Sunday, August 31, 2014

கிருஷ்ணர்

1. மகாவிஷ்ணு எடுத்த 9-வது அவதாரம் கிருஷ்ணா அவதாரமாகும்.
2. கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்களில் உறியடி விழா தான் பிரசித்தமாக நடைபெறும்.
3.மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் வாழ்வில் இயல்பாக அமைந்த கடமைகளை முழுமையாக செய்ய வேண்டும் என்பதை பகவத்கீதை மூலம் கிருஷ்ணர் உணர்த்தியுள்ளார்.
5. கிருஷ்ணருக்கு கேசவன், கோவிந்தன், கோபாலன் ஆகிய பெயர்களும் உண்டு.
6 கிருஷ்ணர் இளம்வயதில் கோகுலத்தில் வாழ்ந்ததால், அவர் அவதரித்த கிருஷ்ண ஜெயந்தியை கோகுலாஷ்டமி என்றும் சொல்வார்கள்.
7.கிருஷ்ணர் ஜெயந்தி தினத்தன்று கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த சீடை, அவல் லட்டு, அப்பம், தட்டை, முள்ளு முறுக்கு, தோயம், வெண்ணை பால் திரட்டு, நாட்டு சர்க்கரை போன்றவைகளை படைத்து வழிபட வேண்டும்.
8.கிருஷ்ண ஜெயந்தியன்று குழந்தையின் பாத சுவடுகளை தெருவில் இருந்து வீட்டுக்குள் வருவது போல வரைய வேண்டும். இதனால் கிருஷ்ணரே வீட்டுக்கு வருவதாக ஐதீகம்.
10.கிருஷ்ணர் கோகுலத்தில் இளம் வயதில் கோபியர்களுடன் சேர்ந்து விளையாட்டுக்களில் ஈடுபட்டதை ``ராசலீலா'' என்ற பெயரில் நாடகமாக நடத்தப்படுவது வடமாநிலங்களில் பழக்கத்தில் உள்ளது.
11.கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்ததாக புராண வரலாறுகளில் சொல்லப்பட்டுள்ளது. எனவே கிருஷ்ண ஜெயந்தி அன்று இரவு வழிபாடு நடத்துவது உகந்தது.
13.கிருஷ்ணர் 3 வயது வரை கோகுலத்திலும், 3 முதல் 6 வயது வரை பிருந்தாவனத்திலும் 7-ம் வயதில் கோபியர்களுடனும் 8 முதல் 10 வயது வரை மதுராவிலும் வாழ்ந்தார்.
14. கம்சனை வதம் செய்த போது, கிருஷ்ணருக்கு வயது 7.
15.கிருஷ்ண பரமாத்மாவின் அருளை பெற ``கீதகோவிந்தம்'', ``ஸ்ரீமந் நாராயணீயம்'', ``கிருஷ்ண கர்ணாம்ருதம்'' ஆகிய ஸ்தோத்ரங்களால் துதித்து வணங்க வேண்டும்.
16. கிருஷ்ணர் ஜெயந்தியன்று சிறுவர் - சிறுமிகளை கண்ணன், ராதைகள் வேடமிட்டு ஆராதிப்பது கூடுதல் பலன்களைத் தரும். இப்படி வேடமிடும் குழந்தைகள் புத்துசாலிகளாகத் திகழ்வார்கள் என்பது நம்பிக்கை.
17.கண்ணனை வழிபட்டால் அகந்தை அகலும். குழந்தைகளுக்கு மூர்க்க குணம் ஏற்படாது. இளைஞர்கள் தர்ம சிலராக வாழ்வார்கள். அரசியல்வாதிகளுக்கு நிர்வாகத் திறமை அதிகரிக்கும்.
18. பெண்கள் கண்ணனை மனம் உருகி போற்றி வழிபட்டால் திருமண தடைகள் விலகி கல்யாணம் கைகூடும்.
19. விவசாயிகள் கிருஷ்ணரை வழிபட்டால் வயல்களில் விளைச்சல் அதிகரித்து செல்வம் பெருகும். மாடுகள் எண்ணிக்கை பெருகி கடன் தீரும்.
20.தொழில் அதிபர்கள் கிருஷ்ணருக்கு சிறப்பான பூஜை கள் செய்தால், புகழ் கூடுëம். கூட்டுத் தொழில் செய்தால் வெற்றி பெறுவார்கள். தொழில் நிர்வாகத்தில் ஆற்றல் பெருகும்.
21. கிருஷ்ண லீலையை மனம் ஒன்றி கேட்டால் பசி, தாகம் ஏற்படாது.
22. கிருஷ்ண நாமத்தை தினமும் உச்சரிப்பவர்களும், கேட்பவர்களும் புண்ணிய உலகை சென்றடைவது உறுதி.
23.பாகவதத்தில் உள்ள அவதார கட்டத்தை பாராயணம் செய்வது மிகுந்த புண்ணியத்தைத் தரும். அந்த பாராயணத்தை கேட்டாலும் புண்ணியம் கிடைக்கும்.
24.கிருஷ்ண ஜெயந்தியன்று கிருஷ்ணரின் அருள் 100 சதவீதம் அதிகரிப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.
25.ஓம் நமோ பகவதே வாசுதேவாயா என்று ஜெபித்தால் கிருஷ்ணர் பார்வைபடும்.
. அதையும் தாண்டி சென்றால்தான் கண்ணன் தரிசனம் கிடைக்கும்.
.
26. வைணவத் திருத்தலங்களில் பெருமாள் சயன கோலத்தில் சேவை சாதிப்பது போல் முக்தி தரும் திருத்தலமாக துவாரகையில் அமைந்துள்ளது கிருஷ்ணன் கோவில். பகவான் கிருஷ்ணர் இங்கு சயனக் கோலத்தில் அருள்புரிகிறார்.
27. கிருஷ்ண ஜெயந்தி அன்று பக்தர்கள் விரதம் இருந்து கண்ணனை வழிபடுவார்கள். அவ்வாறு செய்தால் தெரிந்தும், தெரியாமலும் செய்த பாவங்கள் விலகும் என்பது ஐதீகம்.
28 மதுராவில் தேவகி-வசுதேவருக்கு எட்டாவது மகனாக அவதரித்தார் கிருஷ்ணர். அவர் பிறந்த இடம் ஒரு சிறிய சிறைச்சாலை. தற்போது, அந்த இடத்திற்கு மேல் `கத்ர கேஷப்தேவ்' என்ற கிருஷ்ணர் கோவில் எழுப்பப்பட்டுள்ளது.
29 கிருஷ்ண வழிபாடு நம் நாட்டில் தொன்று தொட்டு இருந்து வருகிறது. கிருஷ்ணனைப் பற்றிய மிகப் பழமை வாய்ந்த ஆதாரம் ரிக்வேதத்தில் உள்ளது. இந்திரனுடன் கிருஷ்ணர் போரிட்டதாக அச்செய்தி தெரிவிக்கிறது.
30. சாந்தோக்ய உபநிஷத்தில் கிருஷ்ணன் தேவகியின் மகன் என்று குறிப்பிடப் பட்டுள்ளது.
31. அர்த்த சாஸ்திரத்தை எழுதிய சாணக்கியர், மருத்துவ தொழிலை தொடங்குபவர்கள் கிருஷ்ணனை வழிபட்ட பிறகே தொடங்க வேண்டும் என கூறியுள்ளார்.
32. அலெக்சாண்டருடன் போரிட்டு வென்ற போரஸ் (புருஷோத்தமர்) தனது படைகளுக்கு முன்னாள் கிருஷ்ணனின் உருவத்தை நிறுத்தியிருந்தார். போரில் வெற்றி பெற கிருஷ்ணனே காரணம் என கருதினார்.
33. யமுனை ஆற்றங்கரையில் கிருஷ்ண வழிபாடு இருந்ததாக மெகஸ்தானிஸ் தனது வரலாற்று குறிப்புகளில் எழுதியுள்ளார்.
34. சிலப்பதி காரத்தில் கிருஷ்ணனின் அண்ணன் பலராமன் என்றும், மனைவி நப்பின்னை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. நப்பின்னை யாதவர் குலத்தைச் சேர்ந்தவள் என்றும், ராதையை கிருஷ்ணனின் காதலி என்றும், ராதை மற்றும் ருக்மணியை விட நப்பின்னை மேன்மையானவள் என்றும் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. நப்பின்னையை ஆழ்வார்களும் பாராட்டியுள்ளனர்.
35.. ஒரு சமயம் அசுரர்கள் சூரியனை தடுத்து மறைத்து விட்டால் பூதி இருளடைந்து தவித்தது. அப்போது கிருஷ்ண பரமாத்மா சூரியனை ஆகாயத்தில் நிலைக்கச் செய்ததாக புறநானூறு குறிப்பிடுகிறது.
நன்றி ; http://bsakthivel.blogspot.in

