Sunday, July 12, 2015

பிராணாயாமம் பற்றி தெரிந்து கொள்வோமா?

இன்றைய அவசர யுகத்தில், மூச்சுவிடக்கூட
நேரமில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கிறோம்.
சுற்றுப்புறக் காற்றும் சுத்தமாக இல்லை.
மாசு படிந்த காற்றை சுவாசிப்பதன் விளைவு,
சுவாசப் பிரச்னையால் அவதிப்படுபவர்களின்
எண்ணிக்கை இன்று அதிகரித்துக்கொண்டே
போகிறது. இதனால், சளி, இருமல், ஆஸ்துமா,
அலர்ஜி... போன்ற பல்வேறு நோய்களும்
வரிசைகட்டி நம்மை வாட்டுகின்றன.
'தியானம், பிராணாயாமம், யோகா
செய்தாலேபோதும்; நோய் எதுவும்
நெருங்காது’ என்று ஆளாளுக்கு அட்வைஸ்
பண்ணுவதும், பிராணாயாமப் பயிற்சி எப்படிச்
செய்வது என்பது பற்றி கூகுளில் தேடுவதும்,
யாரிடம் கற்பது என்று குருவைத் தேடி
ஓடுவதுமாக ஒருவிதத் திணறலுடனே
காலமும் ஓடுகிறது.
''உடலிலும் மனதிலும் சக்தியைப் பெருக்கி,
இரண்டிலும் கோளாறுகள் ஏற்படாமல்
பார்த்துக்கொள்வதும், வெளியில் உள்ள
காற்றுக்கும், உடலில் இருக்கும் காற்றுக்கும்
பாலமாக உள்ள சுவாசத்தைக் குறிப்பிட்ட
வகையில் மாற்றி அமைத்துக்கொள்ளக
்கூடியதுமான அற்புதக் கலைதான்
'பிராணாயாமம்’ '' என்கிறார், இந்தக் கலையில்
அனுபவம் பெற்ற என்.ஆர்.சம்பத்.
இவர், சிறு வயது முதலே உபநிடதம், பிரம்ம
சூத்திரம், இதிகாசங்கள், சாத்வீகப்
புராணங்களை முறையாகக் கற்றுத் தேர்ந்தவர்.
தமிழக அரசின் விருதுகள் உள்பட, பல
விருதுகளைப் பெற்றவர்.
பிராணாயாமக் கலையின் சிறப்புகளையும்,
பயிற்சி முறைகளையும், பயிற்சி செய்வதால்
ஏற்படும் பலன்களைப் பற்றிய வியத்தகு
விஷயங்களையும் நம்மிடம் பகிர்ந்துகொள்கி
றார்.
''முனிவர்களும் யோகிகளும் நமக்கு அளித்த
மிகப் பெரிய வரப்பிரசாதம்தான் இந்தப்
'பிராணாயாமக் கலை’. தீர்க்கமான
சிந்தனையும் தெளிவான அறிவும் அமைய
உதவும் கலை இது. மூச்சுக்காற்றானது,
உள்ளே வருவதும் வெளியே போவதும்
நிகழாமல் போனால், உயிர் ஓர் உடலில் நிலை
கொள்ளாது.
துக்கமான உணர்வில் ஒருவிதமாகவும்,
வியப்பு உணர்வில் இன்னொரு விதமாகவும்,
சோர்வாக இருக்கும்போதும் ஒரு
வகையாகவும், உள்ளத்தில் மகிழ்ச்சி
பொங்கும்போது வேறு ஒரு வகையாகவும்
மூச்சின் தன்மை இருப்பது இயற்கை.
இதைத்தான் அந்தக் காலத்தில், மனம் ஒவ்வோர்
உணர்வில் இருக்கும்போதும் சுவாசம் எப்படி
நடக்கிறது என்பதைக் கண்டறிந்து, நமக்கு எந்த
உணர்வு தேவையோ அந்த உணர்வு
உண்டாகும்படி சுவாசத்தை மாற்றி
அமைத்துக்கொண்டனர்.
சுவாசமானது, ஒரு மணி நேரத்துக்கு ஒரு
முறை, மூக்கின் இடது பக்கத் துவாரத்தில்
இருந்து வலது பக்க துவாரத்தின் வழியாக
மாறிமாறி நடைபோடுவதை அறிந்தனர். இதன்
நன்மை தீமைகளைக் கண்டறிந்து, இரு
துவாரங்கள் வழியிலும் ஒரே நீளமும்
தன்மையும் இருக்கும்படியாக மூச்சை
வலமிருந்து இடமாகவும், இடமிருந்து
வலமாகவும் மூச்சுப்பயிற்சி செய்வதைக்
கண்டுபிடித்தனர்.
உடலை உரப்படுத்தி, மனதை நிலைப்படுத்தி,
சுவாசத்தையும் மூச்சையும்
ஒழுங்குப்படுத்தி, அதன் மூலம் பயனடைய
பிராணாயாமக் கலையை அறிந்து
சாத்திரமாக்கினர். மனம் இல்லையேல் மனிதன்
இல்லை. அந்த மனதைக் கட்டுப்படுத்தவே
பிராணாயாமம் உதவுகிறது.
சுவாசத்தை நாம் மூக்கு வழியாக
உள்ளிழுத்ததும், அது தொண்டை வழியாக
மூச்சுக்குழலுக்குப் போகிறது. பிறகு, இடம்
வலம் பிரியும் குழல்களின் வழியே
நுரையீரல்களில் இருக்கும் பல்லாயிரக்கணக்க
ான காற்று அறைகளுக்குச் செல்கிறது. இது
நம் மார்பில் அடங்கியிருந்தாலும், இதை
வெளியே எடுத்துப் பிரித்துப் பரப்பி வைத்தால்
1,40,000 சதுர அடி பரந்திருக்குமாம்!
சுவாசிக்கும் ஐந்து இடம்
மூக்கு வழியாக சுவாசிக்கும்போது,
உட்புகும் காற்றானது, பிராணன், அபானன்,
உதானன், வியானன், சமானன் என்ற ஐந்து
இடங்களில் இருந்து ஐந்து வேலைகளைப்
புரிகின்றது.
1. பிராணன்: உடலின் மேலே இயங்கும் இது
'தலைமை சுவாசம்’ எனப்படுகிறது. மேலும்,
நுரையிரலை இயக்கி சுவாசம் மற்றும் ரத்த
ஓட்டத்தை நிகழ்த்துவதோடு புலன்களையும்
இயக்குகிறது.
2. அபானன்: கீழ் உடலில் இருந்து கீழ்நோக்கிய
வேலைகளை நிகழ்த்துகிறது. கழிவுகளை
வெளியேற்றுகிறது. 'குதம்’ எனும்
மலத்துளையே இதனுடைய இடம்.
3. உதானன்: உடலை எழுந்து நிற்கச் செய்வது,
மேல் நோக்கி இயங்கும். உணவை
விழுங்குதல், உறங்க வைப்பது.
தொண்டையில் இருக்கும் இது, உயிர்
பிரிகையில் ஸ்தூல உடலில் இருந்து நுட்ப
உடலைப் பிரிக்கிறது.
4. சமானன்: உணவைச் செரித்து, சக்தியை
ரத்தத்தில் கலக்கச் செய்வது. தொப்புள் பகுதி
இதனுடையது. வாயுக்களைச் சமப்படுத்தும்.
5. வியானன்: ரத்த ஓட்டத்தை நடத்துகிறது.
உடலின் உறுப்புகளிலும் பரவி வேலை
செய்கிறது.
தேவைகள்
நம்மை நாமே பயிற்சிக்குத் தயார்
செய்துகொள்ளத் தேவையானவை:
தேர்ந்த குரு
பயிற்சிக்கு ஏற்ற இடம்
முறையான உணவு
தகுந்த காலம்
நாடிகள் பற்றிய அறிவும் தூய்மையும்
உடல் தூய்மை
தொடர்ச்சி பயிற்சி
குரு: அதிக நேரம் மூச்சை நிறுத்திப் பழகவும்,
வகை வகையான பிராணாயாமங்களில் திறமை
பெறவும் சிறந்த குருவின் நேரடிப் பார்வையில்
பயிற்சி செய்வது.
ஏற்ற இடம்: மூச்சுப்பயிற்சிக்கு என்று
தனியாக ஓர் இடம் வைத்துக்கொண்டால்
நல்லது. திறந்தவெளி, இயற்கைக் காட்சிகள்
நிறைந்த சூழல், கடற்கரை, ஆற்றங்கரை,
வீட்டின் மொட்டைமாடி... என நல்ல காற்றும்
வெளிச்சமும் வரும் இடமாகத் தேர்வு
செய்யவேண்டும்.
