Saturday, May 23, 2015

ஆறுமுகம் இருக்க ... அவன் கை வேலிருக்க

ஆறுமுகம் இருக்க ... அவன் கை வேலிருக்க
வேறு துணை யாரெனக்கு வேண்டும்
வெற்றி வேலன் அவன் தாள் பணிய வேண்டும்
வெற்றி வேலன் அவன் தாள் பணிய வேண்டும்
ஆறுமுகம் இருக்க ... அவன் கை வேலிருக்க
ஆறுமுகம் இருக்க ... அவன் கை வேலிருக்க
வேறு துணை யாரெனக்கு வேண்டும்
வெற்றி வேலன் அவன் தாள் பணிய வேண்டும்
நீரணிந்த நெற்றியுடன் ... நீங்காத பக்தியுடன்
காவடிகள் தூக்கி வர வேண்டும்
முருகன் சேவடியில் மாலையிட வேண்டும்
ஆறுமுகம் இருக்க ... அவன் கை வேலிருக்க
வேறு துணை யாரெனக்கு வேண்டும்
வெற்றி வேலன் அவன் தாள் பணிய வேண்டும்
ஏறுமயில் ஏறிவரும் ... வீரமகன் திருப்புகழை
காலமெல்லாம் பாடும் நிலை வேண்டும்
பழநி கந்தன் அவன் கருணை செய்ய வேண்டும்
ஆறுமுகம் இருக்க ... அவன் கை வேலிருக்க
வேறு துணை யாரெனக்கு வேண்டும்
வெற்றி வேலன் அவன் தாள் பணிய வேண்டும்
எப்போது நினைத்தாலும் ... பக்கத்திலே இருந்தே
என்னை அவன் பார்த்திருக்கவேண்டும்
என் அன்னையென காத்திருக்க வேண்டும்
ஆறுமுகம் இருக்க ... அவன் கை வேலிருக்க
வேறு துணை யாரெனக்கு வேண்டும்
வெற்றி வேலன் அவன் தாள் பணிய வேண்டும்.
செந்தூர் சுப்ரமண்யா சரணம்..
Chendur Subrahmanya Saranam...

கேன்ஸரைக் குணப்படுத்திய நாராயணீய மந்திரம்!

Temple images
ஸ்ரீமன் நாராயணீயம் பட்டத்ரி தன் நோய் தீர்க்க குருவாயூரப்பனை நோக்கிப் பாடியது. நாராயணீயம் பாடி முடித்தவுடன் நோயும் தீரப் பெற்றார் என்பதும் சரித்திரம். இவர் மட்டுமல்லாமல் இன்னும் பலபேரும் இது போல நாராயணீயத்தைப் பாராயணம் செய்து நோய் தீரப் பெற்று இருக்கிறார்கள். பட்டத்ரியின் வாக்கு அந்த அளவிற்கு தெய்வீகம் மிகுந்த சத்திய வாக்காக உள்ளது. இதற்கு சில ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு சம்பவமே சாட்சி.

காஞ்சி மகா பெரியவர் ஸ்ரீசந்த்ர சேகரேந்திர சுவாமிகளிடம் ஒரு பெண் கண் கலங்கி அழுதிருக்கிறார். தனக்குக் கேன்ஸர் நோய் இருப்பதாகச் சொல்லிவிட்டதாகவும், அதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள வசதியெல்லாம் தன்னிடம் இல்லை எனவும் அழுதிருக்கிறார். 

கருணையுள்ளம் கொண்ட மகான் அப்பெண்ணை ஆசீர்வதித்து கவலைப் படாதே. நாராயணீயத்திலே எட்டாவது தசகத்திலே அஸ்மின் னு ஆரம்பிக்கிற ஸ்லோகத்தை தினமும் 48 தடவை சொல்லு. இப்படியே 48 நாள் பாராயணம் பண்ணு... என்று அருளியிருக்கிறார்.

தெய்வத்தின் குரலாக அதை ஏற்றுக் கொண்ட அப்பெண்மணி அதே போல 48 நாள் 48 தடவை பாராயணம் செய்திருக்கிறார். பிறகு அவரை சோதித்த மருத்துவர்கள் அதிசயித்துப் போனார்கள், இவ்வாறு மிகப் பலரின் உடல் உபாதைகளையும் தீர்த்த அந்த ஸ்லோகம்.

அஸ்மிந்- பராத்மந் நநு பாத்மகல்பே
த்வமித்த- முத்தாபித- பத்மயோனி:
அனந்த பூமா மமரோக ராசிம்
நிருந்த்தி வாதாலய வாஸ விஷ்ணோ

அதி சூட்சும சண்முக மந்திரம்

அதி சூட்சும சண்முக மந்திரம்

இதை அனுதினமும் முருகன் படத்தின் முன் 11 முறை சொல்லி வர நற்பலன் உண்டாகும். இது வழி வழியாக குரு உபதேசம் மூலம் உபதேசிக்கப்படும் மந்திரமாகும்.

ஓம் நமோ பகவதே

சுப்ரமணியாய ஷண்முகாய மகாத்மனே

ஸ்ர்வ சத்ரு ஸம்ஹார

காரணாய குஹாய மஹா பல பராக்ரமாய

வீராய சூராய மக்தாய மஹா பலாய

பக்தாய  பக்த பரிபாலனாயா

தனாய தனேஸ்வராய

மம ஸர்வா பீஷ்டம்

ப்ரயச்ச ஸ்வாஹா!

ஓம் சுப்ரமண்ய தேவதாய நமஹ!




Wednesday, May 20, 2015

முருகனின் 16 வகை திரு கோலங்கள் !!!

1. ஞானசக்திதரர்: இந்த முருகனை வழிபட்டால் நினைத்த காரியங்கள் வெற்றியுடன் முடியும். திருத்தணிகையில் எழுந்தருளியிருக்கும் மூலவர் திருவடிவம் `ஞானசக்திதரர்’ திருக்கோலமாகும்.
2.கந்தசாமி: இவரை வழிபட்டால் சகல காரியங்களும் சித்தியாகும். பழனிமலை ஆண்டவர் திருவடிவம் இது.
3. ஆறுமுக தேவசேனாபதி: இவரை வழிபட்டால் மங்களகரமான வாழ்வு கிடைக்கும். சென்னிமலையாண்டவர் திருக்கோயிலில் கர்ப்பக்கிரக மாடம் ஒன்றில் இந்த திருவுருவம் உள்ளது.
4. சுப்பிரமணியர்: இவர் தன்னை வழிபடும் பக்தர்களின் வினைகளை நீக்கி ஆனந்தப் பேற்றினை அளிக்கக் கூடியவர். நாகை மாவட்டத்திலுள்ள திருவிடைகழி முருகன் கோயில் மூலவர் சுப்பிரமண்யர் ஆவார்.
5. கஜவாகனர்: இவரை வழிபட்டால் துன்பங்கள் விலகி ஓடும். திருமருகல், மேல்பாடி, சிதம்பரம் நடராஜர் கோயில் கீழைக் கோபுரம் ஆகிய இடங்களில் யானை மீதிருக்கும் இவரது திருவுருவம் உள்ளது.
6.சரவணபவர்: தன்னை வழிபடும் அடியவர்களுக்கு மங்கலம், ஒலி, கொடை, சாத்வீகம், வீரம் முதலிய குணங்களை அளிப்பவர். சென்னிமலை, திருப்போரூர் ஆகிய இடங்களில் இவரது திருவடிவம் இருக்கிறது.
7. கார்த்திகேயர்: இவரை வழிபட்டால் சகல சவுபாக்கியங்களும் வந்து சேரும். கார்த்திகை நட்சத்திர நாட்களில் இவரை வழிபடுவது விஷேசமான பலன்களைத் தரும். கும்பகோணத்தில் உள்ள கும்பேஸ்வரர் கோயிலிலும், தாராசுரம் ஐராவதீச்வரர் கோயிலிலும் கார்த்திகேயர் திருவுருவம் உள்ளது
. 8. குமாரசாமி: இவரை வழிபட்டால் ஆணவம் அடியோடு நீங்கும். நாகர்கோவில் அருகில் இருக்கும் குமாரகோவிலில் இவரது திருவடிவம் உண்டு. கங்கை கொண்ட சோழபுரத்தில் இவருக்குப் பஞ்சலோக விக்கிரகம் இருக்கிறது.
9. சண்முகர்: இவரை வழிபட்டால் சிவசக்தியை வழிபட்ட பலன் கிடைக்கும். திருச்செந்தூரில் உள்ள முருகன் அருட்கோலம் சண்முகர் திருவடிவமாகும்.
10. தாரகாரி: `தாரகாசுரன்’ என்னும் அசுரனை அழித்ததால் முருகப்பெருமான் இத்திரு நாமத்தைப் பெற்றார். உலக மாயைகளில் இருந்து விடுபட வழிசெய்யும் திருக்கோலம் இது. விராலி மலையில் உள்ள முருகன் கோயிலில் தாரகாரி இருக்கிறார்.
11. சேனானி: இவரை வழிபட்டால் பகை அழியும். போட்டிகளில் வெற்றிகிடைக்கும். பொறாமை நீங்கும். தேவிகாபுரம் ஆலயத்தில் சேனானி திருவுருவம் இருக்கிறது.
12. பிரம்மசாஸ்தா: இவரை வழிபட்டால் எல்லா வகைவித்தைகளிலும் தேர்ச்சி பெறலாம். சகலவித கலையறிவும் அதிகரிக்கும். கல்வியில் தேர்ச்சி கிட்டும். காஞ்சிபுரத்தில் உள்ள குமரக்கோட்டம் ஆனூர், பாகசாலை, சிறுவாபுரி ஆகிய இடங்களில் பிரம்மசாஸ்தா திருக்கோலம் உள்ளது.
13. வள்ளிகல்யாணசுந்தரர்: இவரை வழிபட்டால் திருமணத்தடைகள் விரைவில் அகலும், கன்னிப் பெண்களுக்குக் கல்யாண பாக்கியம் கிடைக்கும். திருப்போரூர் முருகன் கோயில் தூண் ஒன்றில் இவர் திருவுருவம் இருக்கிறது.
14. பாலசுவாமி: இவர், உடல் ஊனங்களையும், குறைகளையும் அகற்றும் தெய்வம். இவரை வழிபடுபவர்களுக்கு உடல் நலம் கிடைக்கும். திருச்செந்தூர், திருக்கண்டிïர், ஆண்டாள் கும்பம் கோயில்களில் பாலசுவாமி திருவுருவம் இருக்கிறது.
15. சிரவுபஞ்சபேதனர்: இவரை வழிபட்டால் துன்பங்கள் விலகும். மனச்சஞ்சலம் அகலும். திருநெல்லிக்கா, திருக்குறங்குடி, திருநளி பள்ளி ஆகிய இடங்களில்இவரது திருவுருவம் உண்டு.
16. சிகிவாகனர்: மயில் மீது இருக்கும் முருகன் அருட்கோலம் இது. ஆலயம் பலவற்றில் அழகுற அமையும் திருவடிவம். தன்னை வழிபடுபவர்களுக்கு இன்பமான வாழ்வு அளிப்பவர் இவர்.
http://www.thulikal.com/

உங்கள் எதிர்காலத்தை நீங்களே பார்ப்பது எப்படி.!!!

