Thursday, December 10, 2015

உங்கள் கர்மவினை தீர மரக்கன்று நடுங்கள்!!!

ஒருவரது பிறந்த நட்சத்திரத்திற்கு உரிய மரக்கன்றை வாங்கி ஒரு கோயில் சார்ந்த பகுதியில் அல்லது வீடுகளில் அல்லது பொது இடங்களில் தென்மேற்குப் பகுதியில் சூரியக்கதிர்கள் படும் இடத்தில் நடவேண்டும். அந்த மரக்கன்றையும் அவரது பிறந்த நட்சத்திரம் உதயமாகும் நாளில் நடுவது மிக நன்று.
மரக்கன்றை நட்டதும் அவரது கையால் நவதானியங்களை ஊற வைத்த நீரை அச்செடிக்கு விட்டு, ஊறிய நவதானியங்களையும் அந்த மரக்கன்றுக்கு உரமாகப்போட வேண்டும். இப்படிச் செய்து அந்த மரத்தை பேணி பாதுகாத்து வர அம்மரக்கன்று வளர, வளர அதை நட்டவரின் வாழ்க்கையும் மலரும்.
அந்த மரக்கன்றை நட்டவரின் பிறந்த ஜாதகத்தில் இருக்கும் அனைத்து தோஷங்களையும் அந்த மரக்கன்று ஈர்த்துவிடும். அம்மரக்கன்று பூத்து, காய்க்கும்போது, உரியவரின் வாழ்க்கையும் செழிப்பாகத் துவங்கும். அவரது கர்மவினைகள் நீங்கியிருக்கும். கர்மவினைகளை வெற்றிகொள்ள ‘விருட்ச சாஸ்திரம்’ இப்படி ஒரு வழிகாட்டுகிறது.
கண் திருஷ்டிக்கு தாவர பரிகாரம் !!!
---------------------------------------------------
கண் திருஷ்டி என்பது எல்லோரும் தன்னை நோக்குதல் என பொருள் படும் ஒருவர் அழகாக ஒரு வீட்டை கட்டியிருக்கிறார் என்றால் அந்த தெருவில் செல்லும் எல்லோரும் அந்த வீட்டையே உற்று நோக்குவர்.
இதை வீட்டை கண் வைக்கிறார்கள் என கிராமத்தில் சொல்வதுண்டு அப்பொழுது திருஷ்டியை போக்க என்ன செய்ய வேண்டுமென்றால் அவர்களுடைய ஒட்டுமொத்த கண்பார்வையும் படுமாறு அங்கு ஏதாவது ஒரு பொருளை வைக்க வேண்டும்.
தாவரங்களுக்கு கண் திருஷ்டியை எடுக்க கூடிய குணம் உண்டு. அதனால் வீட்டு வாசலில் அழகான ரோஜா செடிகளை பிறர் பார்வையில் படுமாறு வாங்கி வைக்கலாம். தொங்கும் தோட்டங்களை அமைக்கலாம்.
தாவரங்களுக்கு கடும் கண் பார்வையை ஈர்க்கும் சக்தி உள்ளதால் இது போல ரோஜா செடி வளர்ப்பது, தோட்டங்கள் அமைப்பது மூலமாக வீட்டுக்கு ஏற்படும் தீய தோஷங்களை போக்கலாம்.
---------------------------------------------------------------------
உங்கள் ராசி மற்றும் நட்சத்திரத்திற்குரிய மரங்களை பற்றி தெரியுமா?....
மொத்தம் 27 நட்சத்திரங்களும், 12 ராசிகளும் உள்ளன. இதில் ஒவ்வொரு நட்சத்திரம் மற்றும் ராசிகளுக்கு என்று மரம் உள்ளது. பண்டைக்காலத்தில் மரங்களை மக்கள் வழிபட்டு வந்துள்ளனர்.
அதே போல் ஒவ்வொரு மரத்துக்கும் ஒரு மருத்துவ குணம் உண்டு. இது பலருக்கு தெரியாது. ஒவ்வொரு நட்சத்திரம் மற்றும் ராசிகளுக்குரிய மரங்களை வழிபட்டு வந்தாலே பலன் கிடைக்கும். இனி நட்சத்திரம் மற்றும் ராசிகளுக்குரிய மரங்கள் பற்றி பார்ப்போம்...
நட்சத்திரம்:
* அஸ்வதி ஈட்டி மரம்
* பரணி நெல்லி மரம்
* கார்த்திகை அத்திமரம்
* ரோகிணி நாவல்மரம்
* மிருகசீரிடம் கருங்காலி மரம்
* திருவாதிரை செங்கருங்காலி மரம்
* புனர்பூசம் மூங்கில் மரம்
* பூசம் அரசமரம்
* ஆயில்யம் புன்னை மரம்
* மகம் ஆலமரம்
* பூரம் பலா மரம்
* உத்திரம் அலரி மரம்
* அஸ்தம் அத்தி மரம்
* சித்திரை வில்வ மரம்
* சுவாதி மருத மரம்
* விசாகம் விலா மரம்
* அனுஷம் மகிழ மரம்
* கேட்டை பராய் மரம்
* மூலம் மராமரம்
* பூராடம் வஞ்சி மரம்
* உத்திராடம் பலா மரம்
* திருவோணம் எருக்க மரம்
* அவிட்டம் வன்னி மரம்
* சதயம் கடம்பு மரம்
* பூரட்டாதி தேமமரம்
* உத்திரட்டாதி வேம்பு மரம்
* ரேவதி இலுப்பை மரம்
ராசிகள்
* மேஷம் செஞ்சந்தனம் மரம்
* ரிஷபம் அத்தி மரம்
* மிதுனம் பலா மரம்
* கடகம் புரசு மரம்
* சிம்மம் குங்குமப்பூ மரம்
* கன்னி மா மரம்
* துலாம் மகிழ மரம்
* விருச்சிகம் கருங்காலி மரம்
* தனுசு அரச மரம்
* மகரம் ஈட்டி மரம்
* கும்பம் வன்னி மரம்
* மீனம் புன்னை மரம்
இந்த மரங்களை, ஈரோடு அருகேயுள்ள லக்காபுரம்புதுõர் லட்சுமி நாராயணர் கோயில், சென்னை திருவொற்றியூர் வடிவுடை நாயகி அம்மன் கோயி ல், மதுரை மீனாட்சியம்மன் கோயில் ஆகிய இடங்களில் வணங்கலாம்.

