Friday, October 24, 2014

அரவிந்தர் எனும் ஆன்மிகப் புரட்சியாளர் !!!

துச்சேரி என்றதும் பளிச்சென்று நினைவுக்கு வருவது மகான் ஸ்ரீஅரவிந்தர் ஆசிரமம்தான். இந்த அமைதிப் பூங்காவில் ஆன்மிக நெஞ்சங்கள் தியானத்தில் ஆழ்ந்து ஸ்ரீஅரவிந்தரின் அருளாசிக்குப் பாத்திரமாகி வருவது பல்லாண்டுகள் கடந்த நடைமுறைதான். 1926ம் ஆண்டு, நவம்பர் மாதம் 24ம் தேதி தொடங்கப்பட்ட இந்த ஆசிரமம் இன்றளவும் ஸ்ரீஅரவிந்தரின் கோட்பாடுகளை ஒட்டியே அவற்றை இன்னும் மேம்படுத்தும் உத்வேகத்தோடு செயல்பட்டு வருகிறது. ஸ்ரீஅரவிந்தர் யார்? இந்திய விடுதலைக்கு 45 ஆண்டுகளுக்கு முன் ஆகஸ்ட் 15ம் தேதி கல்கத்தாவில் அவதரித்தார் அரவிந்தர்.
டாக்டர் கிருஷ்ண தனகோஷ்-ஸ்வர்ணலதா தம்பதியரின் மூன்றாவது பிள்ளை. அவருடைய இயற்பெயர் அரவிந்த அக்ராய்ட் கோஷ். அரவிந்தரின் ஆரம்பப் பள்ளிப் படிப்பு அவருடைய இல்லத்தில்தான் தொடங்கியது. ஆங்கிலேய மோகம் கொண்டு, ஆத்திகத்தையும், இந்து மத சம்பிரதாயங்களையும் வெறுத்த தந்தையார் தன் மகனுக்கு ஆங்கில மொழி மூலமாகவே அனைத்துப் பாடங்களையும் கற்பிக்கச் செய்தார். தாய்மொழியான வங்காளத்தை அரவிந்தர் அறிந்தார் இல்லை. அதுமட்டுமன்றி அவருடைய ஏழாவது வயதிலேயே கல்வி கற்க தன் மூத்த இரண்டு மகன்களுடன் இங்கிலாந்துக்கு அனுப்பி வைத்தார் கிருஷ்ண தனகோஷ்.
இங்கிலாந்து படிப்பு அரவிந்தருக்கு இந்திய ஆன்மிகக் கருத்துகளை எடுத்துச் சொல்லவில்லை. ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களின் ஒரு வரி கூட அவர் அறிந்திருக்கவில்லை. ஆனால், இங்கிலாந்தில் படித்த காலத்தில் இந்தியா அடிமைப்பட்டுக் கிடந்ததைக் கண்டு கொதித்தவர் அரவிந்தர். இந்தியர்களுக்கு ஆதரவாக ‘தாமரையும், குத்துவாளும்’ என்ற பெயரில் ஒரு ரகசிய புரட்சி இயக்கம் செயல்பட்டுக் கொண்டிருந்தது. அந்த இயக்கத்தோடு தொடர்பு கொண்டிருந்தார் அரவிந்தர். இந்தியா அடிமைப்பட்டு அல்லலுறுவதை அவரால் சகித்துக் கொள்ள முடியவில்லை.
அதனாலேயே மிகவும் கௌரவமான ஐ.ஸி.எஸ். கல்வியில் வெற்றி பெற்றாலும், இறுதியான குதிரை சவாரி தேர்வில் வேண்டுமென்றே பங்கேற்காமல், தேர்ச்சி பெறாமல் இருந்துவிட்டார். அப்படித் தேர்ச்சி பெற்று, பதவியும் பெற்றுவிட்டால் தாமும் ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்ட பணியாளாக, தாய்நாட்டு சகோதர, சகோதரிகளுக்கு எதிராகச் செயல்படுபவராக மாற வேண்டியிருக்குமே என்ற குற்ற உணர்வால் ஐ.ஸி.எஸ். தேர்வு பெறவில்லை அவர். இந்தியாவுக்குத் திரும்பி, தந்தையாரின் பலத்த எதிர்ப்புகளுக்கிடையே விடுதலை வேள்வியில் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக்கொண்டார் அரவிந்தர்.
தேசிய உணர்வு கொண்ட புரட்சி இளைஞர்கள் தம் வழிகாட்டியாக அவரைப் போற்றி, பின்பற்றி வந்தார்கள். அப்போது பீகார் மாநிலத்தின், முசாவிக் மாவட்ட நீதிபதி கின்க்ஸ்போரட் மீது வெடிகுண்டை வீசியதாக ஒரு வழக்குப் பதிவாகி விசாரணை நடந்துகொண்டிருந்தது. குண்டு வீச்சு சம்பவத்தில் கோச் வண்டியில் பயணம் செய்த திருமதி பிரிங்கில் கென்னடியும் அவரது மகனும் இறந்துவிட, ஆங்கிலேய அரசு சட்ட அதிகாரத்தை முடுக்கிவிட்டது. இளைஞர்களின் எழுச்சிக் கனலாகத் திகழ்ந்த அரவிந்தர் மீது சந்தேகப்பட்டது போலீஸ்.
அதையடுத்து அரவிந்தர் கைது செய்யப்பட்டார். இதற்கிடையில் தன்னுடைய கட்டுரைகள், சொற்பொழிவுகள் மூலமாக இந்தியாவிலும், வெளிநாட்டிலும் ஆயிரக்கணக்கான அபிமானிகளைப் பெற்றிருந்தார் அரவிந்தர். அவர்கள் அனைவருமே அவருடைய விடுதலைக்காகப் பிரார்த்தனை செய்தார்கள். அந்த உள்ளார்ந்த உணர்வுகளுக்குப் பலனில்லாமல் போகவில்லை. அரவிந்தர் நிரபராதி என்று தீர்ப்புக் கூறப்பட்டு விடுவிக்கப்பட்டார். ஆனால், வழக்கு நடந்த ஓராண்டு காலத்தில் அலிப்பூர் சிறையில்தான் ‘ஆசிரம வாசம்’ செய்ததாகவே அவர் குறிப்பிட்டார்.
‘என்னுள் குடிகொண்டுவிட்ட ஸ்ரீகிருஷ்ணனை நேரில் தரிசிக்க, அவனைச் சென்றடைய, நான் வெகுநாட்கள் இடையறாது முயற்சித்தேன். ஆனால், நடப்புலக பற்றுகள் என்னை அவனிடம் அண்டவிடாது செய்துவிட்டன. இதற்கு என்னுள் மண்டியிருந்த அஞ்ஞான இருளும் காரணமாக இருக்கும். ஆனால், பிரிட்டிஷாருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். அவர்களுடைய நெருக்குதல் காரணமாக நான் கடவுளிடம் நெருங்கினேனே, அது என் பாக்கியம்தான்’ என்று குறிப்பிடுகிறார் அரவிந்தர். அந்த ஆன்மிக அனுபவத்தில் விவேகானந்தரையும் ஆவிரூபமாக தான் தரிசித்ததாகவும் சொல்கிறார்.
சிறையிலிருந்து விடுதலையான பிறகு இந்து மத நன்னூல்கள் பலவற்றையும் அவர் படித்து ஆனந்தித்தார். தன்னை இந்துமதக் கோட்பாடுகள் நெகிழ வைத்ததையும் தனக்குள்ளிருந்து இறைவன் அடிக்கடி பேசுவதையும் அவரால் பரிபூரணமாக உணரமுடிந்தது. சிறை வாழ்க்கைக்குப் பிறகு அரவிந்தர் ‘கர்மயோகி’ என்ற ஓர் ஆங்கில வார இதழைப் பிரசுரித்தார். தேசியம், மதம், இலக்கியம், அறிவியல் துறைகளில் உழைப்பதே கர்மயோகி யின் தலையாய கடமை என்று அறிவித்தார். ஆங்கிலேய அரசு அவர் மீது தனிப் பார்வை செலுத்தியது.
கடுமையான அந்தப் பார்வையிலிருந்து தப்ப அவர் தன் நண்பர்களின் உதவியுடன் பிரெஞ்சு ஆதிக்கத்திற்குட்பட்டிருந்த பாண்டிச்சேரிக்கு வந்தார். பாண்டிச்சேரியில்தான் பிரெஞ்சுக்காரரான பால் ரிச்சர்டு மற்றும் அவரது மனைவியார் மிர்ரா இருவரும் அரவிந்தரைச் சந்தித்து ஆன்மிக வழிதேடலில் ஈடுபட்டார்கள். மிர்ரா, ஸ்ரீஅரவிந்தரைத் தன் ஞான குருவாக ஏற்றுக்கொண்டு அவர் வழியிலேயே ஆன்மிக சிந்தனைகளும் நடவடிக்கைகளும் மேற்கொண்டார். இவரே, பின்னால் ஸ்ரீஅன்னை என்று வணங்கப் பெறும் லோக மாதாவாகத் திகழ்ந்தார்.
அரவிந்தரும் அவருடைய நண்பர்களும் அன்றாடத் தேவைகளுக்கான செலவை சரிகட்ட பெரிதும் துன்பப்பட்டனர். உணவு, உடை, இருப்பிடம் போன்ற அடிப்படைத் தேவைகளில் கூடப் பற்றாக்குறை இருந்து வந்தது. இதற்கிடையில் ஆங்கிலேய அரசு அவரை எப்படியாவது பிடித்துத் தன் யதேச்சாதிகாரத்துக்குக் கீழே கொண்டுவரப் பெரிதும் துடித்தது. அவருக்குப் பல வகைகளில் ஆசை காட்டியது. ஆனால், தன்னுடைய ஆன்மிக சிந்தனை, சேவைக்கு பாண்டிச்சேரியே உகந்த இடம் என்று அவர் தீர்மானித்தார். தான் அங்கே தங்கியிருப்பதை பகிரங்கமாக அனைவருக்கும் பத்திரிகை வாயிலாகத் தெரிவித்தார்.
தான் மறைந்து வாழவில்லை என்பதைத் தெளிவுபடுத்தினார். அலிபூர் சிறையில் இருந்தபோது யோகப் பயிற்சியை மேற்கொண்ட அவர், புதுப்பொலிவு பெற்றதை உடனிருந்த கைதிகள் ஆச்சர்யமாக கவனித்தார்கள். எடை குறைந்தாலும் அவர் முகத்திலும், உடலிலும் தேஜஸ் கூடியிருந்தது. அதற்குக் காரணம் என்ன என்று சக கைதிகள் கேட்டபோது வெறும் மௌனத்தையே அவர் பதிலாகத் தந்தார். இருபத்தெட்டு வயது நிரம்பிய பிராயத்தில் பதினான்கு வயதான மிருணாளினியை அரவிந்தர் மணந்து கொண்டார்.
ஆனால், அவரது அரசியல் ஈடுபாடு, தொடர்ந்து சிறைவாசம், ஆங்கிலேயப் பார்வையி லிருந்து தப்ப பாண்டிச்சேரி வாசம் என்று அவருடைய பிரிவால் தனித்து விடப்பட்டார் மிருணாளினி. ஆனால், பல கடிதங்கள் எழுதி மனைவியையும் ஆன்மிக நெறிக்கு உட்படுத்தினார் அரவிந்தர். தன் முப்பத்திரண்டாவது வயதில் இவ்வுலகை நீத்த மிருணாளினி யின் பெயரில் கல்கத்தா வேலூர் மடத்தை நிர்வகிக்கும் ஸ்ரீராமகிருஷ்ண மடம், ஒரு அறக்கட்டளையை நிறுவியது, இன்றும் அந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.
மனைவியின் இறுதிச் சடங்கில்கூட கலந்துகொள்ளாத வகையில் அரவிந்தரின் மனம் பக்குவப்பட்டிருந்தது. 1926ம் ஆண்டு, நவம்பர் 24ம் நாள், 25 சீடர்களுடன் அரவிந்தர் ஆசிரமம் தொடங்கப்பட்டது. இந்த ஆசிரமத்தை நிர்வகிக்கும் பொறுப்பை ஸ்ரீஅன்னை என்று போற்றப்படும் மிர்ரா மேற்கொண்டார். ஆசிரமம் தொடங்கப்பட்டு 24 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீஅரவிந்தர் 1950ம் ஆண்டு, நவம்பர் 26ம் தேதி மகாசமாதி அடைந்தார். ஆசிரம வளாகத்துக்குள்ளேயே ஆன்மிக அன்பர்களின் தரிசனத்துக்காகவும், அவர்கள் தியானம் புரியவும் அவருடைய சமாதி அழகுற அமைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீஅரவிந்தரின் இன்னொரு உருவமாகத் துலங்கி, ஆன்மிக ஒளியாகத் திகழ்ந்த ஸ்ரீஅன்னையின் திருவுடலும், அவரது மறைவுக்குப் பிறகு (17.11.1973) ஸ்ரீஅரவிந்தரின் சமாதியோடு சேர்த்து அடக்கம் செய்யப்பட்டது. ஸ்ரீஅரவிந்தரின் சமாதியில் வணங்கித் துதிப்பவர்கள் அவரது அருளோடு கூட ஸ்ரீஅன்னையின் அருளுக்கும் பாத்திரமாகிறார்கள்.
- சுபஹேமா