உங்கள் எதிர்காலத்தை நீங்களே பார்ப்பது எப்படி? ஒரு சுலபமான ஆன்மீக வழிமுறை
நாளைக்கு என்ன நடக்கும்னு யாருக்கும் தெரியாது.இனிமேல் இப்படிச் சொல்லாதீர்கள்.உங்கள்வாழ்க்கையில் நாளை என்ன நடக்கும் என்பதை இன்று முதல் நீங்களே காணலாம்.
ஒரு சனிக்கிழமையன்று ,குளித்து சுத்த மனதுடன் நூறு ஆண்டு ஆன வேப்பமரம் இருக்கும் இடம் செல்ல வேண்டும்.
அதில் ஏறி கையினால் பெருவிரல் தடிமனாக உள்ள ஒரு வேப்பங்குச்சியை ஒடித்து எடுக்க வேண்டும்.இரும்பு ஆயுதங்களைப் பயன்படுத்தக் கூடாது. ஒடித்து எடுத்த குச்சி வளையாமல் கோணாமல் நேராக இருக்கும்படியானதாக இருக்க வேண்டும்.குச்சியின் நீளம் இரண்டு சாண் அளவு இருக்க வேண்டும்.வீட்டிற்குக் கொண்டு வந்து இருபக்கமும் உள்ள பிசிறுகளை கல்லில் தேய்த்து வழுவழுப்பாக்கிக் கொள்ளவும்.பின் அதன்மேல் நயம் சந்தனம் பூசிக்காய வைத்து விடவும்.இப்போது தெய்வீக வேப்பங்குச்சி தயார்.
இதை மற்றவர்களுக்காகவும் நீங்கள் தயாரிக்கலாம்.ஒரு அமாவாசை தினத்தில் மேற்படி குச்சியை எடுத்து உபயோகிக்க ஆரம்பிக்கலாம்.படுக்கை விரித்துஅதில் சிறிய தலையணைமேல் ஒரு புது சிவப்புநிற டர்க்கிடவல் விரிக்கவும்.அதன்மேல் மேற்படி குச்சியை வைக்கவும்.அதன்மேல் ஒரு சிவப்புத்துணி விரித்து குச்சியை மூட வேண்டும்.இரவு 9 மணிக்குமேல் மூடிய குச்சிமேல் தலைவைத்துப் படுக்க வேண்டும்.வடக்கே நோக்கி தலைவைத்துப் படுக்க வேண்டும். “ஓம் ஸ்ரீம்ஹ்ரீம் ஆதிபராசக்தியே நமஹ” என மனதால் ஜபித்துக் கொண்டே தூங்கிவிட வேண்டும்.
15 நாட்கள்தினமும் செய்ய சிறு நட்சத்திரங்கள் தோன்றும்.பின் அவை மறைந்து 30 நாட்களுக்குப்பின் ஒரு பிரகாசமான நட்சத்திரம் மட்டும் தோன்றும்.45 நாட்களுக்குப்பின் முழுநிலவு தோன்றும்.60 நாட்களுக்குப்பின் உங்களது வருங்காலம் திரைப்படம்போல் தோன்றும்.பின் தங்கள் யுக்தியை உபயோகப்படுத்தி பல விதங்களில் விருத்தி செய்து கொள்ளலாம்.
90 தினங்களுக்குள் வெற்றி உறுதி!!!
அம்மா!பத்திரகாளி!!! உன் கருணையே கருணை!!!

மூச்சுப் பயிற்சி - நாடிசுத்தி !!!

இந்த உலகம் இயங்கிக்கொண்டு இருப்பதற்கும், இந்த உலகத்தில் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்கள் தமது இயற்கைத்தன்மை வழுவாமல் இயங்கிக் கொண்டே இருப்பதற்கும், இந்தப் பூலோகத்திலே சகலவிதமான பலகோடி உயிரினங்களும் தோன்றியும், வாழ்ந்தும், மடிந்து கொண்டிருப்பதற்கும் ஆதாரமாக இருக்கின்ற சக்தி ஒன்று இருக்கின்றது. இந்தச் சக்தியைத்தான் பிராணசக்தி (Life Force) என்று கூறுகிறோம். மானுட தேகத்தின் இடையறாத இயக்கத்துக்கும் இதுவே காரணமாகிறது. இந்தப் பிராணசக்தி இரண்டு வகையான இயக்கங்களாக நமது உடம்பில் வினைப்பட்டுக் கொண்டிருக்கின்றது. ஓன்று உள்ளிழுக்கும் இயக்கம், மற்றது வெளித்தள்ளும் இயக்கம். இவ்விரண்டு இயக்கங்களும் ஆங்கிலத்தில் Assimilation என்றும் Elimination என்றும் சொல்லப்படுகின்றன.
நமது சுவாசத்தை நெறிப்படுத்தி, நமக்கு நிறைந்த உயிர் வளியைக் கொடுத்து நமது பிராணனாகிய உயிரை வளப்படுத்துவதற்காகவும், நமது மூச்சுக் காற்றோடு தொடர்புடைய உள்ளிளுக்கும் மற்றும் வெளித்தள்ளும் இயக்கங்களை மேம்படுத்தி வைப்பதற்காகவும் மானுடர் எவருக்கும் ஏற்றவகையில் சில வகையான மூச்சுப்பயிற்சி முறைகளை நமது ஞானிகள் கண்டறிந்து போதித்தார்கள்.
இவை 1. நாடிசுத்தி 2. ஜிவசுத்தி 3. பிராணசுத்தி 4. பந்தனசுத்தி 5. கண்டசுத்தி 6. சோஹம்சுத்தி என்பனவாகும்.
இவை அனைத்தும் உள்ளிளுக்கும் இயக்கம், வெளித்தள்ளும் இயக்கம் ஆகிய இருவகை இயக்கங்களை மேம்படுத்துவனவே என்பதை நாம் உணரவேண்டும். இந்த ஆறுவகை மூச்சுப் பயிற்சிகளும், பிராணாயாமம் என்ற அதி உன்னதமான உயிர்க்கலைக்கு அடிப்படைப் பயிற்சிகளாகும். இங்கே பிராணாயாமங்களைப் பற்றியோ, அவற்றின் அடிப்படை சுவாசப்பயிற்சிகளையோ நான் விபரிக்கவில்லை. என்றாலும் பொதுவான மனித உடல் நலத்தைக் கருத்தில்கொண்டு நாடிசுத்தி என்று மூச்சுப்பயிற்சியை மட்டும் விளக்கியிருக்கின்றேன்.
நாடிசுத்தி செய்யும் முறை:-
பத்மாசனத்தில் அமரவேண்டும். பத்மாசனம் சரியாக வராதவர்கள் வஜ்ராசனத்தில் அமரலாம். இடது பக்க நாசித்துளையை இடதுகைக் கட்டைவிரலால் மூடிக்கொண்டு, வலதுபக்க நாசித்துளை வழியே முதலில் உள்ளேயிருக்கின்ற காற்றை (கொஞ்சமாக இருந்தாலும்) சுத்தமாக வெளியேற்ற வெண்டும். வலது நாசித்துளை வழியே காற்றை வேகமாகவும் இல்லாமல், ரொம்ப மெதுவாகவும் இல்லாமல் ஒரு நிதானமான கதியில் காற்றை உள்ளே இழுக்கவேண்டும். நுரையீரல் காற்றால் நிறைந்ததும்இ இடதுகை நடுவிரலாலோ அல்லது ஆள்காட்டி விரலாலோ வலதுபக்க நாசித்துளையை மூடிக்கொண்டு, இடதுபக்க நாசித்துளை வழியே காற்று முழுவதையும் வெளியேற்ற வேண்டும். இப்போது இடதுபக்க நாசித்துளை வழியே காற்றை நுரையீரல் நிரம்புமளவுக்கு இழுத்துக்கொண்டு, இடதுபக்க நாசித்துளையை மூடிக்கொண்டு வலதுபக்க நாசித்துளை வழியே காற்று முழுவதையும் வெளியேற்ற வெண்டும். இது ஒருசுற்று நாடிசத்தி ஆகும். இவ்வாறு குறைந்தது பத்துச் சுற்றுக்கள் முதல் இருபது சுற்றுக்கள் வரை செய்யலாம். பயிற்சியாளர் விரும்பினால் மேலும் பத்துச் சுற்றுக்கள் கூடுதலாகவும் செய்யலாம்.
பயன்கள்:-
சுவாசித்தல் என்ற காரியத்தில் காற்று மூக்குவழியாக உள்ளேபோய் அங்கே காற்றிலுள்ள பிராணவாயு எடுத்துக்கொள்ளப்பட்டுக் கரியமிலவாயு வெளியேற்றப்படுகிறது. இதைத்தான் சுவாசித்தல் என்று கூறுகிறோம்.
காற்று மூக்கு வழியாக உள்ளே நுரையீரலுக்குப் போய் மூக்கு வழியாக வெளியே வரவேண்டும். இவ்வளவு தானே, இதற்கு மூக்கிலே இரண்டு துவாரங்கள் எதற்காக இருக்கவேண்டும்? ஒரே துவாரமாக இருந்தால் போதாதா? போன்ற இப்படியான கேள்விகளை எடுத்துக் கொண்டு விஞ்ஞானம் இதுவரை இதற்கு விடை சொல்லியிருப்பதாகத் தெரியவில்லை. விஞ்ஞானம் இதனை விளங்கிக் கொள்ளாமலோ அல்லது விளக்கமளிக்காமலோ போனாலும் நமது ஞானிகள் இதற்கு விளக்கம் கொடுத்திருக்கிறார்கள்.
இடை பிங்கலையும் சுவாசநடப்பும்:-
இடதுபக்க மூக்குத்துளை வழியே போகின்ற சுவாசம் இடைகலை, வலதுபக்க மூக்குத்துளை வழியே போகின்ற சுவாசம் பிங்கலை எனபப்படும். இடதுபக்க சுவாசம் உடலுக்கு சீதளத்தையும், வலதுபக்க சுவாசம் உடம்புக்கு உஷ்ணத்தையும் தருகின்றன. சாதாரணமாக நாம் நமது சுவாசத்தின் நடப்பைக் கவனித்தோமானால் யாருக்கும் எப்போதும் ஏதாவது ஒரு பக்கமாகத்தான் சுவாசம் நடந்துகொண்டிருக்கும். அப்பொழுது மற்ற மூக்குத்துளை அடைத்துக் கொண்டிருக்கும். இன்னும் சிறிதுநேரம் கழித்துப் பார்த்தால் ஏற்கனவே சுவாசம் ஓடிக்கொண்டிருந்த பக்கம் அடைத்துக்கொண்டு மறுபக்கம் சுவாசம் மாறி நடப்பதை அறியலாம். எப்போதாவது ஒரு சமயம் சுவாசம் இரண்டு நாசித்துளைகள் வழியாகவும் தடை இல்லாமல் போய்க்கொண்டு இருக்கும். இந்நிலை சுவாசம் ஏதோ ஒரு பக்கமாக மாறப்போகிறது என்பதன் அறிகுறியாகும். இவ்வாறு சுவாசம் ஒரு நாளில் சில தடவைகள் மாறிமாறி நடந்து நமது உடம்பின் உஷ்ண நிலையைச் சீராகவைத்துக்கொண்டு இருக்கிறது.
நுரையீரலும், சுவாசங்களும்:-
அறுபது கோடி காற்றறைகளால் ஆகி நூறு சதுரமீட்டர்கள் பரப்பளவையுடைய நுரையீரல்கள், சின்னச்சின்ன வாழைப்பூ வடிவத்தில் இரண்டுபக்க விலாஎலும்புகளுக்குள்ளே அமைந்து நமது சுவாசத்தை இரவும் பகலும் ஓயாது நடத்தி, நமது உடம்பிலுள்ள ஐயாயிரம் கோடி கலங்களுக்கும் பிராணவாயுவை விநியோகம் செய்துவருகிறது.
சாதாரணமாக நாம் சுவாசிக்கும் சுவாசங்களைக் கவனித்தால் இது சரியான சுவாசம் இல்லையென்பது விளங்கும். ஏதோ கொஞ்சம் காற்று உள்ளே போகிறது. உள்ளே வந்த காற்றிலுள்ள பிராணவாயுவை நுரையீரல்கள் அவசரம் அவசரமாக எடுத்துக்கொண்டு இந்தக் கொஞ்ச நேரத்துக்குள் கரியமில வாயுவை வெளிளேற்றுகின்றன. உள்ளே போகும் காற்றில் தூசும், வாகனங்களின் கரிப்புகையும், தூய்மையற்ற சுற்றுப்புறத்தின் மாசுகளும் மண்டிக்கிடக்கின்றன. இந்தக் காற்றையாவது நுரையீரல் நிரம்புமளவுக்கு சுவாசிக்கிறோமா என்றால் அதுவுமில்லை.
மனிதன் சுவாசிக்கின்ற ஒவ்வொரு சுவாசத்திலும் ஆழ்ந்து காற்றை இழுத்து நுரையீரல்களை நிரப்ப முடியாது. அதற்கான சாத்தியக்கூறுகள் நடைமுறையில் இல்லை. எப்போதாவது அபூர்வமாகப் பெருமூச்சு விட்டால் அப்போது ஓரளவு நமது நுரையீரல்கள் காற்றால் நிரம்புகின்றன. இந்த நடைமுறையினை நாம் அறிவோம்.
நாடிசுத்தி செய்கின்றபோது நன்கு ஆழ்ந்து காற்றை இழுத்து நரையீரல்களை நிரப்புவதால், நமது நுரையீரல்களிலுள்ள அறுபது கோடிக் காற்றறைகளும் விரிந்து காற்றால் நிறைகின்றன. இதுவரை காற்றில்லாமல் சுருங்கிக்கிடந்த நுரையீரல்களில் காற்றுப் புகுந்து, நிறைந்து அங்கே தேங்கிக்கிடந்த சளி, மாசு போன்றவற்றை வெளியேற்றுகிறது. பெருமளவில் கிடைத்த பிராணவாயு முழுமையாக இரத்தத்தில் கலக்கும் பொழுது இரத்த அணுக்களெல்லாம் புதிய உற்சாகம் பெறுகின்றன.
இதனால் இரத்தம் அதிவேகமாகத் தூய்மையடைகிறது. நுரையீரல்கள் வளமும் வலிமையும் பெறுகின்றன. நாடிகள் சீர்ப்படுகின்றன. மூளைக்கு வேண்டிய ஆக்சிஜன் முழுமையாகக் கிடைக்கின்றது. நமது உடல் உறுப்புக்களிலேயே அதிகமான ஆக்சிஜனை எடுத்துக்கொள்ளும் பகுதி நமது மூளைதான். போதியளவு ஆக்சிஜன் இல்லாவிட்டால் மூளையின் கலங்கள் இறந்துபோய்விடும். இறந்துபோன மூளைக்கலங்களை உயிர்ப்பிக்க முடியாது. மூளைக்குப் போதிய ஆக்சிஜன் கிட்டுவதால் நல்ல சிந்தனைத் தௌpவு உண்டாகும். மனக்கட்டுப்பாடு வரும். மொத்தத்தில் நாடிசுத்தியால் மனித உடம்பிலும், மனதிலும் மிகப்பெரிய வேதிவினையே நடைபெறகின்றது. மனிதன் தானாக உயர்கிறான். ஒரு சிறு மூச்சுப்பயிற்சி உயர்வான பயன்களைத் தந்து உதவுகிறது.
உயர்வான இந்தப்பயன்களோடு, மனித உடல் ரீதியாக நல்ல ஆரோக்கியமான தூக்கம்வரும். தலைவலி சளித்தொல்லைகள், காய்ச்சல் போன்ற உபாதைகள் வரமாட்டா. முகம் பொலிவு பெற்று விளங்கும். மூக்கில் சதை வளருதல்இ சைனஸ் போன்ற நாசித் தொல்லைகள் அகலுகின்றன. காசநோய் வராது. காசநோய்க் கிருமிகளை நாடிசுத்தியினால் கிடைக்கும் ஆக்சிஜன் உடனடியாகக் கொன்று அழிக்கும். ஆஸ்த்மா என்ற கொடிய நோயை அழிக்கின்ற அரக்கன் என்று நாடிசுத்தியைக் குறிப்பிடலாம். அவ்வளவு அற்புதமான பயிற்சி இது.
இந்த நாடிசுத்தி எச்சரிக்கை வேண்டாதது. எவருக்கும் ஏற்றது. குழந்தைகள் முதல் வயதானவர்கள்வரை எவரும் செய்யலாம். செய்து பார்த்தால் இதன் பெருமை நமக்குப் புரியும். நமக்குள் நிகழுகின்ற உள்ளிளுக்கும் இயக்கம், வெளித்தள்ளும் இயக்கம் ஆகிய இருவகை இயக்கங்களும் சீர்ப்படுகின்றன.
உள்ளிளுக்கும் இயக்கம் காரணமாக நமது உடம்புக்குள்ளே காற்று செல்கின்றது. இதயத்தினுள் இரத்தம் செல்லுகின்றது. நாம் உட்கொண்ட உணவு ஜீரணமாகி அதிலேயுள்ள சத்துக்கள் கிரகிக்கப்படுகின்றன. நாம் வலிமையோடு வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்.
வெளித்தள்ளும் இயக்கத்தின் காரணமாக, உள்ளேபோன காற்று கரியமிலவாயுவாக வெளியே வருகிறது. இரத்தம் உடம்பின் எல்லாப் பாகங்களுக்கும் செலுத்தப்படுகிறது. எஞ்சிய கழிவுகள் திடநிலை, திரவநிலை, வாயுநிலை கழிவுகளாக வெளியேற்றப்படுகின்றன. இந்த இருவகை இயக்கங்களும் பிரபஞ்சத்தின் எல்லாப்பகுதிகளிலும்இ நமது உடம்பிலும் சீராக வினைப்பட்டுக்கொணடு இருப்பதால்தான் இங்கே எல்லா உயிர்களும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. இவ்விரு இயக்கங்களில் குழப்பங்கள் நேர்ந்தால் நாம் கருவிலேயே குன்றிப்போவோம். யோகாசனங்களாலும் நாடிசுத்தி என்ற மூச்சுப்பயிற்சியாலும் இந்த இருவகை இயக்கங்களும் ஒழுங்குபடுகின்றன.
பெண்கள் கருவுற்று இருக்கின்ற காலத்தில் யோகாசனங்களைச் செய்யக்கூடாது என்று முன்னர் குறிப்பிட்டிருந்தேன். முன்னரே ஆசனப்பழக்கமுள்ள பெண்களாக இருந்தால் நான்கு அல்லது ஐந்துமாத கர்ப்பகாலம்வரை தனக்குப் பழக்கமான ஆசனங்களைச் செய்துவரலாம். ஆதற்குமேல் நிறுத்திக்கொள்ள வேண்டும். ஆனால் இந்த நாடிசுத்தி என்ற மூச்சுப்பயிற்சியைப் பெண்கள் கர்ப்பகாலத்தில்கூட திடீரென்று ஆரம்பித்துச் செய்யலாம். கருவுற்ற பெண்ணுக்கு ஆசனப்பழக்கம் இல்லாதுபோனாலும், நாடிசுத்தியை ஆரம்பித்து பிரசவம் வரைக்கும் காலை மாலை இரண்டு வேளையும் செய்துவரலாம்.
இதனால் பிறக்கின்ற குழந்தை சிவப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். மூளை வளர்ச்சி இல்லாத குழந்தைகள்இ அங்கக் குறைபாடுள்ள குழந்தைகள் எல்லாம் தாயின் கருவில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாகவே அவ்வாறு பிறக்கின்றன. இவைகளையெல்லாம் நாடிசுத்தி சீர் செய்கின்றது. ஆசனங்களும் மூச்சுப் பயிற்சிகளும் அதற்கு மேலான தியானமும் எமது கைப்பழக்கத்திற்கு வந்துவிடுமானால் அப்போது இந்தப் பூலோகமே சுவர்க்கமாகிவிடும்.
தொகுப்பு:- பேரி.
http://www.sivasiva.dk/


