Sunday, August 31, 2014

2. திங்களூர் சந்திரன் கோவில்

நவக்கிரகங்ளில் சந்திரனுக்கு உகந்த கோவில் திங்களூர்ஆகும். இக்கோவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு அருகில் உள்ளது. இக்கோவிலில் கைலாசநாதரும், பெரியநாயகி அம்மனும் வீற்றிருக்கின்றனர். இங்குள்ள சிவபெருமானின் இடது கண்ணாக விளங்குபவர் சந்திரன்.
வரலாறு - கட்டிடக்கலை:
இக்கோவில் ஏழாம் நூற்றாண்டில் ராஜசிம்ம பல்லவனால்கட்டப்பட்டது. திராவிடக் கட்டிடக் கலையை பின்பற்றி கட்டப்பட்டுள்ளது இக்கோவில். இக்கோவிலின் சிறப்பு என்னவென்றால் புரட்டாசி மற்றும் பங்குனி மாதங்களில் நிலாவெளிச்சம் இங்குள்ள சிவலிங்கம் மேல் படும்.

தல புராணம்:
திங்களூரில் 63 நாயன்மார்களில் ஒருவரான அப்பூதியடிகள்என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் சிவபெருமான் மீது கொண்ட பற்றால், சிவபெருமான் மீது பக்தி கொண்ட திருநாவுக்கரசர் பெயரை தன் மகன்களுக்கு மூத்த திருநாவுக்கரசு, இளையதிருநாவுக்கரசு என்று பெயர் வைத்தார். மேலும் திருநாவுக்கரசர் பெயரில் சிவனடியார்களுக்கு தொண்டு செய்து வந்தார்.
ஒரு நாள் திருநாவுக்கரசர் திங்களூருக்கு வந்த போது அப்பூதியடிகள் பற்றி கேள்விப்பட்டு அவரை காண சென்றார்.திருநாவுக்கரசரை கண்ட அப்பூதியடிகள் அவரை வரவேற்று உணவளிக்க விரும்பினார். தன் மகனை வாழை இலை பறித்து வருமாறு அனுப்ப அங்கே அவனை பாம்பு தீண்டியது.
தன் மகன் இறந்துவிட்டான் என்ற செய்தி கேட்டால்திருநாவுக்கரசர் சாப்பிட மாட்டாரோ என்றென்னிய அப்பூதியடிகள் அதனை மறைத்து உணவளித்தார். மகனை பற்றி அறிந்த திருநாவுக்கரசர், அவனின் உடலை திங்களூர் திருக்கோவிலுக்கு எடுத்துச் சென்று “ஒன்று கொலாம் அவர் சிந்தை” என்று பதிகம் பாடி அவனை உயிர்ப்பித்தார். இதுவே இக்கோவில் வரலாறாகும்.
சந்திரனுக்கு உகந்தவை:
ராசி : கடக ராசி
அதி தேவதை : நீர்
நிறம் : வெண்மை
தானியம் : நெல், பச்சரிசி
வாகனம் : வெள்ளை குதிரை
உலோகம் : ஈயம்
மலர் : அல்லி
ரத்தினம் : முத்து
ஸ்தல விருட்சம் : வில்வமரம்
காயத்ரி மந்திரம்:
பத்ம த்வஜாய வித்மஹே
பாஸ ஹஸ்தாய தீமஹி
தந்நோ சோம: ப்ரசோதயாத்.
வழிபடும் முறை:
நீர் தொடர்பான நோய்களுக்கு இவரே காரணமாவார். காலரா,நுரையீரல் நோய்கள் போன்றவை நீங்க இவரை வழிபடலாம். வெண்மை நிற மலர்களால் அர்சித்து, வெள்ளை நிற ஆடைகள் உடுத்தி, முத்து மாலை அணிந்து, பெளர்ணமி விரதம் இருந்துவழிபடலாம்.
பெளர்ணமி அன்று இக்கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
தொடர்புக்கு: 04362-262499
எப்படி செல்வது?
திங்களூருக்கு திருவையாருக்கு அருகில் உள்ள திருப்பழனம் சென்று அங்கிருந்து செல்லலாம்.
அருகில் உள்ள ரயில் நிலையம் - கும்பகோணம் 36 கி.மீ தொலைவில்.
அருகில் உள்ள விமான நிலையம் - திருச்சி 126 கி.மீ தொலைவில்.

3. வைத்தீஸ்வரன் கோயில் "செவ்வாய்"

ஸ்ரீ வைத்தியநாத பெருமாளாக வீற்றிருக்கும் சிவபெருமானையும் . தாயாராக காட்சி தரும் தையல் நாயகியையும் தரிசிக்க.
நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றாகிய வைத்தீஸ்வரன் கோயிலில் "செவ்வாய்" என்ற பெயரில் அறியப்படும் அங்காரக பெருமாள் பக்தர்களுக்கு தோஷ விமோசனம் அருளுகிறார். குஷ்ட நோயினால் அவதிப்பட்ட அங்காரகருக்கு சிவபெருமான் வைத்தியராக வந்து நோய் நீக்கிய திருக்கோயில் என்பதால் இக்கோயிலை வைத்தீஸ்வரன் கோயில் என்றே அழைக்கின்றனர்.
அங்காரக பகவானுக்கு உரிய நிறம், உலோகம், தானியம் போன்றவை வருமாறு:-
நிறம்: சிவப்புதானியம்: துவரைவாகனம்: ஆடுமலர்: செண்பகம்உலோகம்: செம்புகிழமை: செவ்வாய்இரத்தினம்: பவழம்பலன்கள்: பகைவர்களை ஜெயித்தல், சகல சாஸ்திரம், ஞானம்
நாடி ஜோதிடர்கள் மிக அதிகமாக காணப்படும் இந்த ஊரில் சமீப காலத்தில் ஓரிரு நல்ல உணவு விடுதிகளும் உள்ளன என்பதை இம்முறை நேரில் கண்டறிந்தோம். சிதம்பரத்திலிருந்து சுமார் 22கிலோமீட்டர் தொலைவிலுள்ள இந்த ஊர்மயிலாடுதுறையிலிருந்து சுமார் 16 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது.
இக்கோயிலிலுள்ள சித்தாமிருதம் என்ற கோயில் குளத்தில் மூழ்கியவர்களுக்கு நோய் நொடிகள் யாவும் கரைந்து போகும் என நம்பப்படுகிறது.
"திருபுள்ளிருக்கு வேலூர்" (புள், இருக்கு, வேல் ஆகியவையுடன் கூடிய ஊர்)என்ற திருநாமத்தில் அறியப்படும் இந்த கோயில், ஸ்தல விருட்ஷமாக வேப்ப மரத்தையே கொண்டுள்ளது. கோயிலில் நடராஜர், துர்கா, சிவகாமி, சூரிய பகவான், சப்த கன்னிகைகள், 63நாயன்மார்கள் ஆகியோரின் சன்னதிகளும் உள்ளன. இங்கு எழுந்தருளியிருக்கும் முருகப் பெருமானை செல்வமுத்துக் குமாரனாக பக்தர்கள் வழிபடுகின்றனர்.
இராமாயணத்தில் வரும் ஜடாயுவின் விருப்பப்படி ஸ்ரீ ராமர் ஜடாயுவுக்கு இறுதி சடங்குகளை இந்த இடத்தில் செய்ததாக கருதப்படுகிறது. ஜடாயு குண்டம் என அறியப்படும்இவ்விடத்தையும் பக்தர்கள் தரிசிக்கலாம்.
செவ்வாயை வழிபடுவதற்கு செவ்வாயின் கவசம், காயத்திரி,அர்ச்சனை நாமாக்களைக் கூறி செப்புத் தகடுகளில் வரையப்பட்ட யந்திரத்தை பூசித்து வந்தால் செவ்வாய் விருப்பங்களைநிறைவேற்றுவது உறுதி. இதற்குத் தேவையானது பக்தியும் சிரத்தையும் மட்டுமே. ஒரு இடத்தில் அமர்ந்தவாறு பத்து நிமிடம் வணங்கினால் போதும்.
கன்னிப்பெண்களும் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளவர்களும்நீராடி தூயாடையணிந்து நெற்றியில் திலகம் தரித்து கீழ் கண்டசெய்யாத் துதியையும் பக்தியுடன் ஓதினால் அளவற்ற நன்மைகள்உண்டாகும்

