Tuesday, July 28, 2015

108 சித்தர்கள் போற்றி !!!!

ஓம் ஆதிநாதர் திருவடிகள் போற்றி 
ஓம் அநாதிநாதர் திருவடிகள் போற்றி
ஓம் சத்தியநாதர் திருவடிகள் போற்றி
ஓம் சகோதநாதர் திருவடிகள் போற்றி
ஓம் வகுளிநாதர் திருவடிகள் போற்றி
ஓம் மதங்கநாதர் திருவடிகள் போற்றி
ஓம் மச்சேந்திரநாதர் திருவடிகள் போற்றி
ஓம் கடேந்திரநாதர் திருவடிகள் போற்றி
ஓம் கோரக்கநாதர் திருவடிகள் போற்றி
ஓம் நந்தீசர் திருவடிகள் போற்றி
ஓம் திருமூலர் திருவடிகள் போற்றி
ஓம் அகஸ்தியர் திருவடிகள் போற்றி
ஓம் புலஸ்தியர் திருவடிகள் போற்றி
ஓம் போகர் திருவடிகள் போற்றி
ஓம் கொங்கணர் திருவடிகள் போற்றி
ஓம் கருவூரார் திருவடிகள் போற்றி
ஓம் காலங்கிநாதர் திருவடிகள் போற்றி
ஓம் இடைக்காடர் திருவடிகள் போற்றி
ஓம் பத்திரகிரியார் திருவடிகள் போற்றி
ஓம் சிவவாக்கியர் திருவடிகள் போற்றி
ஓம் இராமதேவர் திருவடிகள் போற்றி
ஓம் கமலமுனி திருவடிகள் போற்றி
ஓம் சுந்தரானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் பூர்ணானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் ரோமரிஷி திருவடிகள் போற்றி
ஓம் திருவள்ளுவர் திருவடிகள் போற்றி
ஓம் காகபுஜண்டர் திருவடிகள் போற்றி
ஓம் ஔவையார் திருவடிகள் போற்றி
ஓம் தன்வந்திரி திருவடிகள் போற்றி
ஓம் வால்மீகர் திருவடிகள் போற்றி
ஓம் புண்ணாக்கீசர் திருவடிகள் போற்றி
ஓம் பூனைக்கண்ணனார் திருவடிகள் போற்றி
ஓம் அழுகண்ணிச் சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் அகப்பேய் சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் தேரையர் திருவடிகள் போற்றி
ஓம் குதம்பைச் சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் சட்டைமுனி திருவடிகள் போற்றி
ஓம் பாம்பாட்டிச் சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் பட்டினத்தார் திருவடிகள் போற்றி
ஓம் பதஞ்சலியார் திருவடிகள் போற்றி
ஓம் நாரதர் திருவடிகள் போற்றி
ஓம் விஸ்வாமித்திரர் திருவடிகள் போற்றி
ஓம் காரைச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் நாகார்ஜுனர் திருவடிகள் போற்றி
ஓம் வாசுகியார் திருவடிகள் போற்றி
ஓம் திருமாளிகைத் தேவர் திருவடிகள் போற்றி
ஓம் குமாரத்தேவர் திருவடிகள் போற்றி
ஓம் அருணகிரிநாதர் திருவடிகள் போற்றி
ஓம் தாயுமானவர் திருவடிகள் போற்றி
ஓம் வள்ளலார் திருவடிகள் போற்றி
ஓம் முத்துத்தாண்டவர் திருவடிகள் போற்றி
ஓம் காரைக்கால் அம்மையார் திருவடிகள் போற்றி
ஓம் பராசரர் திருவடிகள் போற்றி
ஓம் ஹனுமான் திருவடிகள் போற்றி
ஓம் புலிப்பாணி சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கல்லுளி சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கணநாதர் திருவடிகள் போற்றி
ஓம் குமரகுருபரர் திருவடிகள் போற்றி
ஓம் திருதட்சியாமூர்த்தி திருவடிகள் போற்றி
ஓம் கௌசிகர் திருவடிகள் போற்றி
ஓம் சண்டிகேசர் திருவடிகள் போற்றி
ஓம் சுகப்பிரம்மர் திருவடிகள் போற்றி
ஓம் டமரானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் தாயுமானவர் திருவடிகள் போற்றி
ஓம் கபிலர் திருவடிகள் போற்றி
ஓம் அல்லமாபிரபு திருவடிகள் போற்றி
ஓம் காசிபர் திருவடிகள் போற்றி
ஓம் கவுபால சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் குருராஜர் திருவடிகள் போற்றி
ஓம் கெளதமர் திருவடிகள் போற்றி
ஓம் சங்கர மகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் சுந்தரமூர்த்தி திருவடிகள் போற்றி
ஓம் சூரியானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் சொரூபானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் ஜம்பு மகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் ஜனகர் திருவடிகள் போற்றி
ஓம் ஜெகன்நாதர் திருவடிகள் போற்றி
ஓம் ஞானசித்தர் திருவடிகள் போற்றி
ஓம் திருநாவுக்கரசர் திருவடிகள் போற்றி
ஓம் திருஞானசம்பந்தர் திருவடிகள் போற்றி
ஓம் துர்வாச முனிவர் திருவடிகள் போற்றி
ஓம் நந்தனார் திருவடிகள் போற்றி
ஓம் பரத்வாசர் திருவடிகள் போற்றி
ஓம் பரமானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் பிங்கள முனிவர் திருவடிகள் போற்றி
ஓம் பிருகு முனிவர் திருவடிகள் போற்றி
ஓம் பீர்முஹம்மது திருவடிகள் போற்றி
ஓம் புலத்தீசர் திருவடிகள் போற்றி
ஓம் மச்சமுனி திருவடிகள் போற்றி
ஓம் மாணிக்கவாசகர் திருவடிகள் போற்றி
ஓம் மார்க்கண்டேயர் திருவடிகள் போற்றி
ஓம் முத்தானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் மெய்கண்டதேவர் திருவடிகள் போற்றி
ஓம் மௌனசித்தர் திருவடிகள் போற்றி
ஓம் யாக்கோபு சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் வரரிஷி திருவடிகள் போற்றி
ஓம் வியாச முனிவர் திருவடிகள் போற்றி
ஓம் விளையாட்டு சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் மிருகண்ட மகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் சீரடிபாபா திருவடிகள் போற்றி
ஓம் வசிஷ்ட மகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் யூகி முனிவர் திருவடிகள் போற்றி
ஓம் சூலமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் குகை நமச்சிவாயர் திருவடிகள் போற்றி
ஓம் கடைப்பிள்ளை திருவடிகள் போற்றி
ஓம் வேதவியாசர் திருவடிகள் போற்றி
ஓம் கணபதிதாசர் திருவடிகள் போற்றி
ஓம் சட்டநாதர் திருவடிகள் போற்றி
http://www.adiyaar.com/

Monday, July 27, 2015

300 வயது வாழ அகத்தியர் கூறும் வழிமுறை.

நவீன அறிவியலின் படி ஒரு மனிதன் முன்னூறு ஆண்டுகள் வாழ்வதெல்லாம் சாத்தியமல்ல என்பது பல காலம் முன்னரே நிரூபிக்கப் பட்ட ஒன்று.இருந்தாலும் சித்தர்கள் பலநூறு வருடங்கள் வாழ்ந்திருந்ததாக தகவல்கள் கூறுகின்றன.
ஹோமங்கள் செய்வதன் மூலமாக ஒருவன் முன்னூறு வயதுவரை வாழலாம் என்கிறார் அகத்தியர்,
ஹோமங்கள் பற்றி அகத்தியரின் பாடல்
அறிந்துகொண்டு புவனையுட மந்திரந்தன்னால்
அப்பனே நெய்தனிலே அருகுதோய்த்து
தெரிந்தந்த ஓமகுண்டந் தன்னில்மைந்தா
சிறப்பான ஓமமது தீர்க்கமாக
வருந்திநன்றாய் மண்டலமே செய்தாயாகில்
மகத்தான பிரமமய மாவாய்பாரு
இருந்துரெண்டு மண்டலமே ஓமஞ்செய்தால்
என்னசொல்வேன் முன்னூறு வயதாம்பாரே
பொருள்
அறுகோண வடிவத்தை உடைய ஓம குண்டம் செய்து, அதில் வன்னி மரத்தின் குச்சிகளைக் கொண்டு தீ வளர்த்திட வேண்டும். அப்படி தீ வளர்க்கையில் வழமை போலவேbஅக்கினி மூல மந்திரமான ஓம் அரிஓம் கோடிப்பிரகாசம் அக்கினியே அகோரா அங் உங் இங் வாவா லம் பட் சுவாகா
என்ற மந்திரத்தை சொல்லி தீ வளர்த்திட வேண்டும்.
தீ வளர்ந்த பின்னர் புவனையின் மூல மந்திரமான
ஓம் ஐயும் கிலியும் சவ்வும் சவ்வும் கிலியும் ஐயும் வாவா புவனை பரமேஸ்வரி பஞ்சாட்சரி ஆனந்தரூபி சுவாகா
என்ற மந்திரத்தைக் கூறிக் கொண்டே அறுகினை, பசு நெய்யில் தோய்த்து போட வேண்டும் என்கிறார். இப்படி 1008 முறை செய்திட வேண்டும் என்கிறார் அகத்தியர். இந்த ஹோமத்தினை தொடர்ந்து ஒரு மண்டலம் அதாவது நாற்பத்தி எட்டு நாட்கள் செய்து வந்தால் பிரம்மத்தை உணரலாம்.
அதையே தொடர்ந்து இரண்டு மண்டலம் அதாவது 96 நாட்கள் செய்து வர 300 வயதுக்கு மேல் வாழலாம் என்கிறார் அகத்தியர்.

Sunday, July 26, 2015

அஷ்டலட்சுமி மாலா மந்த்ரம்

ஓம் நமோ பகவதீ ஸர்வ லோக வசீகர மோஹினீ
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஹ்ராம் அம் ஆம் யம் ரம் லம்
வம் ஸ்ரீம் ஆதிலக்ஷ்மீ, சந்தான லக்ஷ்மீ,
கஜலக்ஷ்மீ, தனலக்ஷ்மீ, தான்யலக்ஷ்மீ,
விஜயலக்ஷ்மீ, வீரலக்ஷ்மீ, ஐஸ்வர்யலக்ஷ்மீ,
அஷ்டலக்ஷ்மீ, ஸெளபாக்யலக்ஷ்மீ மம ஹ்ருதயமே
த்ருடயா ஸ்த்திதாய ஸர்வலோக வசீகரணாய
ஸர்வ ராஜ்யவசீகரணாய, ஸர்வ ஜன
ஸர்வ ஸ்த்ரீ புருஷ ஆகர்ஷணாய, ஸர்வகார்ய
ஸித்திதாய, மஹாயோகேஸ்வரி, மஹா
ஸெளபாக்ய தாயீனீ மமக்ருஹே புத்ரான் வர்த்தய
வர்த்தய மமமுகே லக்ஷ்மீ, வர்த்ய வர்த்ய
ஸர்வாங்க ஸெளந்தர்யம் போஷய போஷய
ஹ்ராம் ஹ்ரீம் மம ஸர்வசத்ருன பந்தய
பந்தய மாரய மாரய நாசய நாசய
ஸ்ரீம் ஸ்ரீம் ஸ்ரீம் ஐஸ்வர்ய வ்ருத்திம் குரு
குரு க்லீம் க்லீம் ஸர்வ ஸெளபாக்யம் தேஹிதேஹி
ஸ்ராம் ஸ்ரீம் ஸுவர்ண விருத்திம் குருகுரு
ஸ்ரூம் ஸ்ரைம் ஸுதான்ய விருத்திம் குருகுரு
ஸ்ரீம் ஸ்ரீம் கல்யாண விருத்திம் குருகுரு
ஓம் ஜம்க்லீம் ஸ்ரீம் ஸெள: நமோ பகவதிஸ்ரீ
மஹாலக்ஷ்மீ மமக்ருஹே ஸ்திராபவ நிச்சலாபவ
நமோஸ்துதே ஹும் பட் ஸ்வாஹா.

சிவனைச் சாந்த சக்தி வாய்ந்த மந்திரங்கள்.

இங்கே சிவனைச் சாந்த மந்திரங்களை பார்ப்போம்.சிவனுக்கு ஐந்து முகங்கள்அவையாவன,நான்கு திசைகளுக்கொரு முகம்,ஐந்தாவது முகம் ஆகாயத்தைநோக்கியது.கிழக்கில்'தத்புருஷம்',தெற்கில்'அகோரம்', வடக்கில் 'வாமதேவம்',மேற்கில் சத்யோஜாதம்
உச்சியில்'ஈசானம்'.கருவூரார் எனப்படும் கருவூர் சித்தர் இந்த ஒவ்வொரு முகத்திற்குமான பல மந்திரங்களை அருளியுள்ளார்.
பொதுவில் மந்திரங்களை கைளாளும் முறையாவது, அமைதியான காற்றோட்டமுள்ள இடம் அல்லது கோவில் போன்ற இடங்களில் அமர்ந்து மனதை வெறுமையாக்கி, முதலில் தங்கள் குலதெய்வத்தினை வணங்கி, பின் பெற்றோரையும், குருவினையும் மனதால் துதித்து மூலமந்திரத்தை மனதில் உச்சரிக்க வேண்டும்.முதலில் குறைந்தது 108 அல்லது 1008 முறை விடாதுஉச்சரித்தல் அவசியம்.
அதன் பின் நேரம் கிடைக்கும் போதெல்லாம் மனதினை ஒரு நிலைப்படுத்தி மந்திரங்களை உச்சரிக்கலாமென்கிறார்கள். எண்ணிக்கை கணக்கிற்காக ஜெப மாலைகளை உயயோகிக்கலாம்.இவ்வாறு தொடர்து உச்சரிக்கும் போது அந்த மந்திரங்கள் நமக்கு சித்திக்கின்றன என்கிறார்கள்.பின் எப்போதுதேவையேற்படுகிறதோ அச்சமயத்தில் தேவையான மந்திரங்களை 9 அல்லது 21தடவை உச்சரிக்க மந்திரம் பலிக்குமாம். இனி மந்திரங்கள்..
ஈசான மந்திரங்கள்.
-------------------------------
"சிமிறியும் ஊங்சிவாய ஊங் அங் நம ஓ" என உச்சரிக்க சிவதத்துவத்தை காணலாம்.
"மங் நங் சிவ சிவாய ஓம்" என உச்சரிக்க நந்தியின் தத்துவத்தை உணரலாம்.
"வங் யங் சிங் ஓம் சிவாய" என உச்சரிக்க எதிரியின் உடல் தனலாகும்.
"சிங் சிங் சிவாய ஓ" என உச்சரிக்க முக்காலத்தையும் உணரலாம்.
"மய நசிவ சுவாக" உச்சரிக்க ஆகாயத்தில் பறந்து செல்லும் சித்தர்களின் ஆசி கிட்டும்.
தத்புருஷ மந்திரம்.
-----------------------------
இதன் மூல மந்திரம் 'நமசிவாய' இதை விடாது உச்சரிக்க உச்சாடணம் ஏற்படும்.தத்புருஷத்தில் கருவூரார் 25 மந்திரங்களைச் சொல்கிறார், பதிவின் நீளம் கருதி ஐந்தினை தருகிறேன்.
"நமசிவாயம் லங்க நமசிவாய" என உச்சரிக்க மழை பெய்யுமென்கிறார்.
"அலங்கே நமசிவாய நமோ" என உச்சரிக்க புகழ் உண்டாகுமாம்.
"அங் சிவாய நம" என உச்சரிக்க குழந்தைப் பேறு உண்டாகுமாம்.
"ஊங்கிறியும் நமசிவாய நமா" என உச்சரிக்க மோட்சம் கிட்டுமாம்.
"ஓம் நமசிவாய" என உச்சரித்தால் காலனை வெல்லலாம்.
அகோர மந்திரம்.
---------------------------
இதன் மூல மந்திரம் "நமசிவ",
"சங் கங் சிவாயநமா" என உச்சரிக்க ஜீவனில் சிவத்தைக் காணலாம்.
"மங் மங் மங்" என உச்சரித்தால் உணவை வெறுத்து பசியை துறக்கலாம்.
"வசாலல சால்ல சிவாய நமா" என உச்சரித்தால் மழையில் நனையாமல் செல்லலாம்.
"சரனையச் சிவாய நம" என உச்சரிக்க வானில் பறக்கலாமாம்.
"கேங் கேங் ஓம் நமசிவாயம்" என உச்சரிக்க எல்லோரும் வசியமாவர்.
"ஓங் சருவ நம சிவாய" என உச்சரிக்க மழை உண்டாகும்.
வாமதேவ மந்திரம்.
-------------------------------
"கங்கங்ணங் நிஷர் சிவிங்கம்" என உச்சரித்தால் காமதேவன் அருள் கிட்டுமாம்.
"வங் வங் சிங் சிவாய நம"என உச்சரிக்க உலகின் எப்பாகத்திற்கும் வழி தெரியுமாம்.
"சதா சிவாய நம" என உச்சரிக்க நான்கு வேதத்தின் பொருள் அறியலாம்.
"ஓம் அங்கிஷ ஊங் சிவாயநம" என உச்சரிக்க நினைத்த இடத்தில் மனதினை விரைவாக செய்யலாம்.
சத்யோசாத மந்திரங்கள்.
---------------------------------------
"சிவாய ஓம்" என உச்சரிக்க திருமாலில் ஆற்றல் கிட்டும்.
"ஓங் உங் சிவாய ஓம்" என உச்சரிக்க குண்டலினியின் சக்தியை காணலாம்.
"கிருட்டிணன் ஓம் சிவாய நம" என உச்சரிக்க இராவணன் மலையைப் பெயர்த்த பலம் கிட்டும்.