காயத்திரி மந்திரம் !!!

காயத்திரி மந்திரம் என்பது சூரிய வழிபாட்டைத்தான் குறிக்கும்.
ஓம்
பூர்: புவ: ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ: யோந: ப்ரசோதயாத்
அந்தப் பரம ஜோதி சொரூபமான சத்தியத்தை நாம் தியானிக்கிறோம். பூ உலகம், மத்திய உலகம், மேல் உலகம் மூன்றுக்கும் சக்தி அது. அந்தப் பரம சக்தி நமது புத்தியை வெளிச்சப்படுத்தட்டும் என்பது இதன் பொருள்.
24 அட்சரங்களைக் கொண்டது காயத்ரி மந்திரம். இதை தினசரி ஜபித்து வந்தால் பூர்வ ஜென்ம பாவங்கள் அகலும். சக்திகள் பெருகும். வைராக்கியம் உண்டாகும். காயத்ரி என்பதற்கு தன்னை ஜபிப்பவனைக் காப்பாற்றுவது என்று பொருள். இதை ஜபித்து வர எல்லாவித ஆபத்துக்களும் நீங்கும். மற்ற எல்லா மந்திரங்களுக்கும் தாய் போன்றவள் காயத்ரி. காயத்ரி சந்தசமம் மாத எனப்படும்.
இந்த ஜென்மத்தில் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவம் அகலும். அதற்காக வேண்டும் என்றே தெரிந்தே பாவங்களைச் செய்து விட்டு காயத்ரி மந்திரம் ஜபித்தால் பலன் கிடைக்காது.
காயத்ரி என்ற மந்திரத்திற்கு சாவித்ரி என்றும் சரஸ்வதி என்றும் பெயர்கள் உண்டு. இந்த மந்திரம் காலையில் காயத்ரி க்காகவும், நடுப்பகலில் சாவித்ரி க்காகவும், மாலை சந்தியா வந்தனத்தில் சரஸ்வதிக்காகவும் ஜபிக்கப்படுகிறது.
காயத்ரி மந்திரம் ஜபிக்கப்பட்ட பின்னரே மற்ற மந்திரங்கள் ஜபிக்கப்படுகின்றன. மந்திர வழிபாட்டில் காயத்ரிக்குத் தான் முதல் இடம். காயத்ரி ஜபம் செய்யாத எந்த ஜபமும், ஆராதனையும் பயனற்றது.
இந்த மந்திரத்தில் ஓம் என்ற பிரணவமும், பிறகு மூன்று வியாஹ்ருதிகளும் பிறகு மூன்று பாதங்களுள்ள காயத்ரி மந்திரமும் உள்ளது. இதை ஒரே மூச்சில் சொல்லாமல் ஓம் என்ற பிரணவத்திலும், இரண்டாவது வியாஹ்ருதிகளிலும், மூன்றாவது தத்ஸவிதுர்வரேண்யம் என்ற முதல் பாதத்திலும், நான்காவது பர்க்கோ தேவஸ்ய தீமஹி என்ற இரண்டாவது பாதத்திலும், ஐந்தாவது தியோ யோ ந; ப்ரசோதயாத் என்ற மூன்றாம் பாதத்திலும் நிறுத்தி சொல்ல வேண்டும்.
மனம் ஒரு புறம் எதையோ நினைத்துக் கொண்டிருக்க வாய் மட்டும் இந்த மந்திரத்தை 1008 அல்லது 108 தடவை உச்சரித்தால் பலன் கிடையாது. முறையாக 27 தடவை முழு மன ஒருமைப்பாட்டுடன் கூறினால் மட்டுமே பலன் கிடைக்கும்.
காலையில் கிழக்கு முகமாக சூரியனைப் பார்த்து நின்று கொண்டு இரு கைகளையும் முகத்திற்கு எதிராகக் கூப்பிக் கொண்டும், மதியம் கிழக்கு முகமாக உட்கார்ந்து கொண்டு கைகளை மார்புக்கு எதிரே கூப்பிக் கொண்டும், மாலையில் மேற்கு முகமாக அமர்ந்து கைகளை நாபிக்கு சமமாக கூப்பிக் கொண்டும் ஜபம் செய்ய வேண்டும்.
தினமும் குறைந்தது 108 முறை ஜபிக்கவும். ஆபத்துக் காலத்தில் 28 அல்லது 10 தடவை ஜபிக்கவும். உடலும், உள்ளமும் தூய்மையான குழந்தைகளும், வயதான பெண்களும் காயத்ரி மந்திரத்தை ஜபிக்கலாம்.
காயத்ரி மந்திரத்தின் பதவாரியான பொருள் பின்வருமாறு:
யோ -எவர்
ந -நம்முடைய
தியோ -புத்தியை
தத் -அப்படிப்பட்ட
ப்ரசோதயாத் -தூண்டுகிறாரோ
தேவஸ்ய -ஒளிமிக்கவராக
ஸவிது -உலகைப் படைத்த
வரேண்யம் -மிகவும் உயர்ந்ததான
பர்கோ -சக்தியை
தீமஹி -தியானிக்கிறோம்
நமது புத்தியை இயங்கச் செய்யும் பரமாத்மாவை நாம் வணங்குவோம் என்பது சுருக்கமான பொருள். காயத்ரி மந்திரத்தின் சிறப்பை உலகுக்கு உணர்த்தியவர் பிரம்ம ரிஷி விஸ்வாமித்திரர்.
படித்த இடம் :http://temple.dinamalar.com/

பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் வரலாறு !!!

