Monday, September 29, 2014

சோமநாதர் ஆலயம். ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய சரித்திரம்.

கி.பி. 1001ல் முஹம்மது கஜ்னி என்ற கொள்ளையன் செழிப்பாக இருந்த பாரத தேசத்தை நோக்கி தன் கவனத்தை திருப்பியதுதான் நம் நாட்டின் கொடூர சரித்திரத்திற்கு தொடக்கம். அச்சமயத்தில் பெரும் சக்ரவர்திகள் இல்லாமல் இருந்ததும் ஒரு பெரும் பின்னடைவு. சிற்றரசர்களால் ஆளப்பட்டிருந்த இன்றைய ஆப்கான் பகுதிகள், துருக்கிய கொள்ளைக்காரனுக்கு எளிதான விருந்தாகப் பட்டது. பல தடவை படையெடுத்து அவன் ஜெயபாலா என்ற அரசர் ஆண்டுவந்த இன்றைய பெஷாவர் என்ற பகுதியை பிடித்தான். பின்னர் அருமையான விளைநிலங்களை கொண்ட பஞ்சாப் பகுதிகளை அவன் பிடித்தான்.
அவன் பெரும்பாலும் ஹிந்துக்களின் கோவில்களை குறி வைத்தான். அக்காலங்களில் ஹிந்துக்கள் தனிப்பட்ட முறையில் சொத்துக்களை அதிகமாய் வைத்திருப்பதில்லை. மாறாக கோவில்களுக்கு அவற்றை வழங்கி விடுவார்கள். கோவில்களில் பொக்கிஷங்கள் வைக்கப்பட்டிருந்தன. அரசர்களுக்குள் போர் வந்தாலும் கோவில்களை யாரும் தாக்கும் வழக்கம் இல்லை. ஆனால் முஹம்மது கஜ்னியோ கொள்ளைக்காரன் ஆயிற்றே, அவனுக்கு ஏது தர்ம நெறிகள் ?
வடமேற்கு இந்தியாவின் பல பகுதிகளை அவன் ஊடுறுவி, அழித்து பின் திரும்ப சென்று விடுவான். அவ்வாறு திரும்ப திரும்ப செய்து அவன் ஹிந்துக்கள் மத்தியில் பெரும் பயத்தை உண்டாக்கி இருந்தான். நாகர்கோட், தனேசர், மதுரா, கனௌஜ், கலிஞ்ஜர் மற்றும் சோமநாதபுரியில் அவன் இவ்வாறாக ஊடுறுவி, பேரழிவை உண்டாக்கி விட்டு திரும்பி சென்று விடுவான். செல்லும் போது பலரை அடிமைகளாக பிடித்துக் கொண்டு போய் மதமாற்றி விடுவான். இவ்வாறு முஹம்மதின் ஊடுறுவலால "சிந்தி ஸ்வாரங்கர் சபையை" சேர்ந்த மக்களும் பிற ஹிந்துக்களும் அவனின் மதமாற்றலில் இருந்து தப்பிக்க சிந்து பகுதிகளில் இருந்து வெளியேறினர்.
முஹம்மது கஜ்னி, ஆயிரக்கணக்கான ஹிந்து ஆலயங்களை அழித்தான். அதில் குஜராத்தில், சௌராஷ்ட்ரா பகுதியில் இருந்த‌ சோமநாதர் ஆலயமும் அடக்க‌ம். அந்த கோவில் மிக அற்புதமாய் இருந்த‌து. அதில் 300 இசைக் கலைஞர்கள், 500 நடன மங்கைகள், 300 பக்தர்களுக்கு முடியெடுக்கும் பணியாளர்கள் என பலர் பணி புரிந்தார்கள். அருமையான 56 தேக்கு தூண்களால் அந்த கோவில் நிறுவப்பட்டிருந்தது என்று சரித்திர ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
கி பி 1025ம் ஆண்டு கஜ்னி அதை காத்து நின்ற 50000 மக்களை கொன்றழித்து அதனை அழித்தான். அதை காத்து நின்றவர்களில் 90 வயதான கோக்னா ரானாவும் அடக்கம். முஹம்மது சோமநாதர் ஆலயத்தில் இருந்த லிங்கத்தை உடைத்து அதன் துண்டுகளை மெக்காவிலும் மெதினாவிலும், தன் தர்பாரிலும், க‌ஜ்னி என்ற மசூதி ஆகியவற்றின் வாயில் படிக்கட்டுகளில் பதித்தான். அந்த பேரழிவை நடத்திவிட்டு 61/2 டன் தங்கத்தோடு அவன் நாடு திரும்பினான். இன்றைய வாங்கும் சக்தியோடு ஒப்பிட்டு பார்த்தால் அதன் தற்போதைய மதிப்பு 13 லட்சம் கோடி என்கிறார்கள் பொருளாதார் நிபுண‌ர்கள். அதாவது பத்மநாபர் கோவிலில் கிடைத்த கருவூலத்தை போல் 13 மடங்கு.
ஜகாரியா-அல்-கஜ்வானி எனும் அரேபிய புவி இயல் அறிஞர் சோமநாத ஆலயத்தின் அழிவை பற்றி கூறுகிறார்.
"சோம்நாத நகரம் கடற்கரை ஒரத்தில் அமைந்த நகரம். அந்த கோவிலில் உள்ள அற்புதங்களில் அதன் பிரதான மூர்த்தியான லிங்கம் மிகவும் முக்கியமானது. அந்த லிங்கம் மேலும் கீழும் எந்த வித பிடிப்பும் இல்லாமல் இருந்தது. கோவிலின் மைய பகுதியில் அது இருக்கும். அது காற்றில் அவ்வாறு மிதந்து இருப்பது பார்ப்பவரை அதிசயப்பட வைக்கும். அவர்கள் ஒரு இஸ்லாமியனாக இருந்தாலும் கூட!! ஹிந்துக்கள் அந்த கோவிலுக்கு அம்மாவாசை நாட்களில் தீர்த்த யாத்திரை செல்வார்கள். ஆயிரமாயிரமாய் அங்கு சேர்வார்கள். முஹம்மது அங்கு போர் புரிந்து செல்கையில் அவன் அந்த கோவிலை பிடிப்பதற்கும், அதை அழிப்பதற்கும் மிகவும் சிரமப்பட்டான். எதற்கென்றால் அதை அழிக்கும் பொருட்டு பல ஹிந்துக்களை முஹம்மதியர்களாய் மாற்றக் கூடும் என்பதால். கடைசியில் அவன் ஒருவழியாய் அதை பிடித்து பல ஆயிரம் ஹிந்துக்களை கட்டாயமாக மதம் மாற்றினான். சோமநாதர் ஆலயத்தை அவன் கி.பி. 1025 ஆம் ஆண்டு பிடித்ததும் அந்த லிங்கத்தை வியந்து பார்த்தான். பின்னர் அதை அவனே உடைத்தெறிந்து பின் அதனை எடுத்து வர உத்தரவிட்டான்"
பின்னர் புனரமைக்கப்பட்ட அக்கோவிலை கி.பி. 1296 ஆம் ஆண்டு, சுல்தான் அல்லாவுதின் கில்ஜி அழித்தான். ஆயுதம் இல்லாமல் அதை தடுக்க வந்த 50000 பேர்கள் வாளுக்கு இறையானார்கள். 20 ஆயிரம் பேர் அடிமைகளாக பிடித்து செல்லப்பட்டனர்.
மீண்டும் அக்கோவிலை மஹிபாலா தேவா என்கிற சுதாசம அரசர் கி.பி. 1308ம் ஆண்டு கட்டினார். அதை 1375ம் ஆண்டு மீண்டும் முதலாம் முஜாஃபர் ஷா என்பவன் அழித்தான்.
மிண்டும் அது புனரமைக்கப்பட்டது. கி.பி 1451 ஆம் ஆண்டு மஹ்முத் பெக்தா என்பவனால் மீண்டும் அழிக்கப்பட்டது.
பின்னரும் உயிர்பெற்ற அக்கோவிலை, கடைசியாக கி.பி. 1701 ஆம் ஆண்டு ஔரங்கசீப் என்ற கொடுங்கோலனால் மீண்டும் அழிக்கப்பட்டு, அவ்விடத்தில் அக்கோவிலின் தூண்களை உபயோகப்படுத்தி, ஒரு மசூதி எழுப்பப்பட்டது.
சுதந்திரத்திற்கு பிறகு ஹிந்துக்களின் பெரு முயற்சியால் அக்கோவில் மீண்டும் எழுந்து நிற்கிறது. ஆனால் அது நமக்கு ஆயிரம் பாடங்களை சொல்லித் தரும் ஒரு பொக்கிஷமாய் உள்ளது. இன்றைக்கு அதன் கோபுரங்கள் உயர்ந்து இருந்தாலும், "எல்லா மதமும் ஒன்றுதான்" என்று கூறும் மூடர்களை கண்டு அது வெட்கத்தால் தலை குனிந்து நின்றுகொண்டிருக்கிறது. சரித்திரத்தின் மிக மோசமான தன்மையே அது மீண்டும் மீண்டும் திரும்புகிறது என்பதுதான் என்று அது நமக்கு ஞாபக படுத்துகிறது. ஒற்றுமையும், அதர்மத்தை தட்டி கேட்கும் தன்மையும் நம்மில் அழிந்துவிட்டதை அது உலகிற்கு பரைசாற்றுகிறது.

காமம்-அசிங்கம் அல்ல!