சிவலிங்கத்தை பற்றிய சுவாரசியமான தகவல்கள்!!!

சிவலிங்கத்தை வேறு விதமாக கற்பனை செய்துக்கொண்டு பரிகாசம் செய்பவர்களும் உண்டு அவர்களுக்காகன பதிவு இது, மேலும் சிவலிங்கத்தை பற்றி பல சுவாரசியமான தகவல்களும் அடங்கும்.
கற்பனை வேறு, யதார்த்தம் வேறு. கயிறு பாம்பாகத் தோன்றுவது போல அவரவர் எண்ணங்களை ஒத்த வடிவங்களில் அது தோன்றுகிறது. இடை விடாது அதே சிந்தனையில் மூழ்கிக் கிடப்பவர்களுக்கு அது அப்படித் தோன்றுவதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. ஆனால், நம்மை விட அவர்கள் அதற்கு அதிக முக்கியத்துவம் தருகிறார்கள். அதுவே அவர்கள் அடையாளச் சின்னமாகவும் விளங்குகிறது. வள்ளலாரிடம் சிலர் இப்படி கேட்டதற்கு, அவர் அழகாகவும், தெளிவாகவும் பதில் சொன்னார். ஆத்ம ஜோதியை அருட்ஜோதி சூழ சிவ ஜோதி விளங்குகின்றது என்றார்.
எவ்வளவு உயர்ந்த கண்ணோட்டம். உங்கள் எண்ணங்களும், கண்ணோட்டங்களும் உயர உயரத்தான் வாழ்க்கை உயரும். எனவே தவறான உதாரணத்தை மனதில் கொண்டவர்கள் தானே அந்த தவறின் பிடியில் சிக்கி உழன்று கொண்டிருப்பார்களேயன்றி, அதனால் லிங்கத் திருமேனிக்கு எந்த வித இழுக்கும் வந்து விடப் போவதில்லை. உண்மையை மறைக்க முயற்சி செய்வது கூடும். ஆனால் உண்மையை அழிக்க முடியாது. அது என்றென்றும் நிலைத்திருக்கும். பொய்யானவைகள் வரும், அழியும். உண்மை அழியாது.
சிருஷ்டி காலத்தில் உயிர்கள் எப்படி உருவானதோ ? அதேபோல் லயமாகி ஒடுங்கி தோன்றிய இடத்திற்கே மீண்டும் செல்கின்றன என்பதின் தத்துவக் குறியீடே லிங்கம். லயமாகிய ஒடுக்கம் லிம் என்கிற பீஜத்தாலும், சிருஷ்டி என்கிற தோற்றம் கம் என்ற பீஜத்தாலும் குறிப்பிடப்படுகிறது. இந்த தத்துவத்தின்படி லயம், ஒடுக்கம் என்ற இரு தத்துவங்களுமே லிங்கம் என்று பொருள்படுகின்றன. பிரளய காலத்தில் ஒடுக்கமும், பிறகு அங்கிருந்து சிருஷ்டியும் தோன்றுவதன் காரணப் பொருளாக விளங்குவது பராசிவமாகும். இந்த பராசிவத்தின் சின்னம் லிங்கமாகும்.
லிங்கமானது உரு, அரு, அருவுரு என்ற மூன்று ரூபங்களாய் பிரிக்கப்பட்டுள்ளது. இதையே ஆகமங்கள் தத்துவம், மூர்த்தி, பிரபாவம் என்று குறிப்பிடுகின்றன. உரு என்பதை சகளத்திருமேனி என்பர். தலை, உடம்பு, கை, கால் முதலிய உறுப்புகளால் அமைந்த மகேஸ்வர வடிவங்கள் யாவும் உரு எனப்படும். நான்முகன், திருமால், ருத்ரன், மகேஸ்வரன் போன்ற இறைவனின் பல்வேறு தத்துவங்கள் இந்தத் திருமேனிகளில்தான் காணப்படும். இந்தத் திருமேனிகள் எல்லாம் மந்திர வடிவங்கள். இதையும் யோகவடிவம், போகவடிவம், கோபவடிவம் என்ற மூன்று வகையாகச் சொல்வார்கள்.
போக வடிவம் என்பது இறைவனின் நின்றகோலம், இருந்தகோலம், கிடந்தகோலம், வாகனங்களில் அமர்ந்தகோலமாய் ஆடை, அணிகலன்களோடு சாந்தமாய், அபயகரத்துடன் கூடிய தோற்றமாகும். யோகவடிவம் என்பது யோகமுத்திரையுடன் ஆருள்புரியும் தன்மையோடு விளங்கும் வடிவமாகும். கோபவடிவம் என்பது கொடியவர்களை வதம் செய்யும் விதமாக பலவகையான ஆயுதங்களை கையில் ஏந்தியபடி அச்சுறுத்தும் விதமாக காட்சிதரும் தோற்றமாகும். சம்ஹார ரூபம் என்றும் இதைச் சொல்வதுண்டு. ஆக இந்த மூன்று வடிவங்களும் சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் என்கிற தத்துவங்களை வளக்கும் விதமாக அமைந்துள்ளன. இந்த மூன்று தத்துவங்களுக்குள்ளும் மறைபொருளாய் திரோபாவசக்தியும், அனுக்கிரஹமும் இருக்கிறது.
அரு – உருவமில்லாதது. இதுவும் சிவலிங்க வடிவமே ! இதை நிட்களதிருமேனி என்பர். எந்தவித உறுப்புகளும் இன்றி கோளவடிவில் கோளவடிவில் காணப்படும் லிங்கம். இந்த வடிவமானது, சிவம், சக்தி, விந்து, நாதம் ஆகிய சான்கு தத்துவங்களைக் குறிக்கக்கூடியது. உலகாயத்தில் உழன்று கொண்டிருக்கும் சர்வகோடி ஜீவராசிகளுக்கும் முக்தியளிக்க வல்லமையுடைய பரமாத்மாவே எல்லா ஜீவராசிகளின் உடலிலும் ஆத்மாவாய் இருக்கிறது. இப்படி சர்வகோடி ஜீவராசிகளும் முக்தியடையும் பொருட்டு பிரளய காலத்தில் ஒன்று சேர்ந்து பரமாத்மாவாய் மாறிவிடுகின்றன. பிறகு சிருஷ்டியின் காலத்தில் தனியே பிரிந்து தனித்தனி ஆன்மாவாய் தோன்றுகின்றன. இப்படி ஆன்மாக்கள் வருவதும், போவதுமாய் இருக்கும் தத்துவத்தைக்குறிப்பதே லிம்,கம் எனப்படும். லிம்கமே லிங்கம் என்று அழைக்கப்படுகிறது.
அரு, உரு – சகளநிட்கள லிங்கம்.
உருவமின்மையும், உருவமும் கலந்த வடிவமே சகளநிட்களம் என்று ஆகமங்களால் அழைக்கப் படுகின்றது. இதை முகலிங்கம் என்று கூறுவார்கள். இந்த முகலிங்கம் ஆட்யம், அநாட்யம், சுரேட்யம், சர்வசம் என்று நான்குவகைப்படும். இந்த லிங்கமானது மூலம் நாற்சதுர வடிவம் கொண்ட பிரம்ம பாகமாகவும், அதாவது படைத்தல் தொழிலைக் குறிப்பதாகவும், மத்தியம் எட்டுபட்டை வடிவம் கொண்டு எட்டு சக்திகளைக்குறிப்பதோடு, ஒன்பதாவது சக்தியான மனோன்மணிசக்தியும் சேர்ந்து நீரின் அதிபதியான திருமாலின் சக்திகளாகி காத்தல் என்கிற தத்துவத்தை குறிப்பதாகவும், அதற்கு மேலே உள்ள கோளவடிவமான ஜோதிவடிவமான ருத்ரவடிவம் சம்ஹாரம், த்ரோபாவம், அனுக்கிரஹம் என்ற மூன்று தத்துவங்களை குறிப்பதாகவும் அமைந்துள்ளன. இதில் சிவபாகமான ஜோதிபாகத்தில் சிறு உருண்டை வடிவ ஆயிரம் முகங்களை உடையது ஆட்யம் எனப்படும். சிவபாகத்தில் எந்த வடிவமும் இல்லாதது அநாட்யம் எனப்படும். சிவபாகத்தில் சிறு உருண்டை வடிவ செங்குத்தான 108 முகங்களை உடையது சுரேட்யம் எனப்படும். சிவபாகத்தில் முழு உறுப்புகளை உடைய லிங்கம் சர்வசம் எனப்படும். இதில் ஒருமுகம் முதல் ஐந்து முகம் வரை சிவமுகங்கள் பொறிக்கப்பட்டிருக்கும்.
இப்படி சிவலிங்கமானது உருவலிங்கம் நான்காகவும், அரூபலிங்கம் நான்காகவும், அரூபஉருலிங்கம் ஒன்றாகவும் ஒன்பது பேதமாக ஆகமங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஒன்பது பேதங்களே அவரவர் விருப்பத்துக்குத் தக்கவாறு பலவகை லிங்கங்களாய் காணப்படுகின்றன.
இதுவல்லாமல் சுயம்புலிங்கங்கள் இயற்கையாகவே தானாகவே தோன்றி அருள் புரிவதுவும் உண்டு. இவற்றை அருட்கொம்பு லிங்கங்கள் என்பார்கள். பூமியின் அடியில் இருக்கும் பிரம்மாண்டமான பாறையின் நுனிக் கொம்புகளை சுயம்புலிங்கம் என்பர். பூமிக்கடியில் இரண்டு பெரிய பாறைகள் உராய்ந்து கொள்ளும் பொழுது ஏற்படும் காந்த விசை அப்பாறையின் நுனிக்கு ஈர்க்கப்படும். அப்படி பாறையின் நுனிக்கு ஈர்க்கப்பட்ட அந்த விசையானது அருட்காந்த அலைகளாக மாறி உயிர்களை தம்பால் ஈர்க்கின்றன. எனவேதான் தன்னையும் அறியாமல் அதன் ஈர்ப்பில் மயங்கி பக்தியில் திளைக்கின்றன. மனிதர்கள் மட்டுமல்ல ஆடு, மாடு போன்ற ஜீவராசிகளும் அதன் ஈர்ப்பில் மயங்கி தன்னையும் அறியாமல் பால் சுரக்கின்றன. இப்படிப்பட்ட சுயம்பு லிங்கங்களில் அறிந்தவை 68 என்றும், அறியாதவை பலகோடி என்றும் ரிஷிகள் கூறியுள்ளனர். இந்த சுயம்புலிங்கங்கிலும் மூன்று பிரிவுகள் வரையறுக்கப்பட்டுள்ளன. அவை நீரில் மூழ்கி இருக்கும் நிர்மூல லிங்கம், மலையை ஆதரமாகக் கொண்ட சமூல லிங்கம், மண்ணை ஆதாரமாக உடைய பிருத்வி லிங்கம் என்பவை ஆகும். இது போல புற்று மண்ணால் ஆன சுயம்பு லிங்கங்களும் உண்டு.
கரையானால் பலவகை தாதுக்கள் கூடிய மண்ணால் உருவாக்கப்பட்ட புற்று சிவனின் சிரசு முடி எனப்படுகிறது. இந்தப் புற்றில்தான் சிவபெருமானின் சங்கராபரணமாகிய கருநாகம் குடியிருக்கும். இதில் காலத்தால் அழியாமலும், மழையில் கரையாமலும், இயற்கை சீற்றங்களால் சிதையாமலும், தாவரங்கள் வளராமலும், பிரகாசமாய், மூன்று கண்கள் உடையதும், ஐந்து தலைகளோடும் கிழக்கு பார்த்து அமைந்த புற்று சிவவான்மீகம் என்று போற்றி வணங்கப்படுகிறது. இந்த புற்றானது ருத்ர ஸ்தலம் என்றும், சுயம்பு புற்று ஸ்தலம் என்றும் ரிஷிகளால் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த புற்றின் மேலே நூலால் கட்டிய ஸ்படிகமணியையோ அல்லது ருத்ராட்சத்தையோ தொங்கவிட்டுப் பார்த்தால் நொடிக்கு மூன்று சுற்று சுற்றும். அப்படி சுற்றும்படி அமைந்த புற்றுக்கள் ஜீவ புற்றுலிங்கங்கள் என்றும், சிவனின் சகதி களஞ்சியம் என்றும் போற்றி வணங்கப்படுகிறது. இவ்வகை புற்றைச் சுற்றி நீர்வளம் நிறைந்திருக்கும். இவ்வகையான புற்றைக் கண்டுபிடித்து ஆலயம் எழுப்பும் அடியார் அடையும் பேற்றினை சொல்லி முடியாது.
எனவே உங்கள் அறிவின் திறத்தை பயன்படுத்தி நல்லதையே பற்றுங்கள், நல்லதையே எண்ணுங்கள் நல்லதையே பெறுவீர்கள்
தகவல் பகிர்வர் https://www.facebook.com/ram5665
மௌனத்தின் அலைகள்.இராம் மனோகர்