8. திருநாகேஸ்வரம் - ராகு பகவான்


ஸ்தல வரலாறு:
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது திருநாகேஸ்வரம். இங்கு நவக்கிரகங்களில் ஒருவரான ராகு, சிவபெருமானை பூசித்த நாகநாதர் கோவில் உள்ளது. நாக அரசராகிய ராகு பூசித்த காரணத்தால், இத்தலத்திற்கு திருநாகேஸ்வரம் என்ற பெயர் ஏற்பட்டது.
திருநாகேஸ்வரம் நவக்கிரகத் தலங்களில் ராகு பகவானுக்குரிய விசேஷ தலம் என்ற பெருமையும் உடையதாகும். பாதாள லோகத்திலிருந்து நாகராஜன் வந்து இங்குள்ள சிவபெருமானை வழிபட்டதால் இக் கோயிலின் மூலவர் நாகநாதசுவாமி என்றழைக்கப்படுகின்றார். இத்தலமும் திருநாகேஸ்வரம் என்று அழைக்கப்படுகின்றது. சிறந்த சிவபக்த கிரகமாகிய இராகு சில இடங்களில் மேனமை பெற்று விளங்கிய போதிலும் நாகநாதசுவாமி கோயிலின் இரண்டாவது பிரகாரம் தென் மேற்கு மூலையில் நாகவல்லி, நாக்கன்னி ஆகிய தன் இரு தேவிமாருடன் மங்கள ராகுவாக தனிக்கோயிலில் அமர்ந்து காட்சி அளிக்கின்றார். பொதுவாக ராகு மனித தலை, நாக உடலுடன் தான் காட்சி தருவார். ஆனால் இக்கோயிலில் மனித வடிவில் காட்சி தருகிறார்.
இவருக்குகந்த நிறம் நீலம் என்பதால் அணிகின்ற ஆடை மட்டுமல்ல, இவருக்குச் செய்கின்ற பாலாபிஷேகத்தின்போது தலை மீது ஊற்றும் பால் தலையிலிருந்து வழிந்து உடல் மீது வரும் போது பாலின் நிறமும் நீலமாகி விடுகின்ற அதிசயத்தைப் பார்க்கலாம். இவருக்கு உகந்த மலர் மந்தாரை. 1986ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16ஆம் நாள் ராகு பகவானின் மீது ஐந்தரை அடி நீளமுள்ள நாகமானது தனது சட்டையை மாலையாக இராகு பகவானுக்க் அணிவித்து இவரது பெருமையை உலகிற்கு உணர்த்தியது. அதை எடுத்து பத்திரப் படுத்திக் கண்ணாடிப் பேழைக்குள் வைத்திருக்கின்றனர். இறைவனைத் தரிசிக்க வரும் பக்தர்கள் பார்வைக்குக் காட்சிப் பொருளாக வைக்கப் பட்டிருக்கின்றது.
ராகு கேது தோஷம் இத்தலத்தில் வழிபட்டால் நீங்கும். திருமணம் தாமதமாதல், இல்லறத்தில் நிம்மதியினமை, ஜாதகத்தில் பித்திர தோஷம், களத்திர தோஷம், காலசர்ப்ப தோஷம், சர்ப்ப தோஷம்,மாங்கல்ய தோஷம் நீங்க இராகு தசை, இராகு புக்திகளில் இராகு பகவானுக்க் பாலாபிஷேகம், அர்ச்சனை, ஹோமம் செய்து வழிபட்டுப் பேறு பெறலாம்.
ராகுவின் பிறப்பு வரலாறும் கிரகச்சிறப்பும் சுவை நிரம்பியவை. ராஜவம்சத்து மன்னன் ஒருவனுக்கும் அசுரகுலப் பெண்ணொருத்திக்கும் மகனாகப் பிறந்தவன் ராகு. தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடையும்போது அசுரனாகிய ராகு உருமாறி தேவர்கள் வரிசையில் சேர்ந்து மஹாவிஷ்ணுவிடமிருந்து அமிர்தத்தைப் பெற்று உண்டு விட்டான். உண்மை அறிந்த மஹாவிஷ்ணு கையிலிருந்த அகப்பையால் அவனது மண்டையில் அடிக்க தலை வேறு உடல் வேறாகி விழுந்தான். ஆனாலும் அமிர்தம் உண்ட மஹிமையால் அவன் தலைப்பகுதியில் உயிர் இருந்தது. ராகுவும் தவறுக்கு வருந்தி இறைவனை வேண்டி நிற்க. இறைவன் பாம்பின் உடலை அவனுக்குக் கொடுத்து அவனை ஒரு நிழல் கிரகமாகவும் ஆக்கினார்.
கோவில் அமைப்பு: ஒரு காலத்தில் இத்தலம் செண்பக வனமாக காட்சி அளித்தது. செண்பக மரத்து நிழலில் சிவபெருமான் லிங்க வடிவில் எழுந்தருளியிருந்தார். இதனால் இறைவனுக்கு சண்பகாரண்யேஸ்வரர் என்பு பெயர் ஏறபட்டது. ஐந்து நிலைகளுடன் கூடிய ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கி இத்தலம் அமைந்துள்ளது. மற்ற 3 திசைகளிலும் கோபுரங்களையும் மூன்று பிரகாரங்களையும் கொண்டு இவ்வாலயம் விளங்குகிறது. கிழக்கு கோபுர வாயில் வழியாக உள்ளே வந்ததும் நிருத்த கணபதி,நந்திதேவர், விநாயகர் காட்சி தருகின்றனர். இடது பக்கம் சூரியபுஷ்கரணியும், வலது பக்கம் நூற்றுக்கால் மண்டபமும் அமைந்துள்ளன. புஷ்கரணி சமீபம் எழுந்தருளியுள்ள மழுவாயுதம் தரித்த விநாயகரைப் போற்றித் துதித்து உள்ளே செல்ல வேண்டும். கருவறையில் மூலவர் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். கருவறை சுற்றுப் பிரகாரத்தில் 63 நாயன்மார்கள், நடராஜர் சந்நிதி, நால்வர் சந்நிதி ஆகியவை அமைந்துள்ளன. சேக்கிழார்,அவரது தம்பி பாலறாவாயர், அவர் தாயார் அழகாம்பிகை மூவருக்கும் இத்திருக்கோவிலில் தனி தனிச் சந்நிதி உள்ளது.
அம்பாளுக்கு இத்தலத்தில் இரண்டு சந்நிதிகள் உள்ளன. சுவாமி சந்நிதிக்கு அருகில் பிறையணிவாள் நுதல் அம்மை தரிசனம் தருகிறாள். பிறை என்றால் சந்திரன். அம்பாளின் பெயருக்கு ஏற்ப ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாத பெளர்ணமி அன்று மாலை வேளையில் சந்திரனின் ஒளி அம்பாள் மேல் விழுகின்றது. கார்த்திகை மாதத்து கெளர்ணமி நாளில் அன்னையை தரிசிக்க பெரும் திரளாக பக்தர்கள் கூடுவர்.
