Saturday, August 23, 2014

சிவனின் பரிபூரண அருள் கிடைக்கும் விரதங்கள்!!!!!

சிவபெருமான் இல்லறத்தில் யோகியாக வாழ்பவராகவும், கயிலையில் வசிப்பவராகவும், அரக்கர்கள் தேவர்கள் என தன்னை நினைத்து தியானிக்கும் அனைவருக்கும் பாரபட்சம் பார்க்காமல் கேட்கும் வரங்களை கொடுப்பவராகவும், பாவங்களில் பெரிய பாவமான பிரம்மஹத்தி தோசத்தினை நீக்கும் வல்லமை உடையவராகவும் உள்ளார்.
சிவன் என்றும் உள்ளவர்; எங்கும் நிறைந்தவர்; எல்லாம் அறிபவர்; எல்லாம் வல்லவர்; தூயவர்; அழிவிலா இன்பம் உடையவர்; பிறர்க்கு ஆட்படாதவர். சிவபெருமான் அருவம், அருவுருவம், உருவம் என மூன்று வடிவங்களில் உள்ளார். அருவத்திருமேனி சத்தர் என்றும், அருவுருவத்திருமேனி பரம்பொருள் என்றும், உருவத்திருமேனி பிரவிருத்தர் என்றும் அழைக்கப்படுகிறது.
அருவுருவமாக லிங்கமும், மகேசுவரமூர்த்தங்கள் மற்றும் சிவஉருவத்திருமேனிகள் ஆகியவை உருவத்திருமேனியாகவும் பக்தர்களால் வழிபடப்படுகின்றன. சிவபெருமானுக்காக பக்தர்கள் எட்டு வகையான விரதங்களை இருந்து வழிபாடு செய்கின்றார்கள். இவ்விரதங்கள் மூலம் சிவனின் பரிபூரண அருளினை பெற இயலும் என்று பக்தர்கள் நம்புகின்றார்கள்.
* சோமவார விரதம் - திங்கள் கிழமைகளில் இருப்பது
* உமா மகேஸ்வர - விரதம் கார்த்திகை பவுர்ணமியில் இருப்பது
* திருவாதிரை விரதம் - மார்கழி மாதத்தில் வருவது
* சிவராத்திரி விரதம் - மாசி மாதம் அமாவாசை தினத்தில் வருவது
* கல்யாண விரதம் - பங்குனி உத்திரத்தன்று கடைபிடிப்பது
* பாசுபத விரதம் - தைப்பூச தினத்தில் வருவது
* அஷ்டமி விரதம் - வைகாசி மாதத்தில பூர்வபட்ச அஷ்டமி தினத்தில் அனுஷ்டிப்பது
* கேதார கவுரி விரதம் - ஐப்பசி அமாவாசையை ஒட்டி (தீபாவளி தினத்தில்) இருக்கும் விரதம்.
-சிவனுக்கு உகந்த இந்த விரதங்களை முறையாக கடைப்பிடித்து வந்தால் வாழ்வில் எல்லாவிதமான நன்மைகளை பெறலாம்.

No comments:

Post a Comment