Sunday, August 31, 2014

சூரியனார் கோவில் - ஞாயிறு - Sooriyanar Temple

நவக்கிரக கோவில்களில் ஒன்றான கோவிலே சூரியனார் கோவில் ஆகும். இந்தக் கோவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆடுதுறை என்னும் ஊருக்கு அருகில் அமைந்துள்ளது. மற்ற நவக்கிரக கோவில்கள் அணைத்திலும் சிவபெருமானே மூலவராக இருக்க...இங்கு மட்டும் சூரிய பகவான் முக்கிய கடவுளாககாட்சியளிக்கிறார்.
வரலாறு:
இதுவரை கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகள் மூலம் இக்கோவில் குலோத்துங்க சோழ மன்னன் காலத்தில் (கி.பி 1060 - கி.பி.1118)கட்டப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. முதலில் இக்கோவில் அர்காவனம் என்று அழைக்கப்பட்டு பின்னரே சூரியனார் கோவில் என்று மாறியது.
கட்டிடக்கலை:
இக்கோவிலின் இராஜகோபுரம் 50 அடி உயரம் கொண்டது. மொத்தம் மூன்று நிலைகளையும் ஐந்து கலச்ங்களையும் உடையது. இக்கோவிலின் முன் புஷ்கரினி தீர்த்தமும் நவக்கிரக தீர்த்தமும் உள்ளன.
சிற்பக்கலை:
கோவில் கோபுரம் முழுவதும் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.கர்ப்பக்கிரகத்தில் சூரிய பகவானும் இடது புறம் உஷா தேவியும் வலது புறம் ப்ரத்யுஷா தேவியும் காட்சியளிக்கின்றனர். மேலும் மற்ற எட்டு கிரகங்களுக்கான கடவுள்களும் இங்கு தனித்தனி சந்நிதியில் காட்சியளிக்கின்றனர்.
உகந்தவை:
ராசி : சிம்ம ராசி
அதி தேவதை : அக்கினி
நிறம் : சிவப்பு
தானியம் : கோதுமை
வாகனம் : ஏழு குதிரை பூட்டிய தேர்
உலோகம் : தம்பாக்கு
மலர் : தாமரை
ரத்தினம் : மாணிக்கம்
ஸ்தல விருட்சம் : வெள்ளருக்கு
காயத்ரி மந்திரம் :
ஓம் அஸ்வ த்வஜாய வித்மஹே
பாச ஹஸ்தாய தீமஹி
தந்நோ சூர்ய: ப்ரசோதயாத்.
வழிபடும் முறை:
கண் நோய்கள், இருதய நோய்கள் , மஞ்சள் காமாலை ஆகியநோய்களால் பாதிக்கப்பட்டோரும் ஏழரை சனி, ஜென்ம சனி,அஷ்டம சனி ஆகியன உள்ளோரும், நவக்கிரக தோஷங்கள் உடையோரும் சூரிய பகவானை வழிபட்டால் நன்மை பயக்கும்.
மேலும் இங்கு 12 ஞாயிற்றுக்கிழமைகள் தங்கி வழிபடுவது சிறப்பு. ஆதித்ய ஹ்ரதயப் பாடலை பாடி வழிபடுதலும் நன்று.
எப்படி செல்வது?
இக்கோவில் கும்பகோணம் - மயிலாடுதுறை சாலையில் தஞ்சாவூரில் இருந்து 58 கி.மீ தொலைவிலும்,ஆடுதுறையில் இருந்து 2 கி.மீ தொலைவிலும் உள்ளது. பேருந்து வசதிகள் உண்டு.
அருகில் உள்ள ரயில் நிலையம் - ஆடுதுறை 2 கி.மீ தொலைவில்.
அருகில் உள்ள விமான நிலையம் - திருச்சி 123 கி.மீ தொலைவில்.

