Tuesday, June 23, 2015

கடன் தீர உதவும் ஆன்மீக ரகசியங்கள் !!!

கடன் தீர்க்கும் கணபதி மந்திரம்
ஓம்| கணேசாய | ருணம் சிந்தி வரேண்யம் | ஹூம் நம பட் ||
இந்த மந்திரத்தை ஜெபிக்கும் முன்னர் தலை உச்சியில் முத்திரை போட்டு ''ஓம் ஸ்ரீ கனகரிஷியே நமஹ'' என்று 3 தடவை சொல்லி மந்திரம் பலிக்க வேண்டிக்கொள்ளவும்.
கிழக்கு முகமாக அமர்ந்து குறைந்தது 27 தடவை அதிகபட்சமாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஜெபிக்கலாம்.
பிரயோகம் :-
இரவில் அல்லது பகலில் யாரும் பாராமல் இருந்து விளக்கேற்றி இந்த மந்திரத்தை 108 தடவை ஜெபித்து விளக்கின் பாதத்தில் குங்குமம் இட்டு அந்தக் குங்குமத்தை அணிந்து வர விரைவில் மந்திர சித்தியாகும்.
எண்ணிக்கை கூடக்கூட கடன் தீர்ந்து எல்லா நிலைகளிலும் விருத்தி உண்டாகும்.
90 நாட்களுக்கு குறைந்தது 108 தடவை ஜெபித்து வரவும்.90 நாட்கள் கழித்து கணபதி ஹோமம் செய்து கொள்ளவும்.
கணபதி ஹோமம் முடிந்ததும் கணபதி ஹோமம் செய்யப்பட்ட ஹோமச் சாம்பலை வெற்றிலையில் நெய் விட்டு தர்ப்பையை கருக்கி வைத்த மையை அணிந்து வரவும்.
2.ஸ்ரீ சங்கடஹர கணபதி பிரயோகம் :-
சங்கடஹர சதுர்த்தி அன்று அருகில் உள்ள விநாயகர் ஆலயம் சென்று அருகம்புல் மாலை சார்த்தி அர்ச்சகரிடம் சொல்லி மறுநாள் அந்த மாலையில் கொஞ்சம் வேண்டும் என்று வாங்கி அந்த அருகம்புல்லில் கொஞ்சம் மட்டும் எடுத்து ஒரு செம்பு பாத்திரத்தில் நீர் நிரப்பி இந்த மந்திரத்தை 108 தடவை ஜெபித்து அந்த நீரை வீட்டில் உள்ளோர் முகத்தில் தெளித்து பின்னர் வீடு முழுவதும் தெளித்து விட்டு மீதம் உள்ள அருகம்புல்லை வெள்ளை அல்லது மஞ்சள் பட்டு துணியில் சுற்றி வீடு,அலுவலகம் ,கடைகளில் சாமிபடத்தின் முன்னால் அல்லது ஈசான்ய மூலையில் வைக்கத் தரித்திரம், பீடை, காரியத்தடை விலகி சுபிட்சம் உண்டாகும்.
ஸ்ரீ சங்கடஹர கணபதி மந்திரம் :-
ஒம் நமோ ஹேரம்ப மதமோதித |
மம சர்வ சங்கடம் நிவாரய நிவாரய|
ஹூம் பட் ஸ்வாஹா ||
சங்கடஹர சதுர்த்தி அன்று விரதம் இருந்து இந்த மந்திரத்தை 108 தடவை ஜெபித்து வரவும்.
3.ஸ்ரீ பைரவ மந்திரம்
தேய்பிறை அஷ்டமி தோறும் சிவாலயத்தில் உள்ள பைரவருக்குப் பாலாபிசேகம் செய்து அந்த ஆலயத்தில் வடக்கு முகமாக அமர்ந்து கீழ்க்கண்ட மந்திரத்தில் ஏதேனும் ஒன்றை ஜெபிக்கத் தொடங்கவும்.
ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷன பைரவ மந்திரம்
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்வர்ணாகர்ஷன பைரவாய ஹூம் பட ஸ்வாஹா
ஸ்வர்ணாகர்ஷன பைரவ யந்திரத்தை வெண்ணிற அல்லது செந்நிறப் பூக்களால் அர்ச்சிக்கவும். மந்திரத்தைத் தினமும் குறைந்தது 108 தடவை ஜெபித்து வரவும்.
செவ்வாய்க்கிழமை மதியம் 12 முதல் 1:30 மணிக்குட்பட்ட நேரத்தில் கடன் தொகையில் ஒரு சிறு பகுதியையாவது திரும்பச் செலுத்தவும்.விரைவில் கடன் தீரும்.
செவ்வாய்க்கிழமை அன்று ஒரு பச்சை நிற பட்டுத் துண்டு வாங்கி பன்னீர் கலந்த தண்ணீரில் அலசிக் காயவைக்கவும்.மறுநாள் புதன்கிழமை அதிகாலை 6 முதல் 7 மணிக்குள் அந்தத் துண்டில் சிறிது கிழித்து அல்லது வெட்டி அதில் சிறிது வெந்தயம் போட்டுப் பணம் வைக்கும் இடத்தில் வைக்கவும். தொடர்ந்து பணவரவு உண்டாகும்.
வாழ்க வையகம் !!! வாழ்கவளமுடன் !!!
M.சூர்யா
தச்சநல்லூர்,திருநெல்வேலி
http://suryatamil1.blogspot.in/


No comments:

Post a Comment