Monday, December 7, 2015

பணம் பொங்கும் பால் காளான் வளர்ப்பு,

Vikram Bala added 10 new photos — feeling optimistic.
பணம் பொங்கும் பால் காளான் வளர்ப்பு,
சிறுதுளி பெருவெள்ளம் என்பதைப் போல.. சிறுதொழில் செய்தே சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்கள் ஏராளம். இந்த காளான் வளர்ப்பில் மூலம் நீங்களும் எதிர்காலத்தில் ஒரு சிறந்த தொழிலதிபராக மாறிக்கூடிய வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. ஆம் நண்பர்களே! பால் காளான் வளர்ப்பதன் மூலம் நமது வருமானத்தைப் பெருக்குவதோடு வாழ்வில் வளமும் பெறலாம். மாதம் ஒரு லட்சம் (100000)வரை சம்பாதிக்கலாம். இனி பால்க்களானின் மருத்துவ பலன்களும் அதன் வளர்ப்பு முறைகளும் உங்களுக்காக..
மருத்துவ பலன்களும், உணவு முறையும்:
இப்போது இந்த காளான் வகைகளை அதிகம் விரும்பி உண்ணத் தொடங்கிவிட்டார்கள். காரணம் அசைவ சுவைக்கு நிகரான சுவையைத் இது தருவதால்தான். மேலும் இதில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் டி , கால்சியம், பாஸ்பேட், பொட்டாசியம் மற்றும் காப்பர் போன்ற தாதுச் சத்துக்களும் நிறைந்திருக்கின்றன.
உடலுக்குத் தேவையான சத்துக்கள் அனைத்தும் சரிவிகிதத்தில் கலந்திருப்பதால் இது ஒரு சரிவிகித உணவாகவும் இருக்கிறது. இதை மருத்துவர்கள் சிபாரிசு செய்கிறார்கள். மேலும் இதன் முக்கியமான மருத்துவ குணம் சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்துவது.
இதற்கு பருவம் என்றொரு கால அளவு எல்லாம் இல்லை. எப்போது வேண்டுமானால் வளர்க்கலாம்.
இத்தொழிலை எப்படிச் செய்வது?
மிகவும் எளிதுதான். நம் வீட்டிலேயே செய்யலாம். கொஞ்சம் இடம் இருந்தால் அதற்காக ஒரு குடில் அமைத்தும் செய்யலாம்.
எப்படி விற்பனை செய்வது?
(Marketing)
அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு கொடுக்கலாம். 200 கிராம் நாற்பது ரூபாய் என்ற விலையில் விற்கலாம். ஒரு கிலோ காளான் 190 ரூபாய்க்கும் விற்கலாம். அருகில் உள்ள ஹோட்டல்களுக்கு கொடுக்கலாம். காளானைக் கொண்டு பலவித உணவுப்பொருட்களை தயாரிக்கிறார்கள். எனவே இந்த காளான்களுக்கு எப்போதுமே அதிக கிராக்கி உண்டு.
முக்கிய குறிப்பு: அறுவடை செய்த காளான்களை ஐந்து நாள் வரைக்கும் வெளியில் வைக்கலாம். குளிர்பதனப்பெட்டியில் என்றால் பத்து நாட்கள் வரைக்கும் வைக்கலாம்.செலவும் மூலதனமும் மிக குறைவாக இருப்பதால் இது பெண்களுக்கு ஏற்ற தொழிலாக இருக்கிறது. வீட்டிலிருந்தபடியே நமது வருமானத்தை பெருக்கிக்கொள்ள இது ஒரு மிகச்சிறந்த வழிமுறையாகவும், சிறுதொழிலாகவும் விளங்குகிறது.
தமிழ் நாட்டில் பல இடங்களில் காளான் வளர்ப்புப் பற்றி பயிற்சி வகுப்புகளை நிகழ்த்தி வருகிறார் திரு.சுந்தர ராஜன் என்பவர். இவர் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி என்ற ஊரில் “காளான் வளர்ப்பு பண்ணை மற்றும் விதை தயாரிப்பு ஆய்வுக் கூடம்” என்று ஒரு கூடத்தை நிறுவி செயல்பட்டு வருகிறார்.
தவிர இம்மாவட்டத்தைச் சுற்றியுள்ள பல மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு காளான் வளர்ப்பு பற்றி ஒருநாள் பயிற்சி அளித்த தோடு அவர்களுக்கு வங்கிக் கடன் வழங்குவதற்கான உதவியும் செய்து வருகிறார்.