Tuesday, December 8, 2015

சிதம்பர ரகசியம்

-கண்ணாக்கு மூக்கு செவி ஞானக் கூட்டத்தில்
பண்ணாக்கு வைத்த பழம் பொருள் ஒன்றுண்டு
அண்ணாக்கினூடே அகண்ட வொளி காட்டி
பண்ணாக்கி நம்மைப் பதித்தவரே...
என்பதில் நந்திகேசவர் பெரிய நாக்காக
இருக்கிறார். அதற்கு புறத்திலுள்ள கண்ட
ஸ்தானத்தில் அண்ணாக்கு இருக்கிறது.
அதுவே அகாரமாகும். அதற்கு தூக்கிய பாதம்,
குஞ்சிதபாதம், திருவடி என்ற பெயர்களும்
உண்டு. அந்த அண்ணாக்குக்கு மேலே ஒரு
நாக்கு இருக்கிறது. அதற்கு பேர் உண்ணாக்கு.
அது உகாரம் ஆகும். அந்த அண்ணாக்கு
உண்ணாக்கு என்ற இரண்டும் தராசுமுனை
போல நிற்கிறது. சுவாமி இடது பாதம்
அண்ணாக்கு மேலே ஊன்றி, வலது பாதம்
புருவ நுனியிலிலே நிற்கிறது. இந்த வலது
பாதம் ஆடியபாதம், நற்றாள் ஆகும். அந்த
அண்ணாக்கு இருக்கப்பட்ட இடத்திலே
மனோன்மணி சக்தி வாசம் செய்கிறாள்.
உண்ணாக்குக்கு மேலே புருவமத்தியிலே
சதாசிவம் வாசம் செய்கிறார்...
சதாசிவனும் மனோன்மணியும் இருக்கப்பட்ட
இடமே சத்தம் பிறந்த இடம். அதுதான்
முச்சந்திகள் கூடும் இடமாகிய அகாரமும்
உகாரமும் தராசுமுனையாய் நிற்கும்.
இவ்விரண்டுக்கும் நடுவே மனோன்மணியும்
சதாசிவனும் நிற்கிறார்கள்.
இந்த இடமே இன்பதுன்பம் இல்லாத இடம்.
தீட்டு திடுக்கு அற்ற இடம். சகலமும்
விளையாடப்பட்ட இடமாகும். தூக்கிய
பாதத்தில் அணிந்த வீரகண்டா மணியும் பாதச்
சிலம்பும் சதங்கையும் அவ்விடத்திலே
ஒலிக்கும். அப்படி ஓசை உண்டான பின்பு
சதாசிவமும் மனோன்மணியும் தரிசனமாகும்.
பிறகு ஒரு சோதி தோன்றும், அச்சோதியில்
லயப்பட்டால் வெகுகாலம் ஒருவர் சீவித்து
வாழலாம்...
இன்னும் விளக்க வேண்டுமானால்,நம் உடலில்
உண்ணாக்கு மேலே உச்சிக்கு கீழேயுள்ள
பாதை வலம்புரி சங்கென்று அழைக்கப்படும்.இ
ந்த வலம்புரியில் இருகாது குறுக்கிடும்
பகுதியில் ஒரு கிணறு உள்ளது.இந்த
கிணற்றை நாதஉணவுதரும் தருமச்சாலை
என்ற நற்சத்திரங்கள் என்றும் கூறுவர்.இந்த
தருமச்சாலையிலே என்றும் வற்றாத
சக்திநாதனுக்கள் அக்கினியாக கொழுமிக்
கிடக்கின்றன.இந்த நாதனுக்களின்
ஊற்றுக்கண்ணாக மயிராண்டி எனும்
பிடரிக்கண்ணும் இந்த கிணற்றின்
மேல்மூடியாக மூக்காண்டி என்ற
புருவமத்தியின் உட்வாசலான குதம்
இருக்கிறது.
மேலும் இந்த வலம்புரியே மரணந்
தங்குந்தலமென்றும் கேள்வி
உதயஸ்தானமென்றும் நாதாக்களின்
அபிப்ராயம்.ஆகவே எவனொருவன்
வலம்புரியிலுள்ள நாதாந்தக் கிணற்றில்
நாதத்தை எழுப்புகின்றானோ அவனை எமன்
நெருங்கமாட்டான்.மீறி தவறான
எண்ணங்களினால் ஏற்படும் போக்குவரத்து
செலவினால் கிணற்றில் நாதத்திற்கு பதிலாக
கபமாக மரணத்தின் அஸ்திவாரம்
போடப்படுகிறது.
வள்ளலார் கூறிய சுத்த சன்மார்க்க அனுபவம்
கண்டத்திற்கு மேல் ஏன்?? என்பதும்,
ஞானமூலிகையான கரிசாலையும்
தூதுவளையும் பயன்பாடு எதற்கு என்பதும்,
மேல் ஆதாரங்களை பற்றியும், உடுக்கை,
சூலத்தின் வடிவங்கள் எதற்கு என்பதை
படத்தைக் கொண்டு படித்தால்
புரிந்துகொள்ளலாம். அண்ணாக்கை
உண்ணாக்கை பற்றி எழுதாத சித்தர்களே
இல்லை. இதன் அடிப்படை கொண்டே
வாசியோகம் பழகப்படுகிறது. ஊதறிந்து
ஊதுபவனே சித்தன் என்று அகத்தியர்
ஞானத்தில் கூறிப்பிட்டதும் இதுவே ஆகும்.
பாரடா மனந்தனை உண்ணாக்கின் நேராய்ப்
பத்தியே அண்டமதைப் பார்க்கும்போது
ஆரடா வாசியுந்தான் பிடரிமார்க்கம்
ஆகாசப் பிரமத்தில் அடங்கிப்போகும்
நேரடா நிருவிகற்ப சமாதியாச்சு
நித்யபிர்மச்சாரி என்று பேருண்டாச்சு
வீரடா சிலம்பொலியுங் காதிற்கேட்கும்
வேலெடுத்து வீதிசுத்தி வருகலாச்சு.
வீரடா அண்ணாக்கின் நேரே மைந்தா
மேவடா மனந்தனையுஞ் செலுத்தும் போது
காரடா சுழுனையிலே மனந்தான் பாய்ந்து
கலந்தைந்து பூதமுந்தான் ஒன்றாய்ப் போமே.
மேலே உள்ள பாடல்கள் சுப்பிரமணியர்(அகத்தி­
யருக்கு உபதேசித்தது) மற்றும் காகபுசண்டர்
ஞானத்திலிருந்து எடுக்கப்பட்டது.
இப்பாடல்களை உங்கள் அனுபவத்தில்
கொண்டுவருவது எப்படியெனில், நீங்கள்
உள்வாங்கும் சுவாசத்தை கவனித்தால், அது
உங்கள் அடிவயிறுவரை சென்று வெளியேரும்.
இதற்கு பெயர் கீழ்கதி(அதோகதி). இதுவே
மனதை உண்ணாக்கில் வைத்து மூச்சை
கவனித்து(இழுத்தும் விட்டும்) பாருங்கள்,
உங்கள் மூச்சு மேல் கதியாக உண்ணாக்கிற்கு
மேலே செல்வதை உணர்வீர்கள். இதற்கு பெயர்
ஊர்த்துவ கதியாகும். சிவனின் ஊர்த்துவ
தாண்டவமும் இதை குறிப்பதேயாகும். இப்படி
மனதை உண்ணாக்கில் வைத்து சுவாசிக்கும்
முறையே வாசியோகமாகும். சித்தர்கள்
ஞானத்தில் இதுபோன்ற பாடல்கள்
கொட்டிகிடக்கின்றது. அகத்தியர் மூச்சேதான்
தெய்வம் என்றும் அண்ணாக்கின்
விவரங்களையும் நேரடியாக தனது ஞானத்தில்
எழுதிவிட்டார். மேலும் ஆழமான புரிதலுக்கு
அவர்கள் பாடல்களை ஊன்றி படிக்கவும்.
மேலே கூறப்பட்ட முறைதான்
வாசியோகமாகும். இதற்கென்று தனித்தனி
தியானமுறைகளோ பயிற்சிகளோ எதுவும்
கிடையாது. வாசியோகம் என்றால் மேலே
குறிப்பட்ட முறை மட்டும்தான். இதை ஒரு
உண்மையான குருமுகமாக அறிவது மிகவும்
சிறந்தது. அப்படிப்பட்ட குருவை
கண்டுபிடிப்பது மிகவும் சுலபமாகும்.
எப்படியெனில்,
உங்களாலும், உங்கள் பணத்தாலும் அவருக்கு
ஆவது ஒன்றுமில்லை, எளிமையாக இருப்பார்.
வாசி லயமாகின் அகசுவாசம் மட்டுமே
ஓடுவதால் அவருக்கு வெளிமூச்சு ஓடாது.
இப்படிப்பட்டவரால் உங்களுக்குள் ஒரு
நொடியில் வாசியை லயப்படுத்த முடியும்.
பாபாஜி கிரியாவை பற்றி தெரிந்து கொள்ள
kriyayogainfo.net என்ற முகவரிவை
பார்க்கவும், அனைத்தும் வெளிப்படையாக
உள்ளது. சிவானந்தரின் சித்த வித்தையை
கற்றுகொள்ள healer baskarரின் வாசியோக
தலைப்பில் YouTubeல் பார்க்கவும். சித்த
வித்தையில் உண்மையான முறையில் தீக்கை
அளிப்பவர்கள், கதியையும் நிஷ்டையையும்
சரியான முறையில் பிடிக்க கற்றுதருவார்.
அப்படி படிக்கும் அந்த நிமிடமே ஆத்ம
அமைதியை உங்களால் உணரமுடியும்.
இவர்கள் யாரும் பணம் வாங்கவே மாட்டார்கள்.
இப்படி யாரும் கிடைக்காத பட்சத்தில்
அகத்தியரையோ, முருகனையோ,
காகபுசண்டரையோ மானசீகமாக குருவாக
ஏற்றுக்கொண்டு பயபத்தியுடன் மேலே உள்ள
முறையை பயிற்சி செய்யுங்கள். உண்மையான
பக்திக்கு குருவின் அருள் கண்டிப்பாக உண்டு.
இப்படி வாசி இல்லாமல் இறைநிலை
