Thursday, November 20, 2014

வேண்டாம் இந்தச் சூதாட்டம்’ என்று தடுத்திருக்கலாம் அல்லவா?

வேண்டாம் இந்தச் சூதாட்டம்’
என்று தடுத்திருக்கலாம் அல்லவா? ஏன் அப்படிச்
செய்யவில்லை?கிருஷ்ணன்
பகவான் கிருஷ்ணனின் குழந்தைப் பருவம்
முதலே, அவருக்குப் பணிவிடைகள் செய்து,
தேரோட்டி, பல்வேறு சேவைகள் புரிந்தவர்
உத்தவர். இவர் தனது வாழ்நாளில், தனக்கென
நன்மைகளோ வரங்களோ கண்ணனிடம்
கேட்டதில்லை. துவாபரயுகத்தில்,
தமது அவதாரப் பணி முடித்து விட்ட நிலையில்,
உத்தவரிடம் ஸ்ரீகிருஷ்ணர், "உத்தவரே, இந்த
அவதாரத்தில் பலர் என்னிடம் பல வரங்களும்,
நன்மைகளும் பெற்றிருக்கின்றனர்.ஆனால்,
நீங்கள் எதுவுமே கேட்டதில்லை.
ஏதாவது கேளுங்கள், தருகிறேன். உங்களுக்கும்
ஏதாவது நன்மைகள் செய்துவிட்டே,
எனது அவதாரப் பணியை முடிக்க
நினைக்கிறேன்" என்றார்.
தனக்கென எதையும் கேட்காவிட்டாலும்,
சிறு வயது முதலே கண்ணனின் செயல்களைக்
கவனித்து வந்த உத்தவருக்கு, சொல் ஒன்றும்,
செயல் ஒன்றுமாக இருந்த கண்ணனின் லீலைகள்,
புரியாத புதிராக இருந்தன. அவற்றுக்கான
காரண, காரியங்களைத் தெரிந்து கொள்ள
விரும்பினார். "பெருமானே! நீ வாழச் சொன்ன
வழி வேறு; நீ வாழ்ந்து காட்டிய வழி வேறு! நீ
நடத்திய மகாபாரத நாடகத்தில், நீ ஏற்ற
பாத்திரத்தில், நீ புரிந்த செயல்களில், எனக்குப்
புரியாத விஷயங்கள் பல உண்டு.
அவற்றுக்கெல்லாம் காரணங்களை அறிய
ஆவலாக இருக்கிறேன். நிறைவேற்றுவாயா?"
என்றார் உத்தவர்.
உத்தவர் கேட்க ஆரம்பித்தார்: "கண்ணா! முதலில்
எனக்கு ஒரு விளக்கம் வேண்டும்.கிருஷ்ணா! நீ
பாண்டவர்களின் உற்ற நண்பன். உன்னை அவர்கள்
ஆபத்பாந்தவனாக, பரிபூரணமாக நம்பினார்கள்.
நடப்பதை மட்டுமல்ல; நடக்கப் போவதையும்
நன்கறிந்த ஞானியான நீ, 'உற்ற நண்பன் யார்’
என்பதற்கு நீ அளித்த விளக்கத்தின்பட,
முன்னதாகவே சென்று, 'தருமா! வேண்டாம்
இந்தச் சூதாட்டம்’ என்று தடுத்திருக்கலாம்
அல்லவா? ஏன் அப்படிச் செய்யவில்லை?போக
ட்டும். விளையாட ஆரம்பித்ததும், தருமன் பக்கம்
அதிர்ஷ்டம் இருக்கும்படி செய்து,
வஞ்சகர்களுக்கு நீதி புகட்டியிருக்கலாம்.
அதையும் நீ செய்யவில்லை. தருமன்
செல்வத்தை இழந்தான்; நாட்டை இழந்தான்;
தன்னையும் இழந்தான். சூதாடியதற்குத்
தண்டனையாக,
அதோடு அவனை விட்டிருக்கலாம்.
தம்பிகளை அவன் பணயம் வைத்த போதாவது, நீ
சபைக்குள் நுழைந்து தடுத்திருக்கலாம்.
அதையும் நீ செய்யவில்லை.
'திரௌபதி அதிர்ஷ்டம் மிக்கவள். அவளைப் பணயம்
வைத்து ஆடு. இழந்தது அனைத்தையும்
திருப்பித் தருகிறேன்’ என்று சவால் விட்டான்
துரியோதனன். அப்போதாவது, உனது தெய்வீக
சக்தியால், அந்த பொய்யான பகடைக் காய்கள்
தருமனுக்குச் சாதகமாக
விழும்படி செய்திருக்கலாம். அதையும்
செய்யவில்லை. மாறாக, திரௌபதியின்
துகிலை உரித்து, அவளின் மானம் பறிபோகும்
நிலை ஏற்பட்ட போதுதான் சென்று, ';துகில்
தந்தேன், திரௌபதி மானம் காத்தேன்’
என்று மார்தட்டிக் கொண்டாய். மாற்றான்
ஒருவன், குலமகள் சிகையைப்
பிடித்து இழுத்து வந்து, சூதர் சபையில் பலர்
முன்னிலையில், அவள் ஆடையில் கை வைத்த
பிறகு, எஞ்சிய மானம் என்ன இருக்கிறது?
எதனைக் காத்ததாக நீ பெருமைப்படுகிறாய்?
ஆபத்தில் உதவுபவன்தானே ஆபத் பாந்தவன்? இந்த
நிலையில் உதவாத நீயா ஆபத்பாந்தவன்? நீ
செய்தது தருமமா?';'; என்று கண்ணீர் மல்கக்
கேட்டார் உத்தவர்.
இது உத்தவரின் உள்ளக் குமுறல் மட்டுமன்று;
மகாபாரதம் படித்துவிட்டு நாம்
அனைவருமே கேட்கும் கேள்விகளே இவை.
நமக்காக இவற்றை அன்றே கண்ணனிடம்
கேட்டிருக்கிறார் உத்தவர்.
பகவான் சிரித்தார். "உத்தவரே! விவேகம்
உள்ளவனே ஜெயிக்க வேண்டும் என்பது உலக தர்ம
நியதி. துரியோதனனுக்கு இருந்த விவேகம்
தருமனுக்கு இல்லை. அதனால்தான் தருமன்
தோற்றான்" என்றான் கண்ணன். உத்தவர் ஏதும்
புரியாது திகைத்து நிற்க, கண்ணன்
தொடர்ந்தான்.
"துரியோதனனுக்கு சூதாடத் தெரியாது.
ஆனால், பணயம் வைக்க அவனிடம் பணமும்,
ஏராளமான ஆஸ்தியும் இருந்தது. 'பணயம் நான்
வைக்கிறேன். என் மாமா சகுனி,
பகடையை உருட்டிச் சூதாடுவார்’ என்றான்
துரியோதனன். அது விவேகம்.தருமனும்
அதுபோலவே விவேகத்துடன் செயல்பட்டு,
'நானும் பணயம் வைக்கிறேன். ஆனால், என்
சார்பாக என் மைத்துனன் ஸ்ரீகிருஷ்ணன்
பகடைக்காயை உருட்டுவான்'
என்று சொல்லியிருக்கலாமே? சகுனியும்
நானும் சூதாடியிருந்தால், யார்
ஜெயித்திருப்பார்கள்? நான் கேட்கும்
எண்ணிக்கைகளைச் சகுனியால் பகடைக்
காய்களில் போடத்தான் முடியுமா? அல்லது,
அவன் கேட்கும் எண்ணிக்கைளை என்னால்தான்
போட முடியாதா? போகட்டும். தருமன்
என்னை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள
மறந்துவிட்டான்
என்பதையாவது மன்னித்து விடலாம். ஆனால்,
அவன் விவேகமில்லாமல் மற்றொரு மாபெரும்
தவறையும் செய்தான். 'ஐயோ! விதிவசத்தால்
சூதாட ஒப்புக்கொண்டேனே! ஆனால், இந்த
விஷயம் ஸ்ரீகிருஷ்ணனுக்கு மட்டும்
தெரியவே கூடாது. கடவுளே! அவன் மட்டும்
சூதாட்ட மண்டபத்துக்கு வராமல் இருக்க
வேண்டும்’ என்றுவேண்டிக் கொண்டான்.
என்னை மண்டபத்துக்குள் வர முடியாதவாறு,
அவனே கட்டிப் போட்டுவிட்டான். நான்
அங்கு வரக் கூடாதென
என்னிடமே வேண்டிக்கொண்டான
்.யாராவது தனது பிரார்த்தனையால் என்னைக்
கூப்பிட
மாட்டார்களா என்று மண்டபத்துக்கு வெளியில்
காத்துக்கொண்டு நின்றேன்.பீமனையும்,
அர்ஜுனனையும், நகுல- சகாதேவர்களையும்
வைத்து இழந்தபோது, அவர்களும்
துரியோதனனைத் திட்டிக் கொண்டும், தங்கள்
கதியை எண்ணி நொந்து கொண்டும்
இருந்தார்களே தவிர, என்னைக் கூப்பிட
மறந்துவிட்டார்களே!
அண்ணன் ஆணையை நிறைவேற்ற துச்சாதனன்
சென்று, திரௌபதியின் சிகையைப்
பிடித்தபோது, அவளாவது என்னைக்
கூப்பிட்டாளா? இல்லை. அவளும்
தனது பலத்தையே நம்பி, சபையில் வந்து,
வாதங்கள்செய்து கொண்டிருந்தாளே ஒழிய,
என்னைக் கூப்பிடவில்லை! நல்லவேளை..
துச்சாதனன் துகிலுரித்த போதும்
தனது பலத்தால் போராடாமல், 'ஹரி... ஹரி...
அபயம் கிருஷ்ணா! அபயம்’ எனக் குரல்
கொடுத்தாள் பாஞ்சாலி. அவளுடைய
மானத்தைக் காப்பாற்ற அப்போதுதான்
எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. அழைத்ததும்
சென்றேன். அவள் மானத்தைக் காக்க
வழி செய்தேன். இந்தச் சம்பவத்தில் என் மீது என்ன
தவறு?" என்று பதிலளித்தான் கண்ணன்.
"அருமையான விளக்கம் கண்ணா!
அசந்துவிட்டேன். ஆனால், ஏமாறவில்லை.
உன்னை இன்னொரு கேள்வி கேட்கலாமா?"
என்றார் உத்தவர்.
"கேள்" என்றான் கண்ணன்.
"அப்படியானால், கூப்பிட்டால்தான் நீ
வருவாயா? நீயாக, நீதியை நிலை நாட்ட,
ஆபத்துகளில் உன் அடியவர் களுக்கு உதவ
வரமாட்டாயா?" புன்னகைத்தான் கண்ணன்.
"உத்தவா, மனித வாழ்க்கை அவரவர் கர்ம
வினைப்படி அமைகிறது. நான்
அதை நடத்துவதும் இல்லை; அதில்
குறுக்கிடுவதும் இல்லை. நான் வெறும்
'சாட்சி பூதம்’. நடப்பதையெல்லாம் அருகில்
நின்று பார்த்துக்கொண்டு நிற்பவனே!
அதுதான் தெய்வ தர்மம்" என்றான்.
"நன்றாயிருக்கிறது கிருஷ்ணா!
அப்படியானால், நீ அருகில் நின்று, நாங்கள்
செய்யும் தீமைகளையெல்லாம் பார்த்துக்
கொண்டிருப்பாய். நாங்கள் தவறுகளைத்
தொடர்ந்து செய்து கொண்டேயிருந்து பாவங்களைக்
குவித்து, துன்பங்களை அனுபவித்துக்
கொண்டே இருக்க வேண்டும். அப்படித்தானே?"
என்றார் உத்தவர்.
"உத்தவரே! நான் சொன்ன வாசகங்களின்
உட்பொருளை நன்றாக உணர்ந்து பாருங்கள்.
நான் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை நீங்கள்
உணரும் போது, உங்களால்
தவறுகளையோ தீவினைகளையோ நிச்சயமாகச்
செய்ய முடியாது. அதை நீங்கள் மறந்துவிடும்
போதுதான், எனக்குத் தெரியாமல் செயல்களைச்
செய்துவிடலாம் என்று எண்ணுகிறீர்கள்.
பாதிப்புக்கு உள்ளாக்கும் சம்பவங்கள்
நிகழ்வதும் அப்போதுதான். எனக்குத்
தெரியாமல் சூதாடலாம் என்று தருமன்
நினைத்தானே, அதுதான் அவனது அஞ்ஞானம்.
நான் சாட்சி பூதமாக எப்போதும்,
எல்லோருடனும் இருப்பவன் என்பதை தருமன்
உணர்ந்திருந்தால், இந்த சூதாட்ட
நிகழ்ச்சி வேறு விதமாக முடிந்திருக்கும்
அல்லவா?" என்றான் ஸ்ரீகிருஷ்ணன்.
உத்தவர் வாயடைத்து, பக்திப் பரவசத்தில்
ஆழ்ந்தார். ஆகா! எத்தனை ஆழமான தத்துவம்!
எத்தனை உயர்ந்த சத்யம்!பகவானைப் பூஜிப்பதும்,
பிரார்த்தனை செய்வதும்,
அவனை உதவிக்கு அழைக்கும் ஓர்
உணர்வுதானே! "அவனின்றி ஓர் அணுவும்
அசையாது" என்ற நம்பிக்கை வரும்போது, அவன்
சாட்சி பூதமாக அருகில்
நிற்பதை எப்படி உணராமல் இருக்க முடியும்?
அதனை மறந்துவிட்டு எப்படிச் செயலாற்ற
முடியும்? இந்த தத்துவத்தைதான்
பகவத்கீதை முழுவதிலும் கண்ணன்
அர்ஜுனனுக்கு உபதேசித்தான்.
அர்ஜுனனுக்காகத் தேரைச்
செலுத்தி வழிநடத்தினானே தவிர, அர்ஜுனன்
இடத்தில் தானே நின்று அவனுக்காகப்
போராடவில்லை

