Saturday, January 30, 2016

எந்த பெயர் சொல்லி கடவுளரை அழைத்தாலும் அது சிவனே.

வாசியோகம்என்பது குருமுகமாக நெற்றிப்
பொட்டைத் தொட்டுக் காட்டிப் பூட்டுத்
திறக்க வழி செய்து, மூச்சுக் காற்றை உள்ளே
இழுத்து வெளிப்படுத்தாது உள்ளுக்குள்ளேயே
மேலும் கீழுமாக ஓட்டிச் சமாதி நிலை எய்தச்
செய்வதாகும். அவ்வாறு இடகலை, பிங்கலை
வழியாக மூச்சுக்காற்றை ஒரே முறையில்
ஏற்றிப் பின்பு இறக்கில் புருவமத்தியில்
பூரிக்கச் செய்தல் வேண்டும். இவ்வாறு
செய்தால் கபமெனும் எமனை எட்டி
உதைக்கலாம். வாசியோகத்தினால் பிராணன்
(காற்று) தங்கு தடையற்றுச் சுழுமுனையை
நாடிச் செல்லும். வாசியோகம் பயிலப் பயில
உடலில் மறைந்துள்ள தேவையற்ற ஊன் (கபம்)
மறையும். இதனால் குண்டலினியை எழுப்ப
அநுபவங்களைப் பெற்று சித்தியடையலாம்.
இரு மூக்குத் துவாரம் வழியாகப் பிராணனை
வெளிவிடாமல் ஒன்று சேர்க்கும்போது புருவ
மத்தியில் அக்னிகலை தோன்றும். இந்த
அக்னியில் நாட்டம் வைத்தால் (மனதை
நிறுத்தினால்) கோபுரத்துக்குச் செல்லும்
வாயில் பூட்டான நாசிமுனை புருவமத்தி
திறந்து கொள்ளும். மறக்காமல் தினம்
ஒருதடவை சாதனை செய்துவரவேண்டும்.
மெளனத்துடன் அடங்கி அமைதியாக இருந்தால்
மதிஅமுதம் சுரந்துவிடும். மனம் தூங்காமல்
தூங்கி சுகம் பெறும். இந்நிலை ஏற்பட மூக்கு
மார்க்கமான மற்றோர் வீட்டிற்குச் செல்லாமல்
நெற்றி மார்க்கமாக மேலே செல்லவேண்டும்.ப
ிராணன் இயல்பாக உலவும் வழி இடகலை,
பிங்கலைகளாகும். அவைகளை மாற்றிச்
சுழுமுனையில் செலுத்துவதையே திருமூலர்
கூறுகிறார். மூக்கின் வழியாக உள்ளே சென்று
மீண்டும் மூக்கின் வழியாக வெளியே ஏறுகிற
காற்றை அவ்வாறு செல்லவிடாமல் தடுத்து
நிறுத்தி மூலாதாரத்தில் மேல் உள்ள
முதுகெலும்பின் அடிப்பாகத்தில் இருந்து
முதுகெலும்பின் உள்ளே உள்ள சிறு துவாரம்
வழியாகச் செலுத்தினால் அதாவது
சுழுமுனை வழியாகச் செலுத்தினால்
மூச்சானது சிறிது சிறிதாக மேலேஏறி
அண்ணாக்கில் உள்ள துவாரத்தின் வழியாகப்
புருவ மத்திக்கு வந்து அங்கிருந்து உச்சிக்குச்
செல்லும். இவ்வாறு ஏற்றி இறக்கிச் செய்யும்
மூச்சுப் பயிற்சியே வாசியோகம் எனப்படும்.
சுழுமுனை வாசல் திறப்பதற்கான விபரம்
:வாதம், பித்தம், சிலேத்துமம்(கபம்) மூன்றும்
ஆகாது. எனினும் சிலேத்துமத்தின்
சேர்க்கைதான் (சேத்துமம்) உச்சிக்குழிக்குக்
கீழே உள்நாக்குக்கு மேலே எரிகிற பச்சை
விளக்கை பங்கப் படுத்துகிறது. ஆகவே தான்
சுழுமுனை வாசல் திறக்க கபம் வெளியேற
வேண்டும். இதற்குக் காலைப் பிடித்தல் ஒன்றே
வழி. (கால்-காற்று) காற்றில் உட்கலந்து
ஊடாடி நிற்கும் நெருப்பை யோகிகள்
உட்கொள்கிறார்கள். இந்தக் கனலால் கபம்
அறுபடுகிறது. இந்தக் கபம் வெறும் சளி
மாத்திரம் அல்ல. உடலெங்கும் ஒட்டிக்
கிடக்கும் கசிறு. இதை புத்தவேதம், "
உட்கவிழ்ந்த மேகம்" என்று கூறுகிறது.
ஊத்தை சடலம், உட்குழிந்த பாண்டம் என்று
உடல் அழைக்கப்பட்டதற்கு "கபமே"
மூலகாரணம். எனவே கபத்தை எமன் என்றே
அழைக்கலாம்."ஊனினை உருக்கி, உள்ளொளி
பெருக்கி" என்கிற திருவாசக அடியால் இதைத்
தெளிவு பெறலாம். ஊன் என்பது
ஊத்தைக்கசிறு, உடல் என்பதாக நாம் கொள்கிற
பொருள் தவறு. இந்த ஊன் உருகுவதற்கு
உள்ளொளி பெருகவேண்டும். வாசியோக
சாதகர்கள் காற்றிலிருந்து (பிராணன்)
நெருப்பைக் கொள்முதல் செய்கிறார்கள். இந்த
நெருப்பின் நேயச் சேர்க்கையால் உள் ஒடுங்கிய
பொறி உள்ளொளியாக விளக்கம் பெற்றுப்
பெருகுகிறது. பிறகு உவப்பிலா ஆநந்தமாய்த்
தேன் அமிர்ததாரையாக வருகிறது. இது
வாசியோகத்தின் சிகர சாதனை என்று
கருதலாம்.
கபம் என்பது உடல் துரியநிலை பெற
(நிர்விகல்ப சாயுச்யநிலை) இடையூறாக
இருக்கிறது. மாவுப்பொருட்கள் நிறைந்த
உணவுகள் அனைத்தும் கபம் விளைகிற
கால்வாய்கள் எனலாம். "கோழை கபம் தான்
யமன்!" இதை நீக்க சித்தர்களால் ஆகாது.
வாசியோகக் கனலாலே தான் எரிக்க முடியும்.
புருவ மத்தியாம் நெற்றிக் கண் பூட்டுத்
திறக்க :சுகாசனத்தில் அமர்ந்து தலை, கழுத்து
உடல் நேராக நிமிர்த்தி, புருவமத்தியில்
மனம்பதிந்து இரு இமைகளுக்கும் இடையில்
நுண்ணறிவால் (உணர்வால்) பார்த்தால் அந்த
இடத்தில் அசைவு காணும். பிராணனை மேலே
தூக்கி உடலைத் தளர்த்தி,மனதை அந்த
இடத்தில் செலுத்திப் பார். அறிவு நிற்கும்
இடமாகிய புருவ மத்தியில் மனதை நிறுத்தி,
காலை, மாலை 2 வேளையும் 11/2 மணி
நேரம் பார்த்து வர வேண்டும். இவ்வாறு பழகி
வந்தால்தான் பலன் காண முடியும்.
புருவ
மத்தியில் உள்ள வாசல் திறக்கும்போது நீலம்,
பச்சை, வெள்ளை போன்ற நிறங்கள்
தோன்றும்.புருவமத்தியில் நினைவை
வைத்துத் தூண்டும்போது உண்டாகும்
துன்பங்கள்:காதடைப்பு, கிறுகிறுப்பு
உண்டாகிக் கண்கள் இருளும். உடல் வலி
எடுத்து நடுக்கம் ஏற்படும். புலன்கள்
வலிமை குன்றும். இந்நிலையை அநுபவித்துப்
பார்த்தவர்களுக்கே தெரியும். மன உறுதி
உள்ளவர்கள் மட்டுமே இதைத் தாண்டி மேலே
வரமுடியும். மற்றவர்கள் தாண்ட மாட்டார்கள்.
வாசி பார்க்கும் நெறி :வாசியானது மூக்குத்
தண்டு நடுவில் (புருவமத்தி) வருவதே
வல்லபம் ஆகும். யோகத் தண்டான முதுகுத்
தண்டு நிமிரும். அப்போது கண்ணை இறுக்கி
சிரமத்துடன் கிடந்து நெற்றியைப் பார்க்காதே.
மனதால் அந்த இடத்தைக் காணவேண்டும். நடு
நெற்றி முதல் பிரம்மரந்திரம் என்ற நாமம்
போன்று வாசி ஏறும். (அந்நிலையைக்
குறிக்கவே நாமம் என்கின்றோம்) அப்போது
குமரியாகிய வாலை விளையாடுவதைக்
காணலாம்.ஏமாந்து போகாமல் ஒரு
நாமமார்க்கத்தில் தொட்டேறி உச்சி வழியாக
பிரம்மரந்திரத்திற்குச் செல்லவேண்டும்.
அப்போது பேசாமல் சித்திரம் போல்
அசையாமல் மோனத்தில் இருந்துகொண்டு
புருவமத்தியை மனதால் காணும்போது உடல்
லேசாகும். மேலே தூக்கும். மனமும்,
வாசியும் இடது புறம் போகாமல் வலது
புறமாக சூரிய கலையில் ஓடும்.
இந்நிலையில் தன்னைத் தான் காணலாம்.
சாதாரண மனிதனுக்கும் தாது உயிர் நின்ற
இடம் இதுதான். தன்னைத் தானே காணும்
இடமும் (ஆன்ம தரிசனம்) நெற்றியடி
புருவமத்தி, ஊசிமுனை துவாரம் உள்ள
மூக்கின் அடிமத்தியாகும். எனவே, புருவ
மத்தியில் நின்று உருளும் வாசியை
அநுபவித்துப் பார்க்கவேண்டும். சாதனையில்
முன்னேறினால் அந்தச் சித்தியை
ஓராண்டுக்காலத்தில் பெறலாம். அதன் பின்
நெற்றியில் நடு நாம வழியைப் பற்றிச்
செல்வதே முத்திக்கு நேரான வழியாகும்.
இவ்வாறு செல்பவர்கள் முனிவர்களாக
ஆகலாம்.இவ்வாறு கண் இரண்டையும், புருவ
மத்தில் சுழிமுனையின் நடுவில் அசையாமல்
பார்த்தால் அங்கு மூன்றாவது கண்ணாகிய
ஞானக்கண்ணைக் காணலாம். இதனால்
ஞானரசத்தைப் பருகலாம். உடல் ஒளியுறும்.
புலன்கள் தோறும் தேவையற்ற கருவிகள்
அடங்கிப் போகும். அப்போது உடல் கற்பூர
வாசனை வீசும். உலக விவகாரம் அற்றுப்
போகும். வயோதிகம் குறைந்து வாழ்நாள்
நீடிக்கும். மூக்கு மத்தியில் வாசி கொண்டு
ஏற்றினால் நாசி மத்தியில் வாசி நீண்டு
விடும். இந்நிலையில் தானாகவே
வேண்டும்போது திறக்க, பூட்டச் செய்யலாம்.