காளான் வளர்க்க வங்கியில் கொடுக்கப்படும் கடன் 1 லட்சம் முதல் 5 லட்சம் வரை ஆகும்.
காளானில் உள்ள சத்துக்கள்:
காளானில் அதிக புரோட்டீன் சத்து உள்ளது. எந்தத் தாவரத்திலும் இல்லாத சத்து இதில் உள்ளது.
தாவர வகைகளிலேயே அதிக புரோட்டீன் சத்து உள்ள ஒரே வகைத் தாவரம் காளான் ஆகும். இதனால் தான் இதன் விலையும் அதிகம்.
காளான் உணவின் மகத்துவங்கள்:
உயர் ரத்த அழுத்தத்தை சீராக்கும்
நீரழிவு, புற்றுநோய்க்குத் தடுப்பாய் செயல்படும்.
சர்க்கரை நோய்க்குத் தடுப்பாய்ச் செயல்படும்.
இதய நோய்க்குத் தடுப்பாய்ச் செயல்படும்.
ஒட்டு மொத்த நோய் எதிப்புத் தன்மையை உடலுக்குத் தரும்.
இவ்வாறு காளான் வளர்ப்பில் பல நன்மைகளைக் கூறிய திரு.சுந்தரராஜன் என்பவர் “NATURAL KALAN PANNAI” என்ற பெயரில் காளான் வளர்ப்பு மற்றும் விதை தயாரிப்பு ஆய்வுக் கூடத்தை நிறுவி, இயங்கி வருவதின் நோக்கம் என்னவெனில்…
ஆரோக்கியமான உணவு மூலம் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குதல்.
தமிழக உணவுத் தயாரிப்பு தமிழருக்கு மட்டுமின்றி உலகிற்கும்.
விவசாயத் தொழிலை லாபகரமாக்குதல்.
கிராமப்புற ஏழைப் பெண்களுக்கு வாழ்வாதாரம் உருவாக்குதல்.
இவரின் அறிமுகத்தில் காளான் உணவு வகைகள்:
காளான் சூப் தயாரிப்பு.
காளான் டின் (உடனே உண்பதற்கேற்ற தயாரிப்பு)
காளான் மசாலா (குழம்பிற்கு)
காளான் கிரேவி
காளான் பிரட், காளான் பிஸ்கெட், காளான் ஊறுகாய்
காளான் கட்லெட், காளான் பக்கோடா
அதிக புரோட்டீன் உள்ள காளான் பானம்
காளான் பிரியாணி
– போன்ற உணவுகள்.
காளான் வளர்க்கும் விவசாய மக்களுக்கு காளான் விதை, மற்றும் வளர்க்கத் தேவையான அனைத்துப் மூலப்பொருட்களையும் கொடுத்து உதவுகிறோம். இவர்கள் உற்பத்தி செய்த மொத்த காளான்களையும் எங்கள் நிறுவனம் வாங்கிக் கொண்டு அதற்குறிய பணத்தை, விற்பவரின் வங்கிக் கணக்கில் வரவு வைத்துக் கொண்டு வருகிறது. தவிர அனைத்து மாவட்ட மகளிர் குழுக்களுக்கும், தனிப்பட்ட நபர்களுக்கும் எங்கள் நிறுவனம் காளான் வளர்ப்பில் பயிற்சி அளித்து வருகிறது.
அது தவிர கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு குறிப்பாகத் தாவரவியல் படிக்கும் மாணவர்களின் ஆய்வுக்கு உதவி செய்து வருகிறோம். காளான் வளர்ப்பு பற்றியும் அறிவுரை வழங்கி வருகிறோம்.
இதைத் தமிழகம் முழுக்க பல மாவட்டங்களில் பயிற்சி அளித்து பலருக்கும் வழிகாட்ட வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட்டு வருகிறேன். இதன் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும். நலிந்த கொண்டிருக்கும் விவசாயத்தை லாபமான தொழிலாக மாற்றுவதற்கான முயற்சியில் இறங்கியும், அதற்காகத் தீவிரமாக உழைத்தும் வருகிறேன். வெளிநாடுகளில் காளான் ஏற்றுமதி செய்ய மாதம் 5000 கிலோ தேவை இருக்கிறது. அதனை எட்டிவிட வேண்டும் என்ற முனைப்போடும் செயல்பட்டு வருகிறேன்.
மேலும் தொடர்புக்கு – திரு. சுந்தரராஜன் – 9600334848
NATURAL KALAN PANNAI
மேலும் இதை நீங்கள் SHARE செய்தால் பல பேர்க்கு உதவியாக இருக்கும். . . .

No comments:

Post a Comment