ராம நாமத்தின் இரகசியம்

ராம நாமத்தின் இரகசியம்தாரக மந்திரம் என்றால் கடக்க உதவும் மந்திரம் என்று பொருள். இந்தக் கலியுகத்தில் தவம் செய்வது அவ்வளவு எளிதல்ல. பக்தியில் மனதை செலுத்துவதும் மிகக் கடினமானதாகும். நாம ஜெபமுமே இறை நிலையை அடைய சிறந்த உபாயமாகச் சொல்லப்படுகிறது. மனதை அடக்கி, புலன்களை வசப்படுத்தி தவம் செய்பவர்கள் இருந்தாலும், எல்லோருக்கும் அது சாத்தியமாவதில்லை. அது போலவே பக்தி என்கிற சாதனையிலும் அதே நிலைதான். இதை உத்தேசித்தே நாம ஜெபங்கள், மந்திர ஜெபங்கள் சித்தர்களாலும், ரிஷிகளாலும் முன்னரே தரப்பட்டுள்ளன. எனவே இந்தக் கலியுகத்தில் மாயை எனும் கடலைக் கடக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் குரு மூலமாக மந்திர உபதேசம் பெற்று ஜெபித்து வர மேன்மை உண்டாகும். இதில் ராம நாமம் மிகவும் உன்னதமானதாகச் சொல்லப்பட்டுள்ளது. ஔவை சொல்கிறார்
பேசா வெழுத்துடன் பேசுமெழுத்துறில்
ஆசான் பரநந்தியாம்.
இதில் பேசா எழுத்து ம. இது மெய். பேசும் எழுத்து ரா. இது உயிர். அதாவது ஒலியுடன் ஒளி கூடி வரும் ராம மந்திரத்தை முறைப்படி ஜெபித்தால் அதுவே ஆச்சாரியனாக இருந்து உண்மை நிலையை, இரகசியங்களை விளக்கிக் காட்டும் என்கிறார்.சித்தர் சிவவாக்கியர் ராமநாமத்தின் சிறப்பை மீண்டும் மீண்டும் வலியுறுத்திச் சொல்லியிருக்கிறார்.
ரா என்றால் சூரியன், ம என்றால் சந்திரன். சூரியன் ஆன்மக்காரகன். சந்திரன் மனோகாரகன். அதாவது சூரியன் பரமாத்மா. சந்திரன் ஜீவாத்மா. அதாவது பரமாத்மாவோடு ஜீவாத்மாவை இணைக்க உதவும் மந்திரமே ராம நாமம் ஆகும். இதில் வாசிக் கலையின் பங்கும் மறைந்துள்ளது. அதாவது சூரியகலையின் எழுத்தாகிய ரா, சந்திர கலையின் எழுத்தாகிய மா இரண்டையும் சேர்த்து உச்சரித்து வரவர சுழுமுனை திறக்கும். யோசித்துப் பாருங்கள் நான் சொல்வதில் உள்ள நுட்பம் புரியும்.
அத்யோ ‘ரா’ தத்பதார்த்தஸ்யாத்
‘ம’ கார த்வம்பதார்த்தவாந், தயோ
ஸம்யோஜந மஸித்யர்த்தே தத்த்வலிதோ விதுஹூ.
– ராமரஹஸ்யோபநிஷத்.
அதாவது ரா என்றால் தத், பரப்பிரம்மம். மா என்றால் த்வம், ஜீவாத்மா. அதாவது நிராகார(ரூபமில்லாத) பரப்பிரம்மமே ஒவ்வொரு ஜீவஜந்துக்களின் உள்ளும் ஆத்மா என்ற பெரில் விளங்குகிறது. ப்ரம்மம், ஆத்மா என்ற பேதமேயொழிய இரண்டும் ஒன்றே. அதாவது தூல சரீரம் கண்களால் காணப்படுவது. அதற்குள் மனம், புத்தி, சித்தம், அஹங்காரம் என்று நான்குமாகி தொழிற்படும் சரீரங்கள் சூக்கும, காரண சரீரங்கள். இந்த சரீரங்களின் இன்ப, துனபத்திற்கு காரணமாக இருப்பது சஞ்சித கர்மமே. எனவே இந்த மூன்று சரீரங்களின் உணர்வும் அற்றுப் போனால் மட்டுமே பரமாத்மாவை அடைய முடியும். இந்த மூன்று தேகங்களுக்கும் சாட்சியாக இருக்கும் ஆன்மாவே ராம என்று சொல்லப்படுகிறது. இதை மனதில் நினைத்துக் கொண்டோ, வாக்கினால் சொல்லிக் கொண்டோ இருப்பதினால் உண்மை நிலையை அடைய முடியாது. அதற்கு சில விதி முறைகள் சொல்லப்பட்டுள்ளன. அவை காலப் போக்கில் குறிப்பிட்ட இனத்தவர்களால் மறைக்கப்பட்டு விட்டன. இப்போது அந்த வாசல் உங்களுக்குத் திறக்கப்படுகிறது. தேவை உள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
ஒரு தனிமையான இருட்டறையில் நெய்விளக்கேற்றி, பலகையிட்டு, அதன் மேல் விரிப்பு விரித்து வடக்கு நோக்கி சித்தாசனத்தில் சின்முத்திரை பிடித்து அமர்ந்து கொண்டு, கண்களை மூடி, மூக்கு நுனியில் மனதை நிறுத்தி, மூச்சை உள் இழுக்கும் போது ரா என்ற மந்திரத்தை மனதினால் நினைத்து மூச்சுடன் உள்ளிழுத்து, மெதுவாக மூச்சை வெளிவிடும் போது மா என்ற மந்திரத்தை மனதில் நினைத்து வெளியே விடவேண்டும். ஒரு தடவை மூச்சுவிடும் போதும் ஒரு ரா, ஒரு மா என்று விடவேண்டும். இவ்வாறு மூச்சுடன் சேர்த்து ஜெபம் செய்து வரவர பலனை உணரலாம். இது ரஹஸ்யமான உபதேசம் என்று வெளியில் சொல்லாமல் மறைப்பார்கள். இன்று இறையருளாலும், சித்தர் சிவவாக்கியரின் அருளாலும் என்மூலம் திறக்கப்பட்டது. குரு முகமாக மந்திர தீட்சை பெறுவது சாலச் சிறந்தது. இயலாதவர்கள் தட்சிணா மூர்த்தியையோ, திருச்செந்தூர் முருகனையோ குருவாக எண்ணி சாதனையைத் தொடங்கலாம். திருச்செந்தூர் சென்று குளித்து விட்டு வினாயகரை வணங்கி, முருகனை வணங்கி, குருவாகத் திகழும்படி வேண்டிக் கொண்டு, பிரகாரம் சுற்றி வரும் போது, முருகனுக்கு எதிரில் சுவற்றில் காணப்படும் துவாரத்தில் காதை வைக்கும் போது ஓம், ஓம் என்ற ஓசை கேட்கும். இதுவே முருகன் அருளும் மந்திர தீட்சையாகும்
தகவல் பகிர்வர் https://www.facebook.com/ram5665
மௌனத்தின் அலைகள்.இராம் மனோகர்
http://www.tamilkadal.com/

Saturday, July 25, 2015

நூறு வயது வரை வாழ !!!

ஒ ரு முறை திருதராஷ்டிரன், தன் சகோதரர் விதுரரிடம், ‘‘மனிதனுக்கு ஆயுள் நூறு வருடம் என்பர். எனினும் இதுவரை நூறு வருடங்களைக் கடந்த மனிதர்கள் எவரும் இல்லை என்றே தோன்றுகிறது. இதற்குக் காரணம் என்ன?’’ என்று கேட்டார்.
விதுரர் பதில் சொன்னார்: ‘‘அரசே… மனித ஆயுளை அறுக்கும் வாள்கள் ஆறு. முதலாவது கர்வம். மனிதர்களில் பலர், ‘இந்த உலகில் நானே கெட்டிக்காரன். மற்றவரெல்லாம் முட்டாள்!’ என்று நினைக்கிறார்கள். ஒருவனுக்கு கர்வம் ஏற்பட்டால் கடவுள் சும்மா இருக்க மாட்டார். ஆகவே, கர்வம் இல்லாமல் இருக்க, தனது குற்றம் குறைகளைப் பார்க்க வேண்டும். பிறரிடம் நற்குணங்களையே பார்க்க வேண்டும்.
இரண்டாவது வாள்- அதிகம் பேசுவது. தனக்குப் பேச விஷயங்கள் இல்லாதபோதும், வீண் பேச்சு பேசுபவன், வீண் வம்பை விலைக்கு வாங்குகிறான்.
மூன்றாவது வாள்- தியாக உணர்வு இன்மை. அதீத ஆசையே மனிதனின் தியாக உணர்வைத் தடுக்கிறது. இதை உணர்ந்தால், தியாக உணர்வு தானே வரும்.
நான்காவது வாள்- கோபம். கோபத்தை வெல்பவனே உண்மையான யோகி. கோபம் வந்து விட்டால், தர்மம் எது? அதர்மம் எது என்பது தெரியாமல் போகிறது. விவேகம் இழந்து பாவங்களைச் செய்ய நேரிடுகிறது.
ஐந்தாவது வாள்- சுயநலம். சுயநலமே எல்லா தீமைகளுக் கும் காரணம். சுயநலம் கொண்டவன் தனது காரியத்துக்காக பாவம் செய்யத் தயங்குவதில்லை.
ஆறாவது வாள்- துரோகம். இந்த உலகில் நல்ல நண்பர்கள் கிடைப்பதே அரிது. அப்படிப் பட்டவர்களுக்குத் துரோகம் செய்வது தவறு.
_ இந்த ஆறு விஷயங்களிலிருந்தும் ஒருவன் விலகி வாழ்ந்தால் நிச்சயமாக அவன் நூற்றாண்டை நிறைவு செய்வான்.’’
http://siththan.com/

பஞ்ச கல்பம் !!!

பகலிலும் நட்சத்திரங்களைப் பார்க்கும் கண்ணொளி வழங்கும் சித்தர்களின் பஞ்ச கல்பம்!!!!
இக்காலத்தில் பல இளம் குழந்தைகளும் கண்ணுக்கு கண்ணாடி அணிந்து கொண்டும், பல
பெரியவர்கள் வயதானால் கண்ணாடி அணிந்து கொள்வதையும், கண்ணில் அறுவை சிகிச்சை செய்து கொள்வதையும் கண்டால் சித்தர் கண்ட தத்துவங்கள் எவ்வளவு வீணடிக்கப்படுகின்றன என்று வருந்தியிருக்கிறேன். கண்ணில் அறுவை சிகிச்சை செய்வதால் பிராணன் உலவும் இடமான கண்ணில் உள்ள பிராண சக்தி வீணடிக்கப்பட்டு ஆயுள் குறைகிறது. மாறாக கண்ணுக்கு வலிமை அளிக்கும் சித்த மருந்துகளைக் கையாள்வதால் கண்ணில் உள்ள பிராணன் வலுவாவதுடன் ஆயுளும்
நீட்டிக்கப்படும்.கண் பிராணன் நின்று உலவும் இடம், மேலும் இடது கண்ணில் தச(பத்து) நாடிகளில் ஒன்றான காந்தாரி என்ற நாடியும், வலது கண்ணில் புருடன் என்ற நாடியும் நின்றியங்குகிறது. நம் உடலை தச தேசம் என்று கூறுவார்கள். ஏனெனில் இது தச நாடிகளால் இயங்குவது. உயிர் இறப்பிற்கு பின்னும் இயங்கும் விதத்தைப் பற்றி வராகி மாலை, தச தேச விசால சுவடி இவற்றுள் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்,நம் உடலில் உள்ள எழுபத்திரண்டாயிரம் நாடிகளில், இரண்டு கண்களிலும் கண்ணுக்கு இரண்டாயிரம் நாடிகள் வீதம் நான்காயிரம் நாடிகள் ஓடுகின்றன. கண்களில்
போடும் மருந்து கண்ணிலுள்ள நாடிகள் மூலம்,தச நாடிகளிலும் வியாபித்து உடலெங்கும் சில வினாடிகளில் பரவி விஷம், வாதம், சன்னி, பல கர்ம வியாதிகள், தோல் வியாதிகள், மனோ வியாதிகள் இன்னும் பல வியாதிகள் முதலானவைகளைக் கூட கண்டித்து எறியும் தன்மை உள்ளது. இப்படிக் கண்களில் பிரயோகிக்கும் மருந்தை கலிக்கம் என்பார்கள். இப்படிக் கண்ணில் போடும் மருந்து கண்ணுக்கு பார்வை அளிப்பதுடன் மேலும் பற்பல வியாதிகளை குணமாக்கும் வல்லமையும் பெற்று விளங்குகின்றன. ஏனெனில் அவை அளப்பரிய காந்த சக்தியுடன் செயல்படுகின்றன.
இப்போது தலையில் போடும் மருந்தால் கண்ணுக்கு வல்லமை அளிப்பதைப் பார்ப்போம்.
பஞ்ச கல்பம் என்றழைக்கப்படும் இது சித்தர்கள் கண்ட மருந்து. சமீபத்தில் இருந்த சித்தர்
இராமலிங்க வள்ளலாரும் இந்த மருந்தை மிகப் பெருமையாகக் கூறியுள்ளார். இது தலையில் உள்ள சஹஸ்ராரச் சக்கரத்திற்கு வலிமையளிப்பதுடன், நோய்கள்
நம்மை அணுகாமல் காக்கும் வல்லமையுள்ளது.
பஞ்ச கல்பம் ஐந்து வகையான மூலப் பொருள்களைக் கலந்து தயாரிப்பதால் இந்தப்
பெயரில் அழைக்கப்படுகிறது. கீழ்க்கண்ட சரக்குகளை எடுத்துக் கொள்ளவும்.
1)வெள்ளை மிளகு (சுத்தி செய்தது)---150கிராம்
2)கடுக்காய்த் தோல் (சுத்தி செய்தது)-125கிராம்
3)வேப்பம் பருப்பு உலர்ந்தது---------100கிராம்
4)நெல்லி வற்றல்--------------------75கிராம்
5)கஸ்தூரி மஞ்சள்-------------------50கிராம்
மேற்கண்ட ஐந்து சரக்குகளையும் நன்றாகப் பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி பொடியை சிறிது பால் விட்டு அரைத்து 50 மிலி பசுவின் பாலில் கலந்து காய்ச்ச வேண்டும். பஞ்ச கல்பம் தேய்த்து குளித்து வந்தால் சிறிதும் நோய்களுக்கு இடமில்லாமல் வாழலாம்.
http://tamizhmaruththuvam.blogspot.in/

மந்திரத்தின் கடைசிப்பகுதி பல்லவம் எனப்படும்

மந்திரத்தை உடலாக பாவித்து பார்த்தால் அதன் தலை போன்றது “ஓம்’ என்ற பிரணவம், தலை அல்லது மூளை இல்லாமல் எந்தவொரு செயலும் உடலில் நடைபெறாது என்பது போல் எல்லா மந்திரத்திற்கு முன்னும் ஓம் சேர்க்க வேண்டும். பிரணவத்தை குறித்தும் அதன் மகத்துவத்தை குறித்தும் விரிவாக பிறகு எழுதுகிறேன்.
ஓங்காரத்தை தொடர்ந்து அந்த மந்திரத்திற்குரிய தேவதை ஸ்ரீ என்பதுடன் தொடங்கும், உதாரணமாக ஓம் கணபதி…. என்றவாறு, இருக்கும். அத்துடன் சில சக்தியலைகளை ஈர்க்க பீஜட்சரங்களும் சேர்ந்து வரும்.
மந்திரத்தின் கடைசிப்பகுதி பல்லவம் எனப்படும், அதாவது முடிவுப்பகுதி, இந்த பகுதி ஏழு வகைப்படும்.
1) நமஹ: ந என்றால் இல்லை என்று பொருள். ம என்றால் நான் என்பதாகும். நமஹ என்பது "நான் இல்லை" என்று பொருள்படும். அதாவது அனைத்துமே வணங்கப்படும் அந்த தெய்வ சக்திக்கே அர்ப்பணம் என்றும் நான் என்று எதுவும் இல்லை என்பதாகும். இந்த வகையில் நாம் மனம், புத்தி, அஹங்காரம், சித்தம் என்கிற நான்கையும் வணங்கும் தெய்வ சக்தியுடன் ஒன்றாக்குகிறோம்., நாம் நமஹ எனும் போது நம் மனம், புத்தி, அஹங்காரம் மற்றும் சித்தம் ஆகியவை விழிப்படைந்து அந்த குறிப்பிட்ட தெய்வ சக்தியினை ஈர்த்து அதுவாகவே ஆகிறது. உதாரணத்திற்கு "ஓம் கணேசாய நமஹ" என்றால் கணேசரின் சக்தி மேற்சொன்ன நான்கிலும் மெல்ல மெல்ல‌ பதியத்தொடங்கும்.
2) ஸ்வாஹ: இது அக்னியிற்கு அர்ப்பணிக்கும் மந்திர முடிவு, இதன் மூலம் மந்திர சக்தி அக்னியில் சேர்க்கப்படுகிறது,
அதாவது பஞ்ச பூத அக்னி தத்துவத்தில் மந்திரம் கலந்து பிரபஞ்ச சக்தியினை செயற்படுத்த தொடங்குகிறது. பொதுவாக இப்படியான முடிவுள்ள மந்திரங்கள் ஜெபிக்கும் போது அருகில் விளக்கு, அல்லது ஊதுபத்தி போன்ற அக்னி ஒன்று கட்டாயம் இருக்க வேண்டும்.
3) ஸ்வதா: ஸ்வாஹா என்பது பிரபஞ்ச‌த்தில் சக்தியினை செயற்படுத்தும் அமைப்பு என்றால், ஸ்வதா என்பது அகப்பிரபஞ்சத்தில் உள்ள சக்தியினை செயற்படுத்தும் மந்திர முடிவாகும். பொதுவாக ஸ்வதா என்ற முடிவுடன் மந்திரத்தினை ஜெபித்து அக்னியில் சேர்க்கும் போது அவரவர் முன்னோர்களுக்கு அந்த தெய்வ சக்தி சேரும்.
4) வஷட்: தீய சக்தியினை அழிக்கும் தெய்வசக்தியாக மந்திரம் மாறி பயன்தரும்.
5) வௌஷட்:இது எதிர் சக்திகளை குழப்பி சாதகனிற்கு அமைவாக மாற்றும்.
6) ஹும்:இது எதிரிகள் மேல் கோபசக்தியினை உருவாக்கும்.
7) பட்:சாதகனுக்கு எதிரான சக்தியினை விரட்டும்.
இது போலவே ஒவ்வொரு மந்திரத்திற்கும் ஏழு பண்புகள் இருக்கும். அவை 1) அம்மந்திரத்தை வெளிக்கொணர்ந்த ரிஷி, 2) மந்திரத்தை எப்படி உச்சரிக்க வேண்டும் எனும் சந்தஸ், 3) அந்த மந்திரத்தின் தேவதை, 4) அதன் மூல சக்தியான பீஜம், 5) அதன் சக்தி, 6) இனைக்கும் பகுதியான கீலகம், 7) நம் உடலின் பகுதிகளை ஒழுங்குபடுத்தும் நியாசம் ஆகியன.
மந்திரங்களை குறித்து நமக்கு ஓரளவிற்கு புரிதல் ஏற்பட்டுள்ள நிலையில், இந்து மதத்தின் அடிப்படைகளான "ஜென்மா, கர்மா, ஆத்மா, தர்மா" ஆகியவற்றை குறித்து அடுத்து வரும் பகுதிகளில் பார்ப்போம்.