10 comments:


  1. == நமது சாஸ்த்திரத்தில் உள்ள அறிவுகளில் எல்லாம் அரசனாக விளங்கும் மற்றும் மிகமிக ரகசியமான பகுதிகள்: ==
    கிருஷ்ணர் மட்டுமே முழுமுதற்கடவள் மற்ற அனைவரும் தேவர்களே ஆவார்கள். 30 கோடி தேவர்களும் கிருஷ்ணரின் சேவகர்கள் மற்றும் பக்தர்கள். கிருஷ்ணரை மட்டும் வழிபட்டால் போதும்,பிற தேவி தேவதைகளை வணங்கவேண்டிய தேவையில்லை. காரணம் கிருஷ்ணரிடம் அனைத்தும் முழுமையாக உள்ளன.

    ஆன்மீகம் என்றால் தர்மத்தின் உள்ளபடி நடத்தல், பொருள் சேர்த்தல், பௌதீக ஆசைகளை அடைதல், ஆண்டவன் திருநாட்டிற்குள் செல்லுதல் இந்த நான்கில் முதல் மூன்றை மட்டுமே பிற தேவி தேவதைகள் மிகமிகக் குறைந்த அளவு மட்டுமே தரமுடியும். அதுவும் கிருஷ்ணரிடமிருந்து தான் பெற்றுத்தருகிறார்கள். ஆனால் இந்த நான்கையும் கிருஷ்ணர் மட்டுமே முழுமையாக தரமுடியும். அதிலும் மோக்ஷத்தை கிருஷ்ணரால் மட்டுமே தரமுடியும். தேவர்களை வணங்குவது சாஸ்த்திரத்திற்கு உட்படாத செயலாகும். மற்றும் தேவவூலகங்கள் சென்றாலும் மீண்டும் இந்த துன்பமயமான இவ்வூலகில் பிறந்தே ஆகவேண்டும். இந்த ஜடவுலக துன்பங்களான பிறப்பு, இறப்பு, முதுமை,நோயிலிருந்து மீள ஒரே வழி கிருஷ்ணரை மட்டும் சரணடைந்து வழிபடுவதே ஆகும் வேறுவழியே இல்லை.


    == கிருஷ்ணர் மட்டுமே முழுமுதற்கடவுள் என வேதங்கள், இதிஹாசங்களும் உபநிஷத்துக்களும்.,புராணங்களில் உள்ளபடி ==

    அதர்வணவேதம்: கோபால தாபனீ உபநிஷத் 1.1
    சச்சிதானந்த ரூபாய க்ருஷ்;ணயாக்லிஷ்ட காரிணே நமோ வேதாந்த வேத்யாய குரவே புத்தி ஸாக்ஷிணே
    '''நித்யமான ஆனந்தம்,இருப்பு, அறிவுவை உடைய திவ்ய சொரூபரான கிருணுஷ்ணருக்கு என் பணிவான வணக்கத்தினை நான் செலுத்துகின்றேன். நான் ஏன் அவருக்கு என்னடைய வந்தனங்களை செலுத்துகிறேன் என்றால் அவரை புரிந்து கொள்வது என்பது வேதங்களை புரிந்து கொள்வதாகும். ஆகையால் அவரே உன்னதமான ஆசான் ஆவார்.'''

    கோபால தாபனீ உபநிஷத் 1.3
    க்ருஷ்;ணோ வை பரமம் தைவதம்
    '''கிருஷ்ணர் மட்டுமே முழுமுதற்கடவுள்'''

    கோபால தாபனீ உபநிஷத் 1..21
    ஏகோ வசீ ஸர்வ க: க்ருஷ்ண ஈத்ய:
    '''கிருஷ்ணர் மட்டுமே முழுமுதற்கடவுள் மற்றும் அவரே வணக்கத்துக்கு உரியவர்'''

    ReplyDelete
  2. ஏகோ ‘பி ஸன் பஹூதா யோ ‘வபாதி:
    '''கிருஷ்ணர் ஒருவரே ஆனால் அவர் எண்ணிலடங்காத ரூபங்களிலும் அவதாரங்களிலும் வெளிப்படுபவர்.'''

    யத்ராவதீர்ணம் க்ருஷ்ணாக்யம் பரம் ப்ரஹ்ம நராக்ருதி:
    '''வேத இலக்கியங்களிலே பரம பூரண உண்மை ஒரு நபரே என்று கூறப்பட்டுள்ளது. அவரது பெயர் கிருஷ்ணர்.'''

    கோபால தாபனீ உபநிஷத் 1..24
    யோ ப்ரஹ்மாணம் விததாதி: பூர்வம் யோ வேதாம்ஷ் ச காபயதிஸ்ம க்ருஷ்ண:
    '''ஆதியில் பிரம்மனுக்கு வேத ஞானத்தை உபதேசித்ததும்.. புராதன காலத்தில் வேத ஞானத்தை அளித்ததும் கிருஷ்ணரே.'''