Saturday, August 30, 2014

ஆலயம் சென்று வழிபடுவோர் கவனிக்கவும்

1. ஆலய நுழைவாயிலில் கை கால்களை கழுவிவிட்டு உள்ளே செல்லுங்கள். தலையில் நீரைத் தெளிக்க வேண்டாம்.
2. முதல்நாள் இரவே பரிகார ஸ்தலத்திற்கு சென்று விடுவது நல்லது.
3. போகும்போதோ வரும்போதோ உறவினர் வீடு மற்றும் பிற ஸ்தலங்களுக்கு செல்ல வேண்டாம்.
4. குடும்பத்தோடு செல்வது நல்லதுதான். அதற்காக பூஜையை வாரக்கணக்கில் தாமதப்படுத்தக் கூடாது.
5. புறப்படுவதற்கு 24 மணி நேரம் முன்பும், பின்பும் அசைவ உணவு, மது இவற்றை தவிர்ப்பீர். மற்ற விஷயங்களிலும் கட்டுப்பாடு தேவை.
6. போகும்போதா வரும்போதோ யாருக்கும் பிச்சை போட வேண்டாம்.
7. பெண்கள் வீட்டுக்கு விலக்காகி 7 நாட்கள் கழித்துச் செல்வது நல்லது.
8. யாரிடமும் கடன் வாங்கி செல்ல வேண்டாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் பூஜைக்கென்று சொல்லி வாங்காதீர்.
9. போகும்போதோ வரும்போதோ குல தெய்வத்தை வழிபடலாம். தோஷமில்லை.
10. தர்ப்பணம் கொடுக்காதவர்களுக்கு எந்த பூஜையும் பலன் தராது.
11. சுவாமி தரிசனம் சிலமணி நேரம் ஆகும் என்பதால் புறப்படுவதற்கு முன்பு பன், டீ, பிஸ்கட், காபி, ரஸ்க், டிரை ப்ரூட்ஸ், கூல்ட்ரிங்ஸ், போன்ற ஸ்லைட் ஃபுட் சாப்பிடலாம்.
12. பரிகாரங்கள் அனைத்தையும் தாங்களே முன்னின்று செய்யவும்.
13. ஆலயம் வர இயலாதவர்கள், வெளி நாடு வாசிகள், விரும்பாதவர்கள் இவர்களுக்கு அவர்களது இரத்த உறவுக்காரர்கள், விசுவாசமுள்ளவர்கள் குருமார்கள் பூஜை செய்தால் பலிதமாகும்.
14. பூஜைக்காக தாங்கள் நேரம், பணம் செலவழிப்பது பெரிய விஷயமல்ல. கணிந்த, தாழ்ந்த, முறையான பக்தி மனோபாவமே பலனை நிர்ணயம் செய்கிறது.
15. முக்கிய பூஜை சம்பந்தப்பட்ட விஷயங்களை பிறரிடம் சொல்லாமல் இருப்பது நல்லது.
16. பூஜை சம்பந்தப்பட்ட கிரகத்தின் நாள் ஹோரையில் செய்யுங்கள்.
17. தேவையான காலம் வரை வருடத்திற்கு ஒரு முறையாவது இப்பூஜையை செய்ய வேண்டும்.
18. எல்லா ஆலயங்களுக்கும் சம்பந்தாசம்பந்தமின்றி சென்று வருவது பயனற்றது.
19. பொழுதுபோவதற்காக (சுற்றுலா) ஆலயம் செல்லாதீர்.
20. தங்கள் சக்திக்கேற்றபடி பூஜை செய்ய வேண்டும். வசதியுள்ளவர்கள் சாதாரண பூஜை செய்தால் பலிக்காது. எளியவர்கள் கடன் வாங்கி பெரிதாக செய்ய வேண்டாம்.
21. பூஜைக்கு அமாவாசை, பவுர்ணமி தங்கள் பிறந்த நாள், சித்திரை 1, ஜனவரி 1 போன்றவை உகந்தவை.
22. தலங்களுக்கு செல்வதற்கு முன் 1 நாளும், பின் 1 நாளும் இறந்தவர் வீட்டிற்கு செல்லாதீர்.
23. நெருங்கிய உறவினர் இறந்துவிட்டால் ஐயர் அல்லது ஜோதிடரைக் கேட்டு தகுந்த காலம் கடந்து தரிசிக்க வேண்டும்.
24. வசதியுள்ளவர்கள் புத்தாடை அணிந்து செல்லலாம்.
25. மாலை நேர பூஜைக்கு காலை அணிந்த உடையை அணியாதீர்.
26. ராகுகால பூஜையைத் தவிர மற்ற பூஜைகளை காலை 7.00 மணிக்குள் ஆரம்பித்து விட வேண்டும்.
27. பொருட்கள் தரமாக இருந்தால் அனைத்தையும் பரிகார ஸ்தலத்தில் வாங்குவது சிறந்தது.
28. அதிகம் பேரம் பேச வேண்டாம்.
29. முதலில் விநாயகர், அருகம்புல் வைத்து பிரார்த்தித்து, ஒரு தேங்காயை வலது கையில் வைத்துக்கொண்டு 1 பிரதட்சணம் வந்து பூஜையைத் துவங்கி ஒதுக்கப்பட்ட இடத்தில் அந்த சிதறு காயை உடையுங்கள்.
30. ஆலயத்திற்குள் யாருடனும் பேச வேண்டாம். செல்போன்களைத் தவிர்க்கவும்.
31. வெற்றிலைக்கு நுனியும், வாழைப் பழத்திற்கு காம்பும் இருக்க வேண்டும். வில்வம் மற்றும் தாமரைப்பூவிற்கு இதழ்கள் மட்டுமே உயர்ந்தவை. காம்பு, மஞ்சள் கரு, உள் இழைகள் இருக்கக்கூடாது.
32. வெற்றிலை, வாழைப்பழம், தேங்காய், உதிரி புஷ்பங்கள், பழவகைகள், மண் விளக்கு, ஸ்பூன், அலங்கார மாலை, அர்ச்சனைத் தட்டு முதலியவற்றை கழுவி எடுத்துச் செல்லவும்.
33. சிதறு காயைத் தவிர மற்ற காய்களை மஞ்சள் தடவி (இளநிற மஞ்சள்) எடுத்துச் செல்லுங்கள்.
34. மண்விளக்குகளில் ஐந்து இடத்தில் மோதிர விரலால் மஞ்சள், குங்குமம் வைக்க வேண்டும். இதற்கு சந்தனம் உபயோகிக்கக் கூடாது.
35. பூஜை சாமான்களை கைகளில், பிளாஸ்டிக் பைகளில் கொடுக்காமல் பித்தளை, எவர் சில்வர் தாம்பாளம், கூடை இவற்றில் வைத்துக் கொடுங்கள்.
36. நைவேத்யம் அந்தந்த ஆலய மடப்பள்ளியில் தயார் செய்ய வேண்டும். நீங்கள் தயாரித்து எடுத்துச் செல்லக்கூடாது.
37. பால்கோவா, ஸ்வீட்ஸ், அவல் பொரி, கடலை இவற்றையும் நைவேத்தியமாகப் பயன்படுத்தலாம்.
38. திரி, தீப்பெட்டி, டிஸ்யூ பேப்பர், கேண்டில், நெய் துடைக்க துணி, ஸ்பூன் முதலியவற்றை எடுத்துச் செல்லவும்.
39. திரை போட்ட பின் பிரதட்சணம் வர வேண்டாம்.
40. விநாயகருக்கு ஒன்று. தனி அம்பாளுக்கு இரண்டு. சிவனைச் சார்ந்த அம்பாளுக்கு மூன்று என்ற கணக்கில் வலம் வாருங்கள்.
41. ஒரு பிரதட்சணம் முடிந்ததும் கொடி மரத்தடியில் கைகூப்பி நின்று வணங்கியதும் அடுத்ததை துவங்கவும்.
42. கொடிமரத்தடியைத் தவிர வேறெங்கும் விழுந்து வணங்கக் கூடாது.
43. ஸ்பெஷல் எண்ட்ரன்ஸ் வழியாகச் சென்றால் சிறப்பான நிம்மதியான தரிசனம் கிடைக்கும்.
44. பிற தீபங்களிலிருந்து உங்கள் தீபத்தை ஏற்ற வேண்டாம்.
45. நெய் அல்லது எண்ணையை பிற விளக்குகளில ஊற்ற வேண்டாம்.
46. அபிஷேக ஆராதனைகளும், ஹோமங்களும் உயர்வு தரும்.
47. பரிகாரம் சம்பந்தப்பட்டவர்களுக்கு விபூதி, பிரசாதம் அனுப்பி வைக்க வேண்டும்.
48. பரிகாரம் செய்யும் நேரத்தில், பரிகாரம் சம்பந்தப்பட்ட நபர் வீட்டில் உறங்கக் கூடாது.
49. பூஜை செய்து கொண்டிருக்கும் சமயம், யாராவது பிரசாதம் கொடுத்தால், அதை பெற்றுக்கொண்டு பூஜை முடிந்தபின் உண்ணவும்.
50. பரிகாரம் செய்தபின் பூஜை பொருட்களை அங்கேயே கொடுத்து விடுவது நல்லது. பசுமாட்டிற்கு வாழைப்பழம், மற்றவற்றை ஐயரிடம் கொடுக்கலாம். சிப்பந்திகளிடமும் கொடுக்கலாம்.