முறையான உணவு: மனதுக்கும் உணவுக்கும்
நெருங்கியத் தொடர்பு உண்டு. ஆன்மிகம்,
யோகம் போன்ற பயிற்சிகளைப்
பழகுபவர்களுக்கு மன அமைதி அவசியம்.
மனதை சாந்தமாக வைத்திருக்க, சாத்வீக
உணவு உட்கொள்வதே நல்லது. இதனால்,
உள்ளேயோ, வெளியேயோ மூச்சைக் கும்பகம்
செய்யும்போது, விரும்பும் நேரம் வரை
நிறுத்த முடியும்.
எளிதில் ஜீரணமாகக்கூடிய தானிய உணவுகள்,
சாறுள்ள பழங்கள், பச்சைப் பயறு, காய்கறிகள்,
எலுமிச்சம்பழச் சாறு, பால், வெண்ணெய்,
நெய், கைக்குத்தல் அரிசி, சிவப்பரிசி,
கோதுமை, கம்பு, கேழ்வரகு மாவால் ஆன
உணவுகள் ஆகியவை எடுத்துக்கொள்ளலாம்.
உப்பு, புளிப்பு, காரம், கசப்பு மிகுந்த
உணவுகளை உண்பதைத் தவிர்க்கவேண்டும்.
சமைத்து வெகுநேரம் ஆன, பழைய,
கெட்டுப்போன உணவுகளைச் சாப்பிடக்
கூடாது. பச்சைக் காய்கறிகள், தேங்காய்
போன்றவற்றைச் சாப்பிடலாம். அதிகம்
வெயிலில் அலைவதோ, நெருப்புக்கு அருகில்
இருப்பதோ கூடாது.
அரை வயிறு உணவும், கால் வயிறு காற்றும்,
கால் வயிறு தண்ணீரும் உட்கொள்ள
வேண்டும். அதிகப் பசியுடனோ, சாப்பிட்ட
உடனோ பிராணாயாமம் செய்யக்கூடாது.
தகுந்த காலம்: மார்ச் முதல் ஏப்ரலில் அதாவது
வசந்த காலத்தில் பயிற்சியைத் தொடங்கலாம்.
இலையுதிர் காலமான செப்டம்பர் முதல்
அக்டோபர் வரைகூட, பயிற்சியைத் தொடங்க
ஏற்ற காலம். பிற்பகலில் காற்றில் சூடு அதிகம்
இருப்பதால், பயிற்சிகளை தவிர்த்துவிடலாம்.
காலை 4 மணியில் இருந்து 6 மணி
வரையிலான குளிர்ந்த சமயத்தில் பயிற்சி
செய்வது உசிதம்.
நாடிகள் பற்றிய அறிவும் தூய்மையும்:
அதிகாலை வெயில் வருமுன் பழகுதல்
நல்லது. மாலை சூரியன் மறையும் நேரம்
அதாவது 6 மணிக்குச் செய்யலாம்.
முதலில் நாடி சுத்தீயில் தொடங்கும்போது,
காலை, நண்பகல், மாலை, நள்ளிரவு என
நான்கு வேளைகளில் பழகுவார்கள். இப்படி ஒரு
மாதம் செய்து, நாடிகளைத் தூய்மை
செய்துகொள்ளலாம்.
உடல் தூய்மை: தினமும் காலையில்
எழுந்ததும், பல் துலக்கி, கை, கால்களை
நன்றாக கழுவவேண்டும். பிறகு, கடவுளை
வணங்கிவிட்டு, பயிற்சியை
மேற்கொள்ளவேண்டும்.
உடல் சுத்தம் மனதையும் புத்துணர்ச்சியா
க்கும். கோபம், வெறுப்பு, கூடாத உணவு,
மாறான நடவடிக்கை, கூடா குணம், நடத்தைக்
கோளாறு உள்ளவர்களுக்குப் பிராணாயாமக்
கலை கை கூடாது.
தொடர் பயிற்சி: அன்றாட கடமைகளை
செய்வது போல், மூச்சுப்பயிற்சியையும்
தொடர்ந்து செய்துவந்தால், ஆர்வம்
அதிகரிக்கும். தினமும் ஒருவித புத்துணர்ச்சி
கிடைப்பதை உணரமுடியும்.
கடவுள் மீதான நம்பிக்கை, உணவு, பேச்சு,
செயல், உறக்கம்... என எதிலும் மிதமாக
இருத்தல், அக்கறையுடனும்
விடாமுயற்சியுடனும் ஈடுபடுதல் இதுவே
பிராணாயாமத்தில் வெற்றிபெறத் தேவையான
தகுதிகள்.
பிராணாயாமத்தின் நிலைகள்
மூச்சை உள்ளிழுப்பது, கும்பகம் செய்வது,
வெளிவிடுவதில் உள்ள ஏற்றத்தாழ்வை
வைத்து, பிராணாயாமத்தை முதல் நிலை, நடு
நிலை , உயர் நிலை என மூன்று நிலைகளாகப்
பிரிக்கலாம்.
முதல் நிலை:
இது சாதாரணப் பிராணாயாமம்.
'தாழ்ந்த வகை’ எனப்படும் இந்த முதல்
விதத்தில், 12 முறை உள்ளே இழுத்து (பூரகம்
செய்து), 48 முறை உள்ளே வைத்திருந்து
(கும்பகம் செய்து), 24 முறை மூச்சை
வெளியே (ரேசகம்) விடுவது. (ஒரு முறை
என்பது, கண் மூடி கண் திறக்கும் கால அளவு.
இதை ஒரு மாத்திரை என்றும் கணக்கிடலாம்.)
ஒரு மாதம் வரை திணறல், சிரமம் இல்லாதபடி
செய்ய பழகியதும், நடுநிலைக்குப் போகலாம்.
நடு நிலை:
இதில், மூச்சை 16 முறை உள்ளிழுத்து 64
முறை நிறுத்தி, சீராக 32 முறை வெளியே
விடலாம். உடம்பில் வியர்வை வழியும்.
அதைத் துண்டால் துடைத்துக்கொள்ளாமல்
வெறும் கைகளாலேயே துடைப்பது நலம்.
இந்தவிதமான பிராணாயாமத்தை மூன்று
மாதங்களுக்குத் தொடர்ந்து பழகிட வேண்டும்.
இதன் பிறகே உயர்நிலை பிராணாயாமத்தை
அடையவேண்டும்.
உயர் நிலை:
இதில் 24 முறை மூச்சை உள்ளே இழுக்கவும்.
உடனே, 96 முறை உள்ளே நிறுத்திக் கும்பகம்
செய்யவும். கும்பகம் செய்தவுடன் 48 முறை
வெளிவிடவும். இப்படி ஒழுங்காக உயர்த்தி,
திணறல் இன்றியும், மூச்சை விரைவின்றி
சீராகவும் இழுக்கவும் விடவும்
பழகவேண்டும்.
காலை 4 மணிக்கு அதாவது சூரிய
உதயத்துக்கு முன் எழுந்து விரும்பும்
தெய்வத்தை வணங்கிவிட்டு,
பிராணாயாமத்தை ஆசன நிலையில் பயிற்சி
செய்யவேண்டும்.
காலை 11 மணி, மாலை 5 மணி, இரவு 11
மணி என வைத்துக்கொண்டு நான்கு முறை
பயிற்சியில் ஈடுபடவேண்டும். ஒரு
தடவையில் 80 என்று 320 பிராணாயாமங்கள்
ஒரு நாளில் பயிற்சி செய்வதுதான் தீவிர
பயிற்சி.
பலன்கள்: பயிற்சியில் நாம் பிரணவ
மந்திரத்தை ஜெபிக்குபோது உடலில் வெப்பம்
உண்டாகிறது. இது அழுக்குகளைப் போக்கும்.
புது நிலையில் நாடிகள் தூண்டப்படுகின்றன.
சிலருக்கு, உடலின் பல பாகங்களில் வலிகூட
ஏற்படலாம். இருந்தாலும் பயிற்சியை
முறைப்படி விடாமல் செய்து வரவேண்டும்.
உடல் வெப்பத்துக்கு ஏற்ப, பால், வெண்ணெய்
ஆகியவை பயன்படுத்தவேண்டும். எண்ணெய்க்
குளியல் அவசியம் தேவை.
எளிய பிராணாயாமங்கள்
உடலின் உதவியின்றி மனம் ஒன்றும் செய்ய
முடியாது. மனம் அனுசரிக்காமல் உடலாலும்
ஒன்றும் சாதிக்க முடியாது. ஆகவே, இவை
இரண்டையும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து
செயல்படுமாறு பழக்கப்படுத்திக்
கொள்ளவேண்டும்.