Sunday, July 19, 2015

சாண்டோ சின்னப்ப தேவரும் கண்ணதாசனும்

Balasubramania Adityan's photo.
Balasubramania Adityan's photo.
Balasubramania Adityan's photo.
சாண்டோ சின்னப்ப தேவரும் கண்ணதாசனும் ஒரு படப்பிடிப்பு சம்பந்தமாக காரில் போய்க் கொண்டிருந்த போது மிக மோசமான விபத்து ஏற்பட்டது.
அதில் சின்னப்பா தேவருக்கு
அவ்வளவாகக் காயம் இல்லை. ஆனால்
கண்ணதாசனுக்கு படுகாயம் ஏற்பட்டு
நினைவிழந்த நிலையில் மருத்துவமனையில் இருந்தார்.
காஞ்சிப் பெரியவரிடம் மிகுந்த பக்தியும்
மரியாதையும் கொண்ட தேவர் அவர்கள்,
சிவஸ்தானம் எனப்படும் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் பெரியவரைப் பார்த்து வணங்கி
‘விபத்து நேர்ந்து விட்டது’ என்று சொன்ன மாத்திரத்தில் ‘கண்ணதாசன் எப்படியிருக்கிறான்’
என்றும் பெரியவர் கேட்க, அதிர்ந்து போனார் தேவர். கண்கள் கலங்க வியப்பும் வருத்தமுமாய்
“அவர் படுகாயத்துடன் நினைவில்லாமல்
மருத்துவமனையில் இருக்கிறார்” என நா தழுதழுக்கக் கூறினார். தேவரின் கவலையை
உணர்ந்த பெரியவர், ‘சரி, கவலைப்படாதே.
இந்த விபூதியைக் கொண்டுபோய், அவன் நெற்றியில் இட்டு, வாயிலும் சிறிதளவு போடு,
மீதி இருப்பதை அவன் தலையணைக்குக் கீழ் வைத்துவிடு’ என்று தன் திருக்கரங்களால் விபூதி
எடுத்து மடித்துத் தர, தேவர் விதிர் விதிர்த்து,
பெரியவரை மறுத்துப் பேசவும் துணிவின்றி
தயங்க, மீண்டும் பெரியவரின் கட்டளைக்கிணங்கி தயக்கத்தோடு கைநீட்டி விபூதியைப் பெறுகிறார்.
தேவரின் தயக்கத்திற்குக் காரணம், கண்ணதாசன் நாத்திகத்தில் தீவிர ஈடுபாடு கொண்டு, திராவிட
கட்சிகளின் சார்பில் பிராமணர்களையும் சனாதன தர்மத்தையும் நாக்கில் நரம்பில்லாது போல் மேடைகளில் பேசி வந்த காலகட்டம் அது. விபத்து
நடந்த ஒரு வாரத்திற்கு முன்புதான் காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கு எதிரிலேயே நடந்த கூட்டத்தின்
மேடையில் படுபயங்கரமாகப் பேசி மடாதிபதிகளை இழிவுபடுத்திப் பேசியிருந்தார்.
எனவே அவரிடம் போய் இந்த விபூதியை எப்படிக் கொடுப்பது என்பதுதான் தேவரின் பெரியத் தயக்கமாயிருந்தது.
ஆனால் முக்காலமுணர்ந்த ஞானியாகிய பெரியவர், தேவரின் மனத்தயக்கத்தை உணர்ந்து ‘தயங்காமல் கொண்டு போய் பூசு. சூரியனை சில சமயம் மேகம்
மறைப்பது போல் நாத்திகமேகம் இதுவரை அவனை மறைத்திருந்தது.
இனி அவன் சூரியனாகத்
திகழ்வான். அவன் எப்பேர்ப்பட்ட பரம்பரையைச் சேர்ந்தவன் தெரியுமா? கோவில் திருப்பணி செய்வதற்கே பிறந்தவர்கள் போல் திகழ்ந்தவர்கள்
நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள்.
வரதராஜப் பெருமாள் கோவில் கோபுரத் திருப்பணியைச் செய்தவர் கண்ணதாசனின் கொள்ளுத் தாத்தா.
ஏகாம்பரநாதர் கோவில் திருப்பணியைச் செய்தவர் கண்ணதாசனின் தாத்தா. காமாக்ஷி கோவில் திருப்பணியைச் செய்தவர் கண்ணதாசனின்
தகப்பனார். இப்ப புரியறதா?’ என திருவாய் மலர்ந்தருளினார்.
தேவர் மனந்தெளிந்தவராய் பெரியவரை வணங்கி விடைபெற்று, நேராக மருத்துவமனைக்குச் சென்றார்.
நினைவிழந்து படுத்திருந்த கண்ணதாசனின்
நெற்றியில் விபூதியைப் பூசிவிட்டு சிறிது விபூதியை வாயிலும் இட்டு, மீதியை தலையணையின் கீழ் வைத்துவிட்டு வீடு திரும்பினார்.
அவர் சிந்தனையெல்லாம் கண்ணதாசன் நினைவு திரும்பி நடந்ததை அறிந்து என்ன சொல்வாரோ என்றே நினைத்தது.
மறுநாள் தேவர் மருத்துவமனை சென்று
கண்ணதாசனின் படுக்கையை சற்றே படபடக்கும் நெஞ்சோடு நெருங்கிய போது கண்ணதாசனுக்கு
நினைவு திரும்பி கண் விழித்திருந்தார். தேவரைப் பார்த்தவுடன், ‘வாங்க, எத்தனை நாளா இப்படி படுக்கையில் இருக்கேன். கொஞ்சம் கண்ணாடியை
எடுத்துக் கொடுங்களேன்.
என் முகத்தைப் பார்க்கணும்’ என்றார்.
நேற்று இட்ட விபூதி இன்னமும் நெற்றியில் திகழ, தேவர்
தயங்கியபடியே தந்த கண்ணாடியில் தன் முகம் கண்ட கண்ணதாசன்
‘இதென்ன விபூதி?’
என்று தேவரை ஏறிட்டுப் பார்க்க, வேறு வழியின்றி வந்தது வரட்டுமென தேவர், தான் பெரியவரைப் பார்த்ததையும், பெரியவர் ஆசீர்வாதம் செய்து
விபூதி கொடுத்ததையும் சொல்ல, கண்ணதாசனின் விழிகளில் அருவியெனக் கொட்டியது கண்ணீர்.
திகைத்து நின்ற தேவரின் செவிகளில் தேனாகப் பாயந்தது கண்ணதாசனின் வார்த்தைகள்,
‘எனக்கா? என்னிடமா இவ்வளவு கருணை?
போனவாரம் தான் அவரை... ஐயோ’ என வாய் விட்டுப் புலம்பி அழுததோடு, தேவரிடம் ஒரு வேண்டுகோளையும் சமர்ப்பித்தார். ‘எனக்கு உடல்
நலமாகி மருத்துவமனையிலிருந்து வெளியேறும்
சமயம் நான் வீட்டிற்குச் செல்லமாட்டேன். இந்தப் பாவியிடம் கருணை வைத்த அந்த மகானிடம் முதலில் என்னை தயவு செய்து அழைத்துச் செல்லுங்கள்’ என மனமுருகி வேண்டினார்.
கண்ணதாசன் வேண்டியபடியே அந்த நல்ல சந்திப்பும், பாவமன்னிப்பும் நடந்தது. மாறியது
மனம், நன்றியில் ஊறியது தினம், வீறிட்டு வெளிவந்தது ஒரு கவிதை. அக்கவிதையை எடுத்துக் கொண்டு, பெரியவரை நேரில் கண்டு
வணங்கி, கவிதையைச் சமர்ப்பித்தார், கண்ணதாசன்.
அக்கவிதை இதோ!:
'பார்த்த மாத்திரத்தில் பாவத்தை அலம்புகின்ற
தீர்த்தப் பெருக்கு, திருவாசகத்தின் உட்கருத்து
கூர்த்த மதியால் மெய்ஞானக் கருத்துணர்த்தும்
முழுமூர்த்தம் கலிமொய்க்கும் இவ்வுலகைக்
காக்கவந்த கண்கண்ட தெய்வம், எம்மதத்தோரும்
சம்மதத்துடன் தம்மதத் தலைவனென தொழுதேத்தும்
தெய்வக் கமலக் கழல் தொழுவோம் வாரீர்!'
கவிதை வரிகளைக் கண்ட பெரியவர், கண்ணதாசனைக்
கனிவோடு நோக்கி, ‘அனந்த கோடி அற்புத லீலா
சாகித்ய மாயமானுஷாய நமோ நமஹ, அர்த்தநாரி
திருவண்ணாமலை சேஷாத்ரி மகானுக்கல்லவா
இது பொருந்தும்’ என்று அருளாசி கூறி,
‘அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும்
நிர்மலப் பொருள் ஞானசூரியனாம், மதத்தின்
பெருமையை எழுது’ என்று திருவாய் மலர்ந்தருள,
அக்கணமே கண்ணதாசனின் மனதில்
'அர்த்தமுள்ள இந்துமதம்' அழகாய் அரும்பி பலநாள்
உழைப்பில் இதழ் விரித்து மணம் வீசியது.

Saturday, July 18, 2015

அவன் ஆறுமுகம் ... நம்மை ஆளுமுகம்

அவன் ஆறுமுகம் ... நம்மை ஆளுமுகம்
அதில் புன்னகை மின்னுதய்யா
கண்களில் ஆனந்த வெள்ளமய்யா
கண்களில் ஆனந்த வெள்ளமய்யா
அஞ்சுதலை நீக்குகின்றாய் ... ஆறுதலும் ஆகின்றாய்
ஏழிசை தாருமய்யா
சொந்தமென்னும் அடியார்க்கு ... சோதனைகள் ஏனய்யா
தாரணி காக்குமய்யா
வடிவேலா சிவபாலா வழிகாட்டுவாய்
எம் நிகழ்காலம் எதிர்காலம் ஒளியேற்றுவாய்
மும்மலமும் போக்குகின்றாய் ... இருவினைகள் தீரய்யா
முக்தியை தாருமய்யா
அண்டிவரும் அன்பருக்கு ஆசிதரும் கந்தய்யா
உன் புகழ் விந்தையய்யா
குகநாதா குருநாதா திசைகாட்டுவாய்
என் குலம்வாழ இனம்வாழ விளக்கேற்றுவாய்.
அவன் ஆறுமுகம் ... நம்மை ஆளுமுகம்
அதில் புன்னகை மின்னுதய்யா
கண்களில் ஆனந்த வெள்ளமய்யா
கண்களில் ஆனந்த வெள்ளமய்யா
Arumuga Saranam...


கார்ய சித்தி தரும் ஸ்ரீ கந்த குரு கவசம் :. (ரகசியம் )