51. பிரத்யேக கனி வகைகளை வைத்துப் படைப்பது நல்லது. எலுமிச்சை, மாதுளை, ஆப்பிள், சாத்துக்குடி, ஆரஞ்சு, மா முதலியன.
52. வேகமாக ப்ரதட்சணம் வராமல் பொறுமையாக நமச்சிவாய என்ற 5 எழுந்து மந்திரத்தை உச்சரித்தபடி பொறுமையாக வருவது நல்லது.
53. பலன் முழுமையாகப் பெற 1 வருஷ காலம் வரை ஆகலாம். நமக்கு 1 வருஷம் என்பது ஆண்டவனுக்கு 1 நாள்.
54. ஒவ்வொரு ஆலயத்திலும் தீபம் ஏற்றுவதற்கென்று உரிய தனியான இடத்தில் ஏற்றவும், சிலைகள் அருகில் ஏற்றக்கூடாது.
55. சுவாமியைத் தொடாமல் பூஜிக்கவும்.
56. பூஜை செய்த சாமான்கள் பூஜை செய்யாதவற்றுடன் சேர்ந்து விடக்கூடாது.
57. நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களுக்காக 5 மூக்கு தீபம் ஏற்ற வேண்டும்.
58. திரி கனமாக இருந்தால் தீபம் நின்று எரியும். தீபம் ஏற்றிய பின் விளக்குகளை தூக்கி தீபம் காட்டுவது, நகற்றுவது கூடாது. தீபத்துடன் பிரதட்சணம் வருவது தவறு.
59. ஒரு கையில் விபூதி குங்குமம் வாங்கக்கூடாது. இடது கையை கீழே வைத்து வலது கையை மேலே வைத்து பௌயமாக பெற்றுக் கொள்ள வேண்டும். விபூதி, குங்குமத்தை பேப்பரில் வாங்ககூடாது.
60. பெற்ற விபூதி குங்கும பிரசாதத்தை கீழே கொட்டாமல் வீட்டிற்கு பேப்பரில் மடித்து எடுத்துச் செல்லவும்.
61. விபூதியை நிமிர்ந்து நின்று அப்படியே பூசிக் கொள்ளவும். இடது கையில் வைக்க வேண்டும்.
62. பரிகாரங்கள் அனைத்தும் தங்கள் ஜோதிடரின் அறிவுரைப்படி வரிசைக் கிரமமாக இருக்க வேண்டும்.
63. அலங்கார மாலை அவசியமானது தான். ஆனால் மாலையை விட உதிரிப்பூக்கள் விசேஷமானது.
64. அருகம்புல், வில்வம், தாமரைப்பூ, சம்பங்கி, சாமந்தி, பச்சை, மரிக் கொழுந்து, சங்குப்பூ, நீலப்பூ, துளசி, மல்லிகை, ரோஜா, பன்னீர் ரோஜா, விருட்சிப்பூ போன்ற பூ வகைகளால் பூஜிப்பது நல்லது.
65. காளி, துர்கா, முருகனுக்கு பஞ்ச அரளிப் பூக்கள் விசேஷமானது.
66. அம்பாளுக்கு மெருன் நிற குங்குமமே சிறந்தது.
67. எண்ணையை விட நெய்க்கு வீரியம் மிக அதிகம்.
68. சாதாரண மாலையை வாங்காமல் பாதம் வரையிலுள்ள வாகை மாலையை வாங்குங்கள்.
69. சுவாமி சன்னதியில் ஸ்தோத்திரங்கள் பாடுவது பிறருக்கு தொல்லையாக அமையும். அமைதி தேவை.
70. கஜ பூஜை, ஒட்டக பூஜை, கோ பூஜை, சிப்பந்திகளுக்கு தட்சணை தருவது இவை பூஜையின் பலனை அதிகரிக்கும். ஜீவகாருண்யம் உயர்வு தரும்.
71. சிவன், அம்பாளை மட்டும் தரிசிப்பது சரியல்ல. பரிவார தேவதைகள் என வழங்கப்படும் பிற சன்னதிகளிலும் வழிபாடு தேவை. நெய் தீபம் ஏற்றி உதிரி புஷ்பங்களை சமர்ப்பிக்கலாம்.
72. வாழைப்பழத்தில் பூவம் பழம் உயர்ந்தது. அடுத்து நாட்டுப்பழம்.
73. சூடம் ஏற்றினால் புகையினால் இடம் மாசுபடும்.
74. ஆலயத் தூய்மை ஆலய தரிசனத்தை விட முக்கியமானது.
75. தல வரலாறு புத்தகம் வாங்கி ஸ்தலம் சம்பந்தப்பட்ட அனைத்து விசேஷங்களையும் தெரிந்துகொள்வது பூஜைக்கு உதவும்.
76. கோயிலுக்குள் சில்லறை கிடைக்காது. ரூ. 10,50,100 என மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். சில்லறைக் காசுகள் போடுவதைத் தவிர்ப்பீர்.
77. கூட்டம் அலைமோதும் ஸ்தலங்களில் பொறுமை தேவை.
78. காசு செலவழித்து செல்பவர் மீது பொறாமை வேண்டாம். நிர்வாகத்திற்கு பணம் தேவை.
79. வி.ஐ.பி. க்கு முன்னுரிமை கொடுப்பதில் எவ்வித தவறும் இல்லை. அது நியாயமானதுதான்.
80. விபூதி குங்குமம் வாங்கும் முன்பே பிராமணருக்கு தட்சணை கொடுத்து விட வேண்டும்.
81. சங்கல்பம் மிக முக்கியம்.
82. கோபுர தரிசனம் கோடி நன்மை.
83. சண்டிகேஸ்வரருக்கு கடைசிப் பிரகாரத்தில் தீபம் ஏற்றி வழிபடுங்கள். அமைதியாக கையை தட்டுங்கள். சொடுக்குப் போடாதீர்.
84. கொடி மரத்தடியில் வடக்குப் பார்த்து விழுந்து வணங்கி பிரார்த்தனையை நிறைவேற்ற வேண்டும்.
85. பிறகு சற்று விலகி கீழே அமர்ந்து 1 நிமிஷம் தியானம் பண்ணி பிரார்த்தனையை நிறைவேற்றவும்.
86. ஆரம்பத்தில் விநாயகரிடம் விடுத்த வேண்டுகோள்தான் இறுதி வரை இருக்க வேண்டும். மாறக்கூடாது.
87. பிரார்த்தனைகள் 1 அல்லது 2க்கு மேல் இருக்கக்கூடாது.
88. காவல் தெய்வங்கள் இருந்தால் அவர்களை வழிபட்ட பிறகே விநாயகர் வழிபாடு செய்ய வேண்டும்.
89. இத்தகைய பூஜைகள் காரியசித்தி பூஜைகள் தானே தவிர கர்ம வினைகளை முற்றிலும் மாற்றாது. ஆனால் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தும்.
90. பூஜைக்கு முன்னுரிமை பெறுபவை. 1. பித்ருக்கள், 2. குலதெய்வம், 3. விநாயகர், 4. திசாநாதன், 5. பிரச்சனை அல்லது கோரிக்கை சார்ந்த தெய்வம்.
91. நவக்கிரகங்கள் சம்பந்தமின்றி நேரடியாக செயல்படும் ஆற்றல் முனீஸ்வரர், அனுமார், பசு, யானை இவர்களுக்கு உண்டு.
92. இயன்றவரை இறைவனைப் பற்றிய சிந்தனையிலேயே இருங்கள்.
93. தோஷ நிவர்த்திப் பூஜாக்களை இளம் வயதிலேயே 30 வயதிற்குள் செய்து விடுங்கள்.
94. ஸ்தோத்ர பாராயணம் எல்லோருக்கும் அவ்வளவு பலன் தராது.
95. கடுமையான விரதங்களை மேற்கொள்வது, அடிக்கடி பட்டினி கிடப்பது இவற்றை தவிர்க்கவும்.
96. இயல்பான முழுமையான நம்பிக்கையுடன், நேர்த்தியாக, பூரண மன அமைதியுடன் பிரார்த்தனை செய்யுங்கள்.
97. பூஜைக்கு விபூதி, குங்குமம், மஞ்சள், நெய், உதிரி புஷ்பம், வஸ்திரம், மாலை, சந்தனம், தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, ஊதுபத்தி, நைவேத்யம், தட்சணை இவை முக்கியம்.
98. சின்னச்சின்ன பூஜைகளை விட அனைத்தும் அடங்கிய முறையான ப்ரத்யேக பூஜைதான் பலன்களை அள்ளித் தருகின்றன.
99. ஆண்டவன் நினைத்தால் மட்டுமே பூஜைக்குரிய அனுமதி கிடைக்கும்.
100. ஆண்டவனை நினைத்துக் கொண்டே இருங்கள். காலம் கனியும்போது ஆண்டவன் நம்மை நினைப்பார்.
நன்றி :-http://bsakthivel.blogspot.in/