அடையமுடியாத என்றால்??? கண்டிப்பாக
முடியும்!!! அதற்கு பெயர் ஞானசரியை, இந்த
முறையை விட எளிமையானதும் இல்லை,
கடினமானதும் இல்லை. இதை ஞானிகள்
தங்கள் யோகத்தோடு இணைத்தே
செய்கின்றனர். இதை தெளிவாக
விளக்கியவர்களில் வள்ளலார், காரை சித்தர்
போன்றோர் உள்ளனர். அடுதடுத்த பதிவுகளில்
இவற்றைபற்றி காண்போம்...
மண்மனம் எங்குண்டோ வாயுவும்(வாசி)
அங்குண்டு, என்பதற்கு ஏற்றார்போல்
மந்திரம்,தந்திரம் போன்ற அனைத்து
பயிற்சிகளும் மனதை லயமடைய
செய்யவேயன்றி வேரொன்றுமில்லை.
இதில்
சுவாசத்தைக்கொண்டு செய்யும் கலைகளே
சிறந்தது என்பதால்தான் உலகமுழுவதும்
வாசியோகம், இராஜயோகம், கிரியா யோகம்
போன்ற வெவ்வேறு பெயர்களில் கற்று
தரப்பட்டாலும், அனைத்தும் ஒன்றே.
24 நிமிட ஹம்ஸ தியானம் 24 மணிநேரம்
தியானம் செய்ததற்கு நிகரானது. 24 நிமிட
வாசியோகம் 24 மணிநேர ஹம்ஸ
தியானத்திற்கு நிகறானது. 24 நிமிட வாசியால்
நமது மூளையின் பரிணாம வளர்ச்சி ஒரு
வருடம் ஆகும். இவை லாகிரி மகாசாயர்
எழுதிய டைரியிலிருந்து எடுக்கப்பட்டது.
என்னை த்விஜன் என்ற மறு பிறப்பாளன் தான்
அறிந்துகொள்ளமுடியும் என்று கீதையிலே
கிருஸ்ணர் போதிக்கின்றார், இதையேதான்
மாற்றிபிறந்தல் என்று சித்தர்கள்
போதிகின்றனர். அப்படி மாற்றி பிறக்கும்
மறுபிறப்பாளன் இந்த ஐந்தாவது யோனியை
கொண்டே பிறக்கிறான்.
பிறப்பு எடுக்க ஒரு யோனி,
பிறப்பு அறுக்க ஒரு யோனி,
பிராணன் உட்புக ஒரு குதம்,
அபாணன் வெளியேற ஒரு குதம்,
சளி வெளியேற ஒரு குதம்,
மலம் வெளியேற ஒரு குதம்,
மாயையில் நாம் அகப்பட ஒரு கன்னித்திரை,
நம்மில் மாயை அகப்பட ஒரு திரை,
கீழ்த்திரை கிழிந்தால் மாயை,
மேல்திரை விலக்கினால் சாயை,
கீழ்த்திரை விலக்கினால் தான் விந்து
கருப்பையை அடைந்து கரு உருவாகி
குழந்தையை காணமுடியும்.
அதேபோல் மேல்திரை விலக்கினால்தான் நாதம்
விந்தையடைந்து கருக்குழந்தையை
காணமுடியும்.
தந்திர வாமத்தில் மூலாதாரம்
கண்டுகொள்ளப்படாது, ஆனால்
சுவாதிஷ்டானமே முக்கியமாக
கருதப்படுகிறது.
அதேபோல் குண்டலினி யோகத்தில் சகஸ்ராரம்
கண்டுகொள்ளப்படாது, ஆனால் ஆக்கினை
முக்கியமாய் கருதப்படும்.
தந்திராவில் மூலாதாரம் 1008 இதழாக
கூறப்படுகிறது.
யோகத்தில் சகஸ்ராரம் 1008 இதழாக
கூறப்படுகிறது.
இந்த உலகத்தில் உதிக்கும் அனைத்து
உயிர்களும் நால்வகை யோனிகளிருந்தே
உதிக்கின்றன, அவைகள் வித்து(விதை),
புழுக்கம், முட்டை மற்றும் கருவாகி
கர்ப்பத்திலிருந்து ஆகும். இதில் மனிதன்
பிறப்பெடுக்க ஒரு யோனி. பிறப்பை அறுக்கும்
யோனி என்பது, நமது வாய்க்குள் உண்ணாக்கு
அருகில் உள்ள துவாரமே ஐந்தாவது
யோனியாகும். நாராயணன் பள்ளிகொண்ட
நாறாத யோனி இதுவேயாகும். எவனொருவன்
இந்த ஐந்தாவது யோனியில் பிறப்பெடுக்கிறா
னோ, அவனே த்விஜன், அதாவது
மறுபிறப்பாளன் ஆகும். இதை ஞானிகள்
மாற்றிபிறந்தல் என்பர். பிராணன் உட்புகும்
மூக்குநுனி உட்வாசலையும் குதம் என்பர்,
அதன் வழியே சளி வெளியேறுகின்றது.
மலமும் மலக்காற்றென்னும் அபாணனும்
வெளிப்படும் மலதுவாரத்தையும்
குதமென்பர்.
பெண்ணின் யோனி துவாரத்திலிருந்து
2.5செ.மீ. தூரத்திலுள்ள கன்னித்திரை
என்னும் சவ்வைப்போலவே மேலேயும்
ஒருத்திரை இருப்பதாக கூறப்படுகிறது. மேலே
உள்ள அந்த சவ்வு கபத்தால் ஆனதாகும். கீழே
எவ்வாறு கன்னித்திரை கிழிவதைப் போலவே
மேலுள்ள கபப்படலச்சவ்வை திறந்தே
ஆகவேண்டியுள்ளது. மேல்திரை கிழிந்தால்
அதாவது பூட்டு திறந்தால்தான் நாதவிந்து
கலப்பு. கீழ்த்திரை கிழிந்தால் விந்துநாதக்
கலப்பு. பெண்ணோ ஆணோ பருவமடைய
பண்ணிரண்டு வருடங்கள் எடுக்கும், அதன்
பிறகே மாத விலக்கும் குழந்தை பெற்றெடுக்க
தகுதியும் உண்டாகும். உறவு கொண்டால்
மாதவிலக்கு இரத்தம் நின்று, அந்த
விந்துநாதக்கலப்போடு இரத்தமும் சுத்தமாகி,
இணைந்து கரு உண்டாகிறது. அதே போன்று
ஒரு ஞானவானுக்கும் பருவபக்குவமடைய
பண்ணிரண்டு வருடங்கள் ஆகும். அதன்பின் கப
நீர் இறங்கி நாதங்கேட்டலின் (உறவு) மூலம்
அக்கபமே சுத்தமான அமிர்தமாகிறது. இதையே
ஞானிகள் மாற்றிப் பிறக்கும் மருந்து என்பர்.
விந்தான ஒளியுடன் கலப்பதன் மூலம்
ஒளியான குமரியாகிய சுப்பிரமணியன்
கண்ணிற்கு குழந்தையாக தெரிகின்றான். இவன்
எதைக்கண்டாலும், எங்கு பார்த்தாலும், அங்கே
நம் பார்வைக்கும் பார்க்கும் பொருளுக்கும்
குறுக்கே இருப்பதனாலேயே நந்தி என்றும்
அழைக்கப்படுகிறான்.
வாமாச்சாரத்தில்
மூலாதாரமே 1008 இதழ் எனவும், யோகத்தில்
சகஸ்ராரமே 1008 இதழெனவும்
கூறப்படுகிறது. யோகத்தில் சகஸ்ராரத்தை
தொட்டாலும் ஆக்கினையே முக்கியமாய்
கொள்ளப்படுகிறது. அதேபோல் தந்திர
வாமத்தில் மூலாதாரம் கண்டுகொள்ளப்படவ
ில்லை சுவாதிஷ்டானமே கண்டுகொள்ளப்படு
கிறது. உடலில் மிகச்சிறிய அணு
விந்தணுவாகவும், பெரிய அணு
கருமுட்டையாகவும் உள்ளது. மேலும்
வாமத்திலும் சுரோணிதமெனும் நாதத்தை
குறிமூலமாய் வாங்கி நாதவிந்து கலப்பே
நடைபெறுகிறது.
சிதம்பர சக்கரம்
-----------------------------------
"சிதம்பர சக்கரம் தான் அறிவார்- இந்த
சீமையில் உள்ள பெரியோர்கள் சிதம்பர சக்கரம்
தானும் என்றால்- அதற்குள் தெய்வத்தை
யல்லோ அறியவேணும்".
சிதம்பர சக்கரத்தின் விளக்கத்தை சமீபத்தில்
வந்த வள்ளலார் அடிகள், தனது அகவலில்
தெளிவாக எழுதியுள்ளார். சகோதர
சகோதரிகள் அனைவரும் அகவலை
ஒருமுறையாவது படித்து பார்க்கவும்.
ஆன்மீகத்தின் ரகசியமான முறைகள் மற்றும்
சூட்சமங்கள் உங்களுக்குள் கேள்வியாய்
உதித்து அதை நோக்கி பயணிக்க வைக்கும்.
விடை என்பது எப்படி வேண்டுமானாலும்
கிடைக்கலாம். சிதம்பர சக்கரத்தை ஸ்தூலம்,
சூட்சமம், காரணம் என பல பிரிவுகளில்
விளக்கிக் கொண்டு செல்லலாம். இப்பதிவில்
சுவாசத்தால் ஏற்படும் மாற்றத்தையும் அதில்
இப்பூதங்களில் செயல்பாடுகளையும்
முதலில் காண்போம்.
சரமானது மண்ணை சார்ந்து நடக்கும்போது,
மண்ணில் மண் நடந்தால்- எதிலும் நிறைவு
உண்டாகும்,
மண்ணில் நீர்- அடிசேரலாம்,
மண்ணில் காற்று- அலைந்து அலைந்து
அவனடி சேர்வர்,
மண்ணில் நெருப்பு- உடல் உஷ்ணம்
அதிகமாகும்,
மண்ணின் ஆகாயம்- பிடி கிடைக்காமல்
சுற்றிக்கொண்டே இருப்பர்.
சரமானது நீரை சார்ந்து நடக்கும்போது,
நீரில் நிலம்- மூச்சு நீருக்குரிய