(பிறப்பு: 1850- மறைவு: 1929, மே 30)
(திருநட்சத்திரம்: மார்கழி -பூராடம்)
பாம்பன் சுவாமிகள் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த உன்னத துறவியாவார். முருகன் பால் அன்பு பூண்டு கவிகள் பல பாடி கனவிலும, நனவிலும் ஆறுமுகப் பெருமானை தரிசித்தவர். சுவாமிகளின் தமிழ் ஞானம் அளவிடற்கரியது. சுவாமிகள் உலகம் உய்ய பல அருள் நூல்களை அருளிச் செய்துள்ளார். சுவாமிகளின் வாழ்க்கை வரலாறு இங்கு சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளது.
பிறப்பு
ராமேஸ்வரம் அருகிலுள்ள பாம்பன் என்னும் ஊரில் பாம்பன் சுவாமிகள் பிறந்தார். அடிகளாரது தந்தையார் சாத்தப்ப பிள்ளை, தாயார் செங்கமல அம்மையார். அடிகளாரது பிள்ளைத் திருநாமம் அப்பாவு. சுவாமிகள் பிறந்த ஆண்டு உறுதியாக அறியப்படவில்லை. 1850 முதல் 1852 ஆண்டுக்குள் இருக்கலாம் என நம்பப்படுகிறது.
தமிழ் ஞானம்
அடிகளார் சிறு வயதிலேயே தமிழ் மொழியில் மிகுந்த ஞானத்துடன் விளங்கினார். திருமுருகன்பால் மிகுந்த பக்தி கொண்டார். கந்த சஷ்டி கவசத்தை நாள்தோறும் 36 முறை ஓதினார். கந்த சஷ்டி கவசத்தை எழுதிய தேவராய சுவாமிகள் போல் தாமும் முருகன் பால் தமிழில் கவி பாட வேண்டும் என வேட்கை கொண்டார். ஒவ்வொரு பாடலின் முடிவிலும் அருணகிரிநாதரின் பெயரை வைத்தே முடிக்க வேண்டும் என முடிவு செய்தார்.
முதன் முதலாக முருகனை போற்றி “கங்கையை சடையிற் பரித்து” என தொடங்கும் பாடலை இயற்றினார். தினமும் உண்பதற்கு முன் ஒரு பாடல் வீதமாக நூறு பாடல்கள் இயற்ற வேண்டும் என்ற நியதியை மேற்கொண்டார். அவ்வாறே நூறு பாடல்களை இயற்றினார். பின்னர் சேது மாதவ ஐயர் என்பவரிடம் சடக்ஷர மந்திர உபதேசம் பெற்றார்.
திருமணம்
சுவாமிகள் திருமணப் பருவம் அடைந்தும் திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லாமல் இருந்தார். சேது மாதவ ஐயரின் வற்புறுத்தலின் பேரில் 1872-ஆம் ஆண்டு காளிமுத்தம்மையார் என்பவரை மணம் புரிந்தார். மூன்று ஆண்டுகள் கழிந்தன. முருகாண்டியா பிள்ளை, சிவஞானாம்பாள், குமரகுருதாச பிள்ளை என்று மூன்று குழந்தைகள் பிறந்தனர்.
சிவஞானாம்பாளுக்கு ஒராண்டு நிரம்பிய போது ஒரு நாள் நள்ளிரவில் ஓயாது அழுதுகொண்டே இருந்தது. அம்மையார், சுவாமிகளிடம் குழந்தை அழுவதைக் கூறி திருநீறளிக்குமாறு வேண்டினார். சுவாமிகள் இப்பொழுது எவருக்கும் திருநீறு அளிப்பதில்லை என்றும், முருகனிடம் வேண்டுமாறும் கூறினார்.
அவ்வாறே அம்மையார் முருகனிடம் வேண்டி குழந்தையின் அருகில் படுத்தார். அப்போது, காவி உடை உடுத்திய ஒருவர் அங்கு வந்து குழந்தையை அம்மையாரிடம் வாங்கி திருநீறு பூசி குழந்தை இனி அழாது எனக் கூறி தாயிடம் தந்துவிட்டு மறைந்தருளினார். அம்மையார் நடந்தவற்றை சுவாமிகளிடம் கூறினார். சுவாமிகள் முருகனின் திருவருளை நினைத்து வியந்தார்.
பொய் பகரல்
சுவாமிகளின் பெருமையை உணர்ந்து பல அடியார்கள் சீடர்கள் ஆயினர். இந்நிலையில், சுவாமிகளின் தந்தையார் சிவபதம் அடைந்தார்.
சுவாமிகள் துறவறம் மேற்கொள்ளும் எண்ணத்தில் இருந்தார். ஒரு சமயம் அங்கமுத்து பிள்ளை என்பவரிடம் தாம் பழனி செல்ல இருப்பதாக சுவாமிகள் கூறினார். அங்கமுத்து பிள்ளை தற்போது செல்ல வேண்டாம் என சுவாமிகளிடம் கூறினார். அதற்கு சுவாமிகள், ‘இது முருகப்பெருமான் ஆணை’ என பொய் பகன்றார்.
அன்று மாலை, சுவாமிகள் வீட்டின் மாடியில் அமர்ந்திருந்தார். அப்பொழுது, சுவாமிகள் கண்களுக்கு தென் திசையில் இறை உருவம் தென்பட்டது. அந்த உருவம் அச்சுறுத்தும் வகையில் பயங்கரமாக இருந்தது. “எனது கட்டளை என பொய் கூறினாயே, இது முறையாகுமா?” எனக் கூறி அச்சுறுத்தியது.
சுவாமிகள், இறைவனது சினத்தை கண்டு அஞ்சி, தம் தவறுக்கு மன்னித்தருளுமாறு வேண்டினார். அதற்கு, இறைவன், “இனி பழனிக்கு வரக் கூடாது” என உறுதி அளிக்குமாறு கூறினார்.
சுவாமிகளும் அவ்வாறே உறுதி அளித்ததும் அந்த உருவம் மறைந்து போனது. ஒரு பொய் கூறிய காரணத்தினால் சுவாமிகள் இறுதி வரை பழனி செல்ல முடியாமல் போனது.
சண்முக கவசம்
அடிகளாரின் தந்தையார் இறந்ததால், சுவாமிகளுக்கு குடும்ப சுமை அதிகரித்தது. சுவாமிகள் குத்தகை தொழில் புரிந்து வந்தார். 1891-ம் ஆண்டு தமக்கு வந்த இன்னல் நீங்கும் பொருட்டு ‘அ’ முதல் ‘ன’ முடிய (உயிர் எழுத்து – 12, மெய் எழுத்து – 18) 30 பாடல்களால் சண்முக கவசம் இயற்றினார். இதனால் அவரது இன்னல் நீங்கியது. சண்முக கவசம் மிகவும் சக்தி வாய்ந்தது. இதனை பாராயணம் செய்து பலனடைந்தார் பலர்.
சிறிது நாள் கழித்து, பரிபூஜன பஞ்சாமிர்த வண்ணம் எனும் செய்யுளை பாடியருளினார். இந்தப் பாடல் முருகப் பெருமானுக்கு மிகவும் விருப்பமானது.
வழக்குகளில் வெற்றி
அடிகளார் தொழில் நிமித்தமான பல்வேறு வழக்குகளை சந்திக்க நேர்ந்தது. முருகன் அருளால் வழக்குகள் அனைத்திலும் வெற்றி பெற்றார்.
குமர கோட்ட தரிசனம்
சுவாமிகள் பல திருத்தலங்களை தரிசிக்க வேண்டி தல யாத்திரை மேற்கொண்டார். மதுரை, திருவண்ணாமலை, திருக்காளத்தி, திருத்தணி எனும் திருத்தலங்களை தரிசித்துவிட்டு காஞ்சிபுரம் வந்து சேர்ந்தார். அங்குள்ள பல திருக்கோயில்களை தரிசித்துவிட்டு ஊர் திரும்ப எண்ணினார்.
அப்போது, ஒரு சிவந்த மேனியுடைய இளைஞர் அடிகளாரை அணுகி, “இங்கு வந்த காரியம் யாது?” என வினவினார். அதற்கு சுவாமிகள், “ஆலய தரிசனத்துக்காக” என்றார். “குமரகோட்டம் தரிசித்ததுண்டா?” என இளைஞர் கேட்டார். அதற்கு அடிகளார், “அது எங்குள்ளது” என்றார். அதற்கு இளைஞர் “என் பின்னே வருக” என கூறி அழைத்துச் சென்றார்.
குமரகோட்டம் திருக்கோயிலை காண்பித்து விட்டு அந்த இளைஞர் மறைந்து போனார். இது ஆறுமுகப் பெருமானின் திருவிளையாடல் என்று உணர்ந்த சுவாமிகள், கண்ணீர்ப் பெருக்குடன் குமரகோட்ட முருகப் பெருமானை வழிபட்டார். பின் பாம்பன் வந்தடைந்தார்.
தவம் புரிதல்
அடிகளார் முருகப் பெருமானை நேரில் கண்டு உபதேசம் பெற வேண்டும் என பேராவல் கொண்டார். 1894-ம் ஆண்டு பிரப்பன்வலசை எனும் ஊரை அடைந்தார். அங்கு உள்ள மயான பூமியில் தமது சீடர்களின் உதவியால் ஒரு சதுரக் குழி வெட்டச் செய்தார். அதை சுற்றி முள் வேலி, கொட்டகை அமைக்கச் செய்தார்.
அக்கொட்டகையின் உள் ஒரு கை செல்லுமாறு சிறிய சந்து அமைக்க செய்து, நாள் தோறும் ஒரு வேளை உப்பிலாத அன்னம் வைக்குமாறு சீடர்களுக்கு கூறினார். வைத்த உணவை தாம் எடுக்கவில்லையானால் அது முதல் வைக்க வேண்டாம் என கட்டளையிட்டார். பின்னர் அக்குழியில் அமர்ந்து தியான யோகத்தில் ஈடுபட்டார்.
முதல் ஐந்து நாள், பேய்கள் அவரைச் சூழ்ந்து தவத்திற்கு இடையூறு செய்தன. பின்னர் ஒரு ஆவி, அவரைத் தூக்க முயன்றது. சுவாமிகள் ஷடாக்ஷர மந்திரத்தை ஓங்கிக் கூறினார். அந்தப் பேய்கள் அவரை விட்டு நீங்கி மறைந்து போயின. அடிகளார் தவத்தை தொடர்ந்து புரிந்து வந்தார்.
ஏழாவது நாள் இரவில் இரு முனிவர்களுடன், முருகப் பெருமான் இளைய அடிகளார் உருவில் காட்சி அளித்தார். அவரிடம் ஒரு ரகசியமான சொல்லை உபதேசித்து விட்டு, அம்முனிவர்களுடன் மேற்கு திசை நோக்கி சென்று மறைந்து போனார்.
அச்சொல்லை சிந்தித்த வண்ணம் முப்பது நாள் தவ யோகத்தில் இருந்தார். முப்பத்தைந்தாம் நாள், “தவத்திலிருந்து எழுக” என்ற ஒலி கேட்டது. “முருகன் கூறினால் மட்டுமே எழுவேன்” என சுவாமிகள் கூறினார். “முருகன் கட்டளை! எழுக” என்று பதில் வந்தது. சுவாமிகள், அவ்விடத்தை வணங்கி விட்டு அங்கிருந்து நீங்கினார். பின் பாம்பன் வந்து சேர்ந்தார். அது முதல் வெள்ளை அங்கி அணியலானார்.
துறவு பூணுதல்
1895-ம் ஆண்டு கார்த்திகை மாதம் ஒரு நாள் தமது சீடர் ஒருவரிடம் தாம் துறவு பூண்டு செல்லும் முடிவைக் கூறினார். பின்னர், பாம்பனை விட்டு நீங்கி ஒரு படகு மூலம் வடகரை அடைந்தார். பின்னர் சென்னை செல்லும் எண்ணம் அவர் மனதில் உதித்தது. அவ்வாறே சென்னை வந்தடைந்தார்.
அங்கு ஒருவர் அடிகளாரை அணுகி அவரை வைத்தியநாத முதலித் தெருவில் உள்ள ஒரு இல்லத்தில் சேர்ப்பித்தார். அந்த இல்லத்தின் உரிமையாளரான ஓர் அம்மையார், தமது கனவில் அடிகளாரை உபசரிக்குமாறு கட்டளை பிறந்ததாக சுவாமிகளிடம் கூறி, அடிகளாருக்கு அன்னம் படைத்து உபசரித்தனர். சுவாமிகள் முருகப் பெருமானின் அருட்செயலை எண்ணி உவந்து இருந்தார்.
சென்னையில் அடிகளாருக்கு பல சீடர்கள் சேர்ந்தனர். பின்னர், சென்னையில் உள்ள திருத்தலங்களை தரிசித்து மகிழ்ந்தார். முருகன் பால் பல திருப்பாக்களைப் பாடி அருளினார்.
காவியுடை தரித்தல்
சுவாமிகள் காசி செல்ல பெருவிருப்பங்கொண்டு ஆடித்திங்கள் தொடக்கத்தில் காசி யாத்திரை மேற்கொண்டார். பெஜவாடா, கோதாவரி, விசாகப்பட்டினம், ஜகந்நாதம், கல்கத்தா, கயா முதலிய இடங்களுக்கு சென்று அங்குள்ள மூர்த்திகளை ஆறுமுக மூர்த்தியாகவே எண்ணி வழிபட்டார்.
பின்னர் காசி மாநகரம் சேர்ந்து அங்கு உள்ள குமரகுருபரர் திருமடத்தில் தங்கினார். அங்கிருந்த ஒரு வயோதிக அடியார் ஒருவர், சுவாமிகளுக்கு காவியுடை அளித்து, அதனை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டினார். இது குமரகுருபரருடைய ஆணை என்று அடிகளார் உட்கொண்டு அவரை வணங்கி அவர் அளித்த காவி உடையை ஏற்றுக் கொண்டார். அன்று முதல், சுவாமிகள் காவியுடையை மட்டுமே அணியலானார்.
பின்னர் சென்னை வந்தடைந்தார். அடிகளார் எந்நேரமும் ஆறுமுகப்பெருமானை தியானிப்பதும், அப் பரமனைப் போற்றி பாடல்கள் பாடுவதும், மற்ற நேரங்களில் திருத்தல யாத்திரை புரிவதுமாகவே வாழ்ந்து வந்தார்.
பின்னத்தூர் அடைதல்
சென்னையைச் சுற்றியுள்ள திருவொற்றியூர், பழவேற்காடு, ஆண்டார்குப்பம் போன்ற திருத்தலங்களை தரிசித்து விட்டு சிதம்பரம் அருகே உள்ள பின்னத்தூர் என்ற ஊரை அடைந்தார். அங்குள்ள அடியார்கள் சுவாமிகளை வணங்கி உபசரித்தனர். அங்கு சிவ நிந்தனையில் ஈடுபட்டு வந்த சில வைணவர்கள் மீது வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றார்.
வழக்கில் தோற்ற சிலர், ஒரு மந்திரவாதியின் மூலம் சுவாமிகளை கொல்லும் பொருட்டு ஒரு துர்த்தேவதையை ஏவினர். ஆனால், சுவாமிகளின் அருள் தன்மையினால், அத்தேவதை சுவாமிகளைக் கண்டு அஞ்சி தன்னை ஏவிய மந்திரவாதியை தாக்கிக் கொன்றது.
சுவாமிகளை கொல்ல பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், முருகன் அருளால் அடிகளாருக்கு எந்தத் தீங்கும் நேரவில்லை. பின்னர் பல ஆண்டுகள் கழித்து 1914-ம் ஆண்டு மீண்டும் சென்னை சேர்ந்தார்.
குமாரஸ்தவம் இயற்றல்
1918-ம் ஆண்டு தமக்கு ஏற்பட்ட வெப்பு நோய் விலகும் பொருட்டு குமாரஸ்தவம் எனும் அர்ச்சனை நூலை சுவாமிகள் இயற்றினார். அந்நோயும் நீங்கியது.
சுவாமிகள் திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர் சுவாமிகளுக்கு குரு பூஜை நடத்தப்படாமை குறித்து வருந்தினார். தியான யோகத்தில் அமர்ந்து, அருணகிரிநாதர் முக்தி பெற்ற தினம் ‘உத்தராயணம் கழிந்த ஆறாவது பௌர்ணமி’ என்று உணர்ந்தார். தமது சீடர்களுக்கு இது குறித்து அறிவித்து குரு பூஜை நடைபெறுமாறு செய்தார்.
மயூர வாகன சேவனம்
1923-ம் ஆண்டு, டிசம்பர் 27-ம் நாள், சுவாமிகள் சென்னை, தம்பு செட்டி தெரு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, ஒரு குதிரை வண்டியின் சக்கரம் அடிகளாரது இடது கணைக்காலின் மீது ஏற, கால் முறிவடைந்தது. அங்கிருந்த அன்பர்கள் சுவாமிகளை சென்னை பெரிய மருத்துவமனையில் சேர்த்தனர். இதை அறிந்த சுவாமிகளின் சீடர்கள் ஓடி வந்து பரிவுற்று வருந்தி அழுதனர்.
தலைமை மருத்துவரான ஆங்கிலேயர், சுவாமிகளின் கால் குணப்படாது என்று கூறினார். அது கேட்ட அன்பர்கள் மிகவும் வருந்தினர். பதினோராவது நாள் இரவு அடிகளார், படுக்கையில் படுத்த வண்ணம் முருகனை வேண்டினார். அப்போது முருகனின் வாகனமாகிய மயில்கள் வானத்தில் நடனம் புரிந்து வருவதைக் கண்டார். அப்பொழுது, முருகன் மயில்கள் மீது அமர்ந்து வரும் அரிய மயூரவாகன சேவனக்காட்சியை சுவாமிகள் கண்டு களித்தார்.
மறுநாள் இரவு அடிகளார் அருகில் முருகன் குழந்தை உருவில் படுத்திருப்பதை கண்டார். ‘முருகா’ என்று அழைத்தவுடன் இறைவன் மறைந்து போனார். முருகனின் திருநாமத்தை பன்னிரு முறை கூறி வணங்கினார். உடனே கால் கூடி விட்டது.
பெரிய மருத்துவரான ஆங்கிலேயர், இவரை சோதித்து இது தெய்வச் செயல் என்று அறிந்து அடிகளாரை வணங்கினார். இரு வாரங்களில் சுவாமிகள் முழுமையாக குணமடைந்து புதுப்பாக்கத்தில் உள்ள அன்பர் ஒருவர் வீட்டில் தங்கினார். பின் சுவாமிகளின் வேண்டுகோளின்படி, அடியார்கள் ஒவ்வோர் ஆண்டும் மயூர வாகன சேவன விழாவை நடத்தி வருகின்றார்கள்.
குமாரசுவாமியம்
சுவாமிகள் 1192 செய்யுள்கள் கொண்ட ‘குமாரசுவாமியம்’ என்னும் நூலை இயற்றினார். ஆறுமுருகப் பெருமானைப் போற்றும் பாடல்களின் தொகை ஆறு என்ற எண்ணுடையதாக இருக்க வேண்டும் என்று எண்ணிய அடிகளார் பாடிய பாடல்களின் மொத்த எண்ணிக்கை 6,666.
பாம்பன் சுவாமிகள் பாடியவை:
குமரகுருதாச சுவாமிகள் பாடல் – 1266
ஸ்ரீமத் குமார சுவாமியம் (குமார நாயகன் திருவிளையாடல்) – 1192
திருவலங்கற்றிரட்டு(பல சந்தப் பரிமளம்) – 1135
திருப்பா (திட்ப உரை) – 1101
காசியாத்திரை(வடநாட்டு யாத்திரை அனுபவம்) – 608
சிறு நூற்றிரட்டு (சண்முக கவசம் முதலிய பத்து) – 258
சீவயாதனா வியாசம் (சீவகாருண்யம் – புலால் மறுப்பு) – 235
பரிபூரணானந்த போதம் (சிவசூரியப் பிரகாசம் உரை) – 230
செக்கர் வேள் செம்மாப்பு – 198
செக்கர் வேள் இறுமாப்பு – 64
தகராலய ரகசியம் (சதானந்த சாகர உரை) – 117
குமரவேள் பதிற்றுப் பத்தந்தாதி – 100
சேந்தன் செந்தமிழ் (வடமொழி கலவாத் தனித் தமிழ்) – 50
குமாரஸ்தவம் – 44
தென்னாட்டுத் திருத்தலதரிசனம் (கட்டளைக் கலித்துறை) – 35
பத்துப் பிரபந்தம் (சித்திரக் கவிகள்) – 30
ஆனந்தக்களிப்பு – 30
சமாதான சங்கீதம் – 1
சண்முக சகச்சிர நாமார்ச்சனை – 2
ஆக மொத்தம் பாடல்கள்- 6,666.
உரைநடை நூல்கள்
சுவாமிகள் பாடல்கள் இயற்றுவதோடு மட்டுமல்லாமல், பல உரைநடை நூல்களையும் இயற்றினார். வேத வியாசம், சுப்ரமண்ய வியாசம், குரு சீட சம்பவ வரலாற்று வியாசம், செவியறிவுறூவு போன்ற நூல்களை எழுதினார்.
முக்தியடைதல்
தாம் முக்தி அடையும் காலம் வந்துவிட்டதை உணர்ந்த சுவாமிகள், தமது சீடர்களிடம் திருவான்மியூரில் நிலம் வாங்குமாறு கூறினார். அவ்வாறே நிலம் வாங்கப்பட்டது. 1929-ம் ஆண்டு, ஒரு நாள் சுவாமிகள் தமது சீடர்களை அழைத்து, “மயூர வாகன சேவன விழாவை தொடர்ந்து நடத்தி வாருங்கள். நான் சமாதி அடைந்ததும் என்னுடைய உடலை திருவான்மியூரில் சேர்த்து விடுங்கள்” என்று கட்டளையிட்டார்.
30-5-1929 வியாழக்கிழமை, காலை 7.15 மணிக்கு, சுவாமிகள் பிராண வாயுவை உள்ளிழுத்து மகா சமாதியில் ஆழ்ந்தனர். இதை அறிந்த அனபர்கள் பலர் சுவாமிகளை வந்து தரிசித்துச் சென்றனர். மறுநாள், சுவாமிகளின் திருமேனியை திருவான்மியூரில் சேர்த்து சமாதிக் கோவில் அமைத்தனர்.
சுவாமிகளின் சமாதிக்கோவில் மிகவும் மகிமை வாய்ந்தது. அங்கு சென்று வாழ்வில் வளம் பெற்றோர் பலர். திருவான்மியூர் பேருந்து நிலையத்திலிருந்து 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இத்திருக்கோவில். அனைவரும் தரிசித்து திருவருள் பெறுவோம்.
குறிப்பு:
திரு. சீனிவாசன் ஜானகிராமன், சென்னையில் வசிக்கும் மென்பொருளாளர்; ஆன்மிக ஆர்வலர்.
இக்கட்டுரை, அவரது அடியார்.காம் என்ற தளத்திலிருந்து மீள்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வில்வம் !!!