சிவபுராணம் பற்றிய முழுமையான விளக்கம்

சிவபுராணம் என்று பெயர் கொண்ட இப்பதிகம் சீவபுராணமல்லவா பேசுகின்றது? ஏன் சிவபுராணம் எனப் பெயர் பெற்றது? மாணிக்கவாசகப் பெருமான் பரம்பொருளாகிய சிவபெருமானைப் பலவாறெல்லாம் போற்றி அவர் பூவார் திருவடிகளுக்குத் தம்முடைய உளமார்ந்த வணக்கங்களைக் கூறித் துவங்குகிறார்.
ஜீவனான உயிர் மும்மலச் சேற்றில் அகப்பட்டுத் திகைத்து நிற்கும் காலமும், அச்ஜீவனுக்கு சிவபெருமான் திருவருளால் ஏற்படும் மேம்பாடுகளையும் கூறி இறுதியாக அச்சிவபெருமானின் திருவடிக்குச் செல்லும் பெருநிலையை நமக்குக் காட்டுகின்றார். ஜீவன் மலச்சுழியில் சிக்குண்டு இருக்கும் தாழ்நிலையிலிருந்து, சிவனார் பெருங்கருணையால் சிவகதி அடையும் தன்னிகரற்ற பெருநிலை பற்றிக் கூறுவதால் இது சிவபுராணமே.
திருவாசகம் பெரிதும் எளிய நடையைக் கொண்டதாக இருப்பது காரணமாக உரையின் துணையின்றியே அன்பர்கள் படித்துப் பயன்பெறுவது. எனினும் சந்தி பிரித்து தினமும் பேசும் மொழியில் வழக்கத்தில் இப்போது இல்லாத சில சொற்களுக்குப் பொருளும், அங்கங்கே தொடர்புடைய சில கருத்துக்கள் குறிப்பதுவும் அன்பர்களுக்கு பயன்படக்கூடும் என்ற கருத்துடன் இவ்வுரை வரையப்பட்டுள்ளது. நேயத்தே நின்ற நிர்மலனார் பிழைகளை மன்னித்தும் தவிர்த்தும் அருள அவர்தம் செம்மலரடிகளுக்குப் போற்றுதல்கள்.
தமிழ் பேசும் சிவனடியார்கள் வாயெல்லாம் மணக்கின்ற பதிகம் சிவபுராணம். கல்லையும் கனிய வைக்கும் எனப் புகழ் பெற்ற திருவாசகத்தின் முதற் பதிகமாக அமைந்த சிறப்புப் பெற்றது. திருஐந்தெழுத்தை முதலாகக் கொண்டே துவங்கும் இப்பதிகம் அடியார் தொழுகையில் சிறப்பிடம் பெற்றது இதன் பெருமையைப் பறை சாற்றும் அறுபத்துமூன்று நாயன்மாரில் மூவர் பெண்கள்.
கி.பி. 3-4 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த காரைக்கால் அம்மையார் நாயன்மாரில் காலத்தால் மூத்தவர். தான் பிறந்து வாழ்ந்த ஊரின் பெயராலேயே அறியப்படும் காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர் புனிதவதியார் ஆகும். மதுரையை ஆண்ட கூன் பாண்டியன் என்ற பாண்டிய மன்னன் நின்றசீர் நெடுமாற நாயனார் என்ற அறியப்படுகிறார். அவர் மனைவி மங்கையர்க்கரசியார் என்பவர் நாயன்மாரில் மற்றொரு பெண் ஆவார். திருநாவலுரைச் சேர்ந்த சடையனார் என்ற நாயனாரின் மனைவி இசைஞானியார் மூன்றாவது பெண் நாயனார் ஆவார். இவர்களின் மகன் சுந்தரமூர்த்தியார் சைவக்குரவர் நால்வருள் ஒருவரும் நாயன்மாரில் ஒருவரும் ஆவார்.
நாயன்மாரை அறிமுகம் செய்து வைத்தவர் சுந்தரமூர்த்தி நாயனார். அவர் பாடிய நாயன்மார் 60 பேர். 63 பேர் அல்ல. சுவாமிமலைக்குப் படி 60. ஆண்டுகள் 60. மனிதனுக்கு விழா செய்வதும் 60வது ஆண்டு. ஒரு நாளைக்கு நாழிகை 60. ஒரு மணிக்கு நிமிடம் 60. ஒரு நிமிடத்துக்கு வினாடி 60. இப்படி 60 என்று தான் கணக்கு வரும். 63 என்று வராது. சுந்தரமூர்த்தி நாயனார் சிவபெருமான் அடி எடுத்துக் கொடுக்கப் பாடிய நாயன்மார் 60 பேர்தான். சுந்தரமூர்த்தி நாயனார் மறைவுக்குப் பின் 100 ஆண்டுகள் கழித்து நம்பியாண்டார் நம்பி அடிகள் சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய 60 நாயன்மாரைக் கொஞ்சம் விரிவாகப் பாடுகின்றார். அப்போது 60 நாயன்மாரைப் பாடி, அந்த 60 நாயன்மாரைப் பாடிக் கொடுத்த சுந்தரர், அவரைப் பெற்றுக் கொடுத்த அப்பா (சடையனார்), அம்மா (இசைஞானியார்) ஆகியோரைச் சேர்த்து 63 ஆக ஆக்கினார்
arubathumoovarநமையாளும் நாயன்மார்கள் அறுபத்திமூவர்
தில்லைவாழ் அந்தணர்: சித்திரை-முதல்நாள்-தில்லையில் வாழும் தீட்சதர்கள். தொகையடியார்களின் ஒன்பதுபேரில் முதலாவதாக வணங்கப்படுபவர்கள்.
1. திருநீலகண்ட நாயனார்:தை-விசாகம். குயவர்-சோழநாடு, சிதம்பரம். அயலறியா வண்ணிம் மனைவியின் சபதத்திற்கு உடன்படடு அவளைத் தீண்டாது, இளமையிலும் முதுமையிலும் இல்லறம் நடத்தி இறைவன் திருவருளால் இளமை பெற்றார்.
2. இயற்பகை நாயனார்:மார்கழி-உத்திரம். வணிகர்-சோழநாடு- காவிரிப்பூம்பட்டினம். சிவனடியார்க்குத் தம் மனைவியிடமே தானமாகக் கொடுத்தவர்.
3. இளையான் குடிமாற நாயனார்:ஆவணி-பூசம். வேளாளர் இளையான்குடி. விதைத்த நெல் எடுத்து அலங்கெரித்து அடியார்க்கு அமுது அளித்தல்.
4. மெய்ப்பொருள் நாயனார்:கார்த்திகை-உத்திரம் குறுநில மன்னர்-நடுநாடு, திருக்கோவலூர். வஞ்சித்துத் தம்மைக் கொல்லும் சிவவேடதாரியைக் காப்பாற்றித் தம் உயிரைவிட்டவர்.
5. விறன்மீண்ட நாயனார்:சித்திரை-திருவாதிரை. வேளாளர்-மலைநாடு, செங்குன்றூர். சுந்திர மூர்த்தி சுவாமிகள் திருத்தொண்டத் தொகை பாடுதற்குக் காரணமாய் இருந்தவர்.
6. அமர்நீதி நாயனார்:ஆனி-பூரம். வணிகர்-சோழநாடு, பழையாறை, கோவணத்திற்கு நிறையாக மனைவி, மக்கள், சொத்துக்களுடன் தன்மையும் சிவனடியார்க்குத் தந்தவர்.
7. எறிபத்த நாயனார்-மாசி-அஸ்தம். சோழநாடு, கருவூர். பூக்குடலையைச் சிவனடியாரிடமிருந்து பிடித்திழுத்துச் சிதறவைத்த பட்டத்து யானையை வெட்டியவர்.
8. ஏனாதினாத நாயனார்-புரட்டாசி-உத்திராடம். சான்றோர்-சோழநாடு, எயினனூர். போர் புரியும் பகைவன் நெற்றியில் திருநீற்றைக் கண்டதும் அவனார் கொல்லப்படும்படி நடந்து கொண்வர்.
9. கண்ணப்ப நாயனார்:தை-மிருகசீரிடம். வேடர்-தொண்டை நாடு-உடுப்பூர். ஆறே நாளில் அளவுகடந்த பக்திசெய்து காளத்தியப்பருக்குத் தம் கண்ணை அப்பியவர்
10. குங்கிலியக் கலய நாயனார்:ஆவணி-மூலம். அந்தணர்-சோழநாடு, திருக்கடவூர். மனைவியின் மாங்கல்யத்தை விற்றும் குங்கிலியம் வாங்கியவர். சாய்ந்த லிங்கத்தைக் கழுத்தில் பூமாலை கொண்டு நிமிர்த்தியவர்.
11. மானக்கஞ்சாற நாயனார்:மார்கழி-சுவாதி, வேளாளர்-கஞ்சாறூர்-திருமணம் தொடங்கும்போது திருமணப் பெண்ணாகிய தமது மகளின் தலைமயிரை அறுத்துச் சிவனடியாருக்குத் தந்தவர்.
12. அரிவட்டாய நாயனார்-தை-திருவாதிரை. வேளாளர்-சோழநாடு, கணமங்கலம். சிவ நிவேதனத்துக்குரிய பொருள் கீழே சிந்தியதற்காகத் தமது கழுத்தை அரித்து கொண்டவர்.
13. ஆனாய நாயனார்:கார்த்திகை-அஸ்தம். இடையர்-மழநாடு, மங்களவூர், பசு மேய்க்கும் போது, ஜந்தெழுத்தைப் புல்லாங்குழலில் அமைத்துவாசித்தவர்.
14. மூர்த்திநாயனார்-ஆடி-கிருத்திகை. வணிகர்-பாண்டியநாடு, மதுரை. சந்தனம் தருகின்ற திருப்பணியில் முட்டுப்பாடு நேரவே, முழங்கையை அரைத்தவர். திருநீறு, உத்திராட்சம், சடைமுடி ஆகிய மூம்மையால் உலகாண்டவர்.
15. முருக நாயனார்:வைகாசி-மூலம். அந்தணர்-சோழநாடு, திருப்புகலூர். மலர்த்தொண்டு செய்து திருஞான சம்பந்தர் திருமணத்தில் முக்தி பெற்றவர்.
16. உருத்திர பசுபதி நாயனார்:புரட்டாசி-அஸ்வினி. அந்தனர்-சோழநாடு. திருத்தலையூர். இரவும் பகலும் திருக்குளத்தில் கழுத்தளவு நீரில் நின்று ஸ்ரீ ருத்ர மந்த்ரம் ஜபித்தவர்.
17.திருநாளைப்போவார் நாயனார்: புரட்டாசி-ரோகினி (நந்தனார்) புளையர்- சோழநாடு. ஆத்தனூர். தில்லை நடராஜப் பெருமானைப் காணவிரும்பித் தீப் புகுந்து முனிவராய் எழுந்து சிற்றம்பலவன் திருமுன்பு மறைந்தவர்.
18. திருக்குறிப்புதொண்ட நாயனார்:சித்திரை-சுவாதி. ஏகாலீயர்-தொண்டைநாடு காஞ்சீபுரம். சிவனடியார்க்கு வாக்களித்தபடி மழையின் காரணமாக உடையை துவைத்து உலர்த்தித்தர முடியாமல் போனதால் தமது தலையை கல்லின்மீது மோதிக் கொண்டவர் .
அறுபத்து மூவரையும் தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் தொடர்ந்து !
1lord-shiva9. சண்டேஸ்வர நாயனார்:தை-உத்திரம். அந்தணர்-சோழநாடு, திருச்சேயஞ்ஞலூர் அபிஷேகப்பாற்குடத்தை இடரியை தந்தையின் காலை வெட்டித் தொண்டர்க்கு தலைவனாக (சண்ணிப் சப்பதம்) இருக்கும் அருள் பெற்றவர்.
20. திருநாவுக்கரச நாயனார்:சித்திரை-சதயம், வேளாளர்-நடுநாடு, திருவாமூர், ஐந்தெழுத்து ஒதி கருங் கல்லின்மேல் கடலில் மிதந்து கரையேரிப் பல தேவாரப்பாடல்கள் பாடி கைத்தொண்டு செய்து முக்தி பெற்றவர்.
21. குளச்சிறை நாயனார்:ஆவணி-அனுஷம், பாண்டிய நாடு-மனமேற்குடி, அரசன் சமணனாய் இருந்தபோதும் தாம் சிவனடியாரை வழிபட்டார். திருஞானசம்பந்தரை அழைத்துவந்து அரசனையும் நாட்டினையும் சைவ மாக்கியவர்.
22. பெருமிழலைக் குரும்ப நாயனார்:ஆடி-சித்திரை, பெருமிழலையூர் சுந்திர மூர்த்தி ஸ்வாமிகளை வழிபட்டு, அவர் கயிலை செல்வதையறிந்து யோகத்தால் தானும் கயிலை சென்றவர்.
23. காரைக்கால் அம்மையார்:பங்குனி-ஸ்வாதி (பேயார்) , வணிகர்-சோழநாடு. காரைக்கால், சிவபெருமானை வேண்டி மாம்பழம் பெற்றவர். பேய் வடிவம் பெற்றவர். ஆலங்காட்டில் ஈசனாடலையும் பெற்றவர்.