கேள்வி
“சாமி கும்பிடுவதற்காகப் போகும் கோயில்களில் எதற்காகக் காம விளையாட்டுச் சிற்பங்கள் அமைக்கப்பட்டு உள்ளன? பருவ வயதில் இருக்கும் மகளுடன் கோயிலுக்குப் போகும் என் போன்ற தாய்மார்களுக்கு எவ்வளவு பெரிய தர்மசங்கடம்?”
சத்குரு:
கடவுள் என்பது உங்களைப் பொறுத்தவரை என்ன? தெய்வீகமாக எதைக் கருதுகிறீர்கள்? ஒரு படைப்பின் மூலாதாரம்தான் கடவுள் என்று கருதுவீர்களேயானால், அதுதானே அங்கு சித்தரிக்கப்பட்டு இருக்கிறது?
செக்ஸ் என்பதை அசிங்கம் என்றோ, குற்றம் என்றோ நம் கலாச்சாரம் பார்க்கவில்லை. சரியா, தவறா என்றெல்லாம் விவாதம் செய்யாமல், வாழ்க்கையின் பரிமாணத்தை அது நேருக்கு நேராகச் சந்தித்தது.
பொதுவாக, இந்த மாதிரி சிற்பங்கள் கோயிலின் வெளிப் பரிகாரத்தில்தான் காணப்படுகின்றன. இந்தச் சிற்பங்களாவது வெளிப் பிராகாரத்தோடு நின்று போகின்றன. பருவ வயதில் இருக்கும் ஓர் ஆணுக்கும், பெண்ணுக்குமான பார்வைப் பரிமாற்றங்கள் சந்நிதியிலும் தொடர்வதைக் கவனித்து இருக்கிறீர்களா?
செக்ஸ் என்பதை அசிங்கம் என்றோ, குற்றம் என்றோ நம் கலாச்சாரம் பார்க்கவில்லை. சரியா, தவறா என்றெல்லாம் விவாதம் செய்யாமல், வாழ்க்கையின் பரிமாணத்தை அது நேருக்கு நேராகச் சந்தித்தது.
“அம்மா, நான் எப்படிப் பிறந்தேன்?” என்று கேட்டாள், எட்டு வயது மகள்.
சிறுமியிடம் இதைப்பற்றியெல்லாம் எப்படிப் பேசுவது என்று அம்மாவுக்கு சங்கடம். அதனால் அவள் சொன்னாள்… “அதோ, அந்தக் குருவிதான் உன்னைக் கொண்டுவந்து என் மடியில் போட்டது கண்ணு?”
“நீ எப்படி அம்மா பிறந்தாய்?”
“அப்படியானால், பாட்டியையும் இந்தக் குருவியின் பாட்டிதான் கொண்டு வந்து போட்டது!”
“அப்படியானால், பாட்டியையும் இந்தக் குருவியின் பாட்டிதான் கொண்டு வந்து போட்டதா?
“ஆமாடா செல்லம்!”
“அப்படியானால், நம் குடும்பத்தில் யாருக்குமே ஒழுங்கான பிறப்பில்லையா அம்மா?” என்று திகைத்துப் போய்க் கேட்டாள் சிறுமி.
இதுதான் உண்மை நிலை. குழந்தைகளுக்கே பாதி விஷயம் தெரியும்போது, உங்கள் மகளுக்குத் தெரியாதா, என்ன?
சிற்பங்களைப் பெயர்த்து எடுப்பதாலோ, மூடி மறைப்பதாலோ, உங்கள் மகளின் மனம் அது பற்றிச் சிந்தக்காது என்று நினைத்துவிடாதீர்கள்.
கோயில் என்பது வாழ்க்கையின் மேன்மையை உணர்ந்து கொள்வதற்கான ஒரு வாய்ப்பு. உங்களுக்குள் அமிழ்ந்துள்ள உச்சபட்ச சக்தியை தட்டி எழுப்புவதற்கான ஒரு கருவி.
இந்த உடல்ரீதியான இன்பங்களைக் கடந்து போனால்தான், வாழ்க்கையின் மேலான கட்டங்களுக்குப் போக முடியும். இந்த உண்மையை உறுதியாக எடுத்துச் சொல்வதுபோல்தான் மூலவரின் சந்நிதி உள்ளே அமைந்துள்ளது.
அந்தச் சிற்பங்களைக் கேவலம் என்று ஏன் பார்க்கிறீர்கள்? அது நிகழ்ந்ததால்தானே நீங்கள் உருவானீர்கள்? உங்கள் மகள் உருவானாள்? அது தவறென்று நினைத்தால், நீங்கள் படைக்கப்பட்டதே தவறென்று ஆகிவிடும்.
கேள்வி
“நான்கு சுவர்களுக்குள் வைத்திருக்க வேண்டிய விஷயமல்லவா இது? இதை இப்படி அம்பலத்துக்குக் கொண்டுவர வேண்டுமா?”
சத்குரு:
யாரும் உங்களை இதைத் தெருவுக்குக் கொண்டுவரச் சொல்லவில்லை. நீங்கள் பருவ வயதில் இருந்தபோது, உங்களுக்கு இது பெரிய உறுத்தலாக இருந்திருக்காது. இன்றைக்கு உங்கள் மகள் பார்த்துவிடக்கூடாது என்பதுதான் உங்கள் பதற்றத்துக்கான காரணம்.
உயிரினம் பெருகிக்கொண்டு இருக்க வேண்டும் என்பதற்காக இயற்கை அவற்றுக்கு ஆண், பெண் எனத் தனித்தனி வடிவங்கள் கொடுத்தது. ஒன்றின் மீது மற்றதற்கு ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியது. உடல்ரீதியான வேறுபாடுகள் தவிர, இருவரும் ஒரே அளவு மதிப்பு கொண்டவர்கள்தாம்.
இதை இன்றைய இளைஞர்கள் உணர்ந்திருக்கிறார்கள். பெரும் வளர்ச்சி கண்டுள்ள நிறுவனங்களில் ஆண், பெண் என்ற பேதங்கள் களையப்பட்டு விட்டதை இன்றைக்குப் பரவலாகக் காண முடிகிறது.
மிக நுண்ணிய உயிரினம் ஆனாலும் சரி, மனிதர் ஆனாலும் சரி… இயற்கை அதன் வேலையைச் செய்து கொண்டுதான் இருக்கும். எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், எதைக் கடந்து போக வேண்டும் என்று முடிவு எடுக்க வேண்டியது நாம்தான்.
கோயிலுக்கு வருகையில் உங்கள் மனதை ஆக்கிரமித்திருக்கும் எண்ணங்கள் எல்லாவற்றையும் வெளிப் பிரகாரத்தோடு விட்டுவிட்டு, முழுமையான ஈடுபாட்டுடன் உள்ளே வரச்சொல்லும் கலாச்சாரம் இது. அங்கே நீங்கள் தேவையற்ற பதற்றத்தைக் காட்டினால், அதுதான் உங்கள் மகளைத் திரும்பிப் பார்க்க வைக்கும்.
எது ஒழுக்கம், எது ஒழுக்கமின்மை என்று நீங்கள் எழுதிய விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டது கோயில் என்ற அமைப்பு. அதை உங்கள் மேம்பாட்டுக்கு எப்படிப் பூரணமாகப் பயன்படுத்திக் கொள்வது என்று மட்டும் பாருங்கள்.
அமுதம் தேடி வந்துவிட்டு, அமுதக் கலசத்தின் மீது அமர்ந்துள்ள ஈக்களின் மீது ஏன் உங்கள் கவனம் போகிறது?
காமம்-அசிங்கம் அல்ல!
கேள்வி
“சாமி கும்பிடுவதற்காகப் போகும் கோயில்களில் எதற்காகக் காம விளையாட்டுச் சிற்பங்கள் அமைக்கப்பட்டு உள்ளன? பருவ வயதில் இருக்கும் மகளுடன் கோயிலுக்குப் போகும் என் போன்ற தாய்மார்களுக்கு எவ்வளவு பெரிய தர்மசங்கடம்?”
சத்குரு:
கடவுள் என்பது உங்களைப் பொறுத்தவரை என்ன? தெய்வீகமாக எதைக் கருதுகிறீர்கள்? ஒரு படைப்பின் மூலாதாரம்தான் கடவுள் என்று கருதுவீர்களேயானால், அதுதானே அங்கு சித்தரிக்கப்பட்டு இருக்கிறது?
செக்ஸ் என்பதை அசிங்கம் என்றோ, குற்றம் என்றோ நம் கலாச்சாரம் பார்க்கவில்லை. சரியா, தவறா என்றெல்லாம் விவாதம் செய்யாமல், வாழ்க்கையின் பரிமாணத்தை அது நேருக்கு நேராகச் சந்தித்தது.
பொதுவாக, இந்த மாதிரி சிற்பங்கள் கோயிலின் வெளிப் பரிகாரத்தில்தான் காணப்படுகின்றன. இந்தச் சிற்பங்களாவது வெளிப் பிராகாரத்தோடு நின்று போகின்றன. பருவ வயதில் இருக்கும் ஓர் ஆணுக்கும், பெண்ணுக்குமான பார்வைப் பரிமாற்றங்கள் சந்நிதியிலும் தொடர்வதைக் கவனித்து இருக்கிறீர்களா?
செக்ஸ் என்பதை அசிங்கம் என்றோ, குற்றம் என்றோ நம் கலாச்சாரம் பார்க்கவில்லை. சரியா, தவறா என்றெல்லாம் விவாதம் செய்யாமல், வாழ்க்கையின் பரிமாணத்தை அது நேருக்கு நேராகச் சந்தித்தது.
“அம்மா, நான் எப்படிப் பிறந்தேன்?” என்று கேட்டாள், எட்டு வயது மகள்.
சிறுமியிடம் இதைப்பற்றியெல்லாம் எப்படிப் பேசுவது என்று அம்மாவுக்கு சங்கடம். அதனால் அவள் சொன்னாள்… “அதோ, அந்தக் குருவிதான் உன்னைக் கொண்டுவந்து என் மடியில் போட்டது கண்ணு?”
“நீ எப்படி அம்மா பிறந்தாய்?”
“அப்படியானால், பாட்டியையும் இந்தக் குருவியின் பாட்டிதான் கொண்டு வந்து போட்டது!”
“அப்படியானால், பாட்டியையும் இந்தக் குருவியின் பாட்டிதான் கொண்டு வந்து போட்டதா?
“ஆமாடா செல்லம்!”
“அப்படியானால், நம் குடும்பத்தில் யாருக்குமே ஒழுங்கான பிறப்பில்லையா அம்மா?” என்று திகைத்துப் போய்க் கேட்டாள் சிறுமி.
இதுதான் உண்மை நிலை. குழந்தைகளுக்கே பாதி விஷயம் தெரியும்போது, உங்கள் மகளுக்குத் தெரியாதா, என்ன?
சிற்பங்களைப் பெயர்த்து எடுப்பதாலோ, மூடி மறைப்பதாலோ, உங்கள் மகளின் மனம் அது பற்றிச் சிந்தக்காது என்று நினைத்துவிடாதீர்கள்.
கோயில் என்பது வாழ்க்கையின் மேன்மையை உணர்ந்து கொள்வதற்கான ஒரு வாய்ப்பு. உங்களுக்குள் அமிழ்ந்துள்ள உச்சபட்ச சக்தியை தட்டி எழுப்புவதற்கான ஒரு கருவி.
இந்த உடல்ரீதியான இன்பங்களைக் கடந்து போனால்தான், வாழ்க்கையின் மேலான கட்டங்களுக்குப் போக முடியும். இந்த உண்மையை உறுதியாக எடுத்துச் சொல்வதுபோல்தான் மூலவரின் சந்நிதி உள்ளே அமைந்துள்ளது.
அந்தச் சிற்பங்களைக் கேவலம் என்று ஏன் பார்க்கிறீர்கள்? அது நிகழ்ந்ததால்தானே நீங்கள் உருவானீர்கள்? உங்கள் மகள் உருவானாள்? அது தவறென்று நினைத்தால், நீங்கள் படைக்கப்பட்டதே தவறென்று ஆகிவிடும்.
கேள்வி
“நான்கு சுவர்களுக்குள் வைத்திருக்க வேண்டிய விஷயமல்லவா இது? இதை இப்படி அம்பலத்துக்குக் கொண்டுவர வேண்டுமா?”
சத்குரு:
யாரும் உங்களை இதைத் தெருவுக்குக் கொண்டுவரச் சொல்லவில்லை. நீங்கள் பருவ வயதில் இருந்தபோது, உங்களுக்கு இது பெரிய உறுத்தலாக இருந்திருக்காது. இன்றைக்கு உங்கள் மகள் பார்த்துவிடக்கூடாது என்பதுதான் உங்கள் பதற்றத்துக்கான காரணம்.
உயிரினம் பெருகிக்கொண்டு இருக்க வேண்டும் என்பதற்காக இயற்கை அவற்றுக்கு ஆண், பெண் எனத் தனித்தனி வடிவங்கள் கொடுத்தது. ஒன்றின் மீது மற்றதற்கு ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியது. உடல்ரீதியான வேறுபாடுகள் தவிர, இருவரும் ஒரே அளவு மதிப்பு கொண்டவர்கள்தாம்.
இதை இன்றைய இளைஞர்கள் உணர்ந்திருக்கிறார்கள். பெரும் வளர்ச்சி கண்டுள்ள நிறுவனங்களில் ஆண், பெண் என்ற பேதங்கள் களையப்பட்டு விட்டதை இன்றைக்குப் பரவலாகக் காண முடிகிறது.
மிக நுண்ணிய உயிரினம் ஆனாலும் சரி, மனிதர் ஆனாலும் சரி… இயற்கை அதன் வேலையைச் செய்து கொண்டுதான் இருக்கும். எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், எதைக் கடந்து போக வேண்டும் என்று முடிவு எடுக்க வேண்டியது நாம்தான்.
கோயிலுக்கு வருகையில் உங்கள் மனதை ஆக்கிரமித்திருக்கும் எண்ணங்கள் எல்லாவற்றையும் வெளிப் பிரகாரத்தோடு விட்டுவிட்டு, முழுமையான ஈடுபாட்டுடன் உள்ளே வரச்சொல்லும் கலாச்சாரம் இது. அங்கே நீங்கள் தேவையற்ற பதற்றத்தைக் காட்டினால், அதுதான் உங்கள் மகளைத் திரும்பிப் பார்க்க வைக்கும்.
எது ஒழுக்கம், எது ஒழுக்கமின்மை என்று நீங்கள் எழுதிய விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டது கோயில் என்ற அமைப்பு. அதை உங்கள் மேம்பாட்டுக்கு எப்படிப் பூரணமாகப் பயன்படுத்திக் கொள்வது என்று மட்டும் பாருங்கள்.
அமுதம் தேடி வந்துவிட்டு, அமுதக் கலசத்தின் மீது அமர்ந்துள்ள ஈக்களின் மீது ஏன் உங்கள் கவனம் போகிறது?

