Monday, September 8, 2014

திருமூலர்

இவர் கைலாய பரம்பரையைச் சேர்ந்தவர். சித்தர் மரபில் இவரே முதல் சித்தர் எனக் கருதப்படுகின்றார். கைலாயத்தில் நந்தியின் உபதேசம் பெற்றவர். கைலாயத்தில் இருந்து பொதிகைக்கு வரும்போது திருவாவடுதுறையில் பசுக்களின் துயரினை நீக்க, மூலரின் உடலில் புகுந்து வாழ்ந்தவர். சித்தர்களில் முதலாமவரும் முதன்மையானவருமான சிவபெருமானிடமும் நந்தீசரிடமும் உபதேசம் பெற்றவர். இவர் வேளாண்குலத்தில் புரட்டாசி மாதம் அவிட்டம் நட்சத்திரம் 3ஆம் மாதத்தில் கும்ப ராசியில் பிறந்தவர் என்று போகர் 7000 நூலில் கூறப்பட்டுள்ளது. திருமூலர் மாபெரும் தவயோகி. சிவயோகசித்தி எல்லாம் பெற்றவர். “ஒன்றே குலம் ஒருவனே தேவன்,” என்றருளிய மகா ஞானி ஆவார். இவர் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர். சதுரகிரி மலை பல சித்தர்கள் தங்கித் தவம் புரிந்த இடமாகக் கருதப்படுகிறது. சதுரகிரி மலையின் விசேஷத் தன்மை பற்றி நந்தீசுவரர் தான் திருமூலருக்கு எடுத்துரைத்ததாகக் கூறப்படுகிறது. நான்கு வேதங்களும் ஒன்று சேர்ந்து ஒரு உருவமாக அமைந்ததால்தான் இதற்கு சதுரகிரி என்று பெயர் வந்ததாகத் திருமூலரின் சீடரான காலாங்கிநாதர் வருணிக்கிறார். இவரது திருவாக்கில் மலர்ந்த தமிழ் மந்திர தந்திரம் தான் திருமந்திரம். இதனை 3000 பாடல்களாக 9 தந்திரமாக திருமூலர் மொழிந்துள்ளார் எனப்படுகிறது. இவற்றை 3000 ஆண்டு தவமிருந்து ஆண்டுக்கு ஒரு பாட்டாகப் பாடினார். இவர் சுந்தர நாதன் என்ற பெயருடன் முதல் தடவை தென்னாட்டுக்கு வந்து தில்லையில் தப்பிலாமன்றில் பதஞ்சலி வியாக்கிரமர்களுடன் தனிக்கூத்து கண்டது 8000 வருடங்கள் முன்னர் ஆகும். இது இராமாயண காலத்துக்குச் சமமானதாகும்.
திருமூலர் வைத்தியம், யோகம், ஞானம் என்ற முப்பெருந் துறைகளைப் பாடியுள்ளார். நந்தி அருளாலே மூலனை நாடினோம் (திருமந்திரம்-169) என்ற பாடல் மூலம் இதனை அறிந்து கொள்ளலாம். இவர் மூலனின் உடலில் இருந்தமையால் திருமூலர் எனப் பெயர் பெற்றார் என்பர். இவருக்குச் சுந்தரர் என்ற பெயரும் இருந்துள்ளது. இவர் நெடுங்காலம் தவத்தில் இருந்து ஆண்டுக்கொரு பாடலாக மூவாயிரம் பாடல்களைப் பாடினார் என்பர். இவர் காலம் கி.பி.ஐந்தாம் நூற்றாண்டு. இவர் சீடர்களில் காலாங்கியும், கஞ்சமலைச் சித்தரும் இன்றியமையாதவர்கள்.
இவரது சமாதி சிதம்பரத்தில் உள்ளதாகக் குறிப்பிடுகிறார், போகர் என்னும் சித்தர். திருமூலர் இயற்றியவை:
திருமந்திரம்,
வைத்தியம் ஆயிரம்,
கருக்கிடை வைத்தியம் 600,
பெருங்காவியம் 1600 என்பனவாகும்.
திருமந்திரம்,யோகத்தின் படிநிலைகளையும்,சித்தாந்த வேதாந்தக் கருத்துகள்,மந்திர,தந்திர முறைகளையும் விளக்கியமைக்கிறது.
