Monday, May 11, 2015

குளிக்கும் பொழுது சொல்ல வேண்டிய சுலோகம்!

குளிக்கும் பொழுது சொல்ல வேண்டிய சுலோகம்!
வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
இன்றைய தினம் முதல் ஒவ்வொரு நாளும், இனிய காலை பொழுதாக விடியட்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்!
நிறைய படிக்கும் எண்ணம் உள்ள மனதிற்கு, புரிந்துகொகிற வாய்ப்புகள் நிறையவே கிடைக்கும். சமீபத்தில், அகத்தியர் பற்றி படித்த பொழுது , அவர் காட்டிய ஒரு எளிய வழியை தெரிந்து கொள்கிற ஒரு வாய்ப்பு கிடைத்தது. யாம், பெற்ற இன்பம், இவ்வையகம் பெறட்டுமே என்கிற எண்ணத்தில் இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
"சித்தன் அருளில்" "இனிய இல்லற வாழ்விற்கு" என்று ஒரு தொகுப்பு வந்தவுடன், அட! இத்தனை எளிய வழிகள் இருக்கிறதா என்று, படித்து, நடைமுறைபடுத்தி அதன் பயனை உணர்ந்த நான், மேலும் தேடலானேன். அப்பொழுது குளிக்கும் பொழுது சொல்லவேண்டிய ஒரு ஸ்லோகத்தைப் பற்றி அகத்தியப் பெருமான் மிகப் பெருமையாக கூறியதை கீழே தருகிறேன்.
அகமர்ஷணம் என்கிற ஒரு தொகுப்பிலிருந்து, ஒரு ஸ்லோகத்தை அவர் கூறி, இதை குளிக்கும் பொழுது குறைந்தது மூன்று முறை ஜெபித்து வந்தால், "பிரம்ம ஞானம்" ஏற்படும் என்று கூறி இருந்தார். உடனேயே ஒரு அவா. அதை தமிழில், பிரிண்ட் போட்டு, குளிக்கும் அறையில் ஒட்டிவிட்டேன். யாரெல்லாம் அதை பார்த்து விரும்பி சொல்கிறார்களோ, அவர்களுக்கு அதன் பலம் கிடைக்கட்டும் என்கிற எண்ணம் தான். குழந்தைகளை பொருத்தவரை, சிறு வயதிலேயே, மந்திரம் மனதுள் ஏறிவிட்டால், அவர்கள் மனம் எளிதில் செம்மைப்படும். நம்மை போன்றவர்களுக்கு, இப்பொழுதேனும், ஏறினால், நம் வாழ்க்கையை, சமன்படுத்திக் கொள்ளலாம். ஓரளவுக்கு, கவனமும், ஆன்மீகமும் நம்முள் புகுத்துவிட்டால், நாம் தேடுகிற நிம்மதியை, இருக்கும் இடத்திலேயே, நல்ல விஷயங்களை செய்து, கூறி நன்மை அடைந்துவிடலாம்.
"ஆர்த்ரம் ஜ்வலதி ஜ்யோதிர் அஹமஸ்மி
ஜ்யோதிர் ஜ்வலதி ப்ரம்மா அஹமஸ்மி
யோ அஹமஸ்மி ப்ரம்மா அஹமஸ்மி
அஹமஸ்மி ப்ரம்மா அஹமஸ்மி
அஹமே வாஹம் மாம் ஜுஹோமி ஸ்வாஹாஹா"
இதை, நகல் எடுத்து, குளிக்கும் அறையில் ஒட்டி வைத்து, வீட்டில் உள்ளவர்கள் அனைவரும், பயன்பெற உபயோகித்து, அகத்தியர் அருளை பெற்றுக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறேன்.
மந்திரம் என்பது, மனதை செம்மைபடுத்தி அதன் திறனை, நமக்கு உணர்த்துவதர்க்காகத்தான். அதை கூறும் பொழுது ஏற்படுகிற அதிர்வலைகள், நமது ஆதார சக்கரங்களை தட்டி எழுப்பி, உடலுக்கு உரத்தை தந்து, புத்தியை தெளிவுபடுத்தும்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகதீசாய நமஹ!

