Tuesday, July 14, 2015

ஓங்காரத்தில் உள்ள ரகசியங்கள். ஓம் என்று ஒரு உலகமயமாக்கபட்ட சொல்லின் மகத்துவம் தெரியுமா?

மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள் எழுதிய ஆன்மீகப்பயணம் பாகம் 1,பக்கம் 218,219.
ஓம் என்பது இந்து சமயத்திலுள்ள ஒரு புனிதமான குறியீடு மற்றும் ஒலியாகும்.இக் குறியீடு இந்து சமய நூல்கள் எழுதுவதற்கு முன்பாகவும், இதன் ஓசை மந்திரங்கள் உச்சரிப்பதற்கு முன்பாகவும் பயன்படுத்தப்படும்.மான்டூக்கிய உபநிடதம் முழுமைக்கும் ஓம் குறித்த விளக்கங்கள் காணப்படுகின்றன. குமரிக்கண்டத்தில் வாழ்ந்ததாக கருதப்படும் மயன் எழுதிய நூலில் ஓம் என்ற ஒலி உள் ஞானத்தை எழுப்பும் எனவும், அது ஒளிவடிவமாகவும் இருக்கும் என்றும் கூறப்பட்டுளது.

"ஓம் ஒலி கேட்டுணர்ந்தால் உள்ளொலி ஞானம் தோன்றும்,
ஓம் ஒலி கண்டுணர்ந்தால் ஒளியொளிர் உருவே தோன்றும்,
ஒளியொளிர் உருவந்தானே ஆடலன் ஆடலன்றோ"

—(மய விஞ்ஞானம்)
ஓம் என்பதன் மிக சுருக்கமான/நுட்பமான பொருள் = "உயிர்களுக்கும் இறைவனுக்கும் உறவு!"
ஓம் என்பது அழகானதொரு இறை-ஒலித் தத்துவம்! சமணம் (ஜெயின்), புத்த மதம், சீக்கியர்கள், சைனாவில் கூட "ஓம்" சொல்வார்கள்
அ, உ, ம் என்று மூன்றெழுத்துக்கள் கொண்டது போல் இருப்பினும், ஓம் என்பது ஓரெழுத்து தான் (ஏகாட்சரம்)! தமிழில் ஓங்காரம்! பிரணவம் என்று வடமொழியில் சொல்வார்கள்!
* அ = இறைவன் ("அ"கர முதல எழுத்தெல்லாம்! அவனைக் குறிப்பதெல்லாம் "அ"-காரமாய்த் தான் இருக்கும்)
* ம = நாம் (எம், உம், நம், நாம் என்று நம்மைக் குறிப்பதெல்லாம் "ம"-காரமாய்த் தான் தொக்கி நிற்கும்)
அந்த "அ"-வையும், இந்த "ம"-வையும் எப்படிச் சேர்ப்பது? - "உ" கொண்டு சேர்க்கணும்! "உ"றவைக் கொண்டு சேர்க்கணும்!
* உ = உறவு! "அ"கார-"ம"காரத்தை இணைக்கும் உறவு!
உந்தன்னோடு = அ
உறவேல் = உ
நமக்கு = ம்
அ + உ + ம் = ஓம்!
* அ = பரமாத்மா
* உ = உறவு
* ம் = ஜீவாத்மா
ஓம் (ஓங்காரம்-பிரணவம்) பற்றி சித்தர்கள் கூறியது!!!
எழுத்துக்களில் அ-கரமாய் இருக்கிறேன்! சேனாதிபதிகளில் முருகனாய் இருக்கிறேன்!
மாதங்களில் மார்கழியாய் இருக்கிறேன்! வேதங்களில் சாமமாய் இருக்கிறேன்!
என்றெல்லாம் கீதையில் சொல்லிக் கொண்டே வருபவன்...
அனைத்திலும் "ஓம்" என்னும் ஜீவப் பொருளாய் இருக்கிறேன் என்று உரைக்கின்றான்!
ஓம்கார உச்சரிப்பு பற்றி திருமூலர்.
திருமந்திரத்தில் ஓம்
ஓமெனு ஓங்காரத் துள்ளே ஒரு மொழி
ஓமெனு ஓங்காரத் துள்ளே உருவம்
ஓமெனு ஓங்காரத் துள்ளே பல பேதம்
ஓமெனு ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே
என்று திரு மந்திரத்தில் திருமூலர் பாடியுள்ளார்.
சட்டைமுனி சூத்திரத்தில் ஓம்
" ஒடுக்கமடா ஓங்காரக் கம்பமாச்சு ஓகோகோ அகாரமங்கே பிறந்ததாச்சு "
என்று சட்டைமுனி தனது சூத்திரத்தில் பாடியுள்ளார்.
எந்த மொழியிலும் எழுத்துகள் பிறப்பதற்கு மூல காரணமாக இருப்பது ஒலியே. அந்த
ஒலியே பிரவணம் எனப்படும். வாயைத் திறந்து உள்ளிருக்கும் மூச்சுக் காற்றை வெளியிடும்போது
‘ஓ’ என்ற உருவமற்ற ஒலி பிறக்கின்றது. அவ்வொலியின் கடைசியில் வாயை மூடும்போது
‘ம்’ என்ற ஒலி தோன்றுகிறது.
இந்த ''ஓம் - ஓம்'' என்ற ஒலியையே ஓங்காரம்-பிரணவம் என்று கூறுவர். உலகம் தோன்றுவதற்கு முன்பு ஓங்காரம்-பிரணவம் ஒலியே நிலவி இருந்தது என்றும் , ஓங்காரத்திலிருந்து விந்துவும், விந்திலிருந்து நாதமும் அதிலிருந்து உலகமும் உயிர்களும் ஒன்றிலிருந்து ஒன்றாகத் தோன்றின எனத் தத்துவ நூல்கள் கூறுகின்றன.
ஓம் என்பது ஓங்காரம்-பிரணவம் மந்திரமாகும்:
இது அ + உ+ ம் என்ற மூன்றெழுத்தின் இணைப்பே ‘ஓம்’.
மனிதனின் உடலும் இறைவனின் இயற்கை வடிவான ஓங்கார வடிவத்துடன் அமைந்திருக்கிறது.
மனித வடிவமும் அருள் வடிவம்தான்.
ஓம் என்ற பிரவணன்
"அ" என்பது எட்டும்
"உ"என்பது இரண்டும் என்ற எண்களின் தமிழ் வடிவம்.
உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் சேர்ந்து உயிர்மெய்த்தாவது போல்
உயிரும் உடலும் சேர்ந்ததுதான் மனித வாழ்வு.
அவரவர் கையால் மனிதனின் உடல் எண் சாண் அளவுடையது.
மனிதன் விடும் இரு வகை மூச்சுகள். [உள் மூச்சு வெளி மூச்சு ]
" உ ' எழுத்து குறிக்கும் மூச்சு உள் மூச்சு வெளி மூச்சு.
" ம் ' ஆறு அறிவின் உணர்வு இயக்கத்தால் எற்படும் இன்பத்தை அது குறிக்கும்
அத்துடன் " ஓம் " என்ற பிரணவம் 96 தத்துவத்துடன் விளங்கும்.
அ உ ம் என்ற எழுத்துக்களால் குறிக்கும் பெருக்கு தொகை 8 x 2 x 6 = 96.
இதனை சிலர் இப்படியும் கூறுவார்கள்: அ என்பது முதல்வனான சிவனையும்
உ என்பது உமையவள் எனப்படும் சக்தியினையும், சிவனும் சக்தியும் இணைந்த
சிவசக்தியினையும் குறிக்கும்.
இச்சிவசக்திவடிவமே, சொரூபமே வரி வடிவில் " ஓ " என பிள்ளையார்
சுழியாகவும் , "உ" எனவும் உள்ளது. வழிப்படும் உருவவாக 'சிவலிங்கமும்' ,
ஒலி எழுத்தாக சொல்லும்போது ஓங்காரம், பிரணவம் என்று ஆன்றோர்களும்,
சான்றோர்களும் சொல்கிறார்கள்.
இதனை திருமூலர், திருமந்திரத்தில் :
" ஓமெனு ஓங்காரத் துள்ளே ஒரு மொழி
ஓமெனு ஓங்காரத் துள்ளே உருவம்
ஓமெனு ஓங்காரத் துள்ளே பல பேதம்
ஓமெனு ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே "
முதல் வரிக்கு ஓம் என்பதை உச்சரிக்கும் பொழுது ஒரே சொல்லாகவும்,
இரண்டாம் வரிக்கு அன்னையின் கருவில் பிண்டம் தரிக்கும் பொழுதும்
அது தாயின் வயிற்றிற்குள் காணும் காட்சி ஓம் என்றே தோன்றும் ,
மூன்றாம் வரிக்கு ஒரே உச்சரிப்பாயினும், மூன்றெழுத்தையும் அதன்
விளக்கத்தையும் , பேதங்கள் பலவாறாகவும் , நான்காவது வரிக்கு இதை
சதா உச்சரித்து தியானிப்பதால் முக்தி - உயர்ந்த சித்தியும் கிட்டும்
என்பதை பாடல் நமக்கு உணர்த்துகிறது.
முதல் எழுத்து:
"ஆதியிலே பராபரத்திற் பிறந்த சத்தம்
அருவுருவாய் நின்ற பாசிவமுமாகி
தோதியென்ற சிவனிடமாய்ச் சத்தியாகித்
தொல்லுலகில் எழுவகையாந் தோற்றமாகி "
என்னும் சுப்பிரமணிய ஞானத்திலிருந்து அறியலாம்.
சட்டை முனியும் தனதுசூத்திரத்தில் :
" ஒடுக்கமடா ஓங்காரக் கம்பமாச்சு
ஓகோகோ அகாரமங்கே பிறந்ததாச்சு "
- என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சிவன், சக்தி , சிவசக்தி மூலத்தைக் குறிக்கும் ஓங்கார மந்திரத்திற்க்கும்
முதல் எழுத்தாகவும் இதுவே " அ " உள்ளது. அத்துடன் எழுத்துக்களைக்
குறிக்குங்கால் , தமிழ் , தெலுங்கு , கன்னடம் , மலையாளம் , சமஸ்கிருதம்
முதலிய மொழியிலும் இதுவே முதல் எழுத்து.
" அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு "
என்ற வள்ளுவர் முதல் குறள் மூலமும் ,
அகஸ்த்திய பெருமான் தனது மெய்ஞான சுத்திரத்தில் ,
" அவ்வாகி உவ்வாகி மவ்வுமாகி ,
- ஐம்பத்தோ ரெழுத்துக்கு தியாகி "
"அகாமுதல் அவ்வைமுத்தும் தியாகும்
அறிந்தோர்க்கு இதிலேதான் வெளியதாகும் "
என்று பாடியுள்ளத்தின் மூலம் நன்கு அறியலாம்.
உருவமும்- உடலும்.
உடம்பை உருவைக் குறிக்கும் போது ஏற்கனவே குறித்தப்பிட்டபடி
இதுவே கருவில் தரிக்கும் பிண்டத்திற்குக் காரணமாய் விளங்குகிறது.
ஆண்டவன் அவ்வெழுத்தின் உருவமாய் உடம்பினுள் அமைந்துள்ளார்
என்பது கீழ்காணும் மெஞ்ஞான முனிவர்களது சூத்திரம் மூலம் விளங்கும்.
"கண்டது அவ்வென்னுங் கடைய தோரட்சாம்,
பிண்டத்துக் குற்பத்தி பிறக்கு மிதிலே"
- மச்சைமுனி தீட்சை ஞானம்
"உந்தியினுள்ளெ அவ்வும் உவ்வுமாய் மவ்வுமாகி
விந்துவாய் நாதமாகி விளங்கிய சோதிதன்னை "
- அகஸ்தியர் முதுமொழி ஞானம்.
மேலும் இது வாயைத் திறந்தவுடன் நாக்கு , அல்லது மேல் வாயைத்
தீண்டாமலேயே தொண்டையின் மூலமாய் பிறக்கும் ஓசை பேசும் போது
உண்டாகும் எல்லா ஒலியையும் விட மிகவும் இயற்கையானது....
ஓம் பற்றிய விஞ்ஞான ஆராய்ச்சி தரும் புது உண்மைகள்!!!
ஓம் என்பது ப்ரணவம்
ப்ரணவம் என்பது எந்த ஒரு ஒலிக்கும் காரணமாக இருப்பது ப்ரணவம் எனப்படும். படைப்பு அனைத்தும் ஓம் என்ற சொல்லில் அடங்கும் ஓம் படைப்பின் ரகசியம் ஆகும் ஓம் என்பதை பிரித்தால் அ + உ + ம் என்று பிரிக்கலாம்.
அ என்பது படைத்தல் / பிரம்மா / இறந்தகாலம்.
உ என்பது காத்தல் / விஷ்ணு / நிகழ்காலம்
ம் என்பது அழித்தல் / சிவன் / எதிர்காலம்
இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் மூன்று தொழிழுக்கு உட்பட்டு இருக்கும். அதாவது உலகத்தில் தோன்றிய அனைத்தும் ஒருநாள் மறைந்தே ஆக வேண்டும் என்பது நியதி . அதனை விளக்குவதே ஓம் என்றும் ப்ரணவம்.