அதாவது நினைத்த மாத்திரத்தில் புருவ
மத்தியில் நின்று சமாதி நிலையை எய்தலாம்
மேலும் அந்த வாயிலைத் தாண்டி உட்புகுந்து
மேலே, (பிரமரந்திரம்) ஏறினவர்களுக்கு
யோகத்தின் புராதனமாகிய யோகதண்டம்,
கமண்டலம், குகை போன்றவைகள் வேண்டாம்.
இதனால் குருவருளும் திரிகால
ஞானத்திலுள்ள எல்லா சித்திகளும் உண்டாகி
கர்மவினை மாறி தர்மம் ஆகும். நரை, மூப்பு,
மரணம் இவை போகும்.மூலாதாரத்தில்
இருந்து மூலக்கனல் எனும் வாசி முதுகுத்
தண்டின் வழியாகக் கொஞ்சம் கொஞ்சமாக
மேலே ஏறி, பிடரி வரை வரும். உடல் முழுதும்
ஓடாது முதுகுத் தண்டின் உள்ள நடு
நாடிவழியாக வரும். அப்போது வாய் மூடி
மெளனமாக உடல் ஆடாமல் அசையாமல்
இருந்தால் வாசி சீறி எழும் வேகத்தால்
உடலைப் பின்னால் தள்ளும்.
மீண்டும் வாசி
கீழ் நோக்கிச் செல்லாமல் உள் நாக்கின் வழியாக
மேலே செல்லும். அதன் பின்பு பிரம்மரந்திரத்த
ை அடைந்து வாசியானது உச்சிவெளியான
சிதாகாசத்தில் கலந்ததால் அனைத்தும்
தோன்றும். பஞ்ச பூதங்களும் அவர்களுக்கு
ஏவல் செய்யும். சூரியன், சந்திரன்,
நட்சத்திரம், ஆகியவை அவர்களுடன் பேசும்.
இவர்களே சித்தர் நிலையை அடைந்தவர்கள்
ஆவார்.இவர்கள் உடல் பல மாறுதல்களை
அடையும். நடந்து செல்லாமலேயே ஆகாய
மார்க்கத்தில் செல்லமுடியும். தொலைதூரம்
நடப்பதைக் காணவும், தொலைதூரம்
பேசுவதைக் கேட்கவும் முடியும். இவை
எல்லாம் ஒரு நொடியில் நடக்கும். சாதாரண
மனிதன் தெருவில் நடப்பது போல் பல
உலகங்களில் உலவிவர முடியும். இவை
எல்லாம் வாலையாகிய குண்டலினி சக்தி
உடலில் உள்ளதால் நடைபெறும்.
காயசுத்தி விபரம் :காலனுக்கு உயிரை
உண்ணும் வேலைதான். அவன் ஏவலால்
சூலாயுதம் கொண்டு உயிரை எமன் கொண்டு
செல்கிறான். எமனுக்கு எமனாய்
இருக்கவேண்டுமானால் சூலனுக்கு சூரனாய்
இருக்கவேண்டும். அதற்குக் கால சித்தியே
துணையாகும். காலசித்தி பெற்றால் எமன்
அணுகமாட்டான். வேலாயுதமாகிய வாசியில்
எல்லாக்குற்றங்களையும் இரையாக இட்டால்
பிராணன் வெந்து காயாது, பசி நீங்கும். கபம்
போகும். காம உணர்வு நீங்கும். இவ்வாறு
இருந்தால் காலன் நம்மை அணுக
மாட்டான்.காயகல்பநிலை பெற விரும்பு
துறவியர்களுக்கான உணவு, இருப்பிடம்
மற்றும் பல விபரங்கள் கல்ப சாதனை
செய்யவிரும்புபவர்கள் கடுமையான
சக்தியுடன் இருக்கவேண்டும். தனிக்குடிசை
(வீடு-மாடி) கட்டிக் கொள்ளவேண்டும்.
இந்நிலையில் நல்ல குருவும், சிஷ்யனும்
தேவை.கருங்குறுவை அரிசி, பாசிப்பயிறு,
மிளகு, சீரகம் இவைகளை வேகவைக்கக்
கூடிய அளவுக்குக் காராம்பசுவின் பாலைச்
சேர்த்துப் பொங்கி ஒரு வேளை
சாப்பிடவேண்டும். மற்ற நேரங்களில்
காராம்பசுவின் பால் மட்டும்தான் சாப்பிட
வேண்டும். வேறு ஒன்றும் சாப்பிடக் கூடாது.
மழை, வெயில், பனி, காற்று நான்கும் ஆகாது.
பிரம்மசரிய விரதம், ஆகாரப் பத்தியம்
கடுமையாக இருக்கவேண்டும். தவறினால்
உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்.
இதனால்தான் இக்காயகல்ப சாதனை பற்றி
சித்தர்கள் விவரமாகச் சொல்லாமல் மறைத்து
விட்டுப் போய்விட்டார்கள். இந்தக்
கடுமையான பத்தியம் இருந்து அஜபா
காயத்திரி மந்திரம் செய்து வரும்போது
மெளனமும் தொடர்ந்து இருந்து வந்தால்,
மாதாமாதம் செய்தால் 12 மாத பலனைப்
பெறலாம். சிரத்தையுடன் தொடர்ந்து
ஒவ்வொரு வருடமாகப் பனிரண்டு வருடங்கள்
செய்து வந்தால் 12 வருட பலனையும்
பார்க்கலாம். இதற்கு இடம், பொருள், ஏவல்
மூன்றும் தேவை.
புருவ நடு திறந்து சஹஸ்ராரத்தில் நடனம்
கண்டபின் உடலில் ஏற்படும் மாற்றங்கள்:
சஹஸ்ராரத்தில் திருநடனம் காணும்போது
கண்கள் சிவந்து காணப்படும். பாதம்,
ஆசனவாய் இவைகளில் எரிச்சலும், வலியும்
இருக்கும். தினமும் கொஞ்சம் கொஞ்சமாகப்
பயிற்சி செய்யவேண்டும். அப்போது வாசி
செந்தீ போல் இருப்பதை நுண்ணறிவால்
உணரலாம். இந்தச் செந்தீயாகிய வாசிய
இடுப்பிற்குக் கீழே இருபிளவாக இருக்கும்
கால்களுக்குச் செல்லுமாறு
செலுத்தவேண்டும். ஒளி காணும்வரை
செலுத்தவேண்டும். சாதனை காலத்தில்
புருவமத்தி, உச்சி, பிடர் போன்ற இடங்களில்
சுலபமாக ஒளி காணமுடியும்.
ஆனால்
இடுப்பிற்குக் கீழே பாதம் வரை யோகக்கனல்
வருவதற்கு நீண்ட காலப் பயிற்சி
வேண்டும்.காலை, மாலை இருவேளையும்
மூக்கு முனையில் இருவிழிகளை நிறுத்திப்
பார்த்தால் இரு விழிகளுக்கிடையில் நேர் மத்தி
புருவ மத்தியில் வாசியாகிய உயிர் புருவம்
தட்டும். இந்த இடத்தில் மனம் பதிவதையே
குரு என்பர். இந்நிலை வந்தால்
கருவிக்கூட்டங்கள் ஒடுங்கி ஓடிப் போய்
விடும். அதாவது புலன்களும், கருவிகளும்
செயலிழந்துவிடும். மனம் திறந்து ஒளி
வீட்டைக்காணலாம்.கருவி கரணங்கள் என்னும்
தத்துவங்களை வென்ரதால் மனதை விட்டுக்
கவலைகள் ஒழிகின்றன. புலன்கள்
சுத்தமாகும். முயற்சி செய்தால் முடியாதது
எதுவுமே இல்லை. புருவமத்தி என்னும்
குன்றின்மீது ஏறி, பிரம்மரந்திரமாகிய மலை
உச்சிக்குச் சென்று அம்பலதரிசனம் கண்டவரே
மறையோகியும் குருவும் ஆவார்.
குரு வருளால் திருவாகும் யோக்கியதை
உண்டாகும். சித்தர்களுக்கெல்லாம் அரசனாக
வாழலாம். திரிகால தரிசனம் கிடைக்கும்.யோகி
கள் தன் மரணத்தை மறந்து, சரீரத்தை
பேணிப்பாதுகாப்பதை மறந்து நேரங்களையும்
துறந்து காலை, மதியம், மாலை என்று
மூன்று காலமும் வாசியை ஏற்றிச் சாதனை
செய்தவர்கள். தூண்டாத ஜோதியுடன்
வெளிச்சம் காண்பர். காயகற்பம் கண்டவர்கள்
அமுதத்தை உண்டு கலை சித்தி பெறுவார்கள்.
ஒளியைப் புருவ மத்தியில் ஏற்றியவருக்குக்
கூட சஹஸ்ரார தரிசனம் சிலசமயம்
கிட்டுவதில்லை. சஹஸ்ராரத்தில் சென்ற
பிராணன் குளிகை போல் ஆகிவிடும்.
அவ்வாறு உச்சிக்குச் சென்று குளிகை ஆனால்
ஆகாய மார்க்கத்தில் பறக்கும் ஆற்றல்
உண்டாகும். பிராணன் பலப்பட பலப்பட
ககனமார்க்கம் செல்லும் திறன் உண்டாகும்.
முக்திநிலை கூடும். இந்நிலையில் மனம்
மெளனத்தில் இருந்து மோனத்தில் ஒடுங்கும்.
அஜபா காயத்ரியை (ஓம்) தியானம் செய்யச்
செய்ய உயிர் வலுக்கும் குளிகையாகும்.
சஹஸ்ர தளத்தின் நடுவில் உள்ள
கேசரங்களில் உயிர் நிற்கும். இதை விட
சந்தோஷம் வேறு எதுவும் இல்லை.நெஞ்சுப்ப
ள்ளமாகிய அநாஹதத்தில் பிராணன்(வாசி)
வரும்போது நீண்ட காலத்திற்கு அங்கேயே
சுற்றிச் சுழன்று கொண்டிருக்கும்.
இந்நிலையில் யோகிகளுக்குத் திட சித்தம்
ஏற்படாமல் சலனங்கள் உண்டாகும். உயிர்
சுற்றிச் சுழன்று கொண்டிருக்கும். அதற்கு
மேல் விசுத்தி சக்கரத்திற்கு வரும். அதற்கு
மேல் விரைவாக ஏறி புருவ மத்தியாகிய
ஆக்ஞாசக்கரத்திற்கு வந்தால் சலனங்கள்
மறைந்துவிடும். அதன் பிறகு நெற்றி வழி
உச்சிக்குச் சென்று முட்டும். உச்சிக்குச்
சென்று முட்டும் பிராணன் அங்கு சுற்றிச்
சுழன்று வட்டமிடும். இதைப் பார்ப்பதே
ஞானம் எனப்படும்.