சிவ அடையாலம்களில் பிரசாதமாக வரும் மற்றவை வில்வம் .
இதை ஏன் சிவ பெருமானுக்கு மட்டும் உரியது என்றும் ,பிடித்தது என்றும் தெரிந்து கொள்வோம் .
விஸ்வம் என்றால் புறத்தில் நிறைந்து இருப்பது என்று பொருள் .அதாவுது வெளியே எங்கும் நிறைந்து நிற்பது ,உதாரணம் விஸ்வ நாதம் --எல்லாவற்றிலும் நிறைந்த நாதம் .
வில்வம் என்பது அகத்தில் நிறைந்து நிற்பது என்று பொருள் .அதாவது உள்ளே நிறைந்து நிற்பது என்று பொருள் .
நம்முடைய பூமியில் பல விதமா தாவிரம்கள் உள்ளது என்று நாம் அறிவோம்
இங்கே வில்வ மரத்தை ஏன் பெருமனருக்கு தேர்வு செய்தார்கள் .
வில்வ மரத்தை பற்றி புரிந்தால் ரகசியம் புரியும் .
வில்வமரம் நெருப்பு அம்சம்(பனி கட்டி ) உடையது .இதில் உள்ள ரசாயனம் உடலில் உள்ள நச்சு பொருளை அழிக்கும் தன்மைகளை உடையது .
இதை வேறு விதமாக கவனிக்க வேண்டும் .
சிவ மந்திரம் சொல்லும்பொழுது உடல் சூடாகும் ஆன்மா விழித்து எழும்
இப்படி நடக்கும் பொழுது உடலை சீர் செய்ய வில்வம் இலை உதவி செய்யும் .
சிவ பெருமான் தொழிலே தவறான செயல்களை அழிப்பது தான் .
நடராஜ தத்துவமும் இதைத்தான் செய்கிறது .அவருடைய தியானம் அதற்கு சக்தி பெறும் செயல் .
கருவறையில் சொல்ல படும் மந்திரத்தால் வெப்பம் மிகும் ,இதனால் உடல் சீர் நிலை மாறும் இதை சரி செய்ய வில்வ இலையால் முடியும் .
ஆம் வில்வத்தில் உள்ள வெப்பம் பனிமலையில் உள்ள வெப்பம் .
சக்தி தேவி முழுமையாக நெருப்பு சிவபெருமான் மறைமுக நெருப்பு ,
சக்தி தேவி வெளி நெருப்பு சிவ பெருமான் உள்ளுக்குள் நெருப்பு .
பனிக்கட்டிகளை கைகளில் வைத்து இருந்தாலும் உள்ளே வெப்பம் உண்டாகும் நெருப்பு கதிர்களை கைகளில் பிடித்து கொண்டால் வெளியே
வெப்பம் உண்டாகும் .
சித்தர்கள் வில்வ மரத்தை பற்றி சொல்லும் சிவ வழிபாடு செய்த அசுரர்கள் சைவர்களாக மாறி சிவகதி அடைந்து சதுர மலை தலத்தில் வில்வமாக மாறி பெருமானுக்கு சேவை செய்வதாய் சொல்கிறார்கள் .
இவர்களை வழிபாடு செய்து விட்டு இலைகளை பறிக்க சொல்லி உள்ளார்கள்
சில விதி முறைகள் வில்வ இலைகளை பறிக்க உண்டு .
பௌர்ணமி /அம்மாவாசை / அஷ்டமி அன்று பறிக்ககூடாது.முன் நாட்களில்
பறித்து கொள்ள வேண்டும் .
எங்கு வில்வமரம் அதிகம் உள்ளதோ அங்கு பனிமலை தன்மைகள் உண்டாகும் .
108 வில்வமரத்தை நட்டு வைத்து அவைகளை வளர்த்தல் சிவ ஆசிகளை எளிமையாக பெறமுடியும் .
ஒரு நாளைக்கு ஒரு இலை என்று 48 வது நாளில் 48 (எண்ணிக்கை ) இலைகளை உன்ன உடலில் உள்ள அக நோய்கள் நீங்கும் என்று அகத்திய
பெருமான் சொல்கிறார் .
மிகுந்த குளிர் தன்மைகளை உடைய பெருமாளான நாராயணர்
ஸ்ரீ ரெங்கத்தில் தண்ணீரின் நடுவில் படுத்து இருக்கும் பொழுது வெப்பம் தேவை என வில்வ மரத்தில் அடியில் படுத்து இருக்கிறார் .
ஆம் இங்கே வில்வம் தல விருட்சம் என்று புரிந்து கொள்வோம்
http://dinesh3737.blogspot.in/