Wednesday, November 19, 2014

கடவுளை தாயாகக் கருதுங்கள்

ராஜாஜி
* இறைவனின் தரிசனம் சாஸ்திரம் படித்தால் மட்டும் கிடைத்துவிடாது. ஆண்டவன் அருள் இருந்தால் தான் அது கிடைக்கும். அதற்கு மனம் கரைந்து உருகவேண்டும். பக்தியால் மனம் பழுக்க வேண்டும்.
* காலையில் எழும்போது, கொஞ்சம் தியானம் செய்துவிட்டு எழுங்கள். எந்த நிலையில் வேண்டுமானாலும் தியானம் கைகூடும். அதற்கு வேண்டியது உளப்பூர்வமான பக்தி மட்டுமே.
* ""இறைவா! என் உள்ளத்தை காத்தருள்வாயாக. நீ கோயில் கொள்ளத் தகுந்த இடமாக மனத்தூய்மையுடன் இருக்க அருள்புரிவாயாக!'' என்று மனதில் சொல்லிக் கொண்டே இருங்கள்.
* கடவுளைத் தந்தையாக, தாயாக, எஜமானாக, குழந்தை யாக எப்படி வேண்டுமானாலும் கருதி வழிபாடு செய்யலாம். தாயாகக் கருதி வழிபாடு செய்வது மிகவும் உத்தமமானது.
* இரவு தூங்கச் செல்லும்முன், ""இன்று நான் செய்த குற்றங்கள் இத்துடன் தீர்ந்து போகட்டும். இனிமேல் நான் இந்த குற்றத்தைச் செய்ய மாட்டேன்,'' என்று உள்ளம் உருகி வேண்டினால், இறைவன் நிச்சயம் மன்னிப்பான்.

ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள்...


4. சர்வ சக்தி வாய்ந்த கடவுளுடைய அருள் வந்தடையும் போது ஒவ்வொருவனும் தன் குற்றத்தைக் காண்பான். இதனை அறிந்து நீ வீணாகத் தர்க்கம் செய்யாதே.
5. இறைவன் திருநாமத்தைக் கேட்ட மாத்திரத்தில் எவனுக்கு மயிர்க்கூச்செடுத்து கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகுமோ அவனுக்கு அது தான் கடைசிப் பிறவி.
6. படகு தண்ணீரில் இருக்கலாம். ஆனால் தண்ணீர் படகினுள் நுழையக் கூடாது. மனிதன் உலகத்தில் வாழலாம். ஆனால் உலக ஆசை அவனிடத்தில் இருக்கக் கூடாது.
7. சம்சார வாழ்க்கையில் இருந்தால் என்ன? அனைத்தையும் அவனுக்கே அர்ப்பணம் செய்து அவனிடம் சரணமடைந்து விடு. அதன் பிறகு உனக்கு எவ்விதக் கஷ்டமும் இருக்காது. யாவும் அவனது அருளாலே நடை பெறுகிறது என்பதை அறிவாய்.
8. காந்த ஊசி எப்போதும் வடக்குத் திசையையே காட்டுமாதலால், கடலில் செல்லும் கப்பல்கள் திசை தவறிப் போவதில்லை. மனிதனுடைய மனம் இறைவனை நாடியிருக்கும் வரையில் அவன் உலக வாழ்க்கையாகிய கடலில் திசை தப்பிப் போக மாட்டான்.
9. வீடு கட்டும் போது சாரம் அவசியம். ஆனால் வீடு கட்டி முடித்து விட்டால் சாரத்தைத் தேடுபவர் யாருமில்லை. அது போல ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. பின்னர் அவசியமில்லை.
10. ஒருவர் சிரமப்பட்டு விறகும், பிறவும் தேடி நெருப்பு உண்டாக்குகின்றார். அதன் உதவியால் பலர் குளிர் காய்கின்றனர். அது போல மிகவும் சிரமப்பட்டுத் தவம் செய்து இறைவனை அடைந்த மகான்களோடு பழகுவதால் பலர் இறைவனிடத்தில் சுலபமாக மனத்தை வைக்க முடிகிறது.
கபிலன் @ http://www.no1tamilchat.com/no1chat/index.php?topic=70582.0

Sunday, November 16, 2014

108 சிவன் போற்றி !!!!

ஓம் அப்பா போற்றி 
ஓம் அரனே போற்றி
ஓம் அரசே போற்றி
ஓம் அமுதே போற்றி
ஓம் அழகே போற்றி
ஓம் அத்தா போற்றி
ஓம் அற்புதா போற்றி
ஓம் அறிவா போற்றி
ஓம் அம்பலா போற்றி
ஓம் அரியோய் போற்றி
ஓம் அருந்தவா போற்றி
ஓம் அணுவே போற்றி
ஓம் அண்டா போற்றி
ஓம் ஆதியே போற்றி
ஓம் ஆறங்கா போற்றி
ஓம் ஆரமுதே போற்றி
ஓம் ஆரணா போற்றி
ஓம் ஆலவாயா போற்றி
ஓம் ஆரூரா போற்றி
ஓம் இறைவா போற்றி
ஓம் இடபா போற்றி
ஓம் இன்பா போற்றி
ஓம் ஈசா போற்றி
ஓம் உடையாய் போற்றி
ஓம் உணர்வே போற்றி
ஓம் உயிரே போற்றி
ஓம் ஊழியே போற்றி
ஓம் எண்ணே போற்றி
ஓம் எழுத்தே போற்றி
ஓம் எண்குணா போற்றி
ஓம் எழிலா போற்றி
ஓம் எளியா போற்றி
ஓம் ஏகா போற்றி
ஓம் ஏழிசையே போற்றி
ஓம் ஏகாந்தா போற்றி
ஓம் ஐயா போற்றி
ஓம் ஒருவனே போற்றி
ஓம் ஒப்பிலா போற்றி
ஓம் ஒளியே போற்றி
ஓம் ஒலியே போற்றி
ஓம் ஓங்காரா போற்றி
ஓம் கடம்பா போற்றி
ஓம் கதிரே போற்றி
ஓம் கனியே போற்றி
ஓம் கலையே போற்றி
ஓம் காருண்யா போற்றி
ஓம் குறியே போற்றி
ஓம் குருவே போற்றி
ஓம் குணமே போற்றி
ஓம் கூத்தா போற்றி
ஓம் கடையே போற்றி
ஓம் சங்கரா போற்றி
ஓம் சதுரா போற்றி
ஓம் சதாசிவா போற்றி
ஓம் சிவமே போற்றி
ஓம் சிறமே போற்றி
ஓம் சித்தமே போற்றி
ஓம் சீரா போற்றி
ஓம் சுடரே போற்றி
ஓம் சுந்தரா போற்றி
ஓம் செல்வா போற்றி
ஓம் செங்கணா போற்றி
ஓம் செம்பொணா போற்றி
ஓம் சொல்லே போற்றி
ஓம் ஞாயிறே போற்றி
ஓம் ஞானமே போற்றி
ஓம் தமிழே போற்றி
ஓம் தத்துவா போற்றி
ஓம் தலைவா போற்றி
ஓம் தந்தையே போற்றி
ஓம் தாயே போற்றி
ஓம் தாண்டவா போற்றி
ஓம் திங்களே போற்றி
ஓம் திசையே போற்றி
ஓம் திரிசூலா போற்றி
ஓம் துணையே போற்றி
ஓம் தெளிவே போற்றி
ஓம் தேவ தேவா போற்றி
ஓம் தோழா போற்றி
ஓம் நமசிவாயா போற்றி
ஓம் நண்பா போற்றி
ஓம் நஞ்சுண்டா போற்றி
ஓம் நன்மறையா போற்றி
ஓம் நிறைவா போற்றி
ஓம் நினைவே போற்றி
ஓம் நீலகண்டா போற்றி
ஓம் நெறியே போற்றி
ஓம் பண்ணே போற்றி
ஓம் பித்தா போற்றி
ஓம் புனிதா போற்றி
ஓம் புராணா போற்றி
ஓம் பெரியோய் போற்றி
ஓம் பொருளே போற்றி
ஓம் பொங்கரவா போற்றி
ஓம் மணியே போற்றி
ஓம் மதிசூடியே போற்றி
ஓம் மருந்தே போற்றி
ஓம் மலையே போற்றி
ஓம் மஞ்சா போற்றி
ஓம் மணாளா போற்றி
ஓம் மெய்யே போற்றி
ஓம் முகிலே போற்றி
ஓம் முத்தா போற்றி
ஓம் முதல்வா போற்றி
ஓம் வாழ்வே போற்றி
ஓம் வைப்பே போற்றி
ஓம் சிவபிரானே போற்றி ! போற்றி!