Saturday, May 9, 2015

அறிவுரைகள்

இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள்(அறிவுரை) இடது கையால் ஆசனம் போட்டால் ஆயுள் குறைவு; இடது கையால் எண்ணெய் தேய்த்துக் கொண்டால் புத்திர நாசம்; இடது கையால் சாப்பாடு போட்டுக் கொண்டால் செல்வம் அழியும்; இடது கையால் படுக்கையை போட்டால் இருப்பிடம் சேதமாகும்.(அறிவுரை) ஜோதிடர், குரு, நோயாளி, கர்ப்பிணி, மருத்துவர், சந்நியாசி முதலியவர்களுக்கு, அவர்களுடைய ஆபத்துக் காலத்தில் கண்டிப்பாக உதவ வேண்டும். இது மிகவும் புண்ணியம்.(அறிவுரை) சகோதரன் அல்லது சகோதரி தாழ்ந்த நிலையிலிருந்தால், அவர்களுக்கு உதவ வேண்டும்.(அறிவுரை) அண்ணியை தினசரி வணங்க வேண்டும்.(அறிவுரை) பசு, தேர், நெய்குடம், அரச மரம், வில்வம், அரசுடன் சேர்ந்த வேம்பு இவைகள் எதிரில் குறுக்கிட்டால்,வலது புறம் சுற்றி செல்ல வேண்டும்.(அறிவுரை) குடும்பஸ்தன் ஒரு ஆடை மட்டும் அணிந்து உணவு உட்கொள்ள கூடாது. ஒரு கையை தரையில் ஊன்றி சாப்பிடக் கூடாது. துணியில்லாமல் குளிக்கக் கூடாது. சூரியனுக்கு எதிரில் மலஜலம் கழிக்கக் கூடாது.(அறிவுரை) கன்றுக் குட்டியின் கயிறை தாண்டக் கூடாது. மழை பெய்யும் போது ஓடக் கூடாது. தண்ணீரில் தன் உருவத்தை பார்க்கக் கூடாது.(அறிவுரை) நெருப்பை வாயால் ஊதக் கூடாது.(அறிவுரை) கிழக்கு, மேற்கு முகமாக உட்கார்ந்து மலஜலம் கழிக்கக் கூடாது.(அறிவுரை) எதிர்பாராத விதத்திலோ, தவறு என்று தெரியாமலோ, பெண்கள் கற்பை இழந்து விட்டால், புண்ணிய நதியில், 18 முறை மூழ்கிக் குளித்தால் தோஷம் நீங்கும்.(அறிவுரை) திருமணம் ஆகாமலே ஒரு பெண்ணுடன் வாழ்பவனை சுபகாரியங்களில்முன்னிறுத்தக் கூடாது.(அறிவுரை) சாப்பிடும் போது, முதலில் இனிப்பு, உவர்ப்பு, புளிப்பு, கசப்பு பதார்த்தங்களை வரிசையாக சாப்பிட்டு, பின் நீர் அருந்த வேண்டும்.(அறிவுரை) சாப்பிடும் போது தவிர, மற்ற நேரத்தில் இடது கையால் தண்ணீர் அருந்தக் கூடாது.(அறிவுரை) கோவணமின்றி, வீட்டின் நிலைப்படியை தாண்டக் கூடாது.(அறிவுரை) இருட்டில் சாப்பிடக் கூடாது. சாப்பிடும் போது விளக்கு அணைந்து விட்டால், சூரியனை தியானம் செய்து, மீண்டும் விளக்கேற்றி விட்டு சாப்பிட வேண்டும்.(அறிவுரை)சாப்பிட்டவுடன் குடும்பஸ்தன் வெற்றிலை போட வேண்டும். வெற்றிலை நுனியில் பாவமும், முனையில் நோயும், நரம்பில் புத்திக் குறைவும் உள்ளதால் இவற்றை கிள்ளி எறிந்து விட வேண்டும்.(அறிவுரை)சுண்ணாம்பு தடவாமல் வெற்றிலையை வெறுமனேயோ, வெறும் பாக்கை மட்டுமோ போடக் கூடாது. வெற்றிலையின் பின்பக்கம் தான் சுண்ணாம்பு தடவ வேண்டும்.(அறிவுரை) மனைவி, கணவனுக்கு வெற்றிலை மடித்துக் கொடுக்கலாமே தவிர, கணவன், மனைவிக்கும், மகன், தாய்க்கும், பெண், தந்தைக்கும் மடித்துத் தரக் கூடாது.(அறிவுரை) குரு, ஜோதிடர், வைத்தியர், சகோதரி, ஆலயம் இங்கேயெல்லாம் செல்லும் போது வெறுங்கையுடன் செல்லக் கூடாது.