திருமந்திரம் சைவத் திருமுறைகளில் பத்தாவதாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. இவரைப் பற்றி,திருத்தொண்டர் புராணம், திருத்தொண்டர் திருவந்தாதி,சதுரகிரித் தலபுராணம் போன்ற நூல்கள் குறிப்பிடும். சித்தர்களில் முதன்மையானவர். சிவபெருமானிடமும், நந்தீசரிடமும் உபதேசம் பெற்றவர். அஷ்ட்டமா சித்திகள் அனைத்தும் கைவரப்பெற்றவர்.
இவர் அகத்தியரிடம் கொண்ட அன்பால் அவருடன் சிலகாலம் தங்குவதற்கு எண்ணி, தான் வாழ்ந்த திருக்கைலையிலிருந்து புறப்பட்டு பொதிகை மலையை அடையும் பொருட்டு தென் திசை நோக்கிச் சென்றார். செல்லும் வழியில் திக்கேதாரம், பசுபதி, நேபாளம், அவிமுத்தம் (காசி) விந்தமலை, திருப்பருப்பதம், திருக்காளத்தி, த்ருவாலங்காடு, காஞ்சி ஆகிய திருத்தலங்களைத் தரிசித்து ஆங்காங்கே இருந்த சிவயோகிகளைக் கண்டு அளவளாவி மகிழ்ந்தார். பிறகு தில்லையில் இறைவன் அற்புதத் திருக்கூத்தாடியருளும் திருநடனம் கண்டு மகிழ்ந்த சிவயோகியார், திருவாவடுதுறை இறைவனை வழிபட்டுச் செல்லும் போது காவிரிக் கரையிலுள்ள பொழிவினிடத்தே பசுக் கூட்டங்கள் கதறி அழுவதனைக் கண்டார். அந்தணர்கள் வாழும் சாத்தனூரிலே ஆநிரை மேய்க்கும் ஆயனாகிய மூலன் என்பவன் அங்கு தனியே வந்து பசுக்களை மேய்ப்பவன். அவன் தன் விதி முடிந்த காரணத்தால் உயிர் நீங்கி இறந்து கிடந்தான். மூலன் இறந்ததைக் கண்ட பசுக்கள் அவனது உடம்பினைச் சுற்றிச் சுற்றி வந்து வருந்தி கண்ணீர் விட்டன. பசுக்களின் துயர்கண்ட சிவயோகியார்க்கு அவற்றின் துன்பம் துடைக்க எண்ணம் உண்டாயிற்று. எனவே தம்முடைய உடலை மறைவான இடத்தில் கிடத்திவிட்டு, கூடு விட்டு கூடு பாய்தல் (பரகாயப் பிரவேசம்) என்னும் பவன வழியினாலே தமது உயிரை அந்த இடையனது உடம்பினுள் புகுமாறு செலுத்தித் திருமூலராய் எழுந்தார். மூலன் எழுந்ததைக் கண்ட பசுக்கள் மகிழ்ந்து அன்பினால் அவரது உடலினை நக்கி, மோந்து, களிப்போடு துள்ளிக் குதித்தன. திருமூலர் மனம் மகிழ்ந்து பசுக்களை நன்றாக மேய்த்தருளினார். வயிரார மேய்ந்த அப்பசுக்கள் காவிரியாற்றின் துறையிலே இறங்கி தண்ணீர் பருகி கரையேறி சாத்தனூரை நோக்கி நடந்தன. அவற்றைத் தொடர்ந்து சென்ற சிவயோகியார் பசுக்கள் தத்தம் வீடுகளுக்குச் சென்றதைக் கண்டார். அதே சமயம் வீட்டிலிருந்து வெளியே வந்த மூலனின் மனைவி, மூலன் வடிவிலிருந்த சிவயோகியரை வீட்டிற்கு அழைத்தாள். திருமூலரோ தான் அவளுடைய கணவன் அல்லன் என்றும், அவன் இறந்துவிட்டான் என்றும் கூறினார். அவள் அவ்வூர்ப் பெரியவர்களிடம் முறையிடவும், மூலர் தான் ஏற்றிருந்த உடலிலிருந்து விலகி தன் ஒரு சிவயோகியார் என்பதை நிருபித்தார். மறுபடியும் மூலனின் உடம்பில் புகுந்தார். இதைக்கண்ட சான்றோர்கள் மூலனின் மனைவியைத் தேற்றி ஆறுதல் கூறிவிட்டு சென்றனர். சிவயோகியர் தன் உடலைத் தேடிச் சென்று அது கிடைக்காததால் மூலனின் உடலிலேயே தங்கி திருவாவடுதுறைத் திருக்கோவிலை அடைந்தார். யோகத்தில் வீற்ற்ருந்து, நன்னெறிகளை விளக்கும் ‘திருமந்திரம்’ எனும் நூலை ஓராண்டுக்கு ஒரு பாடலாக மூவாயிரம் பாடல்களைப் பாடியருளினார். இவரது வரலாற்றை சேக்கிழாரடிகள் பெரியபுராணத்தில் விரிவாகக் கூறியுள்ளார்.