கருப்பண்ணசாமி வழிபாடு!

மக்களுக்கும் சகல ஜீவராசிகளுக்கும் எல்லா ஊர்களுக்கும் காவல் தெய்வமாகத் திகழ்பவர் கருப்பசாமி. அவரின் தோற்றம் பற்றிக் கூறுவது இதுவரை கேள்விப்பட்டிராத தகவலாக இருக்கக்கூடும்!
வால்மீகி, தர்பையைக் கிள்ளிப்போட்டு அதற்கு உயிர் கொடுக்க, அதுவே கருப்பண்ண சாமியானது என்பது, ராமாயணத் தகவல், தர்ப்பையில் பிறந்த கருப்பசாமி குறித்த பாடல் வரி, இதற்குச் சான்று பகரும். ஸ்ரீவீரபத்திரருக்கும் சண்டிக்கும் பிறந்த குழந்தை கருப்பசாமி என்றும் சொல்வார்கள். கருப்பன், கருப்பசாமி எனும் பெயர் கொண்ட மனிதர்களின் தலை வெட்டப்பட்ட புதைக்கப்பட்ட இடத்தில். கருப்பசாமி கோயில் ஏற்பட்டது என்றொரு ஆய்வுத் தகவலும் உண்டு. நின்ற கோலம், அமர்ந்த கோலம், குதிரையின் மீதேறி புறப்படும் கோலம்.... இப்படி பல்வேறு நிலைகளில் பல கோயில்களில் காட்சி தருகிறார் கருப்பசாமி. கம்பீர உருவம் தலைப்பாகை, இடையில் கச்சை, மிரட்டும் விழிகள், முறுக்கிய மீசை மற்றும் கையில் அரிவாளுடன் கோயில்கொண்டிருப்பார். பெரும்பாலும் கையில் சுக்குமாந்தடியுடன் அவர் அருள்வதை தரிசிக்கலாம். கருப்பசாமியின் மனைவி கருப்பழகி(கருப்பாயி); மகன்- கண்டன்; அண்ணன்-முத்தண்ண கருப்பசாமி; தம்பி- இளைய கருப்பு; தங்கை-ராக்காயி.
ஐயன் ஐயப்பனும் கருப்பரும்
ஸ்ரீஐயப்பனுக்கும் கருப்பசாமிக்குமான தொடர்பை, ராங்கியம் கருப்பர் திருத்தாண்டகத் தின் முதல் பாடல் சொல்கிறது.
மலையாளத் துரையானை என்னுள்ளத்தில்
வந்தானைக் கண்டடியேன் வணங்கி வேண்டினேனே!
என்கிறது அந்தப் பாடல் வரி.
கத்தப்பட்டு அருள்மிகு சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் தொட்டியத்து கருப்பையா போற்றிப் பாடலின் இரு வரிகள்....
மலையாள நாட்டில் மலர்ந்தாய் போற்றி
மக்கள் போற்றிடும் மன்னவா போற்றி.. எனப் போற்றுகின்றன!
பெரும்பாலான ஐயப்ப பக்தர்கள் மெய்சிலிர்த்துப் பாடும் பாடல்களிலும் கருப்பசாமி வருவார்!
பிறந்தாய் மலையாளம் கருப்பன் பேருகொண்டாய் கீழ்நாடு
வளர்ந்தாய் மலையாளம் கருப்பன் வந்துதித்தாய் கீழ்நாடு
எனத் துவங்கி கருப்பரைப் போற்றுகிறது, மொட்டையக்கோனார் என்பவர் எழுதிய... பதினெட்டாம்படிக் கருப்பன் உற்பத்தி வர்ணிப்பு பாடல்!
ஸ்ரீதச மகாவித்யா எனும் நூலாசிரியர் திருவெண்காடு ஏ.கே.முத்துசாமி சாஸ்திரிகள். மகா காளன் என்ற கருப்பண்ண சுவாமி, பூதநாதனாகிய மகா சாஸ்தாவின் அன்புக்குரிய கணநாதன். சாஸ்தாவின் ஆணையை சிரமேற்கொண்டு, அவரது எண்ணங்களைப் பூர்த்தி செய்பவர் என்கிறார்.
பதினெட்டாம்படி கருப்பர்
சபரிமலை ஐயனுக்குத் துணையாகத் திகழ்கிறார் கருப்பசாமி என்ற தகவல் புõரணங்களில் உண்டு. சுவாமி ஐயப்பன், மகிஷியை வதம் செய்யப் புறப்பட்ட போது சிவபெருமான் தனது அம்சமாகிய கருப்பசாமியை அழைத்து ஐயப்பன் சிறு வயதினன். அவனது படைக்கு நீ சேனாதிபதியாக இருந்து, அவன் வெற்றிபெற உதவி செய் எனக் கட்டளை இட்டாராம். அவ்வாறே ஐயன் ஐயப்பனின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த கருப்பசாமி, சபரிமலையில் 18 ஆம் படியின் அருகே வலப்புறத்தில், பதினெட்டாம்படி கருப்பராக சன்னதி கொண்டிருக்கிறார், முந்திரி நைவேத்தியமும் கற்பூர வழிபாடும் இவருக்கு விசேஷம் ஐயனைத் தரிசிக்கச் செல்பவர்கள் கன்னிமூல கணபதியை வழிபட்டு, வாவர் மற்றும் கருப்பசாமியிடம் அனுமதி பெற்றுவிட்டே, 18 ஆம் படிகளில் ஏறுவார்கள். சரி சாஸ்தாவின் சித்தத்தை ஆணையை நிறைவேற்றும் இவரை சித்தங்காத்தான், பீடாபஹன் என்றெல்லாம் போற்றுவர்.
காவல் தெய்வம் கருப்பண்ண சாமி!
கண்கண்ட தெய்வமாம் கருப்பர் பூஜைக்குச் சுத்தமான நபர்களையே அனுமதிக்க வேண்டும். பூஜையில் அமர்ந்ததும் திருவிளக்கு ஏற்றி வைக்க வேண்டும். பிறகு சங்கல்பம்; நாள் நட்சத்திரம், திதி, யோகம், பெயர், கோத்திரம் ஆகியவற்றைச் சொல்லி வணங்குவதுடன், எந்தக் காரியத்துக்காக பூஜை செய்கிறோமோ, அதைச் சிந்தித்துப் பூஜையைத் தொடங்க வேண்டும், முன்னதாக சற்குருவை நமஸ்கரிப்பது அவசியம். கருப்பசாமி தெய்வத்தை புஷ்பங்களால் அர்ச்சிக்கலாம், ஓம் நமோ பகவதே ஸ்ரீஏகமுக கருப்பசாமியே நமஹ எனக் கூறி வழிபடலாம் நிறைவாக நைவேத்திய சமர்ப்பணம்.
இங்கு ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும் ஸ்ரீமந் நாராயணனும் சிவபெருமானும் பரம்பொருள். சுத்த தெய்வம். சம்ஹார ஆகாரங்கள் வைத்து பூஜிக்கவே கூடாது. மது-மாமிசம் அனைத்தும் காமியார்த்தத்தில் உள்ளவை. துன்பம் கொடுப்பவை. உதாரணமாக ஓர் ஆட்டையோ, மாட்டையோ, கோழியையோ வெட்டினால் அந்த உடலிலிருந்து உயிர் பிரிகிறது. எந்த அளவுக்கு துன்பப்பட்டு அந்த ஜீவன் பிரிகிறதோ, அதைப் போன்று இரண்டு அல்லது மூன்று மடங்கு துன்பம் கொலை செய்தவனுக்கு வந்து சேரும். இதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. கருப்பணசாமிக்கு உகந்த படையல் பொருட்கள்-சர்க்கரைப் பொங்கல், அவல், பொரிகடலை, மாம்பழம், வாழை, பலா, கொய்யாப் பழம் மற்றும் இளநீர் ஆகியவற்றை சமர்ப்பிக்கலாம். கீழ்க்கண்ட தியான ஸ்லோகத்தைக் கூறி கருப்பசாமியை மனதார தரிசிக்கலாம்.
தியான ஸ்லோகம்
த்விபுஜம் பீன க்ருஷ்ணாங்கம் பப்ருச்மச்ரு சிரோருஹம்
கதாம் கட்கம்ச பிப்ராணம் மஹாகாலம் வயம் நும:
http://temple.dinamalar.com/

"அய்யாவழி"