Tuesday, November 11, 2014

பஞ்சாட்சரம் மூன்று விதம்

மூன்று வித பஞ்சாட்சரம்
ஸ்தூல பஞ்சாட்சரம் - நமசிவய
சூட்சும பஞ்சாட்சரம் - சிவயநம
காரணபஞ்சாட்சரம் - சிவ சிவ
ஸ்தூல பஞ்சாட்சரம் - நமசிவய
நமசிவய” என்னும் ஸ்தூல பஞ்சாட்சரம் ஓம்கார பிரணவத்தோடு சேர்த்து “ஓம் நமசிவய” என்று உச்சரிப்பதே மரபாகும். சித்தர்கள் இம் மந்திரத்தை பஞ்சபூதங்களின் ஒருமித்த வெளிப்பாடகவே உணர்ந்தனர். இம் மந்திரத்தில் சித்தி அடைவதால் பஞ்சபூதங்கள் கட்டுப்படுவதொடு ஐம்பொறிகளும் நமது கட்டுக்குள் அடங்கி நிற்கும். பஞ்சபூதங்களில் இம் மந்திரத்தின் ஆளும் தன்மை
ந – நிலத்தைக் குறிக்கிறது,
ம – நீரைக் குறிக்கிறது,
சி – நெருப்பைக் குறிக்கிறது,
வ – காற்றைக் குறிக்கிறது,
ய – ஆகாயத்தைக் குறிக்கிறது
ந - கிழக்கு நோக்கிய முகத்திற்கு உரியது, மஞ்சள் நிறம், கௌதம மகரிஷி
ம – தெற்க்கு நோக்கிய முகத்திற்கு உரியது, கருப்பு நிறம், அத்திரி மகரிஷி
சி – மேற்க்கு நோக்கிய முகத்திற்கு உரியது, புகையின் நிறம், விஸ்வாமித்ர மகரிஷி
வ – வடக்கு நோக்கிய முகத்திற்கு உரியது, பொன்னிறம், ஆங்கீரஸ மகரிஷி
ய –மேல் நோக்கிய திருமுகத்திற்கு உரியது, சிவந்த நிறம், பரத்வாஜ மகரிஷி
சூட்சும பஞ்சாட்சரம்
சிவய நம” என்பது சூட்சும பஞ்சாட்சரம் ஆகும். இம் மந்திரம் பிரணவத்தோடு சேர்த்து “ஓம் சிவய நம” என்றே உச்சரிக்க வேண்டும். சிவபெருமானின் ஐந்து முகங்களில் இருந்து ஓம் எனும் பிரணவம் உதித்தது. வாமதேவம் வடக்கு முகத்திலிருந்து ‘அ’ காரமும், சத்யோஜாதம் மேற்க்கு முகத்திலிருந்து ‘உ’ காரமும், அகோரம் தெற்கு முகத்திலிருந்து ‘ம’ காரமும், தத்புருஷம் கிழக்கு முகத்திலிருந்து ‘பிந்து’ எனப்படும் நாதத்தின் தொடக்கமும், ஈசானம் மேல் நோக்கிய முகத்திலிருந்து நாதமான சப்த ரூபமும் தோன்றின. இவ்வாறு ஓம் என்ற பிரணவத்தோடு சிவய நம சேர்ந்து முழுமையான மந்திரஸ்வரூபம் உருவானது.
அவ்வும், உவ்வும், மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே”
“சிவய நம என்று சிந்தித்திருப்போர்க்கு அபாயம் ஒரு நாளுமில்லையே”
திருவாய் பொலியச் சிவய நம என்று நீறணிந்தேன்தருவாய் சிவகதி நீ பாதிரிப் புலியூர் அரனே”
“சித்தம் ஒருங்கிச் சிவய நம என்று இருக்கினல்லால்
அத்தன் அருள் பெறலாமோ அறிவிலாப் பேதை நெஞ்சே...”
காரண பஞ்சாட்சரம்
சிவ சிவ என்பது காரணப் பஞ்சாட்சரம் என வழங்கப்படும்.சிவ சிவ எனும் மந்திரம் நமது காரண சாரத்தில் உள்ள பிறப் பதிவுகளை நீக்க வல்லது என்பது ஞானியாரின் அழ்ந்த கருத்து. இந்த மந்திரத்தில் சாதாரண உலகின் ஆசாபாசங்களுக்கு அப்பாற்பட்ட, ஞான நிலைக்கு ஒருவரை இட்டு செல்லக்கூடியது. ஆகையால் இந்த மந்திரத்தின் மூலமாக லவ்கீக லாபங்களை எதிர் பார்க்க முடியாது. அதாவது உலகியல் குறிகோள்களை பூர்த்தி செய்த ஒருவருக்கு (துறவு நெறி பூண்டவர்களும், மிக வயதானவர்களும்) இந்த மந்திரம் பொருத்தமானது.
“சிவ சிவ என்றிடத் தீவினை மாலும்
சிவ சிவ என்கிலார் தீவினையாளர்
சிவ சிவ என்றிடத் தேவருமாவர்
சிவ சிவ என்னச் சிவ கதி தானே”

விநாயகர் மந்திரத்தை திரும்ப திரும்ப ஜபித்தால்!!!!

பிருகு முனிவர், மன்னர் படும் துன்பத்தை பார்த்து கலங்கி, “அரசே நான் கூறும் விநாயகர்
மந்திரத்தை திரும்ப திரும்ப ஜபித்தால் இந்த உருவம் நீங்கி .பழையபடி நல்ல சுந்தரமான அம்சத்தை பெறுவீர்கள்.” என்றார்.
அந்த மந்திரம் –
ஓம் சுமுகாய நம
ஓம் ஏக தந்தாய நம
ஓம் கபிலாய நம
ஓம் கஜகர்ணகாய நம
ஓம் லம்போதராய நம
ஓம் விநாயகாய நம
ஓம் விக்கினராஜாய நம
ஓம் கணாத்பதியே நம
ஓம் தூமகேதுவே நம
ஓம் கணாத்ய க்ஷசாய நம
ஓம் பாலசந்திராய நம
ஓம் கஜானனாய நம
ஓம் வக்ரதுண்டாய நம
ஓம் சூர்ப்பகன்னாய நம
ஓம் ஏரம்பாய நம
ஓம் ஸ்காந்த பூர்வாய நம!
பிருகு முனிவர் கூறிய இந்த அற்புத விநாயகர் மந்திரத்தை அப்படியே சொன்னார் சோமகாந்த மன்னர். இதை பல தடவை நம்பிக்கையுடன் சொல்லி வந்தார்.
என்ன ஆச்சரியம்… மன்னரின் உடலில் இருந்து இத்தனை வருடம் ஆட்டி படைத்த நோய் சில வாரங்களிலேயே படிபடியாக நீங்கி பழைய சுந்தரமான உருவத்தை பெற்றார்.
உடலில் ஏதாவது ஆறாத காயமோ அல்லது உடலில் ஏதாவது அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது இருந்தாலும், இந்த விநாயகர் மந்திரத்தை கூறினால் பாதகம் இல்லாமல் நல்லபடியாகவே குணம் ஆகும்

