Monday, June 29, 2015

Chakras

7 - சகஸ்ராரம்
அமைப்பு : ஆயிரம் தாமரை இதழ்கள் கொண்ட ஊதா நிறத்துடன் அடர் பொன்னிறம் கொண்ட ஜோதிர் லிங்கத்தை மையத்தில் கொண்டது.
இடம் : உச்சந்தலை
பலன்கள் : இந்தச் சக்கரம் நன்கு மலர்ந்தால், பிரபஞ்ச உணர்வுடன், முழுமையாக ஒன்றுபடுத்தும் நிலைக்கு இட்டுச் செல்லும்.
சம்பந்தப்பட்ட உறுப்புகள் : மூளை
பீஜமந்திரம் : ஓஹும் சத்யம் ஓம்
Baskar Jayaraman's photo.

6 - ஆக்ஞா
அமைப்பு : இரண்டு தாமரை இதழ்கள் கொண்ட கருநீல நிறத்தையும், முறையே இதழின் வலது பக்கம் சுரியனையும், இதழின் இடது பக்கம் சந்திரனையும், நடுவில் நீல நிற லிங்கத்தையும் கொண்ட சக்கரமாகும்
இடம் : புருவ மத்தியில்
பலன்கள் : சூரிய சந்திர சக்திகளை ஒன்றுபடுத்தி, இந்த சக்கரத்தின் மீது தொடர்ந்து தியானம் செய்வது, ஞாபக சக்தியை அதிகப்படுத்தி, விழிப்புணர்வையும், ஒருமுகப்படுத்தும், தன்மையையும் மலர்ச்செய்யும்.
சம்பந்தப்பட்ட உறுப்புகள் : கண்கள், நெற்றியின் கீழ்ப்பகுதி
பீஜமந்திரம் : (ॐ)ஆ... உ... ம்...

Baskar Jayaraman's photo.

5 - விஷூத்தி
அமைப்பு : பதினாறு தாமரை இதழ்கள் கொண்ட, உள்ளே நீல நிறத்தையுடைய அடர் நீலம் கொண்ட சக்கரமாகும்.
இடம் : தொண்டை
மூலக்கூறு : ஆகாயம்
பலன்கள் : சரணாகதியை வெளிக்கொணரும். மறைவான ஆத்மசக்தியின் பரிமாணத்தைத் திறக்கச் செய்யும். புனிதத்துவம் வளரும்.
சம்பந்தப்பட்ட உறுப்புகள் : தொண்டை, நுரையீரல்
பீஜமந்திரம் : ஹங்
Baskar Jayaraman's photo.

4 - அனாஹதம்
அமைப்பு : பன்னிரண்டு தாமரை இதழ்கள் கொண்ட பச்சை நிறத்துடன் கூடிய இந்தச் சக்கரத்தின் மையத்தில் காணப்படும் அறுகோணவடிவத்தில் பிரகாசமாக ஒளிவீசும் பொன்னிற ஜோதியைக் கொண்டது.
இடம் : மார்பின் நடுவில்
மூலக்கூறு : காற்று
பலன்கள் : அன்பு, இரக்கம், உணர்வு, இவற்றின் மூலம் உறவுகள் சீராகும்.
சம்பந்தப்பட்ட உறுப்புகள் : இதயம்
பீஜமந்திரம் : யங்
Baskar Jayaraman's photo.

3 - மணிபூரகம்
அமைப்பு : பத்து இதழ்கள் கொண்ட பிரகாசமான மஞ்சள் நிறத்தாமரை. நெருப்பு ஜ்வாலையை (ஜட்டராக்னி) மையத்தில் கொண்டது இந்தச் சக்கரம்.
இடம் : தொப்புள்
மூலக்கூறு : நெருப்பு
பலன்கள் : உடல் சக்தியையும், மிக்க ஆரோக்கியத்தையும் தீவிரப்படுத்தி விழிப்படையச் செய்கிறது.
சம்பந்தப்பட்ட உறுப்புகள் : வயிறு, கல்லீரல், சிறுகுடல், மண்ணீரல்
பீஜமந்திரம் : ரங்
Baskar Jayaraman's photo.

2 - சுவாதிஷ்டானம்
அமைப்பு : ஆறு இதழ்கள் கொண்ட ஆர்ஞ்சு நிறத்தாமரை, உள்ளே சாம்பல் நிற பிறைச் சந்திர வடிவைக் கொண்டது இந்தச் சக்கரம்.
இடம் : பிறப்புறுப்புக்கு மேல்
மூலக்கூறு : நீர்
பலன்கள் : சுயக்கட்டுப்பாட்டையும், நுண்ணுணர்வையும் அதிகரிகச் செய்யும்.
சம்பந்தப்பட்ட உறுப்புகள் : கர்ப்பப்பை, பிறப்புறுப்புக்கள், பெருங்குடல்
பீஜமந்திரம் : வங்

Baskar Jayaraman's photo.

1 - மூலாதாரம்
அமைப்பு : நான்கு இதழ்கள் கொண்ட, சிவப்பு நிறத்தாமரை. கறுப்பு நிறலிங்கத்தை மூன்றரைச் சுற்றுக்கள் சுற்றப்பட்ட பொன்னிறகுண்டலினி சர்ப்பத்தை மையத்தில் கொண்டது.
இடம் : பிறப்புறுப்பிற்கும் ஆசனவாய்க்கும் இடையில்
மூலக்கூறு : பூமி
பலன்கள் : குண்டலினி சக்தியை விழிப்புறச் செய்தல், ஸ்திரத்தன்மையையும், உயிர் ஆற்றலையும், அதிகரிக்கச் செய்யும்.
சம்பந்தப்பட்ட உறுப்புகள் : சிறு நீரகம், சிறு நீரகப்பை
பீஜமந்திரம் : லங்
Baskar Jayaraman's photo.

Ref: Baskar Jayaraman - Facebook

Thursday, June 25, 2015

சித்தமெல்லாம் சிவமயம் – 108 சித்தர்களின் பெயர்கள்

சித்தர்கள் –
தியானம்,மருத்துவம்,ஆன்மீகம்,தத்துவம்,விஞ்ஞானம்,ரசாயனம்,சிற்பம், மொழியறிவு என பல்வேறுபட்ட துறைகளில் சிறந்து விளங்கியவர்கள் நம் சித்தர்கள். செம்பு, கல், மண் என எதுவையும் தங்கமாக்கும் சொர்ண ரகசியம், ஒருவரின் உடலிலிருந்து மறு உடலுக்கு உயிர் மாறும் கூடுவிட்டு கூடு பாயும் முறை, விலங்குகளுடன் பேசுதல், வசிகரித்தல், உயிர் கொடுத்தல், நீரில் நடத்தல், காற்றில் மிதத்தல் என பல்வேறு சித்துகள் எனப்படும் திறன்களையும் பெற்றிருந்தார்கள்.
சாதாரண மக்களாலும், சமய விற்பனையாளர்களாலும் சொல்லப்பட்ட புனைவுக்கதைகளை நான் இங்கு சொல்லப்போவதில்லை. சித்தர்களைப் பற்றி ஆய்வு நடத்தும் சித்தரியல் நூல்களையும், விங்கிபீடியா, அக்னி சிறகு போன்ற சிறந்த வலைப்பூக்களையும், சித்தர்களைப் பற்றி அறிந்தவர்களின் வார்த்தைகளை கேட்டும் இங்கு எழுதுகிறேன்.
சிவனை வணங்குவதால் மட்டும் எனக்கும் சித்தர்களுக்கும் ஒரு தொடர்பு ஏற்பட்டது. அவர்களைப் பற்றி அறிந்து கொள்ள எனக்கு கொஞ்சம் காலமும் தேவைப்பட்டது. நான் படித்து, பார்த்து, கேட்டு தெரிந்து கொண்டவைகளை ஒரு குட்டி தொடராகவே எழுதுவது என தீர்மானித்தேன்.அந்த தொடரின் முதல் பகுதியாக சித்தர் பாடல்கள் வெளிவந்தன. இப்போது அந்த சித்தர்களின் மகிமைகளைப் பற்றியும் எழுதுகிறேன். இந்த தொடர் வெற்றிகரமாக அமைய உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.
உண்மைச் செய்தி –
பொதுவாக எல்லோறும் கூறுவது போல சித்தர்கள் வெறும் 18 பேர்கள் இல்லை.கொஞ்ச நாள் முன்பு வரை எனக்கும் இந்த செய்தி தெரியாது. சித்தர்களின் பெயர்களை பல்வேறு புத்தகங்கள் வெவ்வேறு விதமாக அச்சிட்டு இருக்கின்றன. பொதுவாக இவைகள் புனைப்பெயர்களாக இருக்கும் என நான் நம்பினேன். ஆனால் சித்தர்கள் நூற்றுக்கும் மேர்பட்டவர்கள் இருக்கிறார்கள் என்று தெரிந்த போது வியப்பு ஏற்பட்டது. அந்த வியப்புடனே சித்தர்களைப் பற்றிய ஓர் சின்ன பார்வை.
பதினென் சித்தர்கள் அல்லது பதினெட்டு சித்தர்கள் என பிரித்தவர்கள் யார் என தெரியவில்லை. இந்த தொகுப்பு முறை காரணமாக இரண்டு வேறுபட்ட பட்டியல் காணப்படுகின்றது. இது மட்டும் அல்ல இன்னும் பிற தொகுப்புகளும் காணப்படலாம்.ஏன் இந்த மாறுபட்ட பட்டியல்கள் என நீங்கள் கேட்டால் அதற்கு ஒரே விளக்கம் தான் என்னிடம் இருக்கிறது. வள்ளல்களை எப்படி ஏழு ஏழாக பிரித்தனரோ, அதைப்போல ஒரு பாகுபாடுதான் சித்தர்களை பிரித்தமைக்கும் இருக்கும் என நினைக்கிறேன்.
ஒரு 18 சித்தர்களின் பெயர் பட்டியல் –
1. திருமூலர்
2. இராமதேவர்
3. கும்பமுனி
4. இடைக்காடர்
5. தன்வந்திரி
6. வால்மீகி
7. கமலமுனி
8. போக நாதர்
9. மச்ச முனி
10. கொய்கணர்
11. பதஞ்சலி
12. நந்தி தேவர்
13. போதகுரு
14. பாம்பாட்டி
15. சட்டைமுனி
16. சுந்தரானந்த தேவர்
17. குதம்பைச் சித்தர்
18. கோரக்கர்
அடுத்த 18 சித்தர்களின் பெயர் பட்டியல் –
1. கௌதமர்
2. அகத்தியர்
3. சங்கரர்
4. வைரவர்
5. மார்க்கண்டர்,
6. வன்மிகர்,
7. உரோமர்
8. புசண்டர்
9. சட்டைமுனி
10. நந்தீசர்
11. திருமூலர்
12. பாலாங்கிநாதர்
13. மச்சமுனி
14. புலத்தியர்
15. கருவூரார்
16. கொங்கணர்
17. போகர்
18. புலிப்பாணி
வேறுபாடுகள் அற்றவர்கள் –
இனம், மதம், மொழி, நாடு என்ற நம்முடைய பிரிவினைகளுக்கெல்லாம் கட்டுப்படாதவர்கள் சித்தர்கள். காற்று, நீர், நிலம், நெருப்பு, ஆகாயம் என பஞ்ச பூதங்களையும் அடக்கி ஆண்டவர்களுக்கு சமூகத்தின் பிரிவுகள் பாதிக்கவே இல்லை. பல நாடுகளில் பயணம் செய்து, பல மொழிகளில் புத்தகங்கள் எழுதியுளார்கள். உதாரணமாக ராமதேவராகிய யாக்கோபு என்ற சித்தர் இஸ்லாமிய மதத்தின் புனித இடமான மெக்காவில் தங்கி தான் கற்றவற்றை, இங்கு வந்து தமிழிலும் எழுதியுள்ளார்.
அந்தந்த நாடுகளுக்கு தக்கபடி பெயர்கள் இருப்பதால் சில சித்தர்களுக்கு இரண்டுக்கும் மேற்பட்ட பெயர்களும் இருக்கின்றன.அதுமட்டுமல்லாமல் பல மொழித் திறமையால் பல நாடுகளில் அவர்களின் புத்தகங்கள் இருக்கின்றன. சித்தரியல் என்னும் ஒரு இயலே இதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. சித்தர்களின் நூல்களை ஆராந்து பார்த்து பல நாடுகளிலும் நவீன மருத்துவத்தில் அதனை சேர்க்க தொடங்கியுள்ளனர்.
இவர்களின் கண்டுபிடிப்பான மனநிலையை ஒழுங்கு செய்யும் யோகா, இன்று மிகப்பெரிய அளவில் மக்களை சென்றடைந்துள்ளது. ஜக்கிவாசுதேவ், பரமஹம்ஸ நித்தியானந்தர் , வேதாந்திர மகரிசி போன்றவர்கள் தங்களது வாழ்க்கையை மக்கள் நல்வாழ்வுக்காக தந்து யோக நிலைகளை கற்று தருகிறார்கள். அத்துடன் நல்ல தமிழில் சித்தர்களைப் போல புத்தகங்களும் எழுதுகிறார்கள். ஒரு மதம் என்று இவர்கள் கட்டுக்குள் அடங்குவதில்லை, மதம்,இனம் கடந்து தங்கள் சேவையை செய்து கொண்டிருக்கிறார்கள். என்னைப் பொருத்தவரை இவர்களும் சித்தர்களே.
108 சித்தர்களின் பெயர்கள் -
நான் முன்பு கூறியபடியே நூற்றுக்கும் மேற்பட்ட சித்தர்கள் இந்த உலகில் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களைப் பற்றி விரிவாக பார்க்கும் முன்பு 108 சித்த மாமுனிகளின் பெயர்களை படித்து பாருங்கள். உங்களுக்கு தெரிந்த பழக்கமான பல சித்தர்கள் இருப்பார்கள்.
1. திருமூலர்.
2. போகர்.
3. கருவூர்சித்தர்.
4. புலிப்பாணி.
5. கொங்கணர்.
6. மச்சமுனி.
7. வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர்.
8. சட்டைமுனி சித்தர்.
9. அகத்தியர்.
10. தேரையர்.
11. கோரக்கர்.
12. பாம்பாட்டி சித்தர்.
13. சிவவாக்கியர்.
14. உரோமரிசி.
15. காகபுசுண்டர்.
16. இடைக்காட்டுச் சித்தர்.
17. குதம்ப்பைச் சித்தர்.
18. பதஞ்சலி சித்தர்.
19. புலத்தியர்.
20. திருமூலம் நோக்க சித்தர்.
21. அழகண்ண சித்தர்.
22. நாரதர்.
23. இராமதேவ சித்தர்.
24. மார்க்கண்டேயர்.
25. புண்ணாக்கீசர்.
26. காசிபர்.
27. வரதர்.
28. கன்னிச் சித்தர்.
29. தன்வந்தரி.
30. நந்தி சித்தர்
31. காடுவெளி சித்தர்.
32. விசுவாமித்திரர்
33. கௌதமர்
34. கமல முனி
35. சந்திரானந்தர்
36. சுந்தரர்.
37. காளங்கி நாதர்
38. வான்மீகி
39. அகப்பேய் சித்தர்
40. பட்டினத்தார்
41. வள்ளலார்
42. சென்னிமலை சித்தர்
43. சதாசிவப் பிரம்மேந்திரர்
44. ராமகிருஷ்ணர், சாரதாதேவியார்
45. ராகவேந்திரர்
46. ரமண மகரிஷி.
47. குமரகுருபரர்
48. நடன கோபால நாயகி சுவாமிகள்
49. ஞானானந்த சுவாமிகள்
50. ஷீரடி சாயிபாபா
51. சேக்கிழார் பெருமான்
52. ராமானுஜர்
53. பரமஹம்ச யோகானந்தர்
54. யுக்தேஸ்வரர்
55. ஜட்ஜ் சுவாமிகள்
56. ஆதி பராசக்தி திருகோவிலில் 21 சித்தர்களின் ஜீவ சமாதிகள் உள்ளன.
57. கண்ணப்ப நாயனார்.
58. சிவப்பிரகாச அடிகள்.
59. குரு பாபா ராம்தேவ்
60. ராணி சென்னம்மாள்.
61. பூஜ்ய ஸ்ரீ சித்த நரஹரி குருஜி
62. குழந்தையானந்த சுவாமிகள்.
63. முத்து வடுகநாதர்.
64. இராமதேவர்
65. அருணகிரிநாதர்.
66. பாடக்சேரி தவத்திரு இராமலிங்க சுவாமிகள்
67. மௌன சாமி சித்தர்
68. சிறுதொண்டை நாயனார்.
69. ஒடுக்கத்தூர் சுவாமிகள்.
70. வல்லநாட்டு மகாசித்தர்.
71. சுப்பிரமணிய சித்தர்.
72. சிவஞான பாலசித்தர்.
73. கம்பர்.
74. நாகலிங்க சுவாமிகள்.
75. அழகர் சுவாமிகள்.
76. சிவஞான பாலைய சுவாமிகள்
77. சித்தானந்த சுவாமிகள்.
78. சக்திவேல் பரமானந்த குரு
79. ஸ்ரீராம் பரதேசி சுவாமிகள்
80. அக்கா சுவாமிகள்
81. மகான் படே சுவாமிகள்
82. கம்பளி ஞானதேசிக சுவாமிகள்
83. பகவந்த சுவாமிகள்.
84. கதிர்வேல் சுவாமிகள்.
85. சாந்த நந்த சுவாமிகள்
86. தயானந்த சுவாமிகள்
87. தஷிணாமூர்த்தி சுவாமிகள்.
88. ஞானகுரு குள்ளச்சாமிகள்.
89. வேதாந்த சுவாமிகள்
90. லஷ்மண சுவாமிகள்.
91. மண்ணுருட்டி சுவாமிகள்.
92. சுப்பிரமணிய அபிநய சச்சிதானந்த பாரதி சுவாமிகள்.
93. யோகி ராம் சுரத்குமார் (விசிறி சுவாமிகள்).
94. கோட்டூர் சுவாமிகள்.
95. தகப்பன் மகன் சமாதி
96. நாராயண சாமி அய்யா சமாதி
97. போதேந்திர சுவாமிகள்
98. அவதூர ரோக நிவர்தீஸ்வரர் சுவாமிகள்.
99. வன்மீக நாதர்.
100. தம்பிக்கலையான் சித்தர்
101. மெய்வரத் தம்பிரான் சுவாமிகள்
102. குகை நாச்சியார் மகான்.
103. வாலைகுருசாமி.
104. பாம்பன் சுவாமிகள்.
105. குமாரசாமி சித்தர் சுவாமிகள்.
106. பெரியாழ்வார் சுவாமிகள்
107. மாயம்மா
108. பரமாச்சாரியார்.
ராணி சென்னம்மாள், மாயம்மா என்ற பெயர்கள் பெண் சித்தர்களை குறிக்கின்றன. அதனால் பெண் சித்தர்களும் உலகில் மகிமை புரிந்திருக்கின்றனர்.
http://agatiyaradimai.blogspot.in/