தலைவலி, வயிற்றுவலி, சூடு, குளிர்... என
வேறு உபாதைகளுடன் உடல் இருந்தால், அது
நோய் கொண்ட நிலை. இந்த நிலையில்
மனதால் பிரயோகப் பயிற்சிகள் செய்ய
முடியாது. ஆகவே, உடலை ஆசன சாத்திரப்படி
பல ஆசனங்களால் ஆரோக்கியமாக
வைத்துக்கொள்ளவேண்டும். உடல் நினைவே
இன்றி இயங்க முடியும்போதே நாம் உடல் நல
ஆரோக்கியத்துடன் இருக்கிறோம் என்று
பொருள்.
எளிமையான ஓர் ஆசனத்தில் நீண்ட நேரம்
உட்காரக்கூடிய பக்குவத்துக்கு நாம் தயாராக
வேண்டும். நெஞ்சு, கழுத்து, தலை
போன்றவை ஒரே நேர்க்கோட்டில் இருக்க
வேண்டும். உடல் முன்னால், பின்னால், இடம்,
வலம் என எப்படியும் சாயாமல், வளையாமல்
நேராக உட்கார்ந்து, நிமிர்ந்திருக்க வேண்டும்.
தொடர்ந்து உட்காரும்போது ஆசன நிலை
சரியாக அமைந்துவிடும். சற்றே குண்டாக
இருப்பவர்களுக்கு பத்மாசனம் உடனே
வந்துவிடாது. ஆசனம், சரியாக வரும் வரை
பயிற்சியைத் தொடங்காதிருக்க
வேண்டியதில்லை. ஆசன நிலையுடன்
இதையும் பழகிவரலாம்.
வயோதிகர்களும் முடியாதவர்களும்
நாற்காலியில் உட்கார்ந்தபடியே பிராணாயாமம்
செய்யலாம்.
ஒழுங்குமுறை
பிராணனின் வெளித்தோற்றம் - உடல்மூச்சு.
எனவே, ஒழுங்கற்று நடக்கும் மூச்சை
முதலில் ஒழுங்குபடுத்தவேண்டும். இதில்
இருந்து பிராணாயாமம் தொடங்கிவிடுகிறது.
இதில் ஜெயித்தால் உடல், மன இயக்கங்கள்,
பிறருடைய செயல்கள், பிரபஞ்ச இயற்கை...
என எல்லாவற்றையும் படிப்படியாகக்
கட்டுப்படுத்தும் திறன் வந்தடையும்.
மனநிலைக்கு ஏற்ப மூச்சு விரைவாகவும்
மெதுவாகவும் இல்லாமல், அதை அடக்கி,
மாற்றி அமைக்கும்போது, மாறுபடும்
மனநிலையைக்கூட மூச்சு கட்டுப்படுத்திவ
ிடுகிறது.
பலன்கள்: உடலும் மனமும் கட்டுப்பட்டு
இருக்கும். நினைத்ததைச் சாதிக்க முடியும்.
நல்ல தோற்றப் பொலிவு, உடல் பலம், மன
உறுதி, மகிழ்ச்சியான வாழ்க்கையைப்
பெறலாம். வீரியமும் ஒருமுகப்பட்ட மனமும்
எதையும் வசீகரிக்கும் சக்தியும் மேம்படும்.
சுவாசக் கணக்கு
ஒருவர் நாள் ஒன்றுக்கு சுமார் 21,600 முறை
மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுகிறார். அவர்
வேகவேகமாக மூச்சு விடும்போது, இந்த
எண்ணிக்கை சீக்கிரமே குறைந்து, ஆயுளும்
குறைகிறது. யோகி, ஆயுளை
ஆண்டுக்கணக்கால் அளவிடுவது இல்லை.
மூச்சுக் கணக்கில்தான் அளக்கின்றனர்.
உயிராற்றல் அதாவது பிராணன், வெளி
மூச்சுக்குப் பிறகு உள்ளே இழுத்துக்கொள்ளு
ம் மூச்சின் அளவிலேயே அதிகரிக்கவோ,
குறையவோ செய்யும். ஒருவர், நிமிடத்துக்கு
15 முறை மூச்சை இழுப்பதால் ஒரு நாளைக்கு
21,600 முறை சுவாசிக்கிறார் என்று
கணக்கிடப்படுகிறது.
சுவாச ஒழுங்கு
உள்ளிழுக்கும் மூச்சை மெதுவாக இழுத்துப்
பழகுவதுபோல, வெளிவிடுவதையும்
மெள்ளச் செய்தால், இதுவே சுவாச
ஒழுங்கு.உள்ளிழுப்பதை 'சுவாசம்’ என்றும்,
வெளிவிடுவதை 'பிரச்வாசம்’ என்றும்
கூறுவர். இரண்டின் வேகத்தையும்
குறைத்தால் அதை நிகழ்த்தும் பிராணன் நமக்கு
லாபமாகிறது. ஆகவே, நிமிடத்துக்கு 15 முறை
மூச்சுவிடும் மனிதனுக்கு, 100 ஆண்டு
ஆயுள். ஒரு நிமிடத்துக்கு நான்கே மூச்சுவி
டும் ஆமை எத்தனை காலம் வாழ்கிறது
தெரியுமா? 400 ஆண்டுகள்! ஆச்சரியமாக
இருக்கிறதுதானே!? பிராணாயாமம் மூலம்
சக்தி அதிகரிக்கிறது. சக்தி இல்லையெனில்
சுகம் இல்லை. எனவே, பிராணனே
உடலுக்கான பலத்தையும் சுகத்தையும்
தரவல்லது.
பிராணாயாமங்களிலும் பல வகை
சீத்காரி - உடல் வெப்பத்தைத் தணிக்கும்.
சீதளி - உடல் குளிர்ச்சியை உணரச் செய்யும்.
உஜ்ஜாயி - மார்புப் பகுதி நலம் அடையும்.
பிரமரீ - வண்டு போல ரீங்காரம் செய்வது.
நாடி சுத்தீ - நாடிகளைத் தூய்மையாக்குதல்.
பிளவனீ - வயிற்றில் பிராணனை நிரப்புதல்.
சுரியபேதா - பிங்கலை வழி பூரகம் செய்தல்.
மேல் உடலைத் தூய்மையாக்கும்.
மூர்ச்சா - மூர்ச்சை வரும் வரை செய்தல்.
கபாலபாதி - கபாலத்தை ஒளிமிகச் செய்தல்.
பிராணாயாமத்துக்கான எளிய பயிற்சிகள்
நாடி சுத்தீ
நாடிகள் அழுக்குகளால் அடைப்பட்டு
இருந்தால் அவற்றுள் வாயு வடிவப் பிராணன்
நுழைய முடியாது. எனவே, நாடிகளைத்
தூய்மையாக்கும் முறைகளில் நிர்மானு,
சமானு என்ற இரண்டு வகைகள் உண்டு.
நிர்மானு என்பது, உடலைத் தூய்மை ஆக்கும்
முறைகளில் நாடி சுத்தம் செய்வது. சமானு
என்பது வேதமந்திர பீஜ மந்திரத்துடன் மூச்சை
இழுத்துவிட்டுச் செய்வது.
பிராணாயாமத்தின் பொதுவான அளவு 1:4:2.
அதாவது, உள் மூச்சு ஒன்று, கும்பகம் நான்கு,
வெளி மூச்சு இரண்டு. இப்படி ஒரே ஒரு
பிராணாயாமம் தினமும் பழகினாலும் போதும்.
செய்முறைகள்:
1 முதலில் கால்களைக் குறுக்காகப் போட்டுப்
பத்மாசனத்தில் அமரவும். கண்களை மூடி,
புருவ மையத்தில் மனதைப் பதிக்கவேண்டும்.
வலது கையின் பெருவிரலையும், கடை
மூன்று விரல்களையும் பிரித்துக்கொண்ட
ு மூக்கைப் பிடியுங்கள். வலது பெருவிரலால்
மூக்கின் வலதுபக்கத் துளையை
அடைத்துக்கொள்ளவும். இடது மூக்குத்
துளை வழியே முடிந்தமட்டும் மூச்சை ஒரே
சீராக ஓசையின்றி உள்ளே இழுங்கள். உடனே,
அதே மூக்குத் துளை மூலம் மூச்சை மெள்ள,
சீராகத் தொடர்ந்து வெளியே விடுங்கள்.
மீண்டும் மீண்டும் 12 முறை இப்படிச்
செய்யவும். இது ஒரு சுற்று.