Friday, September 26, 2014

சுவாமி விவேகானந்தரின் இறுதி நாட்கள்…

“தான் யாரென்பதை நரேந்திரன் உணர்ந்து கொண்டு விட்டால், அதன் பின் அவனால் கொஞ்ச நேரம் கூட இந்த உடலில் ஒட்டிக் கொண்டிருக்க முடியாது!” இது குருதேவர் ராமகிருஷ்ணர் ஒருமுறை சீடர்களிடம் சொன்னது. அந்தக் கூற்று பிற்காலத்தில் உண்மையானது. தான் யாரென்பதை உணர்ந்து கொண்டு விட்ட விவேகானந்தரின் ஆன்மா அந்தக் கூட்டை உதறி விட்டுச் செல்ல விரும்பியது. ஒருமுறை தன்னைக் காண வந்திருந்த ஜோஸபின் மெக்லியாடிடம் இது பற்றி விவேகானந்தர் கூறும்போது, “”நான் வெகு விரைவில் இறந்து போய் விடுவேன். நாற்பதாண்டுகள் வரை கூட நான் உயிரோடு இருக்க மாட்டேன்.”” என்றார். அது கேட்டு வருந்திய மெக்லியாட் அதற்கான காரணத்தைக் கேட்ட போது, “”ஒரு பெரிய மரத்தின் நிழலானது, தன் கீழ் உள்ள செடிகளை வளரவிடாது. ஆகவே நான் மற்றவர்களுக்கு வழிவிட்டுத் தான் ஆக வேண்டும்”” என்று கூறினார். அதாவது தான் மட்டுமே அல்லாது சக துறவிகளும் உயர்நிலைக்கு வர வேண்டும் என்றும் அதற்கு தான் வழிவிடுபவனாகவும், வழிகாட்டியாகவும் அவசியம் இருந்தாக வேண்டும் என்று அவர் தெரிவித்தார்..
ஜூலை 2 அன்று சுவாமிகளின் வேண்டுகோளுக்கு இணங்க அவரைச் சந்திக்க சகோதரி நிவேதிதை விஜயம் செய்தார். அன்று ஏகாதசி திதி. சுவாமிகள் உபவாசம் இருக்கும் நாள். ஆனாலும் அவர் நிவேதிதைக்கு மதிய உணவைத் தாமே பரிமாற இருப்பதாகவும், அவர் அவசியம் அதனை ஏற்றுக் கொள்ள வேன்டும் என்றும் வேண்டிக் கொண்டார். சீடரான தாம் தான் அவருக்குப் பணிவிடை செய்ய வேண்டுமேயன்றி, குருவான அவர் அல்ல என்று நிவேதிதை மறுத்தும் கேளாதவராய், அவருக்கு மதிய உணவைப் பரிமாறினார் சுவாமிகள். பின் அவர் கையைத் தண்ணீர் ஊற்றிக் கழுவி, அதனை துண்டால் துடைத்தும் விட்டார். அது கண்ட நிவேதிதைக்கு ஆச்சர்யமாகவும் அதே சமயம் அதிர்ச்சியாகவும் இருந்தது. இப்படியெல்லாம் அவர் செய்வதற்கான காரணம் புரியாமல் திகைத்தார். அவரிடம் அது பற்றிக் கேட்கவும் செய்தார். அதற்கு அவர், “இது ஒன்றும் புதிதல்ல நிவேதிதை. இயேசுநாதர் கூட தன் சீடர்களுக்கு இவ்வாறு செய்திருப்பது தான் உனக்குத் தெரியுமே!” என்றார். அது கேட்ட நிவேதிதை திகைத்தார். ஆனால் இயேசு தன் வாழ்வின் கடைசி நாட்களில் தானே அப்படிச் செய்தார் என்று மனத்துள் நினைத்த அவர் குழம்பினார். பின் இனம் புரியாத சோக உணர்வுடன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார் நிவேதிதா.
இரண்டு நாட்கள் கழிந்தன. அது 1902 ஆம் வருடம், ஜூலை மாதம் நான்காம் தேதி. தேவிக்கு மிகவும் பிடித்தமான வெள்ளிகிழமை நாள். அதிகாலை எழுந்து கொண்ட சுவாமி விவேகானந்தர், வழக்கத்திற்கும் மாறாக கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் வரை தனித்திருந்து தியானம் செய்தார். பின் தேவியைக் குறித்து சில பாசுரங்களைப் பாடினார். காலையில் சக சீடர்களுடன் வேடிக்கையாகப் பேசிக் கொண்டிருந்தார். பின் என்றும் இல்லாத அதிசயமாக மதியம் உணவுக் கூடத்தில், அனைத்து சகோதரத் துறவிகளுடனும், சீடர்களுடனும் ஒன்றாகச் சேர்ந்து அமர்ந்து உணவு உண்டார். பின் சிறிது நேரம் அவர்களுடன் நகைச்சுவையாகப் பேசிக் கொண்டிருந்தார். அடுத்து பிரம்மச்சாரிகளுக்கும், இளந்ததுறவிகளுக்கு கிட்டத்தட்ட மூன்றுமணி நேரம் வரை வேதாந்த பாடம் நடத்தினார். வடமொழி இலக்கணத்தைக் கற்பித்தார். மாலை நேரம் ஆனதும் சக துறவியான பிரேமானந்தருடன் உலாவுவதற்காக வெளியே சென்றார். வெகு நேரம் உலாவி விட்டு வந்த பின் சக சீடர்களுடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார். பின் தனது அறைக்குச் சென்ற அவர், தான் தனித்து அமர்ந்து தியானம் செய்யப் போவதாகவும், தன்னை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் சீடர்களிடம் கேட்டுக் கொண்டார். அதன்படியே தனது அறைக்குள் சென்று தியானத்தில் ஈடுபட்டார்.
சிறிது நேரம் சென்றது. அப்போது இரவு எட்டு மணி இருக்கும். வெளியே மற்ற சீடர்கள் அமர்ந்து வேதபாராயணம் செய்து கொண்டிருந்தனர். தன் சீடர் ஒருவரை உள்ளே அழைத்த விவேகானந்தர், அறையின் ஜன்னல் கதவுகளைத் திறந்து விடுமாறு சொன்னார். கங்கை நதியைப் பார்த்தவாறே சிறிது நேரம் உட்கார்ந்து தியானம் செய்தார். பின் தான் படுத்துக் கொள்ளப் போவதாகவும் சற்று நேரம் தமக்கு விசிறிக் கொண்டிருக்குமாறும் சீடரிடம் வேண்டிக் கொண்டார். பின் மெல்லப் படுக்கையில் சாய்ந்தார். சற்று நேரம் சென்றிருக்கும். மூச்சை ஆழமாக இழுத்து வெளியே விட்டார் சுவாமி விவேகானந்தர். அதுவே அவரது இறுதி மூச்சாய் அமைந்தது. அதன் பிறகு அவரது உடலிலிருந்து எந்தஅசைவுமில்லை. சலனமுமில்லை. சீடரோ அதை அறியாது தொடர்ந்து விசிறிக் கொண்டே இருந்தார்.
ஆனால் அதே சமயம் சென்னையில் தியானத்தில் அமர்ந்திருந்த ராமகிருஷ்ணானந்தரின் காதுகளில் அந்தக் குரல் ஒலித்தது. “” சசி, நான் என் உடம்பை விட்டுவிட்டேன்!””. அது சுவாமி விவேகானந்தரின் குரல் தான் என்பதையும், அவர் மறைந்து விட்டார் என்பதையும் உணர்ந்த ராமகிருஷ்ணானந்தர் மிகுந்த வருத்தத்திற்கு உள்ளானார். பின் வெகுநேரம் கழித்தே சுவாமிகள் சமாதி நிலை எய்திவிட்ட விஷயம் பேலூரில் உள்ள மற்ற சீடர்களுக்குத் தெரிய வந்தது. சொல்லொணா வேதனையுடன் அவர்கள் அவரது திருவுடலைச் சூழ்ந்து நின்றனர். சோகத்துடன் அவரது உடல் சமாதிக்கான ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தனர். சுவாமி விவேகானந்தருக்கு அப்போது வயது 39.
நன்றி :-http://ramanans.wordpress.com/