ஸ்ரீஅகத்திய மகரிஷியின் காயத்ரி:!!!

ஸ்ரீஅகத்திய மகரிஷியின் காயத்ரி:!!!
ஓம் அகதீஸ்வராய விதமஹே
பொதிகை சஞ்சராய தீமஹி
தந்நோ ஞானகுரு ப்ரசோதயாத்:
அகத்தியர் மூல மந்திரம் !!!
ஓம் ஸ்ரீம் ஓம் சற்குரு பதமே
சாப பாவ விமோட்சனம்
ரோக அகங்கார துர் விமோட்சனம்
சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம்
சற்குருவே ஓம் அகஸ்திய
கிரந்த கர்த்தாய நம
ஸ்ரீ அகஸ்தியர் அஷ்டோத்திர சத நாமாவளி!!!
ஓம் ஸ்ரீ அகஸ்த்யாய நம:
ஓம் ஸ்ரீ கும்ப ஸம்பூதாய நம:
ஓம் ஸ்ரீ லோபாமுத்ராபதயே நம:
ஓம் ஸ்ரீ விபவே நம:
ஓம் ஸ்ரீ வேதவிதே நம:
ஓம் ஸ்ரீ வேத கர்த்ரே நம:
ஓம் ஸ்ரீ வேதாந்த ஞானபாஸ்கராய நம:
ஓம் ஸ்ரீ விசவ வந்த்யாய நம:
ஓம் ஸ்ரீ விச்வ ரூபிணே நம:
ஓம் ஸ்ரீ விந்திய கர்வாபஹாகாய நம:
ஓம் ஸ்ரீ விதயே நம:
ஓம் ஸ்ரீ விதிக்ஞாய நம:
ஓம் ஸ்ரீ வித்யேசாய நம:
ஓம் ஸ்ரீ வைத்ய சாஸ்த்ர ப்ரவர்த்தகாய நம:
ஓம் ஸ்ரீ விச்வக்ஞாய நம:
ஓம் ஸ்ரீ விச்வ ஸாக்ஷிணே நம:
ஓம் ஸ்ரீ விச்வ கர்ம விசாரதாய நம:
ஓம் ஸ்ரீ வீத ராகாய நம:
ஓம் ஸ்ரீ வீத பயாய நம:
ஓம் ஸ்ரீ வித்வத் ச்ரேஷ்டாய நம:
ஓம் ஸ்ரீ விலக்ஷணாய நம:
ஓம் ஸ்ரீ தனுர் வேதப்ரதாய நம:
ஓம் ஸ்ரீ தீமதே நம:
ஓம் ஸ்ரீ ஸர்வ சாஸ்த்ரப்ரவர்த் தகாய நம:
ஓம் ஸ்ரீ ஸர்வ மந்த்ரார்த்த தத்வக்ஞாய நம:
ஓம் ஸ்ரீ ஸர்வம்கஷ பராக்ரமாய நம:
ஓம் ஸ்ரீ ஸர்வசாஸ்த்ரப்ரதாய நம:
ஓம் ஸ்ரீ தீராய நம:
ஓம் ஸ்ரீ ராகவப்ரியதர்சனாய நம:
ஓம் ஸ்ரீ ஜ்யோதி:சக்ரப்ர மாணக்ஞாய நம:
ஓம் ஸ்ரீ ஜ்யோதி: சாஸ்த்ர விசாரதாய நம:
ஓம் ஸ்ரீ ஜ்யோதிஷ க்ரந்த்த கர்த்ரே நம:
ஓம் ஸ்ரீ ஜ்யோதிர்லோக கமாகமாய நம:
ஓம் ஸ்ரீ தேவாதி வந்த்யாய நம:
ஓம் ஸ்ரீ தேவாத்மனே நம:
ஓம் ஸ்ரீ தேவாநாமிஷ்டதாய நம:
ஓம் ஸ்ரீ சுபாய நம:
ஓம் ஸ்ரீ சிவப்ரியகராய நம:
ஓம் ஸ்ரீ சாந்தாய நம:
ஓம் ஸ்ரீ சிவ சாஸ்த்ர பராயணாய நம:
ஓம் ஸ்ரீ சிவபக்தி ரதாய நம:
ஓம் ஸ்ரீ சிவ கல்யாண லாலஸாய நம:
ஓம் ஸ்ரீ மகாமதயே நம:
ஓம் ஸ்ரீ மகாமேதஸே நம:
ஓம் ஸ்ரீ மகா ஸாம்ராஜ்ய தாயகாய நம:
ஓம் ஸ்ரீ மலயசாலவாஸினே நம:
ஓம் ஸ்ரீத்ராவிடக்ரந்த்தகாரகாய நம:
ஓம் ஸ்ரீ த்ராவிடாக்ஷர கர்த்ரே நம:
ஓம் ஸ்ரீ த்ராவிடானாம் ப்ரியகராய நம:
ஓம் ஸ்ரீ பாஷாக்ருதே நம:
ஓம் ஸ்ரீ ஸங்க க்ருதே நம:
ஓம் ஸ்ரீ பாஷ்ய க்ருதே நம:
ஓம் ஸ்ரீ பக்தவத்ஸலாய நம:
ஓம் ஸ்ரீ பவரோகாபஹாரிணே நம:
ஓம் ஸ்ரீ பவபேஷஜதத்யராய நம:
ஓம் ஸ்ரீ பவஸாகர நிர்மக்ன ஸமுத்தரண பண்டிதாய நம:
ஓம் ஸ்ரீ பாண்ட்ய மண்டல வாஸினே நம:
ஓம் ஸ்ரீ மதுராஸங்க காரகாய நம:
ஓம் ஸ்ரீ மீனாக்ஷீ சரணாஸக்தமானஸாய நம:
ஓம் ஸ்ரீ த்யானபாரகாய நம:
ஓம் ஸ்ரீ ஹாலாஸ்ய நாதகல்யாண ஸேவாஸக்த த்ருடவ்ரதாய நம:
ஓம் ஸ்ரீ மித்ராவருண தேஜஸ்விநே நம:
ஓம் ஸ்ரீ மைத்ராவருண ஸம்பவாய நம:
ஓம் ஸ்ரீ மிதபாஷிணே நம:
ஓம் ஸ்ரீ மிதாஹாராய நம:
ஓம் ஸ்ரீ மிதரூபாய நம:
ஓம் ஸ்ரீ அமித த்யுதயே நம:
ஓம் ஸ்ரீ அயோனிஜாய நம:
ஓம் ஸ்ரீ அப்ரமத்தாய நம:
ஓம் ஸ்ரீ ஸச்சிதானந்த விக்ரஹாய நம:
ஓம் ஸ்ரீ ரிஷி ச்ரேஷ்டாய நம:
ஓம் ஸ்ரீ முனி ச்ரேஷ்டாய நம:
ஓம் ஸ்ரீ முனித்ராத்ரே நம:
ஓம் ஸ்ரீ முனிஸ்துதாய நம:
ஓம் ஸ்ரீ மானினே நம:
ஓம் ஸ்ரீ மானவிதாம் ச்ரேஷ்டாய நம:
ஓம் ஸ்ரீ மகா ஞான விதே நம:
ஓம் ஸ்ரீ உத்தமாய நம:
ஓம் ஸ்ரீ இந்த்ர சிக்ஷõகராய நம:
ஓம் ஸ்ரீ வீராய நம:
ஓம் ஸ்ரீ ஹ்ரஸ்வரூபிணே நம:
ஓம் ஸ்ரீ ஹிதம் கராய நம:
ஓம் ஸ்ரீ ப்ரும் ஹிஷ்டாய நம:
ஓம் ஸ்ரீ ப்ராம்மண ச்ரேஷ்டாய நம:
ஓம் ஸ்ரீ பாலாதப தனுத்யுதயே நம:
ஓம் ஸ்ரீ பருஸி நிஷ்டாய நம:
ஓம் ஸ்ரீ ப்ரம்ம நிஷ்டாய நம:
ஓம் ஸ்ரீ ப்ரம்ம ஞான விபோதகாய நம:
ஓம் ஸ்ரீ ஹயக்ரீவாத்த ஸ்ரீவித்யா பாரகாய நம:
ஓம் ஸ்ரீ குரவே நம:
ஓம் ஸ்ரீ அச்யுதாய நம:
ஓம் ஸ்ரீ தேவி பக்தி நிரதாய நம:
ஓம் ஸ்ரீ மந்த்ர சாஸ்த்ர விசாரதாய நம:
ஓம் ஸ்ரீ பூஜா கர்த்ரே நம:
ஓம் ஸ்ரீ த்யான கர்த்ரே நம:
ஓம் ஸ்ரீ மந்த்ர கர்த்ரே நம:
ஓம் ஸ்ரீ விசக்ஷணாய நம:
ஓம் ஸ்ரீ மஹநீயாய நம:
ஓம் ஸ்ரீ மஹா யோகினே நம:
ஓம் ஸ்ரீ மஹா த்யாகினே நம:
ஓம் ஸ்ரீ மஹா பலாய நம:
ஓம் ஸ்ரீ மஹா ஸாகர பாயினே நம:
ஓம் ஸ்ரீ கணேச ப்ரீதிகராய நம:
ஓம் ஸ்ரீ கணேச பக்தி நிரதாய நம:
ஓம் ஸ்ரீ கணேச த்யான தத்பராய நம:
ஓம் ஸ்ரீ கணேச மந்த்ர ஸுப்ரீதாய நம:
ஓம் ஸ்ரீ குஹ சிஷ்யாய நம:
ஓம் ஸ்ரீ குஹாக்ரண்யே நம:

கண்ணாடிப் பயிற்சி !!!