அகத்தியர், 12 காண்டத்தில் திருமூலர் இயற்றியதாக பின்வரும் சில நூல்கள் பட்டியலிடப்படுகிறது.
1. திருமூலர் காவியம் (கிரந்தம்) – 8000
2. திருமூலர் சிற்ப நூல் – 1000
3. திருமூலர் சோதிடம் – 300
4. திருமூலர் மாந்திரிகம் – 600
5. திருமூலர் சல்லியம் – 1000
6. திருமூலர் வைத்திய காவியம் – 1000
7. திருமூலர் வைத்திய கருக்கிடை – 600
8. திருமூலர் வைத்திய சுருக்கம் – 200
9. திருமூலர் சூக்கும ஞானம் – 100
10. திருமூலர் பெருங்காவியம் – 1500
11. திருமூலர் தீட்சை விதி – 100
12. திருமூலர் கோர்வை விதி – 16
13. திருமூலர் தீட்சை விதி – 8
14. திருமூலர் தீட்சை விதி – 18
15. திருமூலர் யோக ஞானம் – 16
16. திருமூலர் விதி நூல் – 24
17. திருமூலர் ஆறாதாரம் – 64
18. திருமூலர் பச்சை நூல் – 24
19. திருமூலர் பெருநூல் – 3000
திருமூலர் ஞானோபதேசம் 30
திருமூலர் நடுவணை ஞானம் 30
திருமூலர் ஞானக் குறி 30
திருமூலர் சோடச ஞானம் 16
திருமூலர் ஞானம் 11
திருமூலர் குளிகை 11
திருமூலர் பூஜாவிதி 41
திருமூலர் வியாதிக் கூறு 100
திருமூலர் முப்பு சூத்திரம் 100... என்ற நூல்களும் இயற்றியதாக சொல்லப் படுகிறது.போன்றவைகள் திருமூலரின் 16 சீடர்களில் காலங்கி சித்தரும், கஞ்சமலைச் சித்தரும் முக்கியமானவர்கள். பாண்டிய மன்னனின் ஆணைப்படி திருமூலர் சமாதியை மூலவராகக் கொண்டு, கருவூரர் சிதம்பரம் கோயிலை அமைத்தார். திருமூலர் லிங்க வடிவமாக எழுந்தருளிய இடம் சுயம்பு லிங்கமாக எழுந்தருளிய இடமாக கற்பிக்கப்பட்டு உமா பார்வதி என்ற பெயரில் ஒரு அம்மன் சந்நிதியும் இக்கோயிலில் சேர்த்துவிட்டார்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.யோக மார்க்கமும், ஞானத் தேடலும் உள்ளவர்கள் திருமந்திரத்தைப் பற்றி அறியாமல் இருக்க முடியாது, திருமந்திரத்தை அறிந்த அளவு அதை இயற்றிய திருமூலரைப் பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை. திருமூலர் பற்றி பல கதைகள் வழக்கத்திலுள்ளன. அதில் எதை நம்புவது என்பதில் ஐயம் எழுவது இயற்கையே. ஆகவே அது பற்றிய தேடல்களை விட்டு விடலாம்.
திருமூலர் என்ற ஒரு சித்தர் வாழ்ந்தது உண்மை, அது போதும்.. இவர் நந்தீசரின் சீடராவார். இவரால் எழுதப்பட்ட மூவாயிரம் பாடல்களின் தொகுப்பை "மந்திர மாலை" என்று அழைத்தனர். பிற்காலத்தில் அவற்றை ஆராய்ந்த சான்றோர் அதை திருமந்திரம் என்று பெயரிட்டு ஒன்பது பகுதிகளாக வகுத்தனர். திருமந்திரம் என்று அழைக்கப்படும் அந்த நூலில் பல யோக ரகசியங்களையும், வாழ்க்கைத் தத்துவங்களையும் சொல்லியிருக்கிறார். தாமறிந்த உண்மைகள் உலகத்தவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தைக் கொண்டிருந்தார் இவர்.