இஞ்ஞானநிலையை விட்டு உயிர் கீழே இறங்கி
பிடரிக்கு வந்தால் வாத, பித்த, சிலேத்துமம்
அதிகரிக்கும். பித்தம் அதிகமாகும். மேன்மக்கள்
இருவர் கூடினால் பலம் அதிகமாவது போல்
பிராணனும் பித்தநீரும் ஒன்று கூடினால் உடல்
தொல்லை அதிகமாகும். பிராணன் இன்னும்
கீழே இறங்கி வந்தால் மும்மூர்த்தியானாலும்
மரணம் அடைவார்கள். அதனால் எப்போதும்
உச்சியிலே நிற்கவேணும். அப்படி
இறங்கினாலும் மீண்டும் லகுவாக மேலே ஏற்ற
வேண்டும். காலை, மாலை இரண்டு
வேளையும் அமைதியான இடத்தில் மனமும்,
உடலும் இணங்கிய (காலம்) சுகாசனத்தில்
இருந்து சாதனை செய்தால் வெட்டவெளியில்
மனம் ஒடுங்கும். யோகசாதனையின் முடிவில்
யோகத்திற்குத் தடையாக இருந்த நீர்
கழிந்துவிடும். பிராணன் கபாலம் ஏறும்.
யோகம் 12 ஆண்டில் சித்தியாகும். அவரவர்
புண்ணியத்திற்குத் தகுந்தபடி 3 ஆண்டு, 5
ஆண்டு, 8 ஆண்டு, 10 ஆண்டு, 2 ஆண்டு என
யோகம் சித்திக்கும். மேலே செல்லச் செல்ல
யோகம் எளிதாகும். இடைவிடாது பயின்றால்
சிற்பரத்தைக் காணலாம். இதுவே நெற்றிக்கண்
திறத்தலாகும். இதற்கு மேலெ ஞானநிலை
கூட உச்சி ஏறுவர். தலை உச்சியில் கபால
மத்தியில் அண்ணாக்கிற்கு நேர் தூண்போல் 1
சாண் நீளம் ஒளி உண்டாவதைக் காணலாம்.
இந்நிலை வந்தால் நாவால் உணவு
உண்ணாமல் உள்நாவால் அமுதம்
உண்ணலாம்.அண்ணாக்கில் உள்ள துவாரமே
10-ம் வாசல். இதை ஊடுருவி மூலத்துண்டின்
மூலம் உள்நாக்கு வழியே பற்றி வாசிக்குதிரை
ஏறி ஒளி இடமாகிய காசிக்குச் செல். அங்கு
பரை ஆடுவதைக் காண்பாய். அண்ணாக்கில்
இருந்து உச்சிவரை செல்லும் மூல
மார்க்கத்தை நடுநாடி, உயிர்நாடி, பிராணநாடி
ஆகிய வழி சென்று உயிர் நடனத்துக்குக்
கூத்தாடும்.
புருவ மத்தியை நோக்கி சாதனை செய்து
கொண்டிருக்கும்போது நோய்கள் வந்தால்
மருந்துகளால் குணமாகாது. யோகத்தால்
அதை நிவர்த்தி செய்யமுடியும். சாதனையைப்
பாதியில் நிறுத்தினால் நோயினையே
அடைவார்கள். பொய் யோகியாகி விடும்.
ஞானபதம் கண்டவர்கள் பித்தர்கள் போல்
தன்னை மறந்து காணப்படுவார்கள். சுழலில்
அகப்பட்ட துரும்பு போல துடிப்பார்கள்.
இச்சமயத்தில் ஞானத்தால் ஊன்றி நின்று
பித்தம் போக்கி எச்சரிக்கையுடன் இருந்து 1
வருடம் வரை சாதனை செய்யவேண்டும்.ச
ாதனை செய்யும் ஒரு வருட காலத்தில்
கிறுகிறுப்பு, மயக்கம் இவை தோன்றும்.
மயங்கி விழுந்த மண்டைக்குள் வாலை
கூத்தாடும். இவ்விளையாட்டு ஒருவருடம்
வரை நடக்கும். இதைக் குளிகை என்பர்.
இந்நிலை வரவிரும்பினவர்கள் யோகத்தில்
மேல்நிலையில் உள்ளவர்கள். கபாலத்தில் உயிர்
குளிகையாகி நிற்கும்போது ஏற்படும்
உணர்வுகளாகும். முக்தி நிலையில் முழுமை
பெற்று சித்தி பெற்ற ஞானிகளுக்கு நாடி,
நரம்புகள் இறுகிக் காணப்படும். உடல், உயிர்
இவைகளில் உண்டான மும்மலக் கசடுகள்
நீங்கும். குண்டலினி சக்தி உடலில் இருந்து
ஆடிப்பாடும். மனம், உடல், உயிர் மூன்றும்
ஒன்றாய் கூடி ஒடுங்கி நிற்கும். ஒளி
பெருகும், இருள்விலகும். இந்நிலை வந்தால்
நரை, மூப்பு ஓடிப் போகும்.
ஞானசித்தி பெற்ற
பின்பு நாடி, நரம்புகள் இறுகும். ககன
மார்க்கத்தில் செல்ல முடியும். பூமியில்
நடப்பது போன்று வானத்தில் நடக்கலாம்.
வல்லபங்கள் அநேகம் உண்டு. மனதில்
உற்சாகம் தோன்றும். கேட்டதெல்லாம்
கிடைக்கும். வாலைத்தாய் குண்டலினி சக்தி
முன்னே நின்று தொண்டு செய்வாள்.
இத்தகைய சக்தி பெற்ற உடல் உயிர் கேவலப்
பிறவியாகாது. மனம் சித்தியும், உயிர்
முத்தியும் பெறும். 2 வருடம் யோகம் செய்து
சித்தி பெற்று அந்த சித்தியில்
ஏமாந்துவிடாமல் அதன் பின் ஞானமார்க்கத்தில்
இரட்னு வருடம் சித்துடன் சேர்ந்து
விளையாடி முதிர்ச்சி அடைய வேண்டும்.
பிரமரந்திர உற்பத்தி: பிரமரந்திரத்தில் ஊசி
துவாரத்தில் உயிர் நிற்கும் நிலையே ஞானம்
ஆகும். இந்நிலையில் உள்ளபோது திரிகால
உணர்வும் தெரியும். ஆன்மா உச்சி
மண்டையில் ஏறி வெட்டவெளியில் சென்று
மூன்று காலத்தையும் உணரும். முதுகுத்
தண்டின் எலும்பின் உள்ளே சிறிய ஊசியைச்
செலுத்தும் அளவுள்ள துவாரத்தின் வழியாகப்
பிராணன் செல்லும். இந்த எலும்பின் உள்ளே
ஓடுகிற வாசியே ஆன்மாவாகும். இவ்வாறு
எறிமுனை மூக்குக்கு வரும். வாயுவான
ஆன்மா எலும்பில் உள்ள துளையின் வழியாகப்
புருவ மத்தி ஏறும். இவ்வாறு ஆறு
ஆதாரங்களைக் கடந்து புருவமத்தியின்
வழியாக உச்சி மண்டைக்குச்
செல்லும்.காயசித்தி பெற்ற பின்பு நரைத்த
முடி கறுத்துவிடும். உடல் பலமடையும்.
சரீரம் வெகு காலத்துக்கு நிலைத்து நிற்கும்.
ஆன்மா உச்சி ரோமம் வழியாகச் சேர்ந்து ஏறி,
ரோமக்கால்களைத் தொடர்ந்து பற்றி 12
அங்குலம் மேலே ஏறும். உச்சிக்கு மேலே 12
அங்குலம் மேலே துவாதசாந்தப்
பெருவெளியில் ஆன்மா செல்லும். அப்போது
கூடுவிட்டுக் கூடு பாயும் நிலை
உண்டாகும். பிராணன் முதுகுத் தண்டு
வழிமேலே ஏறிப் பிடரி, மூக்கு நுனி கடந்து
சதா புருவ மத்தியிலோ, சஹஸ்ராரத்திலோ
ஒடுங்கிவிட்டால் நிர்விகல்பசமாதி நிலையை
அடையலாம். மெளன நிலை போல்
மோனநிலை கிடைக்கும். மோன நிலையில்
பிராணன் ஒடுங்கியபின் உயர்வு, தாழ்வற்ற
நிலை ஏற்பட்டுவிடும். இதுவே எல்லாம்
பிரம்மமயம். இதை எல்லாரும் அடையலாம்.
இதற்கே மறு பிறவி கிடையாது. சிவாயநம.
சிவனே பரம்பொருளாக, எல்லாமுமாக
விளங்குபவன். எந்த பெயர் சொல்லி
கடவுளரை அழைத்தாலும் அது சிவனே. எந்த
ரூபத்தில் எப்படி வழிபட்டாலும் அது சிவனே,
எந்த நாளில், எந்த தேசத்தில் இறைவனாக
உணரப்பட்டாலும் அதுவும் சிவனே.
- திருமந்திரம்.

Friday, January 29, 2016

சோமவார சிவபூஜை செய்யும் முறை !

இந்த விரதத்தை எந்த மாதத்திலும் ஆரம்பிக்கலாம். 16 சோமவாரம்
முழு பட்டினி இருந்து சிவதரிசனம் செய்து பின்வரும் கதையை
ஒருவரிடம் சொல்லவேண்டும். ஒருவரிடமும் சொல் சந்தர்ப்பம் இல்லை
என்றால் சுவாமியின் முன்பும் அல்லது துளசி மாடத்தின் முன்பும்
அல்லது பசுமாட்டின் முன்பும் சொல்லலாம். காபி, பால், பழம் முதலியன
சாப்பிட்டுக் கொள்ளலாம். உப்பு புளிப்பு கூடாது. மடியாக ஆடை உடுத்தி
ஆசாரத்துடன் விரதம் இருக்கவேண்டும். கதை சொல்லும் போது கையில்
சிறிது அட்சதை வைத்துக் கொள்ள வேண்டும்
கணேஸாய நம:
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்
ப்ரசன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்நோப ஸாந்தயே
குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மஹேஸ்வர
குரு சாக்ஷõத் பரப் பிரம்மம் தஸ்மை ஸ்ரீ குருவே நம :
சோமவாரக் கதை :
ஒரு ஊரிலே ஒரு கோயில் இருந்தது. அந்தக் கோயில் கோபுரம் மிகவும்
பழுதடைந்து இருந்தது. ஆகையால் அவ்வூர் ஜனங்கள்அக்கோயிலில் பூதம்,
பிசாசுகள் வாசம் செய்கிறது என்று பிரச்சாரம் செய்துவிட்டார்கள். ஆகையால்
எவரும் அக்கோயிலுக்குப்போகவில்லை. ஆனால் அது சின்னச் கோயிலாக
இருந்தாலும் வாசனையுள்ள பூக்களும் நல்ல மூலிகைகளும் நிறைந்து
இருந்தது. அதனால் ஈஸ்வரர், ஈஸ்வரி அங்கு வந்து சதுரங்கம், சொக்கட்டான்
முதலியன விளையாடிக் கொண்டும், சத்சங்கம்செய்து கொண்டும்
அமைதியாக இருப்பார்கள். ஒரு சமயம் இருவரும் விளையாடுகையில் பார்வதி
தேவி ஜெயித்தார். ஈசுவரர்நானே ஜெயித்தேன் என்றார். எனவே மறுபடியும்
இருதடவை அவர்கள் விளையாடியும் பார்வதி தேவியே வென்றார்.