தென்தமிழகத்தில் நாகர்கோயிலிலிரிருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் வழியில் பச்சை பசேலாக காட்சி தரும் செழிப்பான பகுதியில் சாமிதோப்பு என்னும் அழகிய கிராமம். இந்திய அளவில் அவ்வளவாக பேசப்பாடாத இந்த ஊர் இந்துமதத்தின் வர்ணாஸ்ரம சாதிக்கொடுமைகளுக்கு எதிராக தனிக்களத்தை அமைத்த "அய்யாவழியின்" முக்கிய பதியாக இருக்கிறது. அய்யாவழியினர் கூடும் இந்த இடங்கள் கோவில் என அழைக்கப்படுவதில்லை; மாறாக 'பதி', 'நிழல்தாங்கல்' என அழைக்கப்படுகிறது.
திருவிதாங்கூர் மன்னர்களால் கன்னியாகுமரி மாவட்டம் ஆட்சி செய்யப்பட்டு வந்தது. இந்த பகுதியில் சாணார், பரவர், மூக்குவர், என 18 வகை சாதி மக்கள் ஆதிக்க சாதியினரால் மனிதனை விட கேவலமாக நடத்தப்பட்டனர். பட்டன், தம்புரான், தம்பி, நம்பூதிரி, பிள்ளைமார், நாயர் (மேனன்), பிராமணர் என பல பல ஆதிக்கசாதியினர் திருவிதாங்கூர் மன்னனின் அதிகாரத்தை பயன்படுத்தி கொடுமைகளை மக்கள் மீது நடத்தினர். மன்னன் செல்லுகிற பகுதிகளில் ஆதிக்கசாதியினரை சார்ந்த பெண்கள் சிலரது வீடு 'அம்ம வீடு' என அறியப்பட்டது. இந்த 'அம்ம வீடு', 'உள்ளிருப்பு வீடு' களில் தான் மன்னன் ஓய்வெடுப்பது வழக்கம். கைமாறாக அந்த பகுதி நிலங்கள், வருவாய் துறை, நிர்வாகம் இவர்களது 'ஆதிக்கத்தில்' இருந்தது. மன்னனுக்கும் பார்ப்பனீயத்திற்குமான தொடர்பு இந்த உறவு முறைகளில் இருந்ததை பயன்படுத்தி ஆதிக்கசாதியினர் குறுநிலமன்னர்கள் போல தீர்ப்பு, தண்டனை வழங்குதல் என தொடர்ந்தனர்.
1809ல் பொன்னுநாடார், வெயியேலாள் தம்பதியினருக்கு கன்னியாகுமரி மாவட்டம், சாமிதோப்பில் ஒரு குழந்தை பிறந்தது. அன்றைய சமுதாயத்தில் தாழ்த்தப்பட்டவர்களாக கருதப்பட்ட சாணார் சாதியை சார்ந்தவர்கள் அவர்கள். அந்த சிறுவனுக்கு பெற்றோர் இட்ட பெயர் முடிசூடும் பெருமாள். "திருமுடியுடன் விஷ்ணு" என்னும் பொருள் படும் இந்த பெயரை கீழ்சாதி சாணார் குடும்பம் சூட்டியதும் பார்ப்பனீய ஆதிக்கசாதியினர் கடுமையாக எதிர்த்தனர். பெற்றோர் அந்த பெயரை முத்துகுட்டி என மாற்றினர். தாழ்த்தப்பட்ட குழந்தைக்கு பார்ப்பனீய தெய்வத்தின் பெயரை கூட சூட்ட அனுமதிக்காத இந்துத்துவ சாதிவெறியின் மத்தியில் பிறந்த இந்த குழந்தை தான் வளர்ந்து "அய்யா வைகுண்டர்" ஆகி, சாதி எதிர்ப்பை ஆயுதமாக எடுக்குமென்பது அன்றைய ஆதிக்கசாதியினருக்கு தெரியவில்லை. 17 வயதில் தனது வீட்டிற்கு அருகேயுள்ள புவியூர் என்னும் ஊரை சார்ந்த திருமாலம்மாள் என்பவரை மணந்தார் முத்துகுட்டி. இதுபற்றி திருமாலம்மாளை அவர் திருமணம் செய்யவில்லை, அவருக்கு பணிவிடை செய்ய வாழ வந்தார் என மாறுபட்ட தகவலும் உள்ளது. திருமாலம்மாள் ஏற்கனவே திருமணாமனவர், முத்துகுட்டியை திருமணம் செய்ய கணவனை விட்டு வெளியேறினார் என்ற தகவலும் காணப்படுகிறது.
அய்யாவழியினரின் நூல் 'அகிலம்', 'அகிலத்திரட்டு அம்மானை' அல்லது 'அகிலதிரட்டு' என அழைக்கப்படுகிறது. அகிலத்தின் படி திருமலையம்மாளுக்கு முதல் திருமணத்தின் வழி ஒரு ஆண்குழந்தை இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முத்துகுட்டி பனையேறுதல், விவசாய கூலி வேலை வழி தனது வருமானத்தை தேடிக்கொண்டார். சாதாரண மக்களில் ஒருவராக காணப்பட்ட இவர் உருவாக்கிய வழிமுறை 'அய்யாவழி' என அழைக்கப்படுகிறது. இது ஒரு தனிமதம் என்கிறார் இன்று அய்யாவழியின் தலைமை பதியை நிர்வகித்து வருகிற பாலபிரஜாதிபதி அடிகளார் (அய்யாவின் வாழ்க்கை பற்றி தனிப்பதிவில் பார்க்கலாம்).
அய்யா தனது வழியினருக்கு வகுத்த விதிமுறைகள்
பூசை செய்யக்கூடாது.
பூசாரி வைத்துக்கொள்ளக்கூடாது
யாகம், ஹோமம் கூடாது
மாயை உங்களை ஆளாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
எந்த தேர்த்திருவிழாக்களும் கூடாது.
எந்த வழிபாடும் கூடாது
ஆரத்தி எடுப்பதும், ஏற்பதும் கூடாது
காணிக்கை பெறுவதும், கொடுப்பதும் கூடாது
மாலையிடுதல் கூடாது
யாரையும் உங்கள் காலில் விழ விடாதீர்கள்
லஞ்சத்தை ஏற்காதீர்கள்
ஆசைகளை துறந்துவிடுங்கள்.
உண்மையாக இருங்கள்
இவை அனைத்தும் அய்யா தனது வழியை பின்பற்றும் மக்களுக்கு கொடுத்த ஒழுங்குமுறைகள். இதன் வழி அய்யாவழி தனியொரு மதமாகவே இருப்பதை காணலாம்.
அய்யாவழியின் முறைகள் மற்றும் இறையியல்:
"கலியென்பது எலியல்ல, கணையாழி வேண்டாமே" என கலி பற்றியும் அதை அணுகும் முறை பற்றியும் அகிலம் கூறுகிறது.
கலி (தீமை) என்பது எலி போன்ற உருவ அமைப்பு உடையதல்ல. அதனால் ஆயுதம் வேண்டாம். அன்பை அடிப்படையாக வைத்து ஆயுதமே கூடாது என மக்களுக்கு அன்பு போதனையை உருவாக்கியது தான் அய்யாவின் வழி.