Thursday, September 25, 2014

ஸ்ரீ சக்கரத்தம்மாள்.....அமானுஷ்யம் வாய்ந்த பெண் சித்தர்

எண்ணற்ற மகான்களால் புனிதமடைந்த பாரத பூமியில், ’ஆன்மாவிற்கு ஆண், பெண் பேதம் என்பது கிடையாது. ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் இறைவனை அடைவதற்கு அது ஒருதடையாக இருக்க வேண்டிய அவசியமில்லை’ என்று வாழ்ந்து காட்டியவர் ஸ்ரீ சக்கரத்தம்மாள். தியாகமும், யோகமும் இணைந்த ஒன்றாக அவரது வரலாறு விளங்குகிறது.
ஸ்ரீ சக்கரத்தம்மாளின் இயற்பெயர் அனந்தாம்பாள். பொது சகாப்தம் 1854ம் ஆண்டில், வடஆற்காடு மாவட்டத்தில் உள்ள தேவிகாபுரம் என்ற சிற்றூரில் பிறந்தார். தந்தை ஆலய அர்ச்சகர். தேவி உபாசனையில் தேர்ந்தவர். தாயாரோ அனுதினமும் சிவனைத் தவறாது பூஜித்து வந்தவர். இவர்களது குழந்தை என்பதால் சிறுவயதிலேயே அதற்கு இறை அனுபூதி வாய்த்திருந்தது. குழந்தை ஞானச் செறிவுடன் வளர்ந்து வரும் வேலையில் திடீரென்று தாயார் காலமானார். தந்தை அக்கால வழக்கப்படி மறுமணம் செய்து கொண்டார். சிற்றன்னையின் கவனிப்பில் குழந்தை வளர்ந்தது.
லலிதா சகஸ்ரநாமம், ஸ்ரீஸ்துதி போன்றவற்றை தந்தையிடமிருந்து கற்றுக்கொண்டு தினமும் ஓதி வந்தாள் சிறுமி அனந்தாம்பாள். கோயிலின் மேல்நிலைக்குச் சென்று தனியாக அமர்ந்து தியானம் செய்வது அவளுக்கு மிகவும் விருப்பமான ஒன்று. சக குழந்தைகளுடன் விளையாடுவதை விட, தந்தையுடன் சென்று ஆலயப் பணிகளில் ஈடுபடுவதே அவளுக்குப் பிடித்திருந்தது.
திடீரென சிறுமிக்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. சென்னை எழும்பூரில் இருந்த கோமளீஸ்வரர் மடத்தின் அதிபதியான சாம்பசிவனுடன் திருமணம் நடந்தது. அப்போது அனந்தாம்பாளுக்கு வயது எட்டு. சாம்பசிவனுக்கோ இருபத்துமூன்று. அவருக்கு அது இரண்டாவது திருமணமும் கூட. பால்ய விவாகம் சகஜமாக இருந்ததால் அக்காலத்தில் திருமணத்திற்கு எதிர்ப்புகள் ஏதும் இல்லை.
மணமாகிச் சென்னைக்கு வந்தாள் அனந்தாம்பாள். சிறுமியான அவள் திருமண வாழ்க்கை பற்றி அதிகம் அறிந்திருக்கவில்லை. நாளடைவில் தன் பொறுப்புக்களையும், கடமைகளையும் உணர்ந்து அதற்கேற்றவாறு நடந்து கொண்டாள். ஆனால் கணவன் சாம்பசிவனோ, மனைவி ஒரு சிறுமி என்பதால் மதிக்காமல் தன் இஷ்டம்போல் வாழ்க்கை நடத்தினார். அவர் தீய நடத்தை உடையவராகவும் இருந்தார். அனந்தாம்பாளுக்குத் திருமண வாழ்க்கை ஒரு கொடிய நரக வாழ்க்கையாக அமைந்தது.
அனந்தாம்பாள் வளர்ந்தார். குமரியானார். ஆனால் அப்போதும் சாம்பசிவன் தனது தீய நடவடிக்கைகளை நிறுத்தவில்லை. அனந்தாம்பாளை உளரீதியாகப் பல்வேறு சித்ரவதைகளுக்கு ஆளாக்கினார். மிகக் கொடிய துன்பத்தை அவர் அனுபவிக்க நேர்ந்தது. ஆனாலும் தனது இல்லறக் கடமைகளைக் கைவிடவில்லை. அதேசமயம் அவரது ஆன்மீக நாட்டம் நாளுக்கு நாள் வளர்ந்த வண்ணம் இருந்தது. தினந்தோறும் அருகில் உள்ள கோமளீஸ்வரர் கோயிலுக்குச் செல்வார். தியானத்தில் ஈடுபடுவார். லலிதா சகஸ்ரநாமம் சொல்லுவார். இறைவனை வேண்டி, உளம் உருக வழிபட்டு வருவார்.
நாளடைவில் தீயசெயல்களின் விளைவால் படுத்த படுக்கையானார் சாம்பசிவன். அப்போதும் அவருக்கான கடமைகளைச் செய்து வந்ததுடன், தினம்தோறும் ஆலயம் சென்று கணவருக்காகப் பிரார்த்தித்து வரலானார் அனந்தாம்பாள்.
ஒருநாள் கணவர் இறந்து விட்டார். அனந்தாம்பாளுக்கு மொட்டை அடிக்கப்பட்டதுடன், காவி வஸ்திரமும் அணிவிக்கப்பட்டது. அதுமுதல் யாருடனும் எதுவும் பேசாமல், தன் வீட்டின் மொட்டை மாடியில் தனித்தமர்ந்து தவம் செய்ய ஆரம்பித்தார். அப்போது அவருக்கு வயது 20.
கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள், தன் முப்பதாவது வயது வரையில், அவரது அந்த மௌனத் தவம் தொடர்ந்தது. தவத்தின் முடிவில் அந்த ஒளிக்கெல்லாம் ஒளியான பேரொளியைக் கண்டார் அம்மா. அதுமுதல் சதா ஆனந்த நிலையில் இருப்பதே அவர் வழக்கமாயிற்று. ’யான் எனதென்பது அறியேன், பகலிரவாவது அறியேன்’ என்று அடிக்கடிச் சொல்லிக் கொண்டிருந்ததுடன், பரிபூரண ஆனந்த பிரம்ம நிலையிலேயே திளைத்திருந்தார். சதா ஆனந்த நிலையில் இருப்பதால் எப்பொழுதும் சிரித்துக்கொண்டே இருப்பது அவர் வழக்கமானது.
கோமளீசுவரன் ஆலய வாசலில் அமர்ந்திருப்பார். யாரைப் பார்த்தாலும் பெருங்குரலெடுத்துச் சிரிப்பார். அவரைக் கண்ட பலரும் ஆரம்பத்தில் பைத்தியம் என்று கருதி விலகிச் சென்றனர். பின்னரே அவர் ’ஞான சொருபிணி’ என்பதும், ’பிரம்ம யோகினி’ என்பதும் தெரிய வந்தது. அம்மாவின் ஞான நிலையை உணர்ந்த சண்முக முதலியார் என்பவர் முதல் சீடரானார். தொடர்ந்து பலரும் அம்மாவை நாடி வந்து வணங்க ஆரம்பித்தனர். அவர்களுள் குறிப்பிடத் தகுந்தவராக விளங்கியவர் டாக்டர் நஞ்சுண்டராவ்.
டாக்டர் நஞ்சுண்டராவ், சென்ற நூற்றாண்டின் பிரபலமான மருத்துவர்களுள் ஒருவர். கர்னல் ஆல்காட், கிருஷ்ணசுவாமி அய்யர், பி. ஆர். சுந்தரமையர், காட்டுப் புத்தூர் ஜமீன்தார் என பலருக்கும் அவர்தான் குடும்ப டாக்டர். சுவாமி விவேகானந்தரின் அன்புக்குப் பாத்திரமானவர். விவேகானந்தர், நஞ்சுண்டராவின் ஆன்மீக வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். அமெரிக்காவிலிருந்தும் மற்ற வெளிநாடுகளிலிருந்து விவேகானந்தர் நஞ்சுண்டராவிற்கு எழுதிய கடிதங்கள் மிகவும் புகழ்பெற்றவை. “எனக்கு சென்னையைப் பற்றி மிகப் பெரிய நம்பிக்கை உள்ளது. சென்னையிலிருந்து ஒரு மிகப்பெரிய ஆன்மீக அலை உருவாகப் போகிறது. அது இந்தியாவெங்கும் பரவி ஒளி வீசப் போகிறது. இதில் எனக்கு பெருத்த நம்பிக்கை இருக்கிறது” என்று டாக்டர் நஞ்சுண்டராவுக்கு எழுதிய கடிதத்தில்தான் விவேகானந்தர் தெரிவித்திருந்தார்.