ஆன்மீக உலகில் பயன்படுத்தப்பட்டு வரும் மிகச் சிறந்த தவ முறைகளில் ஒன்று கண்ணாடிப் பயிற்சி முறை
இத்தகைய கண்ணாடிப் பயிற்சி முறை உலகின் பல்வேறு நாடுகளில், பல்வேறு தரப்பட்ட மக்களால், பல்வேறு வடிவங்களில் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது, வருகிறது.
கண்ணாடிப் பயிற்சி முறை ஒரு மிகச் சிறந்த தவமுறை. கண்ணாடிப் பயிற்சியை ஒருவர் தொடர்ந்து செய்து வந்தால்
அவருக்கு கீழ்க்கண்ட நிலைகள் ஏற்படுகிறது.,............
1.ஆன்மா விழித்துக் கொள்கிறது
2.ஆன்மா உடலிலிருந்து தனியாகப் பிரிந்து தனித்து இயங்கும் தன்மையைப் பெறுகிறது
3.ஜீவாத்மா , பரமாத்மாவுடன் இணைவதற்கான திறவுகோலைப் பெறுகிறது
மேலும் ஜீவாத்மா பரமாத்வுடன் இணைவதற்கான ஒரு பாலமாக கண்ணாடிப் பயிற்சி முறை இருக்கிறது.
கண்ணாடிப் பயிற்சி முறையை சுருக்கமாக ஞானத்திற்கான திறவுகோல் என்று சொல்லலாம்.
சூட்சுமமாக சொல்ல வேண்டுமென்றால் ஆன்மா ஒளி சூட்சும சரிரத்தில் ஏற்றி வைக்கப் படுகிறது.
இதனை இன்னும் சூட்சுமமாக கீழ்க்கண்டவாறு சொல்லலாம். சூக்கும உடல் விழிப்புற்று, கரண உடல் ஜோதி மயமாகிறது
கடவுளை உண்மையாக அடைவதற்கான வாயில்களின் கதவுகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் , அதனை திறக்கும் திறவுகோலாக கண்ணாடிப் பயிற்சி முறை பயன்படுத்தப் பட்டு வருகிறது என்ற என்ற உண்மை பல பேருக்கு தெரிவதில்லை
கண்ணாடிப் பயிற்சி எப்படி செய்ய வேண்டும் என்பதையும் அதற்கான வழிமுறைகளையும் பார்ப்போம்

கண்ணாடிப் பயிற்சி செய்பவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்
1.கண்ணாடிப் பயிற்சி செய்ய எடுத்துக் கொள்ளும் கண்ணாடி ஒன்றே கால் அடி அகலம் இரண்டே கால் அடி உயரம் இருக்க வேண்டும்
2.கண்ணாடியிலிருந்து ஒரு அடி அல்லது ஒன்றரை அடி தள்ளி அமர வேண்டும்
3.முழு உருவமும் தெரியும் படி அமர வேண்டும்
4.கண்ணாடிப் பயிற்சிக்கு பயன்படுத்தும் கண்ணாடியை வேறு யாரும் பயன்படுத்தக் கூடாது மறைவாக ஒரு துணியால் மூடி மறைத்து வைத்து விட வேண்டும்
5.காப்பு மந்திரம் தெரிந்தவர்கள் காப்பு போடலாம் அல்லது உடல் கட்டு திக்கு கட்டு போன்ற கட்டு மந்திரங்களைச் சொல்லி விட்டு கண்ணாடிப் பயிற்சி செய்யலாம்
6.இதை அதிகாலை 03. 00 மணிமுதல் 08.00 மணி வரை செய்யலாம் அதிகாலை 03.00 முதல் 05.00 வரை செய்வது உத்தமம்
கண்ணாடிப் பயிற்சி முறை உலகின் பல்வேறு நாடுகளில் பலவித நிலைகளில் செய்யப்பட்டு வருகிறது அதில் ஒரு சில கண்ணாடிப் பயிற்சி முறைகளைப் பார்ப்போம்
கண்ணாடிப் பயிற்சி முறை 1
1.முதலில் நமது உடலில் வலது கண்ணைப் பார்த்துச்
செய்ய வேண்டும்
2.பிறகு இரண்டு கண்களையும் பார்க்க வேண்டும்
3.பிறகு நம் முழு உருவத்தையும் பார்க்க வேண்டும்
4.பிறகு கண்களை மூடி உள்ளே பார்க்க வேண்டும்
5.மேற்கண்ட வரிசைப் படி மூன்று அல்லது நான்கு முறை செய்ய வேண்டும்
கண்ணாடிப் பயிற்சி முறை 2
1.முதலில் இரண்டு கண்களையும் பார்க்க வேண்டும்
2.பிறகு நெற்றிக் கண்ணைப் பார்க்க வேண்டும்
3.பிறகு கண்ணை மூடி உள்ளே பார்க்க வேண்டும்
4.மேற்கண்ட வரிசைப் படி மூன்று அல்லது நான்கு முறை செய்ய வேண்டும்
கண்ணாடிப் பயிற்சி முறை 3
1.முதலில் நமது உடலில் வலது கண்ணைப் பார்த்துச் செய்ய வேண்டும்
2.பிறகு தொண்டையைப் பார்க்க வேண்டும்
3.பிறகு முழு உருவத்தையும் பார்க்க வேண்டும்
4.பிறகு கண்ணை மூடி உள்ளே பார்க்க வேண்டும்
5.மேற்கண்ட வரிசைப் படி மூன்று அல்லது நான்கு முறை செய்ய வேண்டும்
இவற்றில் எந்த முறை சரி என்று உணர்ந்து அதை பயன்படுத்தி வந்தால் ஞானத்தின் திறவுகோல் நமக்கு கிடைக்கும்.
கண்ணாடிப் பயிற்சியுடன் மந்திரம்
கண்ணாடிப் பயிற்சி செய்து வந்தால் வசிய சக்தி உண்டாகும் இது கண்ணாடிப் பயிற்சியின் ஒரு பலன் தானே தவிர அதுவே முழு பலனும் அல்ல என்பதையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்
கண்ணாடிப் பயிற்சி செய்பவர்கள் கண்ணாடிப் பயிற்சியுடன் சேர்த்து எதை வசியப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறோமோ அதற்குரிய வசிய மந்திரத்தை அறிந்து அதை உச்சாடணம் செய்ய வேண்டும்
கண்ணாடிப் பயிற்சியையும் வசிய மந்திரத்தையும் தொடர்ந்து செய்வதின் மூலம் வசியத்தை பெற முடியும் ஜக வசியம் முக வசியம் ராஜ வசியம் போன்ற பல்வேறு வசியங்களையும் பெற வேண்டுமானால் சர்வ சித்தி தனாஉறர்ஸன சங்கல்பம் என்ற ஒரு மந்திரம் இருக்கிறது அந்த மந்திரத்தை உச்சாடணம் செய்து கண்ணாடிப் பயிற்சியையும் தொடர்ந்து செய்து வர சர்வலோகமும் வசியமாகும்
இங்கே ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும் ,
சர்வ சித்தி தனாஉறர்ஸன சங்கல்பம் என்பது மந்திரம் ;
கண்ணாடி என்பது யந்திரம் ;
தந்திரம் என்ன என்பது தெரியவரும்போது தான் கண்ணாடிப் பயிற்சியின் சூட்சும வி‘யம் நமக்குத் தெரிந்து விடும்.
கண்ணாடிப் பயிற்சியுடன் போட்டோ
கண்ணாடிப் பயிற்சியுடன் கீழ்க்கண்ட முறையையும் செய்து வந்தால் பலன் தெரியும்
நம் போட்டோ ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும் அது தெளிவாகவும் முகம் முழுவதும் தெரியும் படியாகவும் பார்த்துக் கொள்ள வேண்டும்
கண்ணாடிப் பயிற்சியை முடித்தவுடன் எடுத்துக் கொண்ட நம் போட்டோவின் வலது கண்ணை சிறிது நேரம் பார்த்து விட்டு வைத்து விட வேண்டும்
தொடர்ச்சியாக இதை செய்து வர வேண்டும் இந்த போட்டோவை வேறு யாரும் பார்க்காதவாறு மறைவாக வைத்திருக்க வேண்டும்
எந்த செயல் முடிய வேண்டும் என்று நினைக்கிறோமோ அந்த செயலை வலது கண்ணைப் பார்த்து சொல்லி விட்டு போட்டோவை வைத்து விட வேண்டும்
இதே முறையில் தொடர்ந்து செய்து வர நாம் எண்ணிய காரியம் நிறைவேறும் எண்ணிய காரியம் முடிந்தவுடன் அடுத்து நடக்க வேண்டிய செயலை நினைத்துக் கொண்டு போட்டோவைப் பார்க்க வேண்டும்
கண்ணாடிப் பயிற்சி செய்வதின் மூலம் பெறப்படும் பலன்கள் எல்லாம் குறைவே. கண்ணாடிப் பயிற்சி எளிதில் யாரும் அறிந்து கொள்ள முடியாத கணக்கிலடங்காத அரிய பொக்கி‘ங்களை தன்னுள் அடக்கி வைத்திருக்கிறது அதன் திறவுகோல் மறைத்து வைக்கப் பட்டிருக்கிறது திறவுகோலை கண்டுபிடியுங்கள் அரிய பொக்கிங்கள் உங்களுக்கு கிடைக்கும்
http://kbalagangadharan.blogspot.in/

Wednesday, June 24, 2015

காங்கேயம் சிவன்மலை !!!

