத்து மஞ்சல் சந்தனம் பூசி அதில் கற்பூரம் ஏற்றி 9 முறை உரு செய்து நிலத்தில் வைத்து (அட்சரத்தில்) வெட்டவும். ஒரே வெட்டாக இருக்க வேண்டும் அப்போது தேங்காய் இரண்டு பக்கமும் நிமிர்ந்து நின்றால் தடை விளகியது என்று அர்த்தம், ஒரு பக்கம் கவுந்தாலும் அல்லது இரண்டும் கவுந்தாலும் தடை இருக்கிறது என்று அர்த்தம், தடை விளகும் வரை தேங்காய் வெட்டவும்.
நன்றி :-http://jai-mangal.blogspot.in/

இறைவனை தரிசிக்க‍ கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்

ஆண்டவனை நினைத்துக் கொண்டே இருங்கள். காலம் கனியும் போது ஆண்டவன் நம்மை நினைப்பார்.

1. ஆலய நுழைவாயிலில் கை கால்களை கழுவிவிட்டு உள்ளே செல்லுங்கள். தலையில் நீரைத் தெளிக்க வேண்டாம்.
2. முதல்நாள் இரவே பரிகார ஸ்தலத்திற்கு சென்று விடுவது நல்லது.
3. போகும்போதோ வரும்போதோ உறவினர் வீடு மற்றும் பிற ஸ்தலங்களுக்கு செல்ல வேண்டாம்.
4. குடும்பத்தோடு செல்வது நல்லதுதான். அதற்காக பூஜையை வாரக்கணக்கில் தாமதப்படுத்தக் கூடாது.
5. புறப்படுவதற்கு 24 மணி நேரம் முன்பும், பின்பும் அசைவ உணவு, மது இவற்றை தவிர்ப்பீர். மற்ற விஷயங்களிலும் கட்டுப்பாடு தேவை.
6. போகும்போதோ வரும்போதோ யாருக்கும் பிச்சை போட வேண் டாம்.
7. பெண்கள் வீட்டுக்கு விலக்காகி 7 நாட்கள் கழித்துச் செல்வது நல்லது.
8. யாரிடமும் கடன் வாங்கி செல்ல வேண்டாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் பூஜைக்கென்று சொல்லி வாங்காதீர்.
9. போகும்போதோ வரும்போதோ குல தெய்வத்தை வழிபடலாம். தோஷமில்லை.
10. தர்ப்பணம் கொடுக்காதவர்களுக்கு எந்த பூஜையும் பலன் தராது.
11.சுவாமி தரிசனம் சிலமணி நேரம் ஆகும் என்பதால் புறப்படுவதற்கு முன்பு பன், டீ, பிஸ்கட், காபி, ரஸ்க், டிரை ப்ரூட்ஸ், கூல்ட்ரிங்ஸ், போன்ற உணவு வகைகளை சாப்பிடலாம்.
12. பரிகாரங்கள் அனைத்தையும் தாங்களே முன்னின்று செய்யவும்.
13.ஆலயம் வர இயலாதவர்கள், வெளிநாடுவாசிகள், விரும்பாதவர் கள் இவர்களுக்கு அவர்களது இரத்த உறவுக்காரர்கள், விசுவாச முள்ளவர்கள் குருமார்கள் பூஜை செய்தால் பலிதமாகும்.
14. பூஜைக்காக தாங்கள் நேரம், பணம் செலவழிப்பது பெரிய விஷ யமல்ல. கணிந்த, தாழ்ந்த, முறையான பக்தி மனோபாவமே பலனை நிர்ணயம் செய்கிறது.
15. முக்கிய பூஜை சம்பந்தப்பட்ட விஷயங்களை பிறரிடம் சொல் லாமல் இருப்பது நல்லது.
16. பூஜை சம்பந்தப்பட்ட கிரகத்தின் நாள் ஹோரையில் செய்யுங்கள்.
17. தேவையான காலம் வரை வருடத்திற்கு ஒரு முறையாவது இப் பூஜையை செய்ய வேண்டும்.
18. எல்லா ஆலயங்களுக்கும் சம்பந்தாசம்பந்தமின்றி சென்று வரு வது பயனற்றது.