சரத்திலாரம்பித்து மண்ணிற்குரிய பிருதிவி
சரத்தில் முடிந்தால் கலத்தல் எனும் ஐக்கிய
பாதையான சமாதி நிலையை அடையலாம்,
நீரில் நீர்- எல்லாவற்றிலும் வளர்ச்சி,
நீரில் நெருப்பு- உடல் குளிர்ச்சியாகும்,
நீரில் காற்று- அமிர்தம் சுரக்கும்,
நீரில் ஆகாயம்- அப்படியே அதிர்ந்து போய் ஒரு
சில நிமிடங்கள் இருக்கும் நிலையில்
இம்மூச்சு ஓடும்.
சரமானது தீயை சார்ந்து நடக்கும்போது,
தீயில் மண்- ஆயுள் நீட்டிப்பு,
தீயில் நீர்- ஆயுள் குறைவு,
தீயில் தீ- இருநிலை மாற்றம்,
தீயில் காற்று- மயக்கத் தோற்றத்தை
உருவாக்கும்,
தீயில் ஆகாயம்- புவிஈர்ப்பு விசையை மீற
முடியும்.
சரமானது காற்றை சார்ந்து நடக்கும்போது,
காற்றில் மண்- நோய் அறிகுறி,
காற்றில் நீர்- விந்து மேலேறும்,
காற்றில் தீ- உடம்பில் தீயின் சுழற்சியை
காணலாம்,
காற்றில் காற்று- காந்தவியல் அழுத்தம்
மேற்பட்டு தலை கணக்கும், நாதம் கேட்கும்,
காற்றில் ஆகாயம்- பாவபுண்ணியம் கலைந்து
எரிந்துவிடும் நிலை.
சரமானது ஆகாயத்தை சார்ந்து நடந்தால்,
ஆகாயத்தில் மண்- உச்சி திறக்கும்,
தியானத்திற்கு உகந்தது,
ஆகாயத்தில் நீர்- நம் சக்தியானது இடம்விட்டு
இடம் நகரும்,
ஆகாயத்தில் காற்று- விசுத்தியில் நிற்கும்,
ஆகாயத்தில் தீ- நந்தியாகிய பரமாத்மாவை
தெளிவாக காண முடியும்,
ஆகாயத்தில் ஆகாயம்- இருள் நிலை, மாயை,
முழு ஞானம் உற்பத்தியாகும்.
மேலும் சந்திரகலை குளிர்ச்சியாக இருப்பதால்
அது உஷ்ணத்தை நாடி செல்லும், இதில்தான்
அறிவு உதிக்கின்றது. இதேபோல் சூரியகலை
உஷ்ணமானதால் குளிர்ச்சியை நோக்கி
செல்லும், இதில் மாயை அல்லது பிரமை
உண்டாகின்றது. பிரமை என்பது பிரம்மதோடு
இணைந்திருப்பது என்ற பொருளாகும். இந்த
வேறுபாடுகளை கொண்டு நீங்களே உங்கள்
உள்நிலையும் உங்கள் வெளி உலக
நிலையையும் துல்லியமாக ஒப்பிட்டு பார்த்து
கொள்ளலாம்.
அண்டத்தில் உள்ளதெல்லாம் பிண்டத்தில்
என்பதற்கு ஏற்றாற் போல் இந்த பிண்டத்தில்
(உடலில்) பஞ்சபூத சரத்தால் என்னென்ன
மாற்றம் ஏற்படுகின்றதோ அதேபோல்
அண்டமாகிய பிரபஞ்சத்திலும் மாற்றம் நிகழும்.
முந்தைய பதிவு உங்கள் மனதில் மேலும்
தெளிவாக பதிய வேண்டுமெனில் கீழேயுள்ள
சாதாரணமாக நடைமுறையில்(Practical
changes around us in the nature) ஏற்படும்
இயற்கை மாற்றத்தை புரிந்துகொண்டால்
போதுமானது. இதுவே நம் உடலுக்கு உள்ளும்
வெளியும் நிகழ்பவை.
பிருதவியில் ஏற்படும் மாற்றம்
மண்ணை மண்ணில் போட்டால்- நிறையும்,
மண்ணை நீரில் போட்டால்- அடி செல்லும்,
மண்ணை காற்றில்- அலைந்து வேறிடம் பின்பு
கீழ் அடிவிழும்,
மண்ணை தீயில்- உஷ்ணமாகும், மண்ணை
ஆகாயத்தில்- சுழலும்.
அப்புவில் ஏற்படும் மாற்றம்
நீரை மண்ணில் கலந்தால்- பரவும்,
நீரை நீரில்- பெருகும்,
நீரை தீயில்- குளிர்ச்சி,
நீரை காற்றில்- ஆவியாகி மேகமாகி மழை
வரும்,
நீரை ஆகாயத்தில்- உறை நிலை.
தேயுவால் ஏற்படும் மாற்றம்
தீயை மண்ணில் போட்டால்- அழியாநிலை
(உஷ்ணம்),
தீயை நீரில் போட்டால்- அழிவுநிலை, தீயை
தீயில்- இருநிலை மாற்றம்,
தீயை காற்றில்- அனல், கானல்நீர், வெக்கை,
உருக்கம்,
தீயை ஆகாயத்தில்- குமிழாகி பறக்கும்.
வாயுவால் ஏற்படும் மாற்றம்
காற்றை மண்ணில்- விரிசல்,
காற்றை நீரில்- நீர் சுழற்சி,
காற்றை தீயில்- தீ சுழற்சி,
காற்றை காற்றில்- காந்தவியல் அழுத்தம்,
காற்றை ஆகாயத்தில்- மேகம் கலையும்.
ஆகாயத்தால் ஏற்படும் மாற்றம் ஆகாயத்தை
மண்ணில்- பிரளயம், தியானம்,
ஆகாயத்தை நீரில்- புவி நகரும், இடமாறும்,
ஆகாயத்தை தீயில்- ஒளி பெருகும்,
ஆகாயத்தை காற்றில்- கடல்நீர் உள்வாங்கும்,
ஆகாயத்தை ஆகாயத்தில்- இருநிலை, மாயை,
பிரமை.
நம் ஸ்தூல சூட்சும சரீரங்களில் ஸ்தூலமாக
மற்றும் சூட்சுமமாக நடைபெறும் காரண
காரியங்களுக்கு பஞ்சபூதங்களின் பயன்பாடு
பற்றி காண்போம்.
ஸ்தூலத்தில்,
மண்ணில் மண் சேர்ந்தால் உடலில் சக்தி
குறைந்து அசதி ஏற்படும்.
மண்ணில் நீர்- உடலில் மாமிசம்
உருவாகின்றது,
மண்ணில் தீ- சருமமாகிய தோல்
உருவாகின்றது,
மண்ணில் வாயு- நரம்புகளும்,
மண்ணில் ஆகாயம்- ரோமமும்,
நீரில் நீர்- சிறுநீரும்,
நீரில் மண்- உமிழ்நீரும்,
நீரில் வாயு- உதிரமும்,
நீிரில் தீ- வியர்வையும்,
நீரில் ஆகாயம்- சுக்கிலமும்,
தீயில் தீ- நேத்திர கண்ணும்,
தீயில் ஆகாயம்- செவியும்,
தீயில் வாயு- சரீரமும்,
தீயில் நீர்- வாயும் நாக்கும்,
தீயில் மண்- நாசியும்,
காற்றில் மண்- இருதயமும் பிராணக் காற்றும்,
காற்றில் நீர்- குதமும் அபான வாயுவும்,
காற்றில் காற்று- சர்வ நாதங்களும்
வியானனும்,
காற்றில் தீ- கழுத்தும் உதானனும்,
காற்றில் ஆகாயம்- தொப்புளும், சமானனும்,
ஆகாயத்தில் மண்- இருதயமும்,
ஆகாயத்தில் நீர்-நாசியில் பித்தமும்,
ஆகாயத்தில் தீ- மார்பும்,
ஆகாயத்தில் காற்று- கண்டமும்,
ஆகாயத்தில் ஆகாயம்- சிவமும்
உருவாகின்றன.
சூட்சுமத்தில்,
மண்ணில் மண் கலந்து குதமும்,
மண்ணில் நீர்- குய்யமும்,
மண்ணில் தீ- கைகளும்,
மண்ணில் காற்று- பாதங்களும்,
மண்ணில் ஆகாயம்- வாக்கும்,
நீரில் ஆகாயம்- சத்தமும்,
நீரில் காற்று- தொடு உணர்வும்,
நீரில் தீ- பார்வையும்,
நீரில் நீர்- சுவையும்,
நீரில் மண்- வாசனையும்,
தீயில் தீ- பசியாகிய தீபாக்கினியும்,
தீயில் மண்- தாகமும்,
தீயில் நீர்- தூக்கமும்,
தீயில் காற்று- கொட்டாவியும்,
தீயில் ஆகாயம்- சங்கமமாகிய கலத்தலும்,
வாயுவில் வாயு- ஓட்டமும்,
வாயுவில் நீர்- இருத்தலும்,
வாயுவில் தீ- தத்தித்தத்தலும்,
வாயுவில் மண்- நடத்தலும்,
வாயுவில் ஆகாயம்- படுத்தலும், ஆகாயத்தில்
மண்- ஆசையும் அகங்காரமும்,
ஆகாயத்தில் நீர்- துவேசமும்,
ஆகாயத்தில் தீ- பயமும்,
ஆகாயத்தில் காற்று- வெட்கமும், ஆகாயத்தில்
ஆகாயம்- மேகமும் உருவாகின்றன.
ஆக இதன் மூலம் ஒரு பூதமானது மற்றைய
பூதங்களில் கலந்து உடலிலும், வெளியிலும்,
ஸ்தூலமாகவும், சூட்சமமாகவும் ஏற்படும்
மாற்றங்களையும், பஞ்சபூதங்களே பிறக்கும்
முன் தாயின் கருவிலும், பிறந்தபின்
வெளியிலும் உடல் உறுப்புகள் உருவாவதற்கு
காரணமாகும். மேலும் நமக்கு ஏற்படும்
ஆணவம், கோபம், ஆசை,.,. போன்றவற்றிற்கும்
இப்பூதங்களே காரண காரியமாகும். இவை
அனைத்தையும் அனுபவத்தில் உணர
வாழ்த்துக்கள்.