Saturday, November 8, 2014

தினசரி வாழ்வில் நான்கு படிகள்

நான்கு வகை சாக்கிரம்.
ஒவ்வொருவரும் தினம் தினம் கீழ்கண்ட நான்கு நிலைகளில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அதைப்பற்றி சிந்திக்காமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். இதைப் பற்றி சற்று புரிந்து கொண்டாள் வாசி, சிவ யோகம் போன்ற வற்றை புரிந்து கொள்ளுவது மிகவும் எளிது.
நனவு
ஞானேந்திரம் 5
கர்மேந்திரம். 5
காற்று 10
அந்தக்கரணம் 4
புருடன் 1
ஆக 25 தத்துவங்கள் தொழில் படுதல்.
சொப்பனம். கனவு .
காற்று 10
அந்தக்கரணம் 4
புருடன் 1
ஆக 15 தத்துவங்கள் தொழில் படுதல்.
உறக்கம், சுழுத்தி.
அந்தக்கரணம் 4
புருடன் 1
ஆக 5 தத்துவங்கள் தொ ழில் படுதல்
துரியம்
புருடன் 1
ஆக ஒரு தத்துவமட்டும் தொழில் படுதல்
ஒரு பாதையுமின்றி தானாயிருப்பது பிரமம். பிரமம் மாயையாகிய அவித்தையிற் பிரதிபலித்த போது சீவன். சீவன் அவித்தையிற் கூடிய போது சுழுத்தி. சுழுத்தி அந்தகரனத்தில் கூடில் சொப்பனம். சொப்பனம் ஐந்து இந்திரியத்தில் கூடில் சாக்கிரம். சாக்கிரம் 96 தத்துவங்களுடன் கூடில் விவகாரம்.
இது மனித வாழ்க்கையின் தொடக்கம், நிலைப்பு, மறைவாகும்.
ஒரு மனிதன் வாசி யோகம் என்ற மடை மாற்றம் செய்தால், கடவுள் நிலை அடையலாம். அதற்கிடையில் எல்லா ஆற்றல்களையும் அடையலாம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்
http://siddharulagam.blogspot.in/

கிருபானந்த வாரியாரின் ஒவ்வொரு நாளும் சொல்ல ஒவ்வொரு துதி!

Author : kathiravan sun
எல்லா நாட்களும் நல்ல நாட்களாகவே இருக்கவேண்டும்! இந்த ஆசை யாருக்குத்தான் இருக்காது?
அதற்கு எளிய வழி, இறைவனைத் துதிபாடித் துதிப்பதுதான் என்கின்றன புராணங்கள்.
இன்றைய அவசர உலகத்தில் கடவுளை, கையெடுத்துக் கும்பிடக்கூட நேரமில்லாத நிலையில் தினமும் பாட்டுப் பாடி கும்பிடுவதா? அது எப்படி முடியும்? என்கிறீர்களா?
முடியும். அதற்கான எளிய வழி இதோ இருக்கிறது. கிருபானந்த வாரியார் சுவாமிகள் அதற்காகவே வாரத்தின் ஏழு நாட்களும் சொல்ல ஏழு சின்னச் சின்ன துதிகளை இயற்றியுள்ளார்.
திருப்பரங்குன்றம் முதல் வயலூர் வரையான ஏழு திருத்தலங்களில் உறையும் முருகனைப் போற்றிப் பாடப்பட்ட அந்தத் துதிகள், பலன் அதிகம் தரும் படைவீட்டு வாரப்பாடல்கள் என்றே போற்றப்படுகின்றன. உயர்வான அவை இதோ இங்கே தரப்பட்டுள்ளன.
ஞாயிறு தொடங்கி சனிக்கிழமை வரை தினம்தினம் சொல்லுங்கள். கந்தவேள் கருனையால், எல்லா நாட்களும் ஏற்றமானதாகவே இருக்கும்.
ஞாயிற்றுக்கிழமை
தாயினும் இனிமையாகத் தண்ணருள் செய்வாய் போற்றி!
சேயென ஆள்வாய் ஞானத் திருமுருகேச போற்றி!
மீயுயள் பரங்குன்றில் மேவிய வேலா போற்றி!
ஞாயிறு வாரம் வந்து நலமெலாம் அருள்வாய் போற்றி!
திங்கட்கிழமை
துங்கத்தமிழால் உனைத் தொழுவோர்க்கு அருள் வேலவ போற்றி!
சிங்க முகனை வதைத்த அருட்செல்வத் திருநாயக போற்றி!
சங்கப்புலவோர் தமக்கென்றும் தலைவா சிவதேசிக போற்றி!
திங்கட்கிழமை வந்தருள்வாய் செந்தில்பதி நின்பதன் போற்றி!
செவ்வாய்க்கிழமை
செவ்வான் அனைய திருமேனிச் சேயே நாயேன் துயர் தீராய்
எவ்வானவரும் ஏத்துகின்ற இறைவா இளம் பூரண போற்றி!
தெய்வாதனை இல்லாத பரயோகியர் சிவதேசிக போற்றி!
செவ்வாய்க்கிழமை வந்தருள்வாய் செல்வப் பழநிகுக போற்றி!
புதன்கிழமை
மதவாரணமுகத்தோன் பின் வந்த கந்தா சிவயோகப்
பதவாழ்வு அருள்வாய் பரனே அரனார் பாலகனே
உதவாக்கரையாம் அடியேற்கு உண்மைப் பொருளை உரைத்திடவே
புதவாரமதில் வந்தருள்வாய் பொருவில் திருஏரக போற்றி!
வியாழக்கிழமை
மயானம் உறையும் இறையான மகேசன் பெற்ற குகேசன் எனத்
தியானப் பொருளாம் திருமுருகா தேவே மாவேதிய போற்றி!
தயாளசீலா தணிகை முதல் தவர்வாழ் குன்றுதொறும் வாழ்வாய்
வியாழக்கிழமை வந்தருள்வாய் வேலா கோலாகலா போற்றி!
வெள்ளிக்கிழமை
அள்ளி வழங்கும் ஆறுமுகுத்தரசே விரைசேர் கடம்பணிந்த
வள்ளிக் கணவா வடிவேலா வரதச் சரதப் பெருவாழ்வே!
வெள்ளிமலைதேர் வியன் ஞானம் மேவு பழமார் சோலையனே
வெள்ளிக்கிழமை வந்தருள்வாய் வேத நாத பதம் போற்றி!
சனிக்கிழமை
கனிவாய் வள்ளி தெய்வானைக் கணவா உணர்வோர் கதிர்வேலா
முனிவாய் எனில் நான் எங்கடைவேன் முத்தா அருணை முனிக்கு அரசே
இனிவாதனையால் அடிநாயேன் என்றும் குன்றா வணம் வாழ்
சனிவாரமதில் வந்தருள்வாய் தயவார் வயலூர்ப்பதி போற்றி!

Wednesday, November 5, 2014

சித்தர்கள் கூறும் பொய் குருக்கள்.