ஆன்மீகத்தில் அளவற்ற நாட்டம் கொண்டிருந்த நஞ்சுண்டராவின் உள்ளம் ஒரு நல்ல குருவைத் தேடிக் கொண்டிருந்தது. அந்நிலையில் தான் அவருக்கு அம்மாவின் தரிசனம் கிடைத்தது. அம்மாவை ஆரம்பத்தில் ஒரு சாதாரணப் பெண்மணியாகவே அவர் கருதினார். பின்னரே அவரது தவநிலையை உணர்ந்து கொண்டு அம்மாவின் சீடரானார். அம்மாவைத் தங்கள் குடும்பத்துள் ஒருவராகவே கருதியவர் அவருடன் காசி உட்பட பல இடங்களுக்கும் தல யாத்திரை சென்று வந்தார். பின் அம்மாவுடன் திருவண்ணாமலை சென்ற டாக்டர் நஞ்சுண்ட ராவ், அப்போது விருபாக்ஷி குகையில் தங்கியிருந்த பகவான் ரமணரையும் தரிசித்து ஆசி பெற்றார். (தேவராஜ முதலியாரின் ‘அனுதினமும் பகவானுடன்’ / 17-03-1946 நாட்குறிப்பு)
அம்மா அனுதினமும் சிவ பூஜையும் ஸ்ரீ சக்ர பூஜையும் செய்து வந்தார். அதனால் அவரது இயற்பெயரான அனந்தாம்பாள் என்பது மறைந்து ’அம்மா’ என்றும் சக்கரத்தம்மாள் என்றும் அன்புடன் அழைக்கப்படலானார். தம்மை நாடி வந்தவர்களுக்கு அன்பு, அடக்கம், கருணை, இரக்கம், பக்தி ஆகியவற்றை உபதேசித்தார். “பிரம்மம் ஒன்றே சத்தியம். அந்த பிரம்மத்தை உணர்வதே ஆனந்தம். எல்லாம் அகண்ட பரிபூரண சச்சிதானந்த பரபிரம்மத்தின் ஸ்வரூபமே. நமக்கு அந்நியமாய் எதுவுமே இல்லை. எல்லாம் இறைவனே! அவனே நம்மை ஆட்டுவிக்கிறான். பக்தியுடன் அவன் தாள் பணிவதே மனிதப் பிறவியின் பயன்பாடு” என்றெல்லாம் அவர் உபதேசித்ததைக் கேட்ட மக்கள் பலரும் அவரை நாடி வந்து பணிந்தனர்.
பரிபூரண ஞானநிலை அடைந்த அம்மா, அவ்வப்பொழுது நீடித்த யோக சமாதியில் ஆழ்ந்து விடுவதும் உண்டு. அன்பர்கள் காரணம் கேட்டால், தாம் திருவண்ணாமலை சென்று ரமண மகரிஷிளோடு உரையாடி விட்டு வந்ததாகவும், சேஷாத்ரி சுவாமிகளை தரிசனம் செய்து விட்டு வந்ததாகவும் கூறுவார். அதுதவிரப் பல்வேறு சித்துக்களும் அம்மா கைவரப் பெற்றிருந்தார்.
அம்மாவின் சித்தாற்றல் பற்றி தனது ’உள்ளொளி’ (மணிவாசகர் பதிப்பகம், தமிழ் மண் பதிப்பகம்) என்ற நூலில் கீழ்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார் தமிழ்த் தென்றல் திரு.வி.க.
“சென்னை கோமளீசுவரன் பேட்டையில் ஓர் அம்மையார் இருந்தார். அவர் காலஞ்சென்ற டாக்டர் நஞ்சுண்டராவின் குரு என்று உலகம் சொல்லும். அவ்வம்மையார் பறவையைப் போல வானத்தில் பறப்பர். ஒருமுறை யான் வசித்த கல்லூரியின் மேல்மாடியில் பறந்துவந்து நின்றனர். மானுடம் பறக்கிறதெனில் உலகம் அதை எப்படி வியக்குமென்று சொல்ல வேண்டுவதில்லை. அக்காலத்தில் சென்னையில் வதிந்த விஞ்ஞானியர் பலர் சூழ்ந்து சூழ்ந்து அம்மையார் நிலையை ஆராய்வர். அப்பொழுது சென்னை மியூஸியத் தலைவராயிருந்த ஓர் ஐரோப்பியரால் பறவையார் நிலை பெரிதும் ஆராயப்பட்டது. அம்மையார் பறவை இனத்தைச் சேர்ந்தவரென்றும், அவரிடம் பறவைக்குரிய கருவி கரண அமைப்புகள் சில உள்ளன என்றும், கூர்தல் (Evolution) அறப்படி அத்தகையப் பிறவி இயற்கையில் அமைதல் கூடும் என்றும் அவரால் விளக்கப்பட்டன. அவர் விளக்கம் மற்றவரால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. யான் ‘தேசபக்தன்’ ஆசிரியனாகியபோது டாக்டர் நஞ்சுண்டராவிடம் நெருங்கிப் பழகுதல் நேர்ந்தது. பறவையாரைப் பற்றி அவரை நான் விசாரித்தேன். அவர், ‘அம்மையார் சித்தரினத்தில் சேர்ந்தவர்’ என்று கூறினர். பறவை நாயகியார் நிலை மனோதத்துவத்துக்கு எட்டுவதா? உன்னிப் பாருங்கள்”.
பரிபக்குவம் பெற்ற ஞானிகள், சித்தர்கள் இருந்த இடத்திலிருந்தே அனைத்து இடங்களுக்கும் செல்ல முடியும். அந்த வகையில் தான் பெற்ற ‘இலகிமா’ என்ற சித்தின் மூலம், தனது உடல் எடையைக் காற்றை விட எடைகுறைந்ததாய் மாற்றிக் கொண்டு, வானத்தில் பறந்திருக்கிறார் அம்மா என்றே நாம் அனுமானிக்க முடிகிறது.
ஞானிகளாகவும், மகான்களாகவும் இருப்பவர்கள் காலம், இடம், தூரம் போன்ற எல்லா எல்லைகளையும், நான், எனது போன்ற குறுகிய நோக்கங்களையும் கடந்தவர்கள். எல்லாம் பிரம்மத்தின் சொரூபமே; எல்லா உயிர்களிலும் இறைவன் இருக்கிறான் என்பதை அனுபவத்தில் உணர்ந்தவர்கள் அவர்கள். ஆனால் அப்படிப்பட்ட மகான்களின் ஆற்றல்களையும், அருள் உபதேசங்களையும் புரிந்து கொள்ள இயலாதவர்கள் அவற்றைப் பொய் என்றும், மூட நம்பிக்கை என்றும் புறந்தள்ளி விடுகின்றனர். பகுத்தறிவால் நம்ப முடியாத எதுவும், விஞ்ஞான அளவுகோலுக்கு மாறான எதுவும் கற்பனையானதாகவும், நம்ப முடியாத ஒன்றாகவும் கருதப்படுகிறது. ஆனால் தனது அறிவிற்கு அப்பாற்பட்ட எதுவுமே இருக்க முடியாது என்று எண்ணுவதே உண்மையில் அறியாமையும் மூடநம்பிக்கையுமாகும். ’தான், தனது’ என்ற அகந்தை இருக்கும்வரை மெய்ஞ்ஞானம் சித்திக்காது. உண்மையை அறிந்து கொள்ளவும் இயலாது.
இவ்வாறு பல்வேறு ஆற்றல்கள் பெற்றிருந்த அம்மா, 1901ம் ஆண்டு, பிப்ரவரி 28ம் நாள், இறை ஜோதியில் ஐக்கியமானார். சீடர் நஞ்சுண்டராவால் சென்னை திருவான்மியூரில், கலாக்ஷேத்ரா அருகே அம்மாவுக்கு ஓர் அழகிய சமாதி ஆலயம் எழுப்பப்பட்டது.
ஒருமுறை தம்மைச் சந்தித்த நஞ்சுண்டராவிடம் காஞ்சி மகா பெரியவர் ஸ்ரீலஸ்ரீ சந்திரசேகரேந்திர சரசுவதி சுவாமிகள், அம்மாவின் சமாதி ஆலயம் ஒரு மகத்தான் சக்தி பீடம் என்றும், தவறாமல் பூஜைகள் செய்யப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். அதன்படி டாக்டர் நஞ்சுண்டராவ் அமைத்த டிரஸ்டின் மூலம் சிறப்பான முறையில் இங்கு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. மாசி மாதத் திருவாதிரை தினத்தன்று அம்மாவின் குருபூஜை மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.
பெண்கள் மெய்ஞ்ஞானம் பெறத் தகுதியானவர்களே என்று வாழ்ந்து காட்டிய மகா தபஸ்வினி ஸ்ரீ சக்கரத்தம்மாளின் ஞான வாழ்க்கை புனிதமானது. என்றும் நினைந்து போற்றத்தக்கது.