(அறிவுரை) தலையையோ, உடம்பையோ வலக்கையினால் மட்டும் சொறிய வேண்டும். இரண்டு கைகளாலும் சொறியக் கூடாது.(அறிவுரை) இரு கைகளாலும் தலைக்கு எண்ணெய் தேய்க்க கூடாது. வலது உள்ளங்கையில் எண்ணெய் ஊற்றி தலையில் தேய்க்க வேண்டும்.(அறிவுரை) தலைவாசலுக்கு நேரே கட்டில் போட்டோ, தரையிலோ படுக்கக் கூடாது.(அறிவுரை) வானவில்லை பிறருக்கு காட்டக் கூடாது.(அறிவுரை) மயிர், சாம்பல், எலும்பு, மண்டையோடு, பஞ்சு, உமி, ஒட்டாஞ்சில்லி இவற்றின் மீது நிற்கக் கூடாது.(அறிவுரை) பேசும் போது துரும்பைக் கிள்ளிப் போடக் கூடாது.(அறிவுரை) ஈரக்காலுடன் படுக்கக் கூடாது.(அறிவுரை) வடக்கிலும், கோணத் திசைகளிலும் தலை வைத்து படுக்கக் கூடாது. நடக்கும் போது முடியை உலர்த்த கூடாது.(அறிவுரை) ஒரு காலால், இன்னொரு காலை தேய்த்துக் கழுவக் கூடாது.(அறிவுரை) தீயுள்ள பொருட்களை தரை மேல் போட்டு காலால் தேய்க்கக் கூடாது. பூமாதேவியின் சாபம் ஏற்பட்டு, பூமி, மனை கிடைக்காமல் போய் விடும்.(அறிவுரை) பகைவன், அவனது நண்பர்கள், கள்வன், கெட்டவன், பிறர் மனைவி இவர்களுடன் உறவு கொள்ளக் கூடாது.(அறிவுரை) பெற்ற தாய் சாபம், செய்நன்றி கொல்லுதல், பிறன் மனைவி கூடுதல் இவை மூன்றுமே பிராயச்சித்தமேயில்லாமல் அனுபவித்தே தீர வேண்டிய பாவங்கள்.(அறிவுரை) அங்கஹீனர்கள், ஆறு விரல் உடையவர்கள், கல்வியில்லாதவர்கள், முதியோர், வறுமையிலுள்ளவர்கள் இவர்களது குறையை குத்திக் காட்டிப் பேசக் கூடாது.(அறிவுரை) ரிஷி, குரு, ஜோதிடர், புரோகிதர், குடும்ப வைத்தியர், மகான்கள், கெட்ட ஸ்திரியின் நடத்தை இவர்களைப் பற்றி வீண் ஆராய்ச்சியில் ஈடுபடவோ, அவர்களிடம் உள்ள தவறுகளை விளம்பரப்படுத்துவதோ கூடாது.(அறிவுரை) பிறர் தரித்த உடைகள், செருப்பு, மாலை, படுக்கை இவற்றை நாம் உபயோகிக்கக் கூடாது.(அறிவுரை) பிணப்புகை, இளவெயில், தீபநிழல் இவை நம் மீது படக் கூடாது.(அறிவுரை) பசுமாட்டை காலால் உதைப்பது, அடிப்பது, தீனி போடாமலிருப்பது பாவம்.(அறிவுரை) பசு மாட்டை, "கோமாதா வாக எண்ணி, சகல தேவர்களையும் திருப்திப்பட வைப்பதற்கு, அம்மாட்டுக்கு, புல், தவிடு, தண்ணீர், புண்ணாக்கு, அகத்திக்கீரை கொடுப்பது புண்ணியம்.(அறிவுரை) தூங்குபவரை திடீரென்று எழுப்பக் கூடாது; தூங்குபவரை உற்றுப் பார்க்கக் கூடாது.(அறிவுரை) பகலில் உறங்குவது, உடலுறவு கொள்வது கூடாது.(அறிவுரை) தலை, முகம் இவற்றின் முடியை காரணம் இல்லாமல் வளர்க்கக் கூடாது.(அறிவுரை) அண்ணன் - தம்பி; அக்காள் - தங்கை; ஆசிரியர் - மாணவர்; கணவர் - மனைவி; குழந்தை- தாய்; பசு - கன்று இவர்களுக்கு இடையில் செல்லக் கூடாது.(அறிவுரை) வீட்டுக்குள் நுழையும் போது, தலைவாசல் வழியாகத் தான் நுழைய வேண்டும்.(அறிவுரை) நம்மை ஒருவர் கேட்காதவரையில்,நாம் அவருக்கு ஆலோசனை கூறக் கூடாது.