பிறகு, வலது மூக்கைத் திறந்து மற்ற மூன்று
விரல்களால் இடது மூக்கை அடையுங்கள்.
பெருவிரலை எடுத்து மூக்கின் வலது
பக்கமாக முடிந்த அளவு மூச்சை மெள்ள
உள்ளே இழுங்கள். உடனே, அதே மூக்கு
மூலம் மூச்சைச் சீராக வெளியே விடுங்கள்.
இதையும் 12 முறை செய்தால் ஒரு சுற்று.
மூச்சை இழுக்கும்போதும் விடும் போதும்
'ஓம்’ அல்லது ஏதாவது மந்திரத்தை
ஜபிக்கலாம்.
முதல் வாரம், ஒரு சுற்று இரு மூக்கிலும்
சேர்த்துச் செய்யுங்கள். இரண்டாம் வாரத்தில்
இரண்டு சுற்றும், மூன்றாம் வாரத்தில்
மூன்று சுற்றும் செய்யுங்கள். ஒரு சுற்றுச்
செய்தவுடன் சில நிமிடங்கள் ஓய்வெடுத்துக்
கொள்ளலாம். இந்த ஓய்வில் சாதாரணமாகவே
சுவாசிக்கலாம். இதுவே ஓய்வுதான்.
இந்தப் பயிற்சியில் உள்ளே மூச்சை நிறுத்தும்
கும்பகம் இல்லை. உங்கள் திறமைக்கேற்ப
அதிகச் சுற்றுகளைப் பழகலாம்.
பலன்கள்: இது மூச்சை ஒழுங்குப்படுத்தும்.
இதனால் மூச்சளவு ஒரே சீராகி, நாள்பட்ட
நோய்களையும் தீர்க்கும். உடலில் பலமும்
கூடும்.
2 இரு மூக்குத் துளைகளின் மூலமும் முடிந்த
அளவுக்கு மூச்சை ஓசையின்றி ஒரே சீராக
மெள்ள இழுத்து, நுரையீரல்களில்
நிரப்பிக்கொள்ளவும். உடனே, அதேபோல
இரண்டு மூக்குத் துளைகள் மூலமும்
மூச்சை வெளியே விடவும். இதை 12
முறைகள் செய்ய ஒரு சுற்றாகும். நேரம்,
திறமைக்கு ஏற்ப அதிகச் சுற்றுகள்
செய்யலாம். இதிலும் கும்பகம் இல்லை.
3உங்களுக்குத் தெரிந்த ஆசனம் எதுவோ
அதுபோல் அமருங்கள். மூக்கின்
வலதுபக்கத்துளையை வலப் பெருவிரலால்
மூடி, மூக்கின் இடதுபக்கத் துளையில்
சுவாசத்தை இழுங்கள். இடது துளையை
மூடியவாறு வலது மூக்கு வழியாக மெள்ள
இழுத்த காற்றை வெளியே விடுங்கள்.
வலமூக்கு வழியே முடிந்த அளவு காற்றை
உள்ளிழுங்கள். இடமூக்கைத் திறந்து அதன்
மூலம் உள்ளே இழுத்த காற்றை வெளியே
விடுங்கள். இதிலும் கும்பகம் இல்லை. 12
முறை இதைச் செய்யலாம். இது, ஒரு சுற்றுக்
கணக்கு. இதில் மூக்கு மாற்றிச் செய்வதே
சிறப்பு.
4நாற்காலி, சோபாவில் வசதியாக
அமர்ந்துகொள்ளுங்கள். இரு மூக்குத்
துளைகள் மூலம் எவ்வளவு முடியுமோ
அவ்வளவு மூச்சை உள்ளே இழுங்கள்.
முடிந்தவரை உள்ளே நிறுத்திக்கொள்ளுங்கள்.
பிறகு வெளியே சீராக மெள்ள நியமப்படி
வெளியே விடுங்கள். இது எளிய
கும்பகமாகும். உள்ளிழுத்தல், நிறுத்தல்,
வெளியேவிடலில் குறிப்பிட்ட விகிதம்
எதுவும் அளவாக இல்லை. ஆனால், நன்கு
இழுப்பது, முழுவதும் வெளிவிடுவதும்,
சுகமாக இருக்கும் வரை மட்டுமே
அடக்குதலும் உண்டு.
பலன்கள்: ரத்த ஓட்டம் சீராகும். களைப்பு
அகலும். உடல் உறுப்புகளிடையே ஒழுங்கு,
ஒருங்கிணைப்பு உண்டாகும். மனம்
ஒருநிலைப்படும். கோபம், தீய சிந்தனை
அகலும். மன உறுத்தல், உளைச்சல் நீங்கும்.
படிப்பவர்களுக்கு நல்ல ஞாபகசக்தி தங்கும்.
மன ஆற்றல் அதிகரிக்க இந்தப் பயிற்சியைப்
பழகலாம். சோர்வு இருக்காது. 30 வருட
ஆஸ்துமா பிரச்னைகூட தீரும். ஒரு முறை
செய்துவிட்டாலே அடிக்கடி செய்யத்
தூண்டும் பயிற்சி இது.
சீத்காரி
இதற்கு 'குளிரானது’ என்று பொருள். செய்வது
மிகவும் எளிது. இந்தக் கோடை காலத்தில்
இதைச் செய்வதன் மூலம் உடல் வெப்பத்தைத்
தணித்துக்கொள்ளலாம்.
ஏதேனும் ஓர் ஆசனம் போட்டு அமருங்கள். இரு
வரிசைப் பற்களையும், சேர்த்து
வைத்துக்கொள்ளுங்கள். வாய்க்குள் நாக்கை
மேலண்ணத்தில் ஒட்டியவாறு கொஞ்சம்
மடித்துக்கொள்ளுங்கள். 'இஸ்ஸ்ஸ்...’ என்று
காற்றை வாய்வழியே உள்ள பல் இடுக்கு
வழியாக உறிஞ்சவேண்டும். முடிந்தவரை
கும்பகம் செய்யலாம்.
காரம் நாவில் பட்டதும், அல்லது ஜில்லென
ஐஸ் பட்டால் 'ஸ்..ஸ்’ என்று காற்றை
இழுப்பது போலத்தான். பிறகு, மெள்ள மூக்கின்
வழியே காற்றைச் சீராக வெளியேற்றுங்கள்.
வாயால் இழுத்து மூக்கால் வெளிவிடுவதால்,
முடிந்தவரை பற்கள் ஒன்றாக சேர்ந்தபடி
இருக்கவேண்டும். கும்பகம் செய்யும்போது
நாக்கின் நுனி மேலண்ணத்தில் தொட்டு
அமுத்தியிருக்கவேண்டும். காலை, மாலையில்
10 முறை செய்யப் பழகுங்கள்.
சவாசனத்தில் பிராணாயாமம்
இது உடல் முழுவதுக்குமான பிராணாயாமம்.
சூடு இல்லாத சமமான ஒரு தரையில்
விரிப்பைப் போட்டு, தரையில் முதுகு
படும்படி மல்லாந்து படுங்கள். கைகளையும்
கால்களையும் நன்றாக நீட்டிக்கொள்ளுங்கள்.
உடல் உறுப்புகளை விறைப்பு இன்றி
கிடத்துங்கள். பக்கவாட்டில் நீண்டு கிடக்கும்
கைகளில் உள்ளங்கைகள் மேலே பார்த்தபடி
இருக்கட்டும். மூட வேண்டாம். பாதங்கள் நேரே
சற்று விலகி இருக்கட்டும். உடலின் தசைகள்,
நரம்புகள், உறுப்புகள் எல்லாம் தளர்ந்து
இருக்கட்டும். அகலமாக இருந்தால் கட்டிலில்
கிடந்து இதைப் பண்ணலாம்.
இரு மூக்குத் துளைகள் மூலமாக ஓசையின்றி
மூக்கு சுருங்குதலோ, விரிதலோ இல்லாமல்
மெள்ள சீராக மூச்சை உள்ளே இழுங்கள்.
முடியும் வரை சிரமம் இல்லாத வரையில்
மூச்சை உள்ளே நிறுத்துங்கள். விடத்
தோன்றும்போது இரு மூக்கின் வழியாகவும்
மெள்ளச் சீராக மூச்சை, தொடர்ச்சியாக
வெளியே விடுங்கள்.
இப்படி காலையில் 10 முறையும், மாலையில்
10 முறையும் செய்து பழகுங்கள். மூச்சை
இழுக்கும்போதும் விடும்போதும் 'ஓம்’ என்று
ஜபிக்கலாம். கும்பகத்தின்போதும் ஜபிக்கலாம்.