இது தவிரத் தனிக்கோயிலில் மற்றொரு இறைவியாக "கிரி குசாம்பிகை" சந்நிதியும் உள்ளது. இங்கு அன்னை தவக்கோலத்தில் காட்சி அளிக்கின்றாள். இவள் உருவம் சுதையால் ஆனதால் அபிஷேகம் செய்வதில்லை. புனுகுச் சட்டம் மட்டுமே சார்த்துகிறார்கள். கிரி குசாம்பிகைக்கு இருபுறமும் லட்சுமியும்,சரஸ்வதியும் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றனர். வலதுபுறம் வீணையைக் கையில் தாங்கி சரஸ்வதியும், இடதுபுறம் கரங்களில் தாமரை மலரைத் தாங்கி லட்சுமிதேவியும் இருக்கின்றனர்.
கிரி குசாம்பிகை இங்கு கோவில் கொண்டதற்கு காரணமானவர் பிருங்கி முனிவர். இந்த முனிவர் சிவனை மட்டுமே வணங்குபவர். அருகிலுள்ள தன்னையும் சேர்த்து வணங்காமல் சிவனை மட்டும் வணங்கிச் செல்லும் பிருங்கி முனிவர் மேல் கோபம் கொண்ட சக்தி அர்த்தநாரீஸவரர் ஆக இறைவனின் இடது பாகத்தைப் பெற்றாள். அப்போதும் ஒரு வண்டு உருவம் எடுத்து அர்த்தநாரீஸவரர் வடிவத்தில் ஈசனை மட்டும் துளைத்துக் கொண்டு வலம் வந்தார். அதைக் கண்டு வெகுண்ட அம்மை தன் அம்சமான சக்தியை, அதாவது முனிவரின் சதையையும்,இரத்தத்தையும் எடுத்துக் கொண்டாள். எலும்புக் கூடாக மாறி மெள்ள மெள்ள நடமாடினாலும் சிவனை மட்டும் வணங்கும் தன் செயலை பிருங்கி முனிவர் மாற்றிக் கொள்ளவில்லை. தன் பக்தனின் வேதனைக்குக் காரணமான அம்பிகை மேல் கோபம் கொண்ட இறைவன் அவளை பூவுலகம் சென்று சிலகாலம் தன்னை விட்டுப் பிரிந்து வழிபட்டு வரும்படியும் மதுரையில் பினபு அன்னையை திருமணம் செய்து கொள்தாகவும் கூறிவிட்டார். சாபம் பெற்ற அன்னைக்கு ஆறுதலாக அலைமகளும்,கலைமகளும் அவளுக்கு துணை இருப்பார்கள் என்றும் இறைவன் கூறினார். தேவியான பார்வதி பூலோகத்தில் செணபகவனமான இத்தலத்திற்கு தவம் செய்ய வந்த போது அவளுக்குத் துணையாக லட்சுமியும், சரஸ்வதியும் எழுந்தருளினர். இந்தக் கோலத்தையே திருநாகேஸவரம் கோவிலில் கிரிகுசாம்பிகை சந்நிதியில் நாம் தரிசிக்கிறோம்.
பெரிய புராண ஆசிரியர் சேக்கிழார் பெருமான் திருநாகேஸ்வரரின் மேல் கொண்ட அபரிமிதமான ஈடுபாட்டின் காரணமாக கி.பி. 12ஆம் நூற்றாண்டில் இக்கோவிலுக்கு திருப்பணி செய்து இரண்டாம் பிரகாரத்தில் ஒரு மண்டபத்தையும நிர்மாணித்துள்ளார். தம்முடைய சொந்த ஊரான குன்றத்தூரில் (சென்னைக்கு அருகில் உள்ளது) தாம் கட்டிய கோயிலுக்கும் திருநாகேஸ்வரம் என்றே பெயரிட்டுள்ளார். இவருக்குத் திருவடிஞானம் கிடைத்ததும் இத்தலத்திலேதான் என்பது இன்னுமொரு சிறப்பாகும். ஆலயத்தில் சேக்கிழார் அவர் தாயார், தம்பி உருவங்கள் உள்ளன
இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் நின்ற கோலத்தில் தனது தேவியர் இருவருடன் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். அருகே மயில் உள்ளது. கிரி குசாம்பிகை சந்நிதி உள்ள தனிக் கோவிலில் பாலசுப்பிரமணியர் காட்சி தருகிறார்.
இத்தலத்தில் ஒரு காலத்தில் பன்னிரண்டு தீர்த்தங்கள் இருந்கதாகக் குறிப்புக்கள் உள்ளன. இன்று கோயிலின் உள்ளேயே சூரிய புஷ்கரிணி என்ற ஒரு தீர்த்தம் காணப்படுகின்றது. இத்தீர்த்தத்தின் வலப் பக்கத்தில் நூற்றுக்கால் மண்டபம் அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் காணப்படுவதோடு ஒரு தேரின் மீது இம்மண்டபம் அமைந்திருப்பதுபோல மண்டபத்தின் கீழே கற்களாலான சக்கரங்களுடன் சுற்றிலும் நாட்டியமாடுவதுபோன்ற பாவங்களில் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
இங்கே வழிபட்டு கௌதமர் அகலிகையோடு மீண்டும் இணைந்தார். நளன் தன் இழந்த செல்வத்தை மீண்டும் பெற்றான். பாண்டவர்கள் தாங்கள் இழந்த நாட்டை மீண்டும் பெற்றனர். இத்தலத்திலுள்ள சூரிய தீர்த்தத்தில் நீராடி நாகேசுவரரை வழிபட்டு சந்திரவர்மன் நாய் வடிவு நீங்கினான். இந்திரன் சாபம் நீங்கப் பெற்றான். சேக்கிழாரின் ஈடுபாடு கண்டு இக்கோயிலில் ஆண்டு தோறும் வைகாசிப் பூச நன்னாளில் சேக்கிழார் திருவிழா நடைபெறுகின்றது. கார்த்திகை மாதத்தில் 10 நாட்கள் பிரம்மோத்சவம் நடைபெறும். பிரதோஷம் இங்கு விமரிசையாகக் கொண்டாடப்படும். பிரதி ஞாயிறுதோறும் மாலை ராகு கால நேரத்தில் ராகுவுக்குப் பாலாபிஷேகம் நடைபெறுவது மிகச் சிறப்புடையது. ராகுவைப் போலக் கொடுப்பாரும் இல்லை;கேதுவைப்போல் கெடுப்பாரும் இல்லை என்பது பழமொழி.
காலையில் குடந்தைக் கீழ்கோட்டத்து இறைவனையும்,நண்பகலில் திருநாகேஸ்வரம் இறைவனையும், மாலையில் திருப்பாம்பரம் இறைவனையும் ஒரே நாளில் தரிசிப்பது மிகவும் விசேஷமாகும்.
இருப்பிடம் :
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து கிழக்கே 6கி.மீ.தூரத்தில் திருநாகேஸ்வரம் அமைந்துள்ளது. கும்பகோணத்திலிருந்து பஸ் உள்ளது.
அருகிலுள்ள ரயில் நிலையம் :
கும்பகோணம்
அருகிலுள்ள விமான நிலையம் :
திருச்சி