Saturday, May 2, 2015

பஞ்சாட்சரம் !!!

ஸ்தூல பஞ்சாட்சரம் - நமசிவய
சூட்சும பஞ்சாட்சரம் - சிவயநம
காரணபஞ்சாட்சரம் - சிவ சிவ
மந்திர சாஸ்திரம் மிகவும் நுட்பமான செயல் திட்ட வரையறைகளை கொண்ட சூட்சுமமானது. அதில் பல்வேறு தேவதா ரூபங்களின் வடிவங்கள் சப்த வடிவில் அடங்கியுள்ளது. அதை சப்த பிரம்மம் என்றே வழங்குவார்கள். ஸ்தூல சாரம், சூட்சும சாரம், காரண சாரம் என்று மூன்று வித தேக அமைப்புகள் நமக்கு உண்டு. ஸ்தூல சாரமான இந்த பரு உடலுக்குள் சூட்சும சாரமும் அதற்குள் காரண சாரமும் அடங்கியுள்ளது. ஒரு மந்திரத்தை உச்சரிப்பதற்கு முன்பு பலவித துவக்கநிலை செயல்பாடுகள் அவசியமாகின்றது. மந்திரங்கள் பஞ்சபூதங்களோடு தொடர்பு படுத்தபடுகின்றன. பஞ்சாட்சர மந்திரத்தின் சிறப்புகளை காணலாம்.
ஸ்தூல பஞ்சாட்சரம்
“நமசிவய” என்னும் ஸ்தூல பஞ்சாட்சரம் ஓம்கார பிரணவத்தோடு சேர்த்து “ஓம் நமசிவய” என்று உச்சரிப்பதே மரபாகும். சித்தர்கள் இம் மந்திரத்தை பஞ்சபூதங்களின் ஒருமித்த வெளிப்பாடகவே உணர்ந்தனர். இம் மந்திரத்தில் சித்தி அடைவதால் பஞ்சபூதங்கள் கட்டுப்படுவதொடு ஐம்பொறிகளும் நமது கட்டுக்குள் அடங்கி நிற்கும். பஞ்சபூதங்களில் இம் மந்திரத்தின் ஆளும் தன்மை
ந – நிலத்தைக் குறிக்கிறது,
ம – நீரைக் குறிக்கிறது,
சி – நெருப்பைக் குறிக்கிறது,
வ – காற்றைக் குறிக்கிறது,
ய – ஆகாயத்தைக் குறிக்கிறது.
சிவ மகாபுராணத்தில் வாயு சம்ஹிதையில் உள்ள உத்தர பாகத்தின் ஆரம்பத்தில் ஐந்து அட்சரங்களும் அதற்கு உரிய நிறங்களும், ரிஷிகளும், சிவபெருமானுடைய எந்தெந்த முகத்துக்கு எந்தெந்த அட்சரங்கள் என்று தெளிவாக விளக்கப்பட்டிருகிறது.
ந - கிழக்கு நோக்கிய முகத்திற்கு உரியது, மஞ்சள் நிறம், கௌதம மகரிஷி
ம – தெற்க்கு நோக்கிய முகத்திற்கு உரியது, கருப்பு நிறம், அத்திரி மகரிஷி
சி – மேற்க்கு நோக்கிய முகத்திற்கு உரியது, புகையின் நிறம், விஸ்வாமித்ர மகரிஷி
வ – வடக்கு நோக்கிய முகத்திற்கு உரியது, பொன்னிறம், ஆங்கீரஸ மகரிஷி
ய –மேல் நோக்கிய திருமுகத்திற்கு உரியது, சிவந்த நிறம், பரத்வாஜ மகரிஷி
காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமசிவாயவே
என்று திருஞானசம்பந்தரின் நமசிவாய பதிகம் உள்ளம் உருக நமசிவய மந்திரத்தின் பெருமையை உயிரும் உருக விவரிக்கிறது.
சூட்சும பஞ்சாட்சரம்
“சிவய நம” என்பது சூட்சும பஞ்சாட்சரம் ஆகும். இம் மந்திரம் பிரணவத்தோடு சேர்த்து “ஓம் சிவய நம” என்றே உச்சரிக்க வேண்டும். சிவபெருமானின் ஐந்து முகங்களில் இருந்து ஓம் எனும் பிரணவம் உதித்தது. வாமதேவம் வடக்கு முகத்திலிருந்து ‘அ’ காரமும், சத்யோஜாதம் மேற்க்கு முகத்திலிருந்து ‘உ’ காரமும், அகோரம் தெற்கு முகத்திலிருந்து ‘ம’ காரமும், தத்புருஷம் கிழக்கு முகத்திலிருந்து ‘பிந்து’ எனப்படும் நாதத்தின் தொடக்கமும், ஈசானம் மேல் நோக்கிய முகத்திலிருந்து நாதமான சப்த ரூபமும் தோன்றின. இவ்வாறு ஓம் என்ற பிரணவத்தோடு சிவய நம சேர்ந்து முழுமையான மந்திரஸ்வரூபம் உருவானது.
“அவ்வும், உவ்வும், மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே”
என்று சிவ வாக்கியர் மிக அழகாக கூறுகிறார்.
“சிவய நம என்று சிந்தித்திருப்போர்க்கு அபாயம் ஒரு நாளுமில்லையே”
என்ற உத்திரவாதத்தை மிகவும் உறுதியாக தருகிறார் ஔவையார்.
“சித்தம் ஒருங்கிச் சிவய நம என்று இருக்கினல்லால்
அத்தன் அருள் பெறலாமோ அறிவிலாப் பேதை நெஞ்சே...”
என்று திருநாவுக்கரச பெருமான் தமது நெஞ்சத்திற்கே எடுத்து சொல்கிறார்.
“திருவாய் பொலியச் சிவய நம என்று நீறணிந்தேன்
தருவாய் சிவகதி நீ பாதிரிப் புலியூர் அரனே”
என்று உளமுருகப் பிரார்த்திக்கிறார் மாணிக்க வாசக! என்று சிவபெருமானாலேயே அழைக்கப்பட்ட திருவாதவூரார்.
காரண பஞ்சாட்சரம்
“சிவ சிவ என்றிடத் தீவினை மாலும்
சிவ சிவ என்கிலார் தீவினையாளர்
சிவ சிவ என்றிடத் தேவருமாவர்
சிவ சிவ என்னச் சிவ கதி தானே”
என்று திருமந்திரம் சிவ சிவ என்பதன் மகத்துவத்தை பற்றி சொல்கிறது. அது காரணப் பஞ்சாட்சரம் என வழங்கப்படும்.சிவ சிவ எனும் மந்திரம் நமது காரண சாரத்தில் உள்ள பிறள் பதிவுகளை நீக்க வல்லது என்பது ஞானியாரின் அழ்ந்த கருத்து. இந்த மந்திரத்தில் சாதாரண உலகின் ஆசாபாசங்களுக்கு அப்பாற்பட்ட, ஞான நிலைக்கு ஒருவரை இட்டு செல்லக்கூடியது. ஆகையால் இந்த மந்திரத்தின் மூலமாக லவ்கீக லாபங்களை எதிர் பார்க்க முடியாது. அதாவது உலகியல் குறிகோள்களை பூர்த்தி செய்த ஒருவருக்கு (துறவு நெறி பூண்டவர்களும், மிக வயதானவர்களும்) இந்த மந்திரம் பொருத்தமானது.
இல்லற வாழ்வில் உள்ளவர்கள் இம் மந்திரத்தோடு பிரணவத்தை சேர்த்து “ஓம் சிவ சிவ ஓம்” என்று கலையும், மாலையும் 108 முறை ஜபிக்கலாம்.
http://vedammantram.blogspot.in/