ஆனாலும் ஈசுவரர், நானே வென்றேன் என்றார். உடனே பார்வதி தேவி,
தோற்றுவிட்டு நானே வென்றேன் என்று பொய் கூறுகிறீர்களே என்றுகூறி
கோபித்துக் கொண்டு உட்கார்ந்து விட்டார். ஈசுவரர் சங்கல்பத்தில் அப்பொழுது
ஒரு தபோதனர் அங்கு வந்தார். அவரைப்பார்த்த அம்பாள் இந்த பிராமணரிடம்
யார் வென்றோம், என்று கேட்போம் என்றார். ஈசுவரரும் அதற்கு சம்மதித்தார்.
அப்பிராமணர் அருகில் வந்ததும், "எங்கள் இருவரில் யார் வென்றார்கள்?"
என்று கேட்டார்கள். அதற்கு பிராமணர் காதால்கேட்பதைக் காட்டிலும்
கண்ணால் காண்பது நன்று என்றவுடன் இருவரும் மறுபடியும் மூன்று தடவை
விளையாடினார்கள்.மூன்று முறையும் தேவியே ஜெயித்தார். ஆனால்
பிராமணர் அம்பாள் ஜெயித்தாலும் ஈசுவரரே ஜெயித்தார் என்று கூறினார்.
இதைக் கேட்ட தேவி கோபாவேசமாகி துர்க்கையாக மாறி சாதாரண
விஷயத்திற்கு பிராமணர் பொய் பேசியதால் பிராமணருக்கு குஷ்டம்
ஆகக்கடவது என்று சாபமிட்டார். உடனே அந்த இடத்திலேயே பிராமணருக்கு
இரத்தம் ஒழுகி உடம்பு முழுவதும் நாற்றம்எடுத்து சீழ், புழு முதலியன
வெளியேறியது. அவ்வியாதியின் கஷ்டம் தாங்காமல் பிதாவிடம்
விமோசனம் கேட்டார். அதற்குபிதா அம்பாள் இட்ட சாபம் இட்டது தான்;
அதை மாற்ற முடியாது என்றார். ஆனால் பிதா தன் சங்கல்பத்தினால்
சோமவாரசமத்காரம் நடத்த நினைத்தார்.
ஈஸ்வரர் இப்படி சொன்னவுடன் பிராமணர் தன் தேக உபாதை தாங்க முடியாமல்
கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொள்ளலாம் என நினைத்து கிணற்று
அருகில் சென்றார். அப்பொழுது ஈசுவரர் சங்கல்பத்தில் அங்கு ஒரு அப்சரஸ்திரி
இந்திரலோகம் போய்க்கொண்டிருந்தாள். அவளும் இந்திரன் சாபத்தினால்
பூலோகத்தில் அவதாரம் எடுத்து சோமவார விரதம் இருந்து சோமவார
சமத்காரத்தினால் சாபம் தீர்ந்து இந்திரலோகம் போய்க் கொண்டிருந்தாள்.
அவள் கிணற்றில் விழச்சென்றபிராமணரைப் பார்த்து, சுவாமி தங்களைப் பார்த்தால்
மகரிஷி மாதிரி தெரிகிறதே; தற்கொலை செய்து கொண்டால் ஏழுஜென்மத்திற்கும்
பாவமாயிற்றே ! பிராமணராய் இருந்தும் ஏன் கிணற்றில் விழப்போகிறீர்கள்?
என்று கேட்டாள். அதற்குப்பிராமணர், பூலோகத்தில் இந்த பாவ உடலை
வைத்துக் கொண்டு நான் ஏன் இருக்க வேண்டும் என்றார். அதற்கு
அப்சரஸ்திரி 16சோமவார விரதத்தினால் உங்கள் வியாதி குணமாகிவிடும். ஆனால்
எனக்கு அதைப்பற்றி சொல்ல நேரமில்லை. நீங்கள்அருகிலுள்ள விதர்பநகர் சென்றால்
அங்கு கிணற்றடியில் இருக்கும் பெண்கள் சோமவார விரத மகிமையைப் பற்றி
பேசிக்கொண்டிருப்பார்கள். அவர்களிடம் சென்று குரு, சிஷ்யபாவமாக சோமவார
விரத மகிமையைக் கேட்டால் அவர்கள்சொல்வார்கள். அதன்படி சோமவார விரதம்
இருந்து வந்தால் உங்கள் வியாதி குணமாகிவிடும், என்று சொன்னாள். அந்ததபோதனர்
ஸ்திரியிடம் விடைபெற்று விதர்பநகர் சென்றார். அங்கு கிணற்றடியில் இருக்கும்
பெண்களை சிறுபெண்கள் என்றுகூடநினைக்காமல் நமஸ்காரம் செய்து சோமவார விரத
மகிமையைப் பற்றி கேட்டார். அவர்கள் எல்லோரும் சோமவார விரதத்தால்தங்களுக்குத்
கிடைத்த பலாபலன்களைக் கூறினார்கள். மேற்படி விரதத்தின் மகிமையையும் செய்யும்
முறையையும் கூறினார்கள்.இந்த கார்த்திகை மாதத்தில் நான்கு முறையும் அடுத்த
கார்த்திகை மாதத்தில் நான்கு வருடத்தில் 16 சோமவார முறையும்முடிக்கலாம்.
ஆவணியில் ஆரம்பித்தும் நான்கு வருடம் விரதம் இருந்து முடிக்கலாம்.
செய்யும் முறை :
சிவபூஜை செய்ய வேண்டும். சிவபக்தியுடன் 16 சோமவார விரதம் இருந்து முடிக்கவேண்டும்
16 சோமவாரம் விரதங்கள்முடிந்தபின் மறுநாள் காலையில் 16 லட்டுகள் செய்து கோயிலுக்கு
கொண்டுபோய் நைவேத்தியம் செய்து அங்குள்ளவர்களுக்கும்கொடுத்து; தானும் சாப்பிட்டு;
ஒரு லட்டை பசு மாட்டிற்குக் கொடுத்து; மீதியை வீட்டிற்குக் கொண்டு வந்து பெரியவர்களுக்கும்
கொடுத்து; விளக்கு வைக்கும் நேரம்வரை பூஜை செய்த லட்டை வைத்துக் கொள்ளாமல் எல்லோருக்கும்
கொடுத்துவிடவேண்டும். அன்று யாரிடமும் கோபம் கொள்ளக்கூடாது. இப்படிச் செய்தால்
எந்தவிதமான கஷ்டமும் இருக்காது என்றுஅப்பெண்கள் சொல்வதைக் கேட்டுக்கொண்டு வரும்
வழியில் ஒரு முதியவளிடமும் சோமவார விரத மகிமையைக் கேட்கஅவளும் அப்பெண்கள்
கூறியதையே கூறினாள். பிராமணர் இவ்விரதத்தை 2 வருடங்கள் 8 சோமவாரம் செய்தார்.
விரதமகிமையால் பிராமணரின் வியாதி குணமாகியது. இவ்வாறு சோமவார விரதம்
இருப்போருக்கு அவரவர் வேண்டும் பலனைநிச்சயம் தருவார் என்பது உறுதி.
சோமவார விரத லட்டு செய்யும் விதம்
தேவையான பொருட்கள் :
நெய் - 1/4 கிலோ
கோதுமை மாவு - 1/2 கிலோ
வெல்லம் - 400 கிராம்
செய்யும் முறை :
முதலில் கோதுமை மாவை நன்றாக சலித்துக்கொண்ட பிறகு அதை
வறுத்து கீழே இறக்கி வைத்துக்கொண்டு காய்ச்சிய நெய்,பொடி செய்த
வெல்லத்தையும் மாவுடன் நன்றாகக் கலந்து கொண்டு பின் சிறிய சிறிய
உருண்டைகளாக லட்டு பிடிக்க வேண்டும்.

Friday, January 22, 2016

சித்தர் சக்கரை அம்மா !!!

ஆன்மீகச் சிறப்பு மிக்க தமிழகத்தில் ஆண்களுக்கு ஈடும் ஒப்பும் செய்யும் வகையில் பெணகள் சிலரும் உயரிய ஆன்மீக நிலையை எய்தி உள்ளனர். அத்தகையோருள் ஒருவர்தாம் ஆனந்தாம்பாள் என்ற சக்கரை அம்மா.
ஆனந்தாம்பாள் 1854 இல் இக்கால் அமைந்த திருவண்ணாமலை மாவட்டத்தின் போளூர் வட்டத்தில் அடங்கும் தேவிகாபுரம் என்னும் சிற்றூரில் ஆதிசைவர் குடியில் பிறந்தவள். தந்தை சேஷு குருக்கள் தேவிகாபுரம் பெரிய நாயகி அம்மன் கோவில் பூசகர்களுள் ஒருவர். சிறு அகவையிலேயே தாயை இழந்ததால் ஆனந்தாம்பாள் சிறியதாயார் சுப்பம்மாவினால் வளர்க்கப்பட்டவள். ஆனந்தாம்பாளுக்கு தன் ஊருக்கே நடுவாயுள்ள பெரிய நாயகி கோவிலின் உள்சுற்றில் மேற்கு மூலையின் கருவறையை உற்றுப் பார்த்தபடியே மணிக்கணக்கில் தன்னந்தனியாக அமருவது தான் பொழுதுபோக்கு.
ஆனந்தாம்பாளின் வீடு கோவிலுக்கு வெகு அருகிலேயே அமைந்துவிட்டதால் அவள் நினைத்த போது உள்ளே சென்று அங்கு நேரம் கழிப்பதற்கு எளிதாக அமைந்துவிட்டது. ஊழ்கம் (தியானம்) பயிலாமலேயே கோவிலின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அமர்ந்து ஊழ்கும் பழக்கம் தானாகவே அவளுக்கு ஏற்பட்டிருந்தது. தன் அகவைக்கு ஒத்த பிள்ளைகள் விளையாடி மகிழ்ந்திருக்க தான் மட்டும் தந்தை சொல்லிக் கொடுத்த சிவ ஸ்தூதியை சொல்லியபடி ஊழ்கத்தில் அமைதியும் இன்பமும் காண்பாள்.
அக்காலத்தே இருந்த வழக்கப்படி ஆனந்தாம்பாளுக்கு 9 அகவை ஆகும் போது சென்னை எழும்பூருக்கு உட்பட்ட இன்றைய புதுப்பேட்டையாம் கோமளீச்சுவரன் பேட்டையில் இருந்த சட்டநாத மடத்தின் தலைவராக இருந்த தன் சிறியதாயாரின் உடன்பிறப்பாளராகிய திரு. சாம்பசிவ சிவாச்சாரியாருக்கு முதல் மனைவி இறந்ததன் காரணமாக இரண்டாவது மனைவியாக வாழ்க்கைப்பாட்டாள். சாம்பசிவத்திற்கோ அப்போது 24 அகவை.
ஆனந்தாம்பாள் பூப்பெய்திய பிறகு தன் கணவனுடன் வாழ கோமளீச்சுவரன் பேட்டையில் உள்ள மடத்திற்கு அனுப்பப்பட்டாள். கோமளீச்சுவரன் கோவிலில் அவள் அடியாரர்களோடு அடியாராய் சிவனையும் சக்தியையும் வழிபட்டு நாள்முழுவதும் மடத்து வேலைகளையே செய்துவந்தாள். வேலை எல்லாம் முடிந்த பின் வீட்டு மொட்டை மாடியில் அமைந்த திண்ணையில் அமர்ந்து ஊழ்கம் (தியானம்) செய்வாள்.