போகர் பஞ்ச கல்பம்!!!

பகலிலும் நட்சத்திரங்களைப் பார்க்கும் கண்ணொளி வழங்கும் சித்தர்களின் பஞ்ச கல்பம்
இக்காலத்தில் பல இளம் குழந்தைகளும் கண்ணுக்கு கண்ணாடி அணிந்து கொண்டும், பல பெரியவர்கள் வயதானால் கண்ணாடி அணிந்து கொள்வதையும், கண்ணில் அறுவை சிகிச்சை செய்து கொள்வதையும் கண்டால் சித்தர் கண்ட தத்துவங்கள் எவ்வளவு வீணடிக்கப்படுகின்றன என்று வருந்தியிருக்கிறேன். கண்ணில் அறுவை சிகிச்சை செய்வதால் பிராணன் உலவும் இடமான கண்ணில் உள்ள பிராண சக்தி வீணடிக்கப்பட்டு ஆயுள் குறைகிறது. மாறாக கண்ணுக்கு வலிமை அளிக்கும் சித்த மருந்துகளைக் கையாள்வதால் கண்ணில் உள்ள பிராணன் வலுவாவதுடன் ஆயுளும் நீட்டிக்கப்படும்.
கண் பிராணன் நின்று உலவும் இடம், மேலும் இடது கண்ணில் தச(பத்து) நாடிகளில் ஒன்றான காந்தாரி என்ற நாடியும், வலது கண்ணில் புருடன் என்ற நாடியும் நின்றியங்குகிறது. நம் உடலை தச தேசம் என்று கூறுவார்கள். ஏனெனில் இது தச நாடிகளால் இயங்குவது. உயிர் இறப்பிற்கு பின்னும் இயங்கும் விதத்தைப் பற்றி வராகி மாலை, தச தேச விசால சுவடி இவற்றுள் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும்,நம் உடலில் உள்ள எழுபத்திரண்டாயிரம் நாடிகளில், இரண்டு கண்களிலும் கண்ணுக்கு இரண்டாயிரம் நாடிகள் வீதம் நான்காயிரம் நாடிகள் ஓடுகின்றன. கண்களில் போடும் மருந்து கண்ணிலுள்ள நாடிகள் மூலம், தச நாடிகளிலும் வியாபித்து உடலெங்கும் சில வினாடிகளில் பரவி விஷம், வாதம், சன்னி, பல கர்ம வியாதிகள், தோல் வியாதிகள், மனோ வியாதிகள் இன்னும் பல வியாதிகள் முதலானவைகளைக் கூட கண்டித்து எறியும் தன்மை உள்ளது. இப்படிக் கண்களில் பிரயோகிக்கும் மருந்தை கலிக்கம் என்பார்கள்.
இப்படிக் கண்ணில் போடும் மருந்து கண்ணுக்கு பார்வை அளிப்பதுடன் மேலும் பற்பல வியாதிகளை குணமாக்கும் வல்லமையும் பெற்று விளங்குகின்றன. ஏனெனில் அவை அளப்பரிய காந்த சக்தியுடன் செயல்படுகின்றன.
இப்போது தலையில் போடும் மருந்தால் கண்ணுக்கு வல்லமை அளிப்பதைப் பார்ப்போம். பஞ்ச கல்பம் என்றழைக்கப்படும் இது சித்தர்கள் கண்ட மருந்து. சமீபத்தில் இருந்த சித்தர் இராமலிங்க வள்ளலாரும் இந்த மருந்தை மிகப் பெருமையாகக் கூறியுள்ளார். இது தலையில் உள்ள சஹஸ்ராரச் சக்கரத்திற்கு வலிமையளிப்பதுடன், நோய்கள் நம்மை அணுகாமல் காக்கும் வல்லமையுள்ளது.
பஞ்ச கல்பம் ஐந்து வகையான மூலப் பொருள்களைக் கலந்து தயாரிப்பதால் இந்தப் பெயரில் அழைக்கப்படுகிறது.
கீழ்க்கண்ட சரக்குகளை எடுத்துக் கொள்ளவும்.
1)வெள்ளை மிளகு (சுத்தி செய்தது)---150கிராம்
2)கடுக்காய்த் தோல் (சுத்தி செய்தது)-125கிராம்
3)வேப்பம் பருப்பு உலர்ந்தது---------100கிராம்
4)நெல்லி வற்றல்--------------------75கிராம்
5)கஸ்தூரி மஞ்சள்-------------------50கிராம்
மேற்கண்ட ஐந்து சரக்குகளையும் நன்றாகப் பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி பொடியை சிறிது பால் விட்டு அரைத்து 50 மிலி பசுவின் பாலில் கலந்து காய்ச்ச வேண்டும். பஞ்ச கல்பம் தேய்த்து குளித்து வந்தால் சிறிதும் நோய்களுக்கு இடமில்லாமல் வாழலாம்.


Thursday, May 14, 2015

திக்குவாய் தோஷம் சரியாக மந்திர தந்திரம் !!!

1. உளுந்து 10 கிராம் ,கொள்ளு 10 கிராம் எடுத்து வெள்ளைத்துணியில் முடிந்து தலையணைக்கடியில் வைத்து 90 நாட்கள் உறங்கி வர வேண்டும் 90 நாள் கழிந்ததும் அதை கோவில் குளங்களில் போட்டு விடவும்.
2. செம்புத்தட்டில் தேன் ஊற்றி அதில் வலது கை மோதிர விரல் கொண்டு ''ஐம்'' என்று எழுதி பின் கீழ்க்கண்ட மந்திரத்தை குறைந்தது 27 தடவை ஜெபித்து அந்த தேனை அவர்கள் நாக்கில் தடவி விட்டு வரலாம்.
இதை வளர்பிறை புதன்கிழமை புதன் ஹோரையில் தொடங்கவும். பின் தினமோ அல்லது புதன்கிழமைகளிலோ செய்து வந்தால் தோஷத்தில் இருந்து விடுபட முடியும் என்பது நம்பிக்கை. மந்திரம் 1.ஓம் ஐம் வத வத வாக்வாதினி நமஹ. இம்மந்திரத்தை முறை108 ஜபித்து வந்தால் திக்குவாய் சரியாகும்

Monday, May 11, 2015

குளிக்கும் பொழுது சொல்ல வேண்டிய சுலோகம்!

குளிக்கும் பொழுது சொல்ல வேண்டிய சுலோகம்!
வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
இன்றைய தினம் முதல் ஒவ்வொரு நாளும், இனிய காலை பொழுதாக விடியட்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்!
நிறைய படிக்கும் எண்ணம் உள்ள மனதிற்கு, புரிந்துகொகிற வாய்ப்புகள் நிறையவே கிடைக்கும். சமீபத்தில், அகத்தியர் பற்றி படித்த பொழுது , அவர் காட்டிய ஒரு எளிய வழியை தெரிந்து கொள்கிற ஒரு வாய்ப்பு கிடைத்தது. யாம், பெற்ற இன்பம், இவ்வையகம் பெறட்டுமே என்கிற எண்ணத்தில் இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
"சித்தன் அருளில்" "இனிய இல்லற வாழ்விற்கு" என்று ஒரு தொகுப்பு வந்தவுடன், அட! இத்தனை எளிய வழிகள் இருக்கிறதா என்று, படித்து, நடைமுறைபடுத்தி அதன் பயனை உணர்ந்த நான், மேலும் தேடலானேன். அப்பொழுது குளிக்கும் பொழுது சொல்லவேண்டிய ஒரு ஸ்லோகத்தைப் பற்றி அகத்தியப் பெருமான் மிகப் பெருமையாக கூறியதை கீழே தருகிறேன்.
அகமர்ஷணம் என்கிற ஒரு தொகுப்பிலிருந்து, ஒரு ஸ்லோகத்தை அவர் கூறி, இதை குளிக்கும் பொழுது குறைந்தது மூன்று முறை ஜெபித்து வந்தால், "பிரம்ம ஞானம்" ஏற்படும் என்று கூறி இருந்தார். உடனேயே ஒரு அவா. அதை தமிழில், பிரிண்ட் போட்டு, குளிக்கும் அறையில் ஒட்டிவிட்டேன். யாரெல்லாம் அதை பார்த்து விரும்பி சொல்கிறார்களோ, அவர்களுக்கு அதன் பலம் கிடைக்கட்டும் என்கிற எண்ணம் தான். குழந்தைகளை பொருத்தவரை, சிறு வயதிலேயே, மந்திரம் மனதுள் ஏறிவிட்டால், அவர்கள் மனம் எளிதில் செம்மைப்படும். நம்மை போன்றவர்களுக்கு, இப்பொழுதேனும், ஏறினால், நம் வாழ்க்கையை, சமன்படுத்திக் கொள்ளலாம். ஓரளவுக்கு, கவனமும், ஆன்மீகமும் நம்முள் புகுத்துவிட்டால், நாம் தேடுகிற நிம்மதியை, இருக்கும் இடத்திலேயே, நல்ல விஷயங்களை செய்து, கூறி நன்மை அடைந்துவிடலாம்.
"ஆர்த்ரம் ஜ்வலதி ஜ்யோதிர் அஹமஸ்மி
ஜ்யோதிர் ஜ்வலதி ப்ரம்மா அஹமஸ்மி
யோ அஹமஸ்மி ப்ரம்மா அஹமஸ்மி
அஹமஸ்மி ப்ரம்மா அஹமஸ்மி
அஹமே வாஹம் மாம் ஜுஹோமி ஸ்வாஹாஹா"
இதை, நகல் எடுத்து, குளிக்கும் அறையில் ஒட்டி வைத்து, வீட்டில் உள்ளவர்கள் அனைவரும், பயன்பெற உபயோகித்து, அகத்தியர் அருளை பெற்றுக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறேன்.
மந்திரம் என்பது, மனதை செம்மைபடுத்தி அதன் திறனை, நமக்கு உணர்த்துவதர்க்காகத்தான். அதை கூறும் பொழுது ஏற்படுகிற அதிர்வலைகள், நமது ஆதார சக்கரங்களை தட்டி எழுப்பி, உடலுக்கு உரத்தை தந்து, புத்தியை தெளிவுபடுத்தும்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகதீசாய நமஹ!