திருப்பம் தரும் திருமால் மந்திரம் !!!


நல்ல திருப்பங்களை தந்தருளும் திருப்பதி திருமலை திருவேங்கடவனின் அரிய மந்திரமாகும்.
இதை ஒரு வளர்பிறை திங்கட்கிழமையன்றோ, அல்லது ஒரு திருவோண நட்சத்திரத்தன்றோ அல்லது வளர்பிறை ஏகாதசியன்றோ அதிகாலையில் ஆரம்பித்து செய்ய வேண்டும்.
முடிந்தவர்கள் நிச்சயம் ஒரு குரு முகமாக உபதேசம் பெற்று செய்வது உத்தமம்.
முதலில் பிள்ளையாரையும், குல தேவதையையும் மனதார வணங்கி விட்டு இந்த மந்திரத்தை துளசி மணி மாலை கொண்டு தினமும் காலையில் 108 முறை ஜபம் செய்து வர வேண்டும்.
ஓம் ஹ்ராம் ஹ்ரீம் க்லீம்
ஓம் நமோ ஸ்ரீ வேங்கடேசாய நமஹ
திருமலை பெருமாள் திருவருளை பெறம் பலவித வழிகளில் இந்த மந்திரமும் ஒன்று. காலை, மாலை இரு வேளைகளில் 108 முறை ஜபம் செய்வதோடு ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் வரும் முதல் திங்கட்கிழமைகளில் மலையேறி சென்று அவனது தரிசனத்தையும் பெற்று வந்தால் சர்வ நிச்சயமாக ஒருவரது பொருளாதார நிலையில் திருப்திகரமான நல்ல மாற்றங்கள் உண்டாகும்.
http://dwarak82.blogspot.in/

காய சித்தி மந்திரம் !!!