19. பொழுதுபோவதற்காக (சுற்றுலா) ஆலயம் செல்லாதீர்.
20.தங்கள் சக்திக்கேற்றபடி பூஜை செய்ய வேண்டும். வசதியுள்ளவர் கள் சாதாரண பூஜை செய்தால் பலிக்காது. எளியவர்கள் கடன் வாங்கி பெரிதாக செய்ய வேண்டாம்.
21. பூஜைக்கு அமாவாசை, பவுர்ணமி தங்கள் பிறந்த நாள், சித்திரை 1, ஜனவரி 1 போன்றவை உகந்தவை.
22. தலங்களுக்கு செல்வதற்கு முன் 1 நாளும், பின் 1 நாளும் இறந்தவர் வீட்டிற்கு செல்லாதீர்.
23. நெருங்கிய உறவினர் இறந்துவிட்டால் ஐயர் அல்லது ஜோதி டரைக் கேட்டு தகுந்த காலம் கடந்து தரிசிக்க வேண்டும்.
24. வசதியுள்ளவர்கள் புத்தாடை அணிந்து செல்லலாம்.
25. மாலை நேர பூஜைக்கு காலை அணிந்த உடையை அணியாதீர்.
26. ராகுகால பூஜையைத் தவிர மற்ற பூஜைகளை காலை 7.00 மணிக்குள் ஆரம்பித்து விட வேண்டும்.
27. பொருட்கள் தரமாக இருந்தால் அனைத்தையும் பரிகார ஸ்தல த்தில் வாங்குவது சிறந்தது.
28. அதிகம் பேரம் பேச வேண்டாம்.
29. முதலில் விநாயகர், அருகம்புல் வைத்து பிரார்த்தித்து, ஒரு தேங்காயை வலது கையில் வைத்துக்கொண்டு 1 பிரதட்சணம் வந்து பூஜையைத் துவங்கி ஒதுக்கப்பட்ட இடத்தில் அந்த சிதறு காயை உடையுங்கள்.
30. ஆலயத்திற்குள் யாருடனும் பேச வேண்டாம். செல்போன்களைத் தவிர்க்கவும்.
31. வெற்றிலைக்கு நுனியும், வாழைப் பழத்திற்கு காம்பும் இருக்க வேண்டும். வில்வம் மற்றும் தாமரைப்பூவிற்கு இதழ்கள் மட்டுமே உயர்ந்தவை. காம்பு, மஞ்சள் கரு, உள் இழைகள் இருக்கக்கூடாது.
32. வெற்றிலை, வாழைப்பழம், தேங்காய், உதிரி புஷ்பங்கள், பழ வகைகள், மண் விளக்கு, ஸ்பூன், அலங்கார மாலை,அர்ச்சனைத் தட்டு முதலியவற்றை கழுவி எடுத்துச் செல்லவும்.
33. சிதறு காயைத் தவிர மற்ற காய்களை மஞ்சள் தடவி (இளநிற மஞ்சள்) எடுத்துச் செல்லுங்கள்.
34. மண்விளக்குகளில் ஐந்து இடத்தில் மோதிர விரலால் மஞ்சள், குங்குமம் வைக்க வேண்டும். இதற்கு சந்தனம் உபயோகிக்கக் கூடாது.
35. பூஜை சாமான்களை கைகளில், பிளாஸ்டிக் பைகளில் கொடுக் காமல் பித்தளை, எவர் சில்வர் தாம்பாளம், கூடை இவற்றில் வைத்துக் கொடுங்கள்.
36. நைவேத்யம் அந்தந்த ஆலய மடப்பள்ளியில் தயார் செய்ய வேண்டும். நீங்கள் தயாரித்து எடுத்துச் செல்லக்கூடாது.
37. பால்கோவா, ஸ்வீட்ஸ், அவல் பொரி, கடலை இவற்றையும் நைவேத்தியமாகப் பயன்படுத்தலாம்.
38. திரி, தீப்பெட்டி, டிஸ்யூ பேப்பர், கேண்டில், நெய் துடைக்க துணி, ஸ்பூன் முதலியவற்றை எடுத்துச் செல்லவும்.
39. திரை போட்ட பின் பிரதட்சணம் வர வேண்டாம்.