24. அப்புதியடிகள் நாயனார்:தை-சதயம். அந்தணர்-சோழநாடு. திங்களூர். பிள்ளை இறந்ததையும் மறைத்து திருநாவுக்கரசு ஸ்வாமிகளுக்கு அமுது அளித்தவர்.
25. திருநீலநக்க நாயனார். வைகாசி-மூலம்:அந்தணர்-சோழநாடு. சாத்தமங்கை. அன்போடு சிவலிங்கத்தின் மீதிருந்த சிலந்தியை ஊதியதால் எச்சில் பட்டதென்று மனைவியை விட்டுச்சென்றவர். பாணர்க்கு வேதிகையில் இடம் தந்தவர். திருஞானசம்பந்தர் திருமணத்தை நடத்தி முக்தி பெற்றவர்.
26. நமிநந்தி அடிகள் நாயனார்:வைகாசி-பூசம். அந்தணர்-சோழநாடு. ஏமப்பேறூர். தண்ணீரால் விளக்கெரித்தவர். திருவாரூர்ப் பிறந்தாரை எல்லாம் சிவசாரூப்பியராகக் கண்டவர்.
27. திருஞானசம்பந்த நாயனார்:வைகாசி-மூலம். அந்தணர்-சோழநாடு. சீகாழி. உமாதேவியாரால் ஞானப்பால் ஊட்டப்பெற்றவர். தேவாரம்பாடி எலும்பைப் பொன்னாக்கியவர். பல அற்புதங்கள் செய்த இவர் தமது திருமணத்திற்கு வந்தவர்கள் அனைவருக்கும் முக்தி தந்தவர்.
28. ஏயகோன் கலிக்காம நாயனார்:ஆனி-ரேவதி. வேளாளர் சோழநாடு திருப்பெரும் மங்களம். சிவபெருமானைப் தூதராகவிடுத்த வண்றொண்டரை இகழ்ந்து பின்பு திருவருள் விளையாட்டால் அவருடைய நண்பரானவர்.
29, திருமூல நாயனார். ஐப்பசி-அசுவினி:இடையர்-சோழநாடு, சாத்தனூர். மூலன் உடலில் தாம் புகுந்து, மூவாயிரம் ஆண்டிருந்து, திருமந்திரம் அருளிச் செய்தவர்.
30. தண்டியடிகள் நாயனார்-பங்குனி-சதயம். சோழநாடு-திருவாரூர். பிரவிக் குருடாக இருந்தும் திருவாரூர் குளத்தை, கரையில் குச்சி கட்டி, இடையே கயிறு கட்டி திருக்குளப்பணி செய்து குருடு நீங்கிச் சமணரை வென்றவர்.
31. மூர்க்க நாயனார்-கார்த்திகை, மூலம். வேளாளர், தொண்டைநாடு, திருவேர்க்காடு. சூதாட்டத்தில் கிடைக்கும் லாபத்தைக் கொண்டு சிவனடியார்களுக்கு அன்னதானம் செய்தவர்.
32. சோமாச்சிமாற நாயனார்-வைகாசி-ஆயில்யம். அந்தணர். சோழநாடு. திரு அம்பர். வேத வேள்வி செய்து, சாதிமத பேதமின்றி, பஞ்சாட்சரவிதிப்படி அடியயார்களுக்கு அன்னதானம் செய்தவர்.
33. சாக்கிய நாயனார்:மார்கழி-பூராடம். வேளாளர்-திருச்சங்கமங்கை. சமணக் கோலமாயினும் மனதார சிவபூசை செய்தவர். மனதில் மலராக எண்ணி இறைவ மீது இட்டகற்களை இறைவன் மீது இட்டகற்களை இறைவன் மலராக ஏற்று அருள் பெற்றவர்.
34. சிறப்புலி நாயனார்-கார்த்திகை-பூராடம். அந்தணர்-சோழநாடு. திரு ஆக்கூர். குல ஆசாரவிதிப்படி, வேதம் ஒதியும், ஒதுவித்தும், சிவனடியைச் சிந்தித்தும் அடியார்கட்கு, அமுதும் பொருளும் தந்தவர்.
35. சிருத்தொண்ட நாயனார்-சித்திரை-பரணி. மாமாத்திரப் பிராமணர்-சோழநாடு, திருச்செங்காட்டாங்குடி வாதாவியைப் போரில் வென்றவர். சிவனடியார்க்குத் தமது ஒரே பிள்ளையைக் கறியாகச் சமைத்து வைத்தவர்.Lord-Shiv
36. சோமான் பெருமாள் நாயனார்-ஆடி, சுவாதி (கழறிற்றறிவார் நாயனார்) அரசர், மலைநாடு, கொடுங்கோளூர். நடராஜர் பாதச் சிலம்பொலி கேட்கக் காலம் தகுந்தமையால் சுந்திர மூர்த்தி ஸ்வாமிகள் தோழமை பெற்றவர். சிவ பெருமானுடையதிருமுகப் பாசுரம் பெற்றவர். கயிலை சென்று ஞானவுலா பாடியவர்.
37. கணநாத நாயனார்-ஆடி-திருவாதிரை. அந்தணர், சோழநாடு, சீர்காழி. சிவனடியாரைப் போற்றுவதோடு, சிவநெறிப் பணிகள் செய்பவருக்கு பயிற்சி அளித்தவர். திருஞான சம்பந்தரை வழிபட்டவர்.
38. கூற்றுவ நாயனார்-ஆடி-திருவாதிரை. குறுநில மன்னர், திருக்களத்தை. தில்லைவாழ் அந்தணர் தமக்கு முடிசூட்ட மறுக்கவே, தில்லையம்பலவன் திருவடிகளையே முடியாகச் சூடப்பெற்றவர்.
39. புகழ்ச்சோழ நாயனார்:ஆடி-கிருத்திகை. அரசர் சோழநாடு. உறையூர். பகைவனது அறுபட்ட தலையில் சிவ சின்னமாகிய சடையிருப்பதைக் கண்டு அஞ்சி உயிர்விட்டவர்.
40. நரைசிங்க முனையரைய நாயனார்-புரட்டாசி-சதயம். குருநில மன்னர்-நடுநாடு. சுந்தரமூர்த்தி சுவாமிகளை வளர்த்தவர். திருவாதிரை தோறும் சிவனடியார்களுக்கு அன்னமிடுவதுடன் 100 பொற்காசுகள் வழங்குவார். சிவவேடம் பூண்ட காமக்குறி மலர்ந்த தூதர்களையும் வணங்கியவர்.
41. அதிபந்த நாயனார்-ஆவணி-ஆயில்யம். நுளையர் (மீன் பிடிப்பவர்) சோழநாடு-நாகப்பட்டினம். நவரத்தினம் இழைத்த பொன்மீனைத்தாமே வைத்துக் கொள்ளாமல் சிவார்பணம் செய்தவர்.
42. கலிக்கம்ப நாயனார்-தை-ரேவதி. வணிகர்-நடுநாடு. பெண்ணாடகம். தமது பழைய வேலையாள் சிவனடியாராக வந்தபோது, தாம் அவனை வழிபட்டு, வழிபடாத தமது மனைவி கையை வெட்டியவர்.
43. கலிய நாயனார்:ஆடி-கேட்டை. செக்கர்- (எண்ணெய் வியாபாரி) தொண்டைநாடு-திருவெற்றியூர். திருவிளக்கு ஏற்ற எண்ணெய் இல்லாததால் தமது இரத்தத்தைக் கொண்டு எரிக்க முயன்றவர்
44. சக்தி நாயனார்-ஐப்பசி-பூசம். வேளாளர்-சோழநாடு. வரிஞ்சியூர். சிவனடியாளர்களைக் குறை கூறுபவர்களின் நாக்கை அறுத்தவர்.
45. ஐயடிகள் காடவர்கோன் நாயனார்-ஐப்பசி-மூலம். குறுநில மன்னர்- தொண்டைநாடு. காஞ்சிபுரம். பதவியை வெறுத்துத் ஸ்தல யாத்திரை செய்தவர். க்ஷேத்திர வெண்பாவால் நிலையாமையைக் கூறியவர்
46. கணம்புல்ல நாயனார்-கார்த்திகை-கிருத்திகை. இருக்குவேளூர். புல்விற்று நெய்கொண்டு திருவிளக்கெரித்தவர். நெய்யின்மையால் திருப்புலீஸ்வர சிவன் சன்னதியில் தமது தலைமயிரை விளக்காக எரித்தவர்.
47. காரிநாயனார்-மாசி-பூராடம்.. சோழநாடு. திருக்கடவூர். கோவைப்பாடி பொருள்பெற்று, ஆலயப்பணி செய்தவர்.
48. நின்றசீர் நெடுமாற நாயனார்-ஐப்பசி-பரணி. அரசர்-பான்டிய நாடு. மதுரை. திருஞானசம்பந்தர் தந்த திருநீற்றால் சுரம் நீக்கியவர். அவர் திருவாக்கால், கூன் நிமிரப்பெற்று சைவரானவர்.
49. வாயிலார் நாயனார்-மார்கழி-ரேsivan_par_jpg1வதி. வேளாளர், தொண்டைநாடு-மயிலாப்பூர். மானசீகமான ஞானபூஜை செய்தவர்.
50. முனையடுவார் நாயனார்-பங்குனி-பூசம். வேளாளர், சோழநாடு, திருநீடூர். கூலிக்குப் போர் செய்து அக்கூலிகொண்டு சிவனடியாரை வழிபட்டவர்.
51. கழற்சிங்க நாயனார்-வைகாசி-பரணி. குறுகிய மன்னர்-சிவபூஜைக்குறிய பூவை முகர்ந்ததற்காகத் தமது மனைவியின் மூக்கை ஒரு சிவனடியார் அறுத்த தண்டனை போதாது என்று, அவள் கைகளையும் வெட்டியவர்.
52. இடங்கழி நாயனார்-ஐப்பசி-கார்த்திகை. அரசன்-கோனாடு, கொடும்பாளூர். அடியார் வழிபாடு செய்ய நெய் நெல் திருடினவர்க்கு மேலும் பொருளும் நெல்லும் தந்தவர்.
53. செருத்துணை நாயனார்-ஆவணி-பூசம். வேளாளர், சோழநாடு, தஞ்சாவூர். கழற்சிங்க நாயனாருடைய மனைவி, பூஜைக்குறிய பூவை முகர்ந்ததற்காகத் அவர் மூக்கை அரித்தவர்.
54. புகழ்த்துணை நாயனார்-ஆவணி-ஆயில்யம். ஆதிசைவர். செருவிலிபுத்தூர். சிவபூஜைக்கு உதவியாக அரிசிற்கரைப்புத்தூர் சிவபெருமானால் பஞ்சகாலத்தில் காசு அளிக்கப்பெற்று தொண்டு செய்தவர்
55. கோட்புலி நாயனார்-ஆடி -கேட்டை. வேளாளர். சோழநாடு. திருநாட்டியத்தான்குடி. சிங்கடி, வனப்பகை என்ற இரண்டு புதல்வியரைத் சுந்தர மூர்த்தி ஸ்வாமிக்கு அரிப்பணம் செய்தவர். சிவபூஜைக்குரிய நெல்லையுன்ட சுற்றத்தார் அனைவரையும், குழந்தை உட்பட அனைவரையும் கொன்றவர்.
56. பூசலார் நாயனார்-ஐப்பசி-அனுஷம். அந்தணர். தொண்டைநாடு. திருநின்றவூர். மனத்தினாலேயே கோயில்கட்டிச் சிவ வழிபாடு செய்தவர்.
57. மங்கையர்க்கரசியார்-சித்திரை-ரோகினி. (மாணியார்) அரசியார், பாண்டியநாடு, திருஞானசம்பந்தரை வரவழைத்துத் தமது கணவரையும், பாண்டிய நாட்டையும் சைவமாக்கியவர்.
58. நேச நாயனார்-பங்குனி-ரோகிணி. சாலியர்-கம்பீரநகரம் சிவனடியார்களுக்கு உடையும் கோவணமும் செய்து கொடுக்கும் பணியைச் செய்தவர்.
59. கோச்செங்கட்சோழ நாயனார்:மாசி-சதயம். அரசர் சோழநாடு. எழுபது சிவாலயங்கள் கட்டியவர். முப்பிறவியில் சிலந்தியாகப் பூஜை செய்தவர்.
60. திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்-வைகாசி-மூலம். பாணர், நடுநாடு- திருஎருக்கத்தம்புலியூர், திருஞானசம்பந்தருடன் சென்று, யாழ்த்தொண்டு புரிந்தவர்.
61. சடைய நாயனார்-மார்கழி-திருவாதிரை. ஆதிசைவர், நடுநாடு, திருநாவலூர். சுந்திரமூர்த்தி சுவாமிகளைப் பிள்ளைகளாகப் பெற்றவர். அவருக்குச் சடங்கவி சிவாச்சாரியார் புதல்வியைத் திருமணம் செய்விக்க முயற்சித்தவர்.
62. இசைஞானியர்-சித்திரை-சித்திரை. ஆதிசைவர், நடுநாடு, திருநாவலூர், சுந்திர மூர்த்தி ஸ்வாமிகளைப் பிள்ளையாகப் பெற்று வளர்த்த பெண்மணியார்.
63. சுந்தரமூர்த்தி நாயனார்-ஆடி-சுவாதி. ஆதிசைவர், நடுநாடு-திருநாவலூர். திருத்தொண்டர் தொகைபாடியவர். இறைவனைத் தூது அனுப்பியவர். முதலையுண்ட மகனா வருவித்தவர்.
நன்றி :-http://bsakthivel.blogspot.in