6. கஞ்சனூர் சுக்கிர பகவான்- வெள்ளி (Venus)

சூரியனார் கோயிலுக்கு வடகிழக்கே சுமார் ஆறு கிலோமீட்டர் தொலைவில்லுள்ளது கஞ்சனூர் எனும் திருத்தலம். தஞ்சாவூர் ஜில்லாவிலுள்ள கல்லணை-பூம்புதார் சாலையில் உள்ள இந்த சைவ ஸ்தலத்தில் ஸ்ரீ அக்னீஸ்வரர் என்ற பெயரில் வீற்றிருக்கும் சிவபெருமானுக்கு துணையாக கற்பகாம்பாள் என்ற பெயரில்தாயாரும் வீற்றிருக்கிறார். இக்கோயிலின் சிறப்பு என்னவெனில் அக்னீஸ்வரராக வீற்றிருக்கும் சிவபெருமானை தான் செல்வம் மற்றும் சகல ஐஸ்வர்யங்களையும் பக்தர்களுக்கு வழங்கும் நவக்கிரகங்களிலொருவரான சுக்கிர பகவானாக பக்தர்கள்வழிபடுகின்றனர். எப்படி காளஹஸ்த்தியில் சிவபெருமானை இராகு மற்றும் கேது கிரகங்களாக கருதி வழிபடுகின்றனரோ, எப்படி மதுரையில் வீற்றிருக்கும் ஸோமசுந்தரேசுவரரை புத பகவானாக கருதி வழிபடுகின்றனரோ, அப்படியே இங்கும் அக்னீசுவரரை சுக்கிர பகவானாக வழிபடுகின்றனர். ஆக, இது ஒரு நவக்கிரகச்தலமாகவே கருதப்படுகிறது.
இங்குள்ள இரு தீர்த்தங்களில் ஒன்று அக்னி தீர்த்தம் என்றும் மற்றொன்று பராசர தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகின்றன.அப்பரால் பாடப்பட்ட இந்த பழம் பெரும் கோயில் சாலையோரமாகவே உள்ளது. ஐந்து கட்டுக்களையுடையது இக்கோயிலின் கோபுரம்.
சுக்கிர பகவானுக்குரிய தானியம், வாகனம் முதலிய தகவல் கீழே தரப்பட்டுள்ளன.
நிறம்: வெள்ளைதானியம்: மொச்சைவாகனம்: கருடன்மலர்: வெண்தாமரைஉலோகம்: வெள்ளிகிழமை: வெள்ளிஇரத்தினம்: வைரம்பலன்கள்: விவாக பிராப்தம், சௌபாக்கியம், மலட்டுத்தன்மை நீங்குதல்
பிரம்மாவின் மானசீக புத்திரராக கருதப்படும் பிருகு முனிவருக்கு பிறந்தவர் தான் சுக்கிர பகவான். இவர் காசிக்கு சென்று அங்கு ஒரு சிவலிங்கத்தை படைத்தது, நீண்டகாலம் தியானம் செய்ததன் விளைவாக சிவ பெருமானின் அருளால் அமிருத சஞ்சீவினி மந்திரத்தை கற்று இறந்தவரை உயிர்பிக்க செய்தமையால் அசுரர்களால் குருவாக போற்றப்பட்டார். சுக்கிரரின் பக்தியால் நெகிழ்ந்த சிவபெருமான் இவரை நவக்கிரகங்களில் ஒருவராக செய்தார்.
புராணங்களின் படி மகா விஷ்ணு வாமன அவதாரத்தின் பொழுது மகா பலியிடம் மூன்று அடி மண்ணை கேட்டுப் பெறும் தருவாயில்,வாமன உருவில் இருப்பது இன்னார் என்பதை அறிந்துகொண்டு,வாமனருக்கு தானம் அளிக்கும் பொருட்டு மகா பலி கமண்டலத்திலிருந்து ஜலத்தை எடுக்கும் தருணத்தில் இந்த தானத்தை நிறுத்துவதற்காக தன்னை ஒரு வண்டாக உருமாற்றி கமண்டலத்தின் நீர் வரும் துவாரத்தை அடித்தவர் தான் சுக்கிரர்.அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியார் எனும் சுக்கிரனுக்கு ஒரு கண் ஊனமாவதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு காரணமாக அமைந்தது என்பதும் புராணங்களில் இருந்து நாம் அறிகிறோம். தானத்தை தடை செய்ய சுக்கிரர் செய்யும் முயற்சியை தனது ஞான திரிஷ்ட்டியால் உணர்ந்த பெருமாள், தரப்பை ஒன்றால் கமண்டலத்தின் துவாரத்தில் குத்த, அது சுக்கிரரின் கண்ணை ஊனமாக்கி விடுகிறது. சுக்கிர பகவான் வேலையில்லா திண்டாட்டத்தில் அவதியுறுபவர்களுக்கு வேலை கிடைக்கும்படிஅருள்வதாக நம்பப்படுகிறது.
சுக்கிர பகவானின் கவச மந்திரம்:-
மிருணாலகுந்தேந்துபயோஜஸுப்ரபம் பீதாம்பரம் பிரஸ்ருதமக்ஷமாலினம்
ஸமஸ்தசாஸ்திரார்த்தவிதிம் மஹாந்தம் தியாயேத்கவிம் வாச்சிதமர்த்தஸித்தயே
ஓம் சிரோ மே பார்கவஃ பாது பாலம் பாது கிரஹாதிபஃநேத்ரே தைத்யகுருஃ பாது ஸ்ரோத்ரே மே சந்தனத்யுதிஃ
பாது மே நாஸிகாம் காவ்யோ வதனம் தைத்யவந்திதஃவசனம் சோசனாஃ பாது கண்டம் ஸ்ரீகண்டபக்திமான்
புஜௌ தேஜோநிதிஃ பாது குக்ஷிம் பாது மனோவ்ரஜஃநாபிம் பிருகுசுதஃ பாது மத்யம் பாது மஹீப்ரியஃ
கடிம் மே பாது விச்வாத்மா ஊரூ மே ஸுரபூஜிதஃஜானும் ஜாட்யஹரஃ பாது ஜங்கே ஞானவதாம் வரஃ
குலஃபௌ குணநிதிஃ பாது பாது பாதௌ வராம்பரஃஸர்வாண்யங்கானி மே பாது ஸ்வர்ணமாலாபரிக்ருதஃ
ய இதம் கவசம் திவ்யம் படதி சிரத்தயான்விதஃந தஸ்ய ஜாயதே பீடா பார்க்கவஸ்ய பிரஸாததஃ
இதி ஸ்ரீ பிரம்மண்டபுராணே சுக்கிரகவசம் சம்பூர்ணம்

4. திருவெண்காடு புதன் கோவில்

கல்விக்கு அதிபதியான புதன் அமைந்துள்ள திருக்கோவிலே திருவெண்காடு. இக்கோவிலின் மூலவராக சுவேதாரண்யேஸ்வரரும் - பிரம்ம வித்யாம்பிகையும் வீற்றிருக்க புதபகவான் மக்களுக்குகாட்சியளிக்கின்றார்.
சலந்தரன் என்பவனுக்கு ஒரு மகன், மருத்துவன். அவன் இறைவனை நோக்கி தவம் செய்து சூலத்தை பெற்றான். அந்த சூலத்தால் நல்லது செய்யாமல் தேவர்களுக்கு தீங்கு விளைவித்தான் மருத்துவன். இதனால் கோபமுற்ற சிவபெருமான், நந்தியை அனுப்பி அவனை அழிக்கச் செய்தார். ஆனால் மருத்துவனோ நந்தியை சூலத்தால் தாக்க,நந்தியின் உடம்பில் ஒன்பது துவாரங்கள் ஏற்பட்டது. பின்னர்சிவபெருமானே அகோர மூர்த்தியாய் தோன்றி மருத்துவனை அழித்தார் என்பது இக்கோவில் வரலாறு.
இங்கு மூர்த்திகள் மூன்று, தீர்த்தங்கள் மூன்று, தலவிருட்சங்கள் மூன்று. சிவன், நடராசர், வீரபத்திரர் ஆகிய மூன்று மூர்த்திகளும், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம் ஆகிய மூன்று தீர்த்தங்களும்,வடவால், கொன்றை, வில்வம் என மூன்று தலவிருட்சங்களும்உள்ளன.
அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருநாவுக்கரசர் ஆகிய நால்வராலும் பாடப்பெற்ற தலம் இது. காசிக்கு நிகரான திருத்தலம். காவிரி வடகரை கோவில்களில் பதினொன்றாவது கோவில் இது. மூன்றுதீர்த்தங்களிலும் நீராடினால் பிள்ளைப்பேறு நல்கும் தலம். காசியில் விஷ்ணு பாதம் உள்ளது போல், இங்கு வடவால் விருட்சத்திற்கு கீழ் ருத்ர பாதம் உள்ளது.
திருஞானசம்பந்தர் இக்கோவிலுக்கு வந்தபோது, அவருக்கு ஊரெல்லாம் சிவலோகமாகவும், மணலெல்லாம் சிவலிங்கமாகவும் தெரிந்ததாம்,அவர் அம்மா என்றழைக்க, அம்பிகை அவரை இடுப்பில் சுமந்து கோவிலின் உள்ளே சென்றதாக வரலாறு உண்டு. இன்றும் இக்கோவிலில் சம்பந்தரை சுமந்திருக்கும் அம்பாளை பிரகாரத்தில் காணலாம்.
நவக்கிரகங்களில் ஒருவரான புதன், கல்விக்கு அதிபதி. இவரை வழிபடுவதன் மூலம் கல்வி அறிவு கிடைக்கும், பீடை போகும், கவி பாடும் ஆற்றல் அதிகரிக்கும். புதனை வழிபடுவோம் என்றென்றும் ஆனந்தமாக இருப்போம்.
புதனுக்கு உகந்தவை:
ராசி : மிதுனம், கன்னி
அதி தேவதை : விஷ்ணு
நிறம் : வெளிர்பச்சை
தானியம் : பச்சைப்பயிறு
உலோகம் : பித்தளை
மலர் : வெண்காந்தள்
ரத்தினம் : மரகதம்
சமித்து:நாயுருவி
காயத்ரி மந்திரம்:
கஜ த்வஜாய வித்மஹே
சுக ஹஸ்தாய தீமஹி
தந்நோ புத: ப்ரசோதயாத்.
எப்படி செல்வது?
இத்திருக்கோவில் சீர்காழியில் இருந்து 17 கி.மீ தொலைவில்உள்ளது.கும்பகோணம், சீர்காழி, தஞ்சாவூர் ஆகிய இடங்களில் இருந்து பேருந்து மூலம் செல்லலாம். ம்யிலாடுதுறையில் இருந்து மங்கைமடம் செல்லும் பேருந்துகள் இக்கோவில் வழியாகச் செல்லும்.
அருகில் உள்ள ரயில் நிலையம் - கும்பகோணம் 18 கி.மீ தொலைவில்.
அருகில் உள்ள விமான நிலையம் - திருச்சி 96 கி.மீ தொலைவில்.