"யான்பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம் தான்பற்றப்
பற்றத் தலைப்படும் தானே" - திருமந்திரம்.
இவர் மேலை சிதம்பரம் என்னும் இடத்தில் சமாதி அடைந்ததாக சொல்லப் படுகிறது.
ஸ்ரீதிருமூலர் சித்தரின் காயத்ரி
ஓம் ககன சித்தராய வித்மஹே பிரகாம் சொரூபினே தீமஹி தந்நோ திருமூலராய ப்ரசோதயாத்
1) ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
2) யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்
3) அன்பே சிவம் ஆகியவைகளே ஆகும்.
திருமந்திரத்தில் ஐந்து கரத்தினை என்று தொடங்கும் விநாயகர் வணக்க பாடல் தற்காலத்தில் தான் திருமூலர் திருமந்திரம் நூலில் சேர்க்கப்பட்டது, அவர் காலத்தில் சைவம் என்று கொண்டால் சிவனை அன்றி வேறொரு தெய்வத்தை வைத்து எந்த ஒரு காரியங்களையும், இலக்கியங்களையும், நூல்களையும் தொண்டங்கியது இல்லை. விநாயகரின் வழிபாடு பிற்காலத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான சிறுத்தொண்டர் என்று போற்றபடுகிற பரஞ்சோதி என்கிற மன்னன் வாதாபி வரை சென்று அங்கு போரிலே வெற்றி கொண்டு அந்த பிராந்தியத்திலே அவர்கள் வணங்கும் தெய்வமாகிய கணபதியை தமிழகத்துக்கு திரும்பும்பொழுது கொண்டுவந்தார் என்பதும், அப்பொழுது விநாயகரின் வயற்று பகுதி இப்படி தொந்தியாக இல்லாமல் தட்டையாக இருந்தது என்பதற்கு சான்றாக இன்றளவும் ஒன்று திருவாரூர் தியாகேசர் ஆலயத்திலும், மற்றொன்று இங்கலாந்தில் இன்று அருங்காட்சியத்திலும் ஒன்றாக சாட்சி கூறுகிறது. இவரது திரு நூலுக்கு தமிழ் மூவாயிரம் என்ற பெயரே முதலில் இருந்தது, அந்த நூலில் மிக நிரம்பிய மந்திரங்களும், சில தந்திரங்களும், நம் மனித ஸ்தூல சரீரத்துக்கு தேவையான எல்லாவற்றையும் விளக்கியுள்ளபடியால், பின்னர் அந்த நூல் "திருமூலர் திருமந்திரம்" என்று வழங்கப்பட்டது. இவரது வரலாற்றை சேக்கிழாரடிகள் பெரியபுராணத்தில் விரிவாகக் அறுபத்து மூவர் பட்டியலிலும் சேர்த்து பெருமைப்படுத்தி கூறியுள்ளார். அகத்தியர், 12 காண்டத்தில் திருமூலர் இயற்றியதாக பின்வரும் சில நூல்கள் பட்டியலிடப்படுகிறது. கிழே கொடுக்கப்பட்டுள்ள பட்டியல் வலைத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டது பின்னர் வந்த பாண்டிய மன்னனின் ஆணைப்படி திருமூலர் சமாதியை மூலவராகக் கொண்டு, கருவூரர் சிதம்பரம் கோயிலை அமைத்தார். திருமூலர் லிங்க வடிவமாக எழுந்தருளிய இடம் சுயம்பு லிங்கமாக எழுந்தருளிய இடமாக கற்பிக்கப்பட்டு உமா பார்வதி என்ற பெயரில் ஒரு அம்மன் சந்நிதியும் இக்கோயிலில் சேர்த்துவிட்டார்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
திருமூலரின் திருமந்திரம்.