சிவன்மலைக்கு வித்திட்ட சிவவாக்கியர்
“நட்ட கல்லைச் சுற்றி வந்து நாலு புஷ்பம் சாற்றியே; சுற்றி சுற்றி வந்து முணு, முணுக்க சொல்லும் மந்திரம் ஏதடா! சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ! நட்டகல்லும் பேசுமோ; நாதன் உள்ளிருக்கையில்..!” நாத்திகப் பாடல் போல் இருக்கும் இந்த வாக்கியத்திற்குள்தான் எத்தனை பக்திச்சுவை? இந்தப் பாடலுக்கு சொந்தக்காரர் நாத்திகர் அல்ல, ஆத்திகர். அவர்தான் சிவவாக்கிய சித்தர். சிவவாக்கியர் சித்தியடைந்தது கும்பகோணத்தில் என்று சித்தர் நூல்கள் கூறுகின்றன. ஆனால், அவர் திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே உள்ள சிவன்மலையில் வாசம் செய்து மூலவர் வள்ளி சுப்பிரமணியரை அன்றாடம் பூஜித்து வந்திருக்கிறார் என்பது அந்நூல்கள் சொல்லாத செய்தி.
ராமாயண காலத்தில் ஆஞ்சனேயர் ராமலட்சுமணரை காக்க வேண்டி சஞ்சீவி மூலிகை பர்வதத்தை தூக்கிச் சென்றபோது சிந்திய சின்னத்துண்டுதான் சிவன்மலை என்ற ஐதீகம் உண்டு. இங்கு வள்ளியுடன் வீற்றிருக்கும் சுப்பிரமணியரை துதித்தால் தடைபட்ட திருமணங்கள் நடக்கும். கிடைக்காத பிள்ளைப்பேறுகள் கிடைக்கும். இம்மூலவரின் வலது பக்கத்தில் தனி அறையில் சிவவாக்கியருக்கும் சன்னதியுண்டு. இந்த சன்னதியிலிருந்து பக்கத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கு சுரங்க வழியாக சென்று பூஜித்து வந்ததாகவும், அதன்பிறகே வள்ளி, சுப்பிரமணியருக்கு ஆராதனைகள் செய்து இறைவன் திருவடியிலும் மெய்யுருகி நின்றார் சிவவாக்கியர் என்கின்றனர் கோயில் குருக்கள். இன்றும் அந்த அற்புத சித்தரின் அமானுஷ்யம் இங்கே உலாவி ஆண்டவனுக்கு அருள்பாவிப்பதாகவும் நம்புகின்றனர் பக்தர்கள். எனவே மூலவருக்கு பூஜைகள் நடக்கும் காலங்களில், இந்த சிவவாக்கியருக்கும் பூஜை புனஸ்காரங்கள் உண்டு. இவரை நினைத்து பாடல்களை பாடி, தியானங்கள் நிகழ்த்தினால் வாழ்வில் நடக்காத அற்புதங்கள் நடப்பதாகவும் ஐதீகம் உண்டு.
இறைவனின் திருவடிகளில் தன்னை மறந்து நின்ற தருணங்களை தமது சித்திகள் மூலம் சித்தர்கள் காட்டியிருக்கிறார்கள். அந்த அற்புதங்களை எல்லாம் தம் பாடல்களிலேயே அடக்கி காண்பித்தவர் சிவவாக்கியர். 'இட்ட குண்டம் ஏதடா, சுட்ட மண்கலயத்திலே சுற்று நூல்கள் ஏதடா. முட்டி நின்ற தூணிலே முளைத்தெழுந்து சோதியை பற்றி நின்றது ஏதடா. ஓசை உள்ள கல்லை நீர் உடைத்து இரண்டாய் செய்துமே வாசலில் பதித்த கல்லை மழுங்கவே மிதிக்கிறீர், பூசைக்கு வைத்த கல்லில் பூவும் நீரும் சாத்துறீர். ஈசனுக்கு உகந்த கல் எந்தக்கல்லு சொல்லுமே!' என்று நீளும் இவருடைய பாடல்கள் யாவும் 'சிவவாக்கியம்' என்றே அழைக்கப்படுகிறது. சிவ, சிவ என சிவனின் திருவடிகளையே பற்றி நின்ற சித்தனுக்கு அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பனின் மீது அலாதி பிரியம். எனவேதான் எத்தனையோ பக்தி ஸ்தலங்கள் இருக்க, வள்ளி சமேதராக வீற்றிருக்கும் சிவன்மலை சுப்பிரமணியரின்பால் சொக்கி நின்று பூஜைகள் செய்து வந்திருக்கிறார்.
சிவவாக்கியர் சித்தர்களில் சிறந்த சித்தர் போகருக்கு முந்தைய காலத்தவர். போகர் தனது சத்த காண்டத்தில் இவரைப்பற்றி சொல்கிறார். பூமியில் பிறக்கும் ஜீவராசிகள் எல்லாம் 'ம்மா' என்ற நாதம் பற்றியே புறப்பட்டிருக்க, ஒரு தை மாத மக நட்சத்திரத்தில் பிறந்த குழந்தை, 'சிவ, சிவ' என்றே முதல் வார்த்தையை ஒலித்தது. அதனாலேயே சிவவாக்கியர் என்று அழைக்கப்பட்டார் இவர். தனது இளமைக்காலத்தில் சித்தர் மரபில் வந்த குருவை நாடி வேதங்களை படித்து தன் கருத்துக்குத் தக்கதொரு குருவை எதிர்பார்த்துக் காத்திருந்திருக்கிறார். அப்படியரு அற்புத சித்தர் காசியில் உள்ளதாக கேள்விப்பட்டு அங்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார்.
அங்கு செருப்புத் தைக்கும் தொழிலாளியாக வீற்றிருந்த சித்தர் ஒருவரை கண்டதும் பெரிய ஞானவெளி வெளிச்சத்தில் தான் வீற்றிருக்கும் உணர்வை பெற்றார். அவரே தனது குரு சித்தர் என்றும் முடிவு செய்தார். குருவானவர் அவ்வளவு சுலபமாக சிவவாக்கியரை தனது சிஷ்யனாக ஏற்றுக்கொள்ளவில்லை. அவரை சோதிக்க விரும்பினார். தன்னிடம் இருந்த செருப்பு தைத்த காசுகளை கொடுத்து, 'இதைக் கொண்டு போய் என் தங்கை கங்கா தேவியிடம் கொடுத்து வா!' என்றார். தனது அருகிலிருந்த பேய்ச்சுரைக்காயை எடுத்துக் கொடுத்து, 'நீரில் கழுவி வா!' என்றார். சித்தரிடத்தில் தன்னை இழந்து நின்ற சிவவாக்கியர் கங்கைக்கரைக்கு சென்றார்.
கங்கையில் இறங்கி நீரைத்தொட நீரினுள்ளிருந்து வளைக்கரம் ஒன்று தன் கையை நீட்டி யாசித்தது. தன்னிடமிருந்த காசுகளை அந்தக்கை மீது சிவவாக்கியர் வைக்க, அந்த காசுகளை பெற்ற கை நீருக்குள் மூழ்கி மறைந்தது. அதைக்கண்டு அதிசயப்படாத சிவவாக்கியர் குருவானவர் இட்ட கட்டளையை நிறைவேற்றும் முகமாக பேய்ச்சுரைக்காயை நீரில் கழுவிக்கொண்டு வந்து சித்தரை வணங்கினார். அவரே மீண்டும் சிவவாக்கியரை சோதிக்க விரும்பினார். 'நான் அவசரப்பட்டுவிட்டேன். என் தங்கை வைதீகமானவள். இதோ இந்த தோல்பையிலும் தோன்றுவாள். அவளிடம் நீ கொடுத்த காசுகளை கேள். கொடுப்பாள்!' என்றார். சிவவாக்கியரும் கேட்டார்.
செருப்புத்தொழிலுக்காக வைத்திருந்த தோல் பையிலிருந்து கங்கையில் பார்த்த அதே வளைக்கரம் தோன்றியது. சிவவாக்கியரின் கைகளில் அவர் கொடுத்த காசுகளையே தந்துவிட்டு மறைந்தது. அதை ஏதோ சாதாரண நிகழ்வு போல் பார்த்து காசுகளை அப்படியே ஞானகுருவிடம் கொடுத்தார் சிவவாக்கியர். இதைப் பார்த்த காசி சித்தர் சிவவாக்கியர் பக்குவம் அடைந்துவிட்டார் என்பதை அறிந்து தான் கற்ற சித்துக்களை உபதேசிக்க ஆரம்பித்தார். இருப்பினும் கங்கா தேவியின் வளைக்கரம் காசு கொடுத்தபோது அவள் விரல்கள் தீண்டியபோது சிவவாக்கியரின் உடல் சிலிர்த்ததை கண்டு கொண்ட காசி சித்தர், சிவவாக்கியருக்கு பெண்கள் ஸ்பரிஷத்தில் ஆசை மிச்சம் இருக்கிறது என்பதை உணர்ந்தார்.
எனவே, 'உனக்கு முத்தி சித்திக்கும் வரையில் நீ இல்லறத்தில் சிலகாலம் இருக்க வேண்டும்!' என்று கட்டளை பிறப்பித்து அவர் கையில் கொஞ்சம் மணலும், பேய்ச்சுரைக்காய் ஒன்றையும் தந்தார். 'இதை வைத்துக்கொண்டு உனக்கு எந்த பெண் சமைத்து போடுகிறாளோ அவளையே நீ மணம் செய்து கொள்ளவேண்டும்!' என்றும் அருளினார். பேய்ச்சுரைக்காய், மணல் ஆகியவற்றை வைத்துக்கொண்டு பெண் தேடும் இவரைக்கண்டு ஆண்கள் பலர் பரிகாசம் செய்தனர். இவரது வனப்பை கண்டு பெருமூச்சு விடும் பெண்கள் இவர் சமைக்க கொடுக்கும் பேய்ச்சுரைக்காய், மணலைப் பார்த்து மிரண்டு ஓடினர். 'உமக்கு பைத்தியம் முற்றிவிட்டது!' என்று ஏளனம் செய்த பெண்களிடம், 'என் குருநாதர் இட்ட கட்டளை இது. இதை சமைத்துதரும் பெண்ணே எனக்கு மனைவியாகப்பட்டவள்!' என்று எடுத்துக்கூறினார். அவர்களோ தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர்.
இந்த வேளையில் ஒருநாள் நரிக்குறவர் கூடாரங்கள் அமைத்த பகுதியில் சிவவாக்கியர் நுழைந்தார். அந்த கூடாரங்கள் ஒன்றிலிருந்து வந்த கன்னிப்பெண் ஒருத்தி இவர் தேஜஸைப் பார்த்து உள்ளுணர்வுகள் மீட்ட விரகம் ததும்ப வணங்கி நின்றாள். சிவவாக்கியர் ஒரு விநாடிதான் அவளைப் பார்த்தார். 'எனக்கு பசிக்கிறது. அதற்கு பெண்ணே உன்னால் ஒரு காரியம் ஆக வேண்டும்?' என்றார். 'கேளுங்கள் சுவாமி செய்து தர சித்தமாக இருக்கிறேன்!' என்றாள் பதிலுக்கு. சிவவாக்கியர் தன்னிடமிருந்த பேய்ச்சுரைக்காயையும், மணலையும் கொடுத்து சமைக்க சொன்னார். குறப்பெண் கொஞ்சமும் தயங்கவில்லை. பேய்ச்சுரைக்காயை கழுவி, மணலை கலைந்து சமைக்க தொடங்கினாள்.
என்ன ஆச்சர்யம்? மணல் அருமையான சாதமாக வெந்தது. பேய்ச்சுரைக்காய் ருசிமிக்க கறி உணவானது. சமையல் தயாரானதும், 'சுவாமி சாப்பிட வாருங்கள்!' என்று சிவவாக்கியரை அழைத்தாள் குறப்பெண். உணவு உண்ட பின் சிவவாக்கியர் களைப்பாறினார். மூங்கில் வெட்டி கூடை முனைய சென்றிருந்த குறப்பெண்ணின் பெற்றோர்கள் இல்லம் திரும்பினர். நடந்த சங்கதிகளை சொல்லி அவர்களிடம் பெண் கேட்டார். 'உங்களுக்கு பெண்ணைத் தருவது நாங்கள் செய்த பாக்கியம். எங்களோடு தங்குவதாக இருந்தால் அதற்கு தடையில்லை!' என்றனர் பெற்றோர்கள். அவர்களது நிபந்தனையை ஏற்றுக்கொண்டு அவர்கள் குல வழக்கப்படியே குறப் பெண்ணை மணந்து கொண்டார் சிவவாக்கியர். அவர்களுடனேயே தங்கியவர் அவர்களது குலத்தொழிலையே செய்யத் துவங்கினார். இருந்தாலும் அவர் தவத்தை விடவில்லை.
ஒரு நாள் சிவவாக்கியர் கூடைகள் முனைவதற்காக மூங்கில்கள் வெட்டி வர காட்டிற்குள் சென்றார். ஒரு மூங்கிலை வெட்டியபோது வெட்டுப்பட்ட இடத்திலிருந்து தங்கத்துகள் கொட்ட ஆரம்பித்ததை கண்ணுற்றார். அதில் துணுக்குற்றவர், 'இறைவா, உன்னிடம் முக்தியை நாடி விரைந்து கொண்டிருக்கிறேன். எனக்கு பொருளாசையை உண்டாக்கப் பார்க்கிறாயே? இது நியாயமா?' என்று புலம்பினார். இவரது புலம்பலைக் கண்டு நரிக்குறவ இளைஞர்கள் சிலர் ஓடி வந்தனர். என்னவென்று விசாரித்தனர். சிவவாக்கியர் பதட்டம் நிறைந்த குரலில், 'அதோ அந்த மூங்கிலிலிருந்து எமன் வருகிறான். அதைக்கண்டுதான் பயப்படுகிறேன்!' என்று சொல்லி தங்கம் உதிரும் மூங்கில்களை காட்டினார்.
நரிக்குறவ இளைஞர்கள் தங்கத்துகள்களை கண்டு வாய்பிளந்தார்கள். 'சிவவாக்கியனுக்கு பிழைக்கத் தெரியவில்லை!' என்று நக்கல் செய்தார்கள். எல்லோரும் சேர்ந்து தங்கத்துகள்களை மூட்டையாக கட்டினார்கள். அதை எடுத்துக் கொண்டு புறப்பட்டார்கள். ஓரிடத்தில் அனைவருக்கும் பசித்தது. இரண்டுபேர் மூட்டைக்கு காவல் இருக்க, இரண்டு பேர் உணவு வாங்க செல்வது என்று முடிவெடுத்து அங்கனமே செய்தனர். உணவு வாங்க சென்ற இருவரும் 'தங்க மூட்டையை நாம் மட்டுமே பங்கு போட்டுக்கொள்ள வேண்டும்!' என்று திட்டமிட்டு மூட்டைக்கு காவல் இருந்தவர்களுக்கு வாங்கிய உணவில் விஷம் கலந்தனர். உணவு கொண்டு வந்த இருவரை மூட்டைக்கு காவலிருந்தவர்கள் பக்கத்தில் உள்ள கிணற்றில் குடிக்க தண்ணீர் கொண்டு வருமாறும் பணித்தனர்.
அவர்களும் கலயத்தை எடுத்துக் கொண்டு செல்ல, அவர்கள் அறியாதவண்ணம் பின்னாலேயே சென்ற தங்கமூட்டைக்கு காவலர்கள் கிணற்றருகில் அவர்கள் சென்றதும் அவர்களை உள்ளே தள்ளிவிட்டனர். 'நம் திட்டப்படி உணவு கொண்டு வந்தவர்கள் இரண்டு பேரின் கதையும் முடிந்துவிட்டது. இனி இந்த தங்க மூட்டை முழுவதும் நமக்கு இருவருக்கும்தான்!' என்ற சந்தோஷத்துடன் வாங்கி வந்த உணவை பிரித்து உண்டார்கள். விஷம் கலந்த உணவு அவர்கள் இருவரையும் கொன்று விட்டது. மறுநாள் மூங்கில் வெட்ட அதே பகுதிக்கு சென்ற சிவவாக்கியர் இந்த நான்கு பேரின் உடல்களையும் பார்த்தார். 'பொன்னாசை இவர்களை இப்படி கொன்றுவிட்டதே!' என்று மனம் வருந்தியவர் மறுபடி மூங்கில் வெட்டவே சென்றார்.
தங்கம் செய்யும் ரசபாசன வித்தையை சிவவாக்கியர் அறிந்திருந்தார். அப்படியிருந்தும் இந்த சித்தர் வறுமையில் வாடுகிறாரே என்று வருந்தினார் கொங்கணவர் என்ற சித்தர். ஒரு முறை சிவவாக்கியர் மனைவியை வீட்டில் சந்தித்த கொங்கணவர், 'வீட்டில் உள்ள இரும்புத்துண்டுகள் ஏதாவது கொண்டு வா!' என்று கேட்டுக்கொண்டார். சிவவாக்கியரின் பத்தினியானவளும் வீட்டில் சில இரும்புத்துண்டுகளை தேடிப்பிடித்து கொண்டு வந்து கொங்கணவரிடம் கொடுத்தார். அவைகளை தங்கமாக மாற்றி தந்து விட்டு சென்றார் கொங்கணவர். சிவவாக்கியர் வீடு திரும்பியதும் நடந்தை சொன்ன மனைவி கொங்கணவர் மாற்றித்தந்த தங்கபாளங்களை அவர் முன் கடைவிரித்தாள்.
அதை தொடக்கூட மறுத்த சிவவாக்கியர் அவற்றை பாழும் கிணற்றில் போடச்சொன்னார். அப்படியே செய்துவிட்டு வந்தாள் மனைவி. இருந்தாலும் மேலும் மனைவியை சோதிக்க எண்ணிய சிவவாக்கியர், அருகிலிருந்த ஒரு கல் மீது சிறுநீர் கழித்தார். அதுவும் தங்கப்பாளமாக மாறியது. 'இதை எடுத்துக் கொள்!' என்றார் மனைவியிடம். அவளோ நடுங்கிப் போனாள். 'உங்களது மாறாத அன்பே என் வாழ்வு!' என்றாள் பாசத்துடன். 'நீயல்லவோ என் துணைவி!' என்று மனைவியை பாராட்டினார் சிவவாக்கியர்.
ஒருமுறை அவரை சிலர் அணுகி, 'சித்தர்களை நாங்கள் தரிசிக்க வேண்டும். அதற்கு நீங்கள்தான் உதவ வேண்டும். சித்தர்கள் மூலம் தங்கம் செய்யும் வித்தையை அறிந்து உலக மக்களின் வறுமையை அகற்ற முயல்வோம்!' என்றனர். அதற்கு சிவவாக்கியர், 'தங்கம், தங்கம் என்று அலைய வேண்டாம். அது கொலை, களவுகளுக்குத்தான் ஆட்படுத்தும். உங்கள் பொருளாசையை ஒழியுங்கள். சித்தத்தை சிவனிடம் வையுங்கள். பின் நீங்களே தங்கமாக ஆவீர்கள். தங்கத்தை அடைய இதுவே சுலபமான வழி!' என்றார். வந்தவர்கள் தலைகுனிந்து சென்றனர்.
'வேதம் ஓதுபவர்கள் திருவடி ஞானம் அடைந்ததுண்டோ? பெறவில்லையெனின் பாலில் நெய் இருப்பது பொய்யாகிப் போகுமே. கோயில் ஏது? குளம் ஏது? கண்ட இடமெல்லாம் குழம்பி திரியும் மூடர்காள்!' என்று சிவவாக்கியர் உரத்துப்பேசும்போது நாத்திகத்தின் குரலாகவே அவரது பாடல்கள் ஒலிக்கிறது. ஆனால், அதற்குள், 'கோயில் உங்கள் மனதில் இருக்கிறது. கடவுள் உங்கள் எண்ணத்தில் இருக்கிறது. அது அழிவதும் இல்லை. அந்தக்குளம் வற்றுவதும் இல்லை!' என்ற கருத்தை உணரும்போது இவரின் ஆன்மிக நெறி எதிர்மறை சிந்தனைக்குள் இருக்கும் நேர்கூற்றுகளாகவே கனிகின்றன.
'பசுவின் மடியில் கறந்த பாலை மீண்டும் அதன் மடியில் செலுத்த முடியாது. கடைந்தெடுத்த வெண்ணெய் தயிராகாது. பறித்த பூவும், உதிர்த்த காயும் மரத்தில் ஒட்டாது. அதுபோல இறந்தவர்கள் யாவரும் திரும்ப பிறப்பதில்லை. என்பது சிவவாக்கியரின் ஆன்மிக சிந்தனை. காலையும் மாலையும் குளித்தால் உடல் அழுக்கு போய்விடும் உள்ளத்து அழுக்குகளை குளிப்பாட்டுவது யார்? இதை எப்படி குளிப்பாட்டுவது? எங்கேதான் அழுக்கில்லை. அழுக்குள்ள இடங்களை கண்டறிந்து தூய்மைப் படுத்த இயன்றால் தூய ஜோதியுடன் உள்ள இறைவனுடன் இரண்டறக்கலந்து வாழமுடியும் என்கிறார் இவர்.
'இறைவா மக்களுக்கு அகத்தூய்மை என்பது ஏற்படாதா? அதை உருவாக்கத்தான் எத்தனைகோயில்கள்? எத்தனை தெய்வங்கள்? எத்தனை ஞானநூல்கள்? எத்தனை உபதேசங்கள்? எத்தனை இருந்தும் மக்கள் வீண்பொழுதை கழிக்கும் வேலையிலேயே ஈடுபடுகிறார்களே? இவர்களுக்கு நற்சிந்தனையை அளித்து கருணை அருளக்கூடாதா?' என்று வேண்டி நின்றதோடு, அதற்கான பல்லாயிரக்கணக்கான பாடல்களை இயற்றியவர் சிவவாக்கியர். சிவ,சிவ மந்திரத்தை உள்ளளியாக கொண்டிருந்தாலும், சிவனையே துதித்து மனம் உருகினாலும் குறப்பெண்ணை மணந்து குறவர் வாழ்க்கையை¬யே மேற் கொண்டதாலே என்னவோ வள்ளிக்குறத்தியுடன் காட்சியளிக்கும் சுப்பிரமணியரை மூலவராக கொண்ட சிவன்மலையில் வாசம் செய்து அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பனுக்கு பூஜை செய்து வந்திருக்கிறார் சிவவாக்கியர். சுப்பிரமணியக்கடவுள் மூலவராக இருந்தாலும் இந்த மலை சிவன்மலை என்று அழைக்கப்படுவதற்கு பெயர்க் காரணமே சிவவாக்கியர் தங்கி பூஜித்த மலை என்பதால்தான். சிவவாக்கியர் மலை, சிவமலையாகி, பிறகு சிவன்மலையாக உருமாறியிருயிருக்கிறது.
காங்கயம் சிவன்மலையில் கைலாசநாதர், ஞானம்பிகை, தண்டபாணி சன்னதி, நவகன்னிகைகள் சன்னதி, சனிபகவானுக்கு தனி சன்னதி என்று பலவிருந்தாலும் இங்கே ஆண்டவன் உத்திரவு என்ற விஷயம் ரொம்பவும் பிரசித்தம். இறைவன் பக்தர் ஒருவரின் கனவில் வந்து இந்த பொருளை சிவன்மலையில் வைத்து பூஜிக்க சொல்லு என்று உத்திரவிட்டால் அதையே வைத்து பூஜிக்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பக்தர் கனவில் நீரை வைத்து பூஜை செய்யுமாறு ஆண்டவன் உத்திரவு கிடைத்தது. அதன்படி நீரையே வைத்து பூஜித்தார்கள். சுனாமி ஏற்பட்டது. ஒரு முறை மண்ணை வைத்து பூஜித்தார்கள் நிலங்கள் விலை எகிறியது. மஞ்சளை வைத்து பூஜித்தார்கள். மஞ்சள் விலை எகிறியது.
இங்குள்ள நவக்கிரஹங்கள் எல்லாம் சூரியனை பார்த்தே அமைந்துள்ளது. சூரியன் மூலவரைப் பார்த்து அமைந்துள்ளது. மொத்தமுள்ள இருபத்தியெட்டு ஆகமங்களில் எல்லா கோயில்களிலும் வைதீகம் ப்ளஸ் ஆகமம் கலந்தேயிருக்கிறது. இங்கே ஆகம விதிமுறையில் மட்டுமே கிரஹங்கள் வீற்றிருக்கிறது. அதுவும் காரண ஆகமத்தின்படி பிரகாரம் இருக்கும். இந்த திக்கில் இருக்கக்கூடியது எல்லாம் சுப கிரஹங்கள். வடகிழக்கு, வடமேற்கு என்று இருக்கும் கிரஹங்கள் அசுப கிரஹங்கள். இங்கே அனைத்து கிரஹங்களும் சூரியனைப்பார்த்தே இருப்பதால் அசுப கிரஹங்கள் கூட மத்திமமான பலனைக் கொடுக்கும். எனவே கிரஹாச்சாரங்களில் பாதிக்கப்பட்ட பக்தர்களின் உஷ்ணத்தை இந்த கிரஹங்கள் ஓரளவேனும் குளிர்விக்கிறது. இதற்குள் எல்லாம் புகுந்து சிவவாக்கிய சித்தரின் ஆன்ம ஒளி இன்னமும் பூஜித்து வருவதாக நம்புகிறார்கள் பக்தர்கள்.
எனினும் இக்கோயிலுக்கு வரும் ஏராளமான பக்தர்களில் பெரும்பாலானவர்களுக்கு ஏனோ இங்கு வாசம் செய்த சிவவாக்கிய சித்தரின் மகிமை தெரியாமலும், அறியப்படாமலும், அதை வெளிப்படுத்தப்படாமலும் இருக்கிறது. பழநியில் வாசம் செய்த போகர், மருதமலையில் வீற்றிருக்கும் பாம்பாட்டி சித்தர் ஆகியோருக்கு அந்தந்த கோயில் நிர்வாகிகள் முக்கியத்துவம் கொடுப்பது போல் இங்கு செய்யாதிருப்பதே அதற்கு காரணம். விரைவில் சிவன்மலை கும்பாபிஷேகம் காணவிருக்கிறது. அந்த காலங்களிலாவது இந்த அற்புத சித்தருக்கும் முக்கியத்துவம் கொடுத்து வழிபாடு நடத்துவார்கள் என்று நம்புவோமாக
http://vhichu75.blogspot.in/