Monday, December 7, 2015

பணம் பொங்கும் பால் காளான் வளர்ப்பு,

Vikram Bala added 10 new photos — feeling optimistic.
பணம் பொங்கும் பால் காளான் வளர்ப்பு,
சிறுதுளி பெருவெள்ளம் என்பதைப் போல.. சிறுதொழில் செய்தே சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்கள் ஏராளம். இந்த காளான் வளர்ப்பில் மூலம் நீங்களும் எதிர்காலத்தில் ஒரு சிறந்த தொழிலதிபராக மாறிக்கூடிய வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. ஆம் நண்பர்களே! பால் காளான் வளர்ப்பதன் மூலம் நமது வருமானத்தைப் பெருக்குவதோடு வாழ்வில் வளமும் பெறலாம். மாதம் ஒரு லட்சம் (100000)வரை சம்பாதிக்கலாம். இனி பால்க்களானின் மருத்துவ பலன்களும் அதன் வளர்ப்பு முறைகளும் உங்களுக்காக..
மருத்துவ பலன்களும், உணவு முறையும்:
இப்போது இந்த காளான் வகைகளை அதிகம் விரும்பி உண்ணத் தொடங்கிவிட்டார்கள். காரணம் அசைவ சுவைக்கு நிகரான சுவையைத் இது தருவதால்தான். மேலும் இதில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் டி , கால்சியம், பாஸ்பேட், பொட்டாசியம் மற்றும் காப்பர் போன்ற தாதுச் சத்துக்களும் நிறைந்திருக்கின்றன.
உடலுக்குத் தேவையான சத்துக்கள் அனைத்தும் சரிவிகிதத்தில் கலந்திருப்பதால் இது ஒரு சரிவிகித உணவாகவும் இருக்கிறது. இதை மருத்துவர்கள் சிபாரிசு செய்கிறார்கள். மேலும் இதன் முக்கியமான மருத்துவ குணம் சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்துவது.
இதற்கு பருவம் என்றொரு கால அளவு எல்லாம் இல்லை. எப்போது வேண்டுமானால் வளர்க்கலாம்.
இத்தொழிலை எப்படிச் செய்வது?
மிகவும் எளிதுதான். நம் வீட்டிலேயே செய்யலாம். கொஞ்சம் இடம் இருந்தால் அதற்காக ஒரு குடில் அமைத்தும் செய்யலாம்.
எப்படி விற்பனை செய்வது?
(Marketing)
அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு கொடுக்கலாம். 200 கிராம் நாற்பது ரூபாய் என்ற விலையில் விற்கலாம். ஒரு கிலோ காளான் 190 ரூபாய்க்கும் விற்கலாம். அருகில் உள்ள ஹோட்டல்களுக்கு கொடுக்கலாம். காளானைக் கொண்டு பலவித உணவுப்பொருட்களை தயாரிக்கிறார்கள். எனவே இந்த காளான்களுக்கு எப்போதுமே அதிக கிராக்கி உண்டு.
முக்கிய குறிப்பு: அறுவடை செய்த காளான்களை ஐந்து நாள் வரைக்கும் வெளியில் வைக்கலாம். குளிர்பதனப்பெட்டியில் என்றால் பத்து நாட்கள் வரைக்கும் வைக்கலாம்.செலவும் மூலதனமும் மிக குறைவாக இருப்பதால் இது பெண்களுக்கு ஏற்ற தொழிலாக இருக்கிறது. வீட்டிலிருந்தபடியே நமது வருமானத்தை பெருக்கிக்கொள்ள இது ஒரு மிகச்சிறந்த வழிமுறையாகவும், சிறுதொழிலாகவும் விளங்குகிறது.
தமிழ் நாட்டில் பல இடங்களில் காளான் வளர்ப்புப் பற்றி பயிற்சி வகுப்புகளை நிகழ்த்தி வருகிறார் திரு.சுந்தர ராஜன் என்பவர். இவர் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி என்ற ஊரில் “காளான் வளர்ப்பு பண்ணை மற்றும் விதை தயாரிப்பு ஆய்வுக் கூடம்” என்று ஒரு கூடத்தை நிறுவி செயல்பட்டு வருகிறார்.
தவிர இம்மாவட்டத்தைச் சுற்றியுள்ள பல மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு காளான் வளர்ப்பு பற்றி ஒருநாள் பயிற்சி அளித்த தோடு அவர்களுக்கு வங்கிக் கடன் வழங்குவதற்கான உதவியும் செய்து வருகிறார்.
காளான் வளர்க்க வங்கியில் கொடுக்கப்படும் கடன் 1 லட்சம் முதல் 5 லட்சம் வரை ஆகும்.
காளானில் உள்ள சத்துக்கள்:
காளானில் அதிக புரோட்டீன் சத்து உள்ளது. எந்தத் தாவரத்திலும் இல்லாத சத்து இதில் உள்ளது.
தாவர வகைகளிலேயே அதிக புரோட்டீன் சத்து உள்ள ஒரே வகைத் தாவரம் காளான் ஆகும். இதனால் தான் இதன் விலையும் அதிகம்.
காளான் உணவின் மகத்துவங்கள்:
உயர் ரத்த அழுத்தத்தை சீராக்கும்
நீரழிவு, புற்றுநோய்க்குத் தடுப்பாய் செயல்படும்.
சர்க்கரை நோய்க்குத் தடுப்பாய்ச் செயல்படும்.
இதய நோய்க்குத் தடுப்பாய்ச் செயல்படும்.
ஒட்டு மொத்த நோய் எதிப்புத் தன்மையை உடலுக்குத் தரும்.
இவ்வாறு காளான் வளர்ப்பில் பல நன்மைகளைக் கூறிய திரு.சுந்தரராஜன் என்பவர் “NATURAL KALAN PANNAI” என்ற பெயரில் காளான் வளர்ப்பு மற்றும் விதை தயாரிப்பு ஆய்வுக் கூடத்தை நிறுவி, இயங்கி வருவதின் நோக்கம் என்னவெனில்…
ஆரோக்கியமான உணவு மூலம் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குதல்.
தமிழக உணவுத் தயாரிப்பு தமிழருக்கு மட்டுமின்றி உலகிற்கும்.
விவசாயத் தொழிலை லாபகரமாக்குதல்.
கிராமப்புற ஏழைப் பெண்களுக்கு வாழ்வாதாரம் உருவாக்குதல்.
இவரின் அறிமுகத்தில் காளான் உணவு வகைகள்:
காளான் சூப் தயாரிப்பு.
காளான் டின் (உடனே உண்பதற்கேற்ற தயாரிப்பு)
காளான் மசாலா (குழம்பிற்கு)
காளான் கிரேவி
காளான் பிரட், காளான் பிஸ்கெட், காளான் ஊறுகாய்
காளான் கட்லெட், காளான் பக்கோடா
அதிக புரோட்டீன் உள்ள காளான் பானம்
காளான் பிரியாணி
– போன்ற உணவுகள்.
காளான் வளர்க்கும் விவசாய மக்களுக்கு காளான் விதை, மற்றும் வளர்க்கத் தேவையான அனைத்துப் மூலப்பொருட்களையும் கொடுத்து உதவுகிறோம். இவர்கள் உற்பத்தி செய்த மொத்த காளான்களையும் எங்கள் நிறுவனம் வாங்கிக் கொண்டு அதற்குறிய பணத்தை, விற்பவரின் வங்கிக் கணக்கில் வரவு வைத்துக் கொண்டு வருகிறது. தவிர அனைத்து மாவட்ட மகளிர் குழுக்களுக்கும், தனிப்பட்ட நபர்களுக்கும் எங்கள் நிறுவனம் காளான் வளர்ப்பில் பயிற்சி அளித்து வருகிறது.
அது தவிர கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு குறிப்பாகத் தாவரவியல் படிக்கும் மாணவர்களின் ஆய்வுக்கு உதவி செய்து வருகிறோம். காளான் வளர்ப்பு பற்றியும் அறிவுரை வழங்கி வருகிறோம்.
இதைத் தமிழகம் முழுக்க பல மாவட்டங்களில் பயிற்சி அளித்து பலருக்கும் வழிகாட்ட வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட்டு வருகிறேன். இதன் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும். நலிந்த கொண்டிருக்கும் விவசாயத்தை லாபமான தொழிலாக மாற்றுவதற்கான முயற்சியில் இறங்கியும், அதற்காகத் தீவிரமாக உழைத்தும் வருகிறேன். வெளிநாடுகளில் காளான் ஏற்றுமதி செய்ய மாதம் 5000 கிலோ தேவை இருக்கிறது. அதனை எட்டிவிட வேண்டும் என்ற முனைப்போடும் செயல்பட்டு வருகிறேன்.
மேலும் தொடர்புக்கு – திரு. சுந்தரராஜன் – 9600334848
NATURAL KALAN PANNAI
மேலும் இதை நீங்கள் SHARE செய்தால் பல பேர்க்கு உதவியாக இருக்கும். . . .

Wednesday, December 2, 2015

அனுமாரின் வசியக் கட்டு !!!