Saturday, May 9, 2015

அறிவுரைகள்

இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள்(அறிவுரை) இடது கையால் ஆசனம் போட்டால் ஆயுள் குறைவு; இடது கையால் எண்ணெய் தேய்த்துக் கொண்டால் புத்திர நாசம்; இடது கையால் சாப்பாடு போட்டுக் கொண்டால் செல்வம் அழியும்; இடது கையால் படுக்கையை போட்டால் இருப்பிடம் சேதமாகும்.(அறிவுரை) ஜோதிடர், குரு, நோயாளி, கர்ப்பிணி, மருத்துவர், சந்நியாசி முதலியவர்களுக்கு, அவர்களுடைய ஆபத்துக் காலத்தில் கண்டிப்பாக உதவ வேண்டும். இது மிகவும் புண்ணியம்.(அறிவுரை) சகோதரன் அல்லது சகோதரி தாழ்ந்த நிலையிலிருந்தால், அவர்களுக்கு உதவ வேண்டும்.(அறிவுரை) அண்ணியை தினசரி வணங்க வேண்டும்.(அறிவுரை) பசு, தேர், நெய்குடம், அரச மரம், வில்வம், அரசுடன் சேர்ந்த வேம்பு இவைகள் எதிரில் குறுக்கிட்டால்,வலது புறம் சுற்றி செல்ல வேண்டும்.(அறிவுரை) குடும்பஸ்தன் ஒரு ஆடை மட்டும் அணிந்து உணவு உட்கொள்ள கூடாது. ஒரு கையை தரையில் ஊன்றி சாப்பிடக் கூடாது. துணியில்லாமல் குளிக்கக் கூடாது. சூரியனுக்கு எதிரில் மலஜலம் கழிக்கக் கூடாது.(அறிவுரை) கன்றுக் குட்டியின் கயிறை தாண்டக் கூடாது. மழை பெய்யும் போது ஓடக் கூடாது. தண்ணீரில் தன் உருவத்தை பார்க்கக் கூடாது.(அறிவுரை) நெருப்பை வாயால் ஊதக் கூடாது.(அறிவுரை) கிழக்கு, மேற்கு முகமாக உட்கார்ந்து மலஜலம் கழிக்கக் கூடாது.(அறிவுரை) எதிர்பாராத விதத்திலோ, தவறு என்று தெரியாமலோ, பெண்கள் கற்பை இழந்து விட்டால், புண்ணிய நதியில், 18 முறை மூழ்கிக் குளித்தால் தோஷம் நீங்கும்.(அறிவுரை) திருமணம் ஆகாமலே ஒரு பெண்ணுடன் வாழ்பவனை சுபகாரியங்களில்முன்னிறுத்தக் கூடாது.(அறிவுரை) சாப்பிடும் போது, முதலில் இனிப்பு, உவர்ப்பு, புளிப்பு, கசப்பு பதார்த்தங்களை வரிசையாக சாப்பிட்டு, பின் நீர் அருந்த வேண்டும்.(அறிவுரை) சாப்பிடும் போது தவிர, மற்ற நேரத்தில் இடது கையால் தண்ணீர் அருந்தக் கூடாது.(அறிவுரை) கோவணமின்றி, வீட்டின் நிலைப்படியை தாண்டக் கூடாது.(அறிவுரை) இருட்டில் சாப்பிடக் கூடாது. சாப்பிடும் போது விளக்கு அணைந்து விட்டால், சூரியனை தியானம் செய்து, மீண்டும் விளக்கேற்றி விட்டு சாப்பிட வேண்டும்.(அறிவுரை)சாப்பிட்டவுடன் குடும்பஸ்தன் வெற்றிலை போட வேண்டும். வெற்றிலை நுனியில் பாவமும், முனையில் நோயும், நரம்பில் புத்திக் குறைவும் உள்ளதால் இவற்றை கிள்ளி எறிந்து விட வேண்டும்.(அறிவுரை)சுண்ணாம்பு தடவாமல் வெற்றிலையை வெறுமனேயோ, வெறும் பாக்கை மட்டுமோ போடக் கூடாது. வெற்றிலையின் பின்பக்கம் தான் சுண்ணாம்பு தடவ வேண்டும்.(அறிவுரை) மனைவி, கணவனுக்கு வெற்றிலை மடித்துக் கொடுக்கலாமே தவிர, கணவன், மனைவிக்கும், மகன், தாய்க்கும், பெண், தந்தைக்கும் மடித்துத் தரக் கூடாது.(அறிவுரை) குரு, ஜோதிடர், வைத்தியர், சகோதரி, ஆலயம் இங்கேயெல்லாம் செல்லும் போது வெறுங்கையுடன் செல்லக் கூடாது.(அறிவுரை) தலையையோ, உடம்பையோ வலக்கையினால் மட்டும் சொறிய வேண்டும். இரண்டு கைகளாலும் சொறியக் கூடாது.(அறிவுரை) இரு கைகளாலும் தலைக்கு எண்ணெய் தேய்க்க கூடாது. வலது உள்ளங்கையில் எண்ணெய் ஊற்றி தலையில் தேய்க்க வேண்டும்.(அறிவுரை) தலைவாசலுக்கு நேரே கட்டில் போட்டோ, தரையிலோ படுக்கக் கூடாது.(அறிவுரை) வானவில்லை பிறருக்கு காட்டக் கூடாது.(அறிவுரை) மயிர், சாம்பல், எலும்பு, மண்டையோடு, பஞ்சு, உமி, ஒட்டாஞ்சில்லி இவற்றின் மீது நிற்கக் கூடாது.(அறிவுரை) பேசும் போது துரும்பைக் கிள்ளிப் போடக் கூடாது.(அறிவுரை) ஈரக்காலுடன் படுக்கக் கூடாது.(அறிவுரை) வடக்கிலும், கோணத் திசைகளிலும் தலை வைத்து படுக்கக் கூடாது. நடக்கும் போது முடியை உலர்த்த கூடாது.(அறிவுரை) ஒரு காலால், இன்னொரு காலை தேய்த்துக் கழுவக் கூடாது.(அறிவுரை) தீயுள்ள பொருட்களை தரை மேல் போட்டு காலால் தேய்க்கக் கூடாது. பூமாதேவியின் சாபம் ஏற்பட்டு, பூமி, மனை கிடைக்காமல் போய் விடும்.(அறிவுரை) பகைவன், அவனது நண்பர்கள், கள்வன், கெட்டவன், பிறர் மனைவி இவர்களுடன் உறவு கொள்ளக் கூடாது.(அறிவுரை) பெற்ற தாய் சாபம், செய்நன்றி கொல்லுதல், பிறன் மனைவி கூடுதல் இவை மூன்றுமே பிராயச்சித்தமேயில்லாமல் அனுபவித்தே தீர வேண்டிய பாவங்கள்.(அறிவுரை) அங்கஹீனர்கள், ஆறு விரல் உடையவர்கள், கல்வியில்லாதவர்கள், முதியோர், வறுமையிலுள்ளவர்கள் இவர்களது குறையை குத்திக் காட்டிப் பேசக் கூடாது.(அறிவுரை) ரிஷி, குரு, ஜோதிடர், புரோகிதர், குடும்ப வைத்தியர், மகான்கள், கெட்ட ஸ்திரியின் நடத்தை இவர்களைப் பற்றி வீண் ஆராய்ச்சியில் ஈடுபடவோ, அவர்களிடம் உள்ள தவறுகளை விளம்பரப்படுத்துவதோ கூடாது.(அறிவுரை) பிறர் தரித்த உடைகள், செருப்பு, மாலை, படுக்கை இவற்றை நாம் உபயோகிக்கக் கூடாது.(அறிவுரை) பிணப்புகை, இளவெயில், தீபநிழல் இவை நம் மீது படக் கூடாது.(அறிவுரை) பசுமாட்டை காலால் உதைப்பது, அடிப்பது, தீனி போடாமலிருப்பது பாவம்.(அறிவுரை) பசு மாட்டை, "கோமாதா வாக எண்ணி, சகல தேவர்களையும் திருப்திப்பட வைப்பதற்கு, அம்மாட்டுக்கு, புல், தவிடு, தண்ணீர், புண்ணாக்கு, அகத்திக்கீரை கொடுப்பது புண்ணியம்.(அறிவுரை) தூங்குபவரை திடீரென்று எழுப்பக் கூடாது; தூங்குபவரை உற்றுப் பார்க்கக் கூடாது.(அறிவுரை) பகலில் உறங்குவது, உடலுறவு கொள்வது கூடாது.(அறிவுரை) தலை, முகம் இவற்றின் முடியை காரணம் இல்லாமல் வளர்க்கக் கூடாது.(அறிவுரை) அண்ணன் - தம்பி; அக்காள் - தங்கை; ஆசிரியர் - மாணவர்; கணவர் - மனைவி; குழந்தை- தாய்; பசு - கன்று இவர்களுக்கு இடையில் செல்லக் கூடாது.(அறிவுரை) வீட்டுக்குள் நுழையும் போது, தலைவாசல் வழியாகத் தான் நுழைய வேண்டும்.(அறிவுரை) நம்மை ஒருவர் கேட்காதவரையில்,நாம் அவருக்கு ஆலோசனை கூறக் கூடாது.

Saturday, May 2, 2015

பஞ்சாட்சரம் !!!

ஸ்தூல பஞ்சாட்சரம் - நமசிவய
சூட்சும பஞ்சாட்சரம் - சிவயநம
காரணபஞ்சாட்சரம் - சிவ சிவ
மந்திர சாஸ்திரம் மிகவும் நுட்பமான செயல் திட்ட வரையறைகளை கொண்ட சூட்சுமமானது. அதில் பல்வேறு தேவதா ரூபங்களின் வடிவங்கள் சப்த வடிவில் அடங்கியுள்ளது. அதை சப்த பிரம்மம் என்றே வழங்குவார்கள். ஸ்தூல சாரம், சூட்சும சாரம், காரண சாரம் என்று மூன்று வித தேக அமைப்புகள் நமக்கு உண்டு. ஸ்தூல சாரமான இந்த பரு உடலுக்குள் சூட்சும சாரமும் அதற்குள் காரண சாரமும் அடங்கியுள்ளது. ஒரு மந்திரத்தை உச்சரிப்பதற்கு முன்பு பலவித துவக்கநிலை செயல்பாடுகள் அவசியமாகின்றது. மந்திரங்கள் பஞ்சபூதங்களோடு தொடர்பு படுத்தபடுகின்றன. பஞ்சாட்சர மந்திரத்தின் சிறப்புகளை காணலாம்.
ஸ்தூல பஞ்சாட்சரம்
“நமசிவய” என்னும் ஸ்தூல பஞ்சாட்சரம் ஓம்கார பிரணவத்தோடு சேர்த்து “ஓம் நமசிவய” என்று உச்சரிப்பதே மரபாகும். சித்தர்கள் இம் மந்திரத்தை பஞ்சபூதங்களின் ஒருமித்த வெளிப்பாடகவே உணர்ந்தனர். இம் மந்திரத்தில் சித்தி அடைவதால் பஞ்சபூதங்கள் கட்டுப்படுவதொடு ஐம்பொறிகளும் நமது கட்டுக்குள் அடங்கி நிற்கும். பஞ்சபூதங்களில் இம் மந்திரத்தின் ஆளும் தன்மை
ந – நிலத்தைக் குறிக்கிறது,
ம – நீரைக் குறிக்கிறது,
சி – நெருப்பைக் குறிக்கிறது,
வ – காற்றைக் குறிக்கிறது,
ய – ஆகாயத்தைக் குறிக்கிறது.
சிவ மகாபுராணத்தில் வாயு சம்ஹிதையில் உள்ள உத்தர பாகத்தின் ஆரம்பத்தில் ஐந்து அட்சரங்களும் அதற்கு உரிய நிறங்களும், ரிஷிகளும், சிவபெருமானுடைய எந்தெந்த முகத்துக்கு எந்தெந்த அட்சரங்கள் என்று தெளிவாக விளக்கப்பட்டிருகிறது.
ந - கிழக்கு நோக்கிய முகத்திற்கு உரியது, மஞ்சள் நிறம், கௌதம மகரிஷி
ம – தெற்க்கு நோக்கிய முகத்திற்கு உரியது, கருப்பு நிறம், அத்திரி மகரிஷி
சி – மேற்க்கு நோக்கிய முகத்திற்கு உரியது, புகையின் நிறம், விஸ்வாமித்ர மகரிஷி
வ – வடக்கு நோக்கிய முகத்திற்கு உரியது, பொன்னிறம், ஆங்கீரஸ மகரிஷி
ய –மேல் நோக்கிய திருமுகத்திற்கு உரியது, சிவந்த நிறம், பரத்வாஜ மகரிஷி
காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமசிவாயவே
என்று திருஞானசம்பந்தரின் நமசிவாய பதிகம் உள்ளம் உருக நமசிவய மந்திரத்தின் பெருமையை உயிரும் உருக விவரிக்கிறது.
சூட்சும பஞ்சாட்சரம்
“சிவய நம” என்பது சூட்சும பஞ்சாட்சரம் ஆகும். இம் மந்திரம் பிரணவத்தோடு சேர்த்து “ஓம் சிவய நம” என்றே உச்சரிக்க வேண்டும். சிவபெருமானின் ஐந்து முகங்களில் இருந்து ஓம் எனும் பிரணவம் உதித்தது. வாமதேவம் வடக்கு முகத்திலிருந்து ‘அ’ காரமும், சத்யோஜாதம் மேற்க்கு முகத்திலிருந்து ‘உ’ காரமும், அகோரம் தெற்கு முகத்திலிருந்து ‘ம’ காரமும், தத்புருஷம் கிழக்கு முகத்திலிருந்து ‘பிந்து’ எனப்படும் நாதத்தின் தொடக்கமும், ஈசானம் மேல் நோக்கிய முகத்திலிருந்து நாதமான சப்த ரூபமும் தோன்றின. இவ்வாறு ஓம் என்ற பிரணவத்தோடு சிவய நம சேர்ந்து முழுமையான மந்திரஸ்வரூபம் உருவானது.
“அவ்வும், உவ்வும், மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே”
என்று சிவ வாக்கியர் மிக அழகாக கூறுகிறார்.
“சிவய நம என்று சிந்தித்திருப்போர்க்கு அபாயம் ஒரு நாளுமில்லையே”
என்ற உத்திரவாதத்தை மிகவும் உறுதியாக தருகிறார் ஔவையார்.
“சித்தம் ஒருங்கிச் சிவய நம என்று இருக்கினல்லால்
அத்தன் அருள் பெறலாமோ அறிவிலாப் பேதை நெஞ்சே...”
என்று திருநாவுக்கரச பெருமான் தமது நெஞ்சத்திற்கே எடுத்து சொல்கிறார்.
“திருவாய் பொலியச் சிவய நம என்று நீறணிந்தேன்
தருவாய் சிவகதி நீ பாதிரிப் புலியூர் அரனே”
என்று உளமுருகப் பிரார்த்திக்கிறார் மாணிக்க வாசக! என்று சிவபெருமானாலேயே அழைக்கப்பட்ட திருவாதவூரார்.
காரண பஞ்சாட்சரம்
“சிவ சிவ என்றிடத் தீவினை மாலும்
சிவ சிவ என்கிலார் தீவினையாளர்
சிவ சிவ என்றிடத் தேவருமாவர்
சிவ சிவ என்னச் சிவ கதி தானே”
என்று திருமந்திரம் சிவ சிவ என்பதன் மகத்துவத்தை பற்றி சொல்கிறது. அது காரணப் பஞ்சாட்சரம் என வழங்கப்படும்.சிவ சிவ எனும் மந்திரம் நமது காரண சாரத்தில் உள்ள பிறள் பதிவுகளை நீக்க வல்லது என்பது ஞானியாரின் அழ்ந்த கருத்து. இந்த மந்திரத்தில் சாதாரண உலகின் ஆசாபாசங்களுக்கு அப்பாற்பட்ட, ஞான நிலைக்கு ஒருவரை இட்டு செல்லக்கூடியது. ஆகையால் இந்த மந்திரத்தின் மூலமாக லவ்கீக லாபங்களை எதிர் பார்க்க முடியாது. அதாவது உலகியல் குறிகோள்களை பூர்த்தி செய்த ஒருவருக்கு (துறவு நெறி பூண்டவர்களும், மிக வயதானவர்களும்) இந்த மந்திரம் பொருத்தமானது.
இல்லற வாழ்வில் உள்ளவர்கள் இம் மந்திரத்தோடு பிரணவத்தை சேர்த்து “ஓம் சிவ சிவ ஓம்” என்று கலையும், மாலையும் 108 முறை ஜபிக்கலாம்.
http://vedammantram.blogspot.in/


திருப்பம் தரும் திருமால் மந்திரம் !!!


நல்ல திருப்பங்களை தந்தருளும் திருப்பதி திருமலை திருவேங்கடவனின் அரிய மந்திரமாகும்.
இதை ஒரு வளர்பிறை திங்கட்கிழமையன்றோ, அல்லது ஒரு திருவோண நட்சத்திரத்தன்றோ அல்லது வளர்பிறை ஏகாதசியன்றோ அதிகாலையில் ஆரம்பித்து செய்ய வேண்டும்.
முடிந்தவர்கள் நிச்சயம் ஒரு குரு முகமாக உபதேசம் பெற்று செய்வது உத்தமம்.
முதலில் பிள்ளையாரையும், குல தேவதையையும் மனதார வணங்கி விட்டு இந்த மந்திரத்தை துளசி மணி மாலை கொண்டு தினமும் காலையில் 108 முறை ஜபம் செய்து வர வேண்டும்.
ஓம் ஹ்ராம் ஹ்ரீம் க்லீம்
ஓம் நமோ ஸ்ரீ வேங்கடேசாய நமஹ
திருமலை பெருமாள் திருவருளை பெறம் பலவித வழிகளில் இந்த மந்திரமும் ஒன்று. காலை, மாலை இரு வேளைகளில் 108 முறை ஜபம் செய்வதோடு ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் வரும் முதல் திங்கட்கிழமைகளில் மலையேறி சென்று அவனது தரிசனத்தையும் பெற்று வந்தால் சர்வ நிச்சயமாக ஒருவரது பொருளாதார நிலையில் திருப்திகரமான நல்ல மாற்றங்கள் உண்டாகும்.
http://dwarak82.blogspot.in/

காய சித்தி மந்திரம் !!!


விஞ்ஞானத்தால் எட்ட முடியாத ஒன்று மனிதனின் ஆயுட்காலம், வெல்ல முடியாத மரணத்தையும் வென்று காட்டியவர்கள் நமது முன்னோர்கள். காய கற்பங்கள் தேடி அதை உண்டு சாகா வரம் பெற்று இளமையுடன் வாழ கற்று வைத்திருந்தார்கள் நமது முன்னோர்கள் அவர்களை சித்தர்கள் என்றும் அழைப்பார்கள். அவர்களுள் கோரக்கர் என்ற சித்தர் மந்திர கற்பம் ஒன்றை அருளியிருக்கிறார். இதனை கோரக்கர் “ரவிமேகளை” என்னும் நூலில் காணலாம்.
இந்த மந்திரத்தை கிழக்கு நோக்கி அமர்ந்து லட்சம் முறை தியானித்து ஜபித்தால் காய சித்தி பெறலாம் என்று கோரக்கர் கூறுகிறார்.
ரெக்ஷிகியே நமோ நமா பார்வதி
நீபஞ்சா க்ஷிரி ரிங் ரிங் குரு
தக்ஷணி நகு லக் ஸ்ரீரீங்
க க லுக் டங் லுங்
அக்ஷரி ஹரி பிரம விஷ்ணு
ஆத்ம ஸம்ரெக்ஷ ஆதார பீஜ
கட கட மிருத் விநாசக
இட் இட் இமாம் இமாஞ்ச
இக் ருக் மம துயிருள் நீடித்தே நமஹா!
-கோரக்கர்
http://vedammantram.blogspot.in/

ஸ்ரீ சுதர்ஸன மஹாமந்திரம்!!!

சுதர்சன மஹாமந்திரத்தை தினமும் காலையில் சொன்னால், அஞ்ஞான இருள் விலகும். எல்லா பிரச்சனைகளும் மறைந்து போகும்.ஆபத்து நீங்கும். பயம் விலகும்.தைரியம் பிறக்கும்.சந்தோஷம் நிலைக்கும்.பில்லி, சூன்ய, ஏவல்கள், எதிரிகள் தொல்லை, நாள்பட்ட வியாதி, மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள், புத்தி ஸ்வாதீனம் இன்மையால் சிரமப்படுவோர், ஜாதகப்படி மத்திம ஆயுள் போன்ற உபாதைகள் உள்ளவர்கள்சுதர்ஸன மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் அனைத்துக் குறைகளும் நீங்கும்
ஸ்ரீசுதர்சனரின் நாள் வியாழக்கிழமை. இந்நாளில் அவருக்கு சிவப்பு மலர்களால் மாலை சூட்டி வழிபட்டால் நினைத்த நல்ல காரியங்களில் வெற்றி கிட்டும்.சுதர்சனம் என்று சொல்லக்கூடிய சக்கரத்தாழ்வாரை மனமுருகி வழிபட்டால் நினைத்தது நிறைவேறும். பில்லி சூனியம் விலகும். மன பயம் அகலும், வீண் குழப்பங்கள் தீரும். எதிரிகள், எதிர்ப்புகள் ஒழியும்.
விடியற்காலையில் சூரிய உதயத்திற்கு முன்பு குளித்து, சுத்தமான உடை அணிந்து கிழக்கு நோக்கி அமர்ந்து, கண்ணை மூடிக்கொண்டு குறைந்தபட்சம் ஒன்பது தடவை - கூடிய பட்சம் 108 தடவை பாராயணம் செய்தால் அவர்களுக்கு பீடைகள் ஒழியும். சௌபாக்கியம் பிறக்கும்.
மஹா சுதர்ஸன மஹாமந்திரம்
ஓம் க்லீம் க்ருஷ்ணாய ஹ்ரீம் கோவிந்தாய ஸ்ரீம் கோபி
ஜனவல்லபாய ஓம்பராய பரமபுருஷாய பரமாத்மனே!
மமபரகர்ம மந்த்ர தந்த்ர யந்த்ர ஒளஷத அஸ்த்ர
ஸஸ்த்ர வாதப்ரதிவாதானி ஸம்ஹர ஸம்ஹர
ம்ருத்யோர் மோசய மோசய ஓம் மஹா சுதர்சனயா
தீப்த்ரே ஜ்வாலா பரிவ்ருதாய ஸர்வதிக் க்ஷோபனஹராய
ஹும்பட் பரப்ரஹ்மணே ஸ்வாஹா
http://dwarak82.blogspot.in/