கணவன் சாம்பசிவன் அவளுடன் இல்லறம் நடத்தாமல் வெளியிடக் கேளிக்கைகளிலேயே காலத்தைப் போக்கி தீராத நோய்க்கு ஆட்பட்டு 35 அகவையிலேயே மாண்டு போனார். அப்போது ஆனந்தாம்பாளுக்கு 20 அகவை தான். இதனால் அவள் இளம் அகவையிலேயே கைம்பெண் ஆனாள். அவர்களுக்கு பிள்ளை ஏதும் இல்லை. கணவன் இறந்த பதினொன்றாம் நாள் தலையை சிரைத்து காஷாய உடை அணிந்தாள். இந்த கைம்பெண் வாழ்வை அவள் நல்வாய்ப்பாகவே கருதினாள், ஊழ்கத்திற்கு இனி இடையூறு இல்லை என மகிழ்ந்தாள்.
நட்சத்திர குணாம்பாளுடன் தொடர்பு
சேஷு குருக்கள் கைம்பெண்ணான ஆனந்தாம்பாளை மீண்டும் தேவிகபுரத்திற்கே அழைத்துச் சென்று விட்டார். அங்கிருந்து அவள் தன் உடன்பிறந்தான் வாழும் போளூருக்கு சென்றுவிட்டாள். போளூரில் இருந்த நாள்கள் தாம் அவளை ஆன்மீகத்தில் முதிர்ந்த ஆன்மாவாக மலரச் செய்தன. அங்கு நட்சத்திரக் குன்றில் வாழ்ந்துவந்த நட்சத்திர குணாம்பாள் என்ற யோகினியுடன் ஆனந்தாம்பாளுக்கு அறிமுகம் ஏற்பட்டது. போளூர் விட்டோபா சுவாமிகளிடமும் அறிமுகம் ஏற்பட்டிருக்க வேண்டும். போளுர் திருவண்ணாமலைக்கு போகும் வழியில் இருந்ததால் அங்கு சென்றுவரும் ஓகியர் சித்தர்களைச் சந்தித்து அவரது ஆசிகளைப் பெறும் வாய்ப்பும் அவளுக்கு கிட்டியது.
ஒரு நாள் அடிமுடி சித்தர் போளூர் வழியாகத் திருவண்ணாமலைக்கு வருவதை அறிந்த ஆனந்தாம்பாள் அவருக்காக சமையல் செய்துவிட்டு பலமணி நேரம் வீட்டு வாயிலில் காத்து இருந்த வேளையில்அவருடைய ஒன்றுவிட்ட உடன்பிறப்பாளர் ஒருவர் ''கண்ட கருத்தைக்காக ஏன் இப்படி சாப்பிடாமல் பல மணி நேரம் காத்துக் கொண்டிருக்கிறாய்'' என்று கடுமையாகச் சொல்ல அதை அவள்பொருட்படுத்தாமல் இருந்தாள். நெடுநேரம் கழித்து வந்த அடிமுடி சித்தர் ''உனக்கு கம்பங்கூழ் செய்யத் தெரியுமா? என்றதற்கு ''தெரியாது'' என்று சொல்ல ''எந்த வண்ணான் வீட்டிலாவது கம்பங் கூழ் சாப்பிட்டு விட்டு பிறகு உணவு உட்கொள்ள வருகிறேன்'' என்றார் சித்தர். சித்தர்கள் எல்லாருடைய மனஓட்டத்தையும் அறிந்தவர்கள். ஒன்றுவிட்ட உடன்பிறப்பாளர், ''கண்ட கழுதைக்காக'' என்று சொன்னதம் சித்தர் ''எந்த வண்ணான் வீட்டிலாவது'' என்று சொன்ன பேச்சும் பொருந்துவதை உணரலாம். அடிமுடியார் திருவண்ணாமலையில் மலைசுற்றுப் பாதையை அமைத்தவர். கௌதம முனிவரின் மாணாக்கரான இவர் மலைச்சுற்றுப் பாதையை அடைத்துக் கொண்டு யாராலும் நகர்த்த முடியாமல் இருந்த மிகப்பெரிய பாறாங்கல்லை தனது 28 அடி தலைமயிரைச் சுற்றிக் கட்டச் செய்து அதை மிக எளிதாக நகர்த்தியவர். இவருடைய சமாதி கௌதம முனிவரின் சமாதிக்கு எதிரே உள்ளது. அடிமுடி பரதேசி ஆனதந்தாம்பாளுக்கு முக்தி நிலையை மிக எளிதாக அடைய பல்வேறு அறிவுரைகளையும் வழிகாட்டுதல்களையும் அருளினார்கள். அவர் கூறியதவது எப்பொழுதும் இறைவனை நினைத்துக் கொண்டே நம் கடமைகளைச் செய்ய வேண்டும். இதுவே முக்தி அடைவதற்கு சிறந்த வழி.
ஆனந்தாம்பாளுக்கு குணாம்பாளிடம் தனி ஈடுபாடு ஏற்பட்டது, அதே போல் குணாம்பாளுக்கும் ஆனந்தாம்பாளிடம் தனி ஈடுபாடு ஏற்பட்டது. அவளைத் தன் மாணாக்கியாக ஏற்றுக்கொண்டதோடு அல்லாமல் தன் குழந்தையைப் போல் நடத்தினாள். தான் மீண்டும் சென்னைக்கு செல்ல வேண்டி வந்தபோது, ''இனி நான் எப்படி உங்களை நினைத்த போதெல்லாம் சந்திக்க முடியும்'' என்று ஏக்கத்துடன் ஆனந்தாம்பாள் கூறினாள். அதைக் கேட்ட குணாம்பாள், ''கவலை வேண்டாம், நீ விரும்பும் போது வந்து என்னைக் காணலாம், நீ யாரைக் காண விரும்புகிறாயோ அவர்களையும் காணலாம்'' என்று கூறித் தேற்றினாள். இதையடுத்து எண்பெருஞ் சித்துக்களில் ஒன்றான 'இலகிமா' என்னும் உடலை இலகுவாக்கி கொண்டு வானில் பறவை போல் பறக்கும் சிறப்பு ஆற்றலை ஆனந்தாம்பாளுக்கு நல்கினாள். அதோடு நட்சத்திர குணாம்பாள் தான் சமாதி அடையும் முன் ஆனந்தாம்பாளிடம் கொண்டிருந்த அளவிறந்த ஈடுபாடு காரணமாக அவளது பக்தியை மெச்சி தன் ஆன்மீக ஆற்றல் முழுவதையும் அவளுக்கு செலுத்திவிட்ட பின்பே தன் உடலைவிட்டு நீங்கினாள். பின்னொரு காலத்தில் ஆனந்தாம்பாள் தானே நட்சத்திர குணாம்பாள் என்று வெளிப்படுத்தினாள். நட்சத்திர குணாம்பாள் ஆனந்தாம்பாளூக்கு ஸ்ரீ சக்கர உபாசனையும் (வழிபாட்டை) உபதேசித்து இருந்தாள். இது பெண்வடிவில் இறைத்தன்மையை கொள்ளும் ஓர் ஆழ்ந்த ஆன்மீகப் பயிற்சி முறை.
ஆனந்தாம்பாள் பறவை போல் வானில் பறந்து செல்வதைப் பலரும் பார்த்துள்ளனர். அவர்களுள் தமிழறிஞரும் தேசபக்தருமான தமிழ்த்தென்றல் திரு. வி. கலியாணசுந்தரனார் 'உள்ளொளி' என்ற தலைப்பில் தமது நூல் ஒன்றில் ''சென்னை கோமளீச்சுவரன் பேட்டையில் ஒரு மாது இருந்தார்கள். அவர் காலம் சென்ற மருத்துவர் நஞ்சுண்டராவின் குரு என்று உலகம் சொல்லும். அவ்வம்மையார் பறவையைப் போல் வானத்தில் பறப்பார். ஒருமுறை யான் வசித்த கல்லூரியின் (இராயப்பேட்டை வெஸ்லி கல்லூரி) மாடியில் பறந்து வந்து நின்றார். மானுடம் பறக்கின்றது என்றால் விந்தையல்லவா? அக்காலத்தில் சென்னையில் வசித்த விஞ்ஞானிகள் பலர் சூழ்ந்து கொண்டு அம்மையார் நிலையை ஆராய்ந்தனர். அப்போது சென்னை மியூசியத் தலைவராக இருந்த ஓர் ஐரோப்பியரால் (எட்கர் தர்சுடன்) பறவையார் நிலை பெரிதும் ஆராயப்பட்டது. அம்மையார் பறவை இனத்தில் சேர்ந்தவர் என்றும், அவரிடம பறவைக்குரிய கருவி காரண அமைப்புகள் சில உள்ளன என்றும், கூர்தல் அறப்படி (evolution) அத்தகைய பிறவி இயற்கையில் அமைதல் கூடும் என்று அவரால் விளக்கப்பட்டது. அவர் விளக்கம் மற்றவர்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. நான் தேசபக்தன் ஆசிரியராக இருந்தபோது நஞ்சுண்ட ராவுடன் நெருங்கிப் பழகுதல் நேர்ந்தது. அமரர் ராவ் அவர்கள், அம்மா சித்தர் இனத்தைச் சேர்ந்தவர் என்று சொன்னார். பறவை நாயகியர் நிலை மனோதத்துவத்திற்கு எட்டுவதா? எண்ணிப்பாருங்கள்.
மருத்துவர் நஞ்சுண்ட ராவுடன் அறிமுகம்
போளூரிலிருந்து கோமளீச்சுவரன் பேட்டைக்கு திரும்பியதும் ஆனந்தாம்பாள் தன் வீட்டு மொட்டை மாடித் திண்ணையில் ஊழ்கத்தை (தியானத்தை) முன்னினும் உறப்பாகத் தொடர்ந்தாள். தன் உலகக் கடமைகளை எல்லாம் மறந்தாள், நீரும் உண்டியும் கொள்வது கூட மறந்தாள். இதனால் உறவினர்கள் இவள் இளம் அகவையிலேயே கணவனை இழந்துவிட்டதால் பித்தையாகிப் போனாள் என்று எண்ணினர். மாடியில் உள்ள சிறிய அறையில் அவளுக்காக சிறிது நீரும் சோறும் வைத்துவிடுவார்கள் அவ்வளவே.
பத்தாண்டுகள் இடைவிடாத ஸ்ரீ சக்கர வழிபாட்டினால் நட்சத்திர குணாம்பாள் சொல்லி இருந்தபடி ஆனந்தம் எய்தும் அந்த நாள் வந்தது. திடீரென்று, அவள் கண்கள் கூசும்படி ஒள்ளிய ஒளி வட்டத்தின் கதிர்களால் சூழப்பட்டாள். இது அவளுக்கு தானே எரிந்து ஒளிர்வதைப் போன்ற உணர்வைத் தந்தது. அவள் பேரின்பப் பெருவெளியில் மிதக்கலானாள். எந்நேரமும் களிப்பில் மிதந்தாள். அந்த மகிழ்ச்சியில் வாய்விட்டு கட்டுக்கடங்காமல் சிரிக்கத் தொடங்கினாள். அதுமுதல் சிரிப்பு அவளது பண்பாகிப் போனது. இதைப் பார்க்கும் மடத்து மக்களும் உறவினரும் அவளை ஒரு பித்தை என்று கருதினர். இதன் பின் பல சித்திகளை ஆனந்தாம்பாள் அடைந்தாள்.