இதை செய்யும் முன் சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம்.பாவியாக இருந்தால் எது செய்தாலும் மேன்மை இல்லை பலிக்காது. என்கிறார் அகத்தியர்.
அனுமாரின் வசியக் கட்டு மந்திரத்தை ஆணவத்தை வென்றவர்கள் மட்டுமே அறிவர்.
திருநீற்றைக் கையில் எடுத்து மந்திரத்தை மனதார ஐந்து தடவை ஓதி உனைச் சுற்றி தூவிக் கொண்டால் உன்னை எந்த வித எதிரிகளும் அண்ட மாட்டார்கள், யாரும் உன்னை எதுவும் செய்ய முடியாது, செய்வினைகள் , பில்லி, சூனியம், பேய், பிசாசு எதுவும் கிட்டே நெருங்காது என்கிறார் அகத்தியர்.
“ஓம் ஹரி ஹரி ஆதி நாராயணா அகிலாண்ட நாயகா நமோ நமோ என்று
அனுதினமும் ஓதும் அனுமந்தா லங்காபுரி ராவண சம்ஹாரா சஞ்சீவி ராயா
ஓடிவா உக்கிரமாக ஓடிவா அடுத்து அடுத்து வரும் பில்லி சூனியம் பேய்
பிசாசு பிரம்ம ராட்ஷர்களை பிடி பிடி அடி அடி கட்டு கட்டு வெட்டு வெட்டு
கொட்டு கொட்டு தாக்கு தாக்கு ஓம் ஆம் இளைய ஹனுமந்தா வா வா
சுவாஹா"

Saturday, November 21, 2015

கணுக்கால் வலியிலிருந்து விடுதலைப் பெற…!

தோள்பட்டை, கழுத்து, முதுகு, இடுப்பு, கை, கால் மூட்டு வலியைப் போன்று கால் பாதங்களில் அதாவது கணுக்காலில் வலி ஏற்படுகின்றது. இந்த கணுக்கால் வலி ஆண்களை விட பெண்களையே அதிகம் பாதிக்கும். கணுக்கால் வலியானது 35 வயது முதல் ஆரம்பிக்கத் தொடங்கும். உடற்கூறுகளின் தன்மையைப் பொறுத்து இதன் பாதிப்பு இருக்கும்.
மனித உடலில் உள்ள வாதம், பித்தம், கபம் என்ற மூன்று தோஷங்களின் பாதிப்பினாலே கணுக்கால் வலி உண்டாகின்றது.
கணுக்கால் அதாவது கால் பாதத்தை நன்கு ஊன்ற முடியாமல் குதிகாலில் பொறுக்கமுடியாத வலி உண்டாகும். காலை அழுத்தி, ஊன்ற முடியாது. மேலும் சிறு கட்டி போல் (எலும்புபோல்) காணப்படும்.
காலை எழுந்தவுடன் கால் ஊன்றி நடக்க முடியாது. வெயில் வர வர கொஞ்சம் கொஞ்சமாக வலி குறையும்.
பின் மாலை நேரத்திலும் வலி இருக்கும். மாடிப் படிகளில் ஏறி இறங்க முடியாது. கால் பாதத்தில் ஒருவிதமான எரிச்சல் இருந்துகொண்டே இருக்கும். காலை அழுத்தி ஊன்றி நடக்காததால் நரம்புகளில் சுளுக்கு ஏற்பட்டு தொடையிடுக்கில் நெறி கட்டிக் கொள்ளும். இதை சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டால் நாளடைவில் நடக்க இயலாமல் போய்விடும்.
கணுக்கால் வலி ஏற்பட காரணங்கள்:
வாதம், பித்தம், கபம் போன்ற முக்குற்றங்களில் பித்தநீர் அதிகமாகி வாதநீருடன் சேரும்போது தலையில் நீராகக் கோர்த்து தலை வலியை ஏற்படுத்துகின்றது. இப்படி தலையில் கோர்க்கும் நீர் கழுத்து வழியாக இறங்கி காலின் அடிப்பகுதியில் கணுக்காலில் தங்கிவிடுகின்றது.
இதுபோல் கப தோஷம் (சூலை) பித்த நீருடன் கபம் சேர்ந்து நீராக மாறி, உடலின் தன்மைக்கேற்ப பாதம், கணுக்கால் பகுதியில் நீர் கோர்த்து கட்டி போல் இறுகி வலியை உருவாக்குகின்றது.
பெண்களுக்கு மாத விலக்கு காலங்களில் ஒழுங்கற்ற உதிரப்போக்கு, நாள்கடந்த மாதவிலக்கு, ஜலதோஷம் போன்றவற்றால் கணுக்காலில் வலி உண்டாகும்.
அஜீரணக் கோளாறு, மலச்சிக்கல் உள்ளவர்களுக்கும், வாயு நீரானது வாத நீராக மாறி கணுக்காலில் தங்கி வலி ஏற்படுத்தும்.
இப்படி உடல் கூறுகளின் தன்மையைப் பொறுத்து கணுக்காலில் தங்கும் நீரானது உப்புப் படிவமாக மாறி கட்டிபோல் உருவாகின்றது. இதை சிலர் எலும்பு வளர்ந்திருப்பதாகக் கூறுவார்கள். உப்பும் சுண்ணாம்புச் சத்தும் இணைவதால் திடப் பொருளாக மாறும். உடம்பில் உள்ள சர்க்கரையும் சேர்வதால் எலும்புபோல் உறுதியாகிறது.
பொதுவாக உடலில் சர்க்கரை இருக்கும். இந்த சர்க்கரையானது உடலில் இயற்கையாகவே அமைந்திருக்கும். அதில் உப்பு கலப்பதால் அவை கட்டியாகிவிடுகின்றன. உதாரணமாக சுண்ணாம்பு, சர்க்கரை, உப்பு, சேர்ந்தால் கட்டியாக மாறும். அதுபோல்தான் இனிப்பு நீர், உப்பு நீர், சுண்ணாம்பு நீர் சேர்ந்து கணுக்காலில் தங்கி கட்டியாகவிடுகின்றது. இதனால் பாத வெடிப்பு ஏற்படுவதற்கும் காரணமாகின்றது.
இரவில் அதிகமான கார உணவு உண்பதாலும் காலை, மதிய உணவிலும் காரத்தை சேர்த்துக்கொள்வதாலும் குடல் அலர்ஜியால் பித்த நீர் மேல் எழும்பி தலையில் நீர் கோர்த்து தலைவலி வந்து பின் கணுக்காலில் கட்டியாகி விடுகின்றது.
மலச்சிக்கல், அஜீரணக் கோளாறு போன்ற வற்றால் கூட இந்த வலி உருவாகிறது.
பகல் தூக்கம், அதிக உடல் உழைப்பு, உடல் உழைப்பின்மை போன்ற காரணங்களால் கூட கணுக்கால் வலி உண்டாகும்.
உடல் எடை அதிகரித்தாலும் கணுக்கால் வலி உண்டாகும்.
மது, புகை போன்ற போதைப் பொருட்களாலும் உடலில் அலர்ஜி உருவாகி கணுக்கால் வலி உண்டாகும்.
முறையற்ற உணவு, நீண்ட பட்டினி போன்றவற்றாலும் உருவாகலாம்.
கணுக்கால் வலி வருமுன் காக்க:
மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதிக வாயுவை உண்டுபண்ணும் உணவுகளை தவிர்த்து, எளிதில் ஜீரணமாகும் உணவுப் பொருட்களை உட்கொள்வது நல்லது.
நாம் உண்ணும் உணவில் காரத்தன்மையைக் குறைக்க வேண்டும். கார உணவை மதிய வேளையில் சேர்த்துக்கொள்வது நல்லது. ஆனால் இரவு உணவில் காரம் சேர்க்கக் கூடாது.
கார உணவைப் பற்றி சித்தர்கள் அன்றே மாலைக்குப்பின் காரம் தேவையில்லை என்றார்கள். அதனால் கார உணவை தவிர்ப்பது நல்லது.
மதிய உணவுக்குப்பின் சிறிது நேரம் ஓய்வு எடுக்க வேண்டுமே ஒழிய அதிக நேரம் தூங்கக் கூடாது. நீண்ட தூக்கம் கொண்டால் உடல் எடை அதிகரிக்க ஆரம்பிக்கும்.
உடலில் இரும்புச் சத்து குறைவதாலும் கணுக்கால் வலி உண்டாகும். இதனால் இரும்புச் சத்து நிறைந்த பழங்கள், கீரைகள் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
தினமும் 1/2 மணி நேரமாவது நடைபயிற்சி செய்வது நல்லது. அதிகமாக நீர் அருந்த வேண்டும்.
கணுக்காலின் மேல்புறத்தில் தைல வகைகளான காயத்திருமேனி தைலம், கற்பூராதித் தைலம், வாத நாராயணத் தைலம் போன்ற வலி நிவாரண தைலங்களைத் தடவி 1/2 மணி நேரம் கழித்து இளம் சூடான நீரில் கழுவி வந்தால் கணுக்காலில் உண்டான கட்டி சிறிது சிறிதாக குறையும். காலையும், மாலையும் இவ்வாறு செய்வது நல்லது.
வசம்பு 5 கிராம்
மஞ்சள் 5 கிராம்
சுக்கு 5 கிராம்
சித்தரத்தை 5 கிராம்
எடுத்துப் பொடித்து முருங்கை இலை அல்லது வெற்றிலை சாறில் அரைத்து இளம் சூடாக்கி காலில் பூசி வந்தால் கணுக்கால் கட்டி நீங்கி வலி குணமாகும்.
எருக்கின் பழுத்த இலை 5
வசம்பு 5 கிராம்
இரண்டையும் சேர்த்து அரைத்து தண்ணீரில் கொதிக்க வைத்து பசைபோல் வந்தவுடன் இளம் சூடாக காலின் மேல்பாகத்தில் பூசி வர கட்டி குணமாகும்.