Tuesday, September 23, 2014

வாஸ்து:குறைபாடுகளும் நிவர்த்திகளும்:

வாஸ்து மூலை
1. தென்மேற்கு மூலை ( கன்னி மூலை ) எப்போதும் சரியாக 90 டிகிரியில் இருக்கவேண்டும். அதில் கவனம் மிகமிகத் தேவை. அதில் கோட்டை விட்டால் ஓட்டை விழுந்தமாதிரிதான். உதாரணத்துக்கு சொல்லவேண்டுமானால், ஒரு வீட்டின் தெற்கு மற்றும் மேற்கு சுவர்கள் சரியாக 90 டிகிரி அமைப்பில் இருக்கிறது. அந்த சுவற்றுக்கு இணையாக ( பேரலெல் )காம்பவுண்டு சுவர் செல்லவேண்டும். ஆனால், அந்த வீட்டில் அவ்வாறு அமையவில்லை. மேற்கில் காம்பவுண்டு சுவர், வீட்டு சுவர் இரண்டுக்கும் மத்தியில் காலி இடம் 3′ வருகிறது. ஆனால், அது வடக்கில் செல்லச் செல்ல 90 டிகிரி வளர்ந்து வடக்கு பக்கம் 31/2′ யாக வளர்ந்து விடுகிறது. அதனால் வாயு மூலை வளர்ந்து விடுகிறது. மனைக்கு அது ஒரு குறைபாடே. எந்த கட்டத்திலும் வாயுமூலை வளர்ந்திருக்கக்கூடாது.
“வாயுமூலை வளர்ச்சி விவகாரத்தின் வளர்ச்சி” என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. இந்த குறைபாட்டை நிவர்த்தி செய்ய சிமெண்ட் கலவையை காம்பவுண்டு சுவரின் உட்பக்கம் அப்பியும், செங்கல்லைப் பிளந்து கனத்தைக் குறைத்தும் சரி செய்யலாம்.
2. அடுத்து வரும் பிரச்சினை முன்னதைவிடப் பெரியது. சிக்கலானது. சீரியஸானது. ஒரு கட்டடத்தை எப்போதும் நான்கு மூலைகள் மட்டும் வருமாறு அமைக்கவேண்டும். அதில் அழகிற்காக மூலையைக் கூட்டினாலும், குறைத்தாலும் பிரச்சினைதான். அந்த வீட்டிற்கு படிக்கட்டுக்கு அடியில் டாய்லெட் அறை அமைந்துள்ளது. வடமேற்கில் டாய்லெட் அறை பெற்றவுடன் மொத்த கட்டடம் வாயுமூலை வளர்ச்சியைப் பெற்றுவிடுகிறது. அதனால், கட்டடம் 1முதல் 6 மூலைகளைப் பெற்றுவிடுகிறது. இது சரியானதல்ல. நான்கு மூலைகள் மட்டும் வருமாறு மாற்றியமைதுக்கொள்வது மிக அவசியம்.
3. அடுத்ததாக மிகவும் கவகிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால், ‘ ஈசான்ய வெட்டு ‘. இதுவும் சரி செய்யப்படவேண்டிய ஒன்றாகும். ” ஈசான்ய வெட்டுக்கு இருக்காது சுகமான வாழ்க்கை ” என்கிறது வாஸ்து சாஸ்திரம். அந்த வீட்டில் ஈசான்யத்தில் தூண் உள்ளது. ஆனால், அதை சுவராக எடுத்துக்கொள்ளக் கூடாது. அந்த அமைப்பினால், தரைதளம் ஈசான்ய வெட்டாக அமைகிறது. பார்வைக்கு மேல்தளம் கான்கிரீட் வந்து, ஈசான்யம் வெட்டு இல்லாததுபோல் தோன்றும். ஆனால், இந்த மாதிரி அமைப்பு ஈசான்ய வெட்டுதான். இதனை சரி செய்வது எப்படி?கிழக்கு பக்கம் தூணோடு இணைக்க ஒரு சுவர் 3/4′ கனத்திற்கு 3′ உயரத்திற்கு கட்ட வேண்டும். அதேபோல் வடக்குப் பக்கம் தூணிலிருந்து 3/4′ கனத்திற்கு 3′ உயரத்திற்கு சுவர் கட்டவேண்டும். அந்த சுவற்றின்மீது கிரில் வைத்து அழகுபடுத்தலாம். காற்றோட்டமாகவும் இருக்கும். அல்லது மேல் கான்கிரீட் வரை சுவர் எழுப்பி ஜன்னலும் வைத்துக்கொள்ளலாம். வடக்குப் பக்கம் மெயின் டோருக்கு எதிரில் ஒரு சிறிய கேட் அல்லது கதவு வெளியேவர வைத்துக்கொள்ளலாம். இவ்வாறு அமைப்பதில் கட்டடம் வாயுமூலை வளர்ச்சி தடுக்கப்பட்டு மொத்த கட்டடம் நாலு மூலைகளைக் கொண்டதாகவே அமையும்.
4. இன்னுமொரு பிரச்சினை என்னவென்றால், ஈசான்ய உச்ச பகுதியில் மெயின் கேட் இருப்பது நல்ல அமைப்புதான். ஆனால், அந்த கேட் மூலம் வெளியே மெயின் ரோட்டிற்கு செல்லும் வழி நேராக அமையாமல், ஆக்கிநேய நடையாக அமைந்துவிட்டது. அவ்வாறு அமைந்தால், குடிப்பழக்கம் , விபத்து ஏற்பட வாய்ப்பு உண்டு. இந்தவீட்டு உரிமையாளரின் மகன் கீழே விழுந்து மிகுந்த பொருட் செலவு செய்தும் உள்ளார். அதனை சரி செய்ய கேட்டை நேராக மெயின் ரோட்டிற்கு செல்லும்படி அமைத்துக்கொள்ளவேண்டும்.
எனவே வாஸ்து சாஸ்திரம் என்பது ஒரு ஆழமான விஷயம். எப்போதும் தேர்ந்த அறிவுடனும் தெளிவுடனும், வாஸ்து சம்பந்தப்பட்ட மாற்றங்களைச் செய்யவேண்டியது அவசியம். அரைகுறையாக எதையாவது செய்தால், வேறுவிதமான தொல்லைகள் ஏற்படலாம் என்பதால், நன்கு விஷயமறிந்தவர்களின் ஆலோசனையைப் பெற்றபின் வாஸ்து மாற்றங்களைச் செய்து நல்வாழ்வு வாழ வாழ்த்துகிறோம்.]
நன்றி :-http://moonramkonam.com/