இந்த பிரபஞ்சமும் ஓம் என்பதில் அடங்கும் அ வில் தோன்றி உ வில் இருந்து ( வாழ்ந்து) ம் ல் முடியும் ( மறையும் ). அதனால் தான் நமது ரிஷிகள் ஓம் என்னும் பிரணவமே மொத்த பிரபஞ்சமாக இருக்கிறது என்று கண்டார்கள் .
நாம் சாதாரணமாக எந்த ஒரு சத்தத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் இந்த மூன்று தொழில்கள் வருவதை அறியலாம் . மூன்று தொழில்கள் என்பது பிரணவமே. பிரம்மத்தின் நாதம் ப்ரணவம். பிரபஞ்சத்தின் இயக்கத்தை சப்தத்தில் குறிப்பது தான் ஓம்
ஓம் என்கிற ப்ரணவ மந்திரம் இல்லாமல் எந்த ஒரு மந்திரமும் இல்லை ஓம்-ன் சிறப்பை நமது வேதங்களும் புராணங்களும் கூறியிருக்கின்றன.
ஓம் எப்படி உச்சரிக்க வேண்டும் ???
ஓ+ம் = ஓம் om
’ஓ’ வின் உச்சரிப்பு குறைவாகவும், ‘ம்’ இன் உச்சரிப்பு நீண்டாதகவும் இருக்க வேண்டும்.
ஓம், ஓம், ஓம்,… என்று தொடர்ந்து உச்சரிக்க வேண்டும். சப்தமாக உச்சரிப்பதைக் காட்டிலும், மனதிலேயே உச்சரித்தல் நலம்.
ஓ என்று தொடங்கும்போது மனதில் தங்களுக்கு ஒரு இஷ்ட தேவதையோ அல்லது வேறு எந்த ஒரு பொருளையோ நினைக்க துவங்கிக் கொண்டால், ’ம்’ இல், அந்த நினைவினை தொடர வேண்டும்.
இதோடு சேர்ந்து நாசிப்பயிற்சியும் செய்தால் மேலும் பயனுண்டு.
மூச்சை உள்ளிழுக்கும் போது, மனதில் ‘ஓ’ வைத் துவக்கிக்கொண்டவாறு, தாங்கள் தேர்வு செய்த பொருளை மனத்தில் இருத்திக்கொள்ள வேண்டும்.
அடுத்து மூச்சை வெளி விட்டவாறு ‘ம்’ மைத் தொடரவேண்டும். எண்ணத்திலும் நிலைநிறுத்திய பொருளை தொடர்ந்தவாறு.
இவ்வாறு தொடர்ந்து பயிற்சி செய்தால், வெகு சீக்கிரமாக தாங்கள் எண்ணத்தில் நிறுத்திய பொருள் அல்லது இஷ்ட தேவதையினை மனதில் ஒருமுகப்படுத்தும் சித்தி கிடைக்கும். வேறு மாற்று சிந்தனைகள் ஏற்பட்டு மனதை அலைக்கழிக்கவிடாமல் நெருங்கிய பொருள் கைக்கிடைக்கும். அந்த நெருங்கிய பொருள் நீங்கள் யாரென்ற தன்னறிவானால், மீளாத் துயர்களில் இருந்து விடுதலை பெறும் பாதையை அறிந்து கொள்ள முடியும்..
ஓம் என்று ஒரு உலகமயமாக்கபட்ட சொல்லின் மகத்துவம் தெரியுமா?
----------------------------------------------------------------------------
என்னது உலகமயமாக்கபட்ட சொல்லா, இது நம்மூர் ஹிந்துக்கள் தானே உபயோகிக்கும் ஒரு தமிழ் சொல் அல்லது எனக்கு தெரிந்த வரை ஓம், அல்லது அவும் அல்லது அம் என்ற வட மொழி சொல்லின் மறுவலே இந்த ஓம் என்ற சொல் இது எப்படி உலகம் முழுவதும் என்று கேட்பவர்களுக்கான விளக்கத்தை இரண்டாம் பாராகிராஃபில் தெரிவித்துள்ளேன்
அதற்கு முன் இந்த ஓம் என்ற சொல் நம் மனித வாழ்வில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வழக்கத்தில் இருந்தாலும் இதை நவீன விஞ்ஞானம்- இந்த சொல்லுக்கு ஒரு சூப்பர் பவர் என நிருபித்து உள்ளது……….ஓம் என்ற சொல் தமிழில் பிரணவ மந்திரமாக குறிக்கப்பட்டதன் காரணம் அதற்குள் அடங்கிய பாசிட்டிவ் வைப்ரேஷன் எனப்படும் ஒரு நல்ல விஷயங்களுக்கான அதிர்வு தான் அந்த வார்த்தை.
ஆம் ஒரு சில கோயில்களிலும், அரண்மனைகளிலும், சில வீடுகள் மடங்கள் இந்த மாதிரி இடத்திலும் நீங்கள் காணக்கூடிய ஒரு ஸ்ரீ சக்கரம் (யந்த்ரம்) என்னவென்று பலருக்கு தெரியாது. பலர் இதை ஒரு செப்புத் தகடின் கிறுக்கல்கள் என நினைத்திருக்கலாம். ஓம் என்ற சொல்லின் உருவம் அல்லது படிவம் தான் என்று சயின்ஸ் நிருபித்துள்ளது.
ஆம் ஹான்ஸ் ஜென்னி என்னும் விஞ்ஞானி ஸ்விஸ் நாட்டை சேர்ந்தவர்தான் ஒலியின் பரிமாணத்தை நம் பார்வைக்கு கொண்டுவந்தவர். இவர் கண்டுபிடித்த சாதனம் தான் டோனோஸ்கோப் (Tonoscope) என்னும் ஒரு வரலாற்று முக்கிய கருவி. இந்த டோனோஸ்கோப்பில் ஓம் என்று உச்சரித்தால் ஸ்ரீ சக்ரா எனப்படும் யந்திர உருவத்தை .காண முடியும் அதன் படத்தையும் இங்கு இணைத்துள்ளேன். நீங்களும் உச்சரித்து பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
ஆனால் இந்த உருவத்தை நாம் வரைந்து வைத்திருப்பதை அதுவும் பல ஆயிரகணக்கான ஆண்டுகளூக்கு முன் ஒம் என்ற உச்சரிப்பின் பரிமாணம் இது தான் என்று வேத ரிஷிகளும் முனிவர்களும் இதன் அர்த்தத்தை உணர்ந்திருப்பது மெய்சிலிர்க்க வைக்கும் ஒரு பெரிய உண்மை.
சரி நம் ஓம் சொல்லுக்கு வருவோம்
ஒம் பல மொழிகளின் பிரணவ மந்திரமாக, வடிவ, உருவ அளவில் வேறுபட்டாலும் இதன் ஒலி ஓங்கார நாதமாக ஒன்றாக இணைந்த அளவில் உள்ளது. ஒம் என்ற தமிழ் சொல்லிற்கு ஒ = அ + உ + ம் (அ என்பது முதல்வனான சிவனையும், உ என்பது உமையையும் குறிப்பதாகவும் கருதுகிறார்கள்).
இதை பிராமண சொல் என்று கூறுபவர்களுக்கு, இந்த ஓம் வடிவம் சட்டைமுனி சூத்திரத்தில் – ” ஒடுக்கமடா ஓங்காரக் கம்பமாச்சு ஓகோகோ அகாரமங்கே பிறந்ததாச்சு ” என்று சட்டைமுனி தனது சூத்திரத்தில் பாடியுள்ளார். ஓ என்ற சொல் தாழ்ந்தும் ம் என்ற சொல் நீண்டும் இருந்தால் ஒருவித ஒலி அதிர்வுகள் கிடைக்கும். அது போக ஒ என்ற வார்த்தை உச்சரிக்கும் போது மூச்சை உள்ளே இழுத்து ம் என்றும் கூறும் போது எல்லா வாயுவையும் வெளியே அனுப்பும் இன்னொரு சான்றோரின் மூச்சு பயிற்சியின் சீக்ரெட்.
அது போக ஓ என்று ஜெபிக்கையில், நினைத்த நல்ல விஷயத்தை/உருவத்தை/விரும்பும் கடவுளை நிலை நிறுத்தினால், ம் என்று கூறும்போது அது அப்படியே அந்த அதிர்வலை நம்மை சுற்றி சூழ்ந்து கொண்டு நல்லது நடக்கும் என உறுதியாகிறது. அது போக ஓம் என்ற ஒலியை நாம் கேட்கும் போது சயின்டிஃபிக்காய் கெட்ட விஷயங்கள் தோன்றுவது தடைப்படும். நிறைய குழப்பங்கள் இருக்கும் போது இந்த ஓம் ஒலி அதிர்வின் எல்லையில் நாம் இருந்தால் நம் மனதும் தெளிவு பெறும் என்பது தெளிவாகிறது.
பகவத் கீதை ஒரு கற்பனை கதை அல்லது அது கிருஷ்ணனின் அவதாரத்தை குறிக்கும் ஒரு வரலாற்று உண்மை என கூறுபவர்களுக்கு, இதோ கீதையில் கூட ஓம் என்ற வார்த்தை வருகிறது பாருங்கள், கீதை – 8 – 13 “எவனொருவன் பரம்பொருளாகிய ஓம் என்ற ஓரெழுத்துச்சொல்லை உச்சரித்துக்கொண்டும் என்னை மனதில் கொண்டும் இப்பூத உடலை விட்டுப்புறப்படுகின்றனோ அவன் எல்லாவற்றிற்கும் மேலான கதியை அடைகிறான்.”
ஓம் என்ற சொல் ஓம் என்ற மந்திரத்தின் பெருமையை உபநிடதங்கள் கொடி உயர்த்திப் பறை சாற்றுகின்றன. அச்சொல் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருளைக் குறிக்கிறது. அச்சொல்லே பரம்பொருள் தான் என்று கூடச்சொல்லப்படுகிறது.
ஓம் என்ற சொல்லில் அ, உ, ம என்ற மூன்று எழுத்துக்கள் பிணைந்திருக்கின்றன. இவை மூன்றும் மனிதனுடைய மூன்று உணர்வு நிலைகளைக் குறிப்பதாகவும், பிரம்மம் என்ற பரம்பொருளாகவே இருக்கும் நிலை, இம்மூன்று நிலைகளையும் (அ-து, விழிப்பு நிலை, கனவு நிலை, தூக்கநிலை) தாண்டிய நான்காவது நிலை என்றும், அந்நிலை ஓம் என்ற உச்சரிப்பின் முடிவில் வரும் மவுனநிலை என்றும் மாண்டூக்கிய உபநிடதம் கூறுகின்றது.
சாதிகள் இல்லையடி பாப்பா என பாடிய பாரதி கூட தன் மனைவிக்கும் குடும்பத்தாருக்கும் கடிதம் எழுதும் போது ஓம் என்று முதலில் எழுதி தான் இந்த கடிதத்தை எழுதவே ஆரம்பிப்பானாம். இதை விட இதை 108 தடவை உச்சரிக்கும் ஒரு விஷயமும் அறிவியல் பூர்வ உண்மையை பல ஆண்டுகளுக்கு முன் கணித்த நம் மாமுனிவர்களின் விளக்கமும் சில ஆண்டுகளுக்கு முன் வான் வெளி ஆராய்ச்சி உண்மையும் ஒன்று தான்.
அதாவது சூரியன், சந்திரனின் சராசரி டயாமீட்டர்களின் அளவு தான் பூமியின் தூரம். இது 0.5% சூரியனுக்கும் 2.0% சந்திரனுக்கும் என்ற சமீபத்திய புள்ளிய தூர விவரம் பல்லாயிர ஆண்டு இந்தியர்களின் அறிவை மெச்சுகின்றன.
ஓம் என்ற வார்த்தை பிராமணர்களின் சொல், அல்லது வட மொழி சொல், அல்லது இது ஆர்யர்களின் சொல் என்று சிலர் கூறலாம். இது உண்மையல்ல. பிரபஞ்சம் எப்படி கடவுளின் வடிவமைப்போ அது போலத்தான் இந்த ஓம் என்ற சொல்லும். சிந்து வெளி நாகரிகம் என்ன என்பது நம் எல்லோருக்கு தெரிந்ததே, பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பே அருமையாக கட்டப்பட்ட கட்டிடங்கள், நவீன மாட மாளிகைகள், பிரமாண்டமான வேலைப்பாடுகள் நிறைந்த நவீன கட்டமைப்பை கொண்டு வந்தவர்கள் தான் இந்த சிந்து வெளி சமூகம்.
இந்த சிந்து வழி சமூகத்தின் செங்கல்களில் கூட இந்த ஓம் என்ற சொல் இருந்ததாக தொல் பொருள் ஆராய்ச்சி தெரிவிக்கிறது. இது பல நாடுகளில், பல மாதிரி கூறினாலும் இதன் வலிமையை உணர்ந்த முதல் ஐரோப்பிய மனிதன் ஹிட்லர் தான். சிந்து நதிக்கரையில் வசிக்கும் ஹிந்து மதத்தை சேர்ந்தவர்களைக் கொண்ட உலக பெருமைகள் கொண்ட நாடென்றால் அது இந்தியா என்னும் மாபெரும் நாடுதான்.