    இதையே பத்மபுராணம் : நாம சிந்தாமணிஹ் க்ருஷ்ணஸ்
    '''நாமங்களில் அனைத்தைவும் விட தலைசிறந்த மணிமகுடநாமம் கிருஷ்ணா என்பதாகும்.'''

    வேதங்களில் உள்ளபடி :அதர்வணவேதம் : கோபால தாபனீ உபநிஷத்தில் :
    ப்ரஹ்மண்யோ தேவகீ புத்ர:
    '''தேவகியின் மைந்தனான கிரஷ்ணரே முழுமுதற்கடவுள்'''

    சத்சித் ஆனந்த ரூபாய க்ருஷ்ண:
    '''நித்யமான ஆனந்தமயமான உருவமுடையவர் கிருஷ்ணரே.'''

    == கிருஷ்ணரை மட்டும் வழிபட்டால் போதும் பிற தேவிதேவதைகளை வணங்கவேண்டிய தேவையில்லை ==

    பாகவதம் 4.31.14 ஒரு மரத்தின் வேருக்கு நீர் வார்க்கும் போது அதன் அடிமரம், கிளை,மிலாறுகளுக்கு சக்தி அளிக்கின்றது. அதுபோல் வயிற்றுக்கு இடப்படும் உணவு புலன்களுக்கும் உடலின் பிற பாகங்களுக்கும் புத்துணர்ச்சி அளிக்கிறது. இதுபோன்றே பக்தியால் அச்சுதனை வழிபடும் போது அவரின் பாகங்களாக விளங்கும் அனைத்து தேவர்களுக்கும் அவ்வழிபாடு திருப்திப்படுத்துகிறது.

    பாகவதம் 11.5.41 முகுந்தனின் பாதகமலங்களை சரணடைந்த எவனும்இ எல்லா கடமைகளிலிருந்தும் விடுபட்டு பக்தி நெறியில் முழுமையாய் ஈடுபட்ட எவனும்இ தேவருக்கோ முனிவருக்கோ மற்ற உயிர்களுக்கோ குடும்ப அங்கத்தினருக்கோ மனித குலத்திற்கோ முன்னோருக்கோ எவ்வித கடன் படாதவனாகிவிடுகின்றான்.

    பாகவதம் 10.14.58 முக்தி அளிப்பவனும் முகுந்தன் என்ற பெயர் பெற்றவனும் பிரபஞ்ச தோற்றத்தின் அடைகலமுமான பகவானின் பாதகமலங்கலெனும் ஓடத்தை அடைந்தவனுக்கு, இவ்வுலகெனும் கடல் கன்றுகுட்டியின் குளம்பில் தேங்கிய நீர் போன்றதே. பக்தரின் நோக்கம் யாது எனில் ஒவ்வொரு அடியும் துன்பமயமான இவ்வுலகல்ல, பரமபதமான துன்பங்களேயற்ற வைகுண்டமே.

    பாகவதம் : க்ருஷ்ணஸ் து பகவான் ஸ்வயம்
    ''' கிருஷ்ணர் மட்டுமே பகவான். கிருஷ்ணரே முழுமுதற்கடவுள்'''

    கிருஷ்ணருக்கு அசமேளர்த்த என்ற ஒரு நாமம் உண்டு. இதன் அர்த்தம் தனக்கு சமமானவரோ தன்னைவிட உயர்ந்தவரே இல்லாதவர் என்பதாகும்.

    வேதங்களில் சில இடங்களில் பிரம்மனிடமிருந்து அனைத்தும் தோன்றியதாக கூறுகிறது. சில இடங்களில் சிவனிமிருந்து அனைத்தும் தோன்றியதாக கூறுகிறது. மற்றும் சில இடங்களில் இந்திரன்,ஆகாயம், மற்றும் தேவி தேவதைகளிடமிருந்தும் அனைத்தும் தோன்றியதாக கூறுகிறது. ஆனால் வேதத்தில் கூறியுள்ளபடி பார்த்தால் படைப்பின் ஆரம்பத்தில் நாராயணர் மட்டுமே இருந்தார். பிரம்மனோ சிவனோ அக்னியோ ஆகாயத்தில் சந்திரனோ சூரியனோ இருக்கவில்லை. எல்லவற்றையும் படைத்து எல்லவற்றையும் அனுபவிக்கும் கிருஷ்ணர் மட்டுமே இருந்தார் என கூறும்போது மற்ற தேவர்கள் ஆதியிலில்லை ஆதியில் கூறிய அனைத்து தேவர்களின் பெயரும் கிருஷ்ணரை மட்டுமே சேரும் என வேதஇதிஹாசஉபநிஷத் புராணங்களில் கூறுகிறது.

    அதர்வணவேதம் : நாராயணோபனிஷத்தில் : ஏகோவை நாராயண ஆஸீன் ந ப்ரஹ்மா ந ஈஷானோ நாபோ நாக்னி ஸமௌ நேமே த்யாவாப்ருதீவி ந நக்ஷத்ராணி ந ஸூர்ய: ஸ எகாகீ ந ரமேத தஸ்ய த்யானாந்த: ஸ்தஸ்ய யத்ர சாண்டோகை: க்ரிய மாணோஷ்டகாதி ஸம்ஜ்ஞகா ஸ்துதி ஸ்தோமலு ஸ்தோமம் உச்யதே.
    '''படைப்பின் ஆரம்பத்தில் நாராயணர் மட்டுமே இருந்தார். பிரம்மனோ சிவனோ அக்னியோ ஆகாயத்தில் சந்திரனோ சூரியனோ இருக்கவில்லை. எல்லவற்றையும் படைத்து எல்லவற்றையும் அனுபவிக்கும் கிருஷ்ணர் மட்டுமே இருந்தார்.'''
    இதே விசயம் கீதை 10.8 ல் : அஹம் ஸர்வஸ்ய ப்ரபவோ மத்த: ஸர்வம் ப்ரவர்ததே
    நானே எல்லாவற்றின் உற்பத்தி மூலம் எல்லாம் என்னிடமிருந்தே தோன்றுகின்றன என்கிறார் கிருஷ்ணர்..

    நாராயணாத் ப்ரஹ்மா ஜாயதே நாராயணாத் ருத்ரோ ஜாயதே
    '''நாராயணனிடமிருந்தே பிரம்மன் உண்டானார் நாராயணனிடமிருந்தே ருத்ரன் என்னும் சிவன் உண்டானார்.'''