தியானம் !!!

தியானம் உள்நோக்கிச் செல்லும் ஒரு நெடும்பயணம். விண்வெளிப் பயணம் செல்பவன் காணும் பிரம்மாண்டங்களைக் காட்டிலும் உள்நோக்கிச் செல்லும் இந்தப் பயணத்தில் அதிகமாக நாம் காண முடியும். நம்மில் நாம் அறியாத எத்தனையோ ரகசியங்கள் புதைந்து இருக்கின்றன. கோடிக்கணக்கில் செல்வத்தைப் புதைத்து வைத்து விட்டு அதை மறந்து போய் பிச்சைக்காரர்களாய் வாழ்ந்து கொண்டிருப்பவர்களைப் போலத் தான் நாமும் இருக்கிறோம். அந்தப் புதையலுக்கு நம்மை அழைத்துப் போகும் மார்க்கம் தான் தியானம்.
ஆரம்பத்தில் அந்த தியானம் கைகூடுவது அவ்வளவு சுலபமில்லை. மனம் வெளியே தான் எல்லா சுவாரசியமான விஷயங்களும் இருக்கின்றன என்ற தவறான அபிப்பிராயத்தில் இருக்கிறது. எனவே இந்த உள்நோக்கிய பயணத்தை அதை சுவாரசியமேயில்லாத செயலாக எண்ணி முரண்டு பிடிக்கும் தன்மையைக் கொண்டிருக்கிறது. அதன் அபிப்பிராயங்களை அலட்சியம் செய்து உறுதியாக ஆரம்பித்து அதை விட உறுதியாகத் தொடர்ந்து முயன்றால் ஒழிய இதில் வெற்றி அடைய முடியாது. இதை ஆரம்பத்திலேயே மனதிற்குள் உறுதிப் படுத்திக் கொள்வது முக்கியம்.
முதலில் எளிமையான சில தியானப் பயிற்சிகளை அறிந்து கொள்வோம். மனதைத் தியானத்தில் லயிக்க வைப்பதில் ஓரளவு வெற்றி பெற்ற பின் மற்ற மேலான தியானப் ப்யிற்சிகளுக்குச் செல்லலாம்.
முதல் தியானம் மூச்சின் மீது கவனம் வைக்கும் தியானம். இது கிட்டத்தட்ட ஆல்ஃபா அலைவரிசைக்குச் செல்லச் செய்த பயிற்சியைப் போன்றது தான்.
1) அமைதியாக ஓரு அமைதியான இடத்தில் அமருங்கள். தரையில் சம்மணமிட்டு அமர முடிந்தவர்கள் அப்படி அமரலாம். முடியாதவர்கள் ஒரு நாற்காலியிலும் அமர்ந்து கொள்ளலாம். முடிந்த வரை நேராக நிமிர்ந்து இருங்கள். கண்களை மூடிக் கொள்ளுங்கள். உங்கள் மூச்சின் மீது கவனம் வையுங்கள். உங்கள் மூச்சு இயல்பானதாக இருக்கட்டும்.
2) மூச்சு உங்கள் மூக்கின் வழியாக உள்ளே சென்று வெளி வரும் பயணம் வரை அதன் மீதே உங்கள் கவனத்தை வைத்திருங்கள். மூச்சு முழுமையாகவும் சீராகவும் மாற ஆரம்பிக்கும்.
3) இனி மூச்சை எண்ண ஆரம்பியுங்கள்.
4) மூச்சை உள்ளிழுங்கள். ஒன்று. வெளியே விடுங்கள். இரண்டு. மீண்டும் உள்ளே இழுங்கள். மூன்று. வெளியே விடுங்கள். நான்கு........
5) உங்கள் கவனம் ஆரம்பங்களில் கண்டிப்பாக மூச்சை விட்டு மற்ற
விஷயங்களுக்குச் செல்லலாம். அதை உணர்ந்த உடனேயே மீண்டும் மூச்சிற்கே கொண்டு வாருங்கள். எண்ணிக்கையைத் தொடருங்கள்.
6) உங்கள் மூச்சு தானாக ஆழமாகும், அமைதியாகும், வேகம் குறையும். எண்ணிக்கையைத் தொடருங்கள். நூறு ஆகும் வரை எண்ணி விட்டு நிறுத்துங்கள். பின் கண்களைத் திறந்து, நிதானமாக எழுந்து தியானத்தை முடியுங்கள்.
7) இந்த தியானத்தின் போது உடலில் பல்வேறு உணர்வுகளை நீங்கள் உணர்வீர்கள். மூச்சு மூக்கு தொண்டை பகுதிகளில் சென்று வரும் போதும், நுரையீரல், வயிற்றுப் பகுதிகளை நிறைத்து திரும்பும் போதும் இது வரை உணர்ந்திராத சில நுண்ணிய உணர்வுகளை நீங்கள் உணர ஆரம்பிக்கலாம். அதை உணரும் போதும் உங்கள் எண்ணிக்க்கையை நிறுத்தி விடாதீர்கள்.
8) ஆரம்ப காலங்களில் சிலருக்கு தசைப்பிடிப்பு போன்ற அசௌகரியங்கள் ஏற்படலாம். நீங்கள் உட்காரும் நிலையை சற்று மாற்றிக் கொள்வதில் தவறில்லை. ஆனால் மூச்சின் எண்ணிக்கை செய்வது தடைப்படாமல் இருக்கட்டும்.
இன்னொரு எளிய தியானத்தையும் அறிந்து கொள்ளலாம். இது தீப ஒளிச்சுடர் தியானம். இந்த தியானத்தை அரையிருட்டு அறையில் செய்வது நல்லது. உங்கள் கண்பார்வைக்கு நேரான ஓரிடத்தில் இரண்டு அல்லது மூன்று அடிகள் தூரத்தில் மெழுகு வர்த்தி அல்லது விளக்கு பற்ற வைத்துக் கொள்ளுங்கள்.
மேலே சொன்ன தியானத்தின் முதலிரண்டு படிகள் இந்தத் தியானத்திற்கும் பொருந்தும். முறையாக அமர்ந்து, கண்களை மூடி மூச்சை சீராக்கிக் கொள்ளுங்கள். மூன்றாவதாக மூச்சில் முழுக்கவனம் வைப்பதற்குப் பதிலாக, கண்களைத் திறந்து அந்த எரியும் தீபத்தின் ஒளிச்சுடரில் உங்கள் கவனத்தை செலுத்துங்கள்.
எண்ணங்கள் அந்த தீப ஒளியை விட்டு ஓட ஆரம்பிக்கும் போதெல்லாம் மனதை மென்மையாக திரும்பவும் அந்த தீப ஒளிக்கே கொண்டு வந்து விடுங்கள். மனம் மெழுகுவர்த்தி பற்றியோ, விளக்கு பற்றியோ எண்ணக் கூட விடாதீர்கள். அந்த சுடர் மிகப்பிரகாசமாக எரிகின்றது, மிக மங்கலாக எரிகின்றது என்பது போன்ற எண்ணங்களைக் கூட வளர்த்தாதீர்கள். உடனே அதனுடன் சம்பந்தப்பட்ட மற்ற எண்ணங்கள் நம் மனதை ஆக்கிரமிக்க ஆரம்பித்து விடக்கூடும். தீப ஒளியில் மனம் லயிக்கப் பாருங்கள்.
மனம் அதை விட்டுச் செல்லும் போதெல்லாம் சலிக்காமல் அந்த தீபச்சுடருக்கே திரும்பக் கொண்டு வாருங்கள். நீங்கள் உறுதியாக இருக்கிறீர்கள் என்று அறிந்த பின் உங்கள் மனம் சிறிது சிறிதாக அலைவதை நிறுத்தி வசப்படும். தியான நிலை கைகூடும். சுமார் 20 முதல் 30 நிமிடங்கள் இந்த தியானத்தைச் செய்து முடியுங்கள்.
இந்த இரண்டு தியானங்களையும் முடித்த பின்னரும் தடாலென்று எழுவது, உடனே பரபரப்பான சூழ்நிலைக்கு மாறுவது கூடாது. சற்று நிதானமாக தியான நிலையில் இருந்து இயல்பான நிலைக்குத் திரும்புங்கள்.அப்போது தான் அந்த தியானத்தால் பெற்ற அமைதியின் ஒரு பகுதியை மனதின் ஆழத்தில் நீண்ட நேரம் தக்க வைத்துக் கொள்ள முடியும்.
தினமும் இரு முறை தியானம் செய்ய முடிந்தவர்கள் காலை ஒரு தியானமும், மாலை ஒரு தியானமும் செய்யலாம். அப்படி இரண்டு முறை செய்ய முடியாதவர்கள் இந்த இரண்டு தியானங்களில் ஒன்றையாவது தினமும் செய்யுங்கள்.
http://vhichu75.blogspot.in/

உத்தவ கீதையில் - குருமார்கள்!