Picture
திருமூலரின் திருமந்திரம் 63 நாயன்மார்களுள் ஒருவராகவும், பதினெண் சித்தர்களுள் ஒருவராகவும், திருவள்ளுவரின் குருவாகவும் அறியப்படும் திருமூலரால் இயற்றப்பட்டது திருமந்திரம் ஆகும். இந்நூல் சைவ திருமுறைகளுள் பத்தாம் சைவ திருமுறையாக போற்றப்படுகிறது. திருவாவடுதுறையிலிருந்தவாரே இந்நூல் இயற்றப்பட்டதாக வரலாற்றில் காணக்கிடைக்கிறது. திருமூலர் இயற்றிய இத்திருமந்திரம் ஒன்பது தந்திரங்களில்(இயல்கள்) மூவாயிரம் பாடல்களை உடையது. 'மூலன் உரை செய்த மூவாயிரந்தமிழ் ஞாலம் அறியவே நந்தியருளது' என்ற திருமூலரின் வாக்கினாலேயே இதனை அறியலாம். வேறு பெயர்கள்: திருமந்திர மாலை, மூவாயிரந்தமிழ் என்பன திருமந்திரத்தின் வேறு பெயர்கள் ஆகும். நூல் பெருமை: இந்நூ்ல பண்டைய இந்திய சித்தர்களின் அறிய கண்டுபிடிப்புகளையும் வாழ்வியல் உண்மைகளையும் விளக்குகிறது. வேதம், ஆகமம் ஆகிய இரண்டிற்கும் இத்திருமந்திரம் அரிய விளக்கமாய்ப் பொலிந்து விளங்குகின்றது. மேலும் இந்தூல் சைவ ஆகமம் எனறு போற்றப்படும் பெருமையினை உடையது. இந்நூ் இறைவனை துதி செய்வதோடு நில்லாமல் பதி பசு பாசம் என்பனவற்றின் இணைப்பையும் உயர்ந்த முறையில் வாழ்வாங்கு வாழ உதவும் நல்முறைகளை விளக்கியும் நல் வாழ்க்கை வழிகாட்டி நூலாகவும் சாத்திர நூலாகவும போற்றப்படுகிறது பண்டைய பாரத சித்தர்கள் கூறிய மனித வளர்ச்சிக்கு உகந்த யோகம் தியானம் குண்டலினி யோகம் மருத்துவம் நல் ஒழுக்கம் போன்றவற்றை விளக்கும் அரிய நூலாகும் அரிய பொருளை எளிய சொற்களால் அனைவரது உள்ளத்தில் பதியும்படி கூறுதல் திருமூலரின் சிறப்பு இயல்பாம். தோத்திரத்திற்குத் திருவாசகம் சாத்திரத்திற்குத் திருமந்திரம் எனச் சான்றோர் கூறுவர். மேலும் சிவன் அன்பு வடிவானவன் என்னும் அரிய உண்மையினை கூறும் திருமூலரின் இத்திருமந்திரமே சைவ சித்தாந்தத்தின் முதல் நூலாகும்.எல்லாம் வல்ல பரம் பொருளாகிய இறைவருளால் பல ஆயிரம் ஆண்டுகள் யோக நிலையில் இருந்து தவம் செய்தவர். யோகியாகவும் எல்லாம் வல்ல சித்தராகவும், பலகலை அறிந்த ஞானியாகவும், அருள் நிறைந்த நாயன்மாராகவும் விளங்கினார்! இறைவன் பெரிய கருணையினால், உலகுக்கு அளித்த ஆகமப் பொருளை அருந்தமிழ் மறையாய் மூவாயிரம் மந்திரங்களில் நமக்குத் தந்துள்ளார்.
திருமந்திரம் 10ஆம் திருமுறை. தோத்திரமாகவும், சாத்திரமாகவும், யோகநூலாகவும், ஞானநூலாகவும், தந்திர நூலாகவும், மந்திரங்கள் அமைந்த பாராயண நூலாகவும், சமய, சமூக, ஒருமைப்பாட்டு நல்லிணக்க நூலாகவும் திகழ்ந்து உலகுக்கு உயிராக விளங்குகிறது திருமந்திரம். "இறைவனே தமிழொடு - வடமொழியிலும், ஆரியத்தொடு தமிழிலும் உடனே சொல்லிக் காரிகையார்க்குக் கருணை செய்தானே" என்கிறார் முத்தமிழ் வேதம் தத்துவம் சதாசிவம். திருமூலர் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர். இவர் இயற்பெயர் சுந்தரர். தமிழகத்தில் பொதிகை மலையில் - அகத்தியர் - தமிழ்ச் சங்கத்தில் உலக நூல்களைக் கற்றார். பின், கயிலைக் குருகுலம் சென்று, ஞான நூல்களான அருமறைகள், ஆகமங்களை நந்தியெம் பெருமானிடம் கற்றார். நந்தி அருளால் 'நாதன்' என்ற பட்டம் பெற்று, சுந்தர நாதர் ஆகித் தவம் செய்தார்.