Thursday, November 19, 2015

திருவைந்தெழுத்து - ஓம் நமசிவாய

தினந்தோறும் ஓம்நமசிவாய என்று "108" முறை
எழுதுவோருக்கு சகல ஐஸ்வர்யமும் வெற்றியும் கிடைக்கும் கண்டீப்பாக ஒவ்வொருவரும் எழுதி பயன் பெறுங்கள்.
108 முறை ஓம் நமசிவாய எழுத வெறும் 7 நிமிடங்கள் போதும்
அடியேன் (நான்) 1993 முதல் தினம்தோறும் இறைவனின் கருனையால் 108 முறை ஓம் நமசிவாய எழுதி வருகிறேன்.
திருவைந்தெழுத்து - ஓம் நமசிவாய
பரம கருணா மூர்த்தி, தியாகராஜன், மங்களங்களை அருளும்
சிவபெருமானது மூல மந்திரம் " ஓம் நமசிவாய " மந்திரம். வேதங்களில்
முதன்மையானது யஜுர் வேதம் அந்த வேதத்தின்
நடு நாயகமானது சிவபெருமானுக்கு மிகவும் பிரீதியானதும் அவர் புகழ்
பாடுவதும், சிவ பெருமானுக்கு அபிஷேக காலங்களில் ஓதப்படுவதுமான
ஸ்ரீ ருத்ரம், அதன் நடு நாயகம் "ஒம் நமசிவாய " மந்திரம். தாயை சேய்
அழைப்பது போல ஓம் நமச்சிவாய மந்திரத்தால் அந்த முக்கண் முதல்வனை,
கொடிமேல் இடபமும், கோவண ஆடையும், ஒரு கொக்கிறகும், அடி மேல்
வீரக்கழலும், உடல் முழுவதும் பால் வெண்ணிணிறும், நாகாபரணமும்,
முடி மேல் மதியும், மங்கையும், கொன்றையும், திருக்கரங்களில்
திரிசூலமும் தாங்கிய தேவ தேவனை, முழு முதற் கடவுளை, அகிலாண்ட
கோடி பிரம்மாண்ட நாயகனை அழைக்க உடனே அவர் ஓடி வந்து நம் துன்பம்
தீர்க்கும் மந்திரம்.
கற்றுணை பூட்டியோர் கடலினில் பாய்ச்சினும் நற்றுணையாகும் மந்திரம்.
வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆன மந்திரம். நம்முடைய காரிய
சித்திக்காக இறைவன் அருளிய மந்திரம். பல கோடி வருடங்களில் கூட இந்த
மந்திரத்தின் மகிமையை உரைக்க முடியாது. வேத சாரமாக
விளங்குவது இந்த ஐந்தெழுத்து மஹா மந்திரம். மோட்சம் அளிக்கும் மந்திரம்.
சிவனுக்கும் சக்திக்கும் உரிய மந்திரம். மந்திரகளுக்கெல்லாம் தாயகமாக
விளங்குகின்றது பஞ்க்ஷாரம். காயத்ரி தேவி தோன்றிய மந்திரம்.
இம்மை பலன்கள் மட்டும் அல்ல முக்தியும் அளிக்கும் மந்திரம். இந்த மந்திரத்தின்
அதிர்வலைகள் அண்டம் முழுவதும் பரவி உள்ளதால் ஒரு தடவை ஜபித்தால்
கூட அருமையான பலன் அளிக்கும் மந்திரம்.
சிவபுராணத்தில் இந்த மஹா மந்திரத்தின் தொடக்கம்
பற்றி இவ்வாறு கூறப்பட்டுள்ளது. எம்பெருமானது வடக்கு திருமுகமாம்
வாமதேவ முகத்தில் இருந்து 'அகாரம்' தோன்றியது. மேற்கு நோக்கிய
சத்யோஜாத திருமுகத்திலிருந்து 'உகாரம்' தோன்றியது, தெற்கு நோக்கிய
திருமுகமாம் அகோர முகத்திலிருந்து 'மகாரம்' தோன்றியது.
கிழக்கு முகமாம் தத்புருஷ முகத்திலிருந்து பிந்துவும், மேல் நோக்கிய
திருமுகமாம் ஈசான முகத்தில் இருந்து நாதம் தோன்றியது. ஐந்தும்
இணைந்து ஓம் என்னும் பிரணவமாயிற்று. இந்த பிரணவத்துடன்
சிவனை வணங்குகின்றேன் என்று பொருள்படும் சிவாய நம: சேர்ந்து இந்த
சிவபெருமானுக்கும் சக்திக்கும் உரிய இந்த அற்புத மந்திரம் உருவானது.
ஜபிக்கும் முறை : உடல் முழுதும் திருநீறணிந்து, ருத்ராக்ஷம்
அணிந்து பத்மாசனத்தில் அமர்ந்து எம்பெருமானை தாமரையில் அமர்ந்த
கோலத்தில் . ஜடாமுடியில் கங்கை, சந்திரனுடன், வாம பாகத்தில்
ஆதி சக்தி பகவதி உமையம்மையுடன், பூத கணங்கள் புடை சூழ, மான், மழு,
திரிசூலம், அபய வரத கரங்களுடன் தியானம் செய்து இந்த
மஹா மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.
108 ன் எண்ணிக்கைகளில் ஜபிப்பது உத்தமம். விரல்களால்
என்ணி ஜபிப்பது ஒரு மடங்கு பலம் தரும் என்றால், சங்கு மாலைகளால்
ஜபிப்பது பத்து மடங்கு பலனையும், பவள மாலையால்
ஜபிப்பது நூறு மடங்கு பலனையும், ஸ்படிக மாலையால் ஜபிப்பது ஆயிரம்
மடங்கு பலனையும், முத்து மாலையால் ஜபிப்பது லக்ஷ
மடங்கு பலனையும், ருத்ராக்ஷ மாலையால் ஜபிப்பது அனந்த
மடங்கு பலனையும் அளிக்கும். கட்டை விரலால் உருட்டி ஜபிப்பதால்
மோட்சம் கிட்டும், ஆள் காட்டி விரலால் ஜபிப்பதால் சத்ரு விநாசனம்,
நடுவிரலால் தனம் கிடைக்கும், மோதிர விரலால் ஜபிப்பதால்
சாந்தி கிட்டும் சுண்டு விரலை பயன் படுத்தக்கூடாது.
இம்மையில் எல்லா செல்வங்களையும் வழங்குவதுடன் மோக்ஷத்தையும்
அளிக்கும் இந்த மந்திரத்தை ஜபிக்க நாள், நட்சத்திரம், லக்னம், திதி, வாரம், யோகம்
எதுவும் பார்க்க வேண்டியதில்லை. நடந்து கொண்டோ , ஏதாவது செயல்
செய்து கொண்டோ, நின்று கொண்டோ கூட ஜபிக்கலாம்.
ஐந்து கோடி முறை ஜபிப்பதால் சிவாலயம் நிர்மாணம் செய்த பலன் கிட்டும்.
ஒன்பது கோடி முறை இம்மந்திரத்தை ஜபிப்பதால் மனது தூய்மை அடையும்,
18 கோடி முறை ஜபிப்பதால் நீரில் நடக்கலாம், 27 கோடி முறை ஜபிப்பதால்
அக்னி தத்துவத்தையும், 36 கோடி முறை ஜபிப்பதால்
வாயு தத்துவத்தையும், 45 கோடி முறை ஜபிப்பதால் ஆகாய
தத்துவத்தையும், 54 கோடி முறை ஜபிப்பதால்
ஐந்து குணங்களை வெல்லலாம், அகங்காரம் மாறும், 63
கோடி முறை ஜபிப்பதால் காரியத்தில் வெற்றி, 72
கோடி முறை ஜபிப்பதால் கோபத்தை வெற்றி கொள்ளலாம், 81
கோடி முறை ஜபிப்பதால் மோகத்தை வெல்லலாம், 90
கோடி முறை ஜபிப்பதால் லோபத்தை வெல்லலாம், 99
கோடி முறை ஜபிப்பதால் மதத்தை வெல்லலாம் 108 கோடி முறை ஜபிப்பவர்
மோட்சம் அடைவர்.
இல்லத்தில் செய்யும் ஓம் நமசிவாய மந்திர ஜபம் ஒரு மடங்கு பலனையும்,
கோசாலையில் செய்யும் ஜபம் நூறு மடங்கு பலனையும், வனம், நந்தவனம்
ஆகியவற்றில் செய்யும் ஜபம் ஆயிரம் மடங்கு பலனையும், பவித்ர மலைகளில்
செய்யும் ஜபம் பத்தாயிரம் மடங்கு பலனையும், நதிக்கரைகளில் செய்யும் ஜபம்
லக்ஷ மடங்கு பலனையும், சிவாலயத்தில் செய்யும் ஜபம் பத்து லக்ஷ
மடங்கு பலனையும் எம்பருமானுக்கு அருகில் செய்யப்படும் ஜபம் அனந்த
கோடி பலனையும் தரும். ஓம் நமசிவாய மந்திரம் எழுதுவது ஜபிப்பதைப்
போல நூறு மடங்கு பலன் தரும். இவ்வாறு இம்மந்திர ஜபம் செய்வதால்
மோக்ஷம் கிட்டும்.
திருநல்லூர் திருத்தலத்தில் நம்பியாண்டார் நம்பிகளின் திருமகளைத்
திருமணம் செய்து கொண்டபின், மனைவியின் கையைப் பிடித்துக்
கொண்டு அங்குள்ள அனைவரையும் அழைத்துக்கொண்டு 'நல்லூர்
பெருமணம்' என்ற பதிகத்தைப் பாடிக் கொண்டே கோயிலுக்குள்
நுழைந்தவுடன், ஈசன் அருளால் கர்ப்பகிரகத்தில் ஒரு ஜோதி தோன்றியது .
அப்பொழுது இந்த 'காதலாகிக் கசிந்து' என்ற நமச்சிவாயப் பதிகத்தைப்
பாடிக்கொண்டே எல்லோரையும் அந்த ஜோதியில் இரண்டறக் கலக்கச் செய்தார்
அப்போது ஆளுடையப்பிள்ளையாம் அம்மையின் ஞானப்பாலுண்ட திருஞான
சம்பந்தர் பாடிய நமசிவாயப்பதிகம் .
காதல் ஆகிக் கசிந்து கண்ணிர் மல்கி
ஓதுவார்தமை நன்னெறிக்கு உய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே. (1)
நம்புவார் அவர் நாவில் நவிற்றினால்
வம்பு நாண் மலர்வார் மது ஒப்பது
செம்பொனார் திலகம் உலகுக்கு எலாம்
நம்பன் நாமம் நமச்சிவாயவே.
தினம்தோறும் 108 முறை ஓம் நமசிவாய எழுதி தும்பம் துயரம் துக்கம் வேதனை வலி கஷ்டம் பிரச்சனை தீர்த்துக்கொள்ளவும்.
சகலஐஸ்வர்யங்களும் அஷ்டலட்சுமிகளும் வீட்டில் குடியிருக்கவும் தொழில் மேன்மை (வெற்றி) பெறவும் ஒவ்வொருவரும் தினம்தோறும் ஓம் நமசிவாய 108 முறை எழுதி பயன்பெறுங்கள்.
நன்றி: சிவதிரு கயிலை மாமுனிவர்
சிவகாளிமுத்து அடிகளார்
செட்டிபாளையம் கோவை
இமயம் முதல் குமரி வரை பரந்து விரிந்துள்ள இந்த புனிதமான பாரத
நாட்டில் உள்ள தமிழ்நாட்டில் எத்தனை எத்தனையோ சிவாலயங்களும்,
விஷ்ணு ஆலயங்களும் உள்ளன. 108 திருப்பதிகள் அல்லது 108 வைஷ்ணவ
திவ்ய தேசங்கள் என்று போற்றப்படும் விஷ்ணு ஆலயங்களில் 84 ஆலயங்கள்
தமிழ்நாட்டில் தான் உள்ளது. அதே போன்று இந்தியாவில் பல சிவன்
கோயில்கள் இருந்தாலும், குறிப்பாக பாடல் பெற்ற சிவஸ்தலம்
என்று போற்றப்படும் 274 ஆலயங்களில் 264 கோயில்கள் தமிழ்நாட்டில் தான்
உள்ளன. இந்த கோயில்கள் ஒவ்வொன்றும் தனிச்சிறப்பும், தொன்மையும்,
பெருமையும் உள்ளவை.
கலியுகத்தில் பிறவி எடுத்தோர் உய்யும் மார்க்கத்தைப் பெறுவதற்குத்
துணையாக இருப்பது சிவ மந்திரம், சிவ தரிசனம், சிவ
வழிபாடு முதலியனவாகும். இவை மூன்றும் வாழ்வில்
இன்றியமையாதவை. சிவமே எல்லா உலகங்களுக்கும்,
எல்லா உயிர்களுக்கும் முதலானவன். எல்லாம் சிவமயம்! எங்கும் சிவமயம்!
எதிலும் சிவமயம்!
ஆம். நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை தினமும்
ஜபித்து வந்தாலே வாழ்வில் எல்லா கஷ்டங்களும் நீங்கிவிடும். சிவன்
கோவிலுக்கு சிறிதளவு பணி செய்தாலும் மகத்தான பலன் கிடைக்கும்.
சிவலிங்கத்திற்கு வலை கட்டி பாதுகாத்த சிலந்தி மறு பிறவியில்
கோட்செங்கட் சோழனாகப் பிறந்து தமிழகத்தில் பல மாடக்கோயில்களைக்
கட்டி சிவன் திருப்பணி செய்து புகழ் பெற்றான். சிவன் கோயில்
விளக்கு எரிய திரியை தூண்டி விட்ட எலி மறு பிறவியில் சிவன்
அருளால் மகாபலி சக்ரவர்த்தியாகப் பிறந்தான். சிவ
நாமத்திற்கு அப்படியொரு மகிமை. சிவசிவ என்று தினமும் மனதால்
நினைத்து உச்சரித்தாலே போதும். பாவங்கள் நீங்கும். மனம்
தூய்மை அடையும்.
:நன்றி ''தினமலர்''
============================================================
http://omnamashivaayaa.blogspot.in/

