Sunday, August 31, 2014

2. திங்களூர் சந்திரன் கோவில்

நவக்கிரகங்ளில் சந்திரனுக்கு உகந்த கோவில் திங்களூர்ஆகும். இக்கோவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு அருகில் உள்ளது. இக்கோவிலில் கைலாசநாதரும், பெரியநாயகி அம்மனும் வீற்றிருக்கின்றனர். இங்குள்ள சிவபெருமானின் இடது கண்ணாக விளங்குபவர் சந்திரன்.
வரலாறு - கட்டிடக்கலை:
இக்கோவில் ஏழாம் நூற்றாண்டில் ராஜசிம்ம பல்லவனால்கட்டப்பட்டது. திராவிடக் கட்டிடக் கலையை பின்பற்றி கட்டப்பட்டுள்ளது இக்கோவில். இக்கோவிலின் சிறப்பு என்னவென்றால் புரட்டாசி மற்றும் பங்குனி மாதங்களில் நிலாவெளிச்சம் இங்குள்ள சிவலிங்கம் மேல் படும்.

தல புராணம்:
திங்களூரில் 63 நாயன்மார்களில் ஒருவரான அப்பூதியடிகள்என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் சிவபெருமான் மீது கொண்ட பற்றால், சிவபெருமான் மீது பக்தி கொண்ட திருநாவுக்கரசர் பெயரை தன் மகன்களுக்கு மூத்த திருநாவுக்கரசு, இளையதிருநாவுக்கரசு என்று பெயர் வைத்தார். மேலும் திருநாவுக்கரசர் பெயரில் சிவனடியார்களுக்கு தொண்டு செய்து வந்தார்.
ஒரு நாள் திருநாவுக்கரசர் திங்களூருக்கு வந்த போது அப்பூதியடிகள் பற்றி கேள்விப்பட்டு அவரை காண சென்றார்.திருநாவுக்கரசரை கண்ட அப்பூதியடிகள் அவரை வரவேற்று உணவளிக்க விரும்பினார். தன் மகனை வாழை இலை பறித்து வருமாறு அனுப்ப அங்கே அவனை பாம்பு தீண்டியது.
தன் மகன் இறந்துவிட்டான் என்ற செய்தி கேட்டால்திருநாவுக்கரசர் சாப்பிட மாட்டாரோ என்றென்னிய அப்பூதியடிகள் அதனை மறைத்து உணவளித்தார். மகனை பற்றி அறிந்த திருநாவுக்கரசர், அவனின் உடலை திங்களூர் திருக்கோவிலுக்கு எடுத்துச் சென்று “ஒன்று கொலாம் அவர் சிந்தை” என்று பதிகம் பாடி அவனை உயிர்ப்பித்தார். இதுவே இக்கோவில் வரலாறாகும்.
சந்திரனுக்கு உகந்தவை:
ராசி : கடக ராசி
அதி தேவதை : நீர்
நிறம் : வெண்மை
தானியம் : நெல், பச்சரிசி
வாகனம் : வெள்ளை குதிரை
உலோகம் : ஈயம்
மலர் : அல்லி
ரத்தினம் : முத்து
ஸ்தல விருட்சம் : வில்வமரம்
காயத்ரி மந்திரம்:
பத்ம த்வஜாய வித்மஹே
பாஸ ஹஸ்தாய தீமஹி
தந்நோ சோம: ப்ரசோதயாத்.
வழிபடும் முறை:
நீர் தொடர்பான நோய்களுக்கு இவரே காரணமாவார். காலரா,நுரையீரல் நோய்கள் போன்றவை நீங்க இவரை வழிபடலாம். வெண்மை நிற மலர்களால் அர்சித்து, வெள்ளை நிற ஆடைகள் உடுத்தி, முத்து மாலை அணிந்து, பெளர்ணமி விரதம் இருந்துவழிபடலாம்.
பெளர்ணமி அன்று இக்கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
தொடர்புக்கு: 04362-262499
எப்படி செல்வது?
திங்களூருக்கு திருவையாருக்கு அருகில் உள்ள திருப்பழனம் சென்று அங்கிருந்து செல்லலாம்.
அருகில் உள்ள ரயில் நிலையம் - கும்பகோணம் 36 கி.மீ தொலைவில்.
அருகில் உள்ள விமான நிலையம் - திருச்சி 126 கி.மீ தொலைவில்.

No comments:

Post a Comment