பலன்கள்: மனமும் உடலும் பூரண
ஓய்வுகொள்கிறது. கொஞ்சம் வயதானவர்கள்
சுகமாக இதைப் பயிற்சிக்கலாம்.
மனக்கொதிப்பு, மன அழுத்தம், மறதி,
படபடப்பு, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்
போன்றவை குணமாகும். இதயம் இதமாக
இருக்கும்.
நடந்துகொண்டே பயிற்சி
தோள் பட்டைகள் பின் செல்ல, தலை நிமிர்ந்து
நடக்க வேண்டும். ஓர் அடிக்கு ஒன்று என,
மூன்று அடிகள் எடுத்து, மூன்று 'ஓம்’
அல்லது ஏதாவது ஒரு மந்திரம் சொன்னபடி
மெள்ள மூச்சை இழுங்கள். பிறகு, 12 அடிகள்
எடுத்து வைத்து 12 'ஓம்’களை ஜபித்து
மூச்சை உள்ளே நிறுத்தி வையுங்கள். பிறகு,
ஆறு அடிகள் எடுத்துவைத்து ஆறு
'ஓம்’களைச் சொல்லி மெள்ள மூச்சை
வெளியே விடவேண்டும். இது ஒரு சுற்று.
இதன் பிறகு, சற்று ஓய்வாக நடக்கலாம்.
காலடி வைக்கும்போது 'ஓம்’ எனச் சொல்வது
சிரமமாகத் தெரிந்தால், காலடி எடுத்து
வைத்தல் பற்றிக் கவலைப்பட வேண்டாம்.
அதிக வேலைச் சுமையுள்ளவர்கள் வாக்கிங்
போகும்போது காலையிலும் மாலையிலும்
இதைச் செய்யலாம். சுத்தமான காற்றில்
நடந்தபடியே பிராணாயாமம் செய்வது,
உடலுக்கு மிகவும் சந்தோஷத்தைத் தரும்.
அமர்ந்திருந்து செய்தே பழகியவர்கள், இப்படி
நடந்தபடியே செய்யலாம்.
பலன்கள்: தாகமாக இருக்கும்போது இந்தப்
பயிற்சியைச் செய்தால் தாகம் தீரும். முக
அழகு கூடும். உடல் வலிமை உண்டாகும்.
பசி, தாகம், தூக்கத்தை வெல்லலாம்.
விஷத்தைக்கூட முறியடிக்கும் வல்லமை
பெற்ற இந்தப்பயிற்சி, உடல் வெப்பத்தையும்
குறைக்கும்.
நின்றுகொண்டே பிராணப் பயிற்சி செய்வது
நல்ல பலனைத் தரும்.
சீதளிப் பிராணாயாமம்
இதுவும் குளிர்ந்த பிராணாயாமம்தான். சீதளம்
எனில், குளிர்ச்சி என்று பொருள். கோடையில்
வெளியில் அதிகம் அடிக்கும்போது செய்தால்
குளிர்ச்சியாக இருக்கும். உடலில் இருந்து
வெப்பம் காதுகள் வழியே வெளியேறுவதை
உணரமுடியும்.
ஆசனத்தில் வசதியாக உட்கார்ந்துகொள்
ளுங்கள். இரு உதடுகளின் இடையிலும்
நாக்கைத் துருத்தி குழல் போல் மடித்து
வெளியே நீட்டவும். இருபுறமும் மடிந்த
நாக்கு நடுவில் குழல்போலப் பள்ளமாக
இருக்கும். 'ஷ்’ என்று சீறும் ஓசையுடன்
காற்றை வாய் வழியாக உள்ளே
இழுத்திடுங்கள். பிறகு காற்றை
விழு

Saturday, July 11, 2015

ஓம் : உடலில் செய்யும் அளப்பரிய அதிசயங்கள்





ஓம் : உடலில் செய்யும் அளப்பரிய அதிசயங்கள்
* ஓம் என்ற மந்திரம் உலகிற்கே உரித்தான
மந்திரம் என்று வேதகாலத்து ரிஷிகள்
கூறி இருப்பதையும் அந்த உன்னத
மந்திரத்தை வேத உபநிடதங்கள் போற்றித்
துதிப்பதையும் நன்கு அறிவோம் ; இந்த
நவீன யுகத்திற்கேற்ற விஞ்ஞான மந்திரம்
அது என்று புதிய ஒரு ஆய்வின்
முடிவில் ஆராய்ச்சியாளர்கள்
சொல்லும்போது நமது வியப்பின்
எல்லைக்கு அளவில்லை ;
அமராவதியில் உள்ள சிப்னா காலேஜ்
ஆப் என் ஜினியரிங்க்
அண்டு டெக்னாலஜியில்
பேராசியராகப் பணியாற்றும் அஜய்
அணில் குர்ஜர் அந்தக் கல்லூரியின்
முதல்வர் சித்தார்த் லடாகேயுடன்
இணைந்து ஓம் பற்றிய ஆராய்ச்சியில்
இறங்கினார்.
*இந்த ஆராய்ச்சியில் அவர்கள் இறங்கக்
காரணம் நாளுக்கு நாள் வணிகம்
செய்வோர்,தொழிற்சாலை
அலுவலகங்களில் பணிபுரிவோர்
உள்ளிட்ட அனைவருக்கும் ஏற்படும்
தாங்கமுடியாத மன அழுத்தமும்
அதனால் ஏற்படும் வேதனைகளும்
அவர்களைப் படுத்தும் பாடும்தான்!
உளவியல் ரீதியிலான மன
அழுத்தத்திற்கு மருந்து எது என்று
ஆராயப்புகுந்த அவர்கள் ஓம் மந்திர
உச்சரிப்புதான் அதற்கான
மாமருந்து என்று சோதனை
மூலமாகக் கண்டுபிடித்தனர்.
*ஓம் என உச்சரிப்பதால் ஒரு புதிய
உத்வேகம் உடலில் ஏற்படுவதையும்
பிரக்ஞை தூண்டப்படுவதையும்
மனதின் வரையறுக்கப்பட்ட தடைகள் இந்த
மந்திரஒலியால் மீறப்படுவதையும்
அவர்கள்
உறுதிப்படுத்துகின்றனர்.இதைக்
கண்டுபிடிக்க அவர்கள் வேவ்லெட்
ட்ரான்ஸ்பார்ம்ஸ் மற்றும் டைம்
ப்ரீகுவென்ஸி அனாலிஸிஸ்( Wavelet
Transforms,Time- frequency Analaysis)
ஆகிய உத்திகளைப் பயன்படுத்தினர்.
ஓம் என உச்சரிக்கும்போது ஈஈஜி அலைகளில்
மாறுதல்கள் ஏற்படுவதையும்
மூளையில் ஒலியினால் மின் செயல்
மாறுபாடுகள் ஏற்படுவதையும்
அவர்கள் நவீன சாதனங்கள் மூலம்
குறித்துக் கொள்ளமுடிந்தது. ஈஈஜி சிக்னல் மூலம் ஓம்
என்பதை உச்சரிப்பதற்கு முன்னரும்
பின்னரும் நரம்பு மண்டலத்தில் ஏற்படும்
மாறுதல்களை அவர்களால் கண்காணிக்க
முடிந்தது. மந்திர ஒலிகள் மனிதர்களின்
நரம்பு மண்டலத்தில் அதிசயமான
நல்லவிளைவுகளை ஏற்படுத்துகின்றன
என்கிறார்கள்.
*ஆக்கல் ,காத்தல் ,அழித்தல் என்ற
முப்பெரும் தொழில்களை பிரம்மா
,விஷ்ணு ,ருத்ரன் ஆகியோர்
செய்வதை இந்து தர்மம்
கூறுவதையும் ஓம் மந்திரத்தில் உள்ள
அகார,உகார ,மகாரங்கள் “ பிரம்மா
,விஷ்ணு ,ருத்ரனை ” க் குறிப்பதையும்
அனைவரும் அறிவர்.
ஓம் என நாம் ஒலிக்கும்போது பிரபஞ்ச
ஆற்றல்கள் நேரடியாக அதிர்வுகள்
மூலமாக நமது உடலில்
நுழைகின்றன.வாயின் பின்புறம்
உதிக்கும் “ அ” சுவாசிப்பு அமைப்பில்
அடிவயிற்றில் உணரப்படுகிறது.
