Monday, October 6, 2014

ஸ்ரீ நாராயணகுரு பொன்மொழிகள்

ஒரு சாதி, ஒரு மதம், ஒரு கடவுள் - மனிதருக்கு. மதம் எதுவாயினும் மனிதன் முன்னேறினால் போதும். எல்லா மதங்களின் உயிர்ச்சத்தும் ஒன்றே.
சாதியைப் பேசாதே! சாதியைக் கேடாதே!! சாதியை நினைக்காதே!!!
செய்வது எதுவாக இருந்தாலும் அதை அழகுறச் செய்ய வேண்டும். எதையும் செய்வதற்குச் சோம்பல் கூடாது.
ஒருவர் செய்யும் செயல் பிறருக்கான நன்மையின் நோக்கமாக இருத்தல் வேண்டும்.
துறவி என்பவர் பரோபகாரம், தியாகம், சுயநலமின்மை, பொதுமக்களுக்குச் சேவை செய்தல் ஆகியவற்றைச் செய்பவர்.
தர்மம் என்பதுதான் முழுமையான கடவுள். முழுமையான செல்வம். தர்மம் எங்கு சென்றாலும் வெற்றியடையும். உயர்வுக்கும் வழிகோலும்.
ஒருவன் நல்லவனா? தீயவனா? என்பதை அவனது செய்கைகளிலிருந்து கவனித்துப் புரிந்து கொள்ள் வேண்டும்.
மகிழ்ச்சியடைவது என்பது அவரவர்களுடைய செய்கையின் தீவிரத்தினால் மட்டுமே இயலும்.
விவேகம் என்பது தானாகவே ஒருவனுக்கு அமையுமா? அதற்கு நல்ல பயிற்சி வேண்டும். நல்ல புத்தகங்களைப் படிக்க வேண்டும்.
நூறு வருடங்களாக இருண்டு கிடந்த அறையில் நூறு வருடங்கள் தொடர்ந்து விளக்கு எரிந்தால்தான் அந்த இருள் நீங்கும் என்பது சரியாகுமா?
வற்றாத அன்புடன் கணவன், மனைவி எங்கு வாழ்கின்றனரோ அங்குதான் அதிக அழகுடனும், முழு செழிப்புடனும் விளங்கும் உண்மையான முழுமையான குடும்பத்தைக் காண முடியும்.
மதங்கள் என்பது நுணுக்கமான உயர்ச் செய்திகளை அறிய உதவும் பாதைகள் அவ்வளவுதான்.
அனைத்து விலங்கினங்களிடமும், கருணையும், நட்பும் கொண்டு சமமாகப் பாவிக்கும் மனிதர்களாக இருக்க வேண்டும்.
கோபம் கொள்ளக் கூடாது. எதையும் அமைதியாகவே சாதிக்க வேண்டும்.
சாதி, மத வேறுபாடுகள் நீங்க வேண்டும். எந்நாட்டினரும் உயர்வு, தாழ்வின்றி ஒன்றுபட வேண்டும். அப்போதுதான் மனித இனம் சிறந்த சமுதாயமாக விளங்கும்.
- கணேஷ் அரவிந்த்.

No comments:

Post a Comment