"இந்த நாள் முதல், உங்களது நம்பிக்கையை வைகுண்டம் மீது மட்டும் வையுங்கள், வேறு எதற்கும் அச்சம் கொள்ளாதீர்கள். கோயில்களுக்கு காணிக்கை கொடுக்காதீர், நீங்கள் கடுமையாக உழைத்து சேர்த்த பணத்தை உண்டியலில் போடாதீர், உங்களது செல்வத்தை உங்களுக்காகவே வைத்துக்கொள்ளுங்கள்" என்கிறது அகிலத்திரட்டு.
அச்சம் தவிர்த்து நிமிர்ந்து நில்
"அய்யாவழி" இந்துமதத்திலிருந்து முற்றிலும் எதிர்பாதையை மக்களுக்கு காட்டுகிறது. தாங்களை உயர்த்திக்கொண்ட சாதியினரின் ஆதிக்கத்தால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ""இந்த நாள் முதல், உங்களது நம்பிக்கையை வைகுண்டம் மீது மட்டும் வையுங்கள், வேறு எதற்கும் அச்சம் கொள்ளாதீர்கள்." என அய்யா சொன்னது இந்துமத வர்ணாஸ்ரம மனுதர்மத்தையும், அதன் வேதங்களையும் புறக்கணித்து புதிய பாதையை மக்களுக்கு தந்தது. கொடுமையான பார்ப்பனீய சட்டத்தை உடைத்து மக்களுக்கு தன்னம்பிக்கை கொடுத்தது அய்யாவின் வழி. விடுதலைக்கான பாதைக்கு முதல் நிலை அச்சம் தவிர்ப்பது; அய்யாவழி அதை செய்தது.
தன்மானமும், சுயமரியாதையும்
"நீங்கள் தன்மானத்தோடும், சுயமரியாதையுடனும் வாழ்ந்தால் கலி (தீமை/கொடுமைகள்) தானாகவே அழியும்" என அகிலத்திரட்டில் அடிக்கடி வலியுறுத்தப்பட்டுள்ளது. மனிதனை சுயமரியாதையுடனும், தன்மானத்துடனும் அடிமையற்ற நிலையில் நிமிர்ந்து நடக்க வைப்பது அய்யாவின் முக்கிய பணியாக அமைந்துள்ளது. அகிலத்திரட்டில் இதை பல பகுதிகளில் காணலாம்.
இந்துமதம் கீழ்சாதி என தீட்டாக வைத்திருந்து ஆடை அணிந்துகொள்ள கூட வரிவிதித்த காலத்தில்; ஆண்கள் தலையில் தலைப்பாகை அணியவும், பெண்கள் தோழ்ச்சீலை அணியவும் வழியை உருவாக்கி மக்களுக்கு அடிமைத்தனத்திலிருந்து விடுதலையை உருவாக்கியது. இந்த அடையாளங்கள் "மனிதனாக பிறந்த எவனும் எவனுக்கு முன்னும் அடிமையில்லை" என்ற சுயமரியாதையை ஒடுக்கப்பட்ட மக்கள் மனதில் விதைத்தது. மனித மாண்பை உன்னதமாக மக்களுக்கு எளிய வழியில் இந்த முறைகள் உணர்த்தின.
சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக
அய்யாவழியை சாதி ஒடுக்குமுறையை கடைபிடிக்காத ஒரு லட்சிய சமுதாயத்தை உருவாக்கும் நோக்கத்தை கொண்டது. சாதிகளற்ற, ஒரே குடும்பமாக வாழ்ந்த பண்டைய சமுதாயத்தைப் பற்றி அகிலத்திரட்டில் சொல்லப்பட்டுள்ளது. சாதியை உருவாக்கியவர்களை 'கலிநீசன்' என கடுமையாக சாடுகிறார் அய்யா. "18 சாதிகளையும், தீயசக்திகளையும் மலைகளிலும், தீயிலும், கடலிலிலும் எறிந்துவிடுங்கள்", "பலமுள்ளவர்கள், பலமிழந்தவர்கள் மத்தியில் அடக்குமுறைகள் கூடாது", "சாதி தானாகவே அழியும்" என பல இடங்களில் சாதி அமைப்பை பற்றி அகிலத்திரட்டில் சொல்லப்பட்டுள்ளது.
அரச(அரசியல்) அடக்குமுறைக்கு எதிராக:
திருவிதாங்கூர் மன்னனை 'கலிநீசன்' எனவும், ஆங்கிலேயர்களை 'வெண்நீசன்' எனவும் அகிலத்திரட்டில் சொல்லப்பட்டுள்ளது. கலிநீசனை பிரதான அடக்குமுறையாளனாகவும், அவனே மக்களின் உழைப்பை சுரண்டும் ஊழியம், வரிகள், சாதி அடக்குமுறைகளை கட்டிக்காப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது. அய்யா வைகுண்டர் "மன்னனின் ஆட்சியை அகற்றி விட்டு நாட்டை ஒரே குடையின் கீழ் ஆளப்போவதாக" அகிலத்திரட்டில் பல இடங்களில் சொல்லப்பட்டுள்ளது. இது அன்றைய திருவிதாங்கூர் மன்னனின் சாதி அடக்குமுறைக்கு எதிராக எழுந்த குரலாக காணலாம். அய்யா வைகுண்டர் மீது மன்னனின் ஆட்சியை கவிழ்க்க திட்டமிடுவதாக குற்றம் சாட்டப்பட்டது. இதன் வழி எங்கெல்லாம் அரச அதிகாரம் மக்களை அடக்குகிறதோ அங்கே மக்களுக்கு அரச அடக்குமுறையை எதிர்க்க மன உறுதியை அய்யாவழி தருகிறது.
பொருளாதார அடிமைத்தனத்திற்கு எதிராக
உழைக்கும் மக்களை சுரண்டுவதையும், ஏமாற்றி பிழைப்பதையும் அய்யாவழியில் கடுமையாக கண்டிக்கப்படுகிறது. உழைக்கும் மக்களுக்கு எதிராக இருந்த உழைப்பு அடிப்படையிலான அடக்குமுறைகளை எதிர்த்து 3 முழு பக்கங்கள் அகிலத்திரட்டில் கண்டிக்கப்பட்டுள்ளது. நிலம், விவசாயம் மற்றும் பிற வகைகளில் வாங்கப்பட்ட கொடுமையான வரிகளை எதிர்க்கிறது அகிலத்திரட்டு. "மக்களின் உழைப்பையும், செல்வத்தையும் வரி என்ற பெயரில் வசூலிக்கிற கொடுமையான நீசன்" என மன்னனை அகிலத்திரட்டு குறிப்பிடுகிறது. "யார் உழைத்து வருமானம் சேர்க்கிறார்களோ அவர்களே அதை அனுபவிக்கட்டும்; வேறு யாருக்கும் அதை அனுபவிக்க அதிகாரமில்லை", "எந்த வரியும் இனிமேல் கொடுக்க அவசியமில்லை" என்கிறது அகிலத்திரட்டு. அந்த காலகட்டத்தில் சாணார் சாதி மக்கள் பனையேற பயன்படுத்தும் மிருக்குத்தடி என்கிற துணைக்கருவிக்கு கூட வரி கட்டவேண்டியது இருந்தது என்பதை இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும்.
பூசை, காணிக்கை, யாகங்களுக்கு எதிராக