உலகத்தின் ஒவ்வொரு ஆளும் கண்களுக்கு, இந்தியா தான் டார்க்கெட். அது பிரிட்டிஷ் ஆகட்டும், போர்ச்சூகீஸ் ஆகட்டும், பிரஞ்சு ஆகட்டும், ஜப்பானியர்கள் ஆகட்டும், மொகலாயர்கள் ஆகட்டும் இந்தியாவின் மீது கொண்ட ஆசை இங்கிருந்த கலாச்சாரம், விலை மதிப்பில்லா பொருட்கள் என அடுக்கிக் கொண்டே செல்லலாம். அதன்படி பார்த்தால் ஹிட்லரின் ஸ்வஸ்திக் சின்னமும் இந்த ஓம் என்ற சொல்லின் தழுவல் தான். இது ஹிட்லர் உபயோகிக்கும் முன் இந்துக்கள் இப்படி இருக்க காரணம், அவர்களிடம் உள்ள முதல் மந்திரமான ஓம் என்ற எழுத்துதான் என மேடிசன் கிரான்ட் என்பவரின் நூலே (தி பாஸிங் ஆஃப் கிரேட் ரேஸ்) இதற்கு சான்று.
அதை நிலை நிறுத்தி ஹிட்லரின் மூளையாக செயல் பட்ட ஹென்ரிச் மூலரும் இதை கூறியுள்ளார். இதை விட அவர் கூறிய வார்த்தைகள் தான் மிகுந்த ஆச்சரியத்தில் உண்டாக்கியது. அது அவர் எப்படி யூத இனத்தை அழிக்க ஹிட்லர் கமான்டை நான் உபயோகித்தேன் என்றால், ஒரு கையில் பகவத் கீதை மற்றும் ஹிட்லர் வார்த்தை, கிருஷண பகவான் அர்ஜுனனுக்கு எப்படி ஒரு சத்திய வாக்கோ அதே தான் என்னுடைய பணியும், அது போல ஹிட்லரை நான் 11ஆவது கிருஷ்ண அவதாரமாக காண்கிறேன் என்று அவர் மட்டுமல்ல, மேக்ஸ்னியானி போர்ட்டஸ் எனற பிரஞ்சு பெண் (பின்பு தன்னை சாவித்ரி தேவி என்று மாற்றி கொண்டவர்) கூட கூறுகிறார்.
இதற்கு மேலே இதை பற்றி நாம் பேசினால் பவர்ஃபுல் ஆர்யர்கள் நாங்கதான் என்ற குரல் இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் ஒலிக்க இதற்கு போட்டி இருந்தது- இருக்கிறது.
ஓம் என்ற வார்த்தை, ஒரு காலத்தில் நல்லது நினைத்து தியானம் கொண்ட முனிவர்களுக்கும், கெட்டது நினைத்து தவம் கொண்ட சில அரக்கர்களுக்கும், உருவான ஒரு காமன் லேங்குவேஜ் இந்த ஒம்.
ஓம் என்ற வார்த்தையை உச்சரிக்க முடியாதவர்கள், அவர்கள் மனதுக்குள் தியானம், யோகா, உடற்பயிற்சி செய்யும் போது கூட இதை ஃபாலோ பண்ணினாலே நிறைய மாறுதல்கள் உண்டாகும் என சவுன்ட் ஆஃப் ஹீலீங் கோட்பாடுபடி இது மரணத்தை கூட தள்ளி வைக்கும் ஒரு அற்புத செயல் என ஜொனாதன் கோல்ட்மேன் என்ற அமெரிக்க டாக்டர் கூறுகிறார்.
ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் மகிமைகள் !!!!!!!!!!!!!!
------------------------------------------------------------------------------------
காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகின்றது.பெரிய பெரிய மரங்கள் வேரோடு சாய்க்கின்ற்து.அதே சமயம் சிறிய நாணற்புற்கல் வளைந்து கொடுக்கின்றன.வெள்ளம் நின்றவுடன் நிமிர்ந்து கொள்கிறது.இதே போன்றதுதான் நம் வாழ்க்கைச்சக்கரம்.யார் “ஓம்”, “ஓம்”, “ஓம்” என்று சதா ஜெபிக்கின்றார்களோ அவர்கள் நவக்கிரகங்களின் கதிர்வீச்சுகளால் அதிகம் பாதிக்கப்படுவதில்லை;நெருக்கடி காலத்தில் வளைந்து கொடுத்து பின் நிமிர்ந்து கொள்கின்றனர். “ஓம்” ஜெபிக்காதவர்கள் அடியோடு வீழ்கின்றனர். இதை நாம் அனேகர் வாழ்க்கையில் காணலாம். “ஓம்” என்னும் மந்திரத்திற்குள் சிருஷ்டி கர்த்தாவான பிரம்மாவும்,, காக்கும் கடவுளான விஷ்ணுவும்,சம்ஹார மூர்த்தியாகிய ருத்திரனும் அடக்கம்.இந்த மும்மூர்த்திகளை கிறிஸ்தவர்கள் பிதா,சுதன்,பரிசுத்த ஆவி என அழைக்கின்றனர். ஓம் என்னும் மந்திரம் ஜபிப்பதன் மூலம் உடலையும் உள்ளத்தையும் சீராக வைத்துக்கொள்ள முடியும்.எடுத்த நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும்.எதிர்ப்பு சக்திகள் நீங்கும்.மன சாந்தி ஏற்படும்.உலகத்தோடு ஒட்டி வாழலாம்,வயது முதிர்ந்தோர் இந்த ஏகாட்சரத்தால் ஏகாந்த நிலையை அடையலாம்.
வாய்விட்டு ஜபிக்காமல் மனதிற்குள் “ஒம்”, “ஓம்”, “ஓம்” என ஜபிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஓ. . . ம் என நீட்டியும் மனதால் ஜபிக்கலாம். கிழக்குப் பார்க்க அமர்ந்து கண்களை மூடி ஜெபிப்பது நன்று.மாடி வீட்டில் இருந்து ஜபித்தால் பலன் கூடும்.மலை மேல் இருந்து ஜெபித்தால் பல மடங்கு சக்தி கிடைக்கும். எந்த மந்திரம் ஜபிக்க ஆரம்பித்தாலும்,குறைந்தது ஒரு லட்சம் உரு ஏற்றியபின் தான் பலன் கிடைக்க ஆரம்பிக்கும்.உங்கள் உடலின் மின்சக்தி மற்றும் காந்த சக்தி ஏற்படும்.வியாதியஸ்தர் முன் ஜெபித்தால் அவர்களின் நோய் நீங்கும்.வேப்பங்குச்சியால் குழந்தைகள் நாக்கில் “ஓம்” என எழுத அவர்கள் கல்வி மேம்படும்.சுத்தமான பசுஞ்சாண விபூதியில் “ஓம்” என எழுதிக்கொடுக்க வயிற்று நோய்கள் நீங்கும்.இளநீரில் ஓதிக்கொடுக்க உடல் காங்கை தணியும்.பிறரை ஆசிர்வாதிக்கும்போது “ஓம்” என்னும் மின்சக்தி தான்,நம் கைகளில் இருந்து வெளியே பாய்கிறது.பிறருக்குண்டான குறைகள் நீக்குகின்றன.
ஒரு எலக்ட்ரானிக் எலக்ட்ரோ மீட்டர் மூலமாக சாதாரண மனிதனின் மின் சக்தியை அளக்க வேண்டும்.பின் “ஒம்”., “ஓம்”, “ஒம்” என்று ஒரு லட்சம் முறை ஜபித்தவரின் மின்சக்தியை அளக்க வேண்டும்.அப்போது இருவருக்குமுள்ள வேறுபாடு நன்கு தெரியும்.கர்ப்பமான தாய்மார்கள் “ஒம்” , “ஓம்”, “ஓம்” என சதா காலமும் ஜபித்துவந்தால் தெய்வக்குழந்தைகள் பிறக்கும்.
வாகனம் ஓட்டும்போதும், தெருவில் நடக்கும்போதும் எந்த மந்திரமும் ஜபிக்கக் கூடாது.மீறி ஜபித்தால், உடல் தள்ளாடி விபத்து உண்டாகலாம்.மூச்சை உள்ளே இழுக்கும் போது “ஓம்” “ஓம்” “ஓம்” என ஜெபிக்கலாம்.அப்படி ஜெபிக்கும்போது மூச்சை உள்ளே இழுப்பதும்,வெளியே விடுவதும் ஒரே சீராக இருக்க வேண்டும்.ஊசியில் மருந்தை ஏற்றிய பின் இறக்குவது மாதிரி அமைய வேண்டும்.எக்காரணம் கொண்டும் மூச்சை அடக்கக் கூடாது. அதாவது கும்பகம் செய்யக்கூடாது.மந்திரங்களுக்கேற்றது சைவ உணவுதான்.சைவ உணவு மட்டுமே சாப்பிட்டு வருவதால் விரைவில் பலன் கிடைக்கும்.
விடை தேடுவோம். முடிந்தவரை எல்லாரும்
இப்பதிவை பகிர்ந்து எல்லோருக்கும்
நமது வழிபாட்டு முறைகளின்
அறிவியலை உணர்த்தி பயன்பெறுவோம.


ஐந்தெழுத்து மகா மந்திரம் !!??

சிவசக்தி ரூபங்களுக்கு வணக்கம் ! உலகில் எண்ணற்ற மந்திரங்கள் உள்ளன . அவற்றில் மிகவும் உயர்ந்தது காயத்ரி மந்திரம் . இரண்டாம் நிலை சிவாயநம எனும் மந்திரம் . ஆனால் ஈசனை நினைத்து மௌனத்தில் ஐந்தெழுத்தை மனம் உருக உச்சரிக்கும் போது சிவாயநம என்பது முதல் நிலைக்கு வருகிறது . இனி ஐந்தெழுத்தின் சக்தியை அறிந்து கொள்ளுங்கள் .!!!
(சி) --- சிவம் , உடலில் ஆதார சக்கர அதிபதி, லக்ஷ்மி கடாட்சம் , உடலில் உஷ்ண தன்மை , தவத்தில் பிரகாச மான ஒளியை தருவிக்கிறது . யோகத்தில் இஷ்ட சித்தியை தரும் . மோட்சம் தரும் எழுத்து . பஞ்ச பூதங்களில் அக்னியை வசியம் செய்யும்.
(வா)--- வாயு , உடலில் இறை அருளுக்கு அதிபதி , நோய்களை போக்கும் , சஞ்சீவி .உடலில் பிராணன்,தவத்தில் உயிர் சக்தியை தருவது,தேகத்தில் வசீகரம் அழகு தருவது, பஞ்ச பூதங்களில் வாயுவை வசியம் செய்வது.
(ய)-- ஆகாயம் , சொல் வர்மம் , நோக்கு வர்மம், தொடு வர்மம் , இவற்றை பிறர் உடலில் செயல் படுத்தும் சித்தியை நமக்கு தருவது, உச்சாடன திற்க்கு சித்தி தருவது , உடலில் உயிர் , சஞ்சிதா கர்மம், பிராப்த கர்மம் , ஆகாமீய கர்மம் மூன்றையும் போக்குவது , பஞ்ச பூதங்களில் பரவெளியை வசியம் செய்வது .
(ந)--- பூமி , உடலில் அருள் சக்தி தேகத்தை தருவது , துஷ்டா பிராப்தத்தை போக்குவது , மண்ணுலகில் கிடைக்கவேண்டிய ஐஸ்வரியம் தரவல்லது ,தவத்தில் ரூப முறையில் இறைவனை விஸ்வரூபமாக காட்டுவது, பஞ்ச பூதங்களில் பிருததிவி யை வசியம் செய்வது ,
(ம)--- நீர் --- ஆணவ மலம் பொருந்திய அசுத்த மாயை போக்குவது , உடலில் உதிரம், யோகிகளின் கமண்டல நீராகி சகல செயல்களையும் செய்வது, தனஞ்செயன் , ஈஸ்வரன் ,மிருத்யு கால ருத்ரன் ,உமா தேவி , ஆகியோரின் சக்தியை தவத்தில் தரவல்லது , பஞ்ச பூதங்களில் அப்புவை வசியம் செய்வது .
--- இத்தனை சக்தி வாய்ந்த சிவாயநம எனும் மந்திரத்தை அதன் உண்மை சக்தியை புரிந்து கொண்டு , எந்த வகையிலாவது பக்தி மார்க்கம் , ஞான மார்க்கம் ஏதோ ஒரு முறையில் செயல் படுத்தினால் , உங்களைப்போல் பாக்கியவான்கள், உங்களைப்போல் ஞானம் உடையோர், மூவுலகும் உங்களை பின் பற்றும் உன்னத நிலை அடையலாம் !!
