Monday, May 11, 2015

குளிக்கும் பொழுது சொல்ல வேண்டிய சுலோகம்!

குளிக்கும் பொழுது சொல்ல வேண்டிய சுலோகம்!
வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
இன்றைய தினம் முதல் ஒவ்வொரு நாளும், இனிய காலை பொழுதாக விடியட்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்!
நிறைய படிக்கும் எண்ணம் உள்ள மனதிற்கு, புரிந்துகொகிற வாய்ப்புகள் நிறையவே கிடைக்கும். சமீபத்தில், அகத்தியர் பற்றி படித்த பொழுது , அவர் காட்டிய ஒரு எளிய வழியை தெரிந்து கொள்கிற ஒரு வாய்ப்பு கிடைத்தது. யாம், பெற்ற இன்பம், இவ்வையகம் பெறட்டுமே என்கிற எண்ணத்தில் இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
"சித்தன் அருளில்" "இனிய இல்லற வாழ்விற்கு" என்று ஒரு தொகுப்பு வந்தவுடன், அட! இத்தனை எளிய வழிகள் இருக்கிறதா என்று, படித்து, நடைமுறைபடுத்தி அதன் பயனை உணர்ந்த நான், மேலும் தேடலானேன். அப்பொழுது குளிக்கும் பொழுது சொல்லவேண்டிய ஒரு ஸ்லோகத்தைப் பற்றி அகத்தியப் பெருமான் மிகப் பெருமையாக கூறியதை கீழே தருகிறேன்.
அகமர்ஷணம் என்கிற ஒரு தொகுப்பிலிருந்து, ஒரு ஸ்லோகத்தை அவர் கூறி, இதை குளிக்கும் பொழுது குறைந்தது மூன்று முறை ஜெபித்து வந்தால், "பிரம்ம ஞானம்" ஏற்படும் என்று கூறி இருந்தார். உடனேயே ஒரு அவா. அதை தமிழில், பிரிண்ட் போட்டு, குளிக்கும் அறையில் ஒட்டிவிட்டேன். யாரெல்லாம் அதை பார்த்து விரும்பி சொல்கிறார்களோ, அவர்களுக்கு அதன் பலம் கிடைக்கட்டும் என்கிற எண்ணம் தான். குழந்தைகளை பொருத்தவரை, சிறு வயதிலேயே, மந்திரம் மனதுள் ஏறிவிட்டால், அவர்கள் மனம் எளிதில் செம்மைப்படும். நம்மை போன்றவர்களுக்கு, இப்பொழுதேனும், ஏறினால், நம் வாழ்க்கையை, சமன்படுத்திக் கொள்ளலாம். ஓரளவுக்கு, கவனமும், ஆன்மீகமும் நம்முள் புகுத்துவிட்டால், நாம் தேடுகிற நிம்மதியை, இருக்கும் இடத்திலேயே, நல்ல விஷயங்களை செய்து, கூறி நன்மை அடைந்துவிடலாம்.
"ஆர்த்ரம் ஜ்வலதி ஜ்யோதிர் அஹமஸ்மி
ஜ்யோதிர் ஜ்வலதி ப்ரம்மா அஹமஸ்மி
யோ அஹமஸ்மி ப்ரம்மா அஹமஸ்மி
அஹமஸ்மி ப்ரம்மா அஹமஸ்மி
அஹமே வாஹம் மாம் ஜுஹோமி ஸ்வாஹாஹா"
இதை, நகல் எடுத்து, குளிக்கும் அறையில் ஒட்டி வைத்து, வீட்டில் உள்ளவர்கள் அனைவரும், பயன்பெற உபயோகித்து, அகத்தியர் அருளை பெற்றுக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறேன்.
மந்திரம் என்பது, மனதை செம்மைபடுத்தி அதன் திறனை, நமக்கு உணர்த்துவதர்க்காகத்தான். அதை கூறும் பொழுது ஏற்படுகிற அதிர்வலைகள், நமது ஆதார சக்கரங்களை தட்டி எழுப்பி, உடலுக்கு உரத்தை தந்து, புத்தியை தெளிவுபடுத்தும்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகதீசாய நமஹ!

No comments:

Post a Comment