ஸ்ரீ சாந்தானந்த சுவாமிகள் இயற்றிய ஸ்கந்த குரு கவசம்
---------------------------------------------------------------------------------------
பாபத்தைப் பொசுக்கிப் பாரெல்லாம் சிறப்புறவே
ஓம் ஸெளம் சரவணபவ ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்
என்றும்
க்லௌம் ஸௌம் நமஹ
என்று சேர்த்திடடா நாள்தோறும்
ஓமிருந்து நமஹவரை ஒன்றாகச் சேர்த்திடடா
ஒன்றாகக் கூட்டியுமே உள்ளத்திலே இருத்தி ……
175
[முருகனின் மூலமந்திரம் இங்கு உபதேசிக்கப்
படுகிறது! மந்திரம், அதனை சொல்லும் முறை,
எத்தனை முறை ஜெபிக்க வேண்டும், அதன்
பலன்கள் என்னென்ன என்பதையெல்லாம்
விளக்கும் அற்புதப் பகுதி. மந்திரங்கள் எல்லாம்
ஒரு குருமுகமாய்ப் பெறுதல் வேண்டும்
என்பது நியதி. ஆனால்,
இங்கு ஒரு சற்குருவே இதனைச்
சொல்லியிருப்பதால்,
இதனையே முறைப்படி முருகன் சந்நிதியில்
வைத்து, அங்கிருந்து ஜெபிக்கத் தொடங்கலாம்
எனப் பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
விருப்பமிருப்பின், அவ்வாறே செய்யலாம்.
முருகனருள் முழுதுமாய் முன்னிற்கும்! ]
ஹ்ருதயத்தில்
முருகனை இருத்திவிடு இக்கணமே
இக்கணமே மூலமந்த்ரம் ஏத்திவிடு ஏத்திவிடு
மூலமதை ஏத்துவோர்க்கு காலபயம்
இல்லையடா
காலனை நீ ஜயிக்க கந்தனைப் பற்றிடடா
சொன்னபடிச் செய்தால் சுப்ரமண்ய குருநாதன்
…… 185
தண்ணொளிப் பெருஞ்சுடராய்
உன்னுள்ளே தானிருப்பான்
ஜகமாயை ஜயித்திடவே செப்பினேன் மூலமுமே
மூலத்தை நீ ஜபித்தே முக்தனுமாகிடடா
அக்ஷர லக்ஷமிதை அன்புடன் ஜபித்துவிடில்
எண்ணிய தெலாம்கிட்டும் எமபய மகன்றோடும்
…… 190
மூவுலகும் பூஜிக்கும் முருகனருள்
முன்னிற்கும்
பூவுலகில் இணையற்ற பூஜ்யனுமாவாய் நீ
கோடித்தரம் ஜபித்துக் கோடிகாண
வேண்டுமப்பா
கோடிகாணச் சொன்னதை நீ நாடிடுவாய் மனமே
ஜன்மம் கடைத்தேற ஜபித்திடுவாய்
கோடியுமே …… 195
வேதாந்த ரகசியமும் வெளியாகும் உன்னுள்ளே
வேத சூட்சுமத்தை விரைவாகப் பற்றிடலாம்
சுப்ரமண்யகுரு ஜோதியாயுள் தோன்றிடுவான்
அருட் பெரும் ஜோதியான ஆறுமுக
ஸ்வாமியுமே
அந்தர் முகமிருந்து ஆட்கொள்வான் சத்தியமாய்
…… 200
கருவூரார் போற்றும் காங்கேயா கந்தகுரோ
மருதமலைச் சித்தன் மகிழ்ந்துபணி பரமகுரோ
சென்னிமலைக் குமரா சித்தர்க்கு அருள்வோனே
சிவவாக்கியர் சித்தர் உ னைச் சிவன் மலையில்
போற்றுவரே
பழனியில் போகருமே பாரோர் வாழப்
ப்ரதிஷ்டை செய்திட்டார் (305)
புலிப்பாணி சித்தர்களால் புடை சூழ்ந்த
குமரகுரோ
கொங்கில் மலிந்திட்ட ஸ்கந்த குருநாதா
கள்ளம் கபடமற்ற வெள்ளை உ ள்ளம் அருள்வீரே
கற்றவர்களோடு என்னைக் களiப்புறச்
செய்திடுமே
உ லகெங்கும் நிறைந்திருந்தும் கந்தகுரு உ
ள்ளஇடம் (310)
ஸ்கந்தகிரி என்பதை தான் கண்டுகொண்டேன்
கண்டுகொண்டேன்
நால்வர் அருணகிரி நவமிரண்டு சித்தர்களும்
பக்தர்களும் போற்றும் பழநிமலை முருகா கேள்
கொங்குதேசத்தில் குன்றுதோறும்
குடிகொண்டோய்
சீலம் நிறைந்த சேலம்மா நகரத்தில் (315)
கன்னிமார் ஓடையின்மேல் ஸ்கந்தகிரி அதனில்
ஸ்கந்தாஸ் ரமத்தினிலே ஞானஸ்கந்த
சத்குருவாய்
அமர்ந்திருக்கும் ஜோதியே ஆதிமூல மானகுரோ
அயர்ச்சியை நீக்கிடுவாய் என்
தளர்ச்சியை அகற்றிடுவாய்
சுகவனேசன் மகனே சுப்ரமண்ய ஜோதியே (320)
உள்ளொளiயாய் இருந்து உ ன்னில்
அவனாக்கிடுவன்
தன்னில் உ னைக்காட்டி உ ன்னில் தனைக்காட்டி
எங்கும் தனைக்காட்டி எங்குமுனைக்
காட்டிடுவான்
ஸ்கந்தஜோதி யானகந்தன் கந்தகிரி இருந்து
தண்டாயுதம் தாங்கித் தருகின்றான்
காட்சியுமே (420)
கந்தன் புகழ் பாடக் கந்தகிரி வாருமினே
கந்தகிரி வந்து நிதம் கண்டுய்ம்மின் ஜகத்தீரே
கலிதோஷம் அகற்றுவிக்கும்
கந்தகுரு கவசமிதை
பாராயணம் செய்து பாரில் புகழ் பெறுமின்
ஸ்கந்தகுரு கவச பலன் பற்றறுத்துப்
பரம்கொடுக்கும் (425)
ஒருதரம் கவசம் ஓதின் உ ள்ளழுக்குப் போகும்
இருதரம் ஏற்றுவீரேல் எண்ணியதெல்லாம்
கிட்டும்
மூன்றுதரம் ஓதின் முன்னிற்பன் ஸ்கந்தகுரு
நான்முறை ஓதி தினம் நல்லவரம் பெறுவீர்
ஐந்துமுறை தினமட ஓதி பஞ்சாட்சரம்
பெற்று (430)
ஆறுமுறை யோதி ஆறுதலைப் பெற்றிடுவீர்
ஏழு முறை தினம் ஓதின் எல்லாம் வசமாகும்
எட்டுமுறை ஏத்தில் அட்டமா சித்திகிட்டும்
ஒன்பதுதரம் ஓதின் மரணபயம் ஒழியும்
பத்துதரம் ஓதி நித்தம்
பற்றறுத்து வாழ்வீரே (435)
கன்னிமார் ஓடையிலே நீராடி நீறுபூசிக்
கந்தகுரு கவசம் ஓதி கந்தகிரி ஏறிவிட்டால்
முந்தை வினை எல்லாம் கந்தன் அகற்றிடுவான்
நிந்தைகள் நீங்கிவிடும்
நிஷ்டையுமே கைகூடும்
கன்னிமார் ஓடை நீரை கைகளiல் நீ எடுத்துக்
(440)
கந்தன் என்ற மந்திரத்தைக் கண்மூடி உ
ருவேற்றி
உ ச்சியிலும் தௌiத்து உ
ட்கொண்டு விட்டிட்டால் உ ன்
சித்த மலம் அகன்று சித்த சுத்தியும்
கொடுக்கும்
கன்னிமார் தேவிகளைக் கன்னிமார் ஓடையிலே
கண்டு வழிபட்டு கந்தகிரி ஏறிடுவீர் (445)
கந்தகிரி ஏறி ஞான ஸ்கந்தகுரு கவசமிதைப்
பாராயணம் செய்துலகில் பாக்கியமெல்லாம்
பெற்றுடுவீர்.
முக்தியை நோக்கி எத்திக்கும்
செல்லவேண்டாம் – முருகன் மூல மந்திரம்
யாமிருக்க பயமேன்
ஸ்ரீ சத்குரு சாந்தானந்த சுவாமிகள் அருளிய
ஸ்கந்த குரு கவசத்தில் முருகனின் மூல
மந்திரம் உள்ளது. அந்த மந்திரத்தை
தியானித்து உருஏற்ற முருகனின் அருள்
கிடைத்து மும்மலங்கள் ஆகிய ஆணவம்,
கன்மம்,
மாயை நம்மைவிட்டு அகன்று முக்தி நமக்கு
சித்தியாகுமாம், முக்தியை தேடி எங்கும்
அலைய வேண்டாம் என்று சொல்கிறது கந்த
குரு கவசம்.
##############################
#########################
மூல மந்திரம்:
ஓம் ஸெளம் சரவணபவ ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்
க்லௌம் ஸௌம் நமஹ

Friday, July 17, 2015

காமாக்ஷி அம்பாள் ஆயிரம் போற்றி!

காமாக்ஷி அம்பாள் ஆயிரம் போற்றி!
க ாமாக்ஷி அம்பாள் ஆயிரம் போற்றி!
ஓம் ஸ்ரீ காஞ்சி நகர்வாழ் கன்னிகை போற்றி
ஓம் காமகோடி பீடபத்மத் துறைந்தனை போற்றி
ஓம் கைலாஸ வாஸிநீ ஸ்ரீகாமாக்ஷீ போற்றி
ஓம் காருண்ய ரூபிணீ ஸ்ரீகாயத்ரீ போற்றி
ஓம் ஸ்ரீகாமபீடந்தனில் ஒளிர்ந்தனை போற்றி
ஓம் ஸ்ரீகாயத்ரீ மந்திரத் திருந்தனை போற்றி
ஓம் காருண்ய கிருபா கடாக்ஷிணீ போற்றி
ஓம் காயத்ரீ மண்டபத்து அமர்ந்தனை போற்றி
ஓம் ஸ்ரீகாமகோடி காமாக்ஷி காயத்ரீ போற்றி
ஓம் மாவடியின் கீழமர்ந்த மங்கையே போற்றி

ஓம் ஸ்ரீகாமாக்ஷி முக்கண்ணி ஸ்ரீதேவி போற்றி
ஓம் ஸ்ரீகாயத்ரீ ஸாவித்ரீ ஸரஸ்வதீ போற்றி
ஓம் கரும்பு வில் கைக்கொண்ட கன்யகை போற்றி
ஓம் கருணை பொழியும் கண்ணுடையினை போற்றி
ஓம் நவரத்ன சிம்மபீடத் தமர்ந்தனை போற்றி
ஓம் ரக்த பத்மாசனத் திருந்தனை போற்றி
ஓம் கோடி காமமருளும் காமகோடி போற்றி
ஓம் பகழி பாச அங்குசமும் கொண்டனை போற்றி
ஓம் வாணியாய் வந்தருள் வாமாக்ஷி போற்றி
ஓம் ஸ்ரீகாமேசுவர ப்ரிய காமேசுவரீ போற்றி

ஓம் ஓம் கடவூருறையும் கமலை போற்றி
ஓம் அருளது நல்கும் அம்பிகை போற்றி
ஓம் குலமலையரசன் கொடியே போற்றி
ஓம் ஸர்வ ஸங்கீத ரஸிகையே போற்றி
ஓம் பரசிவனிடத் தொளிர் விளக்கே ! போற்றி
ஓம் அவனியின் படைப்பின் ஆதியே ! போற்றி
ஓம் பிந்துஸ்தானத்தொளிர் நன்மணியே! போற்றி
ஓம் ஆதி அந்தமிலாதொரு அன்னையே! போற்றி
ஓம் இன்பம் நல்கிடும் ஈசுவரீ போற்றி
ஓம் சங்க்க சக்ர கதா தாரிணீ போற்றி

ஓம் பரிசு சூல பினாக தாரிணீ போற்றி
ஓம் பூர்ணிமை சந்திர நிவாஸிநீ போற்றி
ஓம் பூரண கிருபா கடாக்ஷிணீ போற்றி
ஓம் பூர்ணிமை வாஸிநீ பூர்ணீ போற்றி
ஓம் புவனம் ஆளும் புவநேசுவரீ போற்றி
ஓம் சதகோடி மன்மத சுந்தரீ போற்றி
ஓம் ஓங்கார ரூபத்துள் விளங்கினை போற்றி
ஓம் கருணையருளும் கண்மணி போற்றி
ஓம் அட்டமூர்த்தங்கள் தொழும் அன்னையே போற்றி
ஓம் ஞானியர் மனக்குகை அடைந்தனை போற்றி

ஓம் திருமால் இதயம் சேர்ந்தனை போற்றி
ஓம் ஸ்ரீசக்கர நடுவண் ஒளிர்ந்தனை போற்றி
ஓம் மல்லிகை மலரொத்த புன்முறுவலோய் போற்றி
ஓம் பஞ்சாக்ஷர பீடத்து விளங்கினை போற்றி
ஓம் இதழாயிர பத்மத்து அமர்ந்தனை போற்றி
ஓம் நவரத்னமணி த்வீபத் தொளிர்ந்தனை போற்றி
ஓம் திருக்கையில் சூலம் கொண்டனை போற்றி
ஓம் பக்த ப்ரிய பரமேசுவரீ போற்றி
ஓம் விந்தியாசல நிவாஸிநீ பார்வதீ போற்றி
ஓம் அருள்புரி அன்னை ஆனந்தீ போற்றி

ஓம் அட்ட சித்தியருள் காமாக்ஷீ போற்றி
ஓம் மனக்குகையினில் உறை மாதங்கீ போற்றி
ஓம் இதயக் கோயிலிலொளிர் விளக்கே போற்றி
ஓம் உவமையிலாத்தாள் உடையினை போற்றி
ஓம் ஸத் சித் ஆனந்த வடிவே போற்றி
ஓம் பஞ்ச பூத காரணீ பஞ்சாக்ஷரீ போற்றி
ஓம் எண்ணிய எண்ணியாங்கு அருள்வோய் போற்றி
ஓம் ஸர்வ மங்கள சக்தி சுமங்கலை போற்றி
ஓம் கௌரீ காமாக்ஷீ காயத்ரீ போற்றி
ஓம் ஸ்ரீதுர்கா லக்ஷ்மீ ஸ்ரீஸரஸ்வதீ போற்றி

ஓம் வீரீ அமரீ வேதாளி போற்றி
ஓம் நவமணி கிரீடமும் பூண்டனை போற்றி
ஓம் நலம் நல்கிடும் நாயகீ போற்றி
ஓம் பயம் ஒழிக்கும் பாலையே போற்றி
ஓம் முக்கண்ணுடையோய் முக்கண்ணீ போற்றி
ஓம் நிரந்தரி சுதந்தரீ துரந்தரி போற்றி
ஓம் ரூப ரஸ கந்த ரூபேசுவரீ போற்றி
ஓம் பிரம்ம விஷ்ணு சிவ ஆதீசுவரீ போற்றி
ஓம் பிராஹ்மீ மகேசுவரீ கௌமாரீ போற்றி
ஓம் வைஷ்ணவீ வாராஹீ வாமாக்ஷீ போற்றி

ஓம் இந்த்ராணீ ஸ்ரீ சாமுண்டா சிவதூதீ போற்றி
ஓம் தேவீ பரமேசுவரீ ஸ்ரீலலிதையே போற்றி
ஓம் வரமது அருளிடும் வாராஹீ போற்றி
ஓம் மாசற்ற அன்னையே அம்பிகை போற்றி
ஓம் ஸர்வ பாப விநாசனீ போற்றி
ஓம் ஸர்வ துஷ்ட ஸம்ஹரிணீ போற்றி
ஓம் பத்மாசனத் தமர்ந் தருள் புரிந்தனை போற்றி
ஓம் ஸ்ரீகாமேசுவர வாமாக்ஷீ ஸ்ரீகாமாக்ஷி போற்றி
ஓம் ஸர்வேசுவரீ ஸர்வ ரூபிணீ போற்றி
ஓம் ஸர்வா லங்காரப்ரிய ஸ்ரீஸரஸ்வதீ போற்றி

ஓம் மதுகைடப மஹிஷாசுர மர்த்தனீ போற்றி
ஓம் சும்ப நிசும்ப ஸம்ஹார சுந்தரீ போற்றி
ஓம் சண்ட முண்ட ஸம்ஹார சாமுண்டீ போற்றி
ஓம் சரத்காலத் தொளிர் நிலவொளி போற்றி
ஓம் அமரர்கள் போற்றும் அமலை போற்றி
ஓம் விண்ணவர் விரும்பும் விமலை போற்றி
ஓம் மண்ணவர் மகிழும் சுமங்களை போற்றி
ஓம் பார்வதீ உமா மகேசுவரீ போற்றி
ஓம் அன்பர்கள் மனத்தமர் அன்னமே போற்றி
ஓம் அகிலம் ஈன்றதோர் அம்மையே! போற்றி

ஓம் பூவுலக சிருஷ்டிக் காரணீ போற்றி
ஓம் இரத்தின மாலை பூண்டனை போற்றி
ஓம் பக்தர்கள் பற்றும் பற்றே போற்றி
ஓம் இதய வனத்தில்வரு குயில் போற்றி
ஓம் இதயம் குளிர அருள்வோய் போற்றி
ஓம் அறுபத்து நான்காயிரப் பீடரசே!! போற்றி
ஓம் அக்ஷர ரூபிணீ அம்பிகை போற்றி
ஓம் வானவர் வாழ்த்தும் வடிவே போற்றி
ஓம் உலகோர் வாழ்த்தும் உமையே போற்றி
ஓம் சந்திர மண்டல கமலத் தொழுகுதேன் போற்றி

ஓம் சந்திர நிவாஸினீ சாந்தினி போற்றி
ஓம் பஞ்சதசாக்ஷரீ ஸ்ரீபார்வதீ போற்றி
ஓம் தேகதேவாலயத் துறைந்தனை போற்றி
ஓம் தேன் பெருகும் மலரடைந்தனை போற்றி
ஓம் ஸரஸ்வதீ லெக்ஷ்மீ கிங்கரீ போற்றி
ஓம் பஞ்சப்ரேதரசனத் தமர்ந்தனை போற்றி
ஓம் பரமானந்த சிவ பார்வதீ போற்றி
ஓம் பார்வதி சங்கரீ சக்தியே போற்றி
ஓம் சிவை முக்கண்ணி ஸ்ரீதேவீ போற்றி
ஓம் மாணிக்கக் கடகம் பூண்டனை போற்றி

ஓம் சோடசாக்ஷரீ மாமந்திரத் திருந்தனை போற்றி
ஓம் யௌவன மாங்கல்ய சுமங்கலை போற்றி
ஓம் ஸர்வலோக பயங்கரீ சிவையே போற்றி
ஓம் பிரகாச பீடத்து அமர்ந்தனை போற்றி
ஓம் சந்திரசூடாமணி கிரீடம் பூண்டனை போற்றி
ஓம் ஸ்ரீமேருசுக்கரத் துறைந்தனை போற்றி
ஓம் சரண கமலம் கொண்ட கமலை போற்றி
ஓம் கசல கலா ரூபிணீ ஸ்ரீமாத்ருகா போற்றி
ஓம் பிரபஞ்ச ரூபிணீ ஸ்ரீகாயத்ரீ போற்றி
ஓம் பாலை யுவதி விருத்தையே போற்றி