சிவசக்தி ரூபங்களுக்கு வணக்கம். அன்புள்ளம் கொண்ட எனது அருமை சிவசக்தி ரூபங்களே நீங்கள் எல்லோரும் மானுடம் அல்ல ! உண்மை பிரம்ம மான ஈசனின் மருவுருவங்கள் . நமது அன்றாட நிகழ்வுகளில் நான் நாம் என்ற வார்த்தைக்கே இடமில்லை எல்லாம் அவன் , எல்லாம் அவன் செயல் .
ஈசன் நமது உடலில் என்ன செய்கிறான் என்பதை பார்ப்போம் .
1. ஆகாய சக்தியாய் நம் உடலில் நின்று , மோகம்,இராகம் ,துவேசம் ,பயம் , வாஞ்சை , வெட்கம் ,
போன்றவையாக செயல் படுகிறான்.
2. வாயு சக்தியாக நம் உடலில் நின்று ஓடுதல் , சயனித்தல், நடத்தல் உட்காருதல் , தாண்டுதல் குதித்தல்
போன்றவையாக செயல் படுகிறான் .
3. அக்னி சக்தியாக நம் உடலில் நின்று, நித்திரை , பசித்தல் , தாகம் , ஆலாசியம் , ஆண் பெண்
சம்போகம். போன்றவையாக செயல்படுகிறான் .
4. நீர் சக்தியாக நம் உடலில் நின்று , சிறுநீர் , எச்சில் , வேர்வை , இரத்தம், சுக்கிலம் ( விந்து ,நாதம்)
போன்றவையாக செயல் படுகிறான் .
5. பூமி ( மண் ) சக்தியாக நம் உடலில் நின்று , எலும்பு , மாமிசம் , தோல் , நரம்பு , ரோமம் ,
போன்றவையாக செயல்படுகிறான் .
மேலும் உடல் உறுப்புகளில்
ஆகாயம்----- இருதயம்.
வாயு --------- நுரையீரல்.
அக்னி -------- பித்தப்பை .
அப்பு(நீர்)----- ஈரல் .
பிருத்திவி(மண்)--- மண்ணீரல்.. போன்ற கருவிகளாகவும் . மேலும் நமது தேகத்தில் ஐந்து பேதங்களாகவும் செயல் படுகிறான் .
1. இருள் தேகம் , ஆணவ மலம் பொறுத்தி உடலை நான் என்று இருப்பது .
2. மறுள் தேகம் , மாயாமல சம்பந்தம் தனக்கு வருவது தெரியாமல் அகங்காரம் கொண்டு இருப்பது.
3. சுத்த தேகம் , அறிவு அருள் வடிவாய் தேகம் தோன்ற செய்வது .
4. பிரணவ தேகம், பார்வைக்கு தோன்றும்,கைக்கு அகப்படாது , நிழல் சாயாது , சித்தர் தேகம் மாகும் .
5. ஞான தேகம் , பார்வைக்கு தெரியாது , அறிவுக்கு புலப்படும் . இவ்வாறு நாமாகவும் நம் உடலாகவும்
நமது செயலாகவும் ஈசனே இருக்கின்றான் .
அன்பான சிவரூபங்களே இப்போது நீங்கள் யார் ??? எல்லாம் சிவமயம் !!
குத்தம் குறை ஏதுமற்ற
ஜீவன் இங்கு யாரடா?
குத்தம் என்று யாரும் இல்லை
பாவ மூட்டை தானடா!
சிவனைக்கூட பித்தன் என்றுபேசு கின்ற ஊரடா
புத்திகெட்ட மூடர்க்கு என்றும்
ஞானப் பார்வை ஏதடா?
ஓம் சிவாயநம

உண்மையில் மகா அவதார் பாபாஜி யார்? அவர் எங்கே பிறந்தார்? எங்கே வளர்ந்தார்? எங்கே இருக்கிறார்? அவரது வயது என்ன?

பாபாஜி, இந்த வார்த்தைக்குதான் எத்தனை மந்திர சக்தி! எத்தனை மகத்துவம்! புரிந்தவர்கள் இவரை தெய்வம் என்று போற்றுகிறார்கள். புரியாதவர்களுக்கு இவர் என்றுமே புரியாத புதிர்தான்!
பாபாஜி என்ற பெயரில் நைனிடால் பாபாஜி, ஹரியகான் பாபாஜி, ஹைடகன் பாபாஜி என்றெல்லாம் பலரும் இருந்தாலும் எல்லோரும் ஒருவரே என்றுதான் சொல்கிறார்கள்.உண்மையில் மகா அவதார் பாபாஜி யார்?
அவர் எங்கே பிறந்தார்? எங்கே வளர்ந்தார்? எங்கே இருக்கிறார்? அவரது வயது என்ன? இந்தக் கேள்விகள் உலகம் முழுக்க கோடானு கோடிப் பேரிடம் இருந்தாலும்,யாராலும் சரியான விடையைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
அருகிலேயே அவர் இருப்பது அறியாமல், அவரைத் தேடி அலைபவர்கள் ஆயிரக்கணக்கில் உள்ளனர். எப்படி இருப்பார் என்ற ஆராய்ச்சியில் தங்கள் வாழ்நாளையே கழித்தவர்கள் பலர் இருக்கிறார்கள்.
ஒரே நேரத்தில் பல வடிவங்களில் இருக்க முடியும் அவரால். வடிவமே இன்றி ஒளிரூபத்திலும் தோன்றுவார் அவர்.
தேடிக்கண்டுபிடிக்க நினைத்து அலைவதை நிறுத்திவிட்டு, ஆத்மார்த்தமாக அவரிடம் சரணடைந்து அவரையே மனதுள் இருத்தி தியானம் செய்தால், நாம் தேடிப் போகாமலேயே அவர் நம்மைத் தேடி வருவார்.
உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான பேர் மத இன, மொழி, மத வேறுபாடற்று மகா அவதார் பாபாஜியைப் பற்றித் தெரிந்து கொள்ளும் ஆவலில் இருக்கிறார்கள்.
மகாவதார் பாபாஜியை தரிசித்ததாகவும் அவருடன் இருந்ததாகவும், பலர் பலவிதமாகச் சொல்கிறார்கள்.
விடுதலைப் போராட்ட தியாகியான டாக்டர் ராம்போஸ்லே பாபாஜியுடன் கிட்டத்தட்ட ஆறு வருடம் இருந்திருக்கிறார். பாபாஜியைப் பற்றிய அதிசயமான விஷயங்களை அவர் வியந்து கூறுகிறார். பாபாஜி எந்த வடிவத்திலும் தோன்றுவாராம். வயதானவராக, விலங்காக, பறவையாக எந்த உருவத்திலும் நிமிடத்தில் மாறிவிடுவாராம்.
ஒரு சமயம் அவரது பக்தரின் வீட்டிற்கு உணவருந்த வருவதாக பாபாஜி உறுதியளித்திருந்தாராம். ஆனால் சொன்னபடி பாபாஜி வரவில்லையென்று பக்தர் வருத்தப்பட்டார்.
அதை பாபாஜியிடமே நேரில் கேட்டுவிட்டார். உடனே பாபாஜி, ‘‘நான் அங்கே வந்திருந்தேன். மீந்துபோன உணவையெல்லாம் எனக்கு நீ போட்டாயல்லவா’’ என்றதும் அந்த பக்தர் அதிர்ந்து போனார். காரணம், அவர் மீந்து போன உணவைப் போட்டது ஒரு நாய்க்கு. அதாவது நாய் உருவில் அங்கே வந்திருக்கிறார் பாபாஜி.
பிரபஞ்சத்தில் எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் பாபாஜி செல்வார். சில நேரத்தில் பறவைகளின் மூலமாகத் தன் சீடர்களுக்கு செய்தி சொல்லி அனுப்புவார். அந்தப் பறவைகள் மனிதனைவிட விரைவாகச் சென்று சீடர்களிடம் பாபாஜியின் செய்தியை விவரமாகத் தெரியப்படுத்திவிடும்.
பாபாஜி யார் என்பதைத் தெரிந்துகொள்ள முயன்றவர்களுள் ஒருவரான யோகிராமையா என்பவர், தனது தியானத்தில் பாபாஜியின் பிறப்பைப் பற்றிய விவரங்கள் காட்சியாகத் தெரிந்ததாகக் கூறுகிறார்.
அவதரித்த காலம் உட்பட சகலமும் உணரும்படியாக தெளிவாகப் புலப்பட்ட கனவு அது. அதாவது பாபாவால் உணர்த்தப்பட்ட விஷயம் அது. அந்த விவரங்கள்:
கடலூருக்கும் சிதம்பரத்திற்கும் நடுவே கடலோரத்தில் உள்ளது பரங்கிப்பேட்டை என்ற ஊர். அங்கே வசித்தனர் வேதாரண்ய ஐயர்-ஞானம்பாள் என்ற நம்பூதிரி பிராமணத் தம்பதியினர். இறைபக்தி மிக்க அவர்களுக்கு, கி.பி.203ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதி கடவுளருளால் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு நாகராஜ் என்று பெயர் வைத்தனர்.
கார்த்திகை தீபத்தன்று பிறந்த அக்குழந்தை, மானிட வர்க்கத்திற்கு தான் ஒளி தரப்போவதை சொல்லாமல் சொல்லியது.
கேரளத்தைச் சேர்ந்த இந்த நம்பூதிரி குடும்பத்தினர் அங்கிருந்து பரங்கிப்பேட்டை வந்து அங்கிருந்த சிவன் கோவிலில் அர்ச்சகம் செய்து வந்தனர். சிவாலயமான அது காலப்போக்கில் முருகன் தலமாக பிரசித்திபெற்று, முத்துக்குமாரசாமி கோவில் என்று பெயர் பெற்றது. பழமையான அந்தக் கோயில் இன்றும் பரங்கிப்பேட்டையில் இருக்கிறது.
சிறுவன் நாகராஜுக்கு ஐந்து வயது இருக்கும்போது அந்த சிவன் கோவிலில் நடந்த திருவிழா ஒன்றின்போது கயவன் ஒருவனால் கடத்திச் செல்லப்பட்டான். கல்கத்தாவிற்கு அவனைத் தூக்கிச் சென்றபோது ராமானந்தர் என்னும் வேதவிற்பன்னர் ஒருவர், சிறுவனது முகத்தில் தெரிந்த தேஜஸைக் கண்டார். சிறிதளவு பணம் கொடுத்து அவனைக் கயவனிடமிருந்து மீட்டார்.
அதனால், சிறு வயதிலேயே சாதுக்களுடன் பழகும் பாக்கியம் கிடைத்தது நாகராஜுக்கு. காசி, பிராயாகை போன்ற தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தபோது, அங்கே பால்குடி பாபாக்களோடு வாழ்ந்தார். அவர்களுக்கும் இலங்கையில் உள்ள கதிர்காமத்திற்கும் நல்ல தொடர்பு இருந்து வந்ததால் பதினொரு வயதிலேயே கதிர்காமம் சென்று அங்கு சித்தர் போகநாதரை சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றார்.
விரிந்து படர்ந்த ஓர் ஆலமரத்தின் கீழ் போகரோடு இருந்து, போகரின் ஆசியோடு பல்வேறு யோக சாதனைகளையும் தியானக் கிரியைகளையும் அவர் பழகினார்.
தமது பதினாறாவது வயதில் பொதிகை மலைப் பகுதிக்கு வந்த நாகராஜ், குற்றாலநாதர் கோயிலுக்கு அருகில் உள்ள பராசக்தி பீடத்தினருகில் அமர்ந்து, அகத்தியரை வேண்டி கடுமையான தவத்தை மேற்கொண்டார்.
தவத்திற்கு இரங்கி அகத்தியர் அவர் முன்னே வந்தார். கிரியாகுண்டலினியை உபதேசம் செய்து இமயத்தின் உச்சியிலுள்ள பத்ரிநாத்திற்குச் சென்று அங்கு தவமியற்றும்படி அனுப்பினார். அங்கு சென்ற நாகராஜ் கடுமையான யோகப் பயிற்சிகளாலும், தியான முறைகளாலும் உன்னத நிலையடைந்து பாபாஜியாக இவ்வுலகிற்கு வெளிப்பட ஆரம்பித்தார்.
ஒவ்வொரு மனிதனும் சித்தாஸ்ரமம் சென்று அங்கே சாதனை மேற்கொள்வதை லட்சியமாகக் கொள்ள வேண்டும் என்று ரிக்வேதமும், சாமவேதமும் சொல்கின்றன.
ஆனால் சித்தாஸ்ரமத்திற்கு எல்லோராலும் அவ்வளவு சுலபமாகச் சென்றுவிட முடியாது. ஆயிரம் யோகிகளில் ஓரிருவருக்கு மட்டுமே அந்த பாக்கியம் கிடைக்கும்.
சித்தாஸ்ரமம் செல்வது எந்த அளவிற்கு உயர்வானது என்பதை விளக்க வேண்டுமானால், மகாபாரத சம்பவம் ஒன்றைச் சொல்லலாம்.