அய்யாவழி பூசை, சிலைவழிபாடு, பேய்வழிபாடு, பலியிடுதல், காணிக்கை செலுத்துதல், யாகம் முதலியவற்றை நடத்தக்கூடாது. இவைகளினால் எந்த பலனும் இல்லை. மக்களின் உழைப்பை யாரோ பூசாரிகள் அனுபவிக்க கொடுக்ககூடாது என அய்யா மக்களுக்கு அறிவுறுத்தினார்.
பூசாரிகளுக்கு கண்டனம்
"வேத பிராமணர்களுக்கு தொல்லை தர நாம் வந்தோம்", "பூணூல் அணிபவர்கள் இந்த பூமியில் இனிமேல் இருக்கமாட்டார்கள்" என புரோகிதர்களை கண்டிக்கிறார் அய்யா. ஸ்ரீரங்கம், திருச்செந்தூர் போன்ற இடங்களில் பிராமணர்கள் கடைபிடித்து வரும் மனிதத்தன்மையற்ற செயல்களை அய்யா கண்டித்தார். அய்யாவழி மக்களுக்கு பூசாரி எதுவும் வைத்துக்கொள்ளக்கூடாது என்ற கட்டளை பிறப்பித்தார்.
விக்கிரக வழிபாட்டை மறுத்தல்
மூடப்பழக்கத்தையும், வெற்று சடங்குகளையும் வளர்த்து மக்களை அறிவில்லாதவர்களாகவும், அறியாமையிலும் வைத்து தாங்கள் எல்லாவற்றையும் அனுபவிக்க பூசாரிகளுக்கு உதவியாக இருக்கும் விக்கிரக வழிபாட்டை அய்யா மறுத்தார். தனது வழியை பின்பற்றுபவர்கள் விக்கிரகங்களை வழிபடுவதை எதிர்க்கவும், மறுக்கவும் கட்டாயமாக்கினார்.
அய்யா வழிமுறை
அய்யாவழி முறையில் கண்ணாடி வைத்து இருபக்கமும் இரண்டு குத்துவிளக்குகள் வைத்திருக்கப்படும். அய்யாவழியினர் அந்த கண்ணாடியை பார்த்து தான் வணக்கம் செலுத்துவர். "மனிதன் ஒவ்வொருவருக்குள்ளும் தெய்வம் இருக்கிறது" என்ற உயரிய கோட்பாட்டை கண்ணாடி முன் நின்று வணங்கும் ஒவ்வொருவரும் தனக்குள்ளே காண அய்யா வழிவகை செய்தார்.
அய்யாவழியினர் கூடி "அகிலத்திரட்டு" வாசித்து ஒன்றாக கலந்து வணக்கம் செலுத்தும் இடங்களின் பெயர் 'பதி' அல்லது 'தாங்கல்' என அழைக்கப்படுகிறது. சாமிதோப்பில் அமைந்துள்ள பதியின் கிணற்றில் அனைத்து சாதியினரும் சேர்ந்து குளிக்க, அதே கிணற்று தண்ணியை எடுத்து சமைத்து சேர்ந்து உணவருந்த என சாதிபேதமற்ற வழிமுறையை உருவாக்கினார்.
ஆண்பெண் சமஉரிமை:
அய்யாவழியினரின் பதிகளிலும், தாங்கல்களிலும் ஆணும், பெண்ணும் சமம். இருபாலருக்கும் பதியினுள் சென்று வணக்கம் செலுத்தல், ஏடுவாசித்தல் என எதற்கும் தடையில்லை. ஏராளமான தாங்கல்கள் பெண்களாலே நடத்தப்படுகின்றன.
அய்யாவழியில் கணவன் இறந்தால் பெண்ணுக்கு மறுமணம் செய்துகொள்ள உரிமையுண்டு.
அய்யாவழி ஒரு தனிமதம்:
கலி பற்றிய விடயத்திலும், அதை எதிர்கொள்ளுவதிலும் அய்யாவழி மற்ற இந்துமதத்திலிருந்து முரணானது. கலியை (தீமையை) அழிக்க ஆயுதங்கள் தாங்கி கடவுள்கள் அவதரிக்கும் இந்துமதத்திலிருந்து வேறுபட்ட பார்வையை அணுகுமுறை வழியாக அய்யாவழி மதம் உருவாக்கியது.
இந்துமதம் தனது நம்பிக்கையை வர்ணாஸ்ரம சாதி அடித்தளத்திலிருந்து கட்டி பரவலாக்கி வைத்திருக்கிறது. அது கோயில்கள் பிரதான இடங்களாகவும், கடவுள் வழிபாடு, காணிக்கை, வழிபாடு, யாகம், விக்கிரகம், அபிசேகங்கள், யாகம், பூசாரி என அதன் ஆதாரங்களாக விளங்குகிறது. பெண்ணுக்கு இந்துமத கோவில்களில் வழிபாட்டில் உரிமையில்லை.
அய்யாவழி ஆரிய இந்துமதத்திலிருந்து எதிரான திசையில் மக்களை ஒன்று திரட்டியது. அய்யாவழியை தனிமதமாக பதிய இந்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையையும் சாதகமாக செய்யவில்லை. மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது அய்யாவழி மக்களை இந்துமதம் என கணக்கில் சேர்க்கும் மோசடி கடந்த காலங்கள் தொட்டு நடந்து வருகிறது. அய்யாவழியினர் தங்களை தனிமதமாக அடையாளம் காணவே விரும்புகின்றனர்.
சமீபகாலங்களாக இந்துமதத்தில் ஒரு பிரிவு தான் அய்யாவழி என பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார்கள். இந்துமதத்தின்(வைணவ) சாதி ஆதிக்கத்திற்கு எதிராக எழுந்த புதிய சமயங்களையும், வழிபாடுகளையும் (புத்தம், சமணம், நாட்டார் வழக்கியல் வழிபாடுகள், வள்ளலாரின் வழி, அய்யாவழி...) இந்துத்துவவாதிகள் ஒரே குடையின் கீழ் இந்து என முழக்கமிடுவது அனைவருக்கும் தெரிந்ததே. ஆதிக்க எண்ணமுடைய சில வலைப்பதிவாளர்களும் இந்த முயற்சியை தொடர்ந்து செய்து வருகின்றனர். அய்யாவழியைப் பற்றி பரப்புகிற பொய்யான புழுகு வரலாற்றை எதிர்ப்பதும், உண்மையை பதிவு செய்வதும் மட்டுமே இந்த பதிவின் நோக்கம்.
எப்படி ஒரு கையின் விரல்கள் பல வடிவங்களில் பன்முக தன்மையுடன் இருக்கிறதோ அதுபோல பன்முக சமயங்கள் அதன் கூறுகளோடும், காலத்திற்கேற்ற மறுமலர்ச்சியுடனும் எதிர்கால தலைமுறைக்கும் எடுத்து செல்லப்பட வேண்டும். இந்துத்துவம் என்கிற புளியமர நிழலில் அழிந்துபோகும் அழகிய ரோஜாசெடியாக நமது பண்பாடு ஆபத்தை சந்திக்கிறது. இந்த முறை பண்பாட்டை அழிப்பவர்கள் இந்துத்துவவாதிகள். அவர்களது எழுத்துக்கள் பொய்யையும் உண்மையாக நம்ப வைக்கும் கலையில் கைத்தேர்ந்தது. விழிப்பாக இருப்போம்.
http://www.thiruvalluvar.in/