ஓம் பக்தானுக்ரஹ ஸ்ரீபராசக்தியே போற்றி
ஓம் திரிபுரமெரித்த திருபுராந்தகீ போற்றி
ஓம் பரசிவமிடப் பாகம் கொண்டனை போற்றி
ஓம் காலனைக் கொன்ற காளிகை போற்றி
ஓம் திருக்கையில் வெற்றிவேல் கொண்டனை போற்றி
ஓம் சுந்தர வெள்ளச் சுதந்தரீ போற்றி
ஓம் ஸ்ரீகாளீ கராளி துர்க்கை போற்றி
ஓம் நீலோத்பல மலர் தரித்தனை போற்றி
ஓம் நீடூழி ஆளும் நிலமகள் போற்றி
ஓம் திருஆலங்காடு சிவத்தை எதிர்த்தனை போற்றி

ஓம் அமிழ்த மயமான அன்னையே போற்றி
ஓம் சிம்ம வாஹனம் கொண்ட சிவையே போற்றி
ஓம் பிறையினைச் சிரமேற் கொண்டனை போற்றி
ஓம் பிறங்கு மோக்ஷõமிர்தப் பெருக்கே! போற்றி
ஓம் பிரம்மம் போற்றும் பிராஹ்மீ போற்றி
ஓம் சிவமுடனிருக்கும் செல்வியே போற்றி
ஓம் முப்பத்து முக்கோடியின் முதலாதியே போற்றி
ஓம் இதய வானத்து நிலவொளி போற்றி
ஓம் கதம்ப வனத்தமர் கலியாணீ போற்றி
ஓம் பயங்கர உருக்கொண்ட ஸ்ரீதுர்க்கை போற்றி

ஓம் கவிகள் கருத்தினிற் கலந்தனை போற்றி
ஓம் கருணா நிதியே ஸ்ரீ காயத்ரீ போற்றி
ஓம் கஷ்ட நிவாரணக் காரணீ போற்றி
ஓம் வேத விருக்ஷத்தினி லொளிர்ந்தனை போற்றி
ஓம் உபநிடத மலரின் மணமே போற்றி
ஓம் ஞானக் கனியின் சுவையே போற்றி
ஓம் மோக்ஷ ஸாம்ராஜ்யத் தனி அரசியே போற்றி
ஓம் பல்லோர் புகழும் பரிமளை போற்றி
ஓம் பூமத்திய ஸ்தானமும் அடைந்தனை போற்றி
ஓம் ஆகாய பீட ந்தனிலு மமர்ந்தனை போற்றி

ஓம் ஸ்ரீ காமகோடி ஆதி பீடக் காரணி போற்றி
ஓம் காமனையும் வென்ற கடாக்ஷணி போற்றி
ஓம் ஸ்ரீசக்கர நிவாஸநீ ஸ்ரீ காமாக்ஷி போற்றி
ஓம் உலகெலா முணர்ந் தோதுவோய் போற்றி
ஓம் உவமை சொலா உரு வுடையினை போற்றி
ஓம் பிரம்மானந்த வல்லி பிராம்மணீ போற்றி
ஓம் வீணாவாத்ய ப்ரிய பரமேசுவரீ போற்றி
ஓம் ஸ்ரீஅகில அண்டேசுவரீ அம்மையே! போற்றி
ஓம் வெள்ளயங் கிரிதனி லமர்ந்தனை போற்றி
ஓம் பரசிவ மனத்தைக் கவர்ந்தனை போற்றி

ஓம் ஸ்ரீகைலாச நாதனுட னுறைந்தனை போற்றி
ஓம் பக்தர்க் கருள்புரி பகவதீ போற்றி
ஓம் பூர்ண சந்திரமுக முடையினை போற்றி
ஓம் பார்தனி லொளிரும் பார்வதீ போற்றி
ஓம் வடமொழி எழுத்தின் வடிவினை போற்றி
ஓம் முக்கண்ணுடைய மூகாம்பிகை போற்றி
ஓம் இறந்ததோர் சிசுவை எழுப்பினை போற்றி
ஓம் வேதாகம வனத்துறை வேதாந்தி போற்றி
ஓம் அருமைச் செல்வியே ஆனந்தி போற்றி
ஓம் மண்டலம் மகிழும் மகேசுவரீ போற்றி

ஓம் புண்ணிய ரூபிணீ புவநேசுவரீ போற்றி
ஓம் புஷ்ப விமானந்தனி லமர்ந்தனை போற்றி
ஓம் பராசக்தி பீடத் தொளிர்ந்தனை போற்றி
ஓம் மனக்கண் முன் ஒளிர் நன் மதியே போற்றி
ஓம் மாயைத் திரையினை விலக்கினை போற்றி
ஓம் ஆசையை அகற்றிடும் அன்னையே போற்றி
ஓம் அன்பை அருளும் அம்பிகை போற்றி
ஓம் ஸ்ரீசண்டிகே என் இதயத் தமர்வோய் போற்றி
ஓம் விண்மீன் நடுவண் விளங்கினை போற்றி
ஓம் விருத்தையே உமையே விமலையே போற்றி

ஓம் அறியாமை அகற்றும் அன்னை போற்றி
ஓம் ஞானக் கனி நல்கும் நாயகீ போற்றி
ஓம் ஞானவானத் தொளிர் நன்மதியே போற்றி
ஓம் அத்வைத ரூபிணீ அம்பிகை போற்றி
ஓம் ஸ்ரீசந்த்ர சேகரகுரு சங்கரீ போற்றி
ஓம் ஸ்ரீசந்த்ர மௌளீசுவர சக்தியே போற்றி
ஓம் என் இதயத் தமர்ந்த ஈசுவரீ போற்றி
ஓம் ஆனந்தம் அருளும் அம்பிகை போற்றி
ஓம் அருள்மழை பொழியு மகிலேசுவரீ போற்றி
ஓம் தாமரை நடுவண் தங்கினை போற்றி

ஓம் நந்தவன நடுவளர் நாயகீ போற்றி
ஓம் நாற்கரம் கொண்ட நவ துர்க்கை போற்றி
ஓம் பிரம்மசாரிணீ பிராஹ்மீ போற்றி
ஓம் அம்பிகை ரூபிணீ அபிராமீ போற்றி
ஓம் ஆட்கொண் டருளும் ஸ்ரீதேவீ போற்றி
ஓம் வருவோய் அமர்ந்தருள் புரிவோய் போற்றி
ஓம் அறுபத்து நாற் கலைகளினரும்பே போற்றி
ஓம் அறியாமை யகற்றுமுறு வாயினை போற்றி
ஓம் உபநிடத கமலத்தினி லோங்காரி! போற்றி
ஓம் பார்வதீ ஸ்ரீசக்ர லலிதேசுவரி! போற்றி

ஓம் மின்னற் கொடிபோல் விளங்கினை போற்றி
ஓம் அஷ்ட ஐசுவரியப் பிரதானிகை போற்றி
ஓம் வானவர் வாழ்த்தும் வாமாக்ஷீ போற்றி
ஓம் முனிவர்க் கருள்புரி மூகேசுவரீ போற்றி
ஓம் பூவுலகம் புகழ் பூதேசுவரீ போற்றி
ஓம் அகிலம் யாவுமாளும் அகிலேசுவரீ போற்றி
ஓம் குயிலினுமினிய குரலுடையினை போற்றி
ஓம் மலையரசன் மனம் மகிழ் மங்கை போற்றி
ஓம் மகிழ்வுடன் அருள்செயும் மாதா போற்றி
ஓம் நவரத்னபொன் ரதந்தனி லமர்ந்தனை போற்றி

ஓம் பிரகாச பீடத்திருந் தாண்டனை போற்றி
ஓம் துக்கம் துடைத்தருள் துர்க்கை போற்றி
ஓம் கஷ்டம் களைந்தருள் காயத்ரீ போற்றி
ஓம் நன்மை நல்கிடும் நாயகீ போற்றி
ஓம் பயம் போக்கிடும் பவாநீ போற்றி
ஓம் காக்ஷி கொடுத்தருள் காமாக்ஷீ போற்றி
ஓம் திருமகள் வணங்கிடும் தேவியே போற்றி
ஓம் பக்தர் பற்றுமோர் பரமேசீ போற்றி
ஓம் திருக்கயிலைமலை நடுவண் திகழ்ந்தனை போற்றி
ஓம் சிதக்னி குண்டத் தொளிர் தேவேசீ போற்றி

ஓம் புன்னகை புரியும் பூங்கொடி போற்றி
ஓம் மார்பினிற் பதக்கம் பூண்டனை போற்றி
ஓம் வேத ரூபிணீ வேதேசுவரீ போற்றி
ஓம் என் தாமரை இதயத் தமர்ந்தனை போற்றி
ஓம் சிருஷ்டியாதி காரணி பரசிவையே போற்றி
ஓம் கஸ்தூரி திலகக் காமாக்ஷீ போற்றி
ஓம் பரிமள ரூபிணீ பரிமளை போற்றி
ஓம் பில்வ தளந்தனி லடங்கினை போற்றி
ஓம் அறிவுக் கடலின் அருமணி போற்றி
ஓம் சிவே சரண்யே ஸ்ரீசாரதை போற்றி

ஓம் துஷ்ட விநாசக் காரணீ போற்றி
ஓம் மாயை உலகின் நன்மதியே! போற்றி
ஓம் மதியினை யிகழ் முக முடையினை போற்றி
ஓம் கன்னிகை ஸ்ரீசிவபரமேசீ போற்றி
ஓம் கயிலைச் சிவமுடன் கலந்தனை போற்றி
ஓம் மனவானத் தொளிர் நன்மதியே போற்றி
ஓம் அரும்பொன் மாலை யணிந்தனை போற்றி
ஓம் பிலாகாச ரூபிணி ஸ்ரீகாமாக்ஷி போற்றி
ஓம் காஞ்சீ ஆவரணத் தடங்கினை போற்றி
ஓம் காமகோடி சக்கரத் தொளிர்ந்தனை போற்றி

ஓம் காமகோடியாதிபீடக் காம கன்யகை போற்றி
ஓம் பதிரியில் ஜோதிப் பார்வதீ போற்றி
ஓம் துவாரகைக் காளீ துர்க்கை போற்றி
ஓம் ஜகந்நாதத் தொளிர் விமலை போற்றி
ஓம் சிருங்க கிரியினிலமர் சாரதே போற்றி
ஓம் கருத்தினி லடங்காக் காமேசுவரீ போற்றி
ஓம் உலக உண்மையின் உருவே போற்றி
ஓம் வடிவழகமைந்தோர் வாமேசுவரீ போற்றி
ஓம் தேவர்கள் தொழும் தேவேசுவரீ போற்றி
ஓம் இளந்தளிர் விரலுடை இமையே போற்றி

ஓம் சகல சௌபாக்கிய ஆதிகாரணீ போற்றி
ஓம் அகில மா மந்திரத் தடங்கினை போற்றி
ஓம் அன்பர்கள் நாடும் அபிராமி போற்றி
ஓம் சகல கலாவல்லி ஸ்ரீ காமாக்ஷி போற்றி
ஓம் தாமரை மலர்க்கரம் கொண்டனை போற்றி
ஓம் தாரகன் மார்பினைத் தகர்த்தனை போற்றி
ஓம் நான்மறையின் நடு நாயகம் போற்றி
ஓம் அஷ்டலெக்ஷிமியாளும் அரசாயினை போற்றி
ஓம் கோவை நிறமுடைக் கோமதி போற்றி
ஓம் பிறவியகற்றும் பிரம்ம மாயினை போற்றி

ஓம் வெண் தாமரையிலமர் வேதநாயகி போற்றி
ஓம் தென்முகனிடத்தினி லொளிர்ந்தனை போற்றி
ஓம் பீஜாட்சரத் தொளிர் பீஜாக்ஷரீ போற்றி
ஓம் சாவித்ரீ ஸர்வ மங்களை போற்றி
ஓம் சாந்தியி னிருப்பிடச் சங்கரீ போற்றி
ஓம் சண்டிகை ரூபிணீ ஸ்ரீசாமுண்டி போற்றி
ஓம் தாண்டவப்ரிய தாக்ஷõயணீ போற்றி
ஓம் மகேசன் மனம் மகிழ் மங்களை போற்றி
ஓம் சிவபாதியுடம்பினிற் பதிந்தனை போற்றி
ஓம் மல்லிகை முல்லையின் மணமே போற்றி

ஓம் தும்பை மலரின் தூய்மையே போற்றி
ஓம் தேனினுமினிய மொழியினை போற்றி
ஓம் தேவர்கள் தேடும் தேவேசுவரீ போற்றி
ஓம் அன்னத்தின் அருங்குண அம்மையே போற்றி
ஓம் மின்னலை யிகழ் முக முடையினை போற்றி
ஓம் கொண்டையிற் கொன்றை கொண்டனை போற்றி
ஓம் ஒட்டியாண பீடந்தனி லொளிர்ந்தனை போற்றி
ஓம் காமகோடி பீடத் தமர்ந்தரசியே போற்றி
ஓம் ஏகாம்பரனிடத் தொளிர் ஏகேசுவரீ போற்றி
ஓம் காமேசுவரீ கமலே ஸ்ரீகாமாக்ஷீ போற்றி

ஓம் மூலகாமாக்ஷியின் ஆதிமூலமே போற்றி
ஓம் தவம்புரியும் தவக் காமாக்ஷீ போற்றி
ஓம் குகையினிற் குலாவும் குமரியே போற்றி
ஓம் யந்திரத்தினி லமர் யதீசுவரீ போற்றி
ஓம் வெளிதனிலொளிரும் வேதாளி போற்றி
ஓம் காயத்ரீ மண்டபக் காமகோடி போற்றி
ஓம் தீபப்பிரகாசத் தொளிர்ந்தனை போற்றி
ஓம் சிந்தையடக் கருள்புரி சிவகாமீ போற்றி
ஓம் மூவுலகத்தின் தோற்ற முதலாயினை போற்றி
ஓம் தருமத்தினுருவாயு மமர்ந்தனை போற்றி

ஓம் அகில சக்தியினாதி சக்தியே போற்றி
ஓம் தாமரைத் தடாகத்தினிலவொளி போற்றி
ஓம் பாற்கடல் நடுமவர் பார்வதீ போற்றி
ஓம் காமனின் விற்புருவ முடையினை போற்றி
ஓம் வண்டினை யிகழ்விழி யுடையினை போற்றி
ஓம் செந்தாமரை மலரடி யுடையினை போற்றி
ஓம் இருபத்து நான்கக்ஷரத் தடங்கினை போற்றி
ஓம் ஸ்ரீகச்சியின் நடுவமர் ஸ்ரீகாமாக்ஷி போற்றி
ஓம் திருக்கயிலையமர் மனமகிழ் கமலை போற்றி
ஓம் பார்வதீ பகவதீ பைரவ ஓங்காரீ போற்றி

ஓம் காஞ்சீ ரத்ன பீடத் தமர்வோய் போற்றி
ஓம் அறியா வனமெரி அக்னியே! போற்றி
ஓம் ஆதரித் தாண்டருள் அம்பிகை போற்றி
ஓம் தாயென வந்தருள்செய் காமாக்ஷி போற்றி
ஓம் தாமதம் செயாதருள் புரிவாய் போற்றி
ஓம் அடியேனை யாண்டருள் அம்மையே போற்றி
ஓம் மூகனுக்கருள் செய்த மூகாம்பிகை போற்றி
ஓம் செஞ்சுடர் உடலுடைச் செல்வமே போற்றி
ஓம் செங்கனி வாயுடைச் செல்வியே போற்றி
ஓம் குஞ்சிதச் சரணம் கொண்டனை போற்றி

ஓம் ரஞ்சித வடிவம் உடையினை போற்றி
ஓம் பஞ்ச புஷ்ப பாணமும் தரித்தனை போற்றி
ஓம் குங்கும ஆடையும் கொண்டனை போற்றி
ஓம் கருணை வெள்ளக் காமாக்ஷி போற்றி
ஓம் சஞ்சல உலகினில் சாந்தினி போற்றி
ஓம் தங்க நிறத்துடன் நின்றனை போற்றி
ஓம் யோகநிலை கொண்ட காமாக்ஷி போற்றி
ஓம் வினைகளகற்றிட வரும் தாய் போற்றி
ஓம் நினைப்பவர் உளத்துறை காமாக்ஷி போற்றி
ஓம் கலைமகள் வாழ்த்தும் காமாக்ஷி போற்றி