குருக்ஷேத்ரப்போரில் அர்ஜுனனின் அம்புகளால் தாக்கப்பட்டு அம்புப் படுக்கையில் உத்தராயண புண்ய காலத்தில் உயிர்விடக் காத்திருந்த பீஷ்மரைப் பார்க்க வந்தார் கிருஷ்ணர். அற்புதமான விஷ்ணு சகஸ்ரநாமத்தால் அவரைத் துதித்தார் பீஷ்மர். அடுத்து, கண்களில் நீர்வழிய தன் கடைசி ஆசையாக பகவானிடம் அவர் கேட்டது என்னதெரியுமா? ‘‘இதே உடலுடன் சித்தாஸ்ரமம் செல்ல வேண்டும்!’’ என்றுதான். பாரதப் போர் முடிந்ததும் தருமர், தாமோதரனிடம் கைகூப்பி வேண்டியதும் இதையே தான்.
பூலோகவாசிகள் சொர்க்கமும், வைகுந்தமும் செல்ல விரும்புவார்கள். ஆனால், மோட்சத்திலும், விண்ணுலகிலும் இருப்பவர்கள் சித்தாஸ்ரமம் வரவே ஆசைப்படுகிறார்களம்.
ஸ்ரீசக்ர வாசினியான அன்னை லலிதாம்பிகையின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதி இது. இதன் உள்ளே செல்லவோ, சென்று விட்டால் வெளியே வரவோ எல்லோராலும் முடியாது.
சில குறிப்பிட்ட குருமார்களாலும் அவர்களின் சீடர்களாக இருப்போராலும், மட்டுமே முடியும். அவர்களால் தேர்வு செய்யப்படுபவர்களை அவர்களே வழிகாட்டி அழைத்துப் போவார்கள். அங்கே பல ஆயிரம் வருடங்களுக்கு மேல் வாழும் மகான்களை தரிசிக்கலாம். பல சாதனைகளை கற்றுக் கொள்ளலாம். அவ்விதம் சித்தாஸ்ரமத்திற்குள் பிறரை அழைத்துச் செல்லும் உரிமை பெற்ற வெகு சிலரில் மகாவதார் பாபாஜி மிக மிக முக்கியமானவர்.
பாபாஜியின் அற்புதங்கள் அள்ள அள்ளக் குறையாதது. பாபாஜி, லாமா பாபா என்ற பெயரில் திபெத்தில் இருந்ததாகவும் அவரது சீடரான ஜவுக்ஷா லாமாவிற்கு நான்கு கைகள் கொண்ட சிவரூபத்தில் தரிசனம் தந்தார் என்றும் கங்கோத்ரி பாபா உறுதிப்படுத்துகிறார்.
பாபாஜியை தட்சிணாமூர்த்தி அம்சமாக 2500 வருடங்களுக்கு முன்பு கல் அக்னிநாத் என்ற பெயரில் தட்சிணாமூர்த்தியாகத் தோன்றினார் என்றும், அவரே குருகோரக்ஷாநாத் என்றும் சில புராணங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. நாத் பரம்பரையினர் அவரை சிவகோரக்ஷா என்றும், அவர் சிவபெருமான் அம்சம் என்றும் சொல்கிறார்கள்.
மகா அவதார் பாபாஜியை தனது மகா குருவாகக் கொண்டிருப்பவர் ரஜினி. அவரது அபூர்வ தரிசனத்தை அகத்தில் கண்டவர். பாபாஜியைப் பற்றி பலரும் பலவிதமாகக் கூறியிருந்தாலும், மகா அவதார் பாபாவைப் பற்றி தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை ரஜினியின் நெருங்கிய நண்பரும், பிரபல திரைப்படத் தயாரிப்பாளருமான நாகராஜன் ராஜா சொல்வதைக் கேளுங்களேன். ‘‘மகா அவதார் பாபாவைப்பற்றி எத்தனையோ பேர் எத்தனையோ அதிசயங்கள் அற்புதங்கள் என்று பலவும் சொல்லியிருக்கிறார்கள்.
அவரைப் பற்றிய புதிருக்கான விடையை அவரே சொல்வது போல், எனக்கு ஓர் அற்புதத்தை நிகழ்த்தி என்னை அதிசயத்தில் ஆழ்த்தியது என் வாழ்நாளில் மறக்க முடியாத மிகப் பரவசமான சம்பவம்.
2008ம் வருடம் ஜூலை மாதம் நானும் என் மனைவியும், எனது நண்பரும் அவரது மனைவியும் ரிஷிகேஷ் சென்றுவிட்டு அங்கிருந்து பத்ரிநாத் சென்றோம்.
இரவு தரிசனம் முடித்துவிட்டு, மறுநாள் அதிகாலை அபிஷேகம் பார்க்கச் சென்றோம். அந்த சமயத்தில் மட்டும்தான் பத்ரிநாராயணர் தியான நிலையில் அமர்ந்திருக்கும் திருக்கோலத்தை நாம் தரிசிக்க முடியும். அபிஷேகம் ஆரம்பித்தது. எனக்கு பீடத்தில் பத்ரிநாராயணன் உருவம் தெரியவில்லை. சாட்சாத் பாபாஜியே அங்கே அமர்ந்திருப்பதாகத் தோன்றியது. மெய்சிலிர்க்க கண்களில் நீர் வழிய தரிசித்தேன்.
பிறகு கோவிலின் தலைமை அர்ச்சகரான நம்பூதிரியைப் பார்க்கச் சென்றோம். அவரது அறைக்குள்ளே சென்றவுடன், அங்கே இருந்த ஓர் ஓவியத்தின் மீது என் பார்வை பதிந்தது. அதில், நான்கு கைகளுடன் பாபாஜி தியான நிலையில் அமர்ந்திருப்பது போல் ஓவியமாகத் தீட்டப்பட்டிருந்தது.
நம்பூதிரியைப் பார்த்து அந்த ஓவியம் பற்றிய விவரம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று என் மனம் படபடத்தது. ஆனால், அவர் உடலநலம் சரியில்லாமல் படுத்திருந்ததால் அவரைப் பார்க்காமலேயே சென்னை திரும்பினோம். என் மனமோ அந்த ஓவியத்தைப்பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தது.
சென்னை வந்தவுடன் முதல்வேலையாக என் நண்பர் ரஜினிகாந்த் அவர்களைப் பார்த்து பத்ரிநாத்தில் இருந்த அதிசய ஓவியத்தைப் பற்றி சொல்ல வேண்டும் என்ற ஆவலில் சென்றேன்.
ரஜினிகாந்தைப் பார்த்து ‘பத்ரிநாத்திற்குப் போய் வந்தேன்’ என்ற வார்த்தையை நான் முடிக்கும் முன்பு அவர் கேட்டார்... ‘‘பாபாஜியைப் பார்த்தீர்களா?’’
ஒரு விநாடி தூக்கிவாரிப் போட்டது எனக்கு. அவருக்கு எப்படித் தெரிந்தது? அவர் எதைச் சொல்கிறார்? பத்ரிநாராயணன், பாபாஜி போல் அமர்ந்திருப்பதைச் சொல்கிறாரா? என்று புரியாமல் விழித்தேன்.
புதிராகச் சிரித்தபடி தனது அறைக்குள் சென்றவர், வெளியில் வந்தபோது கையில் ஒரு படத்தோடு வந்தார். அந்தப் படத்தை அவர் என்னிடம் காட்டியபோது மேலும் அதிர்ந்து போனேன். பத்ரிநாத்தில் நம்பூதிரியின் அறையில் நான் பார்த்த விநோதமான பாபாஜி படம் அது!
‘‘இந்தப்படத்தைப் பற்றி சொல்லத்தான் நான் உங்களைத் தேடி வந்தேன். இது எப்படி உங்களிடம் இருக்கிறது?’’ என்று ஆச்சரியத்துடன் கேட்டேன்.
‘‘நீங்கள் ரிஷிகேஷ் போகிறீர்கள். எப்படியும் உங்களை பாபாஜி பத்ரிநாத்திற்கு அழைத்து விடுவார். அங்கு இந்தப் படத்தைப் பார்க்கும் பாக்கியம் உங்களுக்கும் கிடைக்கலாம். அதற்குப் பின்னர் இந்தப் படத்தைப் பற்றிய விபரத்தை உங்களிடம் கூறலாம் என்றிருந்தேன்’’ என்று சொன்ன ரஜினிகாந்த் பத்ரிநாத் அனுபவத்தை சொல்லத் தொடங்கினார்.
‘‘நான் பத்ரிநாத் சென்றிருந்தபொழுது, அங்குள்ள நம்பூதிரியைச் சந்திக்க அவரது அறைக்குச் சென்றேன். அவரது அறையில் இருந்த இந்தப் படத்தைப் பார்த்து ஆச்சரியமடைந்து அதையே மெய்மறந்து பார்த்துக் கொண்டிருந்தேன். அதை கவனித்த நம்பூதிரி, ‘‘இந்தப் படத்தைப் பற்றிய ரகசியத்தை இதுவரை யாரிடமும் சொல்லவில்லை. ஏனோ, உங்களிடம் சொல்ல வேண்டும் என்று எனது உள் மனது சொல்கிறது’’ என்று கூறிவிட்டு சொல்ல ஆரம்பித்தார்.
‘‘எனக்கு முன் இருந்த நம்பூதிரியின் கனவில் இந்த உருவம் தோன்றி, ‘இந்தக் கோவிலில் பத்ரி நாராயணனாக நான் தான் இருக்கிறேன்’ என்று சொல்லியிருக்கிறார். திடுக்கிட்டு எழுந்த அவர், தனக்கு இறைவன் கனவில் காட்டிய உருவத்தை அப்படியே ஓவியமாக வரைந்து வைத்துவிட்டார்.
அன்று முதல் இந்தப் படத்திலுள்ள தெய்வத்திற்கு பூஜை செய்தபிறகே பத்ரிநாராயணனுக்கு பூஜை செய்யும் வழக்கம் தொடர்ந்து வருகிறது’’ என்று நம்பூதிரி கூறினார்.
மகா அவதார் பாபாஜியால் மக்களுக்கு கிரியா யோகத்தை அளிப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட சீடர், ஸ்ரீலாஹிரி மகாசாயர். இல்லறத்தில் இருந்து கொண்டே யோக சாதனைகள் செய்து இறைவனோடு ஒன்ற முடியும் என்பதை மக்களுக்கு எளிதாக எடுத்துச் சொன்னவர் இவர். மகா அவதாரர் பாபாவை நேரடியாக தரிசித்த அவர், கிருஷ்ண பரமாத்மாதான் பாபாஜி என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறார். அது நிதர்சனமான உண்மை என்பதை எனக்கு உணர்த்திவிட்டார் பாபாஜி.
ரஜினிகாந்த் மூலம் தன்னைப் பற்றிய இந்த உண்மை எனக்குத் தெரிய வேண்டும். என் மூலம் வெளி உலகிற்குத் தெரிய வேண்டும் என்பது பாபாஜியின் எண்ணமாக இருந்திருக்கிறது.
பாபாஜியின் அந்த அற்புதப் படத்தின் பிரதி ஒன்றை எனக்குக் கொடுத்து, மன நிறைவையும், அருமையான, உண்மையான விளக்கத்தையும் எனக்களித்த நண்பர் ரஜினிகாந்திற்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. எல்லாம் பாபாஜியின் செயல் தவிர வேறென்ன!
கலியுகத்தின் கடவுளாய், மகா அவதார புருஷராய்த் திகழும் பாபாஜி எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவர். அவரது பெயரை ஒருமுறை உச்சரித்தாலே அவரது அபூர்வ ஞான சக்தி நமக்குள் பாய்வது போல் இருக்கும்.
பாபாஜி, காலத்தால் கட்டுப்படுத்த முடியாதவர். இயற்கைக்கும், விஞ்ஞானத்திற்கும் அப்பாற்பட்டவர். காரணம், காக்கும் கடவுளான பரம்பொருளே அவர்! பாபாஜியிடம் சரணடைவோம். அவர் நம்மை எங்கும் எப்போதும் காத்திடுவார்.
(பாபாஜியின் சரிதை)

அகத்தியர் தரிசன விதி!

ருந்தால், இந்த கட்டுரையைக் கூட வாசிக்கும் சந்தர்ப்பம் அமையாது;ஓரளவு பாவம் செய்திருந்தால் கனவில் அகத்தியர் தோன்றுவார்.அல்லது நேரில் வருவார்.
கீழ்க்காணும் மந்திரத்தை தினமும் காலை அல்லது இரவில் 108 முறை ஜபிக்கவும்.
மந்திரம்:
“ஓம் சிம் பம் அம் உம் மம் மகத்தான அகத்தியரே
என் குருவே வா வா வரம் அருள்க
அருள் தருக அடியேன் தொழுதேன்.”
கடும் பாவம் சிலர் முற்பிறவிகளில் செய்திருந்தால்,45 நாட்களுக்கும் மேலாக தியானம் செய்ய வேண்டும்.
இந்த 45 நாட்களில் தெரியாமல் கூட அசைவம் சாப்பிடக்கூடாது.மது கூடாது.துக்க,ஜனன வீடுகளுக்குச் செல்லக்கூடாது.இந்த தியானத்தை முடித்தப்பின்னர் வேண்டுமானால் மனைவியுடன் கூடலாம். முறையற்ற உறவைத்தவிர்க்க வேண்டும்.
