Thursday, December 11, 2014

பிராணயாமம் செய்ய தொடங்கும் முன் கவனிக்க வேண்டியது !!!

பிராணன், உயிர் ஆற்றல் எனப்படும். இதை ஒழுங்குபடுத்துவதே பிராணயாமம். பிராணயாமம் என்பது வெறும் சுவாசம் அல்ல. சுவாச முறை (மூச்சை உள்ளிழுத்தல், வெளிவிடுதல், நிறுத்திக் கொள்ளுதல்) உயிராற்றலை தன்னிடத்து கொண்டிருக்கவில்லை.
பிராணயாமம் சுவாசத்தை ஒழுங்குபடுத்துகிறது. அத்துடன் புலன்களையும், மனத்தையும் செம்மைப்படுத்துகிறது. பிராணயாமத்தினால் நாம் உடலை ஆரோக்கியமானதாகவும், வலுவுள்ளதாகவும் ஆக்கிக் கொள்ளலாம். பிராணயாமத்தினால் உடலில் தேங்கிக்கிடக்கும் அதிகப்படியான கொழுப்பு கரைக்கப்படுகிறது. பிராணயாமத்தில் ஈடுபடுபவர்கள் சளி, இருமல் போன்ற நோய்களிலிருந்து விடுபடுவார்கள்.
பிராணயாமத்தை தொடர்ந்து செய்து வருபவர்களின் முகத்தில் நல்ல தேஜஸ் தோன்றும். பிராணயாமப் பயிற்சினால், நுரையீரல் முழுவதும் போதிய பிராணவாயுவை பெறுகிறது. அதற்கு கிடைக்கும் ரத்த்தின் அளவும், தரமும் அதிகமாகிறது. உடலின் எல்லாத்திசுக்களுக்கும், செல்களுக்கும் ஏராளமான சுத்தரத்தமும், நிணநீரும் கிடைக்கின்றன.
உயிர்களின் வளர்ச்சியை பிராணயாமம் துரிதப்படுத்துகிறது. பிராணயாமப் பயிற்சிகளை செய்வதற்கு குறிப்பிட்ட யோக ஆசன நிலைகள் சிறந்தவை. எல்லா பிராணயாமப் பயிற்சிகளையும் ஏதாவது ஒரு உட்கார்ந்திருக்கும் நிலையில் தான் பயிற்சி செய்ய வேண்டும்.
அப்போது முதுகு, கழுத்து, தலை ஆகியவை நேராக இருக்க வேண்டும். பிராணயாமம் செய்யும் முன் உடலையும், உள்ளத்தையும் அமைதியாக வைத்திருக்க உதவும் சவாசனத்தை செய்து பிறகே பிராணயாமத்தை தொடங்க வேண்டும்.
யோகசானங்கள் செய்வதற்கு பலவித கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும். ஆனாலும் சவாசனம் என்ற சாந்தி ஆசனத்தை யார் வேண்டுமானாலும் செய்யலாம். இதற்கு எந்த கட்டுப்பாடுகளுகளும் இல்லை. குறிப்பாக நோயினால் அவதிப்படுபவர்கள் இந்த சவாசனத்தை செய்வதன் மூலம் நோயின் வலியையும், மனக்குழப்பத்தையும் தணித்துக் கொள்ளலாம். மிகச்சிறந்த ஆசனம் இது.
சுவாச சுத்தி என்ற நாடிசுத்தி !!!

பிராணயாமங்களின் அடிப்படை என்பது நாடி சுத்தி என்றழைக்கப்படும் சுவாச சுத்தியே. சுவாச சுத்தி என்பது, இடதுபுற நாசித்துவாரத்தில் காற்றை உள்ளிலுத்து பின்பு காற்றை அடக்காமல் வலப்புற நாசியின் வழியே காற்றை வெளியேற்ற வேண்டும்.
அதன்பின்பு வலப்புற நாசியினால் காற்றை உள்ளிழுத்து காற்றை அடக்காமல் இடப்புற நாசி வழியே காற்றை வெளியிட வேண்டும். இவ்வாறாக மாறிமாறி செய்வதால் சுவாசம் சுத்தமடையும். இச்செயலின் காலத்தில் அதிகமாக கோபப்படுதல், வேகமடைதல் போன்ற உணர்ச்சிகளுக்கு ஆளாக கூடாது. நிதானமும், அமைதியும் வேண்டும்.
காலை வேளையே இந்த பயிற்சிக்கு சரியானதாகும். குளிர்ந்த நீரைப்பருகி வெறும் வயிற்றுடன் இந்த பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். இந்த பயிற்சியை பழகிய பின்பு தினமும் காலை, உச்சி வேளை, மாலை வேளை என்று மூன்று நேரங்களிலும் இந்த பயிற்சியை நிதானமாக செய்ய வேண்டும். இப்படியே தொடர்ந்து ஒரு மாதம் செய்தால் நாடி சுத்தமடையும்.
இதை இன்னும் சுருக்கமாக சொல்லலாம். காற்றில் கண்ணுக்கு தெரியாத கிருமிகள் கலந்திருக்கின்றன. இவை நாம் சுவாசிக்கும் போது சுவாசத்தின் வழியாக உடலுக்குள் சென்று உடலை நோய்வாய்ப்படுத்துகின்றன. இந்த நோய்க்கிருமிகளை தான் ஆலகால விஷம் என்று புராணங்கள் சொல்கின்றன.
இந்த விஷத்தை முறியடிக்க வாசுகி என்னும் வாசிக்கலை முக்கியமானதாகிறது. மூச்சுக்கலையால் உடலுக்குள் செல்லும் விஷங்கள் எல்லாம் முறிக்கப்பட்டு உடலுக்குள் தூய பிராணன் மட்டுமே நிறைகிறது. இப்படி தூயகாற்றால் உடலின் நுண்உறுப்புகள் எப்போதும் பரிசுத்த தன்மையுடன் விளங்குவனவாக அமைகின்றன.


No comments:

Post a Comment