ஓம் சிந்தையடக் கருள்புரி சிவேசுவரீ போற்றி
ஓம் தாஸனுக் கருள்புரி தாக்ஷõயணீ போற்றி
ஓம் ஸெளபாக்கிய சுந்தரீ காமரூபி போற்றி
ஓம் மதுரை மீனாக்ஷியாயொளிர் காமாக்ஷி போற்றி
ஓம் காசி விசாலாக்ஷியாயமர் காமாக்ஷி போற்றி
ஓம் மயிலைக் கற்பக மஹேசுவரீ போற்றி
ஓம் காயத்ரீயாயொளிர் கமலே காமாக்ஷி போற்றி
ஓம் வேகமாய் வந்தருள்பொழி காமாக்ஷி போற்றி
ஓம் மங்களம் நல்கிடும் மங்களை போற்றி
ஓம் அஞ்சேல் கூறிட வருதாய் போற்றி

ஓம் இன்ப வீட்டினை யருள்வோய் போற்றி
ஓம் இதயத் தாமரையிலமர்ந் தருள்வோய் போற்றி
ஓம் இதயத் தடாகத்தினி லன்னமே போற்றி
ஓம் வீணையின் நாதத்தை வென்றனை போற்றி
ஓம் இருளை நீக்கி அருள்வாய் போற்றி
ஓம் சங்கரன் மனதினில் கலந்தனை போற்றி
ஓம் உமேசனுக்குகந்ததோர் உமையே போற்றி
ஓம் கச்சியின் நடுவதி லமர்ந்தனை போற்றி
ஓம் ஊமையை அகற்றிய உத்தமி போற்றி
ஓம் இளம்பிறை சூடிய இமையே போற்றி

ஓம் மேரு பிந்துவினி லமர்ந்தனை போற்றி
ஓம் கயிலைக் கண்மணி காமாக்ஷி போற்றி
ஓம் உளத்தினொளியினி லொளிர்ந்தனை போற்றி
ஓம் அறியா இருளினை யகற்றினை போற்றி
ஓம் சக்தி பீட அரசே ஸ்ரீராஜேசுவரீ போற்றி
ஓம் மணிமண்ட பந்தனி லமர்ந்தனை போற்றி
ஓம் பாபங்கள் அகற்றிடும் பவாநீ போற்றி
ஓம் ஞானப் பாலூட்ட வருதாய் போற்றி
ஓம் உலக அன்னையே உமையே போற்றி
ஓம் அருவா யொளிரும் அன்னை போற்றி

ஓம் எளியேனுக் கருள்புரி காமாக்ஷி போற்றி
ஓம் காமேசுவர வாமாக்ஷீ காமாக்ஷீ போற்றி
ஓம் ஜயதேவீ ஜயேசுவரீ காமாக்ஷீ போற்றி
ஓம் சர்வேசுவரீ ஜகந் மோகினி போற்றி
ஓம் கயிலைச் சபை நடுவண் அமர்ந்தனை போற்றி
ஓம் இந்திரன் புகழும் இந்த்ராக்ஷி போற்றி
ஓம் கன்யா குமாரிக் கன்யகை போற்றி
ஓம் பத்மாசனத் தமர் பார்வதி போற்றி
ஓம் பஞ்சப்ரேத ஆசனத்தமர் பஞ்சாக்ஷரீ போற்றி
ஓம் உலகினில் ஒளிரும் சுடரொளியே போற்றி

ஓம் ஒப்பிலா உருவாயு மொளிர்ந்தனை போற்றி
ஓம் மனதிற் கிசைந்ததோர் மங்களை போற்றி
ஓம் ஸ்ரீ சண்டிகை வுருவா யருள்வோய் போற்றி
ஓம் அன்னத்தின் மேலமர் அம்பிகை போற்றி
ஓம் பக்தர்கள் மனமுள் பனிமதி போற்றி
ஓம் தீப ஜோதியினி லொளிர்ந்தனை போற்றி
ஓம் உருவா யொளிரும் உமையே போற்றி
ஓம் திருவா யொளிர் திரு புரேசுவரீ போற்றி
ஓம் அமுதா யினிபதா யருள்தாய் போற்றி
ஓம் ஞானக் கனியினில் கலந்தனை போற்றி

ஓம் உதய மதியிடத் தொளிர்ந்தனை போற்றி
ஓம் பிறப்பிலா மருந்ததை அருள்தாய் போற்றி
ஓம் விரைவினில் வந்தருள் புரிவோய் போற்றி
ஓம் உமையே விமலை கமலை போற்றி
ஓம் சடை நாதனிடத் தொளிர் சங்கரீ போற்றி
ஓம் வேதார்த்தமாகிய வேதேசுவரீ போற்றி
ஓம் புராணார்த்தமாகிய புராந்தகீ போற்றி
ஓம் நாரணீ காரணீ பரிபூரணீ போற்றி
ஓம் காமேசனிடத் தொளிர் காமாக்ஷீ போற்றி
ஓம் பூரணமாகியதோர் ஜோதியே போற்றி

ஓம் வேத உண்மையின் வடிவாயினை போற்றி
ஓம் காளீ மகேசுவரீ காமாக்ஷீ போற்றி
ஓம் கருணையோ டருள்புரி காயத்ரீ போற்றி
ஓம் பரம்பொருளுருவா யமர்ந்தனை போற்றி
ஓம் சதாசிவனிடத் தமர் சங்கரீ போற்றி
ஓம் சரணமடைந்தேன் சாரதே போற்றி
ஓம் சாகா வரமருள் சாம்பவீ போற்றி
ஓம் அஞ்சேலென் றருள்புரி அபிராமி போற்றி
ஓம் ஸ்ரீசதாசிவ பரப்ரும் மேசுவரீ போற்றி
ஓம் கையினிற் கடகம் பூண்டனை போற்றி

ஓம் தேவாதி தேவ தேவேசுவரீ போற்றி
ஓம் மும்மூர்த்திகள் தொழும் மூகாம்பிகை போற்றி
ஓம் ஆனந்த முக்தியருள் ஆனந்தி போற்றி
ஓம் யோக சமாதியினி லமர்ந்தனை போற்றி
ஓம் அண்ட மருளிய அன்னை போற்றி
ஓம் மண்டலமருளிய மங்களை போற்றி
ஓம் சராசர மருளிய சங்கரி போற்றி
ஓம் மாணிக்கப் பதக்க மணிந்தனை போற்றி
ஓம் உனதடி பணிந்தேன் உமையே போற்றி
ஓம் குருவாயும் வந்தருள் குண்டலினி போற்றி

ஓம் தீனதயாபரீ தீர காமாக்ஷீ போற்றி
ஓம் திரிபுர சுந்தரீ சிவ காமாக்ஷீ போற்றி
ஓம் பூரணீ யோகப் புராதனீ போற்றி
ஓம் சாந்த மகேசுவரீ சியாமளை போற்றி
ஓம் சங்கர நாயகீ சாந்தினி போற்றி
ஓம் சோக நிவாரணக் காரணீ போற்றி
ஓம் பஞ்ச தசாக்ஷர வித்யாப் பார்வதீ போற்றி
ஓம் எந்தன் முன் வந்தருள் புரிதாய் போற்றி
ஓம் பிந்து ஒளிக்குள் ஒளிர்சுடர் போற்றி
ஓம் சிந்தை மகிழ அருள்புரி சிவையே போற்றி

ஓம் சித்தர்கள் பணியும் சிவமணியே போற்றி


ஓம் பத்தர்தம் மனத்தமர் பரமேசி போற்றி
ஓம் செம்பவளக் கொடியே! என் செல்வமே போற்றி
ஓம் சங்கடந் தீர்த்தருள் சங்கரீ போற்றி
ஓம் ஆதி பராசக்தி அம்பிகை போற்றி
ஓம் பாசமகற்றிடும் பரம குருவாயினை போற்றி
ஓம் விந்தியாசலத்தமர் வீரேசுவரீ போற்றி
ஓம் பய இருளகற்றிடும் பனிமதி போற்றி
ஓம் மூள் பிறவி தீர்க்கும் மூகாம்பிகை போற்றி
ஓம் கலைகளின் முதலே ஸ்ரீகாமாக்ஷீ போற்றி

ஓம் அன்பர்களுக் கெளியதோர் அன்னை போற்றி
ஓம் இன்ப நிலையருளும் இமையே போற்றி
ஓம் வேதாந்த வீட்டை விளக்கினை போற்றி
ஓம் காமாரி தேடும் காமாக்ஷீ போற்றி
ஓம் உள்ளே உணர அருள்வோய் போற்றி
ஓம் பஞ்சப்ரம்ம ரூபிணீ பார்வதி போற்றி
ஓம் சக்தி பீஜாக்ஷரீ சங்கரீ போற்றி
ஓம் மூகன் புகழ் கடாக்ஷீ காமாக்ஷீ போற்றி
ஓம் பிந்து பீடவாஸிநீ பிராம்மணீ போற்றி
ஓம் சம்பு மாதவன் மகிழ் சாம்பவீ போற்றி

ஓம் அம்பிகை கோமதி அபிராமி போற்றி

ஓம் மதுரஸம்பாக்ஷிணி மங்களை போற்றி
ஓம் மதுகைடப ஸம்ஹார மகேசுவரீ போற்றி
ஓம் வேதத்துத் தியானத் தொளிர்ந்தனை போற்றி
ஓம் செழும் பசும் பொன்னே ! செல்வமே ! போற்றி
ஓம் கற்பக வல்லி ஸ்ரீ காயத்ரீ போற்றி
ஓம் மீனாக்ஷீ காமாக்ஷீ விசாலாக்ஷீ போற்றி
ஓம் மஹிஷாஸுர மர்த்தன மங்கை போற்றி
ஓம் எண்பத்து பீடத் தொளிர் ஏகேசுவரி போற்றி
ஓம் அருள்செய வருதாய் காமாக்ஷீ போற்றி

ஓம் தீர்த்தேசுவரீ தீனதயாபரீ காமாக்ஷீ போற்றி
ஓம் மந்த்ரேசுவரீ மஹேசுவரீ காமாக்ஷீ போற்றி
ஓம் தந்த்ரேசுவரீ தாக்ஷõயணீ காமாக்ஷீ போற்றி
ஓம் யந்த்ரேசுவரீ யதீசுவரி காமாக்ஷி போற்றி
ஓம் சக்த்யேசுவரீ சங்கரீ காமாக்ஷி போற்றி
ஓம் பீடேசுவரீ பீஜாக்ஷரீ காமாக்ஷீ போற்றி
ஓம் தத்வேசுவரீ தர்மேசுவரீ காமாக்ஷி போற்றி
ஓம் ஸப்தேசுவரீ ஸரஸ்வதீ காமாக்ஷி போற்றி
ஓம் ஏகேசுவரீ ஏகாக்ஷரீ காமாக்ஷி போற்றி
ஓம் நாதேசுவரீ நாராயணீ காமாக்ஷி போற்றி

ஓம் விசுவேசுவரீ விசாலாக்ஷீ காமாக்ஷி போற்றி
ஓம் தீ÷க்ஷசுவரீ தீரேசுவரீ காமாக்ஷி போற்றி
ஓம் யோகேசுவரீ யோகாஸநீ காமாக்ஷி போற்றி
ஓம் வர்ணேசுவரீ வாமேசுவரீ காமாக்ஷி போற்றி
ஓம் கலேசுவரீ காயத்ரீ காமாக்ஷி போற்றி
ஓம் வேதேசுவரீ வேதாக்ஷரீ காமாக்ஷி போற்றி
ஓம் அசுவலெக்ஷிமி அம்புஜாக்ஷீ காமாக்ஷி போற்றி
ஓம் தாந்யலெக்ஷிமி தாக்ஷõயணீ காமாக்ஷி போற்றி
ஓம் ராஜ்யலெக்ஷிமி ராஜேசுவரீ காமாக்ஷி போற்றி
ஓம் கஜலெக்ஷிமி கன்யகை காமாக்ஷி போற்றி

ஓம் தனலெக்ஷிமி தனேசுவரீ காமாக்ஷி போற்றி
ஓம் ஸந்தானலெக்ஷிமி சங்கரீ காமாக்ஷி போற்றி
ஓம் ஜயலெக்ஷிமி ஜயேசுவரீ காமாக்ஷி போற்றி
ஓம் கட்கலெக்ஷிமி கௌமாரீ காமாக்ஷி போற்றி
ஓம் காருண்யலெக்ஷிமி காயத்ரீ காமாக்ஷி போற்றி
ஓம் ஸெளம்யலெக்ஷிமி ஸெனந்தரீ காமாக்ஷி போற்றி
ஓம் அஷ்டலெக்ஷிமி முதலாதி, காமாக்ஷி போற்றி
ஓம் அஷ்டலெக்ஷிமியாளும் அரசாயினை போற்றி
ஓம் ஓங்கார பீஜாக்ஷரீ காமாக்ஷி போற்றி
ஓம் பிறவியிலா தகற்றிடும் பிராஹ்மீ! போற்றி

ஓம் மகேசன் மனத்தமர் மகேசுவரீ போற்றி
ஓம் கௌரியாயருள்புரி கௌமாரீ போற்றி
ஓம் வையகம் விரும்பிடும் வைஷ்ணவீ! போற்றி
ஓம் சங்கரன் நாடும் சங்கினி போற்றி
ஓம் வநந்தனி லுலவும் வாராஹீ போற்றி
ஓம் இந்திரன் மகிழும் இந்திராணீ போற்றி
ஓம் சண்டிகை சாரதே சாமுண்டி போற்றி
ஓம் சிவபிரான் செல்வியே சிவதூதீ போற்றி
ஓம் கவிகள் கருத்துறை காளி போற்றி
ஓம் லக்ஷõர்ச் சனாப்ரிய மஹாலெக்ஷிமி போற்றி

ஓம் ஸத்குருவாயு மருள்புரி ஸரஸ்வதி போற்றி
ஓம் ஸ்ரீசைலத்தொளிர் ப்ரம ராம்பிகை போற்றி
ஓம் கௌமாரீ சங்கரீ சைலபுத்ரீ போற்றி
ஓம் பிரம்ம ரூபிணீ ப்ரம்மசாரிணீ போற்றி
ஓம் சந்த்ர மௌளீச சந்த்ர கண்டா போற்றி
ஓம் சண்ட முண்ட ஸம்ஹார கூஷ்மாண்டா போற்றி
ஓம் கருணா கடாக்ஷ ஸ்கந்த மாதா போற்றி
ஓம் காலனைக் கடிந்த காத்யாயனீ போற்றி
ஓம் காமனை எரித்த காளராத்ரீ போற்றி
ஓம் பத்ம பீடந்தனிலமர் மஹாகௌரீ போற்றி

ஓம் ஸித்தர்கள் மனத்தமர் ஸித்தாத்ரீ போற்றி
ஓம் சாம்பவீ பகவதி சக்தி பீஜாக்ஷரீ போற்றி
ஓம் ஸத்குரு ஸ்ரீசரண ரூபிணீ போற்றி
ஓம் காரணி காமேசி காமாக்ஷி போற்றி
ஓம் பாதி சந்த்ர சூடேசி பார்வதீ போற்றி

Tuesday, July 14, 2015

தமிழ் கடவுள் முருகனுக்கு இரண்டு மனைவியர் ஏன்?