பெண்களும் இந்த தியானத்தை மேற்கொள்ளலாம்.அவர்கள் தீட்டுநாட்கள் 5 நாட்கள் வரை அகத்திய தியானத்தைக் கண்டிப்பாக தவிர்க்கவும்.
ஒளிரும் தங்க நிறத்தில் 4 அல்லது 5 அடி உயரத்தில் தங்க நிற தாடியும்,ஜடாமுடியும் வைத்திருப்பார்.
அகத்தியரை நேரில் தரிசிக்கும் பாக்யம் பெற்றவர்கள்,முதலில் அவரை கையெடுத்துக்கும்பிட வேண்டும்.பிறகு, அவரது கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கவேண்டும்.
பொதுவாக கும்ப ராசி மற்றும் கும்ப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு விரைவில் அகத்திய சித்தரின் தரிசனம் கிட்டும். முற்பிறவிகள் ஒன்றில் அகத்திய வழிபாடு செய்திருந்தாலும், அகத்தியருக்கு கோவில் கட்டியிருந்தாலும்,அகத்தியரின் புகழைப் பாடியிருந்தாலும், ஏராளமான புண்ணியம் செய்திருந்தாலும் விரைவில் அகத்திய தரிசனம் கிட்டும் என்பது நிஜம். அகத்திய மகரிஷியை தரிசியுங்கள்; என்னை சீடனாக ஏற்றுக்கொள்ளுங்கள் குருதேவா என வேண்டுங்கள்.அதை விட பிறவிப்பயன் வேறில்லை.

Sunday, July 12, 2015

பிராணாயாமம் பற்றி தெரிந்து கொள்வோமா?

இன்றைய அவசர யுகத்தில், மூச்சுவிடக்கூட
நேரமில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கிறோம்.
சுற்றுப்புறக் காற்றும் சுத்தமாக இல்லை.
மாசு படிந்த காற்றை சுவாசிப்பதன் விளைவு,
சுவாசப் பிரச்னையால் அவதிப்படுபவர்களின்
எண்ணிக்கை இன்று அதிகரித்துக்கொண்டே
போகிறது. இதனால், சளி, இருமல், ஆஸ்துமா,
அலர்ஜி... போன்ற பல்வேறு நோய்களும்
வரிசைகட்டி நம்மை வாட்டுகின்றன.
'தியானம், பிராணாயாமம், யோகா
செய்தாலேபோதும்; நோய் எதுவும்
நெருங்காது’ என்று ஆளாளுக்கு அட்வைஸ்
பண்ணுவதும், பிராணாயாமப் பயிற்சி எப்படிச்
செய்வது என்பது பற்றி கூகுளில் தேடுவதும்,
யாரிடம் கற்பது என்று குருவைத் தேடி
ஓடுவதுமாக ஒருவிதத் திணறலுடனே
காலமும் ஓடுகிறது.
''உடலிலும் மனதிலும் சக்தியைப் பெருக்கி,
இரண்டிலும் கோளாறுகள் ஏற்படாமல்
பார்த்துக்கொள்வதும், வெளியில் உள்ள
காற்றுக்கும், உடலில் இருக்கும் காற்றுக்கும்
பாலமாக உள்ள சுவாசத்தைக் குறிப்பிட்ட
வகையில் மாற்றி அமைத்துக்கொள்ளக
்கூடியதுமான அற்புதக் கலைதான்
'பிராணாயாமம்’ '' என்கிறார், இந்தக் கலையில்
அனுபவம் பெற்ற என்.ஆர்.சம்பத்.
இவர், சிறு வயது முதலே உபநிடதம், பிரம்ம
சூத்திரம், இதிகாசங்கள், சாத்வீகப்
புராணங்களை முறையாகக் கற்றுத் தேர்ந்தவர்.
தமிழக அரசின் விருதுகள் உள்பட, பல
விருதுகளைப் பெற்றவர்.
பிராணாயாமக் கலையின் சிறப்புகளையும்,
பயிற்சி முறைகளையும், பயிற்சி செய்வதால்
ஏற்படும் பலன்களைப் பற்றிய வியத்தகு
விஷயங்களையும் நம்மிடம் பகிர்ந்துகொள்கி
றார்.
''முனிவர்களும் யோகிகளும் நமக்கு அளித்த
மிகப் பெரிய வரப்பிரசாதம்தான் இந்தப்
'பிராணாயாமக் கலை’. தீர்க்கமான
சிந்தனையும் தெளிவான அறிவும் அமைய
உதவும் கலை இது. மூச்சுக்காற்றானது,
உள்ளே வருவதும் வெளியே போவதும்
நிகழாமல் போனால், உயிர் ஓர் உடலில் நிலை
கொள்ளாது.
துக்கமான உணர்வில் ஒருவிதமாகவும்,
வியப்பு உணர்வில் இன்னொரு விதமாகவும்,
சோர்வாக இருக்கும்போதும் ஒரு
வகையாகவும், உள்ளத்தில் மகிழ்ச்சி
பொங்கும்போது வேறு ஒரு வகையாகவும்
மூச்சின் தன்மை இருப்பது இயற்கை.
இதைத்தான் அந்தக் காலத்தில், மனம் ஒவ்வோர்
உணர்வில் இருக்கும்போதும் சுவாசம் எப்படி
நடக்கிறது என்பதைக் கண்டறிந்து, நமக்கு எந்த
உணர்வு தேவையோ அந்த உணர்வு
உண்டாகும்படி சுவாசத்தை மாற்றி
அமைத்துக்கொண்டனர்.
சுவாசமானது, ஒரு மணி நேரத்துக்கு ஒரு
முறை, மூக்கின் இடது பக்கத் துவாரத்தில்
இருந்து வலது பக்க துவாரத்தின் வழியாக
மாறிமாறி நடைபோடுவதை அறிந்தனர். இதன்
நன்மை தீமைகளைக் கண்டறிந்து, இரு
துவாரங்கள் வழியிலும் ஒரே நீளமும்
தன்மையும் இருக்கும்படியாக மூச்சை
வலமிருந்து இடமாகவும், இடமிருந்து
வலமாகவும் மூச்சுப்பயிற்சி செய்வதைக்
கண்டுபிடித்தனர்.
உடலை உரப்படுத்தி, மனதை நிலைப்படுத்தி,
சுவாசத்தையும் மூச்சையும்
ஒழுங்குப்படுத்தி, அதன் மூலம் பயனடைய
பிராணாயாமக் கலையை அறிந்து
சாத்திரமாக்கினர். மனம் இல்லையேல் மனிதன்
இல்லை. அந்த மனதைக் கட்டுப்படுத்தவே
பிராணாயாமம் உதவுகிறது.
சுவாசத்தை நாம் மூக்கு வழியாக
உள்ளிழுத்ததும், அது தொண்டை வழியாக
மூச்சுக்குழலுக்குப் போகிறது. பிறகு, இடம்
வலம் பிரியும் குழல்களின் வழியே
நுரையீரல்களில் இருக்கும் பல்லாயிரக்கணக்க
ான காற்று அறைகளுக்குச் செல்கிறது. இது
நம் மார்பில் அடங்கியிருந்தாலும், இதை
வெளியே எடுத்துப் பிரித்துப் பரப்பி வைத்தால்
1,40,000 சதுர அடி பரந்திருக்குமாம்!
சுவாசிக்கும் ஐந்து இடம்
மூக்கு வழியாக சுவாசிக்கும்போது,
உட்புகும் காற்றானது, பிராணன், அபானன்,
உதானன், வியானன், சமானன் என்ற ஐந்து
இடங்களில் இருந்து ஐந்து வேலைகளைப்
புரிகின்றது.
1. பிராணன்: உடலின் மேலே இயங்கும் இது
'தலைமை சுவாசம்’ எனப்படுகிறது. மேலும்,
நுரையிரலை இயக்கி சுவாசம் மற்றும் ரத்த
ஓட்டத்தை நிகழ்த்துவதோடு புலன்களையும்
இயக்குகிறது.
2. அபானன்: கீழ் உடலில் இருந்து கீழ்நோக்கிய
வேலைகளை நிகழ்த்துகிறது. கழிவுகளை
வெளியேற்றுகிறது. 'குதம்’ எனும்
மலத்துளையே இதனுடைய இடம்.
3. உதானன்: உடலை எழுந்து நிற்கச் செய்வது,
மேல் நோக்கி இயங்கும். உணவை
விழுங்குதல், உறங்க வைப்பது.
தொண்டையில் இருக்கும் இது, உயிர்
பிரிகையில் ஸ்தூல உடலில் இருந்து நுட்ப
உடலைப் பிரிக்கிறது.
4. சமானன்: உணவைச் செரித்து, சக்தியை
ரத்தத்தில் கலக்கச் செய்வது. தொப்புள் பகுதி
இதனுடையது. வாயுக்களைச் சமப்படுத்தும்.
5. வியானன்: ரத்த ஓட்டத்தை நடத்துகிறது.
உடலின் உறுப்புகளிலும் பரவி வேலை
செய்கிறது.
தேவைகள்
நம்மை நாமே பயிற்சிக்குத் தயார்
செய்துகொள்ளத் தேவையானவை:
தேர்ந்த குரு
பயிற்சிக்கு ஏற்ற இடம்
முறையான உணவு
தகுந்த காலம்
நாடிகள் பற்றிய அறிவும் தூய்மையும்
உடல் தூய்மை
தொடர்ச்சி பயிற்சி
குரு: அதிக நேரம் மூச்சை நிறுத்திப் பழகவும்,
வகை வகையான பிராணாயாமங்களில் திறமை
பெறவும் சிறந்த குருவின் நேரடிப் பார்வையில்
பயிற்சி செய்வது.
ஏற்ற இடம்: மூச்சுப்பயிற்சிக்கு என்று
தனியாக ஓர் இடம் வைத்துக்கொண்டால்
நல்லது. திறந்தவெளி, இயற்கைக் காட்சிகள்
நிறைந்த சூழல், கடற்கரை, ஆற்றங்கரை,
வீட்டின் மொட்டைமாடி... என நல்ல காற்றும்
வெளிச்சமும் வரும் இடமாகத் தேர்வு
செய்யவேண்டும்.
முறையான உணவு: மனதுக்கும் உணவுக்கும்
நெருங்கியத் தொடர்பு உண்டு. ஆன்மிகம்,
யோகம் போன்ற பயிற்சிகளைப்
பழகுபவர்களுக்கு மன அமைதி அவசியம்.
மனதை சாந்தமாக வைத்திருக்க, சாத்வீக
உணவு உட்கொள்வதே நல்லது. இதனால்,
உள்ளேயோ, வெளியேயோ மூச்சைக் கும்பகம்
செய்யும்போது, விரும்பும் நேரம் வரை
நிறுத்த முடியும்.
எளிதில் ஜீரணமாகக்கூடிய தானிய உணவுகள்,
சாறுள்ள பழங்கள், பச்சைப் பயறு, காய்கறிகள்,
எலுமிச்சம்பழச் சாறு, பால், வெண்ணெய்,
நெய், கைக்குத்தல் அரிசி, சிவப்பரிசி,
கோதுமை, கம்பு, கேழ்வரகு மாவால் ஆன
உணவுகள் ஆகியவை எடுத்துக்கொள்ளலாம்.
உப்பு, புளிப்பு, காரம், கசப்பு மிகுந்த
உணவுகளை உண்பதைத் தவிர்க்கவேண்டும்.
சமைத்து வெகுநேரம் ஆன, பழைய,
கெட்டுப்போன உணவுகளைச் சாப்பிடக்
கூடாது. பச்சைக் காய்கறிகள், தேங்காய்
போன்றவற்றைச் சாப்பிடலாம். அதிகம்
வெயிலில் அலைவதோ, நெருப்புக்கு அருகில்
இருப்பதோ கூடாது.
அரை வயிறு உணவும், கால் வயிறு காற்றும்,
கால் வயிறு தண்ணீரும் உட்கொள்ள
வேண்டும். அதிகப் பசியுடனோ, சாப்பிட்ட
உடனோ பிராணாயாமம் செய்யக்கூடாது.
தகுந்த காலம்: மார்ச் முதல் ஏப்ரலில் அதாவது
வசந்த காலத்தில் பயிற்சியைத் தொடங்கலாம்.
இலையுதிர் காலமான செப்டம்பர் முதல்
அக்டோபர் வரைகூட, பயிற்சியைத் தொடங்க
ஏற்ற காலம். பிற்பகலில் காற்றில் சூடு அதிகம்
இருப்பதால், பயிற்சிகளை தவிர்த்துவிடலாம்.
காலை 4 மணியில் இருந்து 6 மணி
வரையிலான குளிர்ந்த சமயத்தில் பயிற்சி
செய்வது உசிதம்.
நாடிகள் பற்றிய அறிவும் தூய்மையும்:
அதிகாலை வெயில் வருமுன் பழகுதல்
நல்லது. மாலை சூரியன் மறையும் நேரம்
அதாவது 6 மணிக்குச் செய்யலாம்.