கயிலையில் இவருடன் பாடங்கேட்டவர்கள்: சனகர் - சனந்தனர்- சானாதனர் - சனற்குமாரர், பதஞ்சலி, வியாக்கிரபாதர், சிவயோக மாமுனிவர் ஆகிய ஏழுபேருடன், தானும் உடனிருந்து கற்றதாக அகச்சான்று கூறுகிறார். பதஞ்சலி - வியாக்கிர பாதருடன் இவர் தில்லைக்கு வந்து திருக்கூத்து தரிசனம் செய்தார். மீண்டும் கயிலை சென்றார். பதஞ்சலி வியாக்கிர பாதர் இருவரும் தில்லையிலே ஆசிரமங்கள் அமைத்துக் தங்கிவிட்டனர். தில்லைக் கோபுரத்தில் - திருமூலர்சிலையை காணலாம். இரண்டாவது முறையாக அகத்தியரைக் காண பொதிகை நோக்கி வருகிறார். 'குறு முனிபால் உற்றதொரு கேண்மையினால் உடன் சில நாள் உறைதற்கு, நற்றமிழின் பொதியமலை நண்ணுதற்கு வழிக் கொண்டார்' என்கிறார் சேக்கிழார். பழமைக்குப் பழமையாகவும், புதுமைக்குப் புதுமையாகவும், விளங்குபவர் இறைவன் இதனை மாணிக்கவாசகர், முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளே! பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே! என்கிறார் மாணிக்கவாசகர் உடம்பார் அழியின் உயிரால் அழிவர் திறம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த்தேனே இந்தப் பாடல் இடம்பெற்றுள்ள திருமந்திரம் என்ற ஒப்பற்ற தத்துவ நூலை இயற்றியவர்தான் திருமூலர். “காயமே இது பொய்யடா... வெறும் காற்றடைத்த பையடா” என்ற மாயாவாதத்துக்கு எதிராக, அறிவு பூர்வமான யதார்த்த வாதத்தை முன்வைத்த சிந்தனைச் சித்தர்தான் திருமூலர். சங்கன்னர் என்ற சித்தரின் அவதாரமாக கருதப்படும் திருமூலர், சிதம்பரம் தில்லை நடராஜரின் சன்னதியில், நீண்ட காலம் நிட்டையில் அமர்ந்துதான், உலகுக்கு மிகச் சிறந்த தத்துவ நூல்களை வழங்கியுள்ளார். உடலை வருத்தித்தான் ஞானத்தை அடையவேண்டும் என்ற கருத்தை மறுத்த அவர், பலவீனமான உடலை வைத்துக்கொண்டு வலிமையான ஞானத்தை அடைய முடியாது என்பதையும் உறுதிப்படக் கூடியுள்ளார்.
இவர் எழுதிய நூல்களில், திருமந்திரம் தலையாயது எனினும்,
திருமூலர் அறுநூற் றொன்று,
திருமூலர் வைத்தியம்,
திருமூலர் ஞானம்,
திருமூலர் வழலைச் சூத்திரம்,
திருமூலர் பல திரட்டு,
திருமூலர் வாதம் இருபத்தொன்று போன்ற மேலும் பல அரிய நூல்களையும் எழுதியுள்ளர். உடல் சார்ந்த தத்துவக் கோட்பாட்டை நமது ஆன்மீக மரபில் அழுத்தமாகப் பதிய வைத்தவர் திருமூலர்தான். உள்ளம் பெரும் கோயில் ஊனுடம்பு ஆலயம் வள்ளல் பிரானுக்கு வாய்கோபுர வாசல் தெள்ள தெளிந்தமாருக்கு சீவன் சிவலிங்கம் கள்ளப் புலன் ஐந்தும் காணா மணி விளக்கே உடலும், அதில் திரண்டுள்ள ஊனும் எம்பெருமான் கோயில் என்று சொல்லும் திருமூலர், வாயைக் கோபுரம் என்றும், உயிரை சிவனென்றும் சித்தரிக்கிறார். புலன்கள் நமது கட்டுப்பாட்டில் இருப்பதில்லை என்பதால் அவற்றை கள்ளப் புலன்கள் என்கிறார். இயல்பான மனித வாழ்வின் மூலமாக மேன்மையை அடைய முடியும் என்பதே திருமூலரின் சாரமான கருத்து என்று சொல்லலாம். இயற்கைக்கு மாறான வெறுப்பும், சலிப்பும், விரக்தியும் மனிதனுக்கு சிறுமைப் பண்புகளைத்தான் அதிகரிக்குமே தவிர, பேரியல்புகளை வளர்க்காது. திருமூலரின் ஞான மார்க்கம் இந்த அடிப்படையில் அமைந்ததுதான்.