போளூரில் இருந்து கோமளீச்சுவரன் பேட்டைக்கு திரும்பிவரும் போது ஆனந்தாம்பாளின் உடன்பிறப்பான அருணாசலமும் உடன்வந்தார். மடத்தின் தலைமைப் பொறுப்பிற்கு தக்க வாரிசு இல்லாமையால் அவரே மடத்திற்கு தலைவராகி ஆண்டுகள் உருண்டோடின. அருணாசலத்திற்கு உடல்நலம் குன்றியதால் மருத்துவர் திரு M.C. நஞ்சுண்டராவ் அவருக்கு மருத்துவம் பார்க்க மடத்திற்கு வந்து போய்க் கொண்டிருந்தார். ஒருமுறை அவர் மருத்துவம் பார்க்க வந்திருந்த போது மாடியில் இருந்து உரத்த சிரிப்பொலி தொடர்ந்து வருவதைக் கேட்டு அது பற்றி உசாவினார். அதற்கு, மாடியில் பித்துபிடித்த பெண் ஒருத்தி இருப்பதாகவும் அவளே வேளை கெட்ட வேளையில் பொருளற்ற வகையில் கடுஒலியுடன் சிரிப்பதாகவும் வீட்டார் தெரிவித்தார்கள்.
மருத்துவர் நஞ்சுண்டராவ் ஒரு தேசபக்தர் என்பதோடு ஆன்மீக நாட்டமுள்ளவராவும், குமுக நலத்தில் அக்கறை கொண்டு ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக மருத்துவம் செய்து நற்பெயர் பெற்றவராகவும் விளங்கியவர். அவர் ஆனந்தாம்பாள் மேல் மிக்க பரிவு கொண்டார். அங்கு வரும்பொழுது எல்லாம் ஆனந்தாம்பாளின் நடவடிக்கைகளை உற்றுநோக்கினார்.
ஒருபோது ஆனந்தாம்பாள் கோமளீச்சுவரன் கோவில் வாயிலில் தரையில் அமர்ந்துகொண்டு வருவோரை எல்லாம் பார்த்து சிரித்து கொண்டிருந்தார். திரு. ராவ அவரை அணுகி மெல்லிய குரலில் ''ஏன்? இப்படி சிரித்துக் கொண்டே இருக்கிறீர்கள்? என்று கேட்டார். சிரிப்பை உடனே நிறுத்திய ஆனந்தாம்பாள், 'மகனே! ஆன்மாவிற்கு எந்நேரமும் ஆனந்தமாய் இருப்பதுவே அதன் இயல்பு. இன்பமும் துன்பமும் பரு உடலையும் நுண் உடலையும் பாதிக்குமேயன்றி ஆன்மாவைப் பாதிப்பதில்லை. நீ உடம்பு அல்ல, நீ உடலுக்குள் இருக்கின்றாய். இதுவே உண்மை. உடலுக்கு எது நடந்தாலும் அது தற்காலிகமானதே. அதுவே ஆன்மா என்று உன்னை உன் உடலோடு தொடர்புபடுத்திக் கொள்ளாதே. ஆன்மா எப்பொழுதும் மகிழ்ச்சியாகவே இருக்கும். இதை உணராமல் இன்ப துன்பத்தில் உழன்று சலிப்புறும் மனிதர்களைப் பார்த்துத் தான் சிரிக்கின்றேன்' என்றார். உடனே மருத்துவர் திரு. நஞ்சுண்ட ராவ் இப்பெண்மணி ஆன்மீகத்தில் உயர்ந்தவர் என்பதை உணர்ந்து கொண்டார். அவர் ஸ்ரீ சக்கர உபாசனை பெற்று பக்குவம் அடைந்தவர் என்பதையும் தெரிந்து கொண்டார். குறுகிய காலத்தில் அவரது பின்பற்றாளரானார். ஆனந்தாம்பாள் தம்மை சக்கரம்மா என்றே குறிப்பிடுவார். மருத்துவர் ராவும் அவரை சக்கரத்தம்மா என்றே குறிப்பிட்டு அவர் பெருமையை எங்கும் பேசலானார். இதுவே நாளாவட்டத்தில் மக்கள் வழக்கில் ''சக்கரை அம்மா'' என்றானது.
தன் கல்வியாலும் பெருமக்கள் நட்பாலும் உயர்ந்தவராய் இருந்தபோதும் திரு. நஞ்சுண்ட ராவ் எழுத்தறிவில்லாத எளிய கைம்பெண்ணான சக்கரை அம்மாவை தன் குருவென்று வெளிப்படையாக கூறியமையால் இன்னும் பலர் சக்கரை அம்மாவை தமது குருவாக ஏற்றுப் போற்றினர்.
சுவாமி விவேகானந்தர், சேசாத்திரி சுவாமிகள், பாம்பன் சுவாமிகள், அடிமுடிப் பரதேசி, விட்டோபா ஆகியோரை சக்கரை அம்மா கண்டு வணங்கியுள்ளார்.
திரு. நஞ்சுண்ட ராவ் சக்கரை அம்மாவை காசி உள்ளிட்ட பல திருத்தலங்களுக்கு தம்மோடு அழைத்துச் சென்றுள்ளார். திருவண்ணாமலைக்கு அப்படி அழைத்துக் கொண்டு போன போது கந்தாசிரமத்தில் சக்கரை அம்மா ரமணரை சந்தித்து வணங்கினார். சக்கரை அம்மாவை பற்றி பின்பு உயர்வாக தமது பின்பற்றாளர்களிடையே ரமணர் பேசியதை திரு. ஏ. தேவராச முதிலியார் என்ற ரமண பக்தர் ''அனுதினமும் ரமணருடன்'' என்ற தமது நூலில் சில சித்திகளைப் பெற்ற சக்கரை அம்மா அவர்கள் மருத்துவர் நஞ்சுண்டராவுடன் வந்து ரமணரை விருபாட்சிக் குகையில் சந்தித்ததாக எழுதியுள்ளார்.
சக்கரை அம்மா 1901 இல் திருவான்மீயூர் மருந்தீசுவரர் கோவிலில் ஈசனை வணங்கிவிட்டு திரிபுரசுந்தரி சன்னதிக்கு வந்த போது பக்தர்களுக்கு கை காண்பித்து என்னுடைய இந்த குழந்தைகளை உன்னிடம் ஒப்படைக்கிறேன் அவர்களுக்கு நீ முக்தி கொடுக்க வேண்டும் என்று வேண்டினார். வழியில் வந்துகொண்டிருந்த போது அப்போது அங்கிருந்த குச்சிலை (சவுக்கு) மரத்தோப்பைக் காட்டி அதை விலைக்கு வாங்குமாறு மருத்துவர் நஞ்சுண்டராவைப் பணித்தார். அதற்கு பின், தான் தன் உடலைகவிட்டுக் கூடிய விரைவில் நீக்கப்போவதாகவும் அந்த உடலை தாம் சுட்டிய அந்த தோப்பில் அடக்கம் செய்து சமாதி எழுப்புமாறு கேட்டுக் கொண்டார். தாம் அங்கிருந்தே தமது பக்தர்களுக்கு அருள்புரியப் போவதாகவும் தம்சமாதி ஒரு நூற்றாண்டு கழித்தே மக்கள் கவனத்தை ஈர்க்கும்மென்றும் அப்போது மக்கள் அதன் பெருமையை உணர்ந்து நாடி வருவார்கள் என்றும் சொன்னார்.
பிறகு பத்து நாள்களில் 1901 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 அன்று மாலை 3.30 மணிக்கு தமது 47 ஆம் அகவையில் கோமளீச்சுவரன் பேட்டை மடத்தில் சக்கரை அம்மா உடலை விட்டு நீங்கினார். அவரது உடல் பின்பற்றாளர்களால் திருவான்மியூருக்கு கொண்டு வரப்பட்டு அவர் சுட்டிக் காட்டியபடியே நஞ்சுண்டராவால் விலைக்கு வாங்கப்பட்ட அதே தோப்பில் நல்லடக்கம் செய்யப்பட்டு சமாதி எழுப்பப்பட்டது. அதன் மேல் கோவில் கட்டப்பட்டது. அவர் திருவாய்மொழிக்கு ஏற்ப நூறாண்டுகள் கழித்து 2001 இல் மீண்டும் கோவில் புதுப்பிக்கப்பட்டு 2002 இல் குடமுழுக்கு நடைபெற்றது முதல் திரளான மக்களை ஈர்க்கத் தொடங்கி உள்ளது.
சக்கரை அம்மாவின் ஆன்மிகப் பயணத்தில் முதல் முதலில் அவர்கள் உணர்ந்தது ''நான் பிரம்மம்'', பின்பு "எல்லாம் பிரம்மம்'', ஈற்றாக அவர்கள் பிரம்மானந்த நிலையை அடைந்தார். அந்நிலையை அடைந்ததும் அம்மாவின் பின்புறத் தலையில் ஒளிவட்டம் தோன்றியது. இவற்றை எல்லாம் அவருடைய அருமை பெருமைகளை முதன்முதலாக அடையாளங் கண்ட மரு. நஞ்சுண்டராவ் தமது நாட்குறிப்பில் எழுதி உள்ளார்.
மரு. நஞ்சுண்டராவ் விவேகானந்தரின் பின்பற்றாளர். பாரதியின் பேரன்பர். பாரதியார் ஆசிரியராக இருந்த 'பாலபாரதம்' செய்தி ஏட்டின் நிறுவனர். ராசாசி, அன்னிபெசன்டு, வ.வேசு., சி.பி. இராமசாமி ஐயர் ஆகியோரின் நண்பர். அவர் இறந்த பின் சக்கரை அம்மா சமாதிக்கு அருகே சமாதி வைக்கப்பட்டார்.
மரு. ராவ் சென்னை இராமகிருஷ்ணா மடத்தில் இராமகிருஷ்ணரின் 76 ஆம் பிறந்த நாளின் போது ''பிரபஞ்ச உணர்வு அல்லது முக்தி பற்றிய வேதாந்தக் கருத்து'' என்ற தலைப்பில் ஒரு சொற்பொழிவு ஆற்றினார். அது பின்பு 1909 ஆம் ஆண்டு ஜி.ஏ. நடேசன் கம்பெனியால் நூலாய் வெளியிடப்பட்டது. அதில் தம் குரு சக்கரை அம்மா பற்றிய சேதிகள் பலவற்றை அவர் எழுதி உள்ளார்.
மரு. ராவ், ''முக்தி என்பது என்ன என்பதை எழுத்தறவில்லாத எளிய அந்தணப் பெண் ஒருவரைக் கண்ட பின்பு தான் நான் தெரிந்து கொண்டேன். அவர் தான் கோமளீச்சுவரன் மடத்து சக்கரை அம்மா. அவரது பெருமைக்கு ஒரே சான்று அவர் எப்போதும் இருந்த ஆனந்த நிலைதான். இப்படி ஒவ்வொரு அணுவிலும் எப்போதும் பரிபூரணானந்தத்தை வெளிப்படுத்திய வேறு யாரையும் நான் கண்டதில்லை'' என்கிறார். பத்தாண்டுகள் தன்னுள்ளே ஆன்மீகப் போர் புரிந்து தன் முப்பதாவது அகவையில் ஊழ்கத்தில் ஆழ்ந்து இருந்தபோது திடீரென்று ஒரு தெய்வீகப் பேரொளியைக் கண்டு ஒளி, பரஒளி, என் வாழ்வின் சாரமான பேரொளி என்று பரவசமானார் அன்றிலிருந்து இறுதிநாள் வரை சக்கரை அம்மாவுக்கு என்றும் பேரானந்த நிலைதான் என்கிறார்.