கிருஷ்ணர்

1. மகாவிஷ்ணு எடுத்த 9-வது அவதாரம் கிருஷ்ணா அவதாரமாகும்.
2. கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்களில் உறியடி விழா தான் பிரசித்தமாக நடைபெறும்.
3.மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் வாழ்வில் இயல்பாக அமைந்த கடமைகளை முழுமையாக செய்ய வேண்டும் என்பதை பகவத்கீதை மூலம் கிருஷ்ணர் உணர்த்தியுள்ளார்.
5. கிருஷ்ணருக்கு கேசவன், கோவிந்தன், கோபாலன் ஆகிய பெயர்களும் உண்டு.
6 கிருஷ்ணர் இளம்வயதில் கோகுலத்தில் வாழ்ந்ததால், அவர் அவதரித்த கிருஷ்ண ஜெயந்தியை கோகுலாஷ்டமி என்றும் சொல்வார்கள்.
7.கிருஷ்ணர் ஜெயந்தி தினத்தன்று கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த சீடை, அவல் லட்டு, அப்பம், தட்டை, முள்ளு முறுக்கு, தோயம், வெண்ணை பால் திரட்டு, நாட்டு சர்க்கரை போன்றவைகளை படைத்து வழிபட வேண்டும்.
8.கிருஷ்ண ஜெயந்தியன்று குழந்தையின் பாத சுவடுகளை தெருவில் இருந்து வீட்டுக்குள் வருவது போல வரைய வேண்டும். இதனால் கிருஷ்ணரே வீட்டுக்கு வருவதாக ஐதீகம்.
10.கிருஷ்ணர் கோகுலத்தில் இளம் வயதில் கோபியர்களுடன் சேர்ந்து விளையாட்டுக்களில் ஈடுபட்டதை ``ராசலீலா'' என்ற பெயரில் நாடகமாக நடத்தப்படுவது வடமாநிலங்களில் பழக்கத்தில் உள்ளது.
11.கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்ததாக புராண வரலாறுகளில் சொல்லப்பட்டுள்ளது. எனவே கிருஷ்ண ஜெயந்தி அன்று இரவு வழிபாடு நடத்துவது உகந்தது.
13.கிருஷ்ணர் 3 வயது வரை கோகுலத்திலும், 3 முதல் 6 வயது வரை பிருந்தாவனத்திலும் 7-ம் வயதில் கோபியர்களுடனும் 8 முதல் 10 வயது வரை மதுராவிலும் வாழ்ந்தார்.
14. கம்சனை வதம் செய்த போது, கிருஷ்ணருக்கு வயது 7.
15.கிருஷ்ண பரமாத்மாவின் அருளை பெற ``கீதகோவிந்தம்'', ``ஸ்ரீமந் நாராயணீயம்'', ``கிருஷ்ண கர்ணாம்ருதம்'' ஆகிய ஸ்தோத்ரங்களால் துதித்து வணங்க வேண்டும்.
16. கிருஷ்ணர் ஜெயந்தியன்று சிறுவர் - சிறுமிகளை கண்ணன், ராதைகள் வேடமிட்டு ஆராதிப்பது கூடுதல் பலன்களைத் தரும். இப்படி வேடமிடும் குழந்தைகள் புத்துசாலிகளாகத் திகழ்வார்கள் என்பது நம்பிக்கை.
17.கண்ணனை வழிபட்டால் அகந்தை அகலும். குழந்தைகளுக்கு மூர்க்க குணம் ஏற்படாது. இளைஞர்கள் தர்ம சிலராக வாழ்வார்கள். அரசியல்வாதிகளுக்கு நிர்வாகத் திறமை அதிகரிக்கும்.
18. பெண்கள் கண்ணனை மனம் உருகி போற்றி வழிபட்டால் திருமண தடைகள் விலகி கல்யாணம் கைகூடும்.
19. விவசாயிகள் கிருஷ்ணரை வழிபட்டால் வயல்களில் விளைச்சல் அதிகரித்து செல்வம் பெருகும். மாடுகள் எண்ணிக்கை பெருகி கடன் தீரும்.
20.தொழில் அதிபர்கள் கிருஷ்ணருக்கு சிறப்பான பூஜை கள் செய்தால், புகழ் கூடுëம். கூட்டுத் தொழில் செய்தால் வெற்றி பெறுவார்கள். தொழில் நிர்வாகத்தில் ஆற்றல் பெருகும்.
21. கிருஷ்ண லீலையை மனம் ஒன்றி கேட்டால் பசி, தாகம் ஏற்படாது.
22. கிருஷ்ண நாமத்தை தினமும் உச்சரிப்பவர்களும், கேட்பவர்களும் புண்ணிய உலகை சென்றடைவது உறுதி.
23.பாகவதத்தில் உள்ள அவதார கட்டத்தை பாராயணம் செய்வது மிகுந்த புண்ணியத்தைத் தரும். அந்த பாராயணத்தை கேட்டாலும் புண்ணியம் கிடைக்கும்.
24.கிருஷ்ண ஜெயந்தியன்று கிருஷ்ணரின் அருள் 100 சதவீதம் அதிகரிப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.
25.ஓம் நமோ பகவதே வாசுதேவாயா என்று ஜெபித்தால் கிருஷ்ணர் பார்வைபடும்.
. அதையும் தாண்டி சென்றால்தான் கண்ணன் தரிசனம் கிடைக்கும்.
.
26. வைணவத் திருத்தலங்களில் பெருமாள் சயன கோலத்தில் சேவை சாதிப்பது போல் முக்தி தரும் திருத்தலமாக துவாரகையில் அமைந்துள்ளது கிருஷ்ணன் கோவில். பகவான் கிருஷ்ணர் இங்கு சயனக் கோலத்தில் அருள்புரிகிறார்.
27. கிருஷ்ண ஜெயந்தி அன்று பக்தர்கள் விரதம் இருந்து கண்ணனை வழிபடுவார்கள். அவ்வாறு செய்தால் தெரிந்தும், தெரியாமலும் செய்த பாவங்கள் விலகும் என்பது ஐதீகம்.
28 மதுராவில் தேவகி-வசுதேவருக்கு எட்டாவது மகனாக அவதரித்தார் கிருஷ்ணர். அவர் பிறந்த இடம் ஒரு சிறிய சிறைச்சாலை. தற்போது, அந்த இடத்திற்கு மேல் `கத்ர கேஷப்தேவ்' என்ற கிருஷ்ணர் கோவில் எழுப்பப்பட்டுள்ளது.
29 கிருஷ்ண வழிபாடு நம் நாட்டில் தொன்று தொட்டு இருந்து வருகிறது. கிருஷ்ணனைப் பற்றிய மிகப் பழமை வாய்ந்த ஆதாரம் ரிக்வேதத்தில் உள்ளது. இந்திரனுடன் கிருஷ்ணர் போரிட்டதாக அச்செய்தி தெரிவிக்கிறது.
30. சாந்தோக்ய உபநிஷத்தில் கிருஷ்ணன் தேவகியின் மகன் என்று குறிப்பிடப் பட்டுள்ளது.
31. அர்த்த சாஸ்திரத்தை எழுதிய சாணக்கியர், மருத்துவ தொழிலை தொடங்குபவர்கள் கிருஷ்ணனை வழிபட்ட பிறகே தொடங்க வேண்டும் என கூறியுள்ளார்.
32. அலெக்சாண்டருடன் போரிட்டு வென்ற போரஸ் (புருஷோத்தமர்) தனது படைகளுக்கு முன்னாள் கிருஷ்ணனின் உருவத்தை நிறுத்தியிருந்தார். போரில் வெற்றி பெற கிருஷ்ணனே காரணம் என கருதினார்.
33. யமுனை ஆற்றங்கரையில் கிருஷ்ண வழிபாடு இருந்ததாக மெகஸ்தானிஸ் தனது வரலாற்று குறிப்புகளில் எழுதியுள்ளார்.
34. சிலப்பதி காரத்தில் கிருஷ்ணனின் அண்ணன் பலராமன் என்றும், மனைவி நப்பின்னை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. நப்பின்னை யாதவர் குலத்தைச் சேர்ந்தவள் என்றும், ராதையை கிருஷ்ணனின் காதலி என்றும், ராதை மற்றும் ருக்மணியை விட நப்பின்னை மேன்மையானவள் என்றும் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. நப்பின்னையை ஆழ்வார்களும் பாராட்டியுள்ளனர்.
35.. ஒரு சமயம் அசுரர்கள் சூரியனை தடுத்து மறைத்து விட்டால் பூதி இருளடைந்து தவித்தது. அப்போது கிருஷ்ண பரமாத்மா சூரியனை ஆகாயத்தில் நிலைக்கச் செய்ததாக புறநானூறு குறிப்பிடுகிறது.
நன்றி ; http://bsakthivel.blogspot.in