விஞ்ஞானத்தால் எட்ட முடியாத ஒன்று மனிதனின் ஆயுட்காலம், வெல்ல முடியாத மரணத்தையும் வென்று காட்டியவர்கள் நமது முன்னோர்கள். காய கற்பங்கள் தேடி அதை உண்டு சாகா வரம் பெற்று இளமையுடன் வாழ கற்று வைத்திருந்தார்கள் நமது முன்னோர்கள் அவர்களை சித்தர்கள் என்றும் அழைப்பார்கள். அவர்களுள் கோரக்கர் என்ற சித்தர் மந்திர கற்பம் ஒன்றை அருளியிருக்கிறார். இதனை கோரக்கர் “ரவிமேகளை” என்னும் நூலில் காணலாம்.
இந்த மந்திரத்தை கிழக்கு நோக்கி அமர்ந்து லட்சம் முறை தியானித்து ஜபித்தால் காய சித்தி பெறலாம் என்று கோரக்கர் கூறுகிறார்.
ரெக்ஷிகியே நமோ நமா பார்வதி
நீபஞ்சா க்ஷிரி ரிங் ரிங் குரு
தக்ஷணி நகு லக் ஸ்ரீரீங்
க க லுக் டங் லுங்
அக்ஷரி ஹரி பிரம விஷ்ணு
ஆத்ம ஸம்ரெக்ஷ ஆதார பீஜ
கட கட மிருத் விநாசக
இட் இட் இமாம் இமாஞ்ச
இக் ருக் மம துயிருள் நீடித்தே நமஹா!
-கோரக்கர்
http://vedammantram.blogspot.in/

ஸ்ரீ சுதர்ஸன மஹாமந்திரம்!!!

சுதர்சன மஹாமந்திரத்தை தினமும் காலையில் சொன்னால், அஞ்ஞான இருள் விலகும். எல்லா பிரச்சனைகளும் மறைந்து போகும்.ஆபத்து நீங்கும். பயம் விலகும்.தைரியம் பிறக்கும்.சந்தோஷம் நிலைக்கும்.பில்லி, சூன்ய, ஏவல்கள், எதிரிகள் தொல்லை, நாள்பட்ட வியாதி, மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள், புத்தி ஸ்வாதீனம் இன்மையால் சிரமப்படுவோர், ஜாதகப்படி மத்திம ஆயுள் போன்ற உபாதைகள் உள்ளவர்கள்சுதர்ஸன மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் அனைத்துக் குறைகளும் நீங்கும்
ஸ்ரீசுதர்சனரின் நாள் வியாழக்கிழமை. இந்நாளில் அவருக்கு சிவப்பு மலர்களால் மாலை சூட்டி வழிபட்டால் நினைத்த நல்ல காரியங்களில் வெற்றி கிட்டும்.சுதர்சனம் என்று சொல்லக்கூடிய சக்கரத்தாழ்வாரை மனமுருகி வழிபட்டால் நினைத்தது நிறைவேறும். பில்லி சூனியம் விலகும். மன பயம் அகலும், வீண் குழப்பங்கள் தீரும். எதிரிகள், எதிர்ப்புகள் ஒழியும்.
விடியற்காலையில் சூரிய உதயத்திற்கு முன்பு குளித்து, சுத்தமான உடை அணிந்து கிழக்கு நோக்கி அமர்ந்து, கண்ணை மூடிக்கொண்டு குறைந்தபட்சம் ஒன்பது தடவை - கூடிய பட்சம் 108 தடவை பாராயணம் செய்தால் அவர்களுக்கு பீடைகள் ஒழியும். சௌபாக்கியம் பிறக்கும்.
மஹா சுதர்ஸன மஹாமந்திரம்
ஓம் க்லீம் க்ருஷ்ணாய ஹ்ரீம் கோவிந்தாய ஸ்ரீம் கோபி
ஜனவல்லபாய ஓம்பராய பரமபுருஷாய பரமாத்மனே!
மமபரகர்ம மந்த்ர தந்த்ர யந்த்ர ஒளஷத அஸ்த்ர
ஸஸ்த்ர வாதப்ரதிவாதானி ஸம்ஹர ஸம்ஹர
ம்ருத்யோர் மோசய மோசய ஓம் மஹா சுதர்சனயா
தீப்த்ரே ஜ்வாலா பரிவ்ருதாய ஸர்வதிக் க்ஷோபனஹராய
ஹும்பட் பரப்ரஹ்மணே ஸ்வாஹா
http://dwarak82.blogspot.in/