காஞ்சி காமகோடிப் பெரியவர் சந்திரசேகரேந்திர சரசுவதி சுவாமிகள் 1948 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் ஐந்து நாள்கள் சக்கரை அம்மா சமாதியில் உட்கார்ந்து ஊழ்கம் செய்துள்ளார்.
சக்கரை அம்மா சமாதி சென்னை திருவான்மியூரில் கலாட்சேத்திரா சாலை இலக்கம் 75 இல் காமராசர் சாலை கூடும் இடத்தில் உள்ளது. காலை 6 - 10 மணி வரையும் மாலை 4 - 8 மணி வரையும் திறந்திருக்கும்.
மேற்கண்ட செய்திகளும் படமும் மரு. M.C. நஞ்சுண்டராவ் தனியார் சமய அறக்கட்டளையால் வெளியிடப்பட்ட 8 பக்க பரப்புரை ஏட்டிலும் இணையதளத்தலும் அறியக் கிடக்கின்றது.

Wednesday, January 20, 2016

ஸ்ரீ சத்ய நாராயணா பூஜை!

ஸ்ரீ சத்ய நாராயணா பூஜை!
ஸ்ரீ சத்ய நாராயண விரத மஹிமை
காக்கும் கடவுளான விஷ்ணு பகவானுக்கு நடத்தப்படும் பூஜையே சத்யநாராயண பூஜையாகும். பெருமாள் எடுத்த பலவிதமான அவதாரங்களில் சத்யநாராயணர் அவதாரமும் ஒன்று. இந்த சத்யநாராயணருக்கு நடத்தப்படும் பூஜை மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. இப்பூஜை திருமணம், முக்கிய திருவிழாக்கள், வீடு, நிலம் வாங்கும் போது என எந்த ஒரு நல்லகாரியத்தின் போதும் நடத்தப்படுகிறது. பக்தர்கள் சத்யநாராயண பூஜையை பவுர்ணமியன்று நடத்துகிறார்கள். எந்த ஒரு காரியத்திலும் வெற்றி கிடைக்க வேண்டும் என்று மனதில் பிரார்த்தித்துக் கொண்டு இந்த பூஜையை செய்ய வேண்டும்.
முழுமுதற் கடவுளான விநாயக பெருமானை வணங்கி இந்த சத்யநாராயண பூஜையை ஆரம்பிக்க வேண்டும். அதைத் தொடர்ந்து நவக்கிரக பூஜை, மற்ற சில பூஜைகøயும் செய்ய வேண்டும். பின் விஷ்ணுவின் பல்வேறு நாமங்கள் கொண்டு அர்ச்சனை செய்யப்படும். பூஜை முடிந்த பிறகு வகை வகையான உணவுகள் பிரசாதமாக நிவேதிக்கப்படும். இப்பூஜையின் போது சத்யநாராயணரின் வரலாற்றை விவரிக்கும் கதையை, பூஜை செய்பவர்கள் அல்லது வயதான பெரியவர்கள் யாராவது கூறவேண்டும்.
பவுர்ணமி மற்றும் மகர சங்கராந்தி (பொங்கல்) அன்று இப்பூஜையை நடத்த மிக உகந்த நாட்கள். பொதுவாக, சத்யநாராயண பூஜை கோயில்களிலோ அல்லது வீட்டிலிலே நடத்துவார்கள். கோயிலில் நடத்தும் போது பக்தர்கள் கோயில் குருக்களின் உதவியோடு இப்பூஜையை நடத்துகிறார்கள்.
சத்ய நாராயண விரத ஸங்கல்பம்
ஸுபதிதௌ ஸுபாப்யாம், ஸுபே ஸோபனே முஹுர்த்தே ஆத்ய ப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே, ஸ்வேத வராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே, கலியுகே ப்ரதமபாதே ஜம்புத்வீபே பரதவர்ஷே பரதக்கண்டே, அஸ்மின் வர்த்தமானே, வ்யவ ஹாரிக சாந்திரமானேன. ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே (....) நாம ஸம்வத்ஸரே, (....) அயனே, (....) மாஸே (.....) ப÷க்ஷ (....) வாஸர யுகதாயாம், சுபநக்ஷத்ர சுபயோக, சுபகரண ஏவங்குண விசேஷண விஸிஷ்டாயாம், ஸுபதிதௌ, அஸ்மாகம் ஸஹ குடும்பானாம், ÷க்ஷமஸ் தைர்ய விஜய ஆயுராரோக்ய ஜஸ்வர்யாபி வ்ருத்யர்த்தம் தர்மார்த்த காம மோக்ஷ சதுர்வித பல புருஷார்த்த ஸித்யர்த்தம், புத்ர பௌத்ராபி வ்ருத்யர்த்தம், ஸத்ய நாராயண தேவதா முத்திஸ்ய ஸத்ய நாராயண தேவதா ப்ரீத்யர்த்தம், ஸத்ய நாராயண பூஜாங்க த்வேன யாவச்சக்தி த்யான ஆவாஹனாதி ÷ஷாடஸ உபசார பூஜாம் கரிஷ்யே.
விக்னேஸ்வர பூஜை
ஸுக்லாம் பரதரம் விஷ்ணும்
ஸஸிவர்ணம் சதுர்புஜம்
ப்ரஸன்ன வதனம் த்யாயேத்
ஸர்வ விக்நோப ஸாந்தயே.
மந்திரம்
கணானாம் த்வா கணபதிம் ஹவாமஹே
கவிம் கவினா முபமஸ்ர வஸ்தவம்
ஜ்யேஷ்டராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பத
ஆன ஸ்ருண்வ னநூதிபி ஸ்ஸீதஸாதனம்.
மகா கணாதிபதயே நம:
த்யாயாமி - ஆவாஹயாமி
ஆஸனம் ஸமர்ப்பயாமி
அர்க்யம் ஸமர்ப்பயாமி
ஆசமனீயம் ஸமர்ப்பயாமி
மதுபர்க்கம் ஸமர்ப்பயாமி
ஸ்நானம் ஸமர்ப்பயாமி
வஸத்ரம் ஸமர்ப்பயாமி
யக்ஞோபவீதம் ஸமர்ப்பயாமி
கந்தம் ஸமர்ப்பயாமி
அக்ஷதான் ஸமர்ப்பயாமி
புஷ்பாணி ஸமர்ப்பயாமி
ஓம் ஸுமுகாய நம:
ஓம் ஏகதந்தாய நம:
ஓம் கபிலாய நம:
ஓம் கஜகர்ணிகாய நம:
ஓம் லம்போதராய நம:
ஓம் விகடாய நம:
ஓம் விக்னராஜாய நம:
ஓம் கணாதிபாய நம:
ஓம் தூமகேதவே நம:
ஓம் கணாத்யக்ஷõய நம:
ஓம் பாலசந்த்ராய நம:
ஓம் வக்ரதுண்டாய நம:
ஓம் ஸுர்ப்பகர்ணாய நம:
ஓம் ஹேரம்பாய நம:
ஓம் ஸ்கந்தபூர்வஜாய நம:
ஓம் கணாதிபதயே நம:
தூப தீப நைவேத்யாதி
ஸர்வோபசார பூஜாம் ஸமர்ப்பயாமி
கணபதி முத்வாஸயாமி
நவக்கிரஹ பூஜை
சூர்யாய நம : (ஆவாஹயாமி, ஆஸனம் - ஸமர்ப்பயாமி அர்க்யம் - ஸமர்ப்பயாமி, வஸ்த்ரம் - யக்ஞோபவீதம் கந்தம் அக்ஷதான் புஷ்பாணி - ஸமர்ப்பயாமி, தூப தீப நைவேத்யாமி) ஸர்வோபசார பூஜாம் ஸமர்ப்பயாமி.
(.....) இதே பிரகாரம் ஒவ்வொரு கிரஹத்திற்கும் மேற்சொல்லிய விதி பிரகாரம் சொல்லிக் கொண்டு தூப தீப நைவேத்தியம் கொடுக்க வேண்டும்.
சந்த்ராய நம: (....) ஆவாஹனாதி
ஸர்வோபசார பூஜாம் ஸமர்ப்பயாமி
அங்காரகாய நம : (....) ஆவாஹனாதி
ஸர்வோபசார பூஜாம் ஸமர்ப்பயாமி
புதாய நம : (....) ஆவாஹனாதி
ஸர்வோபசார பூஜாம் ஸமர்ப்பயாமி
ப்ருஹஸ்பதயே நம : (....) ஆவாஹனாதி
ஸர்வோபசார பூஜாம் ஸமர்ப்பயாமி
ஸுக்ராய நம : (....) ஆவாஹனாதி
ஸர்வோபசார பூஜாம் ஸமர்ப்பயாமி
சனைஸ்சராய நம : (....) ஆவாஹனாதி
ஸர்வோபசார பூஜாம் ஸமர்ப்பயாமி
ராஹுவே நம : (....) ஆவாஹனாதி
ஸர்வோபசார பூஜாம் ஸமர்ப்பயாமி
கேதுவே நம : (....) ஆவாஹனாதி
ஸர்வோபசார பூஜாம் ஸமர்ப்பயாமி
இதற்கும் மேற்கண்டவாறு சொல்லவும்.
ப்ரஹ்மணே நம : (....) ஆவாஹனாதி
ஸர்வோபசார பூஜாம் ஸமர்ப்பயாமி
விஷ்ணவே நம : (....) ஆவாஹனாதி
ஸர்வோபசார பூஜாம் ஸமர்ப்பயாமி
ஸிவாய நம : (....) ஆவாஹனாதி
ஸர்வோபசார பூஜாம் ஸமர்ப்பயாமி
லக்ஷ்ம்யை நம : (....) ஆவாஹனாதி
ஸர்வோபசார பூஜாம் ஸமர்ப்பயாமி
கலச பூஜை
ததங்க கலஸ பூஜாஞ்ச கரிஷ்யே நம: கலஸம் கந்தம் மூத்திஸ்ய ஸ்ரீ ஸத்ய நாராயண தேவதா ஸமர்ப்பயாமி, புஷ்பம்-ஸமர்ப்பயாமி, அக்ஷதான் - ஸமர்ப்பயாமி, தூபம்-ஆக்ராபயாமி, தீபம் - தாஸ்யாமி, நைவேத்யம்-ஸமர்ப்பயாமி, கர்ப்பூர நீராஞ்சனம்-ஸமர்ப்பயாமி.
ஸ்லோகம்
கங்கே ச யமுனே சைவ
கோதாவரி ஸரஸ்வதி
நர்மதே ஸிந்து காவேரி
ஜலேஸ்மின் ஸன்னிதிம் குரு.