ஆதி சித்தர் ஸ்ரீகாகபுஜண்டரின் அருளாற்றலைப் பெறும் வழிமுறை!!!

சித்தர்களின் தரிசனத்துக்கு ஏங்கித் தவிக்கும் தமிழர்களின் எண்ணிக்கை ஒருபுறம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் தினத்தந்தியில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அகத்தியர் ஜீவநாடி என்ற தொடர் வெளிவந்தது.சென்னையில் வாழ்ந்து வந்த அகத்திய மைந்தன் திரு.ஹனுமத்தாஸன் அவர்கள் தமது கடந்த 30 ஆண்டுகால அகத்திய ஜீவநாடி அனுபவங்களை அதில் தொடர்ந்து எழுதினார்;அதே காலகட்டத்தில் தினத்தந்தியில் இலவச இணைப்புகளில் ஒன்றில் அதிசய சித்தர்கள் என்ற பெயரில் சதுரகிரியில் நிகழ்ந்த சித்தர்கள்+சதாசிவன் சார்ந்த புராண அதிசயங்களையும் தொடராக எழுதினார்;2008க்கும் முன்பாக சக்திவிகடனில் சதுரகிரியின் பெருமைகளை குடந்தை ஸ்யாமா என்பவர் தொடராக எழுதினார்;இவைகளெல்லாம் பூமியில் சித்தர்களின் ஆட்சி துவங்குவதற்கான முன்னோட்ட விழிப்புணர்வு என்றே கூறலாம்.
சித்தர்களின் தலைவர் அகத்தியர் ஆவார்;சித்தர்களில் முதன்மையானவர்கள் 18 பேர்களாக இருந்தாலும்,சித்தர்களின் எண்ணிக்கை சிலபல ஆயிரங்களைத் தொடும்;அஷ்டமாசித்துக்களை தமது மனப் பயிற்சியாலும்,தகுந்த குருவின் வழிகாட்டுதலாலும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தவர்களே சித்தர்கள் ஆவார்.அஷ்டமாசித்துக்களைப் பற்றி அறிய புத்தகங்கள்,வலைப்பூக்கள்,இணையதளங்கள் என்று இருந்தாலும் தகுந்த குரு இல்லாமல் இந்த அஷ்டமாசித்துக்களை அறிய முடியாது;அவ்வாறு அறிய ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வீதம் சுமார் பத்து ஆண்டுகளுக்கு தினமும் சிவமந்திரம் ஜபித்து வர வேண்டும்.அவ்வாறு ஜபித்து வந்தால் தகுந்த குருவாக ஒரு சித்தரே நம்மை ஆட்கொள்வார் என்பது குரு வாக்கு;நாடி ஜோதிடத்தில் கிடைத்த ரகசியமும் ஆகும்.
அகத்தியருக்கும் முற்பட்ட சித்தர் ஒருவர் இருக்கிறார் எனில்,அவரே ஸ்ரீகாகபுஜண்டர் சித்தர் ஆவார்.பல கல்பகோடியுகங்களாக இமயமலையில் வசித்து வந்த இவரை தமிழ்நாட்டுக்கு வர வைத்தவர்கள் சித்தர்களே! இவர் இன்றைய மதுரையை ஒட்டியுள்ள திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் வெகுகாலமாக தவம் செய்திருக்கிறார்;இதனால்,திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் ஏராளமான மகான்களின் ஜீவசமாதிகள் ஆத்மத்துடிப்புடன் இயங்கிவருகின்றன;இன்னும் பல மகான்களின் நடமாட்டம் இன்றும்,என்றும் இருக்கிறது;இவரது அருளால் உயர்ந்த சிவநிலையை எட்டியவர்கள் ஏராளம்.நமக்குத் தெரிந்து என்று பார்த்தால் சூட்டுக்கோல் சுவாமிகளைச் சொல்லலாம்;
இன்றும் திருப்பரங்குன்றம் தியாகராஜ பொறியியல் கல்லூரிக்கு அருகில் சூட்டுக்கோல்மாயாண்டி சுவாமிகளின் ஜீவசமாதி அமைந்திருக்கிறது.இங்கே நேரம் கிடைக்கும் போதெல்லாம் சென்று ஒரு மணி நேரம் வீதம் சிவமந்திரம் ஜபித்து வரலாம்;அவ்வாறு சில வருடங்கள் ஜபித்து வந்தால் சூட்டுக்கோல் மாயாண்டிசுவாமிகளின் நேரடி தரிசனத்தைப் பெறலாம்;சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளின் ஜீவசமாதி ஒரு விநாயகர் சன்னதிக்கு கீழே அமைந்திருக்கிறது;இந்த விநாயகரை ஆதி சித்தர் ஸ்ரீகாகபுஜண்டர் பல யுகங்களாக வழிபட்டு வந்திருக்கிறார்.இந்த இடத்தில் தான் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் பல ஆண்டுகள் தவமிருந்து ஸ்ரீகாகபுஜண்டர் சித்தரின் அருளாசியைப் பெற்றார்.
ஸ்ரீகாக புஜண்டர் சித்தரின் அருளாசியைப் பெற ஒவ்வொரு மாதமும் வரும் ஆயில்யம் நட்சத்திர நாளில் இங்கே வருகை தந்து சூட்டுக்கோல் மாயாண்டுசுவாமிகளின் ஜீவசமாதி அல்லது அவர் பல ஆண்டுகளாக தியானம் செய்த குகையில் ஒரு மணி நேரம் வரை சிவமந்திரம் ஜபித்து வர வேண்டும்.பூர்வ புண்ணியம் உள்ளவர்கள் ஆயில்யம் நிற்கும் நாளில் இங்கே இரவில் தங்கி,தூங்காமல் ஒரு இரவு முழுவதும் சிவமந்திரம் ஜபித்து வரலாம்;இவ்வாறு மாதம் ஒரு நாள் வீதம் விடாமல் ஜபித்துவர அவரவர் பூர்வஜன்ம மனவலிமைப்படி ஸ்ரீகாகபுஜண்டர் சித்தரின் அருளாசி கிட்டும்.ஸ்ரீகாகபுஜண்டர் சித்தரின் அவதார நட்சத்திரமே பங்குனி மாத ஆயில்யம் நட்சத்திரம் ஆகும்.எனவே,அடுத்த ஒரு வருடத்துக்கு ஆயில்ய நட்சத்திரநாட்களை இங்கே பட்டியலிட்டிருக்கிறோம்;முயன்று பார்த்து சித்தராகுக!!!
மதுரையைத் தவிர,தமிழ்நாட்டில் வேறு சில இடங்களில் ஸ்ரீகாகபுஜண்டரின் சித்தவாசம் இருந்திருக்கிறது.அந்த இடங்களிலும் இதே போல முயற்சி செய்து பார்க்கலாம்:
1.சீர்காழி தாலுக்கா கொள்ளிடம் வட்டத்தில் இருக்கும் ஆச்சாள்புரம்.இங்கே திருஞானசம்பந்தருக்கு திருக்கல்யாணம் நடந்திருக்கிறது.இங்கே இன்னும் ஸ்ரீகாகபுஜண்டர் தவம் செய்து வருகிறார்.
2.கடலூர் மாவட்டம் சிதம்பரம் டூ கடலூர் மெயின் ரோட்டில் அமைந்திருக்கும் ஆலப்பாக்கத்தில் ஸ்ரீபுஜண்டலிங்கேஸ்வரர் ஆலயம் இருக்கிறது.இங்கே பலருக்கு ஞான உபதேசம் அளித்திருக்கிறார்.
3.காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி நெடுஞ்சாலையில் மாங்கல் கூட்ரோட்டிலிருந்து புதுப்பாளையம் செல்லும் பாதையில் சோதியம்பாக்கம் இருக்கிறது.இங்கே சிவாகமவிதிப்படி ஸ்ரீகாகபுஜண்டரின் ஆலயம் அமைந்திருக்கிறது.
4.விழுப்புரம் அருகில் சின்னச்சேலம் அருகில் இருக்கும் ஊர் தென்பொன்பரப்பி.இங்கு காகபுஜண்டர் கோவில் இருக்கிறது.ஜீவசமாதியடையாத ஒரே சித்தர் ஸ்ரீகாகபுஜண்டர்தான்!!!
5.நாகப்பட்டிணம் மாநகரத்திலிருந்து சுனாமிப் பாலம் வழியாகச் சென்றால் வருவது கோரக்க சித்தரின் ஜீவசமாதி ஆகும்.இங்கிருந்து வேளாண்கன்னிக்குச் செல்லும் பாதையில் சுமார் ஒரு கி.மீ.தூரத்துக்குப் பயணித்தால் சாலையின் மேற்கே ரயில்வே கேட் தாண்டித் தெரிவது ஸ்ரீபால்மொழி அம்மன்கோவில் ஆகும்.இங்கே ஸ்ரீகாகபுஜண்டர் பல கோடிக்கணக்கான ஆண்டுகளாக(யுகங்களாக) தவம் செய்திருக்கிறார்.இங்கே தான் உலகம்,உயிர்கள்,பிரபஞ்சம் என்று அனைத்தையும் படைத்த ஆதி பரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி என்ற வாலைப்பெண்ணைத் தரிசித்தார் ஸ்ரீகாகபுஜண்டர்.
6.ராஜபாளையத்திலிருந்து தென்காசி செல்லும் சாலையில் 20 கி.மீ.தூரத்தில் அமைந்திருப்பது திருவழுக்குப்பாறை ஆகும்.வனத்துறை அனுமதியோடு மலை மேலே பத்து கி.மீ.தூரம் பயணிக்க வேண்டும்.இங்கே அமுதகலசத்துடன் வாலைத் தெய்வம் அருள்புரிந்து வருகிறார்.இங்கேயும் ஸ்ரீகாகபுஜண்டர் பல காலமாக தவம் செய்திருக்கிறார்.
7.திருப்பரங்குன்றம்மலைக்குப் பெயரே புசுண்டர் மலையே.இங்கே ஏராளமான சித்தர்கள்/துறவிகளின் ஜீவசமாதிகள் அமைந்திருக்கின்றன.இங்கேயும் பல காலமாக ஸ்ரீகாகபுஜண்டர் தவம் செய்திருக்கிறார்.
8.நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் கொல்லிமலையில் அறப்பளீஸ்வரர் திருக்கோவில் இருக்கிறது.இங்கே மனிதகாலடித் தடம் படாத இடங்கள் இருக்கின்றன.இந்த வனத்தினுள் காகபுஜண்டர் குகை இருக்கிறது.(பொழுதுபோக்காகச் செல்ல முயற்சி செய்ய வேண்டாம்;விபரீத விளைவுகள் உண்டாகும்.ஜாக்கிரதை!!)
9.இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் உத்திரகோசமங்கையில் அமைந்திருக்கும் சிவாலயத்தில் ஸ்ரீகாகபுஜண்டர் பலகாலம் தவமிருந்து ஜோதி வடிவாக சிவனுடன் ஐக்கியமாகியிருக்கிறார்.
10.புதுவை மாநிலம் காரைக்கால் அருகில் இருக்கும் திருமலைராயன் பட்டிணத்தில் இருக்கும் ஆயிரங்காளியம்மன் கோவிலில் பல யுகங்களாக ஸ்ரீகாகபுஜண்டர் தவம் செய்திருக்கிறார்.
11.சிவகெங்கை மாவட்டத்தில் இருக்கும் திருப்பத்தூர்.இவ்வூருக்கு அருகில் இருக்கும் வைரவன்பட்டி.பூமி படைக்கப்பட்டதிலிருந்து ஸ்ரீகாலபைரவர் இங்கே ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷணபைரவராக அருள்பாலித்து வருகிறார்.இங்கே தவம் செய்யாத சித்தர்களே கிடையாது.ஸ்ரீகாகபுஜண்டரின் தவ ஆற்றல் இன்னும் இங்கே பரவிக்கிடக்கிறது.
12.அண்ணாமலைக்கு அருகில் காஞ்சி (காஞ்சிபுரம் அல்ல) செல்லும் வழியில் 13 வது கி.மீ.தூரத்தில் அமைந்திருப்பது காகா ஆஸ்ரமம்.ஸ்ரீகொல்லிமலைச் சித்தர் காகபுஜண்டரின் சீடர் தருமலிங்கசுவாமிகளின் ஆசிரமம் இது.இங்கே காகபுஜண்டரின் ஆலயம் மிக அமைதியான சூழலில் அமைந்திருக்கிறது.
13.கோயம்புத்தூரில் இருக்கும் மாஸ்திக்கவுண்டன்பதி என்ற ஊரில் பாலரிஷி ஆஸ்ரமம் அமைந்திருக்கிறது.இங்கே ஸ்ரீகாகபுஜண்டரை உபாசனை செய்யும் பெண் சித்தர் ஸ்ரீவிஸ்வசிராஸினி ஒரு நாளுக்கு 20 மணி நேரம் ஜெபதவத்தில் ஈடுபட்டு வருகிறார்.இங்கே சென்று சிவமந்திரம் ஜபித்து வர,ஸ்ரீகாகபுஜண்டரின் ஆசி கிட்டும்.
14.கோயம்புத்தூருக்கு அருகில் இருக்கும் வெள்ளியங்கிரி மலை ஏராளமான சித்த ரகசியங்களை தன்னுள் வைத்திருக்கிறது.தகுந்த குருவின் துணையோடு தகுந்த இடத்தைத் தேர்ந்தெடுத்து சிவமந்திரம் ஜபிக்க,வெகு விரைவாகவே ஸ்ரீகாகபுஜண்டரின் ஆசி கிட்டும்.
15.சீர்காழி சட்டநாதர் திருக்கோவிலில் அஷ்டபைரவர்கள் வாழ்ந்து வருகிறார்.இங்கே இன்னமும் சூட்சுமமாக ஸ்ரீகாகபுஜண்டர் தவம் செய்து வருகிறார்.
16.நாகநாத சித்தரும்,அவரது சீடர் யோகி குமரகுருவும் நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீகாகபுஜண்டர் சித்தர் ஆலயத்தை கொழும்பில்(இலங்கை) கட்டியுள்ளனர்.தற்போது திரு.குமரகுரு என்பவரின் குடும்பம் அந்தக் கோவிலை நிர்வகித்துவருகிறது.இதோ மேலே இருக்கும் படம் இலங்கையில் இருக்கும் ஸ்ரீகாகபுஜண்டர் சித்தரின் புகைப்படம் ஆகும்.
ஆதாரம்:சற்குரு ஸ்ரீகாகபுசுண்டர்,பெருநூல்காவியம் 1000,மூலமும் உரையும்.எழுதியவர் பாட்டுச்சித்தர் ஓம்சக்தி நாராயணசாமி,ஸ்ரீமனோன்மணி ஞான சித்தர்பீடம்,சீர்காழி.
தொடர்ந்த ஆத்மசாதகம் செய்பவர்கள் மட்டும் இந்த நாட்களில் இரவில் திருப்பரங்குன்றம் மலைப்பகுதி அல்லது பிற மலைப்பகுதியில் இரவில் தங்கி ஜபிக்கலாம்;மற்றவர்கள் பகலில் ஒரு மணி நேரம் மட்டும் ஜபித்துவந்தாலே போதுமானது;
*படங்களில் காணப்படுவது திருப்பரங்குன்றத்தில் காணப்படும் ஜீவசமாதிகள் ஆகும்.தியாகராஜர் பொறியியல் கல்லூரிக்கு அருகில் இவை அனைத்தும் அமைந்திருக்கின்றன.
நன்றி :-http://www.aanmigakkadal.com