காகபுஜண்டர் பெருமான் கூறும் பொய் குரு.
-----------------------------------------------------------------------
பாரப்பா சீடர்களை அழைப்பான் பாவி
பணம்பறிக்க வுபதேசம் பகர்வோ மென்பான்
ஆரப்பா பிரமநிலை காட்டா மற்றான்
ஆகாசப் பொய்களையு மவன்தான் சொல்வான்
நேரப்பா சீடனுக்குப் பாவ மாச்சு
நிட்டை சொல்லுங் குருக்களுக்குத் தோட மாச்சு
வீரப்பா அடங்குகின்ற இடத்தைப் பாரான்
விதிபோலே முடிந்ததென்று விளம்பு வானே !
கருவூரார் சித்தர் கூறும் பொய் குரு
--------------------------------------------------------------------------
புகலுவார் வேதமெல்லாம் வந்த தென்று
பொய்பேசிச் சாத்திரங்கள் மிகவுங் கற்றே
அகலுவார் பெண்ணாசை விட்டோ மென்றே ;
அறிவுகெட்டே ஊர்தோறுஞ் சுற்றிச் சுற்றிச்
சகலமுமே வந்தவர்போல் வேடம் பூண்டு
சடைமுடியுங் காசாயந் தன்னைச் சாற்றி
இகலுமான மடங்காமல் நினைவு வேறாய்
எண்ணமெலாம் பெண்ணாசை பூசை தானே.
பூசையது செய்வமென்று கூட்டங் கூடிப்
புத்திகெட்டுக் கைம்முறையின் போக்கை விட்டுப்
பாசையது மிகப்பேசிப் பாட்டும் பாடிப்
படிப்பார்கள் மந்திரத்தின் பயனைக் காணார் :
ஆசையிலே பெண்ணாசை மயக்கத் தாலே
அங்கிருந்த வாமத்தைப் பங்கு போட்டுப்
பேசையிலே மனம்வேறாய் நினைப்பான் பாவி
புரட்டுரூட்டாய் நினைவுதப்ப பேசு வானே.
பேச்சென்றால் வாய்ச்சமர்த்தாய்� �் பேசிப் பேசிப்
பின்னுமுன்னும் பாராமல் மதமே மீறி
நீச்சென்றும் நினைப்பென்றும் ஏதுங் காணார்
நிர்மூட ரனேகவித சாலங் கற்றே
ஆச்சென்றா லதனாலே வருவ தேது ?
ஆத்தாளைப் பூசித்தோ னவனே சித்தன்
மூச்சென்ன செய்யுமடா நரகிற் றள்ளும் :
மோசமது போகாதே முக்கால் பாரே !
சிவவாக்கியர் கூறும் பொய் குருக்கள் -------------------------------------------------------
யோகசாடை காட்டுவார் உயரவும் எழும்புவார்
வேகமாக அட்டசித்து வித்தைகற்று நெட்டுவார்
மோகம் கொண்டு மாதரின் மூத்திரப்பை சிக்கிப்பின்
பேயது பிடித்தவர் போல் பேருலகில் சாவரே.
ஞானிஞானி என்றுரைத்த நாய்கள் கோடி கோடியே
வானிலாத மழைநாளென்ற வாதிகோடி கோடியே
தானிலான சாகரத்தின் தன்மைகாணா மூடர்கள்
மூனிலாமற் கோடிகோடி முன்னிறந்த தென்பரே
காயகாயம் உண்பதாகக் கண்டவர் மதித்திட
மாயவித்தை செய்வதுஎங்கு மடிப்புமோசம் செய்பவர்
நேரமாகக் கஞ்சாஅடித்து நேர்அபினையைத் தின்பதால்
நாயதாக நக்கிமுக்கி நாட்டினில் அலைவரே.
நீரினில் குமிழிஒத்த நிலையிலாத காயம்என்று
ஊரினில் பறைஅடித்து ஊதாரியாய்த் திரிபவர்
சீரினில் உனக்குஞான சித்திசெய்வேன் பாரென
நேரினில் பிறர்பொருளை நீளவும்கைப் பற்றுவார்
காவியும் சடைமுடி கமண்டலங்கள் ஆசனம்
தாவுருத்தி ராட்சம்யோக தண்டுகொண்ட மாடுகள்
தேவியை அலையவிட்டுத் தேசம்எங்கும் சுற்றியே
பாவியென்ன வீடெலாம் பருக்கைகேட்டு அலைவரே
முத்திசேரச் சித்திஇங்கு முன்னளிப்பேன் பாரெனக்
சத்தியங்கள் சொல்லிஎங்கும் சாமிவேடம் பூண்டவர்
நித்தியம் வயிறுவளர்க்க நீதிஞானம் பேசியே
பத்தியாய்ப் பணம்பறித்துப் பாழ்நரகில் வீழ்வரே
மனவுறுதி தானிலாத மட்டிப்பிணை மாடுகள்
சினமுறப் பிறர்பொருளைச் சேகரித்து வைத்ததைத்
தினந்தினம் ஊர்எங்கும் சுற்றிதிண்டிக்கே அலைபவர்
இனமதில் பலரும்வையும் இன்பம் அற்ற பாவிகள்
திருமூலர் கூறும் பொய்க் குருக்கள்
------------------------------------------------------------------------
குருடர்க்குக் கோல்காட்டிச் செல்லும் குருடர்
முரணும் பழங்குழி வீழ்வர்கள் முன்பின்
குருடனும் வீழ்வர்கள் முன்பின் அறவே
குருடரும் வீழ்வார் குருடரோடு ஆகியே
-------------------------------------------------------------------------------------
ஆடம் பரங்கொண் டடிசிலுண் பான்பயன்
வேடங்கள் கொண்டு வெருட்டிடும் பேதைகாள்
ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியுந்
தேடியுங் காணீர் சிவனவன் தாள்களே
-------------------------------------------------------------------------------------
ஞானமில் லேர்வேடம் பூண்டிருந்த நாட்டிடை
ஈனம தேசெய் திரந்துண் டிருப்பினும்
மான நலங்கெடும் வையகம் பஞ்ச்மாம்
ஈனவர் வேடங் கழிப்பித்தல் இன்பமே
-------------------------------------------------------------------------------------
பொய்த்தவஞ் செய்வார் புகுவர் நரகத்துப்
பொய்த்தவஞ் செய்தவர் புண்ணிய ராகாரேற்
பொய்த்தவம்மெய்த்� �வம் போகத்துட்போக்கிய� �்
சத்திய ஞானத்தால் தங்குந் தவங்களே
-------------------------------------------------------------------------------------
பொய்வேடம் பூண்பர் போசித்தல் பயனாக
மெய்வேடம் பூண்போர்மிகு பிச்சைகைக்கொள்வர� �
பொய்வேடம் மெய்வேடம் போலவே பூணினும்
உய்வேட மாகும் உணர்ந்தறிந் தோர்க்கே
-------------------------------------------------------------------------------------
குருட்டினை நீக்குங் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வார்
குருடுங் குருடுங் குருட்டாட்டம் ஆடிக்
குருடுங் குருடுங் குழிவிழு மாறே
-------------------------------------------------------------------------------------
மனத்தில் எழுந்ததோர் மாயக்கண் ணாடி
நினைப்பின் அதனின் நிழலையுங் காணார்
வினைப்பயன் போக விளக்கியுங் கொள்ளார்
புறக்கடை இச்சித்துப் போகின்ற வாறே
-----------------------
கொங்கணர் சித்தர் கூறும் பொய் குரு
--------------------------------------------------------------------
பூணராய்ப் பூண்பார்கள் மூலத்துள்ளே
பெண்ணாசை பொன்னாசை மண்ணினாசை
ஆணராய்க் காமியத்தைச் சுழன்று நின்றே
யாச்சரியம் வேதாந்த மனைத்தும் பார்ப்பார்
காணராய்க் கண்டுவிட்டோம் ஞானமென்பார்
கழுதைகள்தான் மெத்தவுண்டு கண்டு கொள்ளே.