அஷ்டகர்ம மூலிகைகள் அறுபத்தி நான்கு

பண்டைய காலத்தில் வாழ்ந்து பல அற்புதங்களை செய்த நம் தமிழக சித்தர்கள் மூலிகைகளை கொண்டே மந்திர உருவேற்றி பல காரியங்களில் வெற்றியடைந்தனர். அதன்படி அவர்கள் பயன்படுத்திய மூலிகைகள் அஷ்டகர்மங்கள் ( எட்டு சித்திகள் ) செய்ய ஒரு சித்திக்கு 8 மூலிகை என அஷ்ட சித்திக்கு 64 மூலிகைகள் ஆகும். அஷ்டகர்ம்ம் என்பது 1. ஆகர்ஷனம், 2. உச்சாடனம், 3. தம்பனம், 4. பேதனம், 5. மாரணம், 6. மோகனம், 7. வசியம, 8. வித்வேஷனம் ஆகும். இந்த அஷ்ட கர்ம செயல்களை பற்றி விரிவாக காணலாம்.
1. ஆகர்ஷனம் : நமக்கு தேவையானதை இருக்கும் இடத்திலிருந்து நாம் இருக்கும் இடத்திற்கே வரவழைக்கும் வித்தையாகும். இதற்கு உதவும் மூலிகைகள் 1. வேளை, 2. உள்ளொட்டி, 3. புறவொட்டி, 4.சிறு முன்னை, 5. குப்பைமேனி, 6. அழுகண்ணி, 7. சிறியாநங்கை, 8. எருக்கு என எட்டு மூலிகைகளாகும். இதில்
மிருகங்களை அழைப்பதற்கு - வேளை, குப்பைமேனி.
பெண்களை அழப்பதற்கு - உள்ளொட்டி, அழுகண்ணி.
அரசர், பிரபுக்ளை அழைப்பதற்கு - சிறுமுன்னை.
துர்தேவதைகளை அழைப்பதற்கு - புறவொட்டி.
தேவதைகளை அழைப்பதற்கு - எருக்கு.
அனைத்து அழைப்பிற்கும் - சிறியாநங்கை.
2. உச்சாடனம் : பேய், பிசாசு, கெட்ட ஆவிகள், நோய்கள் தீமைகளை விரட்டியடித்தல். இதற்கு பயன்படும் மூலிகைகள் 1. பேய் மிரட்டி, 2. மான் செவிகள்ளி, 3. தேள்கொடுக்கி, 4. கொட்டைகரந்தை, 5. வெள்ளை கண்டங்கத்திரி, 6. மருதோன்றி, 7. பிரமதண்டு, 8. புல்லுருவி ஆகும். இதில்
மிருகங்களை விரட்ட - பேய்மிரட்டி.
எதிரிகளை விரட்ட - மான்செவிகள்ளி.
உடலில் ஏறிய விஷங்களை விரட்ட - தேள்கொடுக்கி.
நீர்வாழ் உயிரனங்களை விரட்ட - கொட்டைகரந்தை.
கால்நடைகளை விரட்ட - வெள்ளை கண்டங்கத்தரி.
பூத பைசாசங்களை விரட்ட - மருதோன்றி, புல்லுருவி
பிறர் நமக்கு செய்யும் தீமகளை விரட்ட - பிரமதண்டு.
3. பேதனம் : ஒன்றை மற்றொன்றாக மாற்றுதல், அதாவது ஒரு விஷயத்தை நினைத்து நம்மிடம் வருபவரை அந்த நினைப்பை வேறுபட்டு போகும்படி செய்தல். இதற்கு பயன்படும் மூலிகைகள் 1. வட்டதுத்தி, 2. செம்பசளை, 3. மாவிலங்கு, 4. பாதிரி, 5. கோழியாவரை, 6. சீந்தில்கொடி, 7. புடலங்கொடி, 8. ஆகாயதாமரை ஆகும்.
நெருப்பின் உக்கிரத்தை பேதிக்க - வட்டதுத்தி,
மனிதனின் எண்ணத்தை பேதிக்க - செம்பசளை,
பூத, பிசாசுகளை பேதிக்க - மாவிலங்கு, பாதிரி,
துர்தேவதைகளை பேதிக்க - கோழியாவரை,
எதிரிகளை பேதிக்க - சீந்தில்கொடி,
பெண்களை பேதிக்க - புடலங்கொடி,
வியாதிகளை பேதிக்க - ஆகாயதாமரை.
4. மாரணம் : கொல்வது அல்லது மாற்றுவது. உலோகங்களை அதன் தன்மையில் இருந்து மாற்றுவது. எதிரிகளுக்கு நோயை உண்டாக்கி கொல்வது. இதற்கு பயன்படும் மூலிகைகள் 1. நச்சுப்புல், 2. நிர்விஷம், 3. சித்திரமூலம், 4. அம்மன் பச்சரிசி, 5. கார்த்திகை கிழங்கு, 6. மருதோன்றி, 7. கருஞ்சூரி, 8. நாவி ஆகும்.
மனிதர்களை மாரணம் செய்ய - நச்சுப்புல், நிர்விஷம்,
வியாதிகளை மாரணம் செய்ய - சித்திரமூலம், கருஞ்சூரை,
கண்ணாடிகளை மாற்ற - அம்மன் பச்சரிசி,
மிருகங்களை மாரணம் செய்ய - மருதோன்றி, கார்திகை கிழங்கு.
5. மோகனம் : பிறரை நம்மிடம் மயங்கி இருக்க செய்வது. இதற்கு பயன்படும் மூலிகைகள் 1. பொன்னூமத்தை, 2. கஞ்சா வேர், 3. வெண்ணூமத்தை, 4. கோரைக்கிழங்கு, 5. மருளூமத்தை, 6. ஆலமர விழுது, 7. நன்னாரி, 8. கிராம்பு ஆகும்.
பெண்களை மோகிக்க - பொன்னூமத்தை,
பொதுமக்களை மோகிக்க - கஞ்சா வேர்,
உலகத்தை மோகிக்க - வெண்ணூமத்தை,
விலங்குகளை மோகிக்க - கோரைக்கிழங்கு,
தேவதைகளை மோகிக்க - மருளூமத்தை,
அரசர்களை மோகிக்க - ஆலம்விழுது,
மனிதர்களை மோகிக்க - கிராம்பு,
எல்லாவற்றையும் மோகிக்க - நன்னாரி.
6. வசியம் : எல்லாவற்றையும் நம்மிடம் விருப்பமாகவும் இஷ்டமாயும் இருக்க வைத்தல். இதற்கு பயன்படு்ம் மூலிகைகள் 1. சீதேவிச் செங்கழுநீர், 2. நிலவூமத்தை, 3. வெள்ளை விஷ்ணுகிரந்தி, 4. கருஞ்செம்பை, 5. வெள்ளை குன்றி மணி, 6. பொன்ணாங்கன்னி, 7. செந்நாயுருவி, 8. வெள்ளெருக்கு ஆகும்.
இராஜ வசியத்திற்கு - சீதேவி செங்கழுநீர்,
பெண் வசியத்திற்கு - நிலவூமத்தை,
லோக வசியத்திற்கு - வெள்ளெருக்கு,
ஜன வசியத்திற்கு - கருஞ்செம்பை, விஷ்ணுகிராந்தி,
விலங்கு வசியத்திற்கு - வெள்ளை குன்றி மணி,
தேவ வசியத்திற்கு - பொனணாங்கன்னி,
சாபம், வழக்குகள் வசியத்திற்கு - செந்நாயுருவி.
7. வித்துவேஷனம் : பகையை உண்டாக்குதல். இதற்கு பயன்படும் மூலிகைகள். 1. கருங்காக்கனம், 2. வெள்ளை காக்கனம், 3. திருகு கள்ளி, 4. ஆடுதின்னாபாளை, 5. பூனைக்காலி, 6. கீழாநெல்லி, 7. ஏறண்டம், 8. சிற்றாமணக்கு ஆகும்.
அரசர்களுக்குள் பகை உண்டாக்க - கருங்காக்கணம்,
தேவர்களுக்கு - வெள்ளைக்காக்கணம், திருகுகள்ளி,
பூத, பைசாசங்களுக்கு - ஆடுதின்னாபாளை,
பெண்களுக்கு நோய் உண்டாக்க - பூனைக்காலி,
எதிரிகளால் உண்டாகும் ஆபத்தை தடுக்க - கீழாநெல்லி,
உணவை உண்ணாமல் செய்ய - சிற்றாமணக்கு.
8. தம்பனம் : தடுத்து நிறுத்துத்தல், விலங்குகளின் வாயை கட்டுதல். இதற்க்கு பயன்படும் மூலிகைகள் 1. கட்டுக்கொடி, 2. பால்புரண்டி, 3. பரட்டை, 4. நீர்முள்ளி, 5. நத்தைச்சூரி, 6. சத்தி சாரணை, 7. பூமிச்சர்கரை, 8. குதிரைவாலி ஆகும்.
விந்துவை கட்ட - கட்டுக்கொடி, பால்புரண்டி, நீர்முள்ளி,
தண்ணீரைக்கட்டி அதன் மேல் அமர - கட்டுக்கொடி,
பெண்களின் முலைபாலை கட்ட - பால்புரண்டி,
வயிற்றுப் போக்கை நிறுத்த - பரட்டை,
கற்களை கறைக்க - நத்தைச்சூரி,
செயல்களை செயல்படாமல் கட்ட - சத்திசாரணை,
திரவத்தை கட்டி திடமாக்க - பூமிச்சர்கரை கிழங்கு,
கருப்பையில் உள்ள கருவை கட்ட - குதிரைவாலி.
மேற்படி மூலிகைகளை உரிய நாளில் காப்பு கட்டி, சாபநிவர்த்தி மந்திரம் சொல்லி பிடுங்கி வந்து உரிய மந்திர உருவேற்றி மேற்பட்ட அஷ்டகர்ம செயல்களை செய்ய அனைத்தும் ஜெயமாகும்.
http://tamiloccultscience.blogspot.in
..