குழந்தைக்கு ஞாபகசக்தி அதிகரிக்க ஸ்லோகம் !!!!

படி! படி! என்று அவர்களை எப்போதும் தொந்தரவு செய்யாமல் இருங்கள். சுயமாக யோசிக்கப் பழக்குங்கள். விளையாட்டாகப் பேசும் வழக்கிலேயே பாடங்களை நினைவுபடுத்திக் கொண்டிருங்கள். பிறரோடு ஒப்பிட்டுப் பேசுவதைக் கண்டிப்பாக தவிர்த்து விடுங்கள். அதுவே போதும். அவர்களது தன்னம்பிக்கை வளர்வதற்கு! தினமும் உதய வேளையில் சூரியனைப் பார்த்தவாறு, ""புத்தி வர்த்தக தேவேச திவாகர நமோஸ்துதே'' என்ற மந்திரத்தை 12 முறை சொல்லச் சொல்லுங்கள். ஒவ்வொரு முறை சொல்லி முடித்ததும், சூரியனை நமஸ்காரம் செய்யச் சொல்லுங்கள்.

Friday, August 29, 2014

5 விதமான தோஷங்கள்

5 விதமான தோஷங்கள்
ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் 5 விதமான தோஷங்கள் ஏற்படலாம் என்று ஆதி தமிழர்கள் கணித்து எழுதிவைத்துள்ளனர். ஒருவர் செய்யும் பாவங்கள், தவறுகள் எல்லாம் இந்த 5 வகை தோஷத்துக்குள் வந்து விடுகிறது. அந்த தோஷங்கள் 1.வஞ்சித தோஷம், 2.பந்த தோஷம், 3.கல்பித தோஷம் 4.வந்தூலக தோஷம் 5.ப்ரணகால தோஷம் எனப்படும்.
1.வஞ்சித தோஷம்: பார்க்கக் கூடாத படங்கள், வெறிïட்டும் காட்சிகள் காம சிந்தனைகள் உடலில் சூட்டை உண்டாக்கி, அவை பித்த நாடிகளைப் பாதிக்கச் செய்கிறது. இது உடலில் பல வியாதிகளை உண்டாக்குகிறது. இதற்கு வஞ்சிததோஷம் எனப்பெயர். உடன் பிறந்த சகோதரிகளை வணங்கி அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்ய வேண்டும். சகோதரிகள் இல்லாதவர்கள் ஏழைப் பெண்களுக்குத் தானம் அளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் வஞ்சித தோஷம் விலகிவிடும்.
2.பந்த தோஷம்: நம்மை நம்பி பழகியவர்களுக்குத் துரோகம் செய்வது அல்லது பழிவாங்குதல் பந்த தோஷமாகும். இந்த தோஷத்துக்கு தந்தை, தாய் வழிகளில் உள்ள மாமா, அத்தை, சித்தப்பா, பெரியப்பா ஆகியோருடைய பெண்களுக்குத் தான தர்மங்கள் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் பந்த தோஷம் விலகும்.
3. கல்பித தோஷம்: பிறர் தன்னை விரும்புவதாக எண்ணிக் கொண்டு முறை தவறிப் பழகுதல் கல்பித தோஷமாகும். இத்தகைய தோஷம் ஏற்பட்டால் தன்னை விட வயதில் மூத்த பெண்களுக்குத் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் கல்பித தோஷம் உடனடியாக விலகி விடும்.
4.வந்தூலக தோஷம்: ஒருவர் தன்னைவிட வயது அதிகமுள்ள பெண்ணை திருமணம் செய்தால், அவருக்கு சுவாசக் கோளாறுகள், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படலாம். இவ்வாறு உருவாகும் தோஷத்திற்கு வந்தூலக தோஷம் எனப்படும். வந்தூலக தோஷம் நீங்க வேண்டுமானால் வயதான தம்பதிகளுக்குத் தான தர்மங்கள் செய்ய வேண்டும். வேஷ்டி, புடவை, துண்டு, ரவிக்கைத் துணி ஆகியவற்றைத் தானமாக வழங்க வேண்டும். அறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர்ச் சோலைத் தலத்திற்குச் சென்று முருகனைத் தரிசித்துப் பின் ஏழைத் தம்பதிகளுக்குத் தான தர்மங்கள் செய்ய வேண்டும்.
5. ப்ரணகால தோஷம்: திருமணப் பொருத்தங்கள் பார்க்காமல், பணம், புகழ், அந்தஸ்து, பதவி ஆகியவற்றுக்கு ஆசைப்பட்டு ஒருவர், திருமணம் செய்து கொண்டால், அவருக்கு ப்ரணகால தோஷம் ஏற்படும். இதனால் வாழ்க்கையில் பிடித்தம் இல்லாத நிலை காணப்படும். இந்த தோஷத்தை தவிர்க்க வேண்டுமானால் அனாதை விடுதியியில் உள்ள பெண்களுக்குத் தான தர்மங்கள் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் ப்ரணகால தோஷங்கள் நிவர்த்தியாகும்.

ஒரு மந்திரத்தைக் கொண்டு சித்தி பெறுவது எப்படி?