நந்தனாருக்கு வழிவிட்டு நகர்ந்த நந்தி

சோழவள நாட்டைச் சேர்ந்த ஆதனூர் அருகில் விவசாய தொழிலைக் கொண்டவர்கள் வசித்து வந்தவர். அந்த குலத்தைச் சேர்ந்தவர் நந்தனார். மண்ணில் பிறந்த நாளில் இருந்து மகேஸ்வரனின் மீது அளவு கடந்த அன்பைக் கொண்டிருந்தார்.
இறை தொண்டும் ஆற்றி வந்தார். தம் குலத் தொழிலில் சிறந்து விளங்கிய நந்தனார், அதில் கிடைக்கும் வருமானத்தில், கோவில்களுக்கும் இறைவனுக்கும் வேண்டிய பொருட்களை வாங்கி வழங்கி வந்தார். இருப்பினும் அந்த காலத்தில் நந்தனாரின் குலத்தைச் சேர்ந்தவர்கள், ஆலயத்திற்குள் சென்று, இறைவனை வழிபட தகுதியற்றவர்களாக கருதப்பட்டு வந்தனர்.
இதனால் நந்தனார் ஆலயத்திற்குள் செல்லாமல் வெளியில் நின்றே இறைவனை தொழுவார், பாடுவார், ஆனந்தக் கூத்தாடுவார். ஒருமுறை திருப்புன்கூர் திருத்தலத்தில் வீற்றிருக்கும் சிவலோகநாதரைத் தரிசிக்க நந்தனார் எண்ணம் கொண்டார்.
கோவிலுக்கு தன்னால் இயன்ற திருப்பணியைச் செய்யவும் சித்தம் கொண்டார். அதன்படி திருக்கோவிலை சென்றடைந்தார். சிவலோக நாதரைக் கோவிலின் வெளியில் இருந்து தரிசிக்க முயன்ற நந்தனாருக்கு, இறைவன் எதிரில் இருந்த நந்தி தடையாக இருந்தது. அதனால் இறைவனை சரியாக நந்தனாரால் பார்க்க முடியவில்லை.
இறைவனை நினைத்து உருகினார், பக்தனின் பக்தியைக் கண்டு உள்ளம் மகிழ்ந்த சிவபெருமான் உத்தரவுப்படி, நந்தி சற்று நகர்ந்தது. இப்போது நந்தனாருக்கு இறைவனின் தரிசனம் கண்குளிரக் கிடைத்தது. சிவனின் மீது பற்று கொண்ட நந்தனாருக்கு தில்லை சென்று சிதம்பர தரிசனம் செய்ய வேண்டும் என்று ஆவல் எழுந்தது.
அது பல ஆண்டுகளாகியும் முடியாத நிலையில் இருந்தது. நாளைக்கு போவேன், நாளைக்கு போவேன் என்று அவர் தனக்குள்ளாகவே கூறியபடி தன்னை ஆற்றுப்படுத்திக் கொண்டு வந்தார். இதன் காரணமாகவே நந்தனாருக்கு திருநாளைப் போவார் என்ற பெயர் ஏற்பட்டது.
இந்த நிலையில் ஒரு முறை தில்லையம்பதியனை தரிசிக்கும் இறுதியான முடிவுடன் புறப்பட்டுச் சென்று, தில்லையின் எல்லையை அடைந்தார். அங்கே அந்தணர்கள் நடத்திய வேள்வியால் எழுந்த புகை மண்டபம் கோவிலை மூடியிருந்தது. அந்தக் காட்சி, கயிலாய மலையை நந்தனாருக்கு நினைவுபடுத்தியது.
ஆனந்தக் கூத்தாடி மகிழ்ந்தார். இருப்பினும், கோவிலுக்குள் சென்று வழிபட முடியாத நிலையை நினைத்து வருந்தினார். ஆலயத்தின் கதவுகள் பக்தர்களுக்காக இரவும் பகலும் திறந்திருந்தபோதிலும் சமூகத்தின் தீண்டாமை நோய் காரணமாக அவரால் உள்ளே செல்ல முடியவில்லை.
எனவே இறைவனை நினைத்து உள்ளம் உருக தன் வேதனையை கூறி மன்றாடினார். பல நாட்களாக அங்கேயே தங்கியிருந்து ஏதாவது ஒரு வாய்ப்பில் உள்ளே செல்ல முடியாதா என்று காத்திருந்தார் நந்தனார். அப்போது ஒரு நாள் அவரது கனவில் தோன்றிய ஈசன், ‘நந்தா! வருந்தாதே! எமது தரிசனம் உனக்குக் கிட்ட வழி செய்கிறேன்.
இப்பிறவி நீங்கிட அனலிடை மூழ்கி, முப்புரி நூலுடன் என்முன் சேர்வாய்’ என்று கூறி மறைந்தார். பின்னர் கோவில் பணி செய்யும் அந்தணர்களின் கனவில் தோன்றிய இறைவன், ‘என்னை வழிபட்டு மகிழும் நந்தன் திருக்குலத்திலே தோன்றியவன்தான்.
திருமதில் புறத்தே அவன் படுத்திருக்கிறான். நீவிர் அவனை அழைத்து வந்து தீயிடை மூழ்கச் செய்து, என் சன்னிதிக்கு அழைத்து வாருங்கள்’ என்று ஆணையிட்டார். மறுநாள் காலைப் பொழுது, தில்லைவாழ் அந்தணர்கள் அகமகிழ்ச்சியோடு எழுந்து பரமன் பணித்தபடி மதிலின் புறத்தே வந்தனர்.
எம்பெருமானை நினைத்து உருகும் நந்தனாரை அணுகி, ‘அம்பலத்தரசன் ஆணையை நிறைவேற்ற நாங்கள் வந்துள்ளோம். பெருமான் பணித்ததற்கு ஏற்ப நீங்கள் மூழ்கி எழுவதற்காக தீ மூட்டித்தருகிறோம். நீங்கள் நெருப்பிடை மூழ்கி எழுக’ என்று வேண்டிக் கொண்டனர்.
அவ்வாறே நெருப்பிடை மூழ்கி எழுந்த நந்தனார், பால் போன்ற மேனியும், திருவெண்ணீற்று ஒளியும், ருத்திராட்ச மாலையும், முப்புரி நூலும் விளங்கத் தூய முனிவரைப் போல் சடை முடியுடன் வெளியே வந்தார். நந்தனாரின் அருள் வடிவத்தைக் கண்டு, தில்லைவாழ் அந்தணர்கள் அகமகிழ்ந்தனர். அவரை வாழ்த்தி வணங்கினர்.
சிவ கணங்கள் வேதம் முழங்கின. நான் மறைகள் ஒலித்தன. அந்தணர் வழிகாட்ட நந்தனார் முன் சென்றார். கரங் குவித்து ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதிக்கொண்டே ஆடுகின்ற கூத்தபிரானின் திருமுன் நின்றார். அவர் திரும்பவே இல்லை. இறைவனுடன் ஐக்கியமாகி விட்டார்
http://aanmikam.blogspot.in/

சித்த தரிசனம் பெற வைக்கும் , ஒரு எளிய பயிற்சி முறை .. !