செவ்வாய்க்கிழமை விரதத்தால் கிடைக்கும் பலன்கள்!!!

நவக்கிரகங்களில் செவ்வாயோடு நேரடி சம்பந்தம் உடையவன் முருகன். எனவே செவ்வாய்க்கிழமை விரதம் முருகனுக்கு மிகவும் உகந்ததாகிறது. அதிலும் ஆடிச் செவ்வாய் கிழமைகள் மிக மிக உயர்ந்தது. வீட்டில் இந்த விரதமிருக்கலாம் என்றாலும் வீட்டை விட செவ்வாய் சம்பந்தம் உடைய முருகன் தலங்களுக்குச் சென்று அங்கு இரவு தங்கி 1 நாள் விரதம் இருந்து அத்தலத்தில் உள்ள முருகன் சன்னதியில் அபிஷேக ஆராதனைகள் செய்து திருமுருகனை பூஜித்தால் பலன்கள் அதிகம்.
செவ்வாய்க்கிழமை சூரியன் உதிக்கும் முன்பு எழுந்து, நீராடி விநாயகரை நினைத்து துதிசெய்து வணங்க வேண்டும். பின்பு ஸ்ரீ பஞ்சாட்ச மந்திரத்தை 108 முறை ஜெபித்து சிவத்தியானம் செய்தல் வேண்டும். அதன் பிறகு சூரியனைப் பார்த்து ஓம் சிவசூரியாய நம என்று கூறி நமஸ்காரம் செய்ய வேண்டும். அதைத்தொடர்ந்து பரமசிவன், பார்வதி, முருகனை மனத்துக்குள் வணங்கி 108 அல்லது 1008 முறை ஜெபம் செய்து 100 கிராம் மிளகினை ஒரு புதுத்துணியில் முடிந்து ஓம் வைத்தியலிங்கார்ப்பணம் என்று கூறி ஓரிடத்தில் அதை வைத்து சிவனடியார் ஒருவரை வீட்டிற்கழைத்து, உபசரித்தல் நல்லது.
அமுது படைத்து தாம்பூலம் தட்சனை கொடுத்து பின்பு சுத்தமாக பச்சரிசி, பாசிப்பருப்பு, நெய், மிளகு, சீரகம் சேர்த்த உப்பில்லாப் பொங்கல் பொங்கி சுவாமிக்கு நிவேதனம் செய்து அப்பிரசாதத்தை அரை வயிறு மட்டும் உண்டு. அன்று மாலை சிவாலய தரிசனம் செய்து சிவத்தியானத்துடன் திரும்பி வந்து சிவபுராணம் அல்லது கந்தபுராணம் படிக்கக் கேட்டு பின்பு ஏதும் உண்ணாமலே இரவு பாய் தலையணை இன்றி வெறும் தரையில் கம்பளம் விரித்துப்படுத்துறங்க வேண்டும்.
இதுவே செவ்வாய் விரதம் அனுஷ்டிக்கும் முறையாகும். நவக்கிரகங்கள் எனும் ஓன்பது கோள்களில் ஒன்று அங்காரகன் எனும் செவ்வாய் கிரகம்.
அரத்தன், அழல், அழலோன், அறிவன், ஆரல், உதிரன், குருதி, குஜன், சேய், செந்தீவண்ணன், மங்களன், வக்கிரன், எனப் பற்பல பெயர்கள் செவ்வாய்க்கு உண்டு. இந்த செவ்வாய்க்கும் ஸ்ரீமுருகப்பெருமானுக்கும் மிக நெருங்கிய தொடர்புகள் உண்டு. செவ்வாய்க்கும் முருகனுக்கும் மட்டுமல்ல, செவ்வாய்க்கும் பூமிக்கும் கூட தொடர்புகள் உண்டு. செவ்வாய்க்கும் பூமிக்கும், பூமிக்கும் முருகனுக்கும், செவ்வாய்க்கும் முருகனுக்கும் தொடர்புள்ளதால்தான் பூமியில் நாம் செவ்வாயின் அம்சமாக முருகனை வழிபடுகிறோம். இந்த காரணத்தால்தான் செவ்வாய்க்கிழமை முருகனை வழிபடவும், விரதமிருக்கவும் ஏற்றதொரு புனித நாளாக இருக்கிறது.
ஆடி செவ்வாய் கிழமைகளில் வீட்டின் வாசலில் கோலமிட்டு, பூஜையறையில் குத்துவிளக்கேற்றி ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம் மற்றும் பல அம்மன் பாடல்களை பாடுவது மிகவும் நல்லது. பால் பாயாசம், சர்க்கரை பொங்கல் போன்றவற்றை நிவே தனம் செய்வார்கள். பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து, உணவளித்து, அவர்களுக்கு ரவிக்கை, தாம்பூலம், வளையல், குங்குமச் சிமிழ், சீப்பு, கண்ணாடி, மருதாணி, மஞ்சள் போன்றவற்றை கொடுத்து சிறப்பிக்க தேவியின் அருள் கிடைக்கும். ஆடி செவ்வாயன்று தலை குளித்து அம்மனை வழிபட திருமாங்கல்ய பாக்கியம் கிடைக்கும்.
இதுதவிர ஆடி செவ்வாயில் மேற்கொள்ளும் நோன்பு குறிப்பிடத்தக்கது. இந்த நோன்பை கடைபிடிப்பதால் விரைவில் திருமணம் நடக்கும். மழலைச் செல்வம் இல்லாதவர்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கும்.
http://www.dinakaran.com/

Thursday, October 23, 2014

இதை தான் கடவுள் விரும்புகிறாரா?