மந்திரங்களின் சக்தி அதை உருவேற்றுவதில்தான் இருக்கிறது. லட்சக் கணக்கான மந்திரங்களை ஆவ்ருத்தி செய்து நீண்ட காலப் போக்கில் சித்தி பெறுதல் என்பது இக்காலச் சூழ்நிலையில் சாத்தியமற்றதாக இருக்கிறது. ஆகவே, நம் முன்னோர்கள் மந்திரங்கள் சித்தி அடைவதற்கு சுலபமான சில வழிகளையும், தங்கள் அனுபவத்தின் மூலம் விளக்கினர்.
1. எந்த ஒரு மந்திரத்தையும் ஒரே நாளில் சித்தி செய்யலாம். வழிபடுவோரின் ஊக்கமும் தளரா முயற்சியும் இதற்குக் காரணமாகிறது.
சுக்ல பக்ஷம், கிருஷ்ண பக்ஷம் ஆகிய இரண்டு பக்ஷங்களுக்கும் உரிய ஏதாவது ஒரு அஷ்டமி திதியிலோ அல்லது சதுர்த்தசி திதியிலோ சூரியோதயம் தொடங்கி மறுநாள் சூரியோதயம் வரை இடைவிடாது மந்திரத்தை ஜபிப்பதால் மந்திரம் சித்தியாகிறது.
உபாசகன் ஸர்வ ஸித்தீஸ்வரன் ஆகிறான். அதாவது எல்லா ஸித்திகளுக்கும் தலைவன் ஆகிறான். இப்படி ஒரே நாளில், அதாவது 60 நாழிகை நேரத்தில் மந்திர ஸித்தி அடைவதற்கான முயற்சியில் ஈடுபடுபவர் சில ஜபங்களுக்கு உள்ளத்தில் இடம் கொடுக்க உறுதியுள்ளவராக இருக்க வேண்டும். வேறு பல சாஸ்திரங்களிலும் ஆசார முறைகளிலும் கொள்ளப்படும் பிரமாணங்களை செவியில் வாங்கிக் கொண்டு குழப்பமடையக் கூடாது. அறுபது நாழிகை நேரமும் எல்லாக் கர்மங்களும் தான் ஜபிக்கும் ஒரு மந்திரத்தினாலேயே ஆகிறது என்ற நிச்சயம் உடையவராக உபாசகன் இருக்க வேண்டும்.
2. ஒரு மாதத்தில் மந்திர ஸித்தி அடையலாம். ஒரு கிருஷ்ணாஷ்டமி தொடங்கி அடுத்த கிருஷ்ணாஷ்டமி முடிய. நாள் ஒன்றுக்கு 108 முறை நியமத்துடன் ஜபம் செய்வதால் மந்திர ஸித்தி உண்டாகிறது. ஆனால் இங்கு கவனிக்க வேண்டியது ஒன்று மந்திரத்திற்கு முன்னும் பின்னும் மாத்ருகா அக்ஷரங்கள் 51ஐ ஏறு வரிசையிலும் இறங்கு வரிசையிலும் அமைத்து ஜபம் செய்ய வேண்டும். இப்படி மாத்ருகா ஸம்புடிதமாக மந்திரத்தை நாளொன்றுக்கு 108 தடவையாக ஒரு மாதம் ஜபம் செய்ய வேண்டும். கிருஷ்ணாஷ்டமி போல கிருஷ்ண சதுர்தசீ சுக்ல அஷ்டமி, சுக்லி சதுர்தசீ திதிகளும் இந்த ஜப முறைக்கு ஏற்றவையே.
3. மாத்ருகா ஸம்புடீகரணமில்லாமல் ஒரு மாதத்தில் மந்திர ஸித்தியை விரும்புகிறவர், இந்த குறிப்பிட்ட திதிகளில் தொடங்கி குறிப்பிட்ட அடுத்த திதிகளில் முடியுமாறு நாள் ஒன்றுக்கு 1008 முறை மூலமந்திரத்தை மட்டும் ஜபம் செய்தால் வெற்றியடையவது நிச்சயம்.
4. மாத்ருகா அக்ஷரங்களில் பூதலிபி வரிசை என்று ஒரு முறை உள்ளது. அவ்வரிசைப்படி மூல மந்திரத்திற்கு முன்னும் பின்னும் ஒவ்வொரு எழுத்தைக் கூட்டி நாள் ஒன்றுக்கு 1008 முறை ஜபம் செய்தால் மந்திர ஸித்தி நிச்சயம்.
5. ரிக்வேதப்ராதி சாக்யத்தில் 63 எழுத்துகள் கொண்ட ஒரு அரிச்சுவடி இருக்கிறது. அதிலுள்ள 63 எழுத்துகளை ஏறுஇறங்கு வரிசைகளில் மந்திரத்தின் முன்னும் பின்னும் முறையே கூட்டி நாள் ஒன்றுக்கு 108 முறை மூலமந்திரம் செய்வதாலும் மந்திர ஸித்தி நிச்சயம்.
6. கிருஷ்ணாஷ்டமி தொடங்கி கிருஷ்ண சதுர்த்தசீ வரை உள்ள ஏழே நாட்களில் மொத்தம் கூட்டி 40,000 எண்ணிக்கை வரும்படி மந்திர ஜபம் செய்ய வேண்டும். இந்த ஏழு நாள் ஜபமுறையில் தசாம்சக் கணக்கில் ஹோமம் முதலானவைகளும் செய்ய வேண்டும். இந்த ஜபம் நாள் ஒன்றுக்கு 5714 ஆகும். கடைசி நாள் 5716 ஆகும். அந்தந்த நாளில் ஹோமம் தசாம்ச கணக்கில் செய்ய வேண்டும்.
7. சூர்ய சந்திர கிரஹண காலம் பூராவும் ஒரு மந்திரத்தை ஜபம் செய்வதால் அம்மந்திரம் ஸித்தியாகிறது.
8. ஒவ்வொரு இரவு (இரவு முழுவதும்) சர்வ உபசாரங்களுடன் மூன்று முறை நவாவரண பூஜையை ஒரு மாத காலம் செய்வதால் மந்திர ஸித்தி ஏற்படுகிறது.
9. மாத்ருகா அக்ஷரங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மூலிகையாக பிரபஞ்சசாரம் கூறுகிறது. தான் ஸித்தி செய்ய வேண்டிய மந்திரத்தில் உள்ள எழுத்துக்களுக்குரிய மூலிகைகளை எல்லாம் கூட்டிப் பொடி செய்து குளிகைகளாகச் செய்து கொண்டு அவற்றை ஜபம் செய்யும் போது வாயில் அடக்கிக் கொண்டிருப்பதால் மந்திரம் எளிதில் ஸித்தியாகிறது.
10. மகாபாதுகையை தனது ஸகஸ்ரார சக்ரத்தில் தியானம் பண்ணுவதால் மந்திரம் ஸித்தியாகிறது. மஹாபாதுகைக்குள் மந்திரம் அடக்கியிருப்பதாலும் மஹாபாதுகைக்கு மேம்பட்ட வேறு மந்திரமே இல்லாததாலும் மகா பாதுகா தியானத்தால் அடைய முடியாதது ஒன்றில்லை.
11. ஆத்ம ஸ்வரூபத்தைப் பற்றி பரோக்ஷ ஞானம் திருடமாகக் கைவரப்பெற்றவன். மந்திரத்திற்கு முந்தியும், பிந்தியும் சிவோஹம் என்ற பாவனையுடன் மந்திர ஜபம் செய்வதால் மந்திரம் எளிதில் ஸித்தியாகிறது.
12. அஹம் ப்ரஹ்மாஸ்மி அல்லது ஈம் என்ற பரா காமகலா அக்ஷரத்தையோ முன்னும் பின்னும் மந்திரத்தில் கூட்டி ஜபம் செய்வதால் ஸகல ஸித்திகளும் கிடைக்கின்றன.
ஜபத்திற்குரிய இடங்கள்
ஜபம் எங்கு எப்படிச் செய்யவேண்டும் என்று கீதையில் 6வது அத்தியாயத்தில் 11 - 13 ஸ்லோகங்களில் கூறப்பட்டுள்ளது.
சுத்தமான இடத்தில் தர்ப்பாசனத்தில் அல்லது மான்தோல் அல்லது வஸ்திரம் இவை மீது அமர்ந்து மனதை ஒருமுகப்படுத்தி இந்திரியங்களின் செயல்களை அடக்கி நிமிர்ந்து உட்கார்ந்து மூக்கின் நுனியைப் பார்த்த வண்ணம் ஜபம் செய்யவேண்டும்.
பூஜை அறை, பசுக்கொட்டில், நதிதீரம், கடற்கரை, ஆசிரமம், ஆலயம், தீபமுகம் இவைகள் ஜபம் செய்ய சிறந்த இடம்.
கிழக்கு நோக்கி ஜபம் செய்தால் வியாதி நீங்கும். தெற்கு நோக்கி ஜபம் செய்தால் வசியம் சித்திக்கும். அக்னி மூலை (தென்கிழக்கு) நோக்கி ஜபம் செய்தால் கடன் தீரும். மேற்கு நோக்கி ஜபம் செய்தால் பகை தீரும். ஈசானமாகிய வடகிழக்கு நோக்கி ஜபம் செய்தால் மோக்ஷம் சித்திக்கும். கிழக்கும், வடக்கும், நிஷ்காமியமானது.
சுகாஸனம் இருந்து ஜபம் செய்வது கிருஹஸ்தர்களுக்கு ஏற்றது. பத்ராஸனம், முக்தாஸனம், மயூராஸனம், ஸித்தாஸனம், பத்மாஸனம், ஸ்வஸ்திகாஸனம், வீராஸனம், கோமுகாஸனம், சுகாஸனம் என்ற ஒன்பது நிலைகளிலிருந்தும் ஜபம் செய்யலாம். பழக்கப் படாதவர்கள் கஷ்டமான ஆசனங்களைத் தவிர்ப்பது நல்லது.
கருங்கல் மீதிருந்து ஜபம் செய்தால் வியாதி; வெறும் தரையில் ஜபம் செய்தால் துக்கம்; மான் தோல் மீது ஜபம் செய்தால் ஞானம்; புலித்தோல் மீது ஜபம் செய்தால் மோக்ஷம்; வஸ்திரம் ஆஸனம் மீது ஜபம் செய்தால் வியாதி நிவர்த்தி, (வெள்ளை வஸ்திரம் சாந்தி; சிவப்பு வஸ்திரம் வசியம்) கம்பளம் மீது ஜபம் செய்தால் சகல சௌக்யம் உண்டாகும்.
நன்றி : தினமலர்