ஸ்ரீஉத்தவகீதையும் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் தன் பக்தனும் நெருங்கிய நண்பனுமாகிய ஸ்ரீஉத்தவருக்கு உபதேசிப்பதாக அமைந்துள்ளது. இந்த ஸ்ரீஉத்தவகீதை ஸ்ரீமத் பாகவத மகா புராணத்தின் பதினோராவது ஸ்கந்தமாக வருகிறது. (தசம ஸ்கந்தம்தான் பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் லீலா விநோதங்களை விவரிப்பது -பாகவத மகாபுராணத்திலேயே நம்மை மிகவும் ஈர்க்கக்கூடியது) இங்கே நாம் எடுத்துக்கொண்ட விஷயம் ஸ்ரீஉத்தவகீதையில், ஸ்ரீஉத்தவருக்கும், பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கும் இடையே நிகழ்ந்த ‘சந்நியாச லக்ஷணம்’ என்பது பற்றி மட்டுமே.
ஸ்ரீஉத்தவர் கேட்கிறார் “நான், எனது என்னும் அகங்கார, மமகாரச் சுழலில் அறியாமையால் சிக்கி, உற்றார், உறவினர் பாசத்தில் மூழ்கியிருக்கும் தமக்கு சந்நியாச லக்ஷணம் பற்றி எளிய முறையில் விளக்கியருளுமாறு வேண்டுகிறார்.
அதற்குப் பகவான் சொல்கிறார் “மனிதன் தனக்குத்தானே ஆசாரியன். தனக்கு நன்மை விளைவிக்கக் கூடியதை, பிரத்தியட்சம், அனுமானம் என்ற இரு முறைகளாலும் செய்து கொள்ளும் ஆற்றலையுடையவன்” என்று இன்னும் பலவும் கூறிவிட்டு ஒரு புராதன வரலாற்றையும் எடுத்துரைக்கிறார்.
இவ்வரலாறு அவதூதராக விளங்கிய தத்தாத்ரேயருக்கும் யயாதியின் குலத்தோன்றலாகிய யது மன்னனுக்குமிடையே நடந்த உரையாடலாக உள்ளது. வாலிபவயது அவதூத பிராமணர் ஒருவரைப் பார்த்து யது மன்னர் கேட்கிறார் “அந்தணரே! தாங்கள் கர்மா எதுவும் செய்வதில்லை; அப்படியிருந்தும் தங்களுக்கு மிகவும் ஆழமான, தெளிந்த நல்லறிவு சித்தித்தது எப்படி?”
அந்த அந்தண வாலிப அவதூதர் பின்வரும் நீண்ட விளக்கத்தைத் தந்தார். “மன்னா! எனக்குப் பல ஆசாரியர்கள். அவர்களிடம் கற்றுக் கொண்ட பாடத்தின் பலத்தில்தான் நான் உலகப் பற்றின்றி இவ்வாறு அவதூதனாகத் திரிந்து கொண்டிருக்கிறேன். என் குருக்கள் யார் தெரியுமா? மண், வாயு, ஆகாயம், நீர், அக்னி, சந்திரன், சூரியன், புறா, மலைப்பாம்பு, கடல், விட்டிற்பூச்சி, தேனீ, யானை, தேன் எடுப்பவன், மான், மீன், பிங்களை என்னும் வேசி, குரா என்னும் பறவை, பாலகன், கன்னிப்பெண், அம்புதொடுப்பவன், ஸர்ப்பம், சிலந்திப் பூச்சி, குளவி போன்ற இருபத்து நான்கு ஆசிரியர்கள்! இவர்களிடமிருந்து யான் கற்ற பாடங்கள் என்ன என்ன தெரியுமா? சொல்கிறேன் கேள்!
1. பூமியிடமிருந்து கற்றது:
மற்ற பிராணிகளால் எவ்வளவு துன்புறுத்தப்பட்டாலும், அவையெல்லாம் தெய்வசங்கல்பத்தின்படி அதாவது பிராரப்த கர்மாவின்படி ஏற்படுகின்றன என்ற உண்மையை பூமாதேவியின் மூலமாகக் கற்றுக் கொண்டேன். பூமியின் எல்லாச் செயல்களும் பிறர் நன்மையின் பொருட்டே என்பதையும், மலைகளும், மரங்களும் கூடப் பரோபகார சிந்தனையை உணர்த்துகின்றன என்பதையும் அறிந்து கொண்டேன்.
2.வாயுவிடமிருந்து கற்றது:
காற்று எல்லா இடங்களிலும் வீசிக்கொண்டிருந்தாலும், எதனுடனும் ஒட்டு, உறவு கொள்வதில்லை. பிற பொருள்களின் மணத்தைத் தாங்க நேர்ந்திடினும் அதை அங்கங்கே விட்டுவிடுகிறது. அதேபோல, யோகியும் எங்கும் சுற்றித் திரிந்தாலும் அங்கங்கே காணப்படும் குண தோஷங்களால் பாதிக்கப்படாமல் பற்றின்றி இருக்க வேண்டும்.
3.ஆகாயம் கற்றுக்கொடுத்த பண்பு:
ஆகாயம் எங்கும் நிறைந்து அனைத்தையும் அடக்கி வைத்துக்கொண்டுள்ளது. இது பரப்பிரும்மம் ஸ்தாவர ஜங்கம (நிற்பன, செல்வன) எல்லாப் பொருள்களினுள்ளும் வியாபித்து உள்ளதை அறிவுறுத்துகிறது. அதேபோல ஆன்மாவும் எங்கும் நிறைந்துள்ளது என்னும் தத்துவத்தை ஞானி அறிந்து கொள்ளல் வேண்டும். மேலும் மேகங்கள் ஆகாயத்திலேயே சஞ்சரித்து வந்தாலும், ஆகாயம் அவற்றுடன் ஒட்டிக் கொள்வதில்லை. அதுபோலவே ஸத்வம் முதலிய குணங்களின் உருவத்தோற்றங்களான அக்னி, நீர், அன்னம் ஆகியவற்றினாலான சரீர இந்திரியங்களுடன் ஆன்மாவாகிய புருஷனுக்கு எவ்வித உறவும் இல்லை என்பதையும் உணரவேண்டும். இதுவே ஆகாயம் நமக்குக் கற்றுத்தரும் உண்மை.
4.தண்ணீர் கற்றுத் தரும் பாடம்:
தண்ணீர் இயற்கையில் சுத்தமானது. மனத் திருப்தியளிப்பது. தூய்மைப்படுத்துவது. இதுபோலவே ஒரு ஞானியின் இயல்பும் சுத்தமானது. அனைவருக்கும் திருப்தி அளிப்பது மேலும் தன் பார்வை உபதேசமொழிகள் ஆகியவற்றால் மக்களைத் தூய்மைப் படுத்துவது.
5.அக்னி சொல்லும் உண்மை:
முனிவர் தன் தவம் என்னும் அக்னியால் பிரகாசித்து தெய்விக ஒளி வீச வேண்டும். அக்னியில் நல்லது, கெட்டது என எதைப் போட்டாலும் அவை எரிந்து சாம்பலாகி விடுகின்றன. அதேபோல ஞானியும் குற்றமுடையது என்று எதையும் ஒதுக்கித் தள்ளாமல் இருக்க வேண்டும். அவருடைய ஞானாக்னியில் எல்லாமே சுட்டெரிக்கப்பட்டு விடுகின்றன.
6.சந்திரன் தரும் பாடம்:
சந்திரனின் கலைகள் வளர்ந்து, தேய்கின்றன. அதுபோலவே சரீரமும் தோன்றியதிலிருந்து இறுதி வரை மாற்றங்களுக்கு ஆட்பட்டு வருகிறது. ஆனால் இம்மாற்றங்களுக்கும், ஆன்மாவிற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. எவ்வாறு அக்னியின் ஜுவாலைகள் தோன்றி மறைகின்றனவோ அவ்வாறு அனைத்துப் பிராணிகளின் பிறப்பும், இறப்பும் நிகழ்ந்துகொண்டிருப்பினும் கண்களுக்குத் தெரிவதில்லை.
7.சூரியன் மூலம் கற்றது:
எவ்வாறு சூரியன் தன் கிரணங்களின் மூலமாகத் தண்ணீரை உறிஞ்சி, அதையே மழையாகப் பொழிவித்து விடுகிறதோ அவ்வாறே பொருளைப் பெற்றுக் கொள்வதிலும், வழங்குவதிலும் ஒட்டுதலில்லாமல் யோகியானவர் இருத்தல் வேண்டும். சூரியன் பல நீர் நிலைகளில் பிரதிபிம்பத்தால் பலவாகத் தோன்றினாலும் இருப்பது ஒரே ஒரு சூரியன்தான் என்பதுபோல உண்மையில் இருப்பது ஒரே ஆன்மா என்பதை உணரவேண்டும்.
8.புறாக்கள் மூலம் அறிந்த உண்மை:
ஆண், பெண் ஜோடிப் புறாக்கள் தம் அன்பிற்குகந்த குஞ்சுகள் வேடனின் வலையில் சிக்கிக் கொண்டதால் அவற்றின் பிரிவைத் தாங்கிக் கொள்ள இயலாமல் தாமும் அவ்வலையில் வீழ்ந்து சிக்கிக் கொண்டன. இதே போலத்தான் குடும்ப வாழ்க்கை வாழும் மனிதனும் மன அமைதியை இழந்து புறாவைப் போல குடும்பத்தில் கட்டுண்டு தன் நிலையழிந்து போகிறான். முக்தியை அடைவதற்கான சாதனமாக மனிதப்பிறவியைப் பெற்றிருந்தும் அதற்கான முயற்சிகளில் ஈடுபடாமல் உலகப் பற்றிலேயே ஆழ்ந்திருப்பவர் பெற்ற பேறு வீணானதே அல்லவா? இவ்வுண்மையைத் தான் புறாக்களின் மூலம் தாம் கற்றதாகக் கூறுகிறார் அவதூதர்.
9.மலைப்பாம்பு சொல்லித்தரும் படிப்பினை:
மலைப்பாம்பு உணவைத் தேடி, தான் செல்வதில்லை; தானாக எது கிடைக்கிறதோ அதையே புசித்து திருப்தியடைகிறது. அதுபோல யோகியானவன் கிடைத்த உணவு சுவையாக இருக்கிறதோ, இல்லையோ, நிறையவோ அல்லது குறைவாகவோ அதனால் மகிழ்ச்சியடைய வேண்டும்.
10.கடல் கற்றுத்தரும் பாடம்:
ஒருயோகியானவன் பெருங்கடலைப்போல மலர்ச்சி ஆரவாரத்துடனும், கம்பீரமாகவும், ஆழங்காண முடியாதவனாகவும், தாண்டிச் செல்ல முடியாதவனாகவும் (அதாவது அலட்சியப் படுத்த முடியாதவனாகவும்) கலக்கமுடியாதவனாகவும் (அதாவது சாதாரண உணர்வுகளால் பாதிக்கப்படாத வரை) எப்போதும் அமைதியில் நிலைபெற்றவனாகவும் இருக்க வேண்டும். நதிகள் கடலில் கலப்பதால் கடல் கரை கடந்து பெருகிவருவதில்லை. நதிகளின் நீர் வராவிட்டாலும் அது வற்றி விடுவதில்லை. அதுபோலவே யோகியானவன் தன் விருப்பங்கள் நிறைவேறும்போது மகிழ்ச்சிப் பெருக்கடையாமலும், நிறைவேறாத போது தளர்ந்து கலக்கமடையாமலும் இருக்க வேண்டும்.
11.விட்டிற்பூச்சி உணர்த்தும் உண்மை:
மாயையால் மதிமயங்கிய மனிதன் பெண், பொன் முதலிய பொருள்களால் வசீகரிக்கப்பட்டுத் தன் அறிவை இழந்து அவற்றில் ஈடுபட்டு உயிரை இழக்கிறான். இது விட்டிற்பூச்சியின் இயல்பைப் போன்றது. இவ்வாறு யோகி இருக்கக்கூடாது என்னும் உண்மையைத் தான் விட்டிற்பூச்சி உணர்த்துகிறது என்கிறார் அவதூத சந்நியாசி.
12.தேனீக்கள் மூலம் தெரிந்து கொண்டது:
எப்படி தேனீயானது மலரைச் சேதப்படுத்தாமல் அதன் தேனை மட்டும் உறிஞ்சிக் கொள்கிறதோ அதுபோலவே புத்திசாலியான ஒரு மனிதன் அனைத்து சாஸ்திரங்களிலிருந்தும் சாரமான தத்துவங்களை மட்டும் மனத்தில் பதித்துக் கொள்ள வேண்டும். எப்படித் தேனை எடுப்பதற்காக தேன் கூடுகள் பிழியப்பட்டு தேனீக்கள் மரிக்கின்றனவோ அவ்வாறின்றி யோகியானவன் அன்றாடம் தன் உணவைப் பெற்றுக் கொள்ள வேண்டுமே தவிர நாளைக்கு என்று சேமித்து வைத்துக் கொள்ளலாகாது. இதுவே தேனீக்கள் கற்றுத் தரும்பாடம்.
13.யானை தரும் பாடம்:
பெண் யானையிடம் ஆசைகொண்டு அதனை நோக்கிச் செல்லும் ஆண் யானை அதைப் பிடிப்பதற்காக வெட்டப்பட்டுள்ள பெரிய பள்ளத்தில் விழுந்து மாட்டிக்கொள்கிறது. அதைக் கருத்தில் இருத்தி துறவியானவன் பெண் மோகத்தை அறவே விட்டு விடவேண்டும்.
14.தேன் எடுப்பவன்:
லோபிகள் தானும் செலவழிக்கமாட்டார்கள்; பிறர்க்கும் அளிக்கமாட்டார்கள். இவர்கள் சேர்த்து வைத்த தனத்தை வேறு யாரோதான் அனுபவிப்பார்கள். இவ்வுண்மையைத் தான் தேன் சேகரிப்பவனிடமிருந்து தெரிந்து கொண்டதாக அவதூதர் சொல்கிறார்.
14.மான் கற்றுத்தரும் படிப்பினை:
எவ்வாறு மானானது வேடனின் இசையில் மயங்கிக் கடைசியில் வேடனின் கையில் அகப்பட்டுக் கொள்கிறதோ அவ்வாறே முற்றும் துறந்த துறவி உலக இன்ப சம்பந்தமான பாடல்களைக் கேட்பதில் மனத்தைச் செலுத்தலாகாது.
16. மீன் என்ன பாடம் புகட்டுகிறது?:
வாய் ருசிக்கு அடிமைப்பட்டு தூண்டிலில் உள்ள இரையின் பொருட்டு மீன் தூண்டிலில் சிக்கி மாள்கிறது. அதேபோலத்தான் மனிதனும் சுவை நுகர் புலனான நாவைக் கட்டுப்படுத்தாமல் பல இன்னல்களுக்காளாகிறான். (இங்கே நாம் ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். இக்காலத்தில் பல வெளி உணவுகளையும், பக்குவப்படுத்தப்பட்டு சந்தையில் விற்கும் உணவுப் பொருள்களையும் உண்டு பலவித நோய்களுக்கும் மக்கள் ஆளாகின்றனர். சுவையான உணவென்று நிறையக் கொழுப்புகள் முதலியன சேர்ந்த உணவுகளை உண்டு நோய்வாய்ப்படுகின்றனர். இது நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒருவிஷயம்) ஆனால் இங்கே அவதூதர் சொல்வதன் தாத்பர்யம் என்னவென்றால் ஒருவன் சுவைப்புலனை அடக்காவிடில் மற்ற இந்திரியங்களைக் கட்டுப்படுத்த முடியாது என்ற உண்மையைத்தான் உரைப்பதாகக் கொள்ளவேண்டும்.
17. பிங்களை என்னும் வேசி புகட்டும் பாடம்:
இந்த வேசி தன் ஈன வாழ்க்கையை வெறுத்து, ஞானம் பெற்று உலகாயத காம போகங்களைத் துறந்து, உலக நாயகனையே சரணடைகிறாள். அதனால் நாம் அறிந்து கொள்ள வேண்டியது எல்லாவித உலக இன்பங்களிலிருந்தும் விடுபட வைராக்யம் பெறும்போது தான் ஆன்மா கடைத்தேறமுடியும் என்பதுதான்.
18.குரா என்னும் பட்சி அறிவுறுத்தியது விஷயம்:
குராப்பறவை ஒரு மாமிசத்துண்டை வாயில் கௌவிக் கொண்டு பறந்தபோது மற்ற பறவைகள் அம்மாமிசத் துண்டைப் பற்றிக்கொள்ள வேண்டி அதைத் துரத்திச் சென்றன. அதனால் வாயில் பற்றியிருந்த மாமிசத் துண்டைக் கீழே போட்டவுடன் மற்ற பறவைகள் அதைத் துரத்துவதை விட்டுவிட்டு அம்மாமிசத் துண்டத்திற்காக அதை நோக்கிச் சென்றுவிட்டன. அது போலத்தான் பொருளைச் சேர்த்து வைத்துக் கொண்டு அதற்குக் காவல் இருப்பதைவிட தான, தர்மங்களுக்கு எனச் செலவிட்டு வந்தால் அமைதியும், இன்பமும் கிடைக்கும் என்று உணர்த்தியது.
19.பாலகன் மூலம் அறிந்து கொண்டது:
பாலகனுக்கு மான, அவமான பேதமில்லை; வீடு, மைந்தர் பற்றிய கவலையில்லை. தன்னிலேயே ஆனந்தப்பட்டுக்கொண்டிருப்பான். அது போலவே ஞானியானவனும் சூது, வாதில்லாமல் வேற்றுமை உணர்வின்றி குணங்களைக் கடந்தவனாக இருக்க வேண்டும்.
20. கன்னி கற்றுத் தந்தபாடம்:
தன் கை வளையல்கள் ஒன்றுக்கொன்று உரசி சப்தம் போடாதவாறு கைக்கு ஒரே வளையலை வைத்துக் கொண்டாள் இவள். அதனால் அறிந்து கொண்ட உண்மை, பல பேருடன் வசித்தால் சண்டை, சச்சரவு உண்டாகும். இருவராக இருப்பின் வெறும் பேச்சு வளரும். பெண்ணின் கைக்கங்கணத்தைப் போலத் தனியாக இருந்தால் மன அமைதியுண்டாகும்.
21.அம்பு வீசுபவன் மூலம் தெரிந்து கொள்ள வேண்டியது:
எப்படி அம்பெய்பவன் லட்சியம் ஒன்றையே மனத்தில் கொண்டு தன் பணியில் கவனத்துடன் இருக்கிறானோ, அப்படியே யோகியானவன் வைராக்கியம், அப்பியாசம் முதலியவற்றால் ஆன்ம சாதனையை சஞ்சலமில்லாத மனத்துடன் தொடர வேண்டும் என்னும் உண்மையை அம்பு வீசுபவன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
22. ஸர்ப்பம் உணர்த்தும் உண்மை:
ஸர்ப்பம் தனித்தே இருக்கும்; கரையான் புற்றில் வசிக்கும். இது போலவே யோகியானவன் தனித்தே இருக்க வேண்டும். சொந்தமான இருப்பிடம் என்று கொள்ளலாகாது. குறைந்த அளவு பேச்சோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.
23.சிலந்திப் பூச்சியின் தன்மை:
சிலந்தி எவ்வாறு தன்னுடலிலிருந்தே நூலிழையைக் கொண்டுவந்து வலையைப் பின்னிவிட்டுத் தானே அந்த இழையைத் தனக்குள் இழுத்துக் கொள்கிறதோ அவ்வாறே இறைவனும் தனக்குள்ளிலிருந்து அண்ட கோசத்தை வெளியே கொண்டுவந்து தன் விருப்பப்படி பல லீலைகள் புரிந்தபின் கல்பமுடிவில் தனக்குள் இழுத்துக்கொள்கிறார். இதுவே சிலந்தி உணர்த்தும் பாடம்.
24.குளவி கற்றுக்கொடுப்பது:
உடல் எடுத்தவன் எதைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கிறானோ அதே உருவத்தை அடைகிறான். குளவியும் என்ன செய்கிறது? கூட்டினுள் வைக்கப்பட்ட புழு அதையே நினைத்துக் கொண்டு தானும் குளவியாகவே மாறிவிடுகிறது. பகவானையே ஒருவன் நினைத்துக் கொண்டிருந்தானாகில் அவன் பகவத் ஸ்வரூபனாக ஜீவன் முக்தனாக ஆகிவிடுகிறான். இந்த உண்மையை நாம் குளவியைக் கண்டு உணர்ந்து கொள்ளலாம்.
இவ்வாறு இருபத்து நான்கு சேதன, அசேதன ஆசாரியர்களைப் பற்றி யது மன்னனுக்கு விவரித்த அவதூத ஞானி மேலும் கூறுவார்: “அரசே! வைராக்கியத்திற்கும், விவேகத்திற்கும் காரணமாக இருக்கும் இந்தச் சரீரமும் எனக்கு குருவாகிறது. இவ்வுடல் பிறப்பு, இறப்பு தன்மையுடையது. உலகியலில் மிகத் துன்பத்தையும் தரக்கூடியது. முடிவில்லாத துன்பத்தினின்றும் எவ்வாறு விடுதலை பெறுவது என்ற பரமாத்ம விசாரத்திற்கு இடம் தருகிறது. வைராக்கிய விவேகங்களால் ‘இவ்வுடல் பிறர்க்கு உரியது’ (இது ‘நான்’ அல்லன்) என்று நிச்சய புத்தி உண்டாகிறது. அதனால் இந்த உடலில் பற்று கொள்ளாதவனாக சஞ்சரித்துக் கொண்டிருக்கிறேன்”
by V. Karthikeyan
http://atmaanubhavangal.blogspot.in/