கீழ்ப்பெரும்பள்ளம் [கேது]

ஸ்ரீ நாகநாதராக சிவபெருமானும் சௌந்தர நாயகியாக தாயாரும் எழுந்தருளி செய்த திருத்தலமாகிய கீழ்ப்பெரும்பள்ளம் ஒரு நவக்கிரக ஸ்தலமுமாகும். கேது பகவான் அருள் செய்யும் புண்ணிய ஸ்தலம் தான் கீழ்பெரும்பள்ளம்.
வாணகிரி என்ற பெயரிலும் அறியப்படும் இந்த ஊர் திருவெண்காடிலிருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது. இங்கு நாகநாத சுவாமியை வழிபட்ட கேது பகவான்பாவங்களிலிருந்து விடுபட்டதாக கூறப்படுகிறது. தலையுடன் கூடிய கேது பகவானை தரிசிப்பதென்பது மிகவும் அரிது. அப்பேர்ப்பட்ட கேது பகவானை இங்கு காணலாம்.
புராணங்களின் படி மகா விஷ்ணுவால் இரு துண்டங்கலாக்கப்பட்டஉடம்பின் பகுதி கேதுவாகவும் தலைப் பகுதி இராகுவாகவும் விளங்குவதாக அறிகிறோம். அமுதுண்ட காரணத்தால் பாம்பின் தலையுடன் கூடிய இராகு பகவானும் அறுபட்ட உடல் பொதிகை மலையில் விழுந்ததாகவும் இத்தனை கண்டெடுத்த ஒரு பிராமணன் இதனை பாதுகாத்து வந்ததாகவும் பிற்காலத்தில் அமுதுண்ட காரணத்தால் ஒரு பாம்பின் தலை அசுர உடம்புடன் ஒட்டி கேது பகவானாக ஆனதாகவும் கூறப்படுகிறது.
கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் திருட்டு பயம், கெட்ட பழக்கங்கள், சொத்து சேதம் அடைதல் அல்லது நாசமடைதல்,மானமிழத்தல் மற்றும் புத்திர தோஷம் போன்றவற்றால் அல்லல் படுவர். இங்கு வந்து கேது பகவானை தரிசிக்கும் பக்தர்கள் தோஷங்களிலிருந்து முக்தி அடைவர் என நம்பப்படுகிறது.
கேது பகவானுக்கு உரிய நிறம், உலோகம், தானியம் போன்றவை வருமாறு:-
நிறம்: பல்வேறு நிறங்கள் (பூ போட்டது போல்)தானியம்: கொள்ளுவாகனம்: சிங்கம்மலர்: செவ்வல்லிஉலோகம்: கருங்கல்கிழமை: ஞாயிறுஇரத்தினம்: வைடூர்யம்பலன்கள்: தரித்திரம், வியாதிகள் மற்றும் பீடைகளில்ருந்து நிவர்த்தி
கேது கவசம் என்ற மந்திரம்:-
கேதும் கராலவதனம் சித்ரவர்ணம் கிரீடினம்
ப்ரணமாமி சதா கேதும் த்வஜாகாரம் க்ரஹேச்வரம்
சிதரவர்ண சிரப்பாது பாலம் தூம்ரசமத்யுதி
பாதுநேத்ரே பிங்கலாக்ஷ ஸ்ருதீ மே ரக்தலோச்சன
க்ராணம் பாது ஸுவர்ணாபஸ்சிபுகம் ஸிம்ஹிகாஸுத
பாது கண்டம் ச மே கேது ஸ்கந்தௌ பாது க்ரஹாதிப
ஹஸ்தௌ பாது சுரஸ்ரேஷ்ட குக்ஷிம் பாது மஹா க்ரஹ
ஸிம்ஹாஸன கடிம் பாது மத்யம் பாது மஹாஸுர
ஊரூ பாது மஹாசீர்ஷோ ஜானுனி மேதிகோபன
பாது பாதௌ ச மே க்ரூர சர்வாங்கம் நர பிங்கள
ய இதம் கவசம் திவ்யம் சர்வரோக விநாசனம்
சர்வசத்ரு விநாசம் ச தாரணாத்விஜயீ பவேத்
இதி ஸ்ரீ பிரஹ்மாண்டபுராணே கேது கவசம் சம்பூர்ணம்

குரு ராகவேந்திரர் 108 போற்றிகள்

ஓம் சத்குரு ராகவேந்திரரே போற்றி
ஓம் காமதேனுவே போற்றி
ஓம் கற்பகவிருட்சமே போற்றி
ஓம் சத்குருவே போற்றி
ஓம் சாந்தரூபமே போற்றி
ஓம் ஞான பீடமே போற்றி
ஓம் கருணைக் கடலே போற்றி
ஓம் ஜீவ ஜோதியே போற்றி
ஓம் ஸ்ரீ பிருந்தாவனமே போற்றி
ஓம் துளசி வடிவமே போற்றி
ஓம் தேவ தூதனே போற்றி
ஓம் பிரகலாதனே போற்றி
ஓம் பக்தப் பிரயனே போற்றி
ஓம் திவ்ய ரூபமே போற்றி
ஓம் தர்ம தேவனே போற்றி
ஓம் அலங்காரப் பிரியனே போற்றி
ஓம் அன்பின் உருவமே போற்றி
ஓம் காவியத் தலைவனே போற்றி
ஓம் அருட் பெரும் தெய்வமே போற்றி
ஓம் தேவ கோஷ பிரியனே போற்றி
ஓம் துவைத முனிவரே போற்றி
ஓம் கலைவாணிச் செல்வரே போற்றி
ஓம் மந்திராலய பிரபுவே போற்றி
ஓம் குருராஜரே போற்றி
ஓம் சுசீந்திரரின் சிஷ்யரே போற்றி
ஓம் மத்யமவத பீடமே போற்றி
ஓம் தீனதயாளனே போற்றி
ஓம் கருணா மூர்த்தியே போற்றி
ஓம் ஜெகத் குருவே போற்றி
ஓம் கலியுகக் கடவுளே போற்றி
ஓம் நல்லோரைக் காப்பவனே போற்றி
ஓம் தீயோரை அழிப்பவனே போற்றி
ஓம் ஸ்ரீ அனுமந்தப் பிரியரே போற்றி
ஓம் திம்மண்ணரின் தவப்புதல்வரே போற்றி
ஓம் வைராக்கிய தீட்சிதரே போற்றி
ஓம் ஸ்ரீ ஹரிபக்தரே போற்றி
ஓம் தோஷங்களைத் தீர்ப்பவனே போற்றி
ஓம் பிரத்யட்ச தெய்வமே போற்றி
ஓம் அருட்பெரும் தெய்வமே போற்றி
ஓம் அறிவின் சுடரே போற்றி
ஓம் பண்டித மேதையே போற்றி
ஓம் தீய சக்தியை அழிப்பவனே போற்றி
ஓம் வெங்கட பட்டரே போற்றி
ஓம் வேதங்களை அறிந்தவரே போற்றி
ஓம் ஸ்ரீ பிராமணப் பிரியரே போற்றி
ஓம் அஞ்ஞானத்தை அழிப்பவரே போற்றி
ஒம் மெஞ்ஞானத்தை அளிப்பவரே போற்றி
ஓம் வியாதிகளைத் தீர்ப்பவரே போற்றி
ஓம் அமானுஷ சக்தியே போற்றி
ஓம் மோட்சத்தை அருள்பவரே போற்றி
ஓம் ஆனந்த நிலைய்மே போற்றி
ஓம் கஷாயத்தை அணிந்தவரே போற்றி
ஓம் தூய்மை நிதியே போற்றி
ஓம் வரங்களை அளிப்பவரே போற்றி
ஓம் கண்னனின் தாசனே போற்றி
ஓம் சத்ய ஜோதியே போற்றி
ஓம் ஸ்ரீ ஜகத்குருவே போற்றி
ஓம் பாவங்களை அழிப்பவனே போற்றி
ஓம் மனிதகுல மாணிக்கமே போற்றி
ஓம் தெய்வாம்சப் பிறவியே போற்றி
ஓம் திருப்பாற்கடல் சந்திரனே போற்றி
ஓம் மகிமை தெய்வமே போற்றி
ஓம் அணையர் தீபமே போற்றி
ஓம் அகந்தையை அழிப்பவனே போற்றி
ஓம் யக்ஞ நாராயணரை வென்றவரே போற்றி
ஓம் பரிமளத்தை இயற்றியவரே போற்றி
ஓம் திராவிட நாட்டு தெய்வமே போற்றி
ஓம் முக்காலத்தை உணர்ந்தவரே போற்றி
ஓம் ஸ்ரீ மஞ்சாலத்தின் மாமுனிவரே போற்றி
ஓம் கஷ்டங்களைத் தீர்ப்பவரே போற்றி
ஓம் சுகங்களை அளிப்பவரே போற்றி
ஓம் வியாச பகவானரே போற்றி
ஓம் சங்கு கர்ணரே போற்றி
ஓம் பரமாத்மாவே போற்றி
ஓம் குருதேவரே போற்றி
ஓம் நன்மைகளைத் தருபவரே போற்றி
ஓம் தயாநிதியே போற்றி
ஓம் அருட்தவசீலரே போற்றி
ஓம் ஞான மூர்த்தியே போற்றி
ஓம் விஷ்ணு பக்தரே போற்றி
ஓம் ஸ்ரீ புண்ணிய புருஷரே போற்றி
ஓம் அமுத கலசமே போற்றி
ஓம் அழகின் உருவமே போற்றி
ஓம் சந்தானத்தை அளிப்பவரே போற்றி
ஓம் சாஸ்திரங்கள் அறிந்தவரே போற்றி
ஓம் துளஸி மாலை அணிந்தவரே போற்றி
ஓம் ஜெபமாலை கொண்டவரே போற்றி
ஓம் மங்களம் தருபவரே போற்றி
ஓம் மன்மதனை ஜெயித்தவரே போற்றி
ஓம் காவல் தெய்வமே போற்றி
ஓம் நல் ஆயுளைத் தருபவரே போற்றி
ஓம் நல் ஐச்வர்யங்களை அளிப்பவரே போற்றி
ஓம் நல் அபயம் அளிப்பவரே போற்றி
ஓம் ஸ்ரீ உலகைக் காப்பவரே போற்றி
ஓம் காந்தக் கண்களே போற்றி
ஒம் யதிராஜரே போற்றி
ஓம் ஓம்கார ரூபமே போற்றி
ஓம் பிரம்ம ஞானியே போற்றி
ஒம் துங்கை நதியின் தூயவரே போற்றி
ஓம் இணையில்லா இறைவனே போற்றி
ஓம் விபீஷணரே போற்றி
ஓம் அனாத ரட்சகரே போற்றி
ஓம் சங்கீதப் பிரியரே போற்றி
ஓம் சுந்தர வதனரே போற்றி
ஓம் வியாச ராஜேந்திரரே போற்றி
ஓம் நரஹரி பிரியரே போற்றி
ஓம் தியாகமூர்த்தியே போற்றி
ஓம் வாணியின் வீணையே போற்றி
நன்றி :-http://bsakthivel.blogspot.in/