Tuesday, November 3, 2015

சப்தாகர்ஷிணி மந்திரம்:

Raman Iyengar to DHARM [Dharma & Hindu Awareness Resurgence Movement]
17 hrs
ங்களை ஜெபிப்பதன் மூலம் - உங்களுக்கு அளப்பரிய ஆற்றல் கிடைக்க வாய்ப்புள்ளது.நம்பிக்கையுடன் , நீங்கள் செய்து வாருங்கள். செய்து வரும் காலத்திலேயே உங்களை சுற்றி நடக்கும் , மாற்றங்களை உணர முடியும்.
மகாலட்சுமியுடன் திருப்பாற்கடலில் தோன்றியது சங்கு.கடலில் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் வலம்புரிச்சங்கு ஓங்கார ஒலியெழுப்பும். சாதாரணச் சங்கில் ஓம்கார ஒலி உள்ளடங்கியிருக்கும்.சங்கொலி துர் ஆவிகளை விரட்டும்.சங்குப்பக்கம் துர் ஆவிகள் வராது. அதனால், குழந்தைகளுக்குக் கூட சங்கில் பால் ஊற்றிப்புகட்டுவர்.
.இது சத்ரு சம்ஹாரம் செய்யும். சங்கு லட்சுமிக்குரியது.சங்கு பூஜை செய்து வந்தால்,தன ஆகர்ஷணம் (பண வரவு பல மடங்கு அதிகரித்தல்) ஆகும்.
சங்கு காயத்ரி மூலம் பிற உலகத்துடன் சூட்சுமத் தொடர்பு கொண்டுள்ளனர். இப்போதும்,தமிழ்நாட்டில் மிகச் சில இடங்களில் இந்தத் தொடர்பு இருக்கிறது. சங்கினைப் பயன்படுத்தாத நேரத்தில்,வெள்ளிப்பாத்திரத்தில்,சுத்தமான நீரில் மூழ்க வைத்திருக்க வேண்டும். உபயோகிக்கும்போது அதை எடுத்து, தூய துணியினால் நன்கு துடைத்துவிட்டு, அதற்கு சாம்பிராணி புகைக் காட்ட வேண்டும்.
தமிழ்நாட்டில் முற்காலத்தில் துறவிகள் கர்ண எட்சிணி மற்றும் கர்ண பைரவர் மந்திரங்களை ஜபித்துள்ளனர்.அது துறவிகளின் உடற்கூறைப்பொறுத்து வலது காதிலோ அல்லது இடது காதிலோ முக்காலமும் உரைக்கும்.
மனதால் கேள்வி கேட்க,கேட்க, பதில் சொல்லிக்கொண்டே இருக்கும்.
வடநாட்டில் சப்தாகர்ஷிணி என்னும் பெண் தேவதை மந்திரம்சொல்லி அருள்வாக்கு,ஜோதிடம்,கைரேகை,பிரசன்னம் என பல தொழில் செய்கின்றனர். சப்தாகர்ஷிணிக்கு ரூபம் கிடையாது.மந்திரம் மட்டும் உண்டு. அடிக்கடி பால் சாதம் ,வாழைப்பழம் சாப்பிட்டு வர சித்தியாகும். காதில் கனகபுஷ்பராகம் கடுக்கண் அணிவது ஒரு பிளஸ்பாய்ண்ட், பழைய வித்வத்கள் அனைவரும் கடுக்கண் அணிவர் இதற்குத்தான்.
நமது உடலை மந்திர உடலாக மாற்றிட வேண்டும்.மனம் விருப்பு வெறுப்பின்றி இருந்தால்தான் செய்திகளை தூய மனதில் எளிதில் பெறலாம். ஒரு லட்சம் தடவை சப்தாகர்ஷிணி மந்திரம் ஜபிக்க வேண்டும்.பின்,உங்களின் கைக்கு அடக்கமான வெண்மையான சங்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.
நீங்கள் குரு அம்சம் எனில் வலதுகாதில் சங்கை வைத்து சப்தாகர்ஷிணி மந்திரம் தினமும் 108 முறையும்,நீங்கள் சுக்கிர அம்சம் எனில் இடது காதில் சங்கை வைத்து சப்தாகர்ஷிணி மந்திரம் தினமும் 108 முறையும்,அந்த ஒரு லட்சத்துக்கு மேல் ஜபித்து வர வேண்டும்.சங்கின் கீழ்ப்பகுதியி காதின் கீழ் மடலில் பொருத்தப்பிடித்துக் கொள்ள வேண்டும்.சங்கில் நல்லதேவதை தான் பேசும்.
சப்தாகர்ஷிணி மந்திரம்:
ஓம் ரீங் ஆகர்ஷய ஆகர்ஷய
சப்தாகர்ஷணி ஆகர்ஷய ஆகர்ஷய
வா வா ஸ்வாஹா