நாத்திக செருப்புகளை கழற்றி விடு!
பகுத்தறிவுவாதிகள் என தங்களை தாங்களே அழைத்து கொள்ளும் நாத்திக வாதிகள் ஆலயம் சென்று இறைவனை தொழுவதும் நெஞ்சம் உருக வேண்டுதல் செய்வதும் முட்டாள் தனமான காரியம் என சொல்கிறார்கள்
இன்னும் மறைக்காமல் உண்மையை உடைத்து சொன்னால் கடவுளை வணங்கும் அனைவருமே காட்டு மிராண்டிகள் என்பது அவர்களின் வாதம்
மொட்டை அடிப்பது, அலகு குத்துவது, சதையில் குத்தி தேர் இழுப்பது என்பது எல்லாம் மூடத்தனமானது. பகுத்தறிவு அற்றது என்று பலர் சொல்கிறார்கள்.
உண்மையில் இப்படி சொல்வது தான் பகுத்தறிவு இல்லாதது ஆகும்.
மனித உடலுக்கு அழகு தருவதில் மிக முக்கியமானது தலைக்கேசமாகும். கிளியோபாட்ரா கூட மொட்டை தலையாக இருந்தால் எவனும் சீண்ட மாட்டான்.
அழகு கொடுக்கின்ற முடியை முண்டகம் செய்வது என்றால் அதற்கொரு மன துணிச்சல் வேண்டும்.
கொசு கடிப்பதையே நம்மால் தாங்க முடிவதில்லை. ஆனால் உடலெங்கும் ஊசி குத்துவதையும் பெரிய கம்பியால் சதையை குத்துவதையும் ஒருவன் தாங்கி கொள்கிறான் என்றால் அதற்கு எத்தகைய மனத்துணிச்சல் வேண்டும்?
இதை தான் கடவுள் விரும்புகிறாரா? என்று சுலபமாக கேட்டு விடலாம்
பதில் என்னவோ ஆம் அதையும் தாங்கும் மன பக்குவத்தை தான் கடவுள் வளர்க்க சொல்கிறார் என்பதாகும்.
நாத்திகவாதம் பகுத்தறிவு என்பதெல்லாம் இந்த சமுதாயத்திற்கு செய்துள்ளதை விட பல மடங்கு சேவைகளை பக்தி மார்க்கம் செய்துள்ளது.
கடவுளை நம்புகிறவர்கள் அனைவருமே முட்டாள்கள் என நாத்திகன் நினைக்கிறான். இது அவனது ஆணவத்தின் வெளிபாடு.
பக்திமான் யாரையும் முட்டாள் என நினைப்பது இல்லை. கடவுள் படைப்பில் எல்லாவற்றிலுமே சக்தி இருக்கிறது என அவன் நம்புகிறான்.
அதனால் தான் நாத்திகர்களை விட ஆத்திகர்கள் அதிக சக்தி வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள்
ராமாயணத்தை போல பகவத் கீதையை போல் ஏன் பைபிள், கூர்-ஆனை போல் அழிக்க முடியாத கருத்து பெட்டகத்தை எந்த நாத்திகவாதியாலும் இன்று வரை படைக்க முடியவில்லை.
அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்கிய விஞ்ஞானிகள் எல்லோருமே நாத்திகர்கள் அல்ல
பக்திமான் என்று சொல்லி கொள்கிறவர்களை விட அதிக பக்திமான்கள் இந்த விஞ்ஞானிகள்
அயல்நாட்டு உதாரணங்கள் கூட வேண்டாம். நம் உள்ளூர் உதாரணங்களே ஏராளமாகயிருக்கிறது.
கவியரசு கண்ணதாசனால் நாத்திகவாதியாக இருந்த வரையில் எந்த உருப்படியான படைப்புகளையும் தர முடியவில்லை.
நாத்திக செருப்புகளை கழற்றி விட்டு ஆத்திக சிறகுகளை பொருத்தி கொண்ட பிறகு தான் இலக்கிய வானில் ராஜாளி பறவை போல் பறக்க முடிந்தது.
நம்முடைய பிரம்மாண்டமான கோவில்களிலும் அவற்றில் காணப்படும் கலையழகு கொப்பளிக்கும் சிற்பங்களும் நாத்திகவாதம் தந்த கொடையல்ல. ஆன்மிகமாகும்.
வலது கன்னத்தில் அறைந்தால் இடது கன்னத்தை காட்டு என சொன்னது பொருள் முதல்வாதியான லெனின் அல்ல. மெய்பொருள் வாதியான இயேசு கிறிஸ்துவே யாகும்.
ஆட்சி அதிகாரம் கையில் இருந்தாலும் அரண்மனையில் வாழாமல் குடிசையில் வாழ்ந்தது மாசேதுங் அல்ல, முகமது நபியே ஆகும்.
பொன்னும் மண்ணும் ஒன்று தான் என வாழ்ந்தது இங்கர்சால் அல்ல. ராமகிருஷ்ண பரமஹம்சரே ஆகும்.
எனவே ஆன்மிகம் அறிவை மழுங்கடிக்கும் போதை பொருள் அல்ல.
எல்லாவற்றின் மேலும் அன்பு செலுத்த கற்று கொடுக்கும் மெய்பொருள் பாதையாகும்.
பொய்யை மெய்யாக காட்டுவது தான் நாத்திகமும் பகுத்தறிவு வாதமும் ஆகும்.

http://jayasekarjai.blogspot.in/

பரம்பொருள்...

மலையுச்சி என்பதுன் தலையுச்சி தானப்பா !! சித்தர்.
ஒன்றில் இருந்து மற்றொன்றில் இல்லாமல் போனால் அதை எப்படி பூரணம் என்று சொல்ல முடியும் ? பரம் பொருள் எல்லாவற்றிலும் நீக்கமற நிரம்பியிருக்கிறார் என்பது உண்மையானால், அவர் கல்லிலும் இருப்பார், புல்லிலுமிருப்பார். பிறகு ஏன் அவர் நட்ட கல்லில் இல்லை என்று சொல்கிறார்கள் ? கறியைத் தன்னகத்து கொண்டிருக்கின்ற சட்டிக்கு அதன் சுவை தெரியுமா ? அது போல கல்லுக்கு தனக்குள் இருக்கும் பரமனைத் தெரியாது. அப்படியானால், அதைத் தெரிந்து கொள்வது எது ? என்றால், அது மனிதனின் அறிவு மட்டுமே. உலகில் வேறு எதுவும் தான் பரமனின் அம்சம் என்பதை உணராது. எனவே இத்தகைய மகத்துவம் பொருந்திய மனத்தை உடைய மனிதன் தன்னுள்ளும் பரமன் இருக்கிறான் என்று உணராமல் வீணே புற விஷயங்களில் தன் மனதை உழலச் செய்து தனது சக்திகள் அனைத்தையும் விரையம் செய்கிறானே, என்ற ஆதங்கத்தில் அப்படிச் சொன்னார்களே தவிர அவர்களுக்கும் தெரியும் கல்லுக்குள்ளும் கடவுள் இருக்கிறார் என்று. நெறியைப் பற்றிக் கொண்டே இருக்காதே, குறியை நோக்கி முன்னேறு என்பது கோட்பாடு. ஏறிய பின் ஏணியை அங்கேயே விட்டு விட வேண்டும். பின்னால் வருபவர்கள் ஏறுவார்கள். அதைத் தூக்கி நம் தலையில் வைத்துக் கொண்டு அலையக் கூடாது என்பதே சொல்ல வரும் கருத்து.
மனதின் மகத்துவத்தை உணர்த்துவதற்காக சில பாடல்கள் அப்படித் தெறித்து விழுகின்றன. நமக்கு ஐம்புலன்கள் இருக்கின்றன. கண் பார்க்கிறது. காது கேட்கிறது. மூக்கு முகர்கின்றது. நாக்கு சுவையை உணர்த்துகிறது. தோலில் தொடு உணர்வு உள்ளது. ஆனால், இவை அனைத்தும் இயங்கினாலும் மனம் என்ற ஒன்று இல்லை என்றால் அந்த உணர்வுகள் நம் அறிவுக்குப் புலப்படுமா ? புலப்படாது. இவ்வாறு இவை அனைத்தின் மூலமாகவும் உலகை அறிவது மனமே ஆகும். மனம் புலன்கள் மீது தன் கவனத்தை செலுத்தா விட்டால் காதில் ஒலி கேட்டாலும் கேட்காத நிலை ஏற்பட்டு விடுகிறது. கண் பார்த்தாலும் பார்க்காதது போன்ற நிலை ஏற்படுகிறது. எனவே எல்லா இயக்கங்களுக்கும், அவற்றை உணர்வதற்கும் காரணமாக இருப்பது மனமேயாகும். அப்படி நமக்குள் மனமாகவும், பிரபஞ்ச வெளியில் பிரபஞ்ச மனமாகவும் விளங்குவது பரம்பொருளே. தத்துவங்களாக விரிந்த நிலையில் பல்வேறு ஆற்றல்களாகச், சக்திகளாகப் பிரிந்து நின்று இயங்கும், பரம்பொருள் ஒடுக்க நிலையில் அனைத்தையும் தன்னகத்தே ஒடுக்கிய பேராற்றல் களமாகத் திகழ்கிறார். இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், மனம் இயங்குவது விரிவுபட்ட நிலை. மனம் இயங்கவில்லை என்றால் அதுவே ஒடுக்க நிலை. எனவேதான் மனதற்ற நிலையை வேண்டித் தவமியற்றுகிறார்கள். மனதை புற விசயங்களில் ஈடுபடுத்திக் கொண்டேயிருந்தால் அது எண்ணங்களாக விருத்தியாகிக் கொண்டேயிருக்கும். அதை உள்முகமாகச் செலுத்தி, அதன் பிறப்பிடத்தை நோக்கி கொண்டு செல்லும் பொழுது, அதன் விருத்திகள் அனைத்தும் ஒடுங்கி, ஒடுக்க நிலையான பரம்பொருள் நிலையை அடைகின்றது.
எனவே வார்த்தைகளில் தேங்கி நிற்காமல், அதன் உட்பொருளைத் தேடும் பொழுது, ஒருநாளில்லை ஒரு நாள் உண்மைப் பொருள் அறிவில் விளங்க வரும். சிவசக்தி தத்துவ உணர்வே ஞானம். அதைப் பழமாக உருவகப்படுத்தினார்கள். முருகன் தன் ஆற்றலின் மூலம் அடைய நினைக்கிறார். வினாயகர் தன் அறிவின் மூலம் அடைகிறார். இதன் உட்கருத்து வெற்றி, தோல்வியைக் குறிப்பதல்ல. எவர் எவ்வழி சென்றாலும் ஞானத்தின் மூலமாகவே மெய்ப் பொருளை உணரவோ, அடையவோ முடியும் என்பதே. உடனே முருகன் கோவித்துக் கொண்டு, கோவணம் உடுத்தி, தண்டம் கொண்டு மலை உச்சியில் போய் அமர்ந்து கொண்டார் என்பார்கள். கோவணம் உடுத்தி என்பது பற்றுகளைக் களைவதைக் குறிப்பது. ஆறு முகம் என்கிற ஆறு அறிவினையும் அடக்கி தலை உச்சியில் மனதை வைத்து நிலைத்து நிற்பதையே மலை உச்சியாகச் சொன்னார்கள். வேல் கீழே விரிவு பட்ட மனம் மேலே இலக்கை நோக்கி குவிகின்ற நிலையைக் குறிப்பது. தண்டம் என்பது முதுகுத் தண்டாகிய சுழுமுனை நாடியைக் குறிப்பது. ஆறு அறிவால் தான் பெற்ற ஆற்றல்களையெல்லாம் ஒடுக்கி மனதைத் தலை உச்சிக்குக் கொண்டு செல்லும் பொழுது குண்டலினியாகிய சக்தி மேலேறி வருவாள் மெய்ப் பொருளை விளக்கிடுவாள். இதையே சக்தியாகிய உமையவள் வந்து முருகனுக்கு பரம்பொருளின் திருவிளையாடல்களை விளக்கியதாகச் சொல்வார்கள். ஒவ்வொரு புராணங்களுக்குள்ளும் எவ்வளவோ நுட்பங்கள் மறைந்திருக்கின்றன.
உபநிடதங்களாகட்டும், இதிகாசங்களாகட்டும், புராணங்களாகட்டும், சித்தர்கள் பாடல்களாகட்டும், தேவாரம், திருவாசகம், திருப்புகழ், திருக்குறளாகட்டும் இவை அனைத்துமே மனிதன் பரம்பொருளை அடைவதைக் குறித்து சொல்லப்பட்ட நுட்பங்களே தவிர வேறொன்றுமில்லை.