திருநள்ளாறு சனீசுவரன்

நவக்கிரகங்களின் கோயில்களிலேயே மிகவும் பிரபலமான ஒரு கோயில் சனைச்சர பகவான் (சனீசுவரன் என பலராலும் கூறப்பட்டாலும் சமஸ்கிருதத்தில் "மெதுவாக செல்பவன்" என பொருள் படும் "சனைச்சர:" என்ற சொல்லே இவரது திரு நாமமாகும்) எழுந்தருளியிருக்கும் திருநள்ளாறு ஆகும்.
தமிழ் நாட்டை சேர்ந்த கோயிலாக கருதப்பட்டாலும் உண்மையில் இக்கோயில் இருக்கும் திருநள்ளாறு எனும் இடம் தற்பொழுது புதுச்சேரி மாநிலத்தில் தான் உள்ளது. காரைக்காலுக்கு மிகவும் அருகிலுள்ள திருநள்ளாறு எனும் புண்ணிய ஸ்தலத்தில் ஸ்ரீதர்பாரண்யேசுவரர் என்ற நாமத்தில் சிவ பெருமானும்,பிராணாம்பிகையாக தாயாரும் வீற்றிருக்கிறார்கள். இவர்களிருவருக்கும் நடுவே உள்ளது சனைச்சர பகவானின்சன்னதி. அபய ஹஸ்தத்துடன் காட்சி தரும் சனைச்சர பகவானின் திரு உருவம் இக்கோயிலின் சிறப்பாகும்.
7- ஆவது நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கருதப்படும் தர்பாரண்யேசுவரர் திருக்கோயில் கரைக்கலிலிருந்து சுமார் 5கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சனைச்சரரின் பார்வையால் பாதிக்கப்பட்ட நள சக்கிரவர்த்தி பல இன்னல்களை அனுபவித்து கடைசியாக இக்கோயிலுக்கு வந்து "நள தீர்த்தம்" என இன்றும் பிரபலமாக விளங்கும் இக்கோயிலின் புஷ்கரிணியில் ஸ்நானம் செய்து தர்பாரண்யேசுவரரை தரிசனம் செய்து சனி தோஷத்திலிருந்து முக்தி பெற்றதாக கருதப்படுகிறது. ஆகவே சுமார் இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடை பெரும் சனிப் பெயர்ச்சி நடைபெறும் நாளன்று இக்கோயிலில் பக்தர்கள் பல ஆயிரக் கணக்கில் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். இக்கோயிலை பற்றிய பல தகவல்கள் புதுச்சேரி அரசாங்கஇணைய தளத்தில் தரப்பட்டுள்ளதை காணலாம்.
சனி பகவானுக்கு உரிய நிறம் , உலோகம், தானியம் போன்றவை வருமாறு:-
நிறம்: கறுப்பு
தானியம்: எள்
வாகனம்: காகம்
மலர்: கருங்குவளை
உலோகம்: இரும்பு
கிழமை: சனி
இரத்தினம்: நீலம்
பலன்கள்: வியாதி, கடன், பேய், பிசாசு பயம் நீங்குதல்
சனைச்ச்ர ஸ்தோத்திரம்:
தசரத உவாச:
கோணோந்தகோ ரௌத்ரயமோதபப்ருஃ
கிருஷ்ண சனி பிங்கலமந்தஸௌரிஃ
நித்யம் ஸ்ம்ருதோ யோ ஹரதே ச பீடாம்
தஸ்மை நமஃ ஸ்ரீ ரவிநந்தனாயா
ஸுராஸுராஃ கிம் புருஷோரகேந்த்ரா
கந்தர்வவித்யா தர பன்னகாஸ்ச்ச
பீட்யந்தி சர்வே விஷமஸ்திதேன
தஸ்மை நமஃ ஸ்ரீ ரவிநந்தனாயா
நரா நரேந்திரா பசவோ மிருகேந்திரா
வன்யாஸ்ச்சயே கீடபதங்க பிருங்காஃ
பீட்யந்தி சர்வே விஷமஸ்திதேன
தஸ்மை நமஃ ஸ்ரீ ரவிநந்தனாயா
தேசாஸ்ச்ச துர்காணி வனானி யத்ர
ஸேனானிவேசாஃ புரபத்தனானி
பீட்யந்தி சர்வே விஷமஸ்திதேன
தஸ்மை நமஃ ஸ்ரீ ரவிநந்தனாயா
திலைர்யவைர்மாஷகுடான்னதானைர்
லோஹேன நீலாம்பரதானதோ வா
ப்ரீணாதி மந்த்ரைர்நிஜவாசரே ச
தஸ்மை நமஃ ஸ்ரீ ரவிநந்தனாயா
பிரயாககூலே யமுனதடே ச
சரஸ்வதீ புண்ய ஜலே குஹாயாம்
யோ யோகிநாம் த்யான கதோபி சூக்ஷ்மம்
தஸ்மை நமஃ ஸ்ரீ ரவிநந்தனாயா
அன்யப்பிதேசாத்ஸ்வக்ருஹம் பிரவிஷ்டஸ்
ததீயவாரே ச நரஃ சுகீ ஸ்யாத்
கிருஹாத்கதோ யோ ந புனஃ பிரயாதி
தஸ்மை நமஃ ஸ்ரீ ரவிநந்தனாயா
ஸ்ரஷ்டா ஸ்வயம் பூர்புவனத்ரயச்ய
திராதா ஹரீசோ ஹரதே பினாகி
ஏகஸ்த்ரிதா ருக்யஜுஃஸாமமூர்த்திஸ்
தஸ்மை நமஃ ஸ்ரீ ரவிநந்தனாயா
சன்யஷ்டகம் யஃ பிரயதஃ பிரபாதே
நித்யம் சுபுத்ரைஃ பசுபாந்தவைஸ்ச்ச
படேது ஸௌக்யம் புவிபோகயுக்த
பிராப்னோதி நிர்வாணபதம் ததந்தே
கோணஸ்தஃ பிங்களோ பப்ருஃ கிருஷ்னோ ரௌத்ரோந்தகோ யமஃ
ஸௌரிஃ சனைஸ்ச்சரோ மந்தஃ பிப்பல்லாதேன ஸம்ஸ்துதஃ
ஏதானி தசநாமானி பிராதருத்தாய யஃ படேத்
சனைஸ்ச்ச்ரகிருதா பீடா ந கதாசித்பவிஷ்யதீ
இதி ஸ்ரீ பிரம்மாண்டபுராணே சனைஸ்ச்ச்ர ஸ்தோத்ரம் சம்பூர்ணம்