நிச்சயம் உங்களுக்கு சித்த தரிசனம் பெற வைக்கும்,ஒரு எளிய பயிற்சி முறை .. !
மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள் - சுமார் நாற்பது ஆண்டு காலம் ஆன்மீக ஆராய்ச்சி செஞ்சு , ஒரு சில முறைகளை செஞ்சு பார்க்க சொல்றார். அது சம்பந்தமா , நாம நிறைய பகிர்ந்துக்கப் போறோம்.. அதுலே , ஒரு விஷயம் இன்னைக்கு முக்கியமா... !
சித்தர்களை நாம எல்லோருமே நம்புறோம்.. சில விஷயங்கள் நாம் கேளிவிப்பட்டவரையில் மிகைப் படுத்துதல் போல தோன்றினாலும், அவங்க இருந்தாங்க.. இன்னும் பலப்பல வகையில், தன்னை நம்பியவர்களுக்கு சித்தர்கள் உதவி செய்யறாங்க. இதை நாமே எல்லோருமே ஓரளவுக்கு ஒப்புக்கொள்கிறோம். அவங்கள்ளே யாரையாவது நமக்கு தொடர்பு ஏற்படுத்திக்கிட்டா, நமக்கு கர்ம வினைகள் சுத்தமா அழிஞ்சிடுமே.. அவங்களோட வழிகாட்டுதல் பெற , அவங்களை சந்திச்சு தொடர்பு ஏற்படுத்திகிட ஒரு அற்புதமான முறையை சொல்லியிருக்கிறார்.
பதினெட்டு சித்தர்கள்ளே ஒருவர், நம் முன்னோர்களில் ஒருவராக இருக்க கூடும். இயல்பாக , உங்களுக்கு யார் மேல் ஈடுபாடு வருகிறது என்று பாருங்கள். இவர்தான் நீங்கள் சந்திக்கவிருக்கிற சித்தர். தியானத்தில் ஒரு நிலையை அடைந்த பிறகு, உங்களுக்கு இது தெரிய வரும். ஞானக் கோவை என்னும் சித்தர்கள் பாடலைப் படித்தால், உங்களுக்கு யாரேனும் ஒரு சித்தர் மேல் ஈடுபாடு வரும். அவர்தான் , உங்கள் ஜென்ம விமோச்சகர் .
பதினெட்டு வயதுக்கு மேல் ஆனவர்கள் மட்டும், இந்த பயிற்சியை செய்யவும்.
ஒரு திருவிளக்கை எட்டடி தூரத்தில் வைக்க வேண்டும். தாமரை நூல் திரியிட்டு , பசு நெய் ஊற்றி விளக்கேற்றுங்கள். ஒரு சிறிய காசி செம்பில், சுத்தமான தண்ணீர் எடுத்து விளக்கு முன் வைக்கவும்.
ஆசனப் பலகை அல்லது , தரையில் - மஞ்சள் துணி விரிப்பு விரித்து , விளக்கு ஒளி எட்டு அடி தூரத்தில் - உங்கள் புருவ மத்திக்கு நேர் கோட்டில் இருக்கும்படி, அமர்ந்து கொள்ளுங்கள்.
நீங்கள் சந்திக்க விரும்பும் சித்தர் பெயரை , மனதுக்குள் நினைத்துக் கொள்ளுங்கள். பின்பு,
ஓம் சிங் ரங் அங் சிங்
என்ற மந்திரத்தை திருவிளக்கைப் பார்த்தபடி , மனதுக்குள் ஜெபித்து வாருங்கள். இந்த மந்திரம் தான் , விண்வெளியில் இருக்கும் சித்தரை , உங்கள் பக்கம் ஈர்க்க தேவையான அலைவரிசை ட்யூனர்.
நீங்கள் ஆரம்பிக்கும் தினம், அமாவாசை தினமாக இருக்கட்டும். தினமும் இடைவிடாமல் - தொண்ணூறு நாட்களுக்கு ஜெபிக்கவேண்டும். நீங்கள் பயிற்சி மேற்கொள்ளவேண்டிய நேரம் - இரவு எட்டிலிருந்து , ஒன்பது மணி வரை. இந்த ஒரு மணி நேரத்தில் உங்களால் எவ்வளவு ஜெபிக்க முடியுமோ, ஜெபிக்கவும். எண்ணிக்கை முக்கியமில்லை.
ஜெபம் முடிந்த பிறகு, இரவு உணவாக படையல் செய்த பழங்களை உண்டு , பின் காசி செம்பிலுள்ள நீரை அருந்தவும். இரவு உணவாக பால் சாதம் சாப்பிடலாம். பயிற்சி மேற்கொள்ளும் மொத்த நாட்களில் - உப்பு ,புளி , காரம் குறைத்துக் கொள்வது நல்லது. அசைவ உணவு, புகை, மது கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும். இதனால் , உங்களுக்குமனபலம் கூடும்.
கண்டிப்பாக , தொண்ணூறு நாட்களுக்குள் உங்களுக்கு சித்தர் தரிசனம் கிட்டும்.
எதையோ, எங்கெங்கோ தேடி - முயற்சிகள் வீணடிப்பதைவிட, நேரடியாக சித்தரையே தரிசனம் செய்து விடுதல் நலம் இல்லையா...?
ஒரு சாதாரண செடி வளர்வதே - அந்த இடத்தின், சூழல் , மண் வளம் என்று வேறுபடும்போது , நம் அனுபவும் இந்த பயிற்சியில் ஒருவருக்கொருவர் வேறுபடலாம். நம் உடல் அமைப்பு, கிரக அமைப்பு எல்லாம் நமக்கு ஒத்துழைக்க வேண்டும் இந்த பயிற்சிக்கு. விடா முயற்சியுடன், முயன்றால் , ஒரு அளப்பரிய தெய்வீக அனுபவம் கிட்டும்...
எதெதையோ பேசிக்கொண்டு , விதண்டாவாதம் செய்வதைவிட - நாமே ஒரு சாதனை செய்ய முயன்று பார்ப்பதில் அர்த்தமுள்ளது.. நம்பிக்கையுடன் செயல்படுங்கள்....! மிக பிரமாதமான அனுபவம் உங்களுக்கு காத்திருக்கிறது..!
பயிற்சி நாட்களில் ஏற்படும் அனுபவங்களை மனதில் நன்றாக பதிய வைத்துக் கொள்ளுங்கள்.
http://sadhanandaswamigal.blogspot.in/

Tuesday, November 4, 2014

ஆழ்மனத்துடன் பேசி உங்கள் எதிர்காலத்தை நீங்களே உணர ஒரு சுலப முறை!!!

ஆழ்மனத்துடன் பேசி உங்கள் எதிர்காலத்தை நீங்களே உணர ஒரு சுலப முறை!!!
ஏதாவது ஒரு அமாவாசையன்று 50 கிராம் பசுநெய்யும்,50 கிராம் நல்லெண்ணையும், தாமரை நூல் திரியும் வாங்கிக் கொள்ள வேண்டும்.இதை நம் வீட்டில் இருக்கும் திருவிளக்கில் போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.விளக்கிலிருந்து நான்கு அடி தூரம் தள்ளி சுத்தமான மஞ்சள் விரிப்பு விரித்து அதில் நிமிர்ந்து உட்கார வேண்டும்.நமது புருவமத்திக்கு நேராக தீபம் எரிய வேண்டும்.
108 முறைக்குக்குறையாமல் தினமும் பின்வரும் மந்திரம் ஜபித்துவரவேண்டும்.வாயாலும் சொல்லலாம்.
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் நமோ பகவதி தீபிகா ஜோதி சொரூபணி
ஆகர்ஷய ஆகர்ஷய வாவா ஸ்வாஹா
சரியாக 90 தினங்களுக்குள் தீபம் உங்களுடன் பேசுவதை நீங்கள் சூட்சுமமாக உணர முடியும். உங்கள் எதிர்காலத்தையும், உங்கள் அன்றாட பிரச்னைகளுக்கு தீர்வையும், எடுக்கும் ஒவ்வொரு முடிவிலும் தடங்கல்களைத் தாண்டும் வழிமுறைகளையும் , நீங்கள் கண்கூடாக உணர முடியும். உங்களுக்கு வழிகாட்டுவது அந்த தீபமா அல்லது உங்கள் ஆழ்மனமா ? நீங்களும் அனுபவப் பூர்வமாக உணர்ந்து பாருங்கள்..