    ReplyDelete

  3. ப்ரச்நோபனிஷத் மற்றும் பராசர பரதர்ம சாஸ்த்ரம்: ப்ரஹ்மாணாம் இந்த்ரம் ருத்ரம் ச யமம் வருணமேவ ச நிக்ருஹ்ய ஹரதே யஸ்மாத் தஸ்மாத் ஹரிரிஹோச்யதே
    '''பிரம்மன்,இந்திரன், ருத்ரன், யமன், வருணன் ஆகியவரை ஹரிப்பதனால் ஹரி என்று சொல்லப்படுகிறான்'''

    யஜூர்வேதம் கடோபனிஷத்தில்: ஸோத்எந: பாரமாப்நோதி தத் விஷ்ணோ பரமம்பதம்
    '''எவன் சம்சாரத்திற்கு அக்கரையை அடைகின்றானோ அதுவே விஷ்ணுவின் பரமபதம்'''

    இதே விசயம் கீதை 8.21ல் யம் ப்ராப்ய ந நிவர்த்தந்தே தத் தாம பரமம் மம
    '''எதை அடைந்த பின் மீண்டும் இந்த ஜடவுலகில் பிறப்பதில்லையோ அந்த இடம் என்னுடையது எனகிறார் கிருஷ்ணர்.'''

    அதர்வணவேதம் : கோபால தாபனீ உபநிஷத்தில்
    எதஸ்யைவ யஜநே சந்த்ரத்வஜோ கதமோஹமாத்மாநம் வேதயதி ஓங்காராதிகம் மநுமாவர்த்தயேத் ஸங்கரஹித: அப்பாநயத் தத் விஷ்ணோ பரமம்பதம் ஸதா பச்யந்தி ஸூரய: திவீவ சக்ஷஷுராததம் தஸ்மாதேநம் நித்யமாவர்த்தயேத் நித்யமா வர்த்தயேதிதி.

    '''இந்த கோபாலமந்திரத்தை ஜபம்செய்து சந்திரனைத்தலையில் கொண்ட சிவன் மோஹம் நீங்கப்பெற்றவனாய் பரமாத்மாவை அறிந்தான். ஆகையால் பலனில் பற்றற்றவனாய் கோபாலமந்திரத்தை ஓங்காரத்துடன் பல தடவை படிக்கக்கடவன். இதை ஜபித்த சிவனும் பரமாத்மாவை ஸாக்ஷத்கரித்து விஷ்ணுவினுடைய மேலான பரமபதத்தை அடைந்தான். எப்பொழுதும் நித்ய ஸூரிகள் பார்க்கிறார்கள். அப்பரமபதம் ஆகாயத்தில் விளங்குபவனும் உலகெல்லாம் கண்ணாயிருப்பவனுமான ஸூர்யனைப்போல் பிரகாசிக்கிறது. ஆகையால் இம்மந்திரத்தை தினந்தோறும் ஜபிக்க வேண்டும்.

    '''சந்த்ரத்வஜோ (அ)கமத் விஷ்ணோ பரமம்பதமவ்யயம் '''''
    சந்திரனைத்தலையில் கொண்ட சிவனும் விஷ்ணுவினுடைய மேலான பரமபதத்தை அடைந்தான்.

    ''' வ்ருஷபத்வஜ வந்த்யாய பார்த்தஸாரதயே நம: '''
    ரிஷபக்கொடியோனால் (சிவன்) பூஜிக்கப்பட்டவனும் அர்ஜுனனுக்கு ஸாரதியான பெருமானுக்கு நமஸ்காரம்

    மேலே கூறிய வேத விசயங்கள் பார்க்கும் போது சிவபெருமான் கிருஷ்ணரின் மிகச்சிறந்த பக்தரே ஆவார்

    '''முக்தலோபனிஷத்தில்: புருஷோ நாராயண: பூதம்பவ்யம் பவிஷ்யச்ச ஆஸீத் ஸஏஷஸர்வேஷாம் மோக்ஷதச்ச ஆஸீத்'''
    புருஷனாகிய நாராயணன் சென்றவைகளும் வருபவைகளும் இருப்பவைகளும் ஆனார். அவர் எல்லோருக்கும் மோக்ஷத்தை கொடுப்பவராவும் ஆனார்.

    '''ஸாமவேதம் மஹோபனிஷத்தில் :அத புநரேவ நாராயணஸ்ஸோ(அ)ந்யம் காமம் மநஸா த்யாயீத தஸ்யத் யாநாந்தஸ்தஸ்ய லலாடாத் த்ரயக்ஷஸ் ஸூலபாணி புருஷோ (அ)ஜாயத்'''
    மறுபடியும் நாராயணன் மனத்தினால் ஸங்கல்பித்து முடிந்ததும் நெற்றியிலிருந்து முக்கண்ணனும் சூலபாணியுமான புருஷன் உண்டானான்.'''

    சாந்தோக்யத்தில் : விரூபாக்ஷாய ப்ரஹ்மண: புத்ராய ஜ்யேஷ்ட்டாய ச்ரேஷ்ட்டாய
    '''முக்கண்ணனும் ப்ரம்மாவின் முதல் புத்ரனும் ச்ரேஷ்டனுமான சிவனுக்கு'''

    சாஸ்வதம் சிவம் அச்யுதம் ''' உண்மையில் சிவம் என்பது அச்யுதனே.'''


    தத்ஸர்வம் வை ஹரேஸ்தநு: '''உலகனைத்தும் விஷ்ணுவின் சரீரமே ஆகும்.'''

    ஏகோஹவை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா நேஸந:
    '''நாராயணன் ஒருவனே ப்ரளயத்தில் இருந்தான். பிரம்மனுமில்லை சிவனுமில்லை.'''

    ப்ரஹ்மா நாராயண: சிவஸ்ச நாராயண: நாராயண ஏவேதம் ஸர்வம்
    '''பிரம்மனும் நாராயணனே சிவனும் நாராயணனே நாராயணனே இவ்வுலகனைத்தும் ஆவான்'''

    நிஷ்கலங்கோநிரஞ்ஜநோ நிர்விகல்போ நிராக்யாத: ஸஷுத்தோ தேவ ஏகோ நாராயண: நத்விதீயோ(அ)ஸ்தி கஸ்சித்
    '''ஸ்வரூபரூப குணங்களில் எவ்விதக் குற்றமும் அற்றவனாய், ப்ராக்ருதமான குணங்களும் பெயர்களும் அற்றவனாய், சுத்தனாய் இருக்கும் தேவன் நாராயணன் ஒருவனே. இரண்டாமவன் ஒருவனுமில்லை.
    '''
    தைத்திரீய நாராயணவல்லியில் : நாராயண பரம்ப்ரஹ்ம தத்வம் நாராயண பர: நாராயண பரோ ஜ்யோதி: ஆத்மா நாராயண பர்யச்ச கிஞ்சித் ஜகத்யஸ்மிந் த்ருச்யதே ச்ரூயதேபிவா அந்தர்பஹி: ச தத்ஸர்வம் நாராயண: ஸ்தித:
    '''பரம்ப்ரஹ்மம் நாராயணனே, உயர்ந்த உண்மையான வஸ்து நாராயணனே, உயர்ந்த ஆத்மா நாராயணனே, இவ்வுலகத்தில் காண்பனவும் கேட்பனவமான எல்லா வஸ்துக்களிலும் உள்ளும் புறமும் நுழைந்து நிறைந்திருப்பவன் நாராயணனே.'''