வாயின் நடுவில் பிறக்கும் “ உ ”
மார்புப்பகுதியில்
தாக்கத்தை ஏற்படுத்துகிறது.குவிந்த
உதடுகளில் வழியே வரும் “ ம”
தொண்டை மற்றும் தலையில் உள்ள
சுவாச அமைப்பில்
தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இந்த ஒவ்வொரு ஒலியும்
ஒரு குறிப்பிட்ட ஆற்றலை உடலின்
சிறு திசுவிலிருந்து முழுசுவாச
அமைப்பு வரை ஏற்படுத்துகிறது.ஓம்
முழுதாக ஒலிக்கப்பட்டவுடன் பிராண
ஆற்றல் உடல் முழுவதும் பாய்கிறது.
ஆராய்ச்சியில் ஈடுபட்டது ஏன்?
இப்படிப்பட்ட ஆராய்ச்சியில் அணில்
குர்ஜருக்கு ஏன்
ஈடுபாடு வந்தது என்பதற்கு அவர்
வாழ்க்கையில் நடந்த
ஒரு சம்பவமே காரணம் ஆகும்.
29.5.1999 அன்று தொலைபேசியில்
பேசிக்கொண்டிருந்தபோது திடீரென
அவரது தாயாருக்குப் பேசும்
சக்தி போய்விட்டது.மூளையில் ரத்தம்
கட்டிவிட்டதால் நினைவையும்
இழந்து அவர் பக்கவாதத்தால்
பீடிக்கப்பட்டார்.அடுத்த நாள்
அவருக்கு கோமா நிலை ஏற்பட்டது.
ஆனால்,
இப்போதோ அவருக்கு 90% பழைய
ஆற்றல்
வந்துவிட்டது.அவருக்கு ஸ்பீச்தெரபி
எனப்படும் பேச்சாற்றல் மருத்துவம்
தரப்பட்டதே இதற்குக்காரணம்.அவருக்கு
சிகிச்சை அளித்த மருத்துவர்கள்
மூளையில் ரத்தம் உறைவதற்கான
காரணம் ஹைபர் டென்ஷன் மற்றும் அதிக
மன அழுத்தமே என
தெரிவித்தனர்.இப்படிப்பட்ட நிலையைப்
போக்குவதற்கான சிறந்த சொல்
எது என்று ஆராயப் போக அவர் ஓம்
ஆராய்ச்சியில் இறங்கி ஓம் மந்திரத்தின்
அற்புத ஆற்றல்களை அறிந்தார்.மந்திரத்தின்
ஆற்றல்களை அறிய டிஜிட்டல் சிக்னல்
ப்ராஸஸிங் உத்திகளை அவர்
பயன்படுத்தினார்.
*ஓம் பற்றிய வேறு சில ஆராய்ச்சிகள்:
தகாஷி எடல் என்பவர் 1999 இல்
மேற்கொண்ட ஆய்வில் குறைந்த
அதிர்வெண் கொண்ட சப்தம் உடலில்
மார்பு மற்றும் அடிவயிற்றுப்
பகுதிகளில்
மாற்றங்களை ஏற்படுத்துகிறது
என்பதைக் கண்டறிந்தார்.
*இதை அடுத்து
2003 இல் ஹெய்ஸ்னம் ஜினாதேவி எடல்
ஓம் மந்திர உச்சரிப்பை ஆராய்ந்த
போது அது இருபகுதிகளைக்
கொண்டிருப்பதைக் கண்டு “ ஓ ”
என்று ஆரம்பித்து “ ம்”
என்று முடிக்கும்போது உடலில்
ஏற்படும் மாறுதல்களைத்
தொகுத்தார்.இந்த உச்சரிப்பு மனிதனின்
நரம்பு மண்டலத்தில் சாதகமான
விளைவுகளை ஏற்படுத்துவது
ஒவ்வொரு ஆராய்ச்சி முடிவிலும்
தெளிவாக விளங்க ஆரம்பித்தது.
*ஏழு சக்கரங்களிலும் அதிர்வு
இதையெல்லாம்
முன்னோடி ஆராய்ச்சியாக்
கொண்டு அனில் குர்ஜர் 25 முதல் 40
வயது வரை உள்ள ஆண் பெண்கள்
அடங்கிய 125 பேர் கொண்ட
ஒரு குழுவிடம் ஆறுவருட காலம்
தனது ஆராய்ச்சியை நடத்தினார்.
அமைதியான ஒரு அறையில் 44.1
ஹெர்ஸ்ட் சாம்ப்ளிங் வீதத்தில் 16 பிட்
அமைப்பில் ஒரு மைக்ரோபோன்
மூலமாக ஓம் மந்திரத்தை ஓதச்
செய்து ஆய்வுகள் தொடரப்பட்டன.
20 நிமிடங்கள் ஓம் ஒலிக்கப்பட்டவுடன்
மூளையிலும் நரம்புமண்டலத்திலும்
ஏற்படும் மாறுதல்கள் துல்லியமாக
ஆராயப்பட்டன.இந்த ஆய்வின் முடிவில்,
1. ஓம் மந்திரத்தை உச்சரிப்பதால் மன
அழுத்தம் குறைகிறது.
2. எதன் மீதும் செய்யப்படும்
கவனக்குவிப்பு அதிகரிக்கிறது.
3. ஏழு உச்சநிலைகளைக் கொண்ட
ஓம் ,உடலின் ஏழு சக்கரங்களில்
அதிர்வெண் மூலமாக ஒரு பெரிய
குறிப்பிடத்தக்க
மாறுதலை ஏற்படுத்துகிறது என்று
கண்டார்.
*மூலாதாரத்தில் 256
ஹெர்ட்ஸீம் ,ஸ்வாதிஷ்டானத்தில் 288
ஹெர்ட்ஸீம் ,மணிபூரத்தில் 320
ஹெர்ட்ஸீம் அனாகதத்தில்(இதயம்) 341.3
ஹெர்ட்ஸீம் ,விசுத்தாவில்(தொண்டை )
384 ஹெர்ட்ஸீம் , ஆக்ஞாவில்
(மூன்றாவது கண்) 426.7 ஹெர்ட்ஸீம்
,சஹஸ்ராரத்தில் 480 ஹெர்ட்ஸீம்
அளக்கப்பட்டு உடலின் ஏழு சக்கரங்களும்
புத்துணர்ச்சி அடைவதை ஆய்வு
நிரூபித்தது.
ஒலியால் உடலை ஒருங்கிணைக்கும்
ஓம்
ஓம் மந்திரத்தை உச்சரிக்கும்போது
மிகவும் நுண்ணிய உறுப்பான
காதுகள் மெடுல்லா மூலமாக
உடலின்
திசுக்களை இணைக்கிறது.நமது
உடலின் தன்மை ,சமன்பாடு ,நெகிழ்வுத்
தன்மை, பார்வை அனைத்தும் ஒலியால்
பாதிக்கப்படுவதால் ஓம் உருவாக்கும்
நல்ல ஒலி நன்மையைத்
தருகிறது.இது வேகஸ்
நரம்பு மூலமாக உள்காது
,இதயம் ,நுரையீரல்,வயிறு
,கல்லீரல் , சிறுநீரகப்பை,
சிறுநீரகங்கள் ,சிறுகுடல், பெருங்குடல்
ஆகிய அனைத்து உறுப்புக்களையும்
இணைத்து நன்மையை நல்குகிறது.
இப்படி ஓமின் பெருமையை விஞ்ஞான
ரீதியாக விளக்கிக்
கொண்டே போகலாம்.அவ்வளவு
உண்மைகளை ஆராய்ந்து
கண்டுபிடித்திருக்கிறார் அனில்
குர்ஜர்.அவருக்கு ஆக்கமும் ஊக்கமும்
அளித்துள்ளார் அவரது பிரின்ஸிபல்
சித்தார்த் லடாகே.இவர்களின்
ஆராய்ச்சி இன்னும்
தொடர்கிறது.மந்திரங்களின்
மகிமை பற்றிய விஞ்ஞான விளக்கப்
புதுமைகள் இன்னும் அதிகமாக
வரவிருக்கின்றன.!!
ஓம்சிவசிவஓம்
ஓம்சிவசிவஓம்
ஓம்சிவசிவஓம்

Tuesday, July 7, 2015

உங்கள் ராசிப்படி ஜெபிக்க வேண்டிய மந்திரம்!!!