நரசிம்மர் 108 போற்றி

ஓம் நரசிங்கப் பெருமானே போற்றி
ஓம் நாடியருள் தெய்வமே போற்றி
ஓம் அரசு அருள்வோனே போற்றி
ஓம் அறக் காவலனே போற்றி
ஓம் அசுவத்த நரசிம்மனே போற்றி
ஓம் அக்ஷயதிருதியை நாதனே போற்றி
ஓம் அழகிய சிம்மனே போற்றி
ஓம் அம்ருத நரசிம்மனே போற்றி
ஓம் அருள் அபயகரனே போற்றி
ஓம் அகோபில நரசிம்மனே போற்றி
ஓம் அரவப் புரியோனே போற்றி
ஓம் அஞ்ஞான நாசகனே போற்றி
ஓம் அகோர ரூபனே போற்றி
ஓம் ஆகாச நரசிம்மனே போற்றி
ஓம் அட்டகாச நரசிம்மனே போற்றி
ஓம் ஆவேச நரசிம்மனே போற்றி
ஓம் இரண்யாக்ஷ வதனே போற்றி
ஓம் இரண்யகசிபு நிக்ரஹனே போற்றி
ஓம் ஈரெண் கரனே போற்றி
ஓம் இருந்தும் அருள்வோனே போற்றி
ஓம் உக்ர நரசிம்மனே போற்றி
ஓம் உடனே காப்பவனே போற்றி
ஓம் ஏற்றுவோர்க் கெளியனே போற்றி
ஓம் எழுபத்து நான்கு வடிவனே போற்றி
ஓம் கதிர் நரசிம்மனே போற்றி
ஓம் கதலி நரசிம்மனே போற்றி
ஓம் கர்ஜிப்பவனே போற்றி
ஓம் கம்பப் பெருமானே போற்றி
ஓம் கல்யாண நரசிம்மனே போற்றி
ஓம் கருடாத்ரி நாதனே போற்றி
ஓம் கனககிரி நாதனே போற்றி
ஓம் காராஞ்ச நரசிம்மனே போற்றி
ஓம் கிரஹண நரசிம்மனே போற்றி
ஓம் கிரிஜா நரசிம்மனே போற்றி
ஓம் க்ரோத நரசிம்மனே போற்றி
ஓம் குகாந்தர நரசிம்மனே போற்றி
ஓம் கும்பி நரசிம்மனே போற்றி
ஓம் கோல நரசிம்மனே போற்றி
ஓம் கோஷ்டியூர் நரசிம்மனே போற்றி
ஓம் கோர நரசிம்மனே போற்றி
ஓம் சந்தனப் பிரியனே போற்றி
ஓம் சர்வாபரணனே போற்றி
ஓம் சக்ர நரசிம்மனே போற்றி
ஓம் சத்ர நரசிம்மனே போற்றி
ஓம் சண்ட நரசிம்மனே போற்றி
ஓம் சம்ஹார நரசிம்மனே போற்றி
ஓம் சத்ரவட நரசிம்மனே போற்றி
ஓம் சரபத்தால் குளிர்ந்தவனே போற்றி
ஓம் ஷட்கோணத் துறைபவனே போற்றி
ஓம் சாந்த நரசிம்மனே போற்றி
ஓம் சிம்மாசனனே போற்றி
ஓம் சிம்மாசலனே போற்றி
ஓம் சுடர் விழியனே போற்றி
ஓம் சுந்தர சிம்மனே போற்றி
ஓம் சுதர்சன நரசிம்மனே போற்றி
ஓம் சுவதந்திர நரசிம்மனே போற்றி
ஓம் செவ்வாடையனே போற்றி
ஓம் செஞ்சந்தனப் பிரியனே போற்றி
ஓம் சௌம்ய நரசிம்மனே போற்றி
ஓம் ஸ்தௌண நரசிம்மனே போற்றி
ஓம் ஜ்வலன நரசிம்மனே போற்றி
ஓம் ஜ்வாலா நரசிம்மனே போற்றி
ஓம் நவ நரசிம்மனே போற்றி
ஓம் நவவ்யூக நரசிம்மனே போற்றி
ஓம் நிருத்ய நரசிம்மனே போற்றி
ஓம் நின்றும் அருள்வோனே போற்றி
ஓம் பிரசன்ன நரசிம்மனே போற்றி
ஓம் பிரசாத நரசிம்மனே போற்றி
ஓம் பிரஹ்லாத நரசிம்மனே போற்றி
ஓம் பிரஹ்லாத வரத நரசிம்மனே போற்றி
ஓம் பக்த ரக்ஷகனே போற்றி
ஓம் பகையழித்தவனே போற்றி
ஓம் பஞ்ச முகனே போற்றி
ஓம் பத்மாசனனே போற்றி
ஓம் பஞ்ச நரசிம்மனே போற்றி
ஓம் பரத்வாஜர்க்கருளியவனே போற்றி
ஓம் பாவக நரசிம்மனே போற்றி
ஓம் பானக நரசிம்மனே போற்றி
ஓம் பார்க்கவ நரசிம்மனே போற்றி
ஓம் பாடலாத்ரி நரசிம்மனே போற்றி
ஓம் பிருத்வி நரசிம்மனே போற்றி
ஓம் பிரம்மனுக்கருளியவனே போற்றி
ஓம் புஷ்டி நரசிம்மனே போற்றி
ஓம் புராண நாயகனே போற்றி
ஓம் புச்ச நரசிம்மனே போற்றி
ஓம் பூவராக நரசிம்மனே போற்றி
ஓம் மால் அவதாரமே போற்றி
ஓம் மாலோல நரசிம்மனே போற்றி
ஓம் முக்கண்ணனே போற்றி
ஓம் மலையன்ன தேகனே போற்றி
ஓம் முக்கிய அவதாரனே போற்றி
ஓம் முப்பத்திரு ÷க்ஷத்ரனே போற்றி
ஓம் யோக நரசிம்மனே போற்றி
ஓம் யோகானந்த நரசிம்மனே போற்றி
ஓம் ருத்ர நரசிம்மனே போற்றி
ஓம் ருண விமோசனனே போற்றி
ஓம் லக்ஷ்மி நரசிம்மனே போற்றி
ஓம் லோக ரக்ஷகனே போற்றி
ஓம் வஜ்ர தேகனே போற்றி
ஓம் வராக நரசிம்மனே போற்றி
ஓம் வரப்ரத மூர்த்தியே போற்றி
ஓம் வரதயோக நரசிம்மனே போற்றி
ஓம் விலம்ப நரசிம்மனே போற்றி
ஓம் வியாக்ர நரசிம்மனே போற்றி
ஓம் விசுவரூபனே போற்றி
ஓம் வீரவிக்ரம நரசிம்மனே போற்றி
ஓம் விஷ்ணுஸ்வரூபனே போற்றி
ஓம் வெற்றியருள் சிம்மனே போற்றி
நன்றி :-http://bsakthivel.blogspot.in/