Tuesday, June 23, 2015

காயத்ரி மந்திரங்களும் பயன்களும் 1

ஓம் |
பூர் புவ ஸுவஹா |
தத் சவிதுர் வரேண்யம் |
பர்கோ தேவஸ்ய தீமஹி |
தியோ யோனஹ ப்ரசோதயாத் ||
இது வேதமாதா ஸ்ரீ காயத்ரி தேவியின் மந்திரம்|| இதை ஒரு குருவிடம் முறைப்படி சாபநிவர்த்தி செய்து உபதேசம் பெற்றுத்தான் ஜெபிக்கவேண்டும்.
இது தவிர ஒவ்வொரு தெய்வங்களுக்கும் தனித்தனியே காயத்ரி மந்திரங்கள் .உள்ளன.அவற்றிற்கு மேற்கண்ட நியமங்கள் தேவை இல்லை.யாவரும் ஜெபிக்கலாம்.அசைவம் சாப்பிடக்கூடாது.அப்படி சாப்பிட்டால் 3 நாட்கள் கழித்து ஜெபிக்கவும் .
1.ஸ்ரீ மஹாகணபதி காயத்ரி மந்திரம்
ஓம் ஏகதந்தாய வித்மஹி |
வக்ரதுண்டாய தீமஹி |
தன்னோ தந்தி ப்ரசோதயாத் ||
இதை ஜெபித்து வர காரியத்தடைகள் நீங்கும்.எல்லா வளமும் நலமும் அமையும்.குறிப்பிட்ட காரியத்திற்காக வெளியில் கிளம்பும் முன் இந்த மந்திரத்தை 3 முறை ஜெபித்து கணபதியை வேண்டிச் செல்ல காரிய சித்தி கிட்டும்.கடை,தொழில் இடங்களில் திறந்து அமரும் முன் இதை 3 தடவை ஜெபித்துக் கணபதியை வேண்டிய பின் அமரத் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். இதை ஒரு வியாழன் அல்லது ஞாயிற்றுக்கிழமை ஜெபிக்கத் தொடங்கலாம்.
2.ஸ்ரீ ஷண்முக காயத்ரி
ஓம் தத்புருஷாய வித்மஹே |
மஹாசேனாய தீமஹி |
தன்னோ ஷண்முக ப்ரசோதயாத் ||
எதிரிகளின் தொல்லை நீங்கும்,அடிக்கடி பில்லி,சூனியம் ,திருஷ்டி போன்றவற்றால் பாதிக்கப்படுபவர்கள் ஜெபித்து குங்குமம் அணிந்து வர பாதிப்புகள் ஏற்படாது.சகோதரர்களுடன் நல்லுறவு உண்டாகும்.
3.ஸ்ரீ விஷ்ணு காயத்ரி
ஓம் நாராயணாய வித்மஹே |
வாசுதேவாய தீமஹி |
தன்னோ விஷ்ணு ப்ரசோதயாத் ||
செல்வம்,செல்வாக்கு,கவர்ச்சி உண்டாகும்.
4.ஸ்ரீ சிவ காயத்ரி
ஓம் பஞ்சவக்த்ராய வித்மஹே |
மகாதேவாய தீமஹி |
தன்னோ ருத்ர ப்ரசோதயாத் ||
மங்களம் ,வீரம்,தைர்யம் ,ஆன்மீக முன்னேற்றம் உண்டாகும்
5.ஸ்ரீ பிரம்ம காயத்ரி
ஓம் சதுர்முகாய வித்மஹே |
ஹம்சாரூடாய தீமஹி |
தன்னோ பிரம்ம ப்ரசோதயாத் ||
படைப்பாற்றல் ,ஞாபகசக்தி உண்டாகும்.
6.ஸ்ரீ ராம காயத்ரி
ஓம் தாசரதாய வித்மஹே |
சீதா வல்லபாய தீமஹி|
தன்னோ ராம ப்ரசோதயாத் ||
நன்னடத்தை ,நிதானம் ,ஹனுமான் அருள் உண்டாகும்.
7.ஸ்ரீ கிருஷ்ண காயத்ரி
ஓம் தேவகி நந்தனாய வித்மஹே |
வாசுதேவாய தீமஹி|
தன்னோ கிருஷ்ண ப்ரசோதயாத் ||
சர்வஜன ஆகர்ஷணம்,சந்தோசம்,சமயோசித புத்தி,குழந்தைபாக்கியம் உண்டாகும்.
8.ஸ்ரீ இந்திர காயத்ரி
ஓம் சஹஸ்ரநேத்ராய வித்மஹே |
வஜ்ரஹஸ்தாய தீமஹி|
தன்னோ இந்திர ப்ரசோதயாத் ||
எந்த விதமான மந்திரிக,மனோரீதியான ,திருஷ்டி முதலான பாதிப்புகள் நீங்கும்.
9.ஸ்ரீ ஹனுமன் காயத்ரி
ஓம் ஆஞ்சனேயாய வித்மஹே |
வாயுபுத்ராய தீமஹி|
தன்னோ ஹனுமத் ப்ரசோதயாத் ||
வீரியம்,தைர்யம்,புலனடக்கம்,சகலகலா பாண்டித்யம்,எடுத்த செயலைத் திறம்படச் செய்யும் தன்மை உண்டாகும்.
10.ஸ்ரீ சூர்ய காயத்ரி
ஓம் பாஸ்கராய வித்மஹே |
திவாகராய தீமஹி|
தன்னோ சூர்ய ப்ரசோதயாத் ||
பார்வைக்கோளாறு,பித்ரு தோஷம் நீங்கும்.மேலாண்மைத்திறன்,பதவி உயர்வு,அரசு வேலை கிடைக்கும்.மிகுந்த மந்த புத்தி,மந்தமாக செயல்படுவார்கள் இதை தொடர்ந்து ஜெபித்து வரச் செயல்வேகம் உண்டாகும்.
11.ஸ்ரீ சந்திர காயத்ரி
ஓம் பத்மத்வஜாய வித்மஹே |
ஹேமரூபாய தீமஹி|
தன்னோ சந்திர ப்ரசோதயாத் ||
நிம்மதி, அமைதி,அழகு,மனோசக்தி கிட்டும். அதிகம் கோபப்படுபவர்கள் இதை ஜெபித்து வர கோபம் குறையும்.இதை ஜெபித்து குங்குமம்,அலல்து மஞ்சள் அணிந்து வர அழகு கூடும்.
12.ஸ்ரீ யமதர்மராஜா காயத்ரி
ஓம் காலரூபாய வித்மஹே |
தண்ட தராய தீமஹி|
தன்னோ யம ப்ரசோதயாத் ||
மரணபயம் நீங்கும்,அகால மரணம் ஏற்படாது.
13.ஸ்ரீ வருண காயத்ரி
ஓம் ஜலபிம்பாய வித்மஹே |
நீலபுருஷாய தீமஹி|
தன்னோ வருண ப்ரசோதயாத் ||
எண்ணம்,சொல்,செயல் இவற்றில் மென்மையான செயல்படும் குணம் உண்டாகும்.பலரும் ஒன்று கூடி வருண திசையான மேற்கு திசை நோக்கி அமர்ந்து இந்த மந்திரத்தை ஜெபித்து மழைபெய்ய வேண்டினால் மழை வரும்.
14.ஸ்ரீ அக்னி காயத்ரி
ஓம் மஹாஜ்வாலாய வித்மஹே |
அக்னிதேவாய தீமஹி|
தன்னோ அக்னி ப்ரசோதயாத் ||
பெண்கள் குளித்து முடித்து சமையல் செய்ய அடுப்பைப் பற்ற வைக்கும் முன் இதை ஜெபித்து வர நெருப்பால் தீங்கு நேராது.
வாழ்க வையகம் || வாழ்கவளமுடன் ||
M.சூர்யா - தச்சநல்லூர்
திருநெல்வேலி