மேஷம் - ஓம் ஐம் க்லீம் சௌம் 
ரிஷபம் - ஓம் ஐம் க்லீம் ஸ்ரீம்
மிதுனம் - ஓம் க்லீம் ஐம் சௌம்
கடகம் - ஓம் ஐம் க்லீம் ஸ்ரீம்
சிம்மம் - ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் சௌம்
கன்னி - ஓம் ஸ்ரீம் ஐம் சௌம்
துலாம் - ஒம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம்
விருச்சிகம் - ஓம் ஐம் க்லீம் சௌம்
தனுசு - ஓம் ஹ்ரீம் க்லீம் சௌம்
மகரம் - ஓம் ஐம் க்லீம் ஹ்ரீம் ஸ்ரீம் சௌம்
கும்பம் - ஓம் ஹ்ரீம் ஐம் க்லீம் ஸ்ரீம்
மீனம் - ஓம் ஹ்ரீம் ஐம் க்லீம் ஸ்ரீம்

Thursday, July 2, 2015

சப்த கன்னி மந்திரங்கள்

சப்தகன்னியர் வழிபாடு என்பது அம்பிகை வழிபாட்டின் அங்கமாகக் காணப்படுகின்ற கிராமிய தெய்வ வழிபாடு ஆகும். சக்தி அம்சத்தில் சப்த மாதர்கள் வழிபாடு சிறப்பிடம் பெறுகிறது.
சண்ட முண்டர்கள் என்ற அரக்கர்களை அழிக்க வேண்டி மனித கர்ப்பத்தில் பிறக்காமலும், ஆண் பெண் இணைவில் பிறக்காமலும், அம்பிகை எனப்படும் சக்தியின் அம்சத்திலிருந்து உருவானவர்களே இந்த சப்த கன்னிகைகள். அவர்கள் ப்ராம்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி, சாமுண்டி முதலான ஏழு கன்னிகைகள் சப்த மாதர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.
1.ப்ராம்மி
அம்பிகையின் முகத்தில் இருந்து உருவானவள் பிராம்மி. மேற்கு திசையின் அதிபதி.கல்விக்கு அதிபதியான சரஸ்வதி என்ற கலைவாணியின் அம்சமாவாள். நான்முகனின் அம்சமாய்த் தோன்றியவள். நான்கு முகங்கள், நான்கு கரங்கள். மஞ்சள் வண்ணம் பிடித்த வண்ணம். கமண்டலம், அக்ஷமாலையைப் பின்னிரு கரங்களில் ஏந்தி முன்னிரு கைகளில் அபயவரதம் காட்டுவாள். ருத்திராக்ஷ மாலை தரித்து அன்னவாகனத்தில் அமர்ந்திருப்பவள்.
மான் தோல் அணிந்திருப்பவள்.ஞானம் தந்து அஞ்ஞானம் நீக்குபவள். இவளது காயத்ரி மந்திரத்தை படிக்கும் மாணவர்கள் தினமும் ஜபித்து வந்தால்,ஞாபக மறதி நீங்கிவிடும். (அசைவம் தவிர்க்க வேண்டும். வீட்டிலும், வெளியிலும் கண்டிப்பாக சாப்பிடக்கூடாது.) ஐ.ஏ.எஸ்., வங்கிப்பணி, அரசுப்பணி முதலானவற்றிற்கு தேர்வு எழுதுபவர்கள் தினமும் 108 முறை மேற்கு நோக்கி ஜபித்துவந்தால் வெற்றி நிச்சயம்.
தியான சுலோகம்
தண்டம் கமண்டலும் சச்சாத் அஷஸீத்ரமதா பயம்
பிப்ரதி கனகச்யா ப்ராஹீ க்ருஷ்ணா ஜீனோஜ்வலா
காயத்ரி மந்திரம்
ஓம் ப்ரம்ஹ சக்தியை வித்மஹே
தேவர்ணாயை தீமஹி
தன்னோ ப்ராம்ஹி ப்ரசோதயாத்.
2.மகேஸ்வரி
அம்பிகையின் தோளில் இருந்து உருவானவள் மகேஸ்வரி. ஈஸ்வரன் இவளது சக்தியால்தான் சம்ஹாரமே செய்கிறார். மகேசனின் சக்தி இவள். முக்கண் படைத்தவள். ஜடா மகுடத்துடன் காட்சியளிப்பாள். மான், மழு ஏந்தி, அபயவரதம் காட்டி நான்கு கரங்களுடன் இருப்பாள். தூய வெண்ணிறமே பிடித்த வண்ணம். வடகிழக்கு என்னும் ஈசானியம் திசையை நிர்வகித்து வருபவள்.
இவளை வழிபட்டால்,நமது கோபத்தைப் போக்கி சாந்தத்தை அளிப்பாள்.இவளது வாகனம் ரிஷபம் ஆகும். அம்பிகையின் இன்னொரு அம்சமாக போற்றப்படுகிறாள்.
இவர் ஐந்து முகங்களையும், ஒவ்வோர் முகத்திலும் மூன்று கண்களையும் கொண்டிருப்பார் என ஸ்ரீ தத்துவநிதி, விஷ்ணுதர்மோத்திர புராணம் என்பனவற்றிற் கூறப்பட்டுள்ளது. ஸ்ரீதத்துவநிதி இவருக்குப் பத்துக் கரங்கள் காணப்படுமெனவும், அவற்றுள் வலது பக்கத்திலுள்ள ஐந்து கரங்களில் ஒன்று அபய முத்திரையிலிருக்க ஏனையவற்றில் வாள், வஜ்ரம், திரிசூலம், பரசு என்பன காணப்படுமெனவும், இடது பக்கத்திலுள்ள கரங்களிலொன்று வரத முத்திரையிலிருக்க ஏனையவற்றில் பாசம், மணி, நாகம், அங்குசம் என்பன இடம் பெற்றிருக்கும் எனவும் கூறுகின்றது. எருதினை வாகனமாகவும் கொடியாகவும் கொண்டிருப்பார்.
தியான சுலோகம்
சூலம் பரச்வ்தம் க்ஷீத்ர துந்துபிம் ந்ருகரோடிகாம்
வஹிந்த் ஹிம ஸங்காசா த்யேயா மஹேச்வரி சுபா.
காயத்ரி மந்திரம்
ஓம் ச்வேத வர்ணாயை வித்மஹே
சூல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ மஹேஸ்வரி ப்ரசோதயாத்
3.கௌமாரி
கவுமாரி. கவுமாரன் என்றால் குமரன். குமரன் என்றால் முருகக்கடவுள். ஈசனும், உமையாலும் அழிக்க இயலாதவர்களை அழித்தவர்தான் குமரக்கடவுள் எனப்படும் முருகக்கடவுள். முருகனின் அம்சமே கவுமாரி.
இவளுக்கு சஷ்டி, தேவசேனா என்ற வேறு பெயர்களும் உண்டு. மயில் வாகனத்தில் வருபவள். அஷ்ட திக்கிற்கும் அதிபதி இவளே. கடலின் வயிறு கிழியுமாறு வேற்படையைச் செலுத்திய சக்தி இவள். இவளை வழிபட்டால், குழந்தைச் செல்வம் உண்டாகும். இளமையைத் தருபவர்
தியான சுலோகம்
அங்குசம் தண்ட கட்வாங்கெள பாசாம்ச தததீகரை
பந்தூக புஷ்ப ஸங்காசா கவுமாரீ காமதாயினி
பந்தூக வர்ணாம் கரிகஜாம் சிவாயா
மயூர வாஹாம்து குஹஸ்ய சக்திம்
ஸம் பிப்ரதீம் அங்குச சண்ட தண்டெள
கட்வாங்கர செள சரணம் ப்ரபத்யே!
காயத்ரி மந்திரம்
ஓம் சிகி வாஹனாயை வித்மஹே
சக்தி ஹஸ்தாயை தீமஹி
தன்னோ: கெளமாரி ப்ரசோதயாத்.
4.வைஷ்ணவி
அம்பிகையின் கைகளில் இருந்து பிறந்தவள் வைஷ்ணவி. இவள் விஷ்ணுவின் அம்சம். கருடனை வாகனமாக கொண்டவள். வளமான வாழ்வு தருபவர். சகல சவுபாக்கியங்கள்,செல்வ வளம் அனைத்தையும் தருபவளே வைஷ்ணவி. குறிப்பாக தங்கம் அளவின்றி கிடைத்திட வைஷ்ணவி வழிபாடு மிக அவசியமாகும்.
விஷ்ணுவின் சக்தியான இவர் நீல நிறமானவர். ஆறு கரங்களைக் கொண்டிருப்பார். வலது கரங்களில் ஒன்று வரத முத்திரையிலிருக்கும். மற்றைய கரங்களில் கதா, தாமரை என்பன காணப்படும். இடது கரங்களில் ஒன்று அபய முத்திரையினைக் காட்டுவதாகவும் மற்றையன சங்கு, சக்கரம் ஏந்தியவாறும் காணப்படும். வைஷ்ணவி அழகிய கண்களையும், முகத்தினையும், மார்பினையும் கொண்டிருப்பார். மஞ்சள் ஆடை அணிந்திருப்பார். விஷ்ணுவிற்குரிய ஆபரணங்களை அணிந்து கருடனை வாகனமாகவும் கொடியாகவும் கொண்டிருப்பார்.
