Thursday, December 10, 2015

உங்கள் கர்மவினை தீர மரக்கன்று நடுங்கள்!!!

ஒருவரது பிறந்த நட்சத்திரத்திற்கு உரிய மரக்கன்றை வாங்கி ஒரு கோயில் சார்ந்த பகுதியில் அல்லது வீடுகளில் அல்லது பொது இடங்களில் தென்மேற்குப் பகுதியில் சூரியக்கதிர்கள் படும் இடத்தில் நடவேண்டும். அந்த மரக்கன்றையும் அவரது பிறந்த நட்சத்திரம் உதயமாகும் நாளில் நடுவது மிக நன்று.
மரக்கன்றை நட்டதும் அவரது கையால் நவதானியங்களை ஊற வைத்த நீரை அச்செடிக்கு விட்டு, ஊறிய நவதானியங்களையும் அந்த மரக்கன்றுக்கு உரமாகப்போட வேண்டும். இப்படிச் செய்து அந்த மரத்தை பேணி பாதுகாத்து வர அம்மரக்கன்று வளர, வளர அதை நட்டவரின் வாழ்க்கையும் மலரும்.
அந்த மரக்கன்றை நட்டவரின் பிறந்த ஜாதகத்தில் இருக்கும் அனைத்து தோஷங்களையும் அந்த மரக்கன்று ஈர்த்துவிடும். அம்மரக்கன்று பூத்து, காய்க்கும்போது, உரியவரின் வாழ்க்கையும் செழிப்பாகத் துவங்கும். அவரது கர்மவினைகள் நீங்கியிருக்கும். கர்மவினைகளை வெற்றிகொள்ள ‘விருட்ச சாஸ்திரம்’ இப்படி ஒரு வழிகாட்டுகிறது.
கண் திருஷ்டிக்கு தாவர பரிகாரம் !!!
---------------------------------------------------
கண் திருஷ்டி என்பது எல்லோரும் தன்னை நோக்குதல் என பொருள் படும் ஒருவர் அழகாக ஒரு வீட்டை கட்டியிருக்கிறார் என்றால் அந்த தெருவில் செல்லும் எல்லோரும் அந்த வீட்டையே உற்று நோக்குவர்.
இதை வீட்டை கண் வைக்கிறார்கள் என கிராமத்தில் சொல்வதுண்டு அப்பொழுது திருஷ்டியை போக்க என்ன செய்ய வேண்டுமென்றால் அவர்களுடைய ஒட்டுமொத்த கண்பார்வையும் படுமாறு அங்கு ஏதாவது ஒரு பொருளை வைக்க வேண்டும்.
தாவரங்களுக்கு கண் திருஷ்டியை எடுக்க கூடிய குணம் உண்டு. அதனால் வீட்டு வாசலில் அழகான ரோஜா செடிகளை பிறர் பார்வையில் படுமாறு வாங்கி வைக்கலாம். தொங்கும் தோட்டங்களை அமைக்கலாம்.
தாவரங்களுக்கு கடும் கண் பார்வையை ஈர்க்கும் சக்தி உள்ளதால் இது போல ரோஜா செடி வளர்ப்பது, தோட்டங்கள் அமைப்பது மூலமாக வீட்டுக்கு ஏற்படும் தீய தோஷங்களை போக்கலாம்.
---------------------------------------------------------------------
உங்கள் ராசி மற்றும் நட்சத்திரத்திற்குரிய மரங்களை பற்றி தெரியுமா?....
மொத்தம் 27 நட்சத்திரங்களும், 12 ராசிகளும் உள்ளன. இதில் ஒவ்வொரு நட்சத்திரம் மற்றும் ராசிகளுக்கு என்று மரம் உள்ளது. பண்டைக்காலத்தில் மரங்களை மக்கள் வழிபட்டு வந்துள்ளனர்.
அதே போல் ஒவ்வொரு மரத்துக்கும் ஒரு மருத்துவ குணம் உண்டு. இது பலருக்கு தெரியாது. ஒவ்வொரு நட்சத்திரம் மற்றும் ராசிகளுக்குரிய மரங்களை வழிபட்டு வந்தாலே பலன் கிடைக்கும். இனி நட்சத்திரம் மற்றும் ராசிகளுக்குரிய மரங்கள் பற்றி பார்ப்போம்...
நட்சத்திரம்:
* அஸ்வதி ஈட்டி மரம்
* பரணி நெல்லி மரம்
* கார்த்திகை அத்திமரம்
* ரோகிணி நாவல்மரம்
* மிருகசீரிடம் கருங்காலி மரம்
* திருவாதிரை செங்கருங்காலி மரம்
* புனர்பூசம் மூங்கில் மரம்
* பூசம் அரசமரம்
* ஆயில்யம் புன்னை மரம்
* மகம் ஆலமரம்
* பூரம் பலா மரம்
* உத்திரம் அலரி மரம்
* அஸ்தம் அத்தி மரம்
* சித்திரை வில்வ மரம்
* சுவாதி மருத மரம்
* விசாகம் விலா மரம்
* அனுஷம் மகிழ மரம்
* கேட்டை பராய் மரம்
* மூலம் மராமரம்
* பூராடம் வஞ்சி மரம்
* உத்திராடம் பலா மரம்
* திருவோணம் எருக்க மரம்
* அவிட்டம் வன்னி மரம்
* சதயம் கடம்பு மரம்
* பூரட்டாதி தேமமரம்
* உத்திரட்டாதி வேம்பு மரம்
* ரேவதி இலுப்பை மரம்
ராசிகள்
* மேஷம் செஞ்சந்தனம் மரம்
* ரிஷபம் அத்தி மரம்
* மிதுனம் பலா மரம்
* கடகம் புரசு மரம்
* சிம்மம் குங்குமப்பூ மரம்
* கன்னி மா மரம்
* துலாம் மகிழ மரம்
* விருச்சிகம் கருங்காலி மரம்
* தனுசு அரச மரம்
* மகரம் ஈட்டி மரம்
* கும்பம் வன்னி மரம்
* மீனம் புன்னை மரம்
இந்த மரங்களை, ஈரோடு அருகேயுள்ள லக்காபுரம்புதுõர் லட்சுமி நாராயணர் கோயில், சென்னை திருவொற்றியூர் வடிவுடை நாயகி அம்மன் கோயி ல், மதுரை மீனாட்சியம்மன் கோயில் ஆகிய இடங்களில் வணங்கலாம்.

No comments:

Post a Comment