40. விநாயகருக்கு ஒன்று. தனி அம்பாளுக்கு இரண்டு. சிவனைச் சார்ந்த அம்பாளுக்கு மூன்று என்ற கணக்கில் வலம் வாருங்கள்.
41. ஒரு பிரதட்சணம் முடிந்ததும் கொடி மரத்தடியில் கைகூப்பி நின்று வணங்கியதும் அடுத்ததை துவங்கவும்.
42. கொடிமரத்தடியைத் தவிர வேறெங்கும் விழுந்து வணங்கக் கூடாது.
43. ஸ்பெஷல் எண்ட்ரன்ஸ் வழியாகச் சென்றால் சிறப்பான நிம்மதி யான தரிசனம் கிடைக்கும். வசதி இருப்பின் செய்து கொள்ளவும். குற்ற உணர்ச்சி தேவையில்லை.
44. பிற தீபங்களிலிருந்து உங்கள் தீபத்தை ஏற்ற வேண்டாம்.
45. நெய் அல்லது எண்ணையை பிற விளக்குகளில ஊற்ற வேண் டாம்.
46. அபிஷேக ஆராதனைகளும், ஹோமங்களும் உயர்வு தரும்.
47. பரிகாரம் சம்பந்தப்பட்டவர்களுக்கு விபூதி, பிரசாதம் அனுப்பி வைக்க வேண்டும்.
48. பரிகாரம் செய்யும் நேரத்தில், பரிகாரம் சம்பந்தப்பட்ட நபர் வீட்டில் உறங்கக் கூடாது.
49. பூஜை செய்து கொண்டிருக்கும் சமயம், யாராவது பிரசாதம் கொடுத்தால், அதை பெற்றுக்கொண்டு பூஜை முடிந்தபின் உண் ணவும்.
50. பரிகாரம் செய்தபின் பூஜை பொருட்களை அங்கேயே கொடுத்து விடுவது நல்லது. பசுமாட்டிற்கு வாழைப்பழம், மற்றவற்றை ஐயரிடம் கொடுக்கலாம். சிப்பந்திகளிடமும் கொடுக்கலாம்.
51. பிரத்யேக கனி வகைகளை வைத்துப் படைப்பது நல்லது. எலுமி ச்சை, மாதுளை, ஆப்பிள், சாத்துக்குடி, ஆரஞ்சு, மா முதலியன.
52. வேகமாக ப்ரதட்சணம் வராமல் பொறுமையாக நமச்சிவாய என்ற 5 எழுந்து மந்திரத்தை உச்சரித்தபடி பொறுமையாக வருவது நல்லது. ஓம் சிவ சிவ ஓம் ஜெபிக்கலாம்.
53. பலன் முழுமையாகப் பெற 1 வருஷ காலம் வரை ஆகலாம். நமக்கு 1 வருஷம் என்பது ஆண்டவனுக்கு 1 நாள்.
54. ஒவ்வொரு ஆலயத்திலும் தீபம் ஏற்றுவதற்கென்று உரிய தனி யான இடத்தில் ஏற்றவும், சிலைகள் அருகில் ஏற்றக்கூடாது.
55. சுவாமியைத் தொடாமல் பூஜிக்கவும்.
56. பூஜை செய்த சாமான்கள் பூஜை செய்யாதவற்றுடன் சேர்ந்து விடக் கூடாது.
57. நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங் களுக்காக 5 மூக்கு தீபம் ஏற்ற வேண்டும்.
58. திரி கனமாக இருந்தால் தீபம் நின்று எரியும். தீபம் ஏற்றிய பின் விளக்குகளை தூக்கி தீபம் காட்டுவது, நகற்றுவது கூடாது. தீபத் துடன் பிரதட்சணம் வருவது தவறு.
59. ஒரு கையில் விபூதி, குங்குமம் வாங்கக்கூடாது. இடது கையை
கீழே வைத்து வலது கையை மேலே வைத்து பௌவ்யமாக பெற்றுக் கொள்ள வேண்டும். விபூதி, குங்குமத்தை பேப்பரில் வாங்ககூடாது.
60. பெற்ற விபூதி குங்கும பிரசாதத்தை கீழே கொட்டாமல் வீட்டிற்கு பேப்பரில் மடித்து எடுத்துச் செல்லவும்.
61. விபூதியை நிமிர்ந்து நின்று அப்படியே பூசிக் கொள்ளவும். இடது கையில் வைக்க வேண்டும்.
62. பரிகாரங்கள் அனைத்தும் தங்கள் ஜோதிடரின் அறிவுரைப்படி வரிசைக் கிரமமாக இருக்க வேண்டும்.
63. அலங்கார மாலை அவசியமானது தான். ஆனால் மாலையை விட உதிரிப்பூக்கள் விசேஷமானது.
64. அருகம்புல், வில்வம், தாமரைப்பூ, சம்பங்கி, சாமந்தி, பச்சை, மரிக் கொழுந்து, சங்குப்பூ, நீலப்பூ, துளசி, மல்லிகை, ரோஜா, பன்னீர் ரோஜா, விருட்சிப்பூ போன்ற பூ வகைகளால் பூஜிப்பது நல்லது.
65. காளி, துர்கா, முருகனுக்கு பஞ்ச அரளிப் பூக்கள் விசேஷமானது.
66. அம்பாளுக்கு மெருன் நிற குங்குமமே சிறந்தது.
67. எண்ணையை விட நெய்க்கு வீரியம் மிக அதிகம்.
68. சாதாரண மாலையை வாங்காமல் பாதம் வரையிலுள்ள வாகை மாலையை வாங்குங்கள்.
69. சுவாமி சன்னதியில் ஸ்தோத்திரங்கள் பாடுவது பிறருக்கு தொல்லையாக அமையும். அமைதி தேவை. அல்லது மெல்லிய குரலில் பாடவும்.
70. கஜ பூஜை, ஒட்டக பூஜை, கோ பூஜை, சிப்பந்திகளுக்கு தட்சணை தருவது இவை பூஜையின் பலனை அதிகரிக்கும். ஜீவகாருண்யம் உயர்வு தரும்.
71.சிவன், அம்பாளை மட்டும் தரிசிப்பது சரியல்ல. பரிவார தேவதைகள் என வழங்கப்படும் பிற சன்னதிகளிலும் வழிபாடு தேவை. நெய் தீபம் ஏற்றி உதிரி புஷ்பங்களை சமர்ப்பிக்கலாம்.
72. வாழைப்பழத்தில் பூவம் பழம் உயர்ந்தது. அடுத்து நாட்டுப்பழம்.
73. சூடம் ஏற்றினால் புகையினால் இடம் மாசுபடும்.
74. ஆலயத் தூய்மை ஆலய தரிசனத்தை விட முக்கியமானது.
75. தல வரலாறு புத்தகம் வாங்கி ஸ்தலம் சம்பந்தப்பட்ட அனைத்து விசேஷங்களையும் தெரிந்துகொள்வது பூஜைக்கு உதவும்.
76. கோயிலுக்குள் சில்லறை கிடைக்காது. ரூ. 10,50,100 என மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். சில்லறைக் காசுகள் போடுவதைத் தவிர்ப்பீர்.
77. கூட்டம் அலைமோதும் ஸ்தலங்களில் பொறுமை தேவை.
78. காசு செலவழித்து செல்பவர் மீது பொறாமை வேண்டாம். நிர்வாகத்திற்கு பணம் தேவை.
79. வி.ஐ.பி. க்கு முன்னுரிமை கொடுப்பதில் எவ்வித தவறும் இல்லை. அது நியாயமானதுதான்.
80. விபூதி குங்குமம் வாங்கும் முன்பே பிராமணருக்கு தட்சணை கொடுத்து விட வேண்டும்.
81. சங்கல்பம் மிக முக்கியம்.
82. கோபுர தரிசனம் கோடி நன்மை.
83. சண்டிகேஸ்வரருக்கு கடைசிப் பிரகாரத்தில் தீபம் ஏற்றி வழி படுங்கள். அமைதியாக கையை தட்டுங்கள். சொடுக்குப் போடாதீர்.
84. கொடி மரத்தடியில் வடக்குப் பார்த்து விழுந்து வணங்கி பிரார் த்தனையை நிறைவேற்ற வேண்டும்.
85. பிறகு சற்று விலகி கீழே அமர்ந்து 1 நிமிஷம் தியானம் பண்ணி பிரார்த்தனையை நிறைவேற்றவும்.
86. ஆரம்பத்தில் விநாயகரிடம் விடுத்த வேண்டுகோள்தான் இறுதி வரை இருக்க வேண்டும். மாறக்கூடாது.
87. பிரார்த்தனைகள் 1 அல்லது 2க்கு மேல் இருக்கக்கூடாது.
88. காவல் தெய்வங்கள் இருந்தால் அவர்களை வழிபட்ட பிறகே விநாயகர் வழிபாடு செய்ய வேண்டும்.
89. இத்தகைய பூஜைகள் காரியசித்தி பூஜைகள் தானே தவிர கர்ம வினைகளை முற்றிலும் மாற்றாது. ஆனால் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தும்.
90. பூஜைக்கு முன்னுரிமை பெறுபவை. 1.பித்ருக்கள், 2.குல தெய்வம், 3.விநாயகர், 4.திசாநாதன், 5.பிரச்சனை அல்லது கோரி க்கை சார்ந்த தெய்வம்.
91. நவக்கிரகங்கள் சம்பந்தமின்றி நேரடியாக செயல்படும் ஆற்றல் முனீஸ்வரர், அனுமார், பசு, யானை இவர்களுக்கு உண்டு.
92. இயன்றவரை இறைவனைப் பற்றிய சிந்தனையிலேயே இருங் கள்.
93. தோஷ நிவர்த்திப் பூஜாக்களை இளம் வயதிலேயே 30 வயதி ற்குள் செய்து விடுங்கள்.
94. ஸ்தோத்ர பாராயணம் எல்லோருக்கும் அவ்வளவு பலன் தராது.
95. கடுமையான விரதங்களை மேற்கொள்வது, அடிக்கடி பட்டினி கிடப்பது இவற்றை தவிர்க்கவும்.
96. இயல்பான முழுமையான நம்பிக்கையுடன், நேர்த்தியாக, பூரண மன அமைதியுடன் பிரார்த்தனை செய்யுங்கள்.
97. பூஜைக்கு விபூதி, குங்குமம், மஞ்சள், நெய், உதிரி புஷ்பம், வஸ் திரம், மாலை, சந்தனம், தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, ஊதுபத்தி, நைவேத்யம், தட்சணை இவை முக்கியம்.
98. சின்னச்சின்ன பூஜைகளை விட அனைத்தும் அடங்கிய முறை யான ப்ரத்யேக பூஜைதான் பலன்களை அள்ளித் தருகின்றன.
99. ஆண்டவன் நினைத்தால் மட்டுமே பூஜைக்குரிய அனுமதி கிடை க்கும்.
100. ஆண்டவனை நினைத்துக் கொண்டே இருங்கள். காலம் கனியும் போது ஆண்டவன் நம்மை நினைப்பார்.
நன்றி :-http://jai-mangal.blogspot.in/

எமனார் நம்மிடம் வரமாட்டார்

நடக்கும் போது மெதுவாக சப்தம் வாராமல் நட.
தினந்தோறும் பசி அறிந்து உண்.
குடிப்பதற்கும் குளிப்பதற்கும் வெந்நீரையே பயன்படுத்து.
பகலில் உறங்காமல் இரு.
மலம் ஜலம் இரண்டையும் அடக்காமல் உணர்ச்சி வரும் பொழுதே கழித்துவிடு.
ஸ்திரீ போகத்தில் மிதமாக இரு.
படுக்கும் போது இடது கை கீழே இருக்கும் வண்ணம் படு.
இவ்வாறு இருப்பதால் எமனார் நம்மிடம் வரமாட்டார் என்று சொல்கிறார் ஸ்ரீ அகத்திய மகரிஷி.
இவை யாவும் ஒரு நல்ல அன்புள்ளம் கொண்டவர்களுக்கே பயனடைய வேண்டும் என்றும் கூறியுள்ளார். மீறி மற்றவர்களுக்கு உரைப்பின் தந்தையின் சாபத்திற்கு ஆளாக நேரிடும் என்று எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
... Courtesy: Senthil Manickam