"தமிழ் கடவுள் முருகன் என்கிறாய் ஆனால் அந்த தமிழ் கடவுளுக்கு மட்டும் ஏன் இரண்டு மனைவியர் உள்ளனர். கடவுள் ஏன் தமிழ் பண்பாட்டினை காப்பாற்றவில்லை" என முருகனைப் பற்றியும் அவர்தம் மனைவியர் பற்றியும் அறிந்து கொள்ள மானுடராகிய நமக்கு இன்னும் ஞானம் போதாது இருப்பினும் அவருக்கு மனைவியர் இரண்டு பேர் எதற்கு என்பதை இந்த பதிவில் பார்ப்போம் .
அதை தெரிந்து கொள்வதற்கு முன்பு நாம் சுழுமுனை என்றால் என்ன என்பதினை தெரிந்து கொள்ள வேண்டும். மகான் ஸ்ரீமத் சத்குரு சாந்தானந்த சுவாமிகள் தன் கந்தகுரு கவசத்தில் சொல்வதினை பாருங்கள்.
"நடுனெற்றித்தானத்து நானுனை தியானிப்பேன்
பிரம்ம மந்திரத்தை போதித்து வந்திடுவாய்.
சுழுமுனை மார்க்கமாய் ஜோதியைக் காட்டிடுவாய்
சிவயோகியாக எனைச் செய்திடும் குருநாதா"
சுழுமுனை என்பது மானுட உடலில் உள்ள ஒரு மைய நரம்பு. நமது உடலில் இரண்டிரண்டு ஜோடிகளாக உள்ள உறுப்புகள் எவை எவை எனப் பார்த்தால் அவை புருவம், கண்கள், மூக்கின் நாசிகள், உதடுகள், மார்பகம், கைகள், சிறுநீரகம் மற்றும் கால்கள் எனச் சொல்லலாம் இவை உடலின் இடது புறமாகவும் வலது புறமாகவும் ஒரு மையத்தினைச் சுற்றி பின்னிப் பினைந்து உள்ளன. அந்த மையமே சுழுமுனை என்பது ஆகும்.
இன்னும் விரிவாக சொல்லப் போனால் நமது உடலில் இரண்டு இரண்டு ஜோடிகளாக இல்லாமல் ஒன்று மட்டும் உள்ள உறுப்புகள் எவை எனப் பார்த்தால் அவை எல்லாம் நமது உடலின் மத்தியிலேயே அமைகின்றன. இவற்றுள் தலையிலிருந்து ஆரம்பித்து பார்த்தால் மத்தியில் உள்ள ஒற்றை உறுப்புகள்
1.நெற்றி (பிரம்மந்திரா)
2.தொண்டைக் குழி (ஆங்ஞை)
3.மார்புக்குழி (விசுத்தி)
4.தொப்புள் குழி (மனிப்புரம்)
5.ஆண் /பெண் குறி (சுவாதீஸ்டன்)
6.மலக்குழி (மூலாதாரம்)
இந்த ஆறு குழிகளையும் ஒரு நேர்கோட்டால் இனைத்தால் வரும் மையக் கோடே சுழுமுனை என்பதாகும். இந்த சுழுமுனை புருவமுடிச்சிலிருந்து தலையில் விரிந்து பின் குவிந்து ஒடுங்குகிறது இந்த தலைப் பரப்பினை பெரியோர்கள் சாஹஸ்ரா எனவும் அர்ஸ் எனவும் ழைப்பர்.மருத்துவர்களின் லோகோவான கீழுள்ள படத்தினைப் பார்த்தால் இது எளிதாக புரியும்.
முருகன் கையிலுள்ள வேலும் இந்த சுழுமுனை குறியீடே. வேலின் குவிந்த பரப்பு நமது நெற்றியையும் வேலின் கீழுள்ள தண்டானது மற்ற 6 குழிகளை இணைக்கும் சுழுமுனை கோடாகவும் உள்ளது.
மருத்துவர்களின் லோகோவில் இடது புறமாகவும் வலது புறமாகவும் சுழுமுனையைப் பின்னிப் பினைந்து செல்பவை நமது அவயங்கள். வலது புறம் இருப்பது பிங்கலை இடது புறம் இருப்பது இடகலை.
இதைத்தான் கந்தகுருகவசத்தில் ஸ்ரீமத் சத்குரு சாந்தானந்த சுவாமிகள் சொல்லுகிறார்
"இடகலை பிங்கலை ஏதும் அறிந்திலேன் நான்
இந்திரியம் அடக்கி இருந்தும் அறிகிலேன் நான்"
எனவே இடது புறமும் வலது புறமும் உள்ள அவயங்களை இயக்கி இயங்கச் செய்வது இந்த சுழுமுனையே சுழுமுனை தத்துவத்தினை அறிந்து கொண்டால் எல்லாம் வல்ல இறைவனையும் அறிந்திடலாம் குண்டலினி சக்தி எனச் சொல்லப் படுவதும் இந்த சுழு முனை முடிச்சான நெற்றிப் பரப்பேதான்.
ஒவ்வொரு மனிதர்க்குள்ளும் இறைவன் உறைகிறான். காண்பன யாவற்றிலும் இறைவன் உள்ளான்.
இதையே கந்த குரு கவசத்தில் இப்படி சொல்லுகிறார் சதானந்த சுவாமிகள்
"உள்ளொளியாய் இருந்து உன்னில் அவனாக்கிடுவான்
தன்னில் உனைக்காட்டி உன்னில் தனைக்காட்டி
எங்கும் தனைக்காட்டி எங்குமுனைக் காட்டிடுவான்"
சுழுமுனையைப் பற்றி தெரிந்து கொண்டாயிற்று இன்னும் தலைப்புக்கு வரவில்லையே என திட்ட வேண்டாம்.
ஒவ்வோரு உயிரிலும் உள்ள சுழுமுனையே முருகன்.இடகலை பிங்கலை என இடப்புறமும் வலப்புறமும் உள்ள அவயங்களே வள்ளி தெய்வானை.
ஆக மனைவியர் என்பது ஒரு குறியீடே. ஆனால் மையத்தில் உள்ள சுழுமுனையை தியானத்தின் வாயிலாக அறிந்து கொண்டால் இந்த மனைவியர் பற்றிய குறியீடாகிய ஞானத்தினையும் அறிந்து கொள்ளலாம்.
இறுதியாக ஒன்று
கடவுள் ஒருவரே
அவர் எவராலும் பெறப்படவும் இல்லை
அவர் எதையும் பெற்றிறுக்கவும் இல்லை.
எனவே தமிழ் கடவுள் முருகனுக்கு மனைவியர் இரண்டு என்பது
இந்த சுழுமுனையைக் குறிக்கும் ஒரு வேதாந்த ரகசியமே தவிர
வேறொன்றும் இல்லை.

ஒரு மந்திரத்தைக்கொண்டு சித்தி பெறுவது எப்படி?

மந்திரங்களின் சக்தி அதை உருவேற்றுவதில்தான்இருக்கிறது. லட்சக்
கணக்கான மந்திரங்களை ஆவ்ருத்தி செய்து நீண்ட காலப் போக்கில் சித்தி
பெறுதல் என்பது இக்காலச் சூழ்நிலையில் சாத்தியமற்றதாக இருக்கிறது.
ஆகவே, நம் முன்னோர்கள் மந்திரங்கள் சித்தி அடைவதற்கு சுலபமான சில
வழிகளையும், தங்கள் அனுபவத்தின் மூலம் விளக்கினர்.
1. எந்த ஒரு மந்திரத்தையும் ஒரே நாளில் சித்தி செய்யலாம். வழிபடுவோரின்
ஊக்கமும் தளரா முயற்சியும் இதற்குக் காரணமாகிறது.
சுக்ல பக்ஷம், கிருஷ்ண பக்ஷம் ஆகிய இரண்டு பக்ஷங்களுக்கும் உரிய
ஏதாவது ஒரு அஷ்டமி திதியிலோ அல்லது சதுர்த்தசி திதியிலோ
சூரியோதயம் தொடங்கி மறுநாள் சூரியோதயம் வரை இடைவிடாது
மந்திரத்தை ஜபிப்பதால் மந்திரம் சித்தியாகிறது.
உபாசகன் ஸர்வ ஸித்தீஸ்வரன் ஆகிறான். அதாவது எல்லா ஸித்திகளுக்கும்
தலைவன் ஆகிறான். இப்படி ஒரே நாளில், அதாவது 60 நாழிகை நேரத்தில்
மந்திர ஸித்தி அடைவதற்கான முயற்சியில் ஈடுபடுபவர் சில ஜபங்களுக்கு
உள்ளத்தில் இடம் கொடுக்க உறுதியுள்ளவராக இருக்க வேண்டும். வேறு பல
சாஸ்திரங்களிலும் ஆசார முறைகளிலும் கொள்ளப்படும் பிரமாணங்களை
செவியில் வாங்கிக் கொண்டு குழப்பமடையக் கூடாது. அறுபது நாழிகை
நேரமும் எல்லாக் கர்மங்களும் தான் ஜபிக்கும் ஒரு மந்திரத்தினாலேயே
ஆகிறது என்ற நிச்சயம் உடையவராக உபாசகன் இருக்க வேண்டும்.
2. ஒரு மாதத்தில் மந்திர ஸித்தி அடையலாம். ஒரு கிருஷ்ணாஷ்டமி
தொடங்கி அடுத்த கிருஷ்ணாஷ்டமி முடிய. நாள் ஒன்றுக்கு 108 முறை
நியமத்துடன் ஜபம் செய்வதால் மந்திர ஸித்தி உண்டாகிறது. ஆனால் இங்கு
கவனிக்க வேண்டியது ஒன்று மந்திரத்திற்கு முன்னும் பின்னும் மாத்ருகா
அக்ஷரங்கள் 51ஐ ஏறு வரிசையிலும் இறங்கு வரிசையிலும் அமைத்து ஜபம்
செய்ய வேண்டும்.
இப்படி மாத்ருகா ஸம்புடிதமாக மந்திரத்தை நாளொன்றுக்கு 108 தடவையாக
ஒரு மாதம் ஜபம் செய்ய வேண்டும். கிருஷ்ணாஷ்டமி போல கிருஷ்ண
சதுர்தசீ சுக்ல அஷ்டமி, சுக்லி சதுர்தசீ திதிகளும் இந்த ஜப முறைக்கு
ஏற்றவையே.
3. மாத்ருகா ஸம்புடீகரணமில்லாமல் ஒரு மாதத்தில்மந்திரஸித்தியை
விரும்புகிறவர், இந்த குறிப்பிட்ட திதிகளில்தொடங்கி குறிப்பிட்ட அடுத்த
திதிகளில் முடியுமாறு நாள் ஒன்றுக்கு 1008 முறை மூலமந்திரத்தை மட்டும்
ஜபம் செய்தால் வெற்றியடையவது நிச்சயம்.
4. மாத்ருகா அக்ஷரங்களில் பூதலிபி வரிசை என்று ஒரு முறை உள்ளது.
அவ்வரிசைப்படி மூல மந்திரத்திற்கு முன்னும் பின்னும் ஒவ்வொரு எழுத்தைக்
கூட்டி நாள் ஒன்றுக்கு 1008 முறை ஜபம் செய்தால் மந்திர ஸித்தி நிச்சயம்.
5. ரிக்வேதப்ராதி சாக்யத்தில் 63 எழுத்துகள் கொண்ட ஒரு அரிச்சுவடி
இருக்கிறது. அதிலுள்ள 63 எழுத்துகளை ஏறுஇறங்கு வரிசைகளில்
மந்திரத்தின் முன்னும் பின்னும் முறையே கூட்டி நாள் ஒன்றுக்கு 108 முறை
மூலமந்திரம் செய்வதாலும் மந்திர ஸித்தி நிச்சயம்.
6. கிருஷ்ணாஷ்டமி தொடங்கி கிருஷ்ண சதுர்த்தசீ வரை உள்ள ஏழே
நாட்களில் மொத்தம் கூட்டி 40,000 எண்ணிக்கை வரும்படி மந்திர ஜபம் செய்ய
வேண்டும். இந்த ஏழு நாள் ஜபமுறையில் தசாம்சக் கணக்கில் ஹோமம்
முதலானவைகளும் செய்ய வேண்டும். இந்த ஜபம் நாள் ஒன்றுக்கு 5714
ஆகும். கடைசி நாள் 5716 ஆகும். அந்தந்த நாளில் ஹோமம் தசாம்ச கணக்கில்
செய்ய வேண்டும்.
7. சூர்ய சந்திர கிரஹண காலம் பூராவும் ஒரு மந்திரத்தை ஜபம் செய்வதால்
அம்மந்திரம் ஸித்தியாகிறது.
8. ஒவ்வொரு இரவு (இரவு முழுவதும்) சர்வ உபசாரங்களுடன் மூன்று முறை
நவாவரண பூஜையை ஒரு மாத காலம் செய்வதால் மந்திர ஸித்தி
ஏற்படுகிறது.
9. மாத்ருகா அக்ஷரங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மூலிகையாக
பிரபஞ்சசாரம் கூறுகிறது. தான் ஸித்தி செய்ய வேண்டிய மந்திரத்தில் உள்ள
எழுத்துக்களுக்குரிய மூலிகைகளை எல்லாம் கூட்டிப் பொடி செய்து
குளிகைகளாகச் செய்து கொண்டு அவற்றை ஜபம் செய்யும் போது வாயில்
அடக்கிக் கொண்டிருப்பதால் மந்திரம் எளிதில் ஸித்தியாகிறது.
10. மகாபாதுகையை தனது ஸகஸ்ரார சக்ரத்தில் தியானம் பண்ணுவதால்
மந்திரம் ஸித்தியாகிறது. மஹாபாதுகைக்குள் மந்திரம் அடக்கியிருப்பதாலும்
மஹாபாதுகைக்கு மேம்பட்ட வேறு மந்திரமே இல்லாததாலும்மகா பாதுகா
தியானத்தால் அடைய முடியாதது ஒன்றில்லை.
11. ஆத்ம ஸ்வரூபத்தைப் பற்றி பரோக்ஷ ஞானம் திருடமாகக்
கைவரப்பெற்றவன். மந்திரத்திற்கு முந்தியும், பிந்தியும் சிவோஹம் என்ற
பாவனையுடன் மந்திர ஜபம் செய்வதால் மந்திரம் எளிதில் ஸித்தியாகிறது.
12. அஹம் ப்ரஹ்மாஸ்மி அல்லது ஈம் என்ற பரா காமகலா அக்ஷரத்தையோ
முன்னும் பின்னும் மந்திரத்தில் கூட்டி ஜபம் செய்வதால் ஸகல ஸித்திகளும்
கிடைக்கின்றன.
ஜபத்திற்குரிய இடங்கள் ஜபம் எங்கு எப்படிச் செய்யவேண்டும் என்று
கீதையில் 6வது அத்தியாயத்தில் 11- 13 ஸ்லோகங்களில் கூறப்பட்டுள்ளது.
சுத்தமான இடத்தில் தர்ப்பாசனத்தில் அல்லது மான்தோல் அல்லது வஸ்திரம்
இவை மீது அமர்ந்து மனதை ஒருமுகப்படுத்தி இந்திரியங்களின் செயல்களை
அடக்கி நிமிர்ந்து உட்கார்ந்து மூக்கின் நுனியைப் பார்த்த வண்ணம் ஜபம்
செய்யவேண்டும்.
பூஜை அறை, பசுக்கொட்டில், நதிதீரம், கடற்கரை, ஆசிரமம், ஆலயம்,
தீபமுகம் இவைகள் ஜபம் செய்ய சிறந்த இடம்.
கிழக்கு நோக்கி ஜபம் செய்தால் வியாதி நீங்கும். தெற்கு நோக்கி ஜபம்
செய்தால் வசியம் சித்திக்கும். அக்னி மூலை (தென்கிழக்கு) நோக்கி ஜபம்
செய்தால் கடன் தீரும். மேற்கு நோக்கி ஜபம் செய்தால் பகை தீரும்.
ஈசானமாகிய வடகிழக்கு நோக்கி ஜபம் செய்தால் மோக்ஷம் சித்திக்கும்.
கிழக்கும், வடக்கும், நிஷ்காமியமானது.
சுகாஸனம் இருந்து ஜபம் செய்வது கிருஹஸ்தர்களுக்கு ஏற்றது.
பத்ராஸனம், முக்தாஸனம், மயூராஸனம், ஸித்தாஸனம், பத்மாஸனம்,
ஸ்வஸ்திகாஸனம், வீராஸனம், கோமுகாஸனம், சுகாஸனம் என்ற ஒன்பது
நிலைகளிலிருந்தும் ஜபம் செய்யலாம். பழக்கப் படாதவர்கள் கஷ்டமான
ஆசனங்களைத் தவிர்ப்பது நல்லது.
கருங்கல் மீதிருந்து ஜபம்செய்தால்வியாதி; வெறும்தரையில்ஜபம்செய்தால்
துக்கம்; மான் தோல்மீது ஜபம்செய்தால்ஞானம்; புலித்தோல்மீது ஜபம்
செய்தால் மோக்ஷம்; வஸ்திரம் ஆஸனம் மீது ஜபம் செய்தால் வியாதி
நிவர்த்தி, (வெள்ளை வஸ்திரம் சாந்தி; சிவப்பு வஸ்திரம் வசியம்) கம்பளம் மீது
ஜபம் செய்தால் சகல சௌக்யம் உண்டாகும்.