Wednesday, November 19, 2014

கடவுளை தாயாகக் கருதுங்கள்

ராஜாஜி
* இறைவனின் தரிசனம் சாஸ்திரம் படித்தால் மட்டும் கிடைத்துவிடாது. ஆண்டவன் அருள் இருந்தால் தான் அது கிடைக்கும். அதற்கு மனம் கரைந்து உருகவேண்டும். பக்தியால் மனம் பழுக்க வேண்டும்.
* காலையில் எழும்போது, கொஞ்சம் தியானம் செய்துவிட்டு எழுங்கள். எந்த நிலையில் வேண்டுமானாலும் தியானம் கைகூடும். அதற்கு வேண்டியது உளப்பூர்வமான பக்தி மட்டுமே.
* ""இறைவா! என் உள்ளத்தை காத்தருள்வாயாக. நீ கோயில் கொள்ளத் தகுந்த இடமாக மனத்தூய்மையுடன் இருக்க அருள்புரிவாயாக!'' என்று மனதில் சொல்லிக் கொண்டே இருங்கள்.
* கடவுளைத் தந்தையாக, தாயாக, எஜமானாக, குழந்தை யாக எப்படி வேண்டுமானாலும் கருதி வழிபாடு செய்யலாம். தாயாகக் கருதி வழிபாடு செய்வது மிகவும் உத்தமமானது.
* இரவு தூங்கச் செல்லும்முன், ""இன்று நான் செய்த குற்றங்கள் இத்துடன் தீர்ந்து போகட்டும். இனிமேல் நான் இந்த குற்றத்தைச் செய்ய மாட்டேன்,'' என்று உள்ளம் உருகி வேண்டினால், இறைவன் நிச்சயம் மன்னிப்பான்.

No comments:

Post a Comment