காயத்ரி மந்த்ரம்

உலகத்திலேயே சிறந்த கடவுள்
வாழ்த்து காயத்ரி மந்த்ரம்.
உலகத்திலேயே சிறந்த கடவுள்
வாழ்த்து காயத்ரி மந்த்ரம். இதை நான் சொல்ல
விரும்பினாலும் எனக்கு முன்னால்
ஒரு அமெரிக்க விஞ்ஞானி சொல்லிவிட்டாரே.
(டாக்டர் ஹோவார்டு ச்டீங்கேரில்) இதைச்
சும்மா சொல்லவில்லை. நிறைய மதங்களின்
முக்ய வேதங்களை அலசி அவற்றின்
சக்தியை விஞ்ஞான பூர்வமாக
வடிகட்டினபிறகு தான் இந்த
முடிவுக்கு வந்தார்.
அப்படி என்ன கண்டுபிடித்தார்?
1. காயத்ரி மந்த்ரத்தை உச்சரிக்கும்போது
1,10,000 ஒலி அலைகள் ஒரு வினாடியில்
வெளிவருகிறது.
2. காயத்ரி மந்த்ரத்தில் தான் மற்ற
மந்த்ரங்களை விட
உலகத்திலேயே சக்தி அதிகம்..
3. காயத்ரி மந்த்ரத்தின் சப்த அலைகள் ஆன்ம
சக்தியை அதிகப்படுத்தும் தன்மை வாய்ந்தது.
4.ஜெர்மனியில் ஹாம்பர்க்
சர்வகலாசாலை இதை ஆராய்ச்சி செய்து உயிர்
வாழ உடலுக்கும் மனதுக்கும்
அது தெம்பு கொடுப்பதை அறிந்தது.
5. தென் அமெரிக்காவில் சுரினாம் என்கிற
நாட்டில் தினமும்
மாலை ரேடியோ பரமரிபோவில்
பதினைந்து நிமிஷங்களுக்கு காயத்ரி மந்த்ரம்
ரெண்டு வருஷத்துக்கும்
மேலே ஒலிபரப்பப்படுகிறதாம்.
இதை பின்பற்றி ஹாலந்து நாட்டிலும் இந்த
நல்ல பழக்கம் வழக்கத்துக்கு வந்ததாம்.
இந்த காயத்ரி மந்த்ரத்தை பற்றி நமக்கு என்ன
தெரியும்?
2500 லிருந்து 3500 வருஷங்களுக்கு முன்னால்
சம்ஸ்க்ரிதத்தில், ரிக்வேதத்தில் தோன்றியது .
அதற்கும் முன்னாலே பல ஆயிரம்
வருஷங்களுக்கு முன்பே இது உச்சரிக்கப்பட்டு
வந்தது என்கிறார்கள்.
இதில் என்ன வேடிக்கை என்றால் பல
நூற்றாண்டுகளுக்கு மேல் நாட்டார்களுக்கு
மட்டும் அல்ல, ஹிந்துக்களாகிய நம்மில்
அநேகருக்கும் காயத்ரி மந்த்ரம் தெரியாது.
தெரிந்தவர்கள் இதை ரகசியமாகவே பல காலம்
மூடி மறைத்தார்கள். அதுவும் பெண்களுக்கும்
இதற்கும்
சம்பந்தமில்லை என்பதோடு பிராமணரல்லாதவர்
க்கும் இது தேவையில்லை என்றும்
சொல்லப்பட்டது.
அந்த
காயத்ரி தேவியே மனது வைத்தாளோ என்னவோ இன்று உலகமுழுதும்
காயத்ரி மந்த்ரத்தின்
மகிமை பரவி ஓங்கி ஒலிக்கிறது .
அதன் அழகிய, ஒப்புமையிலாத உயர்ந்த
அர்த்தம், சக்தி வாய்ந்த ஒலி, அன்றாட
பாதுகாப்பாகவே அமைந்து விட்டதே.
காயத்ரி மந்த்ரத்தின் பிரணவ சப்தம் மற்ற எந்த
மந்திரத்திற்கும் மூலாதாரமாகவே உள்ளதே.
உள்ளாம் கவர்ந்து, திறந்து,பரம்பொருளை நாடும் இந்த மந்திரம்,உலகில்
எவ்வுயிர்க்கும் பொருந்தும்.
பல
வருஷங்களுக்கு முன்பு ஒரு முறை ஏதோ ஒரு ஆங்கில
புத்தகத்தில் முதலில் சந்திரனில் காலடி படித்த
ஆம் ஸ்ட்ராங் என்ற விண்வெளி வீரர்
பிரபஞ்சத்தில்
சந்திரனை நோக்கி இறங்கும்போது ஓம் என்ற
மனம் கவரும் சப்தம்