பட்டினத்தார் நக்கலாகப் பாடுகிறார்

இருப்பதுபொய் போவதுமெய்
யென்றெண்ணி நெஞ்சே !
ஒருத்தருக்குந் தீங்கினை
யுன்னாதே - பருத்ததொந்தி
நம்மதென்று நாமிருப்ப
நாய்நரிகள் பேய்கழுகு
தம்மதென்று தாமிருக்குந்தான் !
பட்டினத்தாரின் பாடல் இது. இந்த உயிர் வாழ்க்கை என்பது கனவைப் போன்று பொய்யானதாக இருக்கின்றது. தோன்றுவதும் தெரியாது, கலைவதுவும் தெரியாது, விழிக்கும் போது(அடுத்த பிறப்பு) மறந்தும் போகும். ஆனால் ஒன்று மட்டும் உண்மையாக இருக்கிறது. எந்த நேரத்திலும் இந்த உலகை விட்டு போய் விடுவோம் என்று கண்ணுக்கும் கருத்துக்கும் தெரிகிறது என்பதே அது. இப்படி நிச்சயமற்ற நிலையில் வாழும் மனிதனோ தான் ஏதோ ஆயிரம் ஆண்டுகள் வாழப் போவது போல எண்ணி இறுமாந்து , தன் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள எத்தனையோ பேருக்கு தீங்கிழைக்கிறான், வஞ்சித்து ஏமாற்றுகிறான், அடுத்துக் கெடுக்கிறான். இவ்வாறு பிறருக்குத் தீங்கிழைத்து பெருஞ் செல்வத்தைக் குவிக்கும் மனிதனின் நிலை என்ன ?
எல்லாவற்றையும் விட்டுவிட்டு வெறும் கையனாக, தன்னந்தனியாக பரலோகம் போய்விடுகிறான். இதைத்தான் பட்டினத்தார் நக்கலாகப் பாடுகிறார். தனது பருத்த தொந்தி மேலும் பருக்க வேண்டும் என்ற பேராசையினால் பிறருக்கு தீங்கிழைக்கும் மனிதனே, நீ இந்தத் தொந்தி உனக்கே சொந்தம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறாயா ? அடப் பைத்தியக்காரா அங்கே நாய்களும், நரிகளும், கழுகுகளும், பேய்களும் இந்தத் தொந்தி எங்களுக்கே சொந்தம் என்று காத்துக் கொண்டிருப்பதை நீ அறியாமலிருக்கிறாய் என்கிறார்.
எந்த ஒரு உயிரினத்துக்கு யார் தீங்கிழைத்தாலும், அது அந்த உயிரினத்துக்கு மட்டுமல்ல, இறைவனுக்கே செய்யும் தீங்காகும். உலக ஜீவராசிகள் அனைத்திலும் இறைவன் குடி கொண்டிருக்கிறான் என்பதே நம் தேசத்தின் ஆன்மிகத் தத்துவம். இதையே அனைத்து சமயங்களும் வலியுறுத்துகின்றன. இந்த சமநோக்கு மனப்பான்மை மனிதனிடம் வளர ஆன்மிகம் மட்டுமே சிறந்த வழியாகும். மற்ற எந்த உபாயமும்யில்லை என்றே சொல்லலாம்.
சக மனிதனோ, பிராணியோ நமக்குத் துன்பம் தந்தால், அது நம்முடைய செயலின் பிரதிபலிப்புகளே என்று நாம் உணர வேண்டும். அவர்களோடு பகைமை பாராட்டக் கூடாது. நம் மீது நாம் அன்பு செலுத்துவது போல அவர்கள் மீதும் அன்பு செலுத்த வேண்டும். தீங்கு செய்யக் கூடாது. இதை கீதையும் சொல்கிறது, பைபிளும் சொல்கிறது. வள்ளலார் சொல்கிறார்.... ''அப்பா நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும்
ஆருயிர்கட் கெல்லாம் நான் அன்பு செய்ய வேண்டும்.'' என்ன ஒரு உயர்வான சிந்தனை பாருங்கள். காசு, பணம், போகம் இதெல்லாம் கேட்கவில்லை. எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்தும் மனதைக் கேட்கிறார். இந்த மனப்பான்மையால் விளையும் நன்மை என்ன ? அதாவது இன்பம், துன்பம் என்றெல்லாம் தனித்தனியாக எதுவும் இல்லை. நம் மனப்பான்மையைப் பொருத்தே இன்பமும் துன்பமும் நம் உணர்வை எட்டுகின்றன. உயர்வான மனப்பக்குவத்தை, எண்ணங்களைப் பெற்றுவிட்டோமானால், இது வரை துன்பம் என்று எண்ணிக் கொண்டிருந்த பல விஷயங்களில் இருந்தும் இன்பத்தைப் பெற முடியும். அதாவது இன்பமாக உணர முடியும். ஆனால் இங்கே நாம் அடையும் இன்பங்கள் எல்லாம் ஒரு வரைமுறைக்கு உட்பட்டவை. இவை அதிகமானால் துன்பமாகி விடும். ஆனால் எல்லையே இல்லாமல் விரிந்து கொண்டே போகும் துன்பமே இல்லாத பேரின்ப நிலையை அடைய வேண்டுமென்றால், மனம் முழுவதும் அன்பு மட்டுமே நிறைந்திருக்க வேண்டும். அதுவே ஒளியாகவும், வழியாகவும் நின்று நம்மை மேன்மையுறச் செய்யும். இந்த மனப்பக்குவத்தின் மறுபெயரே ஆத்ம ஞானம்.