பொதுவாக சித்தர்களின் தத்துவமே, மனித வாழ்விலிருந்து இறைமையை நாடுவதுதான். இறை வாழ்வு என்பதே இயற்கையோடு இயைந்த வாழ்வுதான் என்பதே சித்தர்களின் சிந்தனை. திருமூலர், அதைக்கொஞ்சம் அழுத்தமாகவும், விரிவாகவும் சொல்லியிருக்கிறார். அவர் இயற்றியுள்ள திருமந்திரம், நல்வாழ்விற்கு ஒருமந்திரம். “என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யு மாறே..” என்பது திருமூலரின் பெருமிதம் மிகுந்த பிரகடனம். சித்தர்கள் என்றால், ஏதோ மருத்துவத்தையும் ஆன்மீகத்தையும் மட்டுமே ஆய்ந்தும் தெளிந்தும் உலகுக்கு அளித்தவர்கள் என்ற கருத்துதான் பரவலாக இருந்து வருகிறது. முற்றிலும் தவறான பதிவு என்றுதான் அதைச் சொல்ல வேண்டும். மொழி இல்லாமல் எது நிலைக்கும்? தமிழின் முதல் இலக்கண நூலைத் தந்தவரே அகத்தியர்தான் என்பதை ஆன்றோரும் சான்றோரும் ஆணித் தரமாக சொல்லுகிறார்கள். ஞானமும் தமிழும் இணைந்த போதுதான் சித்தர்களின் தத்துவம் செழுமை பெற்றது. மொழியை இழந்த சமூகம் வரலாற்றையும் இழந்துவிடும். மொழி என்ற வேர்கள் இல்லாமல் சமூகவிருட்சம் தழைக்கவோ, செழிக்கவோ முடியாது. முக்காலத்தையும் அறிந்த சித்தர்களுக்கு முத்தமிழின் பெருமை தெரியாமலா போய்விடும்! தமிழைப் பாடுவதற்காகவே என்னை இறைவன் படைத்திருக்கிறான் என்று புளங்காகிதம் அடைந்திருக்கும் திருமூலர் தமிழின் பெருமையும் இறைவனின் அருமையும் இரண்டறக் கலந்திருப்பது குறித்து மனம் குழைந்து கூறி இருப்பதைக் கவனியுங்கள்... “முத்தியை ஞானத்தை முத்தமிழ் ஓசையை எத்தனை காலமும் ஏத்தவர் ஈசனை நெய்தலைப் பால்போல் நிமலனும் அங்குளன் அத்தகு சோதியது விரும்பாரன்றே” (திருமந்திரம்) அதனால்தான் “அருமலர் மொழியுஞான அமுதர்த செந்தமிழைச் சொல்வாம்” என்கின்றார் ஞானவெட்டியான். ஆம்... தமிழை அவர் வெறும் மொழியாக மட்டும் பார்க்கவில்லை. ஞானாமிர்தமாகப் பார்க்கிறார். அதுமட்டுமல்ல.. சித்தர்களின் சிறப்பை பற்றி சொல்ல வரும்போது, “பண்டுடன் பழகி பைந் தமிழுணர்ந்து தென்தரை மீதிற் றெளிந்தவர் சித்தரே” என்றும் பாராட்டுகின்றார். தங்களின் தொன்மமான பெருமைகளில் தோய்ந்தது மட்டுமல்லாமல், தமிழையும் உணர்ந்ததாலேயே சித்தர்கள் சிறப்புப் பெற்றார்கள் என்கிறார். “பொதிகை மேவு மகத்தீர ராலெனது போதத் தமிழ் வாக்கியம்” என கேட்பவரை கிறுகிறுக்க வைக்கும் தன்தமிழ் ஆற்றல், பொதிகையில் வாழும் அகத்தியன் தந்த கொடை என்று போற்றுகிறார். அகத்தியர் தமிழைப் பற்றி என்ன சொல்லுகிறார்? “சிந்தையுறு ஞானத் தெளியவுரை பாடுதற்கு வந்தபஞ்ச பூதத்தின் வாழ்க்கையே - செந்தமிழ் நூல் காவியந்தானாயிரத்தில் கல்லா யரு நூலும் தேவியென்னும் பூரணியே சீர்” (அகத்தியர் ஞானம் 100) என்று தமிழை பஞ்ச பூதங்களின் சேர்க்கையாகவே சித்தரிக்கின்றார்.