ஏவம் கலஸபூஜாம் க்ருத்வா
மயா கரிஷ்ய மாண
ஸ்ரீ ஸத்ய நாராயண விரத பூர்வாங்க
ஸ்ரீ ஸத்ய நாராயண பூஜாம் கரிஷ்யே.
சத்ய நாராயண பூஜாவிதி
(ஒவ்வொரு ஸங்கராந்தி பவுர்ணமியில் ஏகாதசிதிதி ஸாயங்காலம் ஸ்நானம் செய்து உபவாசமிருந்து பூஜா ஸ்தானத்தைச் சுத்தி செய்து கோமயம் தெளித்து சித்திரக் கோலமிட்டு விக்னேஸ்வரர் கௌரி வருண தேவதைகளைப் பிரதிஷ்டை செய்வித்து சங்கல்பம் புரிந்து தமது கோத்ர விருத்திக்காகவும், சாந்தி பூர்வமாக சகல மனோரத சித்தி பெற வேண்டி தமது சக்திக்கு ஏற்றவாறு பூஜா திரவ்யாதி நைவேத்தியங்கள் வைத்து ஸ்ரீ விக்நேஸ்வரர் முதலாக ஸுர்யாதி நவக்கிரஹ தேவதா பூஜை செய்து பிறகு ஸத்ய நாராயண பூஜையை ஆரம்பித்துச் செய்ய வேண்டியது.)
சத்ய நாராயண பூஜை
சுலோகம்
த்யாயேத் ஸத்யம் குணாதீதம் குணத்ரய ஸமந்விதம்
லோகநாதம் த்ரிலோகேஸம் கௌஸ்துவாபரணம் ஹரிம்.
தியானம்
நீலவர்ணம் பீதவாஸம் ஸ்ரீவத்ஸ பதபூஷிதம்
கோவிந்தம் கோகுலாநந்தம்ப ப்ரஹ்மாத்யைரபி பூஷிதம் ஸமர்ப்பயாமி
அர்க்யம்
வ்யக்தாவ்யக்த ஸ்வரூபாய ஹ்ருஷீக பதயே நம:
மயாநிவேதிதோ பக்த்யா அர்க்யோயம் ப்ரதிக்ருஹ்யதாம் ஸமர்ப்பயாமி
பாத்யம்
நாராயண நமஸ்தேஸ்து நாகார்ணவ தாரக
பாத்யம் க்ருஹாண தேவேஸமம ஸெளக்யம் விவர்த்தய ஸமர்ப்பயாமி
ஆசமனீயம்
மந்தாகிந்யாஸ்து யத்வாநி ஸர்வ பாபஹரம்ஸுபம்
ததிதம் கல்பிதம் தேவ ஸம்யகர சம்யதாம் விபோ ஸமர்ப்பயாமி
ஸ்நானம்
ஸ்நானம் பஞ்சாம்ருதைர்த்தேவ க்ருஹாண புரு÷ஷாத்தம
அனாதனாத ஸர்வக்ஞ கீர்வாண ப்ரணதிப்ரிய ஸமர்ப்பயாமி
வஸ்த்ரம்
வேதஸுக்த ஸமாயுக்தே யஜ்னஸாம ஸமன்விதே
ஸர்வவர்ண ப்ரதே தேவி வாஸஸீ ப்ரதிக்ருஹ்யதாம் ஸமர்ப்பயாமி
யக்ஞோபவீதம்
ப்ரம்ம விஷ்ணு மஹேஸானாம் நிர்மிதம் ப்ரஹ்மஸுத்ரம்
யக்ஞோபவீத தானேன ப்ரியதாம் கமலாபதிம் ஸமர்ப்பயாமி
சந்தனம்
ஸ்ரீகண்டம் சந்தனம் திவ்யம் கந்தாட்யம் ஸுமனோஹரம்
விலேபனம் ஸுரஸ்ரேஷ்ட சந்தனம் ப்ரதிக்ருஹ்யதாம் ஸமர்ப்பயாமி
புஷ்பாணி
மல்லிகாதி ஸுகந்தீனி மாலத்யாதீனி வைரப்போ
மயாஹ்ருதானி பூஜார்த்தம் புஷ்பாணி ப்ரதிக்ருஹ்யதாம் ஸமர்ப்பயாமி
அங்கபூஜை
ஓம் நாராயணாய நம: பாதௌ பூஜயாமி
ஓம் ஸேஷஸாயிநே நம: குல்பௌ பூஜயாமி
ஓம் காலஸ்வரூபிணே நம: ஜங்கே பூஜயாமி
ஓம் விஸ்வரூபாய நம: ஜானுனீ பூஜயாமி
ஓம் ஜகந்நாதாய நம: குஹ்யம் பூஜயாமி
ஓம் கமலநாபாய நம: நாபிம் பூஜயாமி
ஓம் ஜகத்குக்ஷிணே நம: குக்ஷிம் பூஜயாமி
ஓம் லக்ஷ்மிவிலஸ்தவக்ஷஸே நம: வக்ஷஸ்தலம் பூஜயாமி
ஓம் சக்ராதிஹஸ்தாய நம: ஹஸ்தான் பூஜயாமி
ஓம் சதுர்பாஹவே நம: பாஹுன் பூஜயாமி
ஓம் ஸ்ரீகண்டாய நம: கண்டம் பூஜயாமி
ஓம் சந்த்ரமுகாய நம: முகம் பூஜயாமி
ஓம் ஸத்யவாசே நம: வக்த்ரம் பூஜயாமி
ஓம் ஸ்ரீஸாய நம: நாஸிகாம் பூஜயாமி
ஓம் ரவிந்துலோசனாய நம: நேத்ரே பூஜயாமி
ஓம் திக்ஸ்ரோத்ராய நம: ஸ்ரோத்ரே பூஜயாமி
ஓம் ஸர்வவ்யாபிணே நம: ஸிரோ பூஜயாமி
ஓம் ஸ்ரீஸத்யநாராயணஸ்வாமிநே நம: ஸர்வாங்கானி பூஜயாமி
தூப தீப உபசாரம்
வனஸ்பதி ரஸோத்பூதோ
கந்தாட்யோ கத்த உத்தம:
அக்ரே யஸ்ஸர்வ தேவானாம்
தூபோயம் ப்ரதிக்ருஹ்யதாம் ஆக்ராபயாமி
தீபம்
ஸாஜ்யம்சவர்த்தி ஸம்யுக்தம்
வஹ்னி னாயோஜிதம் மமா
தீபம் க்ரூஹாண தேவேச
த்ரைலோக்ய திமிராபஹம் தர்ஸயாமி
ஸத்ய நாராயண ஸ்வாமினே நம:
நைவேத்யம்
க்ருதபக்வ ஹவிஷ்யான்னம் பாயஸஞ்சஸ ஸுர்க்கரம்
நாநாவிதஞ்ச நைவேத்யம் விஷ்ணோமே ப்ரதிக்ருஹ்யதாம் ஸ-மி
ஆசமனீயம்
ஸர்வபாபஹரம் திவ்யம் காங்கேயம்நிர்மலம்ஜலம்
ஆசமனம் மயாதத்தம் க்ருஹ்யதாம் புரு÷ஷாத்தமம் ஸ-மி
தாம்பூலம்
லவங்க கர்ப்பூரயுதம் தாம்பூலம் ஸுரபூஜிதம்
ப்ரீதயாக்ருஹா தேவேஸ மமஸெளக்யம் விவர்த்தய ஸ-மி
பலம்
இதம்பலம் மயாதேவ ஸ்தாபிதம் புரதஸ்தவ
தேவ மே ஸபலாநாபி பவேஜ்ஜனமணி ஜன்மணி ஸ-மி
நீராஜனம்
சதுர்வர்த்தி ஸமாயுக்தம் க்ருதேன ச ஸுபூஜிதம்
நீராஜனேன ஸந்துஷ்டோ பவதேஸன ஜகத்பதி ஸ-மி
ப்ரதக்ஷிண நமஸ்காரம்
யானிகானி ச பாபானி ஜன்மாந்தர க்ருதானி ச
தானிதானி ப்ரணஸ்யந்தி ப்ரதக்ஷிண பதேபதே ஸ-மி
நிவேதனம்
தத: புஷ்பாஞ்ஜலி நமஸ்காரான் ச க்ருத்வாஸ்துவததி
யான்மயா பக்தியுக்தேன பத்ரபுஷ்ப புலம் ஜலம் ஸ-மி
பரிபூர்ணம்
தத்க்ருஹாணா நுகம்பயா மந்த்ரஹீனம் க்ரியாஹீனம்
பக்திஹீனம் ஜனார்த்தன யத்பூஜிதம் மயாதேவ ததஸ்துமே ஸ-மி
ஹரி நாமாஷ்டகம்
ஸ்ரீகேஸவாச்யுத முகுந்த ரதாங்கபாணே
கோவிந்த மாதவ ஜனார்த்தன தானவாரே
நாராயணா மரபதே த்ரிஜகந்நிவாஸ
ஜிஹ்வேம் ஜபேதி ஸததம் மதுராக்ஷராணி
ஸ்ரீதேவதேவ மதுஸுதன ஸார்ங்கபாணே
தாமோதார்ணவ நிகேதனகைடபாரே
விஸ்வம் பராபரணபூஷித பூமிபால
ஜிஹ்வேம் ஜபேதி ஸததம் மதுராக்ஷராணி
ஸ்ரீபத்மலோசன கதாதர பத்மனாப
பத்மேச பத்மபத பாவன பத்மபாணே
பீதாம்பராம்பரருசே ருசிநாவதார
ஜிஹ்வேம் ஜபேதி ஸததம் மதுராக்ஷராணி
ஸ்ரீகாந்த கௌஸ்துப தரராதி ஹராக்ஞபாணே
விஷ்ணோ த்ரிவிக்ரம மஹோதர தர்மசேதோ
வைகுண்டவாஸ வசுதாதிப வாசுதேவ
ஜிஹ்வேம் ஜபேதி ஸததம் மதுராக்ஷராணி
ஸ்ரீநாராஸிம்ஹ நரகாந்தக காந்தமூர்தே லக்ஷ்மீதே
கருடவாஹன ஸேஷஸாயினே
கேஸிப்ரணாஸன சுகேச கிரீடமௌளே
ஜிஹ்வேம் ஜபேதி ஸததம் மதுராக்ஷராணி
ஸ்ரீவத்ஸலாஞ்சந சுரர்ஷப சங்கபாணே
கல்பாந்தவாரிதி விஹாரஹரே முராரே
யக்ஞேசயக்ஞ மயயக்ஞ முகாதி தேவ
ஜிஹ்வேம் ஜபேதி ஸததம் மதுராக்ஷராணி
ஸ்ரீராம ராவணரிபோ ரகுவம்ஸகேதேர்
ஸீதாபதே தஸரதாத்மஜ ராஜஸிம்ஹ
சுக்ரீவமித்ர ம்ருகவேதா ஸாபபாணே
ஜிஹ்வேம் ஜபேதி ஸததம் மதுராக்ஷராணி
ஸ்ரீகிருஷ்ண வ்ருஷ்ணிவர யாதவ ராதிகேஸ
கோவர்த்தநோத்தரண கம்ஸவிநாஸசௌரே
கோபால வேணுகர பாண்டுசுதைக பந்தோ
ஜிஹ்வேம் ஜபேதி ஸததம் மதுராக்ஷராணி.