தியான சுலோகம்
சக்ரம் கண்டாம் கபாலம்ச சங்கம்ச தத்திகண:
தமால ச்யாமளா த்யேயோ வைஷ்ணவி விப்ரமோஜ்வகை.
காயத்ரி மந்திரம்
ஓம் ச்யாம வர்ணாய வித்மஹே
சக்ர ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வைஷ்ணவி ப்ரசோதயாத்
5. வாராஹி
பன்றி முகத்தோடு காட்சியளிப்பவள். இவள் அம்பிகையின் முக்கிய மந்திரியாக விளங்குகிறாள். வராஹம் எனப்படும் பன்றியின் அம்சமானது விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாகும். இவளுக்கும் மூன்று கண்கள் உண்டு. இது சிவனின் அம்சமாகும்.
அம்பிகையின் அம்சமாக பிறந்ததால், இவள் சிவன்,ஹரி,சக்தி என்ற மூன்று அம்சங்களைக் கொண்டவளாவாள். எதையும் அடக்க வல்லவள். சப்த கன்னிகைகளில் பெரிதும் வேறுபட்டவள். மிருகபலமும்,தேவகுணமும் கொண்ட இவள் பக்தர்களின் துன்பங்களை தாங்கிக் காப்பவள். பிரளயத்தில் இருந்து உலகை மீட்டவளாகச் சொல்லப்படுகின்றாள். எருமையை வாகனமாக உடையவள்.
கலப்பை, உலக்கை ஆகியவற்றைப் பின்னிரு கரங்களில் தாங்கி அபயவரதம் காட்டுவாள். லலிதாம்பிகையின் படைத்தலைவி இவளே. தண்டினி என்ற பெயருடன் சிம்ஹ வாஹினியாய்க் காட்சி கொடுப்பாள். இவளை வணங்குவோர் வாழ்வில் சிக்கல்கள், தடைகள், தீராத பகைகள் தீரும்.
வராகமூர்த்தியின் சக்தி. கறுப்பு நிறமானவர். பன்றியின் பன்றியின் முகத்தினை ஒத்த முகத்தினையும் பெரிய வயிற்றினையும் கொண்டிருப்பார். இவருக்கு ஆறு கரங்கள் காணப்படும். வலது கரங்களில் ஒன்று வரத முத்திரையிலிருக்கும். மற்றையனவற்றில் தண்டம், வாள் என்பன இடம் பெற்றிருக்கும். இடது கரங்களில் ஒன்று அபய முத்திரையினைக் காட்ட மற்றையன கேடயம், பாத்திரம் என்பனவற்றினை ஏந்தியவாறு காணப்படும். இவர் எருமையை வாகனமாகக் கொண்டிருப்பார் .
தண்டநாத வராகி பொன்னிறமானவர். பன்றியின் முகத்தினை ஒத்த முகத்தைக் கொண்டிருப்பார். இவரது கரங்களில் சங்கு, சக்கரம், கலப்பை, உலக்கை, பாசம், அங்குசம், தண்டம் என்பன காணப்படும். இரு கரங்கள் அபய, வரத முத்திரையிலிருக்கும்.
சுவப்ன வராகி மேக நிறமானவர். மூன்று கண்களைக் கொண்டிருப்பார். பிறைச்சந்திரனைச் சூடியிருப்பார். வாள், கேடயம், பாசம், அரிவாள் என்பன கரங்களில் இடம்பெற்றிருக்கும். இரு கரங்கள் அபய, வரத முத்திரையிலிருக்கும்.
சுத்த வராகி நீல நிறமானவர். பன்றியின் முகத்தினை ஒத்த முகத்தினைக் கொண்டவர். வெண்மையான பற்கள் வெளியே நீட்டப்பட்டவாறிருக்கும். தலையில் பிறைச்சந்திரனைச் சூடியிருப்பார். சூலம், கபாலம், உலக்கை, நாகம் என்பன கரங்களிற் காணப்படும்.
தியான சுலோகம்
முசலம் கரவாளம்ச கேடகம் தத்தீஹலம்
கனரர் சதுர்பிர் வாராஹி த்யேயாகா லக்னச்சவி:
காயத்ரி மந்திரம்
ஓம் ச்யாமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத்
6.இந்திராணி:
இந்திரனின் அம்சம். கற்பகமலர்களை கூந்தலில் சூடியவள். யானை இவளது வாகனம். சொத்து சுகம் தருபவர். தன்னை வழிபடுபவர்களின் உயிரைப் பேணுவதும், அவர்களுக்கு நல்ல வாழ்க்கைத்துணையை அமைத்துத் தருவதிலும், மிகவும் தலைசிறந்த அதேசமயம் முறையான காமசுகத்தைத் தருவதும் இவளே!.
மணமாகாத ஆண்கள் இவளை வழிபட்டால், அவர்கள் மிகச்சிறந்த மனைவியையும், கன்னிப்பெண்கள் இவளை வழிபட்டால், மிகப்பொருத்தமான கணவனையும் அடைவார்கள்.
இந்திரனின் சக்தியான இவள் ரத்ன மகுடம் தரித்தவள். பொன்னிற மேனி உடையவள். நாற்கரத்தினள். சக்தி ஆயுதமும், வஜ்ராயுதமும் தாங்கி அபயகரம் காட்டுவாள். சத்ரு பயம் போக்குபவள். மாகேந்திரி என்ற பெயரையும் கொண்டவள்.
இவரது வாகனமாகவும், கொடியாகவும் யானை இடம்பெற்றிருக்கும்.
தியான சுலோகம்
அங்குஸம் தோமரம் வித்யுத் குலசம் பிப்ரதீசரை
இந்திர நீல நிபேந்திராணி த்யேயா ஸர்வஸம் ருத்திதர:
காயத்ரி மந்திரம்
ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே
வஜ்ர ஹஸ்தாயை தீமஹி
தன்னோ ஐந்திரீ ப்ரசோதயாத்.
7.சாமுண்டி
ஈஸ்வரனின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய பத்திரகாளியானவள், தனது கோரமான முகத்தை மாற்றி சாமுண்டியாக ஆனவள். இவள் தனது ஆறு சகோதரிகளுடன் சேர்ந்து தாருகன் என்ற அரக்கனை அழித்தாள்.
பதினாறு கைகள், பதினாறு விதமான ஆயுதங்கள், மூன்று கண்கள், செந்நிறம், யானைத் தோலால் ஆன ஆடையை அணிந்திருப்பவள். சப்தகன்னிகைகளில் முதலில் தோன்றியவள் இவளே! சப்த கன்னிகைகளில் சர்வ சக்திகளையும் கொண்டிருப்பவள். மனிதர்களுக்கு மட்டுமல்ல; தேவர்களுக்கே வரங்களை அருளுபவள் இவளே!
இவளை வழிபட்டால்,எதிரிகளிடமிருந்து நம்மைக் காப்பதோடு,நமக்குத் தேவையான சகல பலங்கள்,சொத்துக்கள்,சுகங்களைத் தருவாள். இனி வேறுவழியில்லை என்ற சூழ்நிலை ஏற்படும்போது, இவளை அழைத்தால், புதுப்புது யுக்திகளைக் காட்டுவதோடு, முடியாததையும் முடித்துவைப்பாள்.
கறுப்பு நிறமானவர். பயங்கரமான தோற்றம் கொண்டவர். இறந்த மனித உடலை இருக்கையாகக் கொண்டவர். பாம்புகளை உடலில் அணிந்திருப்பார், ஒட்டிப்போன மெலிந்த வயிறு, குழிவிழுந்த கண்களைக் கொண்டிருப்பார்.
தியான சுலோகம்
சூலம் க்ருபாணம் ந்ருசிர: கபாலம் தததீகரை
முண்ட ஸ்ரங் மண்டி தாத்யேய சாமுண்டா ரக்த விக்ரஹா
சூலம் சாதததீம் கபால ந்ருசிர: கட்கான்ஸ்வ ஹஸ்தம்புஜை.
நிர்மாம் ஸாபிமனோ ஹராக்ருதிதரா ப்ரேதே
நிஷண்ணசுவா!
ரக்தபா கலசண்ட முண்ட தமணீ தேவிலலா போத்பவா
சாமுண்ட விஜயம் ததாது நமதாம் பீதிப்ரணா சோத்யதா.
காயத்ரி மந்திரம்
ஓம் க்ருஷ்ண வர்ணாஹை வித்மஹே
சூல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ சாமுண்ட ப்ரசோதயாத்