Monday, December 14, 2015

பொதுவாக,தியானம் செய்கின்றவர்கள்,அவர்கள் செய்கின்ற தியானம் சித்தியாக என்னென்ன செய்தால் பலன்கள் விரைவில் தெரியும்?

{ சித்தர்களின் அனுபவத்திலிருந்து }
1.ஒரே நேரத்தில் ,தினசரி தியானம் செய்ய
வேண்டும்.
2.அதிகாலை நேரத்தில் செய்ய
வேண்டும்.
3.முடிந்த போதெல்லாம்
மௌனத்தை கடைபிடிக்க வேண்டும்.
4.அதிகளவு உணவு சாப்பிடாமல் ,தன் உடல்
மற்றும்
மன உழைப்புக்கு போதுமான உணவு மட்டும்
உண்ண வேண்டும்.
5.மனம் விட்டுசந்தோஷமாக பக்தியுடன்
பாடலாம்,அல்லது
ஒய்வு நேரங்களில் மனதுக்கு பிடித்த
பாடல்களை கேட்கலாம்.
6.சித்தர்களின்பாடல்களை பாடலாம் அல்லது
படிக்கலாம்.
7.அடுத்தவர்க்கு பயன்படும்
நற்காரியங்களை,சுயநலம் இன்றி,பிரதிபலன்
பாராது செய்யலாம்.
8.யாரிடமும்
பேசாது,ஒய்வு நேரங்களில் காலார,மனதார
நடந்து செல்லலாம்.
9.தினசரி என்னநடந்தாலும் அது இறைவன்
செயல் என என்னி
பழகி வந்தால் அதிசயமான நிகழ்வுகளை
காணலாம்.
10.சும்மா இருக்கும்போது,கண்களை மூடி,
ஓடுகின்ற மூச்சின் மீது
மட்டும் கவனத்தை வைத்து ,அமர்ந்து
தியானிக்கலாம்.
11.கனவுகளை தினசரி
குறிப்பு எடுத்து வைக்கலாம்.
12.காலைஎழுந்தவுடன் முதலில் தமது வலது
உள்ளங்கையை பார்த்து,அதில் தமது
குருநாதரோ,அல்லது தமது வழிபடு
தெய்வமோ இருந்து அருள்வதாக நினைந்து
பிராத்தனையுடன் தினசரி பொழுதை
தொடங்கலாம்.
13.சாயா தரிசனம் தினசரி
பயிற்சி செய்யலாம்.
14.பௌர்ணமி யன்று
முடிந்த நீண்ட நேரம் கடற்கரை,உயரமான
மலை,அல்லது அமைதியான
ஆலயங்கள்,சித்தர்களின் இருப்பிடங்கள்
அல்லது தனியறையில் இரவு பகல் தியானம்
செய்யலாம.

No comments:

Post a Comment