அகத்தியர் கூறும் பீஜ மந்திரங்களும் அவற்றின் பலன்களும்!

அகத்தியர் திருமந்திர விளக்கம் 22 என்னும் பாடலில் திருமந்திரமாகிய பஞ்சாக்ஷர மந்திரத்தைப் பற்றி, தத்புருஷம், அகோரம் ஆகிய முகங்கள் ஒவ்வொன்றிற்கும் இருபத்தைந்து வகைகளையும் வாமதேவ முகத்திற்கு ஒன்பது வகைகளையும், ஆக மொத்தம் 59 வகைகள் பற்றி மட்டுமே பாடலில் அகத்தியர் கூறுகிறார். தவிர ஒவ்வொரு வகை மந்திரத்தை உச்சரிப்பதனால் என்ன பலன் என்றும் கூறப்பட்டுள்ளது.
தத்புருஷ முகத்தைச் சார்ந்த 25 வகை மந்திரங்களும் அவற்றை ஓதுவதால் உண்டாகும் பயன்கள் பற்றியும் செய்யுள் 5லிருந்து 11வரை அகத்தியர்
பார்த்திடவே தற்புருஷம் இருபத் தஞ்சு
பாடுகிறேன் நமசிவய அகோர மாகும்.
(செய்யுள்.5)
என்று கூறுகிறார். அவையாவன:
மந்திரம் பலன்
1. நங்-சிவயநம - விரும்பிய புத்திர பாக்கியம் கிடைக்கும்.
2. அங்-சிவயநம - இயல்பாகத் தேக நோய் தீரும்
3. வங்-சிவயநம - யோகசித்தி காணலாகும்.
4. உங்-சிவயநம - ஆயுள் விருத்தி
5. ஓம்-அங்-சிவயநம - ஐம்பூதங்களின் மேல் கட்டுப்பாடு உண்டாகும்.
6. கிலி-நமசிவய - உலக வசியம் உண்டாகும்.
7. ஹிரீம்-நமசிவய - நினைத்தது நடக்கும்.
8. ஐ-உம்-நமசிவய - புத்தி, வித்தை நல்கும்.
9. கிலி-உம்-நமசிவய - பிறப்பின்மை நல்கும்.
10. நமசிவய - அமுதம் கிடைக்கும்.
11. நமசிவய-உங்-நமசிவய - நாட்டிலுள்ள வியாதிகள், சுரம் தீரும்.
12. நமசிவய-சிங்-வங்-நமசிவய - அறுபத்துநான்கு பிறவிகள் தீரும்.
13. நமசிவய-வங் - வெற்றி கிடைக்கும்.
14. சவ்-உம்-சிவய - சந்தானம் உண்டாகும்.
15. சிங்-றீம் (சிவய) - வேதாந்த ஞானி ஆவர்
16. உங்-றீம்-சிவயநம - மோட்சம் கிட்டும்.
17. அங்-நங்-நமசிவய - தேக சித்தி உண்டாகும்.
18. அவ்-உம்-சிவயநம - கயிலை வாழ் குருவைக் காணலாம்.
19. ஓம்-சிவயநம - இறப்பை வெல்லலாம்.
20. லங்-றீ-றீ-உங்-நமசிவய - தானியங்கள் கொழிக்கும்.
21. நமசிவய ஓம் - வாணிபம் செழிக்கும்.
22. ஓம்-அங்-உங்-சிவயநம - சாத்விக குணம் உண்டாகும்.
23. ஓம்-ஸ்ரீ-உம்-சிவயநம - தனவான்கள் வசியமாவர்.
24. உங்-ஓம்-நமசிவய - சிரசின் ரோகம் நிற்கும் (தலைவலி).
25. ஓம்-அங்-சிவயநம - நெருப்பினில் பிரவேசிக்கலாம்.
அகோர முகத்தைச் சார்ந்த 25 வகை மந்திரங்களும் அவற்றை ஓதுவதால் உண்டாகும் பயன்கள் பற்றியும் செய்யுள் 12 லிருந்து 20 வரை அகத்தியர் கூறுகிறார். அவையாவன:
1. துங்-நமசிவய - எதிரியின் நண்பர்களுக்குள் பகை உண்டாகும்.
2. ஓம்-கங்-சிவய - சக்தி அருள் உண்டாகும்.
3. ஓம்-சிங்-சிவயநம - ஸ்தம்பனம் (நிலைகுத்தல்) என்கிற சித்தி உண்டாகும்.
4. ஓம்-பங்-சிவயநம - பேசாத பிரம்ம அக்ஷரம் அறியப்படும்.
5. ஓம்-யங்-சிவயநம - சங்கடங்கள் தீரும்.
6. ஓம்-மாங்-சிவயநம - வருணன் மூலம் ஐஸ்வர்யம் உண்டாகும்.
7. ஓம்-மங்-நமசிவய - கடல்களை வற்றச் செய்யும் ஆற்றல் உண்டாகும்.
8. கெங்-ஓம்-நமசிவய - யாவரும் வசியமாவர்.
9. ஓம்-மங்-யங்-சிவய - விஷங்கள் பறந்தோடும்.
10. அங்-ரங்-ஓம் சிவய - கடலைத் தாண்டி வானத்தில் பறக்கலாம்.
11. ஓம்-அங்-சிங்-சிவயநம - சுவர்க்க கன்னியரைக் காணலாம்.
12. ஓம்-வங்-சிங்-சிவயநம - முக்குணத்தை வெல்லலாம்.
13. ஹிரீம் நமசிவய - விஷம் முறியும்; காணாத காட்சி காணலாம்.
14. ஐ-உம்-சிவயநம - நான்கு வேதங்களையும் ஆறு சாத்திரங்களையும் அறியலாம்.
15. வங்-சிங்-ஓம்-சிவய - தேவர்கள் தரிசனம் கிடைக்கும்.
16. சங்-சிவயநம - விஷத்தால் இறந்தவரை எழுப்பலாம்.
17. ஓம்-துங்-சிவயநம - ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகியவை செய்யலாம்.
18. ஹீ-வம்-ஹிரிம்-ஓம்-சிவயநம - பெரிய நிலப்பரப்புக்கு அதிபனாவான்.
19. சிங்-நமசிவய - தென்னை மரத்தை வளைக்கலாம்.
20. வங்-சிவயநம - மழையில் நனையாமல் செல்லலாம்.
21. சிவய-ஓம்-ஸ்ரீயும் - மழையை நிறுத்தலாம்.
22. கிலி-உம்-சிவ - ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்.
23. ஓம்-கங்-சிவ்-உம்-சிவய - கடலின் மேல் ஓடலாம்.
24. சங்-யவ்-சிமந - ஓடும் நீரை நிறுத்தி அதன்மேல் நடக்கலாம்.
25. மங்-நங்-சிங்-சிவய - பிசாசுகளையும் ராட்சஸர்களையும் அடக்கலாம்.
வாம தேவத்தைச் சார்ந்த 25 மந்திரங்களில் ஒன்பது மட்டும் இந்தப் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை வருமாறு:
1. ஓம்-புரோம்-சிவய - அமுதத்தைச் சுவைக்கலாம்.
2. ஓம்-ஐ-உம்-சிவய - மோனத்தில் இருக்கும் முனிவர்களைத் தரிசிக்கலாம்.
3. ஐ-உம்-ஸ்ரீ-சிவய - ககன விமானம் கண்முன் தோன்றுதல்.
4. உங்-தெங்-ஓம்-சிவய - பஞ்சதரு வந்து பலன் தரும்.
5. கங்-உங்-கிங்-நசி-ஓம் - காமதேனு வந்து பலன் தரும்.
6. சங்-சிவய-நம - தேவர் அரங்கம் கண்முன் தோன்றும்.
7. மங்-சிவ-ஓம்-நம - இச்சா சக்தி முன் தோன்றி அபயம் அளிப்பாள்.
8. ஸ்ரீ-உம்-சிவய - விஷ்ணு அபயமளிப்பார்.
9. சங்-ஸ்ரீ-உம்-அங்-சிவயநம - கயிலைவளநாதர் முன் தோன்றுவார்.
இதில் முக்கிய குறிப்பு என்னவென்றால், இந்த மந்திரங்கள் எல்லாம் அரிசி (அக்ஷதை) போன்றவை, பீஜமந்திரங்கள் நெல் போன்றவை. இந்த மந்திரங்களைச் சீரியதொரு குரு மூலம் கற்றுச் சரியாக உச்சரித்தல் வேண்டும். அவற்றைத் தவறாக உபயோகிக்கக் கூடாது. குருவழி கற்றால் தான் இந்தப் பீஜமந்திரங்கள் பலன்தரும்.
தொகுத்தளித்தவர்! V. Karthikeyan
http://siththanarul.blogspot.in/

செல்வவளம் தரும் ஸ்ரீ மஹாலக்ஷ்மி மந்திரப் பிரயோகம்!!!

ஒரு வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று பூஜை அறையை மெழுகிச் சுத்தம் செய்து கொள்ளவும்.மாம்பலகை,வாழைஇலை அல்லது செந்தாமரை இலை போட்டு அதில் மஞ்சளால் ஒரு வட்டம் வரைந்து அதற்குள் கொஞ்சம் பச்சரிசி போட்டு பரப்பவும்.ஒரு அகல் விளக்கு அல்லது வெள்ளி விளக்கில் நல்லெண்ணெய் மற்றும் பசுநெய்யைக் கலந்து ஊற்றி மஞ்சள்துணியைப் பன்னீரில் நனைத்துக் காயவைத்துத் திரியாக்கி அதனைக் கொண்டு விளக்கேற்றவும்.அதிகாலையிலும்,மாலை நேரத்திலும் விளக்கு ஏற்றி அந்த விளக்கை வலது கையிலும்,ஊதுபத்தி ஏற்றி அதை இடது கையிலும் பிடித்துக் கொண்டு வாசல் வரை எடுத்துச் சென்று "ஓம் ஸ்ரீ மஹாலக்ஷ்மி தேவி வந்து எனது இல்லத்தில் குடியிருந்து அஷ்ட ஐஸ்வர்யம் நிறைந்த வாழ்வு தந்தருள வேண்டும் " என வேண்டிப் பின்னோக்கி நடந்து சென்று அந்த விளக்கைப் பூஜை அறையில் மஞ்சள் வட்டத்தின் நடுவே பரப்பிய பச்சரிசி மீது கிழக்கு அல்லது தெற்கு முகமாக வைத்து நீங்கள் வடக்கு அல்லது மேற்கு முகமாக விளக்கை நோக்கி அமரவும்.
பின்னர் ஓம் ஸ்ரீ வாமேச ரிஷியே நமஹ என ஒரு தடவை சொல்லிப் பின்னர் தினமும் கீழ்க்கண்ட மந்திரத்தைத் தினமும் குறைந்தது 108 தடவை அல்லது அதற்கும் அதிகமாக ஜெபித்து வரவும்.இந்தப் பிரயோகத்தை தொடங்கும் முதல் நாள் அன்றும் ,பௌர்ணமி அன்றும் கற்கண்டுப் பாயசம் அல்லது பால்பாயசம் நைவேத்தியம் செய்யவும்.பௌர்ணமி அன்று மட்டும் நிலவைப் பார்த்தபடியே மந்திரம் ஜெபிக்க நிறைந்த செல்வத்தைத் தரும். படைத்த நைவேத்யத்தை முதலில் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம் அல்லது மந்திரம் ஜெபம் செய்தவர் சாப்பிடலாம்.அதன் பிறகே மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.
மந்திரம் :-
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் மஹாலக்ஷ்மி மஹாலக்ஷ்மி |ஏஹியேஹி ஏஹியேஹி சர்வ சௌபாக்யம் மே தேஹி ஸ்வாஹா
உத்தரவாதமான பலனைத்தரும் இந்தப் பூஜையைச் செய்து எல்லா வளமும், கூடிய நல்வாழ்வு வாழ ஸ்ரீ மஹாலக்ஷ்மித் தாயாரை வணங்கி வேண்டிக் கொள்கிறேன்.
வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன் ||
M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
http://suryatamil1.blogspot.in/