முதலில் நாடி சுத்தீயில் தொடங்கும்போது,
காலை, நண்பகல், மாலை, நள்ளிரவு என
நான்கு வேளைகளில் பழகுவார்கள். இப்படி ஒரு
மாதம் செய்து, நாடிகளைத் தூய்மை
செய்துகொள்ளலாம்.
உடல் தூய்மை: தினமும் காலையில்
எழுந்ததும், பல் துலக்கி, கை, கால்களை
நன்றாக கழுவவேண்டும். பிறகு, கடவுளை
வணங்கிவிட்டு, பயிற்சியை
மேற்கொள்ளவேண்டும்.
உடல் சுத்தம் மனதையும் புத்துணர்ச்சியா
க்கும். கோபம், வெறுப்பு, கூடாத உணவு,
மாறான நடவடிக்கை, கூடா குணம், நடத்தைக்
கோளாறு உள்ளவர்களுக்குப் பிராணாயாமக்
கலை கை கூடாது.
தொடர் பயிற்சி: அன்றாட கடமைகளை
செய்வது போல், மூச்சுப்பயிற்சியையும்
தொடர்ந்து செய்துவந்தால், ஆர்வம்
அதிகரிக்கும். தினமும் ஒருவித புத்துணர்ச்சி
கிடைப்பதை உணரமுடியும்.
கடவுள் மீதான நம்பிக்கை, உணவு, பேச்சு,
செயல், உறக்கம்... என எதிலும் மிதமாக
இருத்தல், அக்கறையுடனும்
விடாமுயற்சியுடனும் ஈடுபடுதல் இதுவே
பிராணாயாமத்தில் வெற்றிபெறத் தேவையான
தகுதிகள்.
பிராணாயாமத்தின் நிலைகள்
மூச்சை உள்ளிழுப்பது, கும்பகம் செய்வது,
வெளிவிடுவதில் உள்ள ஏற்றத்தாழ்வை
வைத்து, பிராணாயாமத்தை முதல் நிலை, நடு
நிலை , உயர் நிலை என மூன்று நிலைகளாகப்
பிரிக்கலாம்.
முதல் நிலை:
இது சாதாரணப் பிராணாயாமம்.
'தாழ்ந்த வகை’ எனப்படும் இந்த முதல்
விதத்தில், 12 முறை உள்ளே இழுத்து (பூரகம்
செய்து), 48 முறை உள்ளே வைத்திருந்து
(கும்பகம் செய்து), 24 முறை மூச்சை
வெளியே (ரேசகம்) விடுவது. (ஒரு முறை
என்பது, கண் மூடி கண் திறக்கும் கால அளவு.
இதை ஒரு மாத்திரை என்றும் கணக்கிடலாம்.)
ஒரு மாதம் வரை திணறல், சிரமம் இல்லாதபடி
செய்ய பழகியதும், நடுநிலைக்குப் போகலாம்.
நடு நிலை:
இதில், மூச்சை 16 முறை உள்ளிழுத்து 64
முறை நிறுத்தி, சீராக 32 முறை வெளியே
விடலாம். உடம்பில் வியர்வை வழியும்.
அதைத் துண்டால் துடைத்துக்கொள்ளாமல்
வெறும் கைகளாலேயே துடைப்பது நலம்.
இந்தவிதமான பிராணாயாமத்தை மூன்று
மாதங்களுக்குத் தொடர்ந்து பழகிட வேண்டும்.
இதன் பிறகே உயர்நிலை பிராணாயாமத்தை
அடையவேண்டும்.
உயர் நிலை:
இதில் 24 முறை மூச்சை உள்ளே இழுக்கவும்.
உடனே, 96 முறை உள்ளே நிறுத்திக் கும்பகம்
செய்யவும். கும்பகம் செய்தவுடன் 48 முறை
வெளிவிடவும். இப்படி ஒழுங்காக உயர்த்தி,
திணறல் இன்றியும், மூச்சை விரைவின்றி
சீராகவும் இழுக்கவும் விடவும்
பழகவேண்டும்.
காலை 4 மணிக்கு அதாவது சூரிய
உதயத்துக்கு முன் எழுந்து விரும்பும்
தெய்வத்தை வணங்கிவிட்டு,
பிராணாயாமத்தை ஆசன நிலையில் பயிற்சி
செய்யவேண்டும்.
காலை 11 மணி, மாலை 5 மணி, இரவு 11
மணி என வைத்துக்கொண்டு நான்கு முறை
பயிற்சியில் ஈடுபடவேண்டும். ஒரு
தடவையில் 80 என்று 320 பிராணாயாமங்கள்
ஒரு நாளில் பயிற்சி செய்வதுதான் தீவிர
பயிற்சி.
பலன்கள்: பயிற்சியில் நாம் பிரணவ
மந்திரத்தை ஜெபிக்குபோது உடலில் வெப்பம்
உண்டாகிறது. இது அழுக்குகளைப் போக்கும்.
புது நிலையில் நாடிகள் தூண்டப்படுகின்றன.
சிலருக்கு, உடலின் பல பாகங்களில் வலிகூட
ஏற்படலாம். இருந்தாலும் பயிற்சியை
முறைப்படி விடாமல் செய்து வரவேண்டும்.
உடல் வெப்பத்துக்கு ஏற்ப, பால், வெண்ணெய்
ஆகியவை பயன்படுத்தவேண்டும். எண்ணெய்க்
குளியல் அவசியம் தேவை.
எளிய பிராணாயாமங்கள்
உடலின் உதவியின்றி மனம் ஒன்றும் செய்ய
முடியாது. மனம் அனுசரிக்காமல் உடலாலும்
ஒன்றும் சாதிக்க முடியாது. ஆகவே, இவை
இரண்டையும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து
செயல்படுமாறு பழக்கப்படுத்திக்
கொள்ளவேண்டும்.
தலைவலி, வயிற்றுவலி, சூடு, குளிர்... என
வேறு உபாதைகளுடன் உடல் இருந்தால், அது
நோய் கொண்ட நிலை. இந்த நிலையில்
மனதால் பிரயோகப் பயிற்சிகள் செய்ய
முடியாது. ஆகவே, உடலை ஆசன சாத்திரப்படி
பல ஆசனங்களால் ஆரோக்கியமாக
வைத்துக்கொள்ளவேண்டும். உடல் நினைவே
இன்றி இயங்க முடியும்போதே நாம் உடல் நல
ஆரோக்கியத்துடன் இருக்கிறோம் என்று
பொருள்.
எளிமையான ஓர் ஆசனத்தில் நீண்ட நேரம்
உட்காரக்கூடிய பக்குவத்துக்கு நாம் தயாராக
வேண்டும். நெஞ்சு, கழுத்து, தலை
போன்றவை ஒரே நேர்க்கோட்டில் இருக்க
வேண்டும். உடல் முன்னால், பின்னால், இடம்,
வலம் என எப்படியும் சாயாமல், வளையாமல்
நேராக உட்கார்ந்து, நிமிர்ந்திருக்க வேண்டும்.
தொடர்ந்து உட்காரும்போது ஆசன நிலை
சரியாக அமைந்துவிடும். சற்றே குண்டாக
இருப்பவர்களுக்கு பத்மாசனம் உடனே
வந்துவிடாது. ஆசனம், சரியாக வரும் வரை
பயிற்சியைத் தொடங்காதிருக்க
வேண்டியதில்லை. ஆசன நிலையுடன்
இதையும் பழகிவரலாம்.
வயோதிகர்களும் முடியாதவர்களும்
நாற்காலியில் உட்கார்ந்தபடியே பிராணாயாமம்
செய்யலாம்.
ஒழுங்குமுறை
பிராணனின் வெளித்தோற்றம் - உடல்மூச்சு.
எனவே, ஒழுங்கற்று நடக்கும் மூச்சை
முதலில் ஒழுங்குபடுத்தவேண்டும். இதில்
இருந்து பிராணாயாமம் தொடங்கிவிடுகிறது.
இதில் ஜெயித்தால் உடல், மன இயக்கங்கள்,
பிறருடைய செயல்கள், பிரபஞ்ச இயற்கை...
என எல்லாவற்றையும் படிப்படியாகக்
கட்டுப்படுத்தும் திறன் வந்தடையும்.
மனநிலைக்கு ஏற்ப மூச்சு விரைவாகவும்
மெதுவாகவும் இல்லாமல், அதை அடக்கி,
மாற்றி அமைக்கும்போது, மாறுபடும்
மனநிலையைக்கூட மூச்சு கட்டுப்படுத்திவ
ிடுகிறது.
பலன்கள்: உடலும் மனமும் கட்டுப்பட்டு
இருக்கும். நினைத்ததைச் சாதிக்க முடியும்.
நல்ல தோற்றப் பொலிவு, உடல் பலம், மன
உறுதி, மகிழ்ச்சியான வாழ்க்கையைப்
பெறலாம். வீரியமும் ஒருமுகப்பட்ட மனமும்
எதையும் வசீகரிக்கும் சக்தியும் மேம்படும்.
சுவாசக் கணக்கு
ஒருவர் நாள் ஒன்றுக்கு சுமார் 21,600 முறை
மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுகிறார். அவர்
வேகவேகமாக மூச்சு விடும்போது, இந்த
எண்ணிக்கை சீக்கிரமே குறைந்து, ஆயுளும்
குறைகிறது. யோகி, ஆயுளை
ஆண்டுக்கணக்கால் அளவிடுவது இல்லை.
மூச்சுக் கணக்கில்தான் அளக்கின்றனர்.
உயிராற்றல் அதாவது பிராணன், வெளி
மூச்சுக்குப் பிறகு உள்ளே இழுத்துக்கொள்ளு
ம் மூச்சின் அளவிலேயே அதிகரிக்கவோ,
குறையவோ செய்யும். ஒருவர், நிமிடத்துக்கு
15 முறை மூச்சை இழுப்பதால் ஒரு நாளைக்கு
21,600 முறை சுவாசிக்கிறார் என்று
கணக்கிடப்படுகிறது.
சுவாச ஒழுங்கு
உள்ளிழுக்கும் மூச்சை மெதுவாக இழுத்துப்
பழகுவதுபோல, வெளிவிடுவதையும்
மெள்ளச் செய்தால், இதுவே சுவாச
ஒழுங்கு.உள்ளிழுப்பதை 'சுவாசம்’ என்றும்,
வெளிவிடுவதை 'பிரச்வாசம்’ என்றும்
கூறுவர். இரண்டின் வேகத்தையும்
குறைத்தால் அதை நிகழ்த்தும் பிராணன் நமக்கு
லாபமாகிறது. ஆகவே, நிமிடத்துக்கு 15 முறை
மூச்சுவிடும் மனிதனுக்கு, 100 ஆண்டு
ஆயுள். ஒரு நிமிடத்துக்கு நான்கே மூச்சுவி
டும் ஆமை எத்தனை காலம் வாழ்கிறது
தெரியுமா? 400 ஆண்டுகள்! ஆச்சரியமாக
இருக்கிறதுதானே!? பிராணாயாமம் மூலம்
சக்தி அதிகரிக்கிறது. சக்தி இல்லையெனில்
சுகம் இல்லை. எனவே, பிராணனே
உடலுக்கான பலத்தையும் சுகத்தையும்
தரவல்லது.
பிராணாயாமங்களிலும் பல வகை
சீத்காரி - உடல் வெப்பத்தைத் தணிக்கும்.
சீதளி - உடல் குளிர்ச்சியை உணரச் செய்யும்.
உஜ்ஜாயி - மார்புப் பகுதி நலம் அடையும்.
பிரமரீ - வண்டு போல ரீங்காரம் செய்வது.
நாடி சுத்தீ - நாடிகளைத் தூய்மையாக்குதல்.
பிளவனீ - வயிற்றில் பிராணனை நிரப்புதல்.
சுரியபேதா - பிங்கலை வழி பூரகம் செய்தல்.
மேல் உடலைத் தூய்மையாக்கும்.
மூர்ச்சா - மூர்ச்சை வரும் வரை செய்தல்.
கபாலபாதி - கபாலத்தை ஒளிமிகச் செய்தல்.
பிராணாயாமத்துக்கான எளிய பயிற்சிகள்
நாடி சுத்தீ
நாடிகள் அழுக்குகளால் அடைப்பட்டு
இருந்தால் அவற்றுள் வாயு வடிவப் பிராணன்
நுழைய முடியாது. எனவே, நாடிகளைத்
தூய்மையாக்கும் முறைகளில் நிர்மானு,
சமானு என்ற இரண்டு வகைகள் உண்டு.
நிர்மானு என்பது, உடலைத் தூய்மை ஆக்கும்
முறைகளில் நாடி சுத்தம் செய்வது. சமானு
என்பது வேதமந்திர பீஜ மந்திரத்துடன் மூச்சை
இழுத்துவிட்டுச் செய்வது.
பிராணாயாமத்தின் பொதுவான அளவு 1:4:2.
அதாவது, உள் மூச்சு ஒன்று, கும்பகம் நான்கு,
வெளி மூச்சு இரண்டு. இப்படி ஒரே ஒரு
பிராணாயாமம் தினமும் பழகினாலும் போதும்.