ஆத்ம ஞானம்

ஒரு குருவிடம் சென்ற சிஷ்யன், தனக்கு ஆத்ம ஞானம் வேண்டும் என்பதற்காக அவரிடம் வந்துள்ளதாகக் கூறினான். சிஷ்யன் மிகவும் பவ்யமாகவே நின்று கொண்டு இருந்தான். அவனை ஏற இறங்கப் பார்த்த குருவானவர் சரி என அவனை தனது குருகுலத்தில் சேர்த்துக் கொண்டார். முதலில் அவனை நதியில் குளித்து விட்டு வருமாறு கூறினார். அவன் வரும்போது ஆஸ்ரமத்து வேலைக்காரியை அவன் எதிரில் துடப்பத்தினால் பெருக்கிக் கொண்டு இருக்குமாறு கூறினார்.
குளித்து விட்டு வந்த சிஷ்யனும் தன் எதிரில் பெருக்கிக் கொண்டு இருந்த வேலைக்காரியின் முகத்தைப் பார்த்து விட்டு, 'சனியன் இத்தனை அழகாக இருந்தும் நல்ல காரியத்துக்குப் போகும்போது அபசகுனம் போல பொட்டு வைத்துக் கொள்ளாமல் எதிரில் வந்து விட்டாள்' என மனதில் திட்டிக் கொண்டே சென்றான். குருவின் முன்னால் போய் நின்றதும், அவர் அவனை ஒரு வருடம் மாட்டுத் தொழுவத்தை அலம்பும் வேலையை செய்து விட்டு வருமாறும், அதற்குப் பின்னரே ஞான மார்க்கத்தைப் போதிக்க முடியும் என்றும் கூறி அவனை மாட்டுத் தொழுவத்துக்கு அனுப்பினார். முகம் கோணாமல் சிஷ்யனும் மாட்டுத் தொழுவத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டான். அது முதல் அவன் மனதில் மாடுகளைத் தவிர வேறு எதுவுமே அவன் கண்களுக்கு தெரியவில்லை என்ற அளவு மனம் பக்குவமாகியது.
ஒரு வருடம் கழிந்தது. அவனை அழைத்த குருவின் முன்னால் போனவனை மீண்டும் ஒருமுறை நதியில் குளித்து விட்டு தன்னிடம் வருமாறு அனுப்பினார். இந்த முறை அவன் குளித்து விட்டு வரும்போது அந்த வேலைக்காரியை நல்ல குங்குமத்தை இட்டுக் கொண்டு அவன் வரும் வழியில் ஒரு மூலையில் துடப்பத்துடன் நிற்குமாறு கூறினார். குளித்து விட்டு வந்த சிஷ்யனும் ஒரு மூலையில் துடப்பத்தை வைத்துக் கொண்டு கொண்டு நின்று இருந்த வேலைக்காரியின் முகத்தை பார்த்தான். 'இந்த முறை அழகாக குங்குமம் இட்டுக் கொண்டு இருக்கிறாளே, ஆனால் நல்ல சிவப்பு வண்ணத்தில் அதை இட்டுக் கொண்டு இருக்கலாம். அதற்கு மாறாக ஏன் பழுப்பு நிற சிவப்புக் கலரில் குங்குமத்தை இட்டுக் கொண்டு வந்துள்ளாள் ' என நினைத்தவாறே குருவின் முன்னால் போய் நின்றான்.
குருவின் முன்னால் போய் நின்றதும், அவர் அவனை ஒரு வருடம் ஆஸ்ரமத்துக்குத் தேவையான விறகுகளை பொறுக்கிக் கொண்டு வரும் பணியை செய்து விட்டு வருமாறும், அதற்குப் பின்னரே ஞான மார்க்கத்தைப் போதிக்க முடியும் என்றும் கூறி அவனை விறகு பொறுக்கும் வனத்துக்குள் அனுப்பினார். முகம் கோணாமல் சிஷ்யனும் அந்தப் பணியில் ஈடுபட்டான். அப்போது ஒருநாள் அவன் வனத்தில் இருந்த இன்னொரு முனிவரைக் கண்டான்.
அவர் முன்னிலையில் அமர்ந்து கொண்டு இருந்த சில சிஷ்யர்களுக்கு அவர் எதோ ஒரு கதையைக் கூறிக் கொண்டு இருந்ததைக் கண்டு, அந்தக் கதையை தானும் கேட்க எண்ணினான். தூரத்தில் மறைந்தவாறு அமர்ந்து கொண்டு அவர் கூறிக் கொண்டு இருந்தக் கதையைக் கேட்கத் துவங்கினான். அந்த முனிவர் கூறிக் கொண்டு இருந்தக் கதை இதுதான்.
''முன்னர் ஒரு காலத்தில் சௌபாரி முனிவர் (பாகவதம், விஷ்ணு புராணம், ஸ்கந்த புராணம் என அனைத்திலும் அவரைக் குறித்த பெருமையான செய்திகள் உள்ளன) என்பவர் இருந்தார். அவர் மிகவும் பிரபலமானவர். அவர் மீது அனைத்து ராஜா மகாராஜாக்களும் பெரும் மதிப்பு வைத்து இருந்தார்கள்.
ஒருமுறை அவர் தான் அதீத ஞானம் பெற வேண்டும் என்பதற்காக யமுனை நதிக் கரையில் சென்று தவத்தில் அமர்ந்து கொண்டார். தினமும் காலை யமுனையில் குளித்து விட்டு தவத்தில் அமர்வார். தினமும் அந்த நதியில் மீன்கள் ஓடியாடும். பலர் அங்கு வந்து குளிப்பார்கள். அருகில் வனம் இருந்ததினால் சில மிருகங்களும் அங்கு வரும். ஆனால் அவர் எதையும் பார்க்க மாட்டார். குளிப்பார், திரும்பிக் கூடப் பார்க்காமல் தவம் செய்யக் கிளம்பிச் சென்று விடுவார். பல காலம் அப்படி தவம் இருந்தவர் ஒருநாள் காலையில் நதியில் குளிக்கச் சென்றபோது, வழியில் அதில் இரண்டு மான்கள் சல்லாபித்துக் கொண்டு இருந்ததைக் கண்டார். அன்றுவரை எதையுமே ஒரு பொருட்டாகப் பார்க்காதவர், மான்கள் இரண்டு சல்லாபிப்பதைக் கண்டதும், ஒரு ஷணம் நின்று அவற்றைப் பார்த்தார்.
மீண்டும் குளிக்கக் கிளம்பியவரின் மனதில் அந்தக் காட்சி தொடர்ந்து கொண்டு இருக்க, நதியில் குளிக்க இறங்கியவர் எதேர்சையாக அங்கு குளிக்க வந்த மண்டாத்தா என்ற மன்னனின் ஐம்பது மகள்களையும் கண்டார். அவர்களைக் கண்டதும், மான்கள் நினைவுக்கு வந்தன. மேலாடை பாதியுடன் மட்டுமே குளித்துக் கொண்டு இருந்தவர்களின் உடல் அழகில் மனதை பறக்க விட்டார். அவர் மனதிலும் காமம் பற்றி எரிந்தது. தான் வந்த வேலையை மறந்தார். ஒரு ஷணச் சம்பவம், அவர் ஆயுளைப் பற்றிக் கொண்டு விட்டது.
அவசரம் அவசரமாக குளித்தவுடன் அந்த முனிவர் நேராக மன்னன் மண்டாத்தாவிடம் சென்று அவரது அனைத்து மகள்களையும் தான் மணக்க விரும்புவதாகக் கூற மன்னன் துணுக்குற்றான். அத்தனை உயர்ந்த முனிவரா திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்?. அதுவும் தன்னுடைய ஐம்பது பெண்களையுமே மணம் செய்து கொள்ள விரும்புகிறாரே, அது முறையா என திகைத்தான். ஆனால் வந்துள்ளவரோ மாபெரும் முனிவர். அவரிடம் என்ன கூறுவது? பெரும் முனிவருக்கு ஐம்பது பெண்களையும் மணமுடித்துக் கொடுப்பதா என்று யோசனை செய்தவன், வேறு வழியே இல்லாமல் தான் தனது அனைத்துப் பெண்களையும் அழைப்பதாகவும், அவர்களில் யார் அவரை எந்தக் குறையையுமே கூறாமல் விரும்புகிறார்களோ அவளை அவர் மணந்து கொள்ளலாம் என்றும் கூறி விட்டார். ஆனால் அவர்கள் ஏதாவது குறையைக் கூறினால் அதற்கு அவர் கோபம் அடைந்து சாபமிடக் கூடாது எனவும், அப்படி கோபத்தினால் சாபமிட்டால் , அந்த சாபம் அந்த முனிவரையே போய் சேரும் என்றும் சத்தியம் பெற்றுக் கொண்டு மறுநாள் காலை அதற்கான ஏற்பாடுகளை செய்வதாகக் கூறினார்.
அன்று இரவு மன்னன் தனது அனைத்து மகள்களிடமும் அந்த முனிவரின் ஆசையைக் கூறி விட்டு, அவர்கள் யாருமே அவரை ஏற்றுக் கொள்ளாமல் ஏதாவது குறையைக் கூற வேண்டும் என்றும், அப்போதுதான் அவருக்கு அவர்களை மணமுடித்துக் கொடுக்க மறுக்க முடியும் என்றும் அறிவுரைக் கொடுத்தார். மறுநாள் முனிவர் வந்தார். ஒவ்வொரு பெண்ணாக அவர் எதிரில் வந்தார்கள். முனிவராயிற்றே, அவருக்கா அவர்களின் மனதை புரிந்து கொள்ள முடியாது. வந்தவர்கள் தன்னிடம் உள்ளக் குறைகளைக் கூறும் முன்னரே வந்தவர்களின் எதிரில் தன்னை பேரழகு மிக்க இளைஞன் போல மாயையாகக் காட்ட ஒவ்வொருவரும், அவருடைய அதி சுந்தர வதனத்தைக் கண்டு அந்த உருவத்தின் மீது காமமுற்று, 'இவரை மணக்க சம்மதம்' என்று கூறிக் கொண்டே சென்று விட்டார்கள். ஆகவே வேறு வழி இன்றி மன்னன் அவருக்கு ஐம்பது பெண்களையும் மண முடித்துக் கொடுக்க வேண்டி இருந்தது.
அந்த முனிவரும் அவர்களுடன் பல ஆண்டுகள் உல்லாசமாக இருந்து நூறு பிள்ளைகளைப் பெற்றெடுத்துக் கொண்டார். அதன் பின் அவர் மனதில் மெல்ல மெல்ல காமம் அழியத் துவங்கியது. தான் செய்த பிழையை நினைத்து வருந்தினார். ஆனால் அதன் பின் அவருக்கு தவம் செய்யச் சக்தி இன்றி போய் விட்டது. ஆனாலும் அவர்கள் அனைவரையும் துறந்து விட்டு வனத்துக்குச் சென்று தனிமையில் அமர்ந்து கொண்டு தவம் செய்ய முனைந்து தோல்வி கண்டு மரணம் அடைந்தார். ஆகவே நாம் எந்த காரியத்திற்காக நம்ம அர்பணித்துக் கொண்டாலும், அதில் முழுமையாக கவனம் செலுத்த வேண்டுமே தவிர, நம் மனதில் வேறு எந்த சிந்தனையுமே இருக்கலாகாது'' என்று அவர் கூறிய கதையைக் கேட்டதும் தான் செய்த தவறை சிஷ்யன் உணர்ந்தான்.
அது முதல் வனத்தில் இருந்து விறகுகளை பொறுக்கிக் கொண்டு ஆஸ்ரமத்துக்குச் சென்றவன் மனதில் எந்த பிற நினைவுகளுமே எழவில்லை. இப்படியாக ஒரு வருடம் கழிந்தது. அவனை அழைத்த குரு மீண்டும் ஒருமுறை அவனை நதியில் குளித்து விட்டு தன்னிடம் வருமாறு அனுப்பினார். இந்த முறை அவன் குளித்துவிட்டு வரும்போது அந்த வேலைக்காரி நல்ல குங்குமத்தை இட்டுக் கொண்டு, தன் உடம்பின் பல பாகங்கள் தெரியும் வகையில் அரைகுறை ஆடையுடன் அவன் வரும் வழியில் ஒரு மூலையில் நிற்குமாறு கூறினார். ( வேலைக்காரி என்பது அந்த குரு தன்னிடம் வந்திருந்த சிஷ்யனை சோதிக்க எண்ணி மாயையாகப் படைத்த உருவமே தவிர உண்மையில் மனித உருவில் அங்கு யாருமே இல்லை). சிஷ்யனும் குளித்து விட்டு வந்தான். வரும் வழியில் அவளை அந்தக் கோலத்தில் பார்த்தவன் மனதில் விறகுகள் மட்டுமே தெரிந்தன.குருவிடம் சென்று நின்றதும், உன்னை வேறு எதற்காகவோ வரச் சொன்னேன்.
சரி நாளைக்கு குளித்து விட்டு வா என்று மீண்டும் திருப்பி அனுப்பி விட்டார். இப்படியே சில நாட்கள் தொடர்ந்தன. குளித்து விட்டு வந்தவனின் கண்களில்படுமாறே தினமும், அந்த வேலைக்காரியும் அரைகுறை உடைகளுடன் நின்று கொண்டு இருந்தாள். ஆனால் அவனது மனதில் எந்த சலனமும் தோன்றவில்லை. அவன் மனது அத்தனை பக்குவமாகி இருந்தது. 'குரு அழைத்துள்ளார் என்ற நினைவு மட்டுமே இருந்தது'. சில நாட்கள் இப்படியே கழிய ஒரு நாள் குரு அவனைப் பார்த்துக் கூறினார் ' சிஷ்யா, உன் சேவையை எண்ணி மகிழ்ந்தேன். நீ ஏற்கனவே ஞானத்தில் பாதியைக் கடந்து விட்டாய். ஆகவே மீதி பாதியை இன்று முதல் உனக்கு போதனையைத் துவக்குகிறேன்' எனக் கூறி விட்டு அன்று முதல்அவனை தனது சீடனாக ஏற்றுக் கொண்டு ஞானோபதேசம் செய்தார்.
நீதி: அலை பாயும் மனது, சூறாவளியில் படபடக்கும் ஆடையைப் போன்றது. மனத்தைக் கட்டி வைத்தால் வாழ்வில் வெற்றி நிச்சயம்.
நன்றி சாந்திப்பிரியா