Saturday, August 23, 2014

கிருபானந்த வாரியார் ஆன்மிக சிந்தனைகள்

இனிமையாய் பேசுங்க!
* விலங்கையும், மனிதனையும் பிரித்துக் காட்டும் எல்லைக்கல்லே ஒழுக்கம். ஒழுக்கம் தவறி விட்டால் மனிதன் தன் நிலையிலிருந்து தாழ்ந்து விடுகிறான்.
* வியாபாரி அன்றாடம் லாபநஷ்டம் பார்ப்பது போல, இன்றைய பொழுதை எப்படி கழித்தோம் என்று நம்மை நாமே சோதித்துப் பார்க்க வேண்டும்.
* மனிதனுடைய உயர்வும் தாழ்வும் நாக்கைப் பொறுத்தே அமைகிறது. அதனால், நாவடக்கத்துடன் நயமாகப் பேசுவது நன்மை தரும்.
* மழை சுத்தமான நீராக இருந்தாலும், சேருமிடத்தைப் பொறுத்து அதன் தன்மை மாறுகிறது. அதுபோல, மனிதன் யாருடன் சேர்கிறானோ அந்த குணத்தையே அடைகிறான்.
* ஒருவரின் புறத்தோற்றத்தைக் கண்டு முடிவு செய்து விடாதீர்கள். அவரது பண்பைப் பொறுத்தே நல்லது கெட்டதை உறுதி செய்ய வேண்டும்.
வாழ்வின் உயிர்நாடி எது?
* உன்னைப் புகழும்போது மகிழ்ச்சி அடையாதே. இகழும்போது கவலையும் அடையாதே.
* மரம் தன்னை நாடி வருபவருக்கு நிழல் தந்து உதவுவது போல, மனிதனும் தன்னை நாடி வந்தவருக்கு உதவ மறுப்பது கூடாது.
* தூய உணவை உண்ணும்போது தூய எண்ணம் உண்டாகும். அதனால், உணவு சமைக்கும் போது நல்லெண்ணத்துடன் சமைக்க வேண்டும்.
* உலகில் செய்த தர்மம் ஒன்றே என்றென்றும் அழிவில்லாமல் இருக்கும். பொன், பொருள் போன்ற செல்வம் நம் கண் முன்னே காணாமல் போய் விடும்.
* பசுவைப் போன்ற நல்லவர்களிடம் பழகுங்கள். பாம்பு போன்ற கொடியவர்களிடம் விலகி நில்லுங்கள்.
* பணிவுடைமை மனித வாழ்வின் உயிர்நாடி. அதனால், நம் வாழ்க்கைத் தரம் உயர்வு அடைகிறது.
* போற்றுதலையும், தூற்றுதலையும் சமமாகக் கருதுபவர்களின் உ<ள்ளத்தில் அமைதி குடியிருக்கும்.
* பிறருடைய குற்றங்களை அலசி ஆராய்வது கூடாது. நாம் செய்த குற்றத்தை மூடி மறைப்பது கூடாது.
ஒழுக்கம் உயர்வு தரும்
* நல்லவர்களின் சேர்க்கை நன்மைக்கு வழிவகுக்கும். ஒருவன் முன்னேறாமல் இருப்பதற்குக் காரணம் நல்ல நண்பர்களோடு பழகாதது தான்.
* பணம் சேரச் சேர சாப்பாடு மட்டுமல்ல தூக்கம், ஒழுக்கம், பக்தி இவையும் கூட குறையத் தொடங்கும்.
* படிப்பினால் வரும் அறிவை விட அனுபவ அறிவே மேலானது. அனுபவசாலிகளின் அறிவுரைக்குச் செவிசாய்ப்பது நல்லது.
* பத்தியம் இருந்தால் வியாதி தீர்வது போல, ஒழுக்கத்துடன் வாழ்ந்தால், தெய்வ நிலைக்கு உயரலாம்
* தன் புகழ் தெரியாமல் வாழும் நல்லவர்களின் புகழை, கடவுள் மூன்று உலகத்திலும் சுவரொட்டி ஒட்டி விளம்பரப்படுத்துவார்.
* வெயில் அதிகம் அடித்தால் மாலையில் மழை வரும். அதுபோல, அநீதி உலகில் அதிகரித்து விட்டால் மகான்கள் அவதரிப்பார்கள்.

No comments:

Post a Comment