பட்டினத்தாரே, மனித வாழ்வின் முழுமையான தத்துவத்தையும், தமிழின் முச்சங்கங்களின் பெயராலேயே விளக்குகிறார். “முதற்சங்கம் அமுதூட்டும் மொய்குழலார் இசை நடுச்சங்கம் நல்விலங்கு பூட்டும் -கடைச் சங்கம் இம்போதது ஊதும் அம்மட்டோ நாம் பூமி வாழ்ந்த நலம்” இப்படி மூலிகையைச் சொன்னாலும், முக்தி பற்றிச் சொன்னாலும், முத்தமிழில் குழைத்தே சித்தர்கள் சொல்லி இருக்கிறார்கள். சித்தர்கள் சித்தத் தெளிவு மட்டுமல்ல, செந்தமிழ்த் தெளிவும் கொண்டவர்கள் என்பதை இனியேனும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
திருமூலர் வரலாறு.
Picture
திருமூலர் வரலாறு செந்தமிழ்ச் சிவாகமம்: `சிவபூமி` எனப் போற்றப் பெறுஞ் சிறப்புவாய்ந்த நம் நாட்டின் தொன்மை வாய்ந்த சமயமாகத் திகழ்வது; சைவ சமயமாகும். உலகமக்கள் உள்ளத்திலே தெய்வம் உண்டு என்னும் தெளிவினை நல்கி அன்பு நெறியில் ஒழுகப்பணித்து அறிவு நெறியை வளர்ப்பன தெய்வநெறிச் சிவம் பெருக்கும் சைவ சமய அருளாசிரியர்கள் அருளிய பன்னிரு திருமுறைகளாகும். திருமுறைப் பனுவலாகிய அருள் நூல்களுள் பத்தாம் திருமுறையாகத் திகழ்வது, தமிழ் மூவாயி ரமாகிய திருமந்திரமாகும். திருமந்திரமாலை என்னும் இத்திருமுறை, சைவசித்தாந்த சாத்திரமாகவும் இறைவன் திருவருளைப் போற்றிப் பரவும் தோத்திர மாகவும் விளங்குந் தனிச் சிறப்புடையது; வேத நெறியாகிய உலகியலொழுக்கத்தையும் மிகு சைவத் துறையாகிய சிவாகமவுண்மைகளையும் இனிய தமிழால் விரித்து விளக்குவது. உலக மக்கள் எல்லோரும் பொதுவாக மேற்கொள்ளுதற்குரிய நல் வாழ்க்கை முறையினையும் சிவநெறிச் செல்வர்களாற் சிறப்பாக மேற் கொள்ளத்தக்க ஞானயோக நுண்பொருள்களையும் ஒருங்கே விளக்குவதாய்ச் சைவசித்தாந்த மெய்ந்நூற் பொருளை அறிவுறுத்தும் செந்தமிழ்ச் சிவாகமமாகத் திகழ்வது இத்திருமந்திரமேயாகும்.
திருத்தொண்டர் திருவந்தாதியில்: திருமந்திர மாலையாகிய இத்திருவருட் பனுவலை அருளிச் செய்தவர், இறைவனருளால் எண்வகைச் சித்திகளும் பெற்றுச் சிவமே பெறுந்திருவினராய் எல்லாவுயிர்களிடத்தும் அருளுடையராய்ப் பன்னெடுங்காலம் சிவயோக நிலையில் அமர்ந்திருந்து `நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்` என்னும் நல்ல குறிக்கோளுடைய ராய்த் தாமுணர்ந்த ஞானப்பொருளைத் தண்ணார் தமிழால் உலகத்தார்க்கு வழங்கியருளி

No comments:

Post a Comment