செய்முறைகள்:
1 முதலில் கால்களைக் குறுக்காகப் போட்டுப்
பத்மாசனத்தில் அமரவும். கண்களை மூடி,
புருவ மையத்தில் மனதைப் பதிக்கவேண்டும்.
வலது கையின் பெருவிரலையும், கடை
மூன்று விரல்களையும் பிரித்துக்கொண்ட
ு மூக்கைப் பிடியுங்கள். வலது பெருவிரலால்
மூக்கின் வலதுபக்கத் துளையை
அடைத்துக்கொள்ளவும். இடது மூக்குத்
துளை வழியே முடிந்தமட்டும் மூச்சை ஒரே
சீராக ஓசையின்றி உள்ளே இழுங்கள். உடனே,
அதே மூக்குத் துளை மூலம் மூச்சை மெள்ள,
சீராகத் தொடர்ந்து வெளியே விடுங்கள்.
மீண்டும் மீண்டும் 12 முறை இப்படிச்
செய்யவும். இது ஒரு சுற்று.
பிறகு, வலது மூக்கைத் திறந்து மற்ற மூன்று
விரல்களால் இடது மூக்கை அடையுங்கள்.
பெருவிரலை எடுத்து மூக்கின் வலது
பக்கமாக முடிந்த அளவு மூச்சை மெள்ள
உள்ளே இழுங்கள். உடனே, அதே மூக்கு
மூலம் மூச்சைச் சீராக வெளியே விடுங்கள்.
இதையும் 12 முறை செய்தால் ஒரு சுற்று.
மூச்சை இழுக்கும்போதும் விடும் போதும்
'ஓம்’ அல்லது ஏதாவது மந்திரத்தை
ஜபிக்கலாம்.
முதல் வாரம், ஒரு சுற்று இரு மூக்கிலும்
சேர்த்துச் செய்யுங்கள். இரண்டாம் வாரத்தில்
இரண்டு சுற்றும், மூன்றாம் வாரத்தில்
மூன்று சுற்றும் செய்யுங்கள். ஒரு சுற்றுச்
செய்தவுடன் சில நிமிடங்கள் ஓய்வெடுத்துக்
கொள்ளலாம். இந்த ஓய்வில் சாதாரணமாகவே
சுவாசிக்கலாம். இதுவே ஓய்வுதான்.
இந்தப் பயிற்சியில் உள்ளே மூச்சை நிறுத்தும்
கும்பகம் இல்லை. உங்கள் திறமைக்கேற்ப
அதிகச் சுற்றுகளைப் பழகலாம்.
பலன்கள்: இது மூச்சை ஒழுங்குப்படுத்தும்.
இதனால் மூச்சளவு ஒரே சீராகி, நாள்பட்ட
நோய்களையும் தீர்க்கும். உடலில் பலமும்
கூடும்.
2 இரு மூக்குத் துளைகளின் மூலமும் முடிந்த
அளவுக்கு மூச்சை ஓசையின்றி ஒரே சீராக
மெள்ள இழுத்து, நுரையீரல்களில்
நிரப்பிக்கொள்ளவும். உடனே, அதேபோல
இரண்டு மூக்குத் துளைகள் மூலமும்
மூச்சை வெளியே விடவும். இதை 12
முறைகள் செய்ய ஒரு சுற்றாகும். நேரம்,
திறமைக்கு ஏற்ப அதிகச் சுற்றுகள்
செய்யலாம். இதிலும் கும்பகம் இல்லை.
3உங்களுக்குத் தெரிந்த ஆசனம் எதுவோ
அதுபோல் அமருங்கள். மூக்கின்
வலதுபக்கத்துளையை வலப் பெருவிரலால்
மூடி, மூக்கின் இடதுபக்கத் துளையில்
சுவாசத்தை இழுங்கள். இடது துளையை
மூடியவாறு வலது மூக்கு வழியாக மெள்ள
இழுத்த காற்றை வெளியே விடுங்கள்.
வலமூக்கு வழியே முடிந்த அளவு காற்றை
உள்ளிழுங்கள். இடமூக்கைத் திறந்து அதன்
மூலம் உள்ளே இழுத்த காற்றை வெளியே
விடுங்கள். இதிலும் கும்பகம் இல்லை. 12
முறை இதைச் செய்யலாம். இது, ஒரு சுற்றுக்
கணக்கு. இதில் மூக்கு மாற்றிச் செய்வதே
சிறப்பு.
4நாற்காலி, சோபாவில் வசதியாக
அமர்ந்துகொள்ளுங்கள். இரு மூக்குத்
துளைகள் மூலம் எவ்வளவு முடியுமோ
அவ்வளவு மூச்சை உள்ளே இழுங்கள்.
முடிந்தவரை உள்ளே நிறுத்திக்கொள்ளுங்கள்.
பிறகு வெளியே சீராக மெள்ள நியமப்படி
வெளியே விடுங்கள். இது எளிய
கும்பகமாகும். உள்ளிழுத்தல், நிறுத்தல்,
வெளியேவிடலில் குறிப்பிட்ட விகிதம்
எதுவும் அளவாக இல்லை. ஆனால், நன்கு
இழுப்பது, முழுவதும் வெளிவிடுவதும்,
சுகமாக இருக்கும் வரை மட்டுமே
அடக்குதலும் உண்டு.
பலன்கள்: ரத்த ஓட்டம் சீராகும். களைப்பு
அகலும். உடல் உறுப்புகளிடையே ஒழுங்கு,
ஒருங்கிணைப்பு உண்டாகும். மனம்
ஒருநிலைப்படும். கோபம், தீய சிந்தனை
அகலும். மன உறுத்தல், உளைச்சல் நீங்கும்.
படிப்பவர்களுக்கு நல்ல ஞாபகசக்தி தங்கும்.
மன ஆற்றல் அதிகரிக்க இந்தப் பயிற்சியைப்
பழகலாம். சோர்வு இருக்காது. 30 வருட
ஆஸ்துமா பிரச்னைகூட தீரும். ஒரு முறை
செய்துவிட்டாலே அடிக்கடி செய்யத்
தூண்டும் பயிற்சி இது.
சீத்காரி
இதற்கு 'குளிரானது’ என்று பொருள். செய்வது
மிகவும் எளிது. இந்தக் கோடை காலத்தில்
இதைச் செய்வதன் மூலம் உடல் வெப்பத்தைத்
தணித்துக்கொள்ளலாம்.
ஏதேனும் ஓர் ஆசனம் போட்டு அமருங்கள். இரு
வரிசைப் பற்களையும், சேர்த்து
வைத்துக்கொள்ளுங்கள். வாய்க்குள் நாக்கை
மேலண்ணத்தில் ஒட்டியவாறு கொஞ்சம்
மடித்துக்கொள்ளுங்கள். 'இஸ்ஸ்ஸ்...’ என்று
காற்றை வாய்வழியே உள்ள பல் இடுக்கு
வழியாக உறிஞ்சவேண்டும். முடிந்தவரை
கும்பகம் செய்யலாம்.
காரம் நாவில் பட்டதும், அல்லது ஜில்லென
ஐஸ் பட்டால் 'ஸ்..ஸ்’ என்று காற்றை
இழுப்பது போலத்தான். பிறகு, மெள்ள மூக்கின்
வழியே காற்றைச் சீராக வெளியேற்றுங்கள்.
வாயால் இழுத்து மூக்கால் வெளிவிடுவதால்,
முடிந்தவரை பற்கள் ஒன்றாக சேர்ந்தபடி
இருக்கவேண்டும். கும்பகம் செய்யும்போது
நாக்கின் நுனி மேலண்ணத்தில் தொட்டு
அமுத்தியிருக்கவேண்டும். காலை, மாலையில்
10 முறை செய்யப் பழகுங்கள்.
சவாசனத்தில் பிராணாயாமம்
இது உடல் முழுவதுக்குமான பிராணாயாமம்.
சூடு இல்லாத சமமான ஒரு தரையில்
விரிப்பைப் போட்டு, தரையில் முதுகு
படும்படி மல்லாந்து படுங்கள். கைகளையும்
கால்களையும் நன்றாக நீட்டிக்கொள்ளுங்கள்.
உடல் உறுப்புகளை விறைப்பு இன்றி
கிடத்துங்கள். பக்கவாட்டில் நீண்டு கிடக்கும்
கைகளில் உள்ளங்கைகள் மேலே பார்த்தபடி
இருக்கட்டும். மூட வேண்டாம். பாதங்கள் நேரே
சற்று விலகி இருக்கட்டும். உடலின் தசைகள்,
நரம்புகள், உறுப்புகள் எல்லாம் தளர்ந்து
இருக்கட்டும். அகலமாக இருந்தால் கட்டிலில்
கிடந்து இதைப் பண்ணலாம்.
இரு மூக்குத் துளைகள் மூலமாக ஓசையின்றி
மூக்கு சுருங்குதலோ, விரிதலோ இல்லாமல்
மெள்ள சீராக மூச்சை உள்ளே இழுங்கள்.
முடியும் வரை சிரமம் இல்லாத வரையில்
மூச்சை உள்ளே நிறுத்துங்கள். விடத்
தோன்றும்போது இரு மூக்கின் வழியாகவும்
மெள்ளச் சீராக மூச்சை, தொடர்ச்சியாக
வெளியே விடுங்கள்.
இப்படி காலையில் 10 முறையும், மாலையில்
10 முறையும் செய்து பழகுங்கள். மூச்சை
இழுக்கும்போதும் விடும்போதும் 'ஓம்’ என்று
ஜபிக்கலாம். கும்பகத்தின்போதும் ஜபிக்கலாம்.
பலன்கள்: மனமும் உடலும் பூரண
ஓய்வுகொள்கிறது. கொஞ்சம் வயதானவர்கள்
சுகமாக இதைப் பயிற்சிக்கலாம்.
மனக்கொதிப்பு, மன அழுத்தம், மறதி,
படபடப்பு, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்
போன்றவை குணமாகும். இதயம் இதமாக
இருக்கும்.
நடந்துகொண்டே பயிற்சி
தோள் பட்டைகள் பின் செல்ல, தலை நிமிர்ந்து
நடக்க வேண்டும். ஓர் அடிக்கு ஒன்று என,
மூன்று அடிகள் எடுத்து, மூன்று 'ஓம்’
அல்லது ஏதாவது ஒரு மந்திரம் சொன்னபடி
மெள்ள மூச்சை இழுங்கள். பிறகு, 12 அடிகள்
எடுத்து வைத்து 12 'ஓம்’களை ஜபித்து
மூச்சை உள்ளே நிறுத்தி வையுங்கள். பிறகு,
ஆறு அடிகள் எடுத்துவைத்து ஆறு
'ஓம்’களைச் சொல்லி மெள்ள மூச்சை
வெளியே விடவேண்டும். இது ஒரு சுற்று.
இதன் பிறகு, சற்று ஓய்வாக நடக்கலாம்.
காலடி வைக்கும்போது 'ஓம்’ எனச் சொல்வது
சிரமமாகத் தெரிந்தால், காலடி எடுத்து
வைத்தல் பற்றிக் கவலைப்பட வேண்டாம்.
அதிக வேலைச் சுமையுள்ளவர்கள் வாக்கிங்
போகும்போது காலையிலும் மாலையிலும்
இதைச் செய்யலாம். சுத்தமான காற்றில்
நடந்தபடியே பிராணாயாமம் செய்வது,
உடலுக்கு மிகவும் சந்தோஷத்தைத் தரும்.
அமர்ந்திருந்து செய்தே பழகியவர்கள், இப்படி
நடந்தபடியே செய்யலாம்.
பலன்கள்: தாகமாக இருக்கும்போது இந்தப்
பயிற்சியைச் செய்தால் தாகம் தீரும். முக
அழகு கூடும். உடல் வலிமை உண்டாகும்.
பசி, தாகம், தூக்கத்தை வெல்லலாம்.
விஷத்தைக்கூட முறியடிக்கும் வல்லமை
பெற்ற இந்தப்பயிற்சி, உடல் வெப்பத்தையும்
குறைக்கும்.
நின்றுகொண்டே பிராணப் பயிற்சி செய்வது
நல்ல பலனைத் தரும்.
சீதளிப் பிராணாயாமம்
இதுவும் குளிர்ந்த பிராணாயாமம்தான். சீதளம்
எனில், குளிர்ச்சி என்று பொருள். கோடையில்
வெளியில் அதிகம் அடிக்கும்போது செய்தால்
குளிர்ச்சியாக இருக்கும். உடலில் இருந்து
வெப்பம் காதுகள் வழியே வெளியேறுவதை
உணரமுடியும்.
ஆசனத்தில் வசதியாக உட்கார்ந்துகொள்
ளுங்கள். இரு உதடுகளின் இடையிலும்
நாக்கைத் துருத்தி குழல் போல் மடித்து
வெளியே நீட்டவும். இருபுறமும் மடிந்த
நாக்கு நடுவில் குழல்போலப் பள்ளமாக
இருக்கும். 'ஷ்’ என்று சீறும் ஓசையுடன்
காற்றை வாய் வழியாக உள்ளே
இழுத்திடுங்கள். பிறகு காற்றை
விழு