    ரிக்வேத புருஷசூக்தத்தில் : உதாம்ருதத்வஸ்யேஸாந: ஹ்ரீஸ்ச தே லக்ஷமீஸ்ச பத்ந்யௌ இஷ்டம் மநிஷாண
    '''மோக்ஷத்தை அளிக்கவல்ல தலைவன் புருஷன் என்னும் நாராயணனே. லக்ஷமிதேவியும் பூமிதேவியும் பரம புருஷனாகிய உன்னுடைய பத்தினிகள். உன்னிடம் நாங்கள் விரும்பியது அனைத்தும் பெறக்கடவோம்.'''

    ReplyDelete
  4. ரிக்வேத மண்டலத்தில் 1.5.22.5: தத் விஷ்ணோ: பரமம்பதம் ஸதா பச்யந்தி ஸூரய:
    '''விஷ்ணுவினுடைய மேலான பரமபதத்தை எப்பொழுதும் நித்ய ஸூரிகள் பார்க்கிறார்கள்.'''

    ஸஷுபாலோபநிஷத்தில் : தாதா விதாதா கர்த்தா விகர்த்தா திவ்யோ தேவ ஏகஏவ நாராயண: உத்பவ ஸம்பவோ திவ்யோ தேவ ஏகோ நாராயண:
    '''அனைத்தையும் தரிப்பவனும் அனைத்தையும் விதிப்பவனும் செய்பவனும் சிறந்த விகாரங்களை உடையவனும் பரமபதத்திலிருக்கும் தேவனான நாராயணன் ஒருவனே. பலவித அவதாரங்களை எடுப்பவன் பரமபதத்திலிருக்கும் தேவனான நாராயணன் ஒருவனே
    '''
    மாதா பிதா ப்ராதா நிவாஸ: ஸரணம் ஸஷுஹ்ருத் கதி நாராயண:
    '''தாய், தந்தை, ஸஹோதரன் முதலான எல்லா உறவாகவும் புகலிடமாகவும் உபாயமாகவும் நண்பனாகவும் கதியாக இருப்பவன் நாராயணன் ஒருவனே
    '''
    யஜுஸ் ஸம்ஹிதா 5.5 அக்நிரவமோ தேவதாநாம் விஷ்ணு: பரம:
    '''தேவதைகளுக்குள் அக்னி கீழ்நிலையில் இருப்பவன். விஷ்ணு தனக்குமேல் ஒருவரில்லாத மேல் நிலையில் இருப்பவன் நாராயணனே .
    '''
    நாராயணோபனிஷத்தில் : விஷ்ணு மஹேஸ்ராக்யைர் நாராயணாம் ஸைஸ் ஸத்வதமோகுண ப்ரதாநை:
    '''நாராயணரின் அம்சங்களாய் ஸத்வதமோகுணத்தில் வருபவர்கள் விஷ்ணு மஹேஸ்வரர்களே.'''


    விஷ்ணுபுராணம்: பகவான் என்பவர்க்கு அளபரிய சக்தி, செல்வம், அழகு, புகழ், அறிவ, துறவு இவை முழுமையாக இருக்க வேண்டும். இவை பகவான் கிருஷ்ணரிடம் மட்டுமே உள்ளது. பகவான், புருஷன் என்ற சப்தம் இயற்கையாகவே ஸனாதனனான வாஸூதேவனுக்கே சொல்லப்பட்டிருக்கிறது. தேவர்கள் முனிவர்கள் மற்றும் பிறருக்கு பகவான் புருஷன் என்று சொல்லப்படுவது ஒப்புக்காக மட்டுமே ஆகும். ஜனார்தனான பகவான் படைத்தல் காத்தல் அழித்தலுக்கு ஏற்ப பிரம்மா ராஜஸகுணமாகவும், விஷ்ணு சத்வகுணமாகவும், சிவன் தாமஸகுணமாகவும் வருகின்றனர். பகவானே உன் முன்னால் யார் யார் முன் வந்து நிற்கின்றார்களோ அவர்கள் அனைவரும் உன்னால் படைக்கப்பட்டவர்களே, நீரே அனைவருக்கும் ஆதி மூலம்.

    பாகவதம் : பகவான் விஷ்ணு வாமன அவதாரத்தில் ஆகாயத்தை அளந்தபோது, விஷ்ணுவின் பாதங்களை பிரம்மா கழுவினார், அந்த நீரே கங்கை ஆகும். அதை சிவன் தன் தலையில் தாங்கியதாலே மங்களமானார்( சிவன் ஆனார்).

    பரமபுருஷ பகவான் கிருஷ்ணரின் திரிபடைந்த நிலையான முக்குணங்களுக்கு ஏற்ப பிரம்மா ராஜஸகுணமாகவும், விஷ்ணு சத்வகுணமாகவும், சிவன் தாமஸகுணமாகவும் வருகின்றனர். கிருஷ்ணர் மட்டுமே முழுமுதற்கடவுள் மற்றவர்கள் அவரின் விரிவங்கங்களே.

    வாமனபுராணம், விஷ்ணுபுராணம், பத்மபுராணம், வராகபுராணங்களில்: பகவான், புருஷன் என்ற சப்தம் இயற்கையாகவே ஸனாதனனான வாஸூதேவனுக்கே சொல்லப் பட்டிருக்கிறது. வாமனபுராணத்தில்: நாராயணன் முதலிய நாமங்கள் பிற தேவர்களை குறிக்காது. ஆனால் மற்ற தேவர்களின் நாமங்கள் விஷ்ணுவை மட்டுமே சேரும். நாராயணன் முதலிய நாமங்களை தவிர பிற நாமங்களை பிற தேவர்களுக்கு வழங்கினான்.

    == வைஷ்ணவர்களில் சிறந்தவர் சிவபெருமான் ==
    பத்மபுராணம், பாகவதத்தில் 12.13.16 வைஷ்ணவானாம் யதா சம்பு:


    மஹாபாரதத்தில் : விஷ்ணுராத்மா பகவத் சிவஸ்ய '''சிவனுக்கு ஆத்மா விஷ்ணு'''
    யாதொரு (விஷ்ணுவின் தொப்புளில் தோன்றிய ) தாமரையில் பிரம்மன் உண்டானார். பிரம்மனிடமிருந்து சிவன் உண்டானார். சிவனிடமிருந்து முருகன் உண்டானார். வேதத்தில் உள்ள அதர்வசிரஸில் சிவநாமங்களே பயன்படுத்தப் பட்டிருந்தாலும் அந்த நாமங்கள் அனைத்தும் தன்னுடைய நாமங்களாகவே ஓத வேண்டும் என கிருஷ்ணர் கூறுகிறார்.

