Tuesday, October 7, 2014

உண்மையான பக்தர்களை தேடி…..

, அவரை வழியிலேயே சூழ்ந்து கொண்டனர். அவர்களில் ஒரு முனிவர், ‘ராமபிரானே… இங்கு ஒரு குளம் இருக்கிறது. அதன் நீர் முன்பு, தெளிந்து, சுத்தமாகவும், சுவையாகவும் இருந்தது. ஆனால், என்ன ஆயிற்றென்றே தெரியவில்லை சிறிது காலமாகவே, அந்தக் குளத்து நீர், புழுக்கள் நிறைந்து காணப்படுகிறது. அதைப் பயன்படுத்த முடியாமல் மிகவும் சிரமப்படுகிறோம்…’ என்றார். அதற்கு ராமர், ‘முனிவர்களே… சில காலங்களுக்கு முன், சபரி என்ற வேடுவ குல பெண்மணி இங்கு வசித்து வந்தாள். அவள் தினந்தோறும், அதிகாலையில் இருட்டு பிரிவதற்கு முன் எழுந்து, முனிவர்கள் நீராட வரும் இக்குளக்கரையின் வழியை பெருக்கி, தூய்மை செய்வாள்.
‘ஒருநாள் அவ்வாறு அவள் பெருக்கி கொண்டிருந்த போது, நீராடி விட்டு வந்து கொண்டிருந்த முனிவர் ஒருவரின் காலில், சபரியின் ஆடை லேசாக பட்டுவிட்டது.
‘உடனே அந்த முனிவர் கோபப்பட்டு, சபரியை ஏளனமாக பேசி, மறுபடியும் போய் குளத்தில் நீராடினார். தன்னலம் கருதாத, தெய்வ சிந்தனை மிகுந்த சபரியை ஏசியதால், இக்குளம் அன்றிலிருந்து முனிவர்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு, புழுக்கள் நிறைந்து காணப்படுகிறது…’ என்று, ராமர் சொல்லி முடித்ததும், ‘ராம பிரானே இக்குளம் தூய்மையாக வழியே இல்லையா…’ எனக் கேட்டனர் முனிவர்கள்.
‘உண்டு… பிரதிபலன் எதிர்பார்க்காத, தூய்மையான பக்தையான சபரியின் கால்பட்ட நீரை, அக்குளத்திற்குள் விட்டால், சுத்தமாக மாறி விடும்…’ என்றார்.
அதன்படி, சபரியின் கால்பட்ட நீரை குளத்தில் விட, குளம் தூய்மையானது.
குலத்தால் மட்டுமே ஒருவர், கடவுளுக்கு பிரியமானவர் ஆகிவிட முடியாது; நற்பண்புகளும், நல்லொழுக்கமும், தெய்வ சிந்தனையும், பிறருக்கு தீங்கிழைக்காத மனமும், தன்னலம் கருதா உள்ளம் கொண்டோரே, பகவானுக்கு பிரியமான பக்தர்கள். அவர்களை இறைவனே தேடி வருவார்
நன்றி :-http://senthilvayal.com/

No comments:

Post a Comment