கேட்டது என்று எழுதினகாக, படித்த ஞாபகம்.
வேறுசிலரும் இதை பற்றி படித்திருக்கலாம்.
அறிந்திருக்கலாம்.
தவம் என்றாலே நம் கண் முன் தோன்றி,
மனத்தில் முதலில் இடம்பெறும் விச்வாமித்ரருக்
கு உபதேசிக்கப்பட்டது காயத்ரி மந்த்ரம்.
இது மனித குலத்திற்கு கிடைத்த
விலையில்லா பரிசு. சுத்தமான
இதயத்திலிருந்து வெளிவரும் இந்த மந்திரம்
உலக அமைதியை காக்கிறது. அளவற்ற ஞானம்
தருகிறது.
'ஹே பரப்ரம்மமே உன்னிலிருந்து வெளிப்படும்
அந்த ஞான ஒளி என்னிலிருக்கும் அஞ்ஞான
இருளை விரட்டி ஞானப்ரகாசம் அருளவேண்டும்"
காயத்ரி மந்த்ரம் சொல்பவனை விடுங்கள்.
அது எவன் காதில்
விழுகிறதோ அவனே புனிதமாகிறான்.
ஆத்மாவிலிருந்து புறப்படும் பிரம்ம உபதேசம்
அல்லவா அது?.
காயத்ரி என்றால் என்ன? ''காய""
என்பது உயிரூட்டும் சக்தி. ''த்ரி'' என்றால்
அது செய்யும் மூன்று வேலை:
அதாவது பாதுகாக்கிறது, புனிதப்படுத்துகிறது,
பரமனிடம் கொண்டு சேர்க்கிறது.
வேதங்களில் நாம் அறியும் ஏழு லோகங்கள் நாம்
இருக்கும் இந்த லோகத்தைவிட,படிப்படியாக
மேன்மை பெற்றவை. ஒன்றைக்காட்டிலும்
மற்றொன்று அதி உன்னதமானது.
எப்படி எலிமெண்டரி ஸ்கூலிலிருந்து, காலேஜ்
வரை போகிறோமோ அப்படி. புரிகிறதா? இந்த
காயத்ரி மந்த்ரம் தான் நம்மை கடத்திச்செல்லும்
ஸ்கூல் வேன் .
காயத்ரி மந்த்ரம் விடாமல்சொல்பவனைப்
பார்த்த்தாலே அவனிடம்ஒரு தனி தேஜஸ்,
உள்ளே இருக்கும்ஓஜஸ்
வேறு வெளியே ஒளி வீசும்.அதன் 24
அக்ஷரத்வனி அலாதி. சூக்ஷ்ம சரரஆத்மாவின்
குரல் அது.
காயத்ரி மந்த்ரத்தை பாட்டு போலவோ, ராகம்
போட்டோ, ஆலாபனத்தோடா, பக்க
வாத்யத்தோடா பாடுவார்கள்? சிலர்
செய்வது வேதனையாக இருக்கிறது.
அது மனத்தை தொடவில்லை.
மந்த்ரத்து க்கெல்லாம் அதற்கென்று உச்சரிப்பு,
ஒரு முறை இருக்கிறது.
அர்த்தத்தை புரிந்துகொண்டு முழுமனத்தோடு தக்க
குரு உபதேசத்தோடு சொன்னால் கைமேல்
பலன். பழம் பழுக்கும்
காயத்ரி மந்த்ரம்.
----------------------------
‘’ ஓம் பூர்
புவ ஸ்வஹ
தத் ஸ்விதுர் வரேணியம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோநஹ ப்ரசோதயாத்’’
நண்பர்களே, எமது அன்றாட வாழ்கையில் நாம்
எத்தனையோ தடவைகள் இந்த
மந்திரத்தை சொல்லி இருக்கிறோம். ஆனால்
பொருள் உணர்ந்து சொல்லும்போது அதன் பலம
அதிகம். தினமும்
காயத்ரி மந்திரத்தை செபிப்போம். சிறந்த
வாழ்கையை வாழ்வோம்.
பொருள்:
---------------
'பூ உலகம், மத்திய உலகம், மேல் உலகம்
மூன்றுக்கும் சக்தியான அந் தப் பரம
ஜோதி சொரூபமான சத்தியத்தை நான்
தியானிக்கிறேன். அந்தப் பரம சக்தி ஒளி என்
அறிவைத் தூண்டி என்னை உண்மையை அறிந்த
நிலைக்கு உயர்த்தட்டும்' என்பது தான்
காயத்ரி மந்திரத்தின் பொருள். —