    பத்மபுராணத்தில் : விஷ்ணுவிடம் பக்தியுடையவனே தேவன் மற்றவன் அசுரன். உதாரணம் ராவணன் சிவனின் பக்தன் மற்றும் ஹிரண்யகசிபு பிரம்மாவின் பக்தர் இருவரும் அசுரர்களே ஆவார். ஆனால் பிரஹலாதன் ஹிரண்யகசிபுவான அசுரரின் மகன் ஆனால் அவன் விஷ்ணுவிடம் பக்தி செய்ததால் மிகச்சிறந்த பக்தன்

    ReplyDelete
  5. சிவன் கூறுகிறார் : எல்லா வழிபாட்டிலும் விஷ்ணு வழிபாடே சிறந்தது. அதை விட அவரின் பக்தரை வழிபடுவதே மிகச் சிறந்தது. காசியில் இறப்பவர்கள் காதில் ராம நாமத்தை கூறியே முக்தியளிப்பதாக கூறுகிறார். ராம நாமமே ஒராயிரம் விஷ்ணு நாமத்திற்கு சமமானது எனவும், ராம நாமத்திலே தான் ஆனந்மடைகிறேன் என் கூறுகிறார். பதிவிரதை எவ்வாறு புருஷனை பூஜிக்கிறாளோ அவ்வாறு பகவான் கிருஷ்ணரை தான் பூஜிப்பதாக கூறுகிறார். வேதத்தில் ஸ்ரீசூக்தத்தில் லக்ஷமியின் தவப்பலனாலேவில்வம் வந்தது என கூறுகிறது. லக்ஷ்மியின் பக்தன் சிவன் எனவே வில்வ இலையை தன் தலையில் தங்குகிறார்.

    கருடபுராணத்தில் : பகவான் கிருஷ்ணா; ஒரு பக்தரை காக்க என்னினால் அவரை அழிக்க யாராலும் முடியாது. கிருஷ்ணர்; ஒருவரை அழிக்க என்னினால் அவரை யாராலும் காக்க முடியாது. உதாரணம் ராவணன் சிவனின் பக்தன். ஆனால் ராமர் அழிக்கும் போது சிவனால் காக்கமுடியவில்லை. அதுபோல் ஹிரண்யகசிபு பிரம்மாவின் பக்தன். ஆனால் நரசிம்மர் அழிக்கும் போது பிரம்மாவால் காக்க முடியவில்லை. அதுபோல் கிருஷ்ண பக்தனான அம்பரீசனை துர்வாசர் அழிக்க முயன்றபோது சுதர்சன சக்கரம் துர்வாசரை அழிக்கவந்தது. துர்வாசமுனிவர் பிரம்மா, சிவன் போன்ற தேவர்களை சரணடைந்தும் அவர்களால் காக்கமுடியவில்லை.

    வாஸூதேவவோ வா இதம் அக்ர ஆஸீன் ; ந ப்ரஹ்மா ந ச சங்கர
    '''வாஸூதேவன் மட்டுமே ஆதியில் இருந்தார் பிரம்மனுமில்லை சங்கரனுமில்லை.'''

    ஹஸ்தே(அ)க்ஷமாலம் ஹ்ருதி ராமதத்வம் ஸ்வமஸ்ததே கேஸவபாத தீர்த்தம் ஜிஹ்வாக்ரபாகே வரராமமந்தரம் சிவம் மஹாபாகவதம் ஸ்மராமி
    வேதவியாசர் கூறுகிறார் ''' கையில் துளசிமணிமாலையும், நெஞ்சில் ராம தத்வத்தையும், தன் தலையில் கேசவனின் பாததீர்த்தமான கங்கையையும், நாவின் நுனியில் தாரகமான ராம மந்திரத்தையும் தரித்து நிற்கும் சிவனை மஹாபாகவதனாக அறுதியிடுகிறேன்.'''

    ஏழு ஜென்மம் சூரியனுக்கு பக்தனாயிருப்பவன் அவனருளால் சிவனின் பக்தனாக பிறக்கிறான். ஏழு ஜென்மம் சிவனுக்கு பக்தனாயிருப்பவன் அவனருளால் முடிவில் விஷ்ணு பக்தனாக பிறக்கிறான்.

    விஷ்ணுபுராணத்தில் : பகவான் கிருஷ்ணர் சிவபெருமானிடம் கூறுகிறார். கலியுகத்தில் அசுரத்தன்மையுள்ள மனிதர்கள் இருப்பார்கள் அவர்கள் தவறுகள் செய்துகொண்டே என்னையும் துதிப்பார்கள் அவர்கள் என்னை வணங்கிக்கொண்டே பாவகாரியங்கள் செய்துவருவதை தடுக்க நீர் உன்னை முழுமுதற்கடவுள் என கூறிக்கொண்டு சாஸ்த்திரகளை தவறாக புரிந்து கொள்ளும் படி செய்து அவர்களை திசை திருப்பி சிறிதுசிறிதாக பக்குவம் பெறும்படி செய்து முடிவில் என்னை முழுமுதற்கடவுள் என கூறி என்னை அடைய வழிவகுக்கவும். என கூறுவதாகயுள்ளது.

    தவறுசெய்யும் மக்களை திசை திருப்புவதற்காகவே சிவபெருமான் தன்னை முழுமுதற்கடவுள் என கூறினார் என பத்மபுராணம் விஷ்ணுபுராணத்தில் அவரே கூறுகிறார்.

    == பத்மபுராணத்தில (பூனா ஆநந்தாஸ்ரமபதிப்பில் உத்தரகண்டம் 263ம் அத்தியாயத்தில் உள்ளபடி) ==

    ReplyDelete
  6. பார்வதி தேவி சிவப்பிரானைப் பார்த்து பாஷண்டர்கள் என்பது நாஸ்திகர் என்றீர். அவர்களுடன் பேசவே கூடாதென்று நீர் சென்னீர். அப்பாஷண்டர்களின் லக்ஷணம் என்ன என்று கேட்டாள். அதற்கு சிவப்பிரான் சென்னார்.

    நாராயணனைக் காட்டிலும் வேறான ஒரு தேவனைப் பரமாத்மாவாக யார் கூறுகிறார்களோ, அவருக்கு சமமாக ப்ரஹ்மருத்ராதியான பிரம்மா சிவன் போன்ற தேவர்களை யார் கூறுகிறார்களோ, கபாலம், பஸ்மம் என்ற சாம்பல் எலும்பு முதலிய அவைதிகமான என்னும் சாஸ்த்திரத்திற்கு எதிரான அடையாளங்களை யார் தரிக்கிறார்களோ ஸந்யாஸ ஆஸ்ரமத்திற்குத் தகுதியில்லாமலே சடை,மரவுரிகளை யார் தரிக்கிறார்களோ சாஸ்த்திரத்திற்கு எதிரான பல செயல்களை யார் செய்கிறார்களோ அவர்கள் நாஸ்திகர்கள் என்று விரிவாக கூறுகினார்.

    இதை கேட்ட பார்வதி இதுவே நாஸ்திகார்கள் லக்ஷணம் எனில் நீர் ஏன் கபாலம். பஸ்மம் எலும்பு முதலிய் சாஸ்த்திரத்திற்கு எதிரான அடையாளங்களை ஏன் தாரிக்கிறீர் என்று கேட்க, இதற்கு முக்கட்பிரான் ஒருவருமில்லாத இடத்திற்கு பார்வதியை அழைத்துச்சென்று நீ இதை எவரிடமும் சொல்லாதே என்று ஆணையிட்டு, முற்காலத்தில் நமுசி முதலான அஸூர்கள் வேததர்ம நிஷ்டர்களாய் விஷ்ணு பக்தர்களாய் இருந்தமையாலே வெல்லவரிய பலம் வீரங்களை பெற்றிருந்தனர். அவர்களால் அடக்கப்பெற்ற தேவர்கள் பரமபுருஷரான விஷ்ணுவிடம் முறையிட்டனர்.

    விஷ்ணு என்னைப்பார்த்து தேவ த்வேஷிகள் என்னும் கிருஷ்ணரை நிந்தனை செய்பவர் சாஸ்த்திரத்திற்கு எதிரானவர்களாகவும் என்னிடம் பக்தியற்றவர்களாகி பலங்குறைந்தவர்கள் ஆவதற்காக நீ நேரேயும் பல அந்தணர்களை ஆவேசித்து நின்றும் பல பாஷண்ட சாஸ்த்திரங்களை அவர்களுக்கு உபதேசிப்பாயாக என்று நியமிக்க இதனால் எனக்குப் பெரும் பாவம் வந்து சேருமே என்று நான் நடுங்க தேவதைகளின் நலத்துக்கும் பாவிகளான அஸூரர்களை அழிவதற்கும் நீ இப்படி செய்தே தீரவேண்டும். ஆயினும் இதற்கு ப்ராயச்சித்தமாக என்னை நெஞ்சில் தியானித்து என்னுடைய தாரக மந்திரத்தை ஜபித்துக் கொண்டேயிருந்தால் உன்னிடம் பாபம் ஒட்டாது என்று விஷ்ணு கூறியதாக சிவன் பார்வதியிடம் கூறினார்.

    ReplyDelete
  7. இதை கேட்ட பார்வதி குற்றமற்ற தேவர் தலைவனே பகவத்பக்தியற்ற அந்தணர்களாலே சொல்லப்பெற்ற தாமஸ சாஸ்த்திரங்களை வரிசையாய் கூறுவிராக. அதற்கு சிவப்பிரான் தேவியே தாமஸ சாஸ்த்திரங்களை கூறுகிறேன் கேளாய். இந்தத் தாமஸ சாஸ்த்திரங்களை நினைத்தால்கூட அறிவாளிகளுக்கும் பதிதத்தன்மை ஆவான் அதாவது பாவியாக ஆவான்.

    முதன்முதலில் பாசுபதம் முதலான சைவாகமங்கள் என்னும் சிவபூஜை பஸ்மம் பூசுதல் என்னால் நேரே சொல்லப்பட்டன. என் சக்தியால் ஆவேசிக்கப்பட்ட அந்தணர்கள் தாமஸ சாஸ்த்திரங்களை உபதேசிக்கப் பட்டவைகளை இனி கேள். வைஸேஷிகம் என்னும் பெரிய ஸாஸ்திரம் கணாதராலே கூறப்பட்டது. கௌதமராலே ந்யாயஸாஸ்திரம் கூறப்பட்டது. இவ்விரண்டும் பரமாணுவை ஜகத்காரணமாகச் சொல்கின்றன. கபிலரால் மூலப்ரக்ருதி ஜகத்காரணமாகச் சொல்லும் ஸாங்க்ய ஸாஸ்திரம் செய்யப்பட்டது. தேவகுருவான பிருஹஸ்பதியால் மிகத் தாழ்ந்ததான சார்வாக ஸாஸ்திரம் இயற்றப்பட்டது. திரிபுராசுரர்களை அழிப்பதற்காக புத்தாவதாரம் எடுத்த விஷ்ணுவாலே நக்னம் நீலபடம் முதலான பிரிவுகளை உடைய பௌத்தம் என்னும் தீயஸாஸ்திரம் உபதேசிக்கப்பட்டது.

    மாயாவாதம் என்னும் தீயஸாஸ்திரம் மறைந்து நிற்கும் பௌத்தமதம் எனப்படுகிறது. கலியுகத்தில் (ஆதிசங்கராக) அந்தணவுருக் கொண்ட என்னாலேயே அது சொல்லப்பட்டது. வேதவாக்யங்களுக்கு அனைவரும் இகழத்தக்க அவப்பொருள்களை அந்த மாயாவாதம் காட்டும். அந்த மதத்தில் கர்மத்திற்கு ஸ்வரூபத்யாமமே சொல்லப்படும். அதில் எல்லாக் கர்மங்களினின்றும் நீங்கிய ஸந்யாஸமே சொல்லப்படும். அதில் ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் என்னால் ஸ்வரூபைக்யம் என்னும் ஒரே தன்மையும் பரமாத்மாவுடன் ஒன்றாகிவிடுதல் கூறப்படுகிறது. ப்ரஹ்மத்திற்கு நிர்குணஸ்வரூபம் என்ற குணமும் உருவமும் இல்லை என்று சொல்லப்பட்டது.

    கலியுகத்தில் தீயவர்கள் அனைவரும் மயங்குவதற்காக சாஸ்த்திரத்திற்கு எதிரான இந்தப் பெரிய ஸாஸ்திரம் வேதார்த்தம் போலே என்னால் வஞ்சனையால் அவர்களை அழிப்பதற்காக ரக்ஷக்கப்படப்போகிறது. நைமிநி என்னும் அந்தணராலே பூர்வபாகமாகிற பெரிய ஸாஸ்திரம் நிரீஸ்வரவாதம் செய்யப்பெற்று அவப்பொருளுடையதாகச் செய்யப்பட்டது.

    ReplyDelete
  8. மற்றும் சத்வகுண புராணங்கள் விஷ்ணு சம்பந்தமானவை அவை நற்குண புராணங்கள் 1 பாகவதபுராணம் 2. விஷ்ணுபுராணம் 3. நாரதபுராணம் 4. கருடபுராணம் 5. பத்மபுராணம் 6. வராஹபுராணம் ராஜஸகுண புராணங்கள் பிரம்மா சம்பந்தமானவை அவை அசுரகுண புராணங்கள் 1. ப்ரஹ்மாண்ட புராணம் 2. ப்ரஹ்ம வைவர்த்த புராணம் 3. மார்க்கண்டேய புராணம் 4. பவிஷ்ய புராணம் 5. வாமன புராணம் 6. ப்ரஹ்ம புராணம் தாமஸகுண புராணங்கள் சிவன் சம்பந்தமானவை அவை அறியாமைகுண புராணங்கள் 1. மத்ஸ்ய புராணம் 2. கூர்ம புராணம் 3. லிங்க புராணம் 4. சிவ புராணம் 5.ஸ்கந்த புராணம் 6. அக்னி புராணம் இதில் நற்குண புராணங்களே சாஸ்த்திரத்திற்கு உட்பட்டவை மற்றும் மோக்ஷத்தை கொடுக்கும் ராஜஸகுண புராணங்கள் சொர்கத்தையும் தாமஸகுண புராணங்கள் நரகத்தையும் கொடுக்கும் என சிவன் பார்வதியிடம் கூறினார்.

    மேலே கூறிய விசயங்கள் வேதங்களில் என்ன கூறியுள்ளதோ அதை அப்படியே உள்ளது சத்வ குணபுராணங்களில் மட்டுமே. ராஜஸகுண புராணங்கள் தாமஸகுண புராணங்களில் சில இடங்களில் கிருஷ்ணரே முழுமுதற்கடவுள் என கூறியுள்ளது ஆனாலும் அதில் கூறியபடி நடந்தால் அது பாவத்தையே உண்டாக்கும். இதே போல் உபநிஷத்துகளும் சத்வ குண உபநிஷத்துகள் விஷ்ணு சம்பந்தமானவை மோக்ஷத்தை கொடுக்கும் ராஜஸகுண உபநிஷத்துகள் பிரம்மா சம்பந்தமானவை சொர்கத்தையும் தாமஸகுண உபநிஷத்துகள் சிவன் சம்பந்தமானவை நரகத்தையும் கொடுக்கும் என சிவன் பார்வதியிடம் கூறினார்

    ReplyDelete
  9. == பத்ம புராணம் : பகவான் கிருஷ்ணரின் புனித நாமத்தை ஜெபிப்பதற்கு எதிரான 10 குற்றங்கள் ==
    1. பகவானின் புனித நாமத்தை பரப்ப தங்களது வாழ்கையை அர்ப்பணித்துள்ள பக்தர்களை நிந்திப்பது குற்றம்.
    2.பிரம்மா, சிவன் போன்ற தேவர்களின் நாமங்களை விஷ்ணுவின் நாமத்திற்கு சமமாகவோ தன்னிச்சையானவை என்றோ கருதுவது குற்றம்.
    3.ஆன்மீக குருவின் கட்டளையை மீறுவதும் அவரை ஒரு சாதாரண மனிதராக நினைப்பதும் குற்றம்.
    4.வேத இலக்கியங்களையும் வேத வழிவந்த நூல்களையும் நிந்திப்பது குற்றம். 5.கிருஷ்ணரின் புனித நாமத்தை கற்பனையானது என்று கருதுவது குற்றம்.
    6.புனித நாமத்திற்கு பௌதீகமான வியாக்யானம் கொடுப்பது குற்றம்.
    7.பகவானின் புனித நாமத்தின் பெயரால் பாவ காரியங்கள் செய்வது குற்றம்.
    8.வேதத்தில் கர்மகாண்ட பகுதியில் செயல்களுக்கு பலனை கொடுக்கும் சடங்குகளுக்கு ஈடாக திவ்ய நாமத்தை கருதுவது குற்றம்.
    9.நம்பிக்கையில்லாத நபர்களுக்கு பகவானின் புனித நாமத்தை எடுத்து சொல்வது குற்றம் 10.பௌதீக பந்தத்தின் காரணமாக புனித நாமத்தின் மகிமையை அறிந்தும் பூர்ண நம்பிக்கை இல்லாமல் இருப்பதும் பகவான் நாமத்தை கவன குறைவாக உச்சரிப்பதும் குற்றமாகும்.

    (யஸ் து நாராயணம் தேவம் ப்ரஹ்ம ருத்ராதி தேவதை: ஸமத்வேனைவ வீகேஷதஸ பாஷண்டீ பவேத் த்ருதம்)
    '''பிரம்மா,சிவபெருமான் போன்ற தேவர்களைக்கூட நாராயணருக்குச் சமமாக பார்க்க கூடாது, பார்ப்பவனை நாஸ்திகன் என்பர்.
    '''

    ReplyDelete
  10. == பத்ம புராணம் : பகவான் கிருஷ்ணரின் புனித நாமத்தை ஜெபிப்பதற்கு எதிரான 10 குற்றங்கள் ==
    1. பகவானின் புனித நாமத்தை பரப்ப தங்களது வாழ்கையை அர்ப்பணித்துள்ள பக்தர்களை நிந்திப்பது குற்றம்.
    2.பிரம்மா, சிவன் போன்ற தேவர்களின் நாமங்களை விஷ்ணுவின் நாமத்திற்கு சமமாகவோ தன்னிச்சையானவை என்றோ கருதுவது குற்றம்.
    3.ஆன்மீக குருவின் கட்டளையை மீறுவதும் அவரை ஒரு சாதாரண மனிதராக நினைப்பதும் குற்றம்.
    4.வேத இலக்கியங்களையும் வேத வழிவந்த நூல்களையும் நிந்திப்பது குற்றம். 5.கிருஷ்ணரின் புனித நாமத்தை கற்பனையானது என்று கருதுவது குற்றம்.
    6.புனித நாமத்திற்கு பௌதீகமான வியாக்யானம் கொடுப்பது குற்றம்.
    7.பகவானின் புனித நாமத்தின் பெயரால் பாவ காரியங்கள் செய்வது குற்றம்.
    8.வேதத்தில் கர்மகாண்ட பகுதியில் செயல்களுக்கு பலனை கொடுக்கும் சடங்குகளுக்கு ஈடாக திவ்ய நாமத்தை கருதுவது குற்றம்.
    9.நம்பிக்கையில்லாத நபர்களுக்கு பகவானின் புனித நாமத்தை எடுத்து சொல்வது குற்றம் 10.பௌதீக பந்தத்தின் காரணமாக புனித நாமத்தின் மகிமையை அறிந்தும் பூர்ண நம்பிக்கை இல்லாமல் இருப்பதும் பகவான் நாமத்தை கவன குறைவாக உச்சரிப்பதும் குற்றமாகும்.

    (யஸ் து நாராயணம் தேவம் ப்ரஹ்ம ருத்ராதி தேவதை: ஸமத்வேனைவ வீகேஷதஸ பாஷண்டீ பவேத் த்ருதம்)
    '''பிரம்மா,சிவபெருமான் போன்ற தேவர்களைக்கூட நாராயணருக்குச் சமமாக பார்க்க கூடாது, பார்ப்பவனை நாஸ்